- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
பணத்தின் அருமையை உணர்வது உணர்த்துவது எப்படி?
>> Friday, April 30, 2010
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும்.
பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
அந்தப் பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை
எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.
மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.
அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.
அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.
இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.
உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.
விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.
ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.
ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.
போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.
வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?
இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.
அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :
பணத்தை மதியுங்கள்.
100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.
கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.
பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.
காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.
பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.
உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.
மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது. தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.
எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.
ரெசிடென்சியல் பள்ளியில் படித்த அந்த பணக்காரப்பையனுக்கு பணத்தின் அருமை கொஞ்சம்கூட தெரியவில்லை என்று அவனைப்பற்றி குறையான குறை சொல்லி என்னிடம் அழைத்து வந்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது பெற்றோரின் குறைதான். அவன் வளர்ந்த விதத்தில்தான் அவன் வாழ்க்கை முறையில்தான் பிரச்சனை.
பல வீடுகளில் பையன்கள் பெற்றோர்களை கெஞ்சி டென்னீஸ் பேட் வாங்குவதே பெரிய அதிசயம் அப்படியிருக்க நெட் கிழிந்து விட்டால் புது பேட் வாங்கித்தரமாட்டார்கள் என்பதால் கஷ்டப்பட்டு பையன்களாகவே காசு சேர்த்து நெட்டை தைத்துக்கொண்டு வருவார்கள்.
ஆனால் இந்த ரெசிடென்சியல் ஸ்கூலில் படிக்கிற பிள்ளைக்கு இதைப்பற்றியெல்லாம் தெரியாது. நெட் கிழிந்து விட்டால் ஸ்டோர் ரூமுக்கு டென்னீஸ் பேட் என்று எழுதி கையெழுத்து போட்டு அனுப்புவார். புது டென்னீஸ் பேட் வந்துவிடும். பில் அப்பாவிற்கு அனுப்பப்பட்டுவிடும். பில்லை பார்க்க வாய்ப்பே இல்லாததால் அந்த பொருளின் மதிப்பு தெரியாது. மதிப்பு தெரியாத பொருளுக்கு சரியான பராமரிப்பு இருக்காது.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
20000 ரூபாய் செல்போனை தண்ணீரில் போட்டுவிட்டாள் என்று அவளது பொறுப்புணர்ச்சியை எப்படியாவது உடனடியாக வளர்த்து விடவேண்டும் என்று 11 ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணோடு பொறுப்பான பெற்றோர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். அந்த பெண்ணிற்கு பொறுப்பு உணர்வு வருவதற்கு வாய்ப்பேயில்லை என்றேன்.
அவர்கள் கோபமாய் கேட்ட ஏன் என்பதற்கு எனது பதில் இதுதான்.
11ஆம் வகுப்பு படிக்கிற பெண்ணிற்கு என்ன காரணத்திற்காக செல்போன்? அவளுடைய கிளாஸில் எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்று ஒரே அடம் என்றார்கள். சரி அதற்காக இவ்வளவு விலை உயர்ந்த செல் ஏன்? ஒரே அழுகை. ஆர்ப்பாட்டம் என்று பதில்.
அழுகை ஆர்ப்பாட்டம் இதெல்லாம் இந்த இளம் போராளிகளின் எளிய ஏமாற்று உத்திகள். என்ன அழுதாலும் என்ன புரண்டாலும் ஒரு பொருள் கிடைக்கவே கிடைக்காது என்கிற போதுதான் அது மதிப்பாய் தெரியும்.
20000 ரூபாய்க்கு கேட்டவுடன் வாங்கித்தந்த செல்போன் எந்த விதத்திலும் மதிப்பாய் தெரியாது. அந்த அலட்சியம் ஏற்படுத்திய அஜாக்கிரதையால்தான் செல்போன் தண்ணீரில் விழுந்தது.
சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.
டீன் பட்ஜெட்
இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.
பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும். ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.
:எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.
அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்களாக அதற்கு மதிப்பு போடுங்கள். அதன் பிளாஸ்டிக் பாடியின் விலை என்ன என்று நீங்களாக ஒரு மதிப்பு போடுங்கள். அதன் ரீபிள் விலை என்ன என்று மதிப்பு போடுங்கள். இப்படி நீங்கள் பார்க்கும் எல்லா பொருட்களுக்கும் மதிப்பு போடுங்கள்.
இது சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.
ஒரு நண்பர், தன் 6வது படிக்கும் தன் பெண்ணின், பிறந்த நாளுக்கு 1500 ரூபாய்க்கு டிரஸ் கேட்டதாகவும் அந்த விஷயத்தை நம் கட்டுரையில் கூறப்பட்டுள்ளபடி சிறப்பாக கையாண்டதாவும் எழுதியிருந்தார்.
1500 ரூபாய் என்பது அரசுப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனின் ஒரு வருட படிப்பு செலவு. ஒரு ஏழைக்குடும்பத்தின் இருபது நாள் உணவு என்று எடுத்துச் சொன்னதாகவும் அதை யோசித்து புரிந்துகொண்ட அவர் பெண் ஆடம்பர ஆடையை தவிர்த்து எளிய விலையில் ஒன்றை வாங்கிக் கொண்டதாக மகிழ்ந்து போய் எழுதியிருந்தார்.
எனக்கு பகீர் என்றிருந்தது. உண்மையிலேயே நண்பர் சொன்னது ஒரு சிறப்பான முறைதான். ஆனால், குழந்தை அதே அர்த்தத்தில் புரிந்து கொண்டதா என்பதுதான் முக்கியம். இல்லையா?
உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.
பணம் சம்பாதிப்பது சுலபமா ? கஷ்டமா ? என விளக்கு.? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன ?பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள் ?தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன ?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா ?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.
பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்கள்…
உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உதாரணங்கள் மூன்று.
ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.…
தியேட்டரில் 50 ரூபாய் டிக்கெட்டை பிளாக்கில் 100 ரூபாய்க்கு வாங்குவது..
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது……-source: ஸ்வாமி தேவ ஜோதிர்மய.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க...Read more...
ஒத்தி வைக்காதே! உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும் !!
>> Thursday, April 29, 2010
“பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். பலருக்கும் இது புரிவதில்லை. ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்
தலைவர்கள் மரணத்திற்கு அஞ்சலி தெரிவித்த பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது என்றும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் மதிய உணவு வேளை வரை அவையை ஒத்தி வைத்தார் என்றும் அடிக்கடி பத்திரிகைகளில் படிக்கிறோம்.
ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.
காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப்.. சிப். வாய் மூடிக்கொண்டது.
உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.
இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே… பிறகு எழுத்திருக்கலாமே என்று ஆசைப் படுகிறவர்கட்கு ஒரு வார்த்தை, இதைவிட செத்துப் போகலாம். காரணம் தூங்குவதும் சாவதும் ஒன்றுதான். உறங்குவது போலும் சாக்காடு. அதிகம் தூக்கத்தை நேசிக்கிறவர்கள் உண்மையில் சாவை நேசிக்கிறவர்கள். எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.
“பிறகு படித்துக் கொள்ளலாம்… அப்புறம் வேலை பார்க்கலாம்… கடைசியாகச் செய்து விடலாம்” என்று பேசுகிறவர்கள்… நினைக்கிறவர்கள் சுய துரோகிகள். சொந்த விரோதிகள். காரணம் “நிறைய நேரம் இருக்கிறது பிறகு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர்கள் எதையுமே செய்ய முடியாது என்பது அதிசயமான உண்மை.
இப்போது மறைந்த போப்பாண்டவருக்கு முன்னால் இருந்த போப்பாண்டவர் சொன்னதாக ஒரு நல்ல சம்பவம். மூன்று அமெரிக்கர்கள் இத்தாலிக்கு வந்தவர்கள் ரோமில் வந்து போப்பாண்டவரைத் தரிசித்தனர். முதல் நபரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாள் இத்தாலியில் தங்கப் போகிறீர்கள்? என்று கேட்டார். ஆறு மாதம் என்று பதில் வந்தது. நீங்கள் இத்தாலியை அதிகமாகச் சுற்றிப் பார்க்க மாட்டீர்கள்… முடியாது என்றார் போப்.
அடுத்தவர் பதறிப் போய் நான் மூன்று மாதம்தான் தங்கப் போகிறேன் என்றார். நீங்கள் கொஞ்சம் பார்ப்பீர்கள் என்றார் போப். பிறகு அடுத்தவரைப் பார்த்து நீங்கள் எவ்வளவு நாட்கள் தங்குவதாக எண்ணம்” என்றதும் அவர் ஒரு வாரம்தான் எனக்கு விடுமுறை… அதற்குள் நான் எப்படி இத்தாலியைச் சுற்றிப் பார்க்கப் போகிறேன்” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார்.
போப்பாண்டவர் சிரித்தபடி “ஒரு வாரம் தான் என்றால் நீங்கள் கண்டிப்பாக இத்தாலி முழுவதையும் பார்த்து விடுவீர்கள்…!” என்றார். பிறகு அவரே காரணமும் கூறினார். நேரம் குறைவாக இருக்கிறது என்று கவலைப்படுகிறவர்கள் முழுமையாக அதனைப் பயன்படுத்துகிறார்கள். நிறைய நேரம் கைவசம் உள்ளவர்கள் நேரம் தான் இருக்கிறதே பிறகு பார்ப்போம் பிறகு பார்ப்போம் என்று எதையுமே முழுமையாகப் பாராது வீணாக்கி விடுகிறார்கள்” என்று அழகான விளக்கம் அளித்தார்.
உண்மை “பிறகு” “பிறகு” என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள்.
தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதய்யர் காலத்தில் தமிழ் அச்சில் இல்லை. ஓலைச் சுவடியிலும் தமிழறிஞர்கள் வாயிலும் ஒண்டுக் குடித்தனம் நடத்தியது. ஆனால், தேடித்தேடி படிக்கிற ஆர்வம் உ.வே. சாமிநாதய்யர் அவர்கட்கு இருந்தது. ஒவ்வொரு வரிமட்டும் பாடி பிச்சை எடுத்த ராப்பிச்சைக்காரனிடம் முழுப் பாட்டையும் கேட்க பின்னாலேயே போய்ப் பாட்டை முழுதாகச் சேகரிக்கும் வெறி இருந்தது.
இன்று தமிழ்ப் பாடல்கள் அச்சு வாகனம் ஏறி புத்தகம் ஆகி வெளிவந்தபடி இருக்கின்றன. ஆனால், படிக்கும் வெறி எத்தனை பேருக்கு இருக்கிறது. கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய வாய்ப்புகள் இருக்கும் போது பலரும் அதனைப் பயன்படுத்துவதே இல்லை. கொஞ்சம் தான் வாய்ப்பு என்றால் அதனை முழுதாகப் பயன்படுத்தி விடுவார்கள்.
நிறைய நேரம்… நிறைய வாய்ப்புகள்… என்று நிரம்பி வழிகிறவர்கள் நிச்சயம் வாழ்க்கையை வீணாக்கி விடுகிறார்கள்.
கொஞ்சம்தான் நேரம்… கொஞ்சம்தான் வாய்ப்பு… கொஞ்சம்தான் பணம்… கொஞ்சம்தான் ஆயுள்… என்று கைவசம் கொஞ்சமாக வைத்திருக்கிறவர்கள் நிச்சயம் ஜெயிக்கிறார்கள்.
நாளை… நாளை என்று நாளை ஒத்திப் போடுகிறவர்களைப் பார்த்து ஆழ்வார் கேட்கிறார்… நாளை நாள் நமது நாளா? நமனது (எமன்) நாளா? யார் அறிவார். எனவே ஒத்திப்போடாமல் இன்றே… இப்போதே… இந்த கணமே என்று அவசரப்பட அழைக்கிறார் ஆழ்வார் ஒருவர்.
இரண்டு நண்பர்கள். ஒருவர் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். மற்றவர் விஞ்ஞானத்தில்… இருவரும் ஒரே கல்லூரியில் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தனர். அவரவர் துறைக்கு விரிவுரையாளராக நியமிக்கப்பட்டு உடனே பணியில் சேர உத்தரவு வந்தது. தமிழ் படித்தவர் இன்று சனிக்கிழமை… நாள் நன்றாக இல்லை… திங்கட்கிழமை சேருவோம்” என்று ஒரு நாளை (இடையில் உள்ள ஞாயிற்றுக் கிழமையை) ஒத்திவைத்தவர். மற்றவரோ சனிக்கிழமையே பணியில் சேர்ந்து விட்டார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி முதல்வர் பணித் தேர்வின்போது விஞ்ஞானப் பேராசிரியர் முதல்வர் ஆனார். மிக முக்கிய காரணம் பணிமூப்பு. ஒருநாள் தமிழ்ப் பேராசிரியருக்கு முன்பாகவே சேர்ந்துவிட்டதால் பணிமூப்பு என்ற காரணம் காட்டி முதல்வர் பதவி பெற்றார். பத்தாண்டுக் காலம் கல்லூரி முதல்வராக இருந்தார். ஒரு நாள் தாமதமாகச் சேர்ந்தவர் கடைசி வரை முதல்வராக முடியாமலேயே பணி ஓய்வு பெற்றார்.
ஒரு நாள் முன்னால் சேர்ந்த காரணத்தால் கல்லூரி முதல்வராகப் பத்தாண்டு இருக்க முடிந்தது. ஒத்திவைத்த ஒருவரைப் பதவியும் ஒத்தி வைத்து விட்டது. பரபரப்பும் படபடப்பும் வேண்டாம். ஆனால், ஓயாமல் ஒத்தி வைத்து ஒத்தி வைத்து வாழ்க்கை உங்களை ஒத்தி வைக்க அனுமதிக்கவும் வேண்டாம். -- சுகி. சிவம்
********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க...Read more...
ஏமாந்தது போதுமடா! அறங்கையும் புறங்கையும் நக்காதே!!
>> Wednesday, April 28, 2010
அறங்கையும் புறங்கையும் நக்காதே-கையூட்டாம் இலஞ்சப் பணத்தை வாங்கிக் கிட்டு -வாழும் ஈனப்பொழப்ப நடத்தும் ஈனர்களே! இந்த ஈனப்பொழப்பிற்கு சாவதே மேலடா!!
அமர்ந்துகொண்டு கேட்கின்ற
அதிகார பிச்சையே லஞ்சமடா
அன்னத்திற்கு பிச்சையென்றாலே-வறுமைக்காக
அதைக்கூட மன்னிக்கலாம்
ஆடம்பரத்திற்க்காகவே
லஞ்ச பிச்சைதனையே தண்டிக்காமல் விடலாமா?
அழுக்கைத் துடைத்து மடியில வெச்சாலும்
புழுக்கைக் குணம் மாறாதுடா!
வஞ்சகரை அழைத்து சிம்மாசனம் தந்தாலும்-அவரின்
வஞ்சமனம் மாறாதுடா!
கயவரை கூப்பிட்டு தோழமை ஆக்கினாலும்-அவரின்
கயமைகுணம் மாறாதுடா!
சாரத்தை விட்டுவிட்டோம் - நாம
சக்கையைப் பிடித்துகொண்டோம் -வாழுகின்ற
சமுதாயத்துல மூட நம்பிக்கையில நாம போற பாதையில
எத்தனை கலகமடா?எத்தனை போராட்டமடா?
நாம என்னசெய்கின்றோம்? நாமே எங்கே போகின்றோம்?
நல்லவழி போகாமலே நாச வழி போகுறமே!
ஒருமரத்துப் பட்டையே ஒரு மரத்திலே ஒட்டுமாடா?-வாழ்வில்
ஒட்டுறது தானே ஒட்டுமடா
ஒட்டாதது ஒட்டாமல் போகுமடா-உலகினிலே
ஒட்டாமலே தனித்திருந்து ஜெயித்ததாக சரித்திரமில்லையடா!
ஒட்டாமலே மனித உயிரும் ஜனித்ததாக நடந்ததுமில்லையடா!
உலகமே உலகமே விசித்திரமடா!-அதில் வாழும்
உள்ளங்கள் எல்லாம் விந்தையடா!
ஒருத்தர் நினைத்தை ஒருத்தர் நினைப்பதில்லை!
ஒருத்தர் கனவினை ஒருத்தர் காண்பதில்லை!
ஒருத்தர் போனவழி ஒருத்தர் போகிறதில்லை!
ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு வழியாகும்
ஒருவர் மனதினில் ஓராயிரம் எண்ண்ங்கள்!
ஒவ்வொரு மனிதருள்ளும் கோடிகோடி எண்ணங்கள்!
எண்ண எண்ண அதிசயமடா! -அதில் ஒளிந்திருக்கும்
எத்தனை எத்த்னை ரகசியமடா!
ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு ஒரு வழியா?
ஒரு ஊருக்கு ஒரு ஊருக்கு பலவழியே!
ஒருகதவு அடைத்துவிட்டால் மறுகதவு திறந்திடுமே!
உலகினிலே நல்வாழ்விற்கு நாம் நல்வழியில் நாம் நடந்திடவே!
எத்தனையோ வழிகளிருக்கு மக்கள்வாழ வழிபிறக்கும்!
இந்த உலகினில் நீயும் இறங்கி நடந்து பாரடா!
ஒடிந்த கோலும் ஊன்றுகோலாகுமடா!
துரும்புகள் ஒன்று சேர்ந்தாலே ஓடமாகும்டா!
ஒட்டினா ஒட்டினா தொட்டிலும் கொள்ளுமடா
ஒட்டாவிட்டாலோ கட்டிலும் கொள்ளாதடா!
தனிமரம் என்றும் தோப்பாவதில்லையடா!
தனிமையிலே இனிமையானதாய் சரித்திரமில்லையடா!
ஒன்றுபட்ட இதயங்களில் காதலன்பு மலருமடா!
ஒன்றுபட்ட மக்கள் ஜன நாயகம்
வாழும் மக்கள் அரசை உருவாக்குமடா!
அழ அழச்சொல்லுறவன் பிழைக்கச் சொல்லுவானே!
சிரிக்க சிரிக்க ஏமாற்றிவன் சீரழியச் செய்திடுவானே!
ஏமாற்று உலகமடா! ஏமாறக்கூடாதடா!-இது வரையினில்
ஏமாந்தது போதுமடா! சுய நல விஷமிகளை இனங்காணடா!
ஒரு சின்ன எறும்பு
ஒரு சின்ன எறும்பு
காதினில் நுழைந்தாலே-ஒரு
யானையைக் கூட வீழ்த்திவிடுமே
கடுகு சிறுத்தாலும் காரம் போகாதே
கனமில்லாத பஞ்சு அதிகம் ஏற்றிய வண்டியும் பாரம்
அதிகமான போது அதன் அச்சாணியும் உடைந்திடுமே!-அதனாலே
சின்னதென்று எதையும் குறைவாக எடையே போடக்கூடாதே!
THANKS TO SOURCE:- தமிழ்பாலா - http://vanakkamthamiz.blogspot.com
+++++++++++++++++++++
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க...Read more...
மஸ்கட்- இளையான்குடி அசோசியேசன் ஸ்தாபகம்.
>> Tuesday, April 27, 2010
மஸ்கட் வாழ் இளையான்குடியான்களின் முதல் கூட்டம்.
எல்லா புகழும் இறையோனுக்கே!
மஸ்கட்டில் வாழும் இளையான்குடியைச் சார்ந்தவர்கள் எத்தனையோ முறை அவ்வப்போது சந்தித்துக்கொண்டாலும், முறையாக எல்லோரும் ஒன்று கூடி ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணங்களின் பிரதிபலிப்பாக 02-04-2010 அன்று ஹாஜி ஏ.எம். செய்யது இபுறாஹீம் அவர்களின் தலைமையில் மஸ்கட் வாழ் இளையான்குடியைச் சார்ந்தோர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது.
நோக்கம்:
இந்தக் கூட்டத்தின் முதல் குறிகோள், இளையான்குடியைச் சார்ந்த அன்பர்களுக்கு முக்கியத்துவம் அளித்து கல்விக்கும்,ஏழை, எளிய மணப்பெண்களுக்கும் மற்றும் வறியவர்களுக்கும் உதவிட வேணடும் என்ற எண்ணத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவிகளை இளையான்குடியை மையமாகக் கொண்டு செயல்படும் "டைம் டிரஸ்டின்" மூலமாகவும் இன்னும் பல பிற சமுதாய நலனில் அக்கரை உள்ள அமைப்புகளுடனும் சேர்ந்து உதவிகளைச் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தீர்மானங்கள்:
இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
(1) இந்த சங்கத்திற்கு "மஸ்கட்-இளையான்குடி அசோசியேசன்" என்றும்,
(2) ஒவ்வொரு மாதமும்,உறுப்பினர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சந்தாவாகச் செலுத்த வேண்டும் என்றும்,
(3) மாதம் ஒரு முறை உறுப்பினர்கள் அனைவரும் சந்தித்து,
ஆலோசனைகளை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும், முடிவு செய்யப்பட்டுள்ளது.
(4) இந்த அசோசியேசனுக்கு தலைவர்,செயலாளர், பொருளாளர் மற்றும் உதவி பொருளாளர் என்று ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
முடிவில், காமில் தாஹிர் கனி அவர்கள் நன்றி உரை கூற விழா இனிதே முடிவடைந்தது.
தலைவர்:

ஜனாப். ஹாஜி. A.M.செய்யது இபுறாஹீம்,SR.MANAGER, - Operation, National Bank of Oman, Muscat, Sultanate of Oman.
ஜனாப். M.F. காமில் தாஹிர் கனி,
Operation Manager, Sun Logistica Intl., Muscat, Sultanate of Oman.
ஜனாப்.T.G.கபீப்,
Manager - printers & Suppliers, Muscat,
Sultanate of Oman.
Sultanate of Oman.
உதவி பொருளாளர்:
ஜனாப்.M.முஹமது கலீல்,
Senior Accountant, Al Nahdha Al Omaniah LLC.,
Muscat, Sultanate of Oman.
Muscat, Sultanate of Oman.
உங்கள் அன்புடன்,
மஸ்கட்-இளையான்குடி அசோசியேசன் குழுவினர்.
INFORMATION SOURCE:
அன்புடன்,
முஹம்மது ஜுல்ஃபிகர்
*****************
எனதன்பிற்குரிய மஸ்கட் வாழ் இளையாங்குடியர்களே,
நன் நோக்கத்தை குறியாக கொண்டு நீங்கள் எடுத்திருக்கும்
இந்த முடிவு எல்லாம் வல்ல இறையவன் அருளால் தங்கு தடையின்றி
வளர வாழ்த்துகின்றேன்.
வாஞ்சையுடன்
வாஞ்ஜூர்.
*********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க...Read more...
போலி கௌரவம் தேவையா? !
பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?
நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
கணவரும், மனைவியும் தாங்கள் வளர்த்து வந்த கழுதையுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
"யாராவது ஒருவர் கழுதை மீது அமர்ந்து செல்லலாமே'' என்றார் அவ்வழியே சென்ற ஒருவர். அதனால் கணவர் கழுதை மீது ஏறி உட்கார்ந்தார்.
''கொடுமைக்கார புருஷனாக இருப்பார் போலும். தான் மட்டும் சுகமாக அமர்ந்து கொண்டு மனைவியை நடக்க விடுகிறார்'' என்றார் இன்னொருவர். இப்போது மனைவியை அமரவைத்து கணவர் நடக்க ஆரம்பித்தார்.
"புருஷனை மதிக்காதவள். திமிராக கழுதை மீது அமர்ந்து செல்கிறாள்'' என்ற மற்றொருவரின் கமென்ட்டைத் தொடர்ந்து கணவரையும் தன்னுடன் ஏற்றிக் கொண்டாள் மனைவி.
"கொஞ்சமாவது ஈவு, இரக்கம் இருந்தால் பாவம் இந்த கழுதையை இப்படி கஷ்டப்படுத்துவார்களா?'' என்றார் வேறொருவர். இறுதியில் கணவர் மனைவி இடையே சண்டை வந்து விட்டது. "உங்களால்தான் இந்த அவமானம்'' என்றார் மனைவி. "உன்னால் என் கவுரவமே போச்சு'' என்றார், கணவர்.
நம் வாழ்வில் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடுத்தவர்கள் சொல்வதை கேட்பதும், போலி கௌரவவுமே முக்கியக் காரணம்.
போலி கௌரவம் மனிதனுக்கு குழந்தைப் பருவத்திலே தானாகவே ஏற்பட்டு விடுகிறது.
ஓடிக் கொண்டிருக்கும் சிறுவன் கால்தடுக்கி விழுகிறான். யாராவது பார்த்து விட்டார்களா என இங்குமங்கும் பார்க்கிறான். யாரும் பார்க்க வில்லையென்றால் எழுந்து, துடைத்துக் கொண்டு தொடர்ந்து ஓடுகிறான்.
யாராவது பார்த்து விட்டால், அதுவும் சிரித்து விட்டால் போச்சு. அசிங்கம், அவமானம்! கண்ணீர் ஆறாய் ஓடுகிறது. தடுக்கி விழுவது கூட பெருங்குற்றம் என பிஞ்சு மனம் நம்புகிறது.
உலகில், போலி கௌரவத்தின் தலைமையகம் அமெரிக்காதான் என்றால் அது மிகையல்ல.
அடுத்த பத்தாண்டுகளுக்கு கிடைக்கக் கூடிய எல்லா கடன் சலுகைகளையும் இப்போதே பெற்று நீயா, நானா என்று போட்டி போட்டு கவுரவம் பார்ப்பதில் அமெரிக்கர்கள் கில்லாடிகள்.
கிடைக்கிறது என்பதற்காக சக்தியை மீறி வாங்கிய வீட்டுக்கடன்களில் திவாலாகி, "அமெரிக்காவில் வீடு வேண்டுமா? ரொம்ப சீப்'' என்று இங்கு டீக்கடை முன்பு நில புரோக்கர்கள் கிண்டலாக கேட்கும் அளவுக்கு கடந்த ஆண்டு அங்கு பெரும் நெருக்கடி.
"என்னை அடியுங்கள், உதையுங்கள், சாகடியுங்கள்; ஆனால் மற்றவர் முன் அவமானப்படுத்தாதீர்கள்'' என்ற வேண்டுகோள் நம் சமூகத்தில் பிரபலம். விசாரணையின்றி, பொறுமையின்றி மிருகத்தனமாக நடந்துகொள்ள குடும்பத்தினருக்கு அனுமதி உண்டு. ஆனால் அதை மற்றவர்கள் பார்க்க மட்டும் கூடாது என்ற 'கௌரவ நிலைப்பாடு' இங்கு வேரூன்றி விட்டது.
இந்த போலி கௌரவம் படித்தவர்களையும் வாட்டி எடுக்கும் சக்தி கொண்டது.
"சக மாணவர்கள் முன் ஆசிரியர் என்னை திட்டி விட்டார்; அதனால் எனக்கு அவமானமாக இருந்தது'' என்று அம்மாவிடம் பையன் புலம்பினால் அது போலி கௌரவத்தின் அறியாப்பருவம்.
"இன்னொரு டீச்சர் முன்பு என்னைக் குறை சொல்லாதீங்க சார். என் கௌரவம் என்னாவது?'' என்று ஒரு டீச்சரே தலைமையாசிரியரிடம் குறைபட்டுக் கொள்வது போலி கவுரவத்தின் விபரீத வளர்ச்சி. தவறு தவறுதான். அதை யார் சொன்னால் என்ன? எங்கு சொன்னால் என்ன? அதற்கும் கௌரவதிற்கும் என்ன சம்பந்தம்?
நாம் கௌரவமானவர்கள் என்று நமக்குத் தெரிகிறது. ஆனால் நாம் அணியும் செருப்புக்கு எப்படி தெரியும்?
பலர் மத்தியில் செருப்பு ரிப்பேராகிறபோது அதை தூக்கிப் போட்டு விட்டு வெறுங்காலோடு நடந்தால் சுமார் கவுரவம்; விலை உயர்ந்தது, சரி செய்து விடலாம் என அச்செருப்பை கையில் ஏந்தியபடி, தலைநிமிர்ந்து நடந்தால் சூப்பர் கவுரவம். இதை விடுத்து, பிறருக்கு தெரியக்கூடாது என்பதற்காக காலை தரையில் தேய்த்தபடி நடந்து வந்து வண்டியில் ஏறினால், அது போலி கௌரவம்.
பாழாய்ப்போன டூவீலர் என்ஜின் திடீரென எக்குத்தப்பாகி பெட்ரோலைக் குடித்து விடுகிறது. வண்டி பாதி வழியில் நின்று விடுகிறது. மனைவி ஒரு பக்கம், மற்றவர் ஒரு பக்கம், அவ்வளவுதான். போயே விட்டது நாம் கட்டிக்காத்த கவுரவம்!
அருகில் உள்ள பெட்ரோல் 'பங்க்'குக்கு வண்டியைத் தள்ளிச் சென்றால் உடலுக்கு கவுரவம்தான். ஆனால் உள்ளத்துக்கும், உடன்வரும் செல்லத்துக்கும் அது கவுரவக் குறைச்சல் ஆயிற்றே. "என்ன ஆச்சு?'' என்று ஏதோ வண்டியில் குண்டு வெடித்த மாதிரி சிலர் கேட்பார்களே அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று நினைத்தால், அது போலி கௌரவம். வண்டி பிரச்சினைக்கும், வாழ்க்கை கௌரவத்திற்கும் என்ன தொடர்பு? - யோசித்துப் பாருங்கள்.
சாப்பிடாவிட்டால் கூட சிலரின் உடல் வஞ்சனை இன்றி வளர்ந்து விடுகிறது. இதற்காக உடலின் அளவைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டுமேயன்றி, 'எல்லோரும் கிண்டல் செய்கிறார்கள்' என்று கவுரவம் பார்த்து வெளியில் வருவதைக் குறைக்கக் கூடாது.
வீட்டுக்கு போலீஸ் வருவது பாஸ்போர்ட் விண்ணப்பம் தொடர்பாகத்தானே. இதில் 'மற்றவர்கள் வேறுமாதிரி நினைத்து விடப்போகிறார்கள்' என பயப்படுவது ஏன்?
இப்படி எங்கும் எதிலும், எப்போதும் பெரியவர்கள் கூட கௌரவம் பார்ப்பதால் இளைய தலைமுறையும் இதையே பின்பற்றி, தன் திறமையை வெளிக்கொண்டு வர தயங்குகிறது.
'உனக்கு தெரிந்ததைப் பேசு' என்று ஒரு நிகழ்ச்சியில் சொன்னால் 'சரியாகப் பேசவில்லையென்றால் எல்லோரும் தவறாக நினைப்பார்கள்' என்று சிறுவர்கள் பயப்படுகின்றனர்.
'யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை. முடிந்தவரை முயற்சி செய்' என்று அவர்களை ஊக்கப்படுத்தினால்தான் நாளைய இன்டர்விஞ்க்களை அவர்கள் வெல்ல முடியும்.
'ஊக்குவிப்பார் யாரும் இல்லையெனினும், குறைசொல்வோருக்கு குறைவில்லை'' எனும் நிலை ஆபத்தானது.
பிறர் பார்க்கிறார், அடுத்தவர் நினைக்கிறார், மற்றவர் மதிப்பிடுகிறார் என்று வாழ ஆரம்பித்தால் நம் மூளைக்கும், அறிவுக்கும், ஆற்றலுக்கும், திறமைக்கும், திருப்திக்கும் என்ன வேலை?
நல்லதே எண்ணி, நல்லதே செய்து நற்பண்புகளுடன் வாழ்ந்தால், பிறர் தீர்ப்புக்கும், பிறர் சான்றிதழுக்கும், பிறர் மதிப்பீட்டுக்கும் நாம் காத்துக்கிடக்க வேண்டியதில்லை.
தன்னுடைய முக்கியமான வாடிக்கையாளர்களுக்காக 'பபே' விருந்துக்கு ஏற்பாடு செய்தது ஒரு வங்கி. ஒரு கையில் தட்டு; மறுகையில் இரண்டு ஸ்பூன்கள். சப்பாத்தி, சிக்கன் என போர்க் ஸ்பூனுக்குள் சிக்காத அயிட்டங்கள். பலமாகக் கொத்தினால் போட்டிருக்கும் கோட்டுக்குள் குழம்பு சீறி சிதறும் ஆபத்து.
அதில் ஒரே ஒருவர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே அசத்தினார். ஆம், ஸ்பூன்களை வீசிவிட்டு கையால் எடுத்து, கடித்து, மென்று சாப்பிட்டு 'எங்கேப்பா ஐஸ்கிரீம்' என்று கேட்டபடி நகர்ந்தார்!
மற்றவர்கள் முகம் சுளித்தனர். ஆனால், பிறர் மத்தியிலும் தனக்காக சாப்பிட்டவர் அவர் ஒருவர்தான் என்பதை மறுப்பதற்கில்லை.
குறை சொல்வது, பொறாமைப்படுவது, அவசரப்பட்டு பேசுவது, ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட உடன் அப்படியே நம்பி விடுவது போன்றவை மனிதனின் பலவீனங்கள்.
நம் பண்புகளையும், உழைப்பையும், வெற்றியையும் அவ்வளவு சீக்கிரம் சக மனிதர்கள் நம்பி ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைவதில்லை.
'மற்றவர்' என்று நாம் கருதும் அந்த மனிதர்களுக்கும் இது பொருந்தும். இந்நிலையில் பிறர் பார்வைக்கும், சொல்லுக்கும் நாம் மதிப்பளித்து அவர்கள் பார்க்கிறார்களே, அவர்கள் முன் திட்டு வாங்குகிறோமே என்றெல்லாம் சங்கடப்படத் தேவையில்லை.
உடைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் கல் சிலையாவதில்லை;
உருக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் தங்கம் நகையாவதில்லை,
பிசையப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் மண் பாத்திரமாவதில்லை;
அடித்து, துவைக்கப்படுகிறோமே என்று கௌரவம் பார்க்கும் துணி சுத்தமாவதில்லை;
நம் குறைகள் நம்மிடமிருந்து நீங்க, நமக்கு வேண்டியவர்கள் நம்மை கையாளும் போதுதான் நம் அறிவு முழுமையாகிறது.
இதை யார் பார்த்தால் என்ன? எங்கு பார்த்தால் என்ன? நம் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஒரு விஷயம் நிஜ கௌரவமா அல்லது போலி கௌரவமா என்பதுதான் கேள்வி.
போலி கௌரவம் பொல்லாதது. அதை அறவே விட்டொழிப்போம். பிறர் மத்தியில் சுட்டிக் காட்டப்படும் தவறுகள் அவமானமல்ல; திருத்திக் கொள்வதே பரிகாரம். உண்மையில்லாத பட்சத்தில், நம்மை நோக்கி வந்து விழுகிற பழிச்சொற்கள் அசிங்கமல்ல; அதை பிறர் பார்த்தால் ஏற்படுகிற அவமானமும் நமக்கல்ல!!
posted by: Mohideen
SOURCE:www.nidur.info
***********************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்
மேலும் படிக்க...Read more...
உங்கள் வாழ்க்கை உங்கள் வழியில் !!?? பயனுள்ள தகவல்.
>> Monday, April 26, 2010
நம்முடைய வாழ்க்கை நாம் விரும்புவதுபோல் நடக்கிறபோது வாழ்க்கையும் சுகமாய் இருக்கிறது. வெற்றியும் வசமாய் ஆகிறது.
உங்கள் வாழ்க்கையை உங்கள் வழியில் நடத்திச் செல்லத் தடையாய் இருப்பவை என்ன என்று யோசியுங்கள். “தயக்கம்” என்று தான் பதில் வரும்.
ஒருவேளை நாம் கேட்டிருந்தால் ஒன்று நமக்கு மாற்றித் தரப்பட்டிருக்கும். ஒரு கப் காபி சூடாக இல்லை என்றாலும்கூட, “விதியே” என்று விழுங்கிவிட்டு வருபவர்கள் சில பேர். வாதிட்டு வேறு கப் காபி கொண்டுவரச் செய்பவர்கள் சிலபேர். “ஒரு கப் காபி கூட நம்ம விருப்பத்துக்குக் கிடைப்பதில்லை” என்று சலிப்பதால் எதுவும் நடப்பதில்லை.
தயக்கத்துக்கு மாற்றாக நாம் உருவாக்க வேண்டிய விஷயம் உறுதி. நமக்கென்ன வேண்டும் என்பதில் உறுதியாய் இருக்கும்போது அதனை நம்மால் அடைய முடியும்.
நம் வழியில் வாழ்க்கை நடக்கிறது என்ற உற்சாகத்தை எது தருகிறது?
சில தீர்மானங்களை நாம் எடுக்கிறபோது உற்சாகம் வருகிறது. நீங்கள் வழக்கமாகப் பயணம் செய்கிற பாதையில் ஏதோ ஒரு பேரணி நடப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் கார் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்படுகிறது. இப்போது, இது உங்கள் வழியா? இன்னொருவரின் நிர்ப்பந்தத்தால் நீங்கள் செலுத்தப்படுகிற வழியா? இந்தக் கேள்வியை கொஞ்சம் அலசிப்பாருங்கள்.
யாரோ சொன்னதால் நம் வழியை மாற்ற வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக்கொண்டு உங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லலாம். அல்லது அந்தப் பேரணில் போய் மாட்டிக் கொள்ளாமல் விரைவாக வேறுவழியில் போய்விடலாம் என்று சந்தோஷத்தில் போகலாம்.
ஒரு வேளை, இந்தப் பேரணி பற்றி முன் கூட்டியே தெரிந்திருந்தால் இந்த மாற்று வழியை நீங்களாகவே யோசித்திருப்பீர்கள். எனவே, எந்த வழி நமக்கு உகந்த வழி என்பதற்கு முக்கியத்துவம் தருகிறபோது, இப்போது போகிறபாதை நிர்ப்பந்தத்தினால் என்ற நிலைமாறி, அதிகபட்ச நன்மை தருகிற மாற்றுவழி என்று புரிந்து கொள்கிறீர்கள்.
நாம் நம்முடைய இலக்கை நோக்கிப் போகிறபோது காலம் இப்படியாய் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கக்கூடும். அவை சரியாய் இருக்கிறபட்சத்தில் அவற்றிலிருந்து பயன்தரும் விஷயங்களை மனதார ஏற்றுக் கொள்வதுதான் புத்திசாலித்தனம்.
நம் வழியில் நம்முடைய வாழ்க்கை நடக்க வேண்டுமென்றால் நமக்குத் தெளிவாகத் தெரியவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. “நமக்கென்ன வேண்டும்” என்பதுதான் அது.
அந்த வரையறையை நாம் வகுத்துக் கொள்கிறபோது, வேறு பாதைகளில் போயிருக்கலாமோ என்கிற ஏக்கமோ, நாம் மற்றவர்கள் போல் வாழ்க்கையை வகுத்துக் கொள்ளவில்லையோ என்கிற கலக்கமோ ஏற்படாது.
அதே நேரம், நாம் போகிற பாதை சரியானதுதான் என்பதை உறுதி செய்து கொள்ள சில அளவுகோல்கள் அவசியம். நாம் செய்கிற வேலையால் அனைத்துவிதமான நிறைவுகளும் ஏற்படுகின்றனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும்.
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செயல்படுகிறோமா, மனநிறைவு வரும் விதமாய் செயல்படுகிறோமா, போதிய அளவு பணவரவு இதில் வருகிறதா - இப்போது இல்லையேல் இனிமேலாவது இந்த முழுமையான வளர்ச்சிக்கு வாய்ப்பிருக்கிறதா? - இவைதான் அந்த அளவுகோல்கள்.
இதில் நீண்ட காலத் திட்டங்கள் என்று சிலவற்றை நம்முடைய வாழ்வில் வகுத்திருப்போம். ஆனால் நிகழ்கால வாழ்க்கையை நடத்திக் கொண்டே போகிறபோது, அந்த நீண்ட கால இலட்சியத்தை எங்கே தொடங்குவது என்று தெரியாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே சிலர் போவதுண்டு.
தொலைநோக்குத் திட்டம் என்ற பெயரில் தள்ளிப் போடுகிறோமா என்பதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமில்லையா?
நம்முடைய வழியில் விரைவாக, உற்சாகமாக செல்லவேண்டும் என்றால், வேண்டாத மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு போகக்கூடாது.
பழைய பகையின் நினைவுகள், பழைய தோல்வியின் பதிவுகள் இனிமேல் சரிசெய்ய முடியாதபடி கடந்த காலத்தில் கண்ட வீழ்ச்சிகள் - இவற்றை மனதில் சுமந்துகொண்டு போகிறவர்கள், வேண்டாத பாரங்களைக் கழுதைபோல் சுமக்கிறார்கள்.
வாழ்க்கையை ஒரு பயணமாகக் கற்பனை செய்து கொள்கிறபோது, அந்தப் பாதையைப் போலவே பயணமும் முக்கியம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
சாலையில் நீங்கள் செல்லும் போது, கடந்து போகிற வாகனங்களில் இருப்பவர்கள் எப்படி இருக்க வேண்டுமென எதிர்பார்ப்பீர்கள்?
சாலைவிதிகளை மதிப்பவராக, சந்தோஷமான மனிதராக, மற்றவர்கள் தெரியாமல் செய்யும் சின்னச் சின்னப் பிழைகளை மன்னிப்பவராக இருக்க வேண்டும். அப்போதுதான் பதட்டமில்லாமல் பயணம் நிகழும்.
பாதையில் அனைவரும் பொறுப்புணர்ந்து தங்கள் வாகனங்களைச் செலுத்துகிறார்கள் என்பதே எவ்வளவு சந்தோஷமான விஷயம்!
அத்தகைய சந்தோஷத்தை வாழ்க்கை என்னும் நெடிய பயணத்தில் நம் சக பயணிகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை மட்டுமல்ல - உரிமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
இதற்கு முக்கியமான விழிப்புணர்வு நம் அன்றாட உறவாடல்களிலும் உரையாடல்களிலும் இருக்கிறது. பைசா பெறாத விஷயம் ஒன்றைப் பொழுது போக்காகப் பேசத் தொடங்கியிருப்போம்.
போகப்போக அதில் பதட்டமான விவாதங்களில் இறங்கிவிடுவோம். முக்கியமே இல்லாத விஷயத்தைக் கூட மூச்சுமுட்ட விவாதித்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதால் நம்முடைய சக்தி வீணாகிறது.
நம்மை நேரடியாக பாதிக்காத விஷயங்கள் குறித்து பலமான சர்ச்சையில் இறங்குவதை விழிப்புணர்வோடு தவிர்த்துவிடவேண்டும்.
பாராளுமன்றத் தேர்தலில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று முடிவு தெரிவதற்கு முப்பது நிமிஷங்கள் முன்னால் விவாதித்த நண்பர்கள் அந்த விவாதம் காரணமாகவே விரோதிகள் ஆகிவிட்டார்கள்.
ஆனால் அந்தத் தேர்தலில் எதிர்த்து நின்ற கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டுவிட்டன.
உறவுகள் வளர்வதற்கும் வளப்படுத்துவதற்கும் தானே தவிர, வேண்டாத சர்ச்சைகளில் விரிசல் விடுவதற்கல்ல.
நாம் போகிற வழி பற்றிய நம்பிக்கையும் உற்சாகமும் நம்மிடம் குறைந்தால் அந்த அடையாளம் முதலில் உடலில் தெரியும்,
தலைவலி, சோர்வு, சோம்பல், தள்ளிப்போடும் மனோபாவம் போன்றவை, செய்கிறவேலையில் ஊக்கம் குறைவதன் அடையாளங்கள், அந்த மாதிரியான நேரங்களில் நாம் தேட வேண்டியது தலைவலி மாத்திரையை அல்ல. தட்டிக் கொடுக்கும் உற்சாகத்தைத்தான் தேட வேண்டும். நமக்குப் பிரியமானவர்கள், நம் முன்னோடிகள் போன்றவர்களிடமிருந்து அதனைப் பெறமுடியும்.
எல்லாவிதங்களிலும் நிறைவடைந்த வாழ்க்கை நீங்கள் வாழ்கிறபோது உலகின் மிக உற்சாகமான மனிதராய் உன்னதமான மனிதராய், உயர்ந்த மனிதராய் நீங்கள் உருவெடுப்பீர்கள். உங்கள் வழியில் போவதன் மூலமாகவே உங்கள் வாழ்வின் கனவைச் சென்றடைவீர்கள்!!
THANKS TO SOURCE: - சேவூர் நாகராஜ் - NAMADHU NAMBIKKAI

அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?
>> Friday, April 23, 2010
அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.
அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு, எனக்கும் இதை போல பல நடந்துள்ளது, குறிப்பாக முன்பு பதிவுலகத்தில். அப்போதெல்லாம் அடைந்த மன உளைச்சல்கள் கணக்கில்லாதது, அந்த சமயத்தில் சரியான அனுபவம் இல்லாததால் அதிகளவில் கோபமே ஏற்பட்டது, புறம் தள்ள தெரியவில்லை.
பொதுவாக எனக்கு கஷ்டப்படுவது பிடிக்கும் அல்லது சவால்களை எதிர் கொள்வது பிடிக்கும். எனக்கு எதிரில் இருக்கும் சவாலை பொறுமையுடன் எதிர்கொள்வேன். பதிவுலகம் வந்த போது அதிகளவில் இந்த அனுபவம் கிடைத்தது. தற்போது ஓரளவு பக்குவம் அடைந்து விட்டேன். எதிலும் அவசரப்படக்கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பதும் நான் தெரிந்து கொண்டதில் குறிப்பிடத்தக்கது. நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.
நம்மை கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்து காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத வேண்டும், நான் அப்படி தான். நான் எதையும் பேச மாட்டேன், யாரை பற்றியும் கூற மாட்டேன். என்னை பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம். எனக்கு இதில் நல்ல ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான். ரஜினி சந்திக்காத பிரச்சனைகளா! அவமானங்களா!! எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதியாக இருப்பார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.
நம்மை கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது, நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம். நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள். நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள்.
நான் இணையத்தில் படித்து கொண்டு இருந்த போது லேனா தமிழ்வாணன் அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. இதில் என் மனதில் இருந்ததை அப்படியே கூறியது போலவே இருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். இதை நான் கூறியதாகவே கூறி இருக்கலாம் இருந்தாலும் அனுபவம் மிக்க ஒருவர் இதை கூறுவதை கேட்கும் பொழுது அதற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.
இனி லேனா தமிழ்வாணன் அவர்கள்
"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.
ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.
நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!
அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.
இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?
அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.
அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.
வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"
THANKS TO SOURCE: http://www.giriblog.com/2009/07/blog-post_27.html

ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்? அவசியம் இதை படியுங்கள்.
>> Thursday, April 22, 2010
மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.
ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்'.
ஈமெயில் அனுப்புபவரா நீங்கள்?
இன்று வீட்டு முகவரி அலுவலக முகவரியை விடவும் முக்கியம் உங்கள் மின்னஞ்சல் முகவரி. ஒற்றை வரியில் உலகமே உங்களை அடையாளம் கண்டுகொள்கிறது. ஈமெயில் எனப்படும் இந்த மின்னஞ்சலில் உள்ள சிறப்பம்சங்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள விருப்பமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு வேலை வாய்ப்பு கோரியோ, அல்லது அயல்நாட்டில் இருக்கும் நிறுவனத்திடம் வணிக வாய்ப்பு வேண்டியோ நீங்கள் அனுப்பும் ஈமெயில் சில நிமிடங்களிலேயே நேரடியாக அவர்கள் கணினியில் இறங்கிக் கண்சிமிட்டுகிறது.
இடையில் யாரும் பிரித்துப் பார்க்க வாய்ப்பில்லை. தபாலில் தவறாது. சில சமயங்களில் ஸ்பாம் (spam) பகுதியில் சென்று விழுவதைத்தவிர உரியவரைச் சென்று சேர்வதில் அதிகபட்ச உத்திரவாதம் கொண்டது ஆகிய சிறப்புகள் ஈமெயிலுக்கு உண்டு. ஆனால், அதனைத் திறந்து வாசிக்கிறபோதே உங்களைப் பற்றிய உடனடி அபிப்பிராயத்தை அவர்களுக்கு எது உருவாக்குகிறது தெரியுமா? நீங்கள் ஈமெயில் எழுதியுள்ள முறை.
நாம், அவர்கள் கவனத்தைக் கவர்வதாக நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் பெரிய எழுத்துக்களில் (Capital Letters) அனுப்புவோம்.
மேலைநாடுகளைப் பொறுத்தவரை பெரிய எழுத்துக்களில் ஈமெயில் அனுப்பினால், நாம் ஏதோ கோபத்திலும் எரிச்சலிலும் இருப்பதாகவும், அதை வெளிப்படுத்துவதாகவும் நினைத்துக் கொள்வார்கள்.
எனவே உங்கள் விசைப்பலகையில் உள்ள ‘ஷிஃப்ட்’ விசையை சரியாகப் பயன் படுத்துவது அவசியம்.
ஈமெயிலில், பெரிய பெரிய வாசகங்களைச் சுருக்கி வார்த்தைகளாய் அடிப்பதன் மூலம், நாம் இயல்பான தகவல் தொடர்பை மேற்கொள்வதாக நினைக்கிறோம். குறிப்பாக, மொபைல் போன்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் இந்த மோசமான கலாச்சாரத்தைத் தொடங்கிவைத்தன. நண்பர்கள் மத்தியில் அது தவறாக எடுத்துக் கொள்ளப்படாது.
ஆனால், அலுவல் மற்றும் வணிகரீதியான ஈமெயில்களில் வாக்கியங்களை, வார்த்தைகளாக சுருக்குவது, அலட்சியத்தையும் அக்கறை இன்மையினையும் வெளிப் படுத்தக்கூடும்.
"Regards" என்ற சொல் ”Regds”என்கிற போது உயிரற்றதாக ‘கடனே’ என்று சொல்லப்படுவதாக ஓர் எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. உரிய இடங்களில் நிறுத்தக் குறிகள் (Punctuations) பயன்படுத்தாத ஈமெயில்களும் அலட்சியமாய் எழுதப் பட்டதாகவே கருதப்படக்கூடும்.
ஆனால் சிலரோ, தங்கள் ஈமெயில் முழுவதும் நிறுத்தக் குறிகளை, பாரி வள்ளல்போல் வாரி வழங்குவார்கள். How are you!!!! என்று தொடங்கும் ஈமெயில் உங்களைப் பற்றியும் உங்கள் நிறுவனம் பற்றியும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
இந்தியாவிலிருந்து இப்படிப்போன ஈமெயில் ஒன்றிற்கு அமெரிக்க நிறுவனம் பதிலளித்துவிட்டுப் பின் குறிப்பில் இப்படிக் கேட்டது.
P.N: May we know why your mail is shouting?
(பி.கு: உங்கள் மின்னஞ்சல் ஏன் இப்படி சத்தம் போடுகிறது என்று தெரிந்து கொள்ளலாமா?)
சீரான எழுத்தளவுகளில், இலக்கணப் பிழைகள் இல்லாமல், அனாவசியமான நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்தாமல் வெவ்வேறு வண்ணங்களைப் பயன்படுத்திக் கண்களை உறுத்தாமல், மிதமாகவும், இதமாகவும் உங்கள் ஈமெயிலின் மொழி நடையும் எழுத்துக்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
வரிகளுக்கிடையே சமச்சீராக இடைவெளிவிடுங்கள். புல்லட் பாய்ண்ட் அல்லது எண் வரிசையிட்டு முக்கியமான விஷயங்களை நிரல்படுத்துங்கள்.
உங்கள் கணினியிலோ, அல்லது உங்களுக்கு யாராவது அனுப்பிய ஈமெயிலிலோ வித்தியாசமான, வசீகரமான படங்கள் இருக்கக் கூடும். அவற்றை சம்பந்தமேயில்லாமல் உங்கள் மடலோடு இணைத்து அனுப்பாதீர்கள்.
Attachment உடன் வருகிற ஈமெயிலைக் கொஞ்சம் அச்சத்துடன்தான் யாரும் திறப்பார்கள்.
சம்பந்தமில்லாத படங்களையோ பொன் மொழிகளையோ அனுப்பினால், அவர்கள் எரிச்சலடைய வாய்ப்புகள் அதிகம். விசையைத் தட்டினால் சில விநாடிகளுக்குள் சென்று சேரப் போகிறது உங்கள் ஈமெயில். எனவே அவசரப்படாமல், ஒருமுறைக்குப் பலமுறை படித்து பிழைகள் இல்லாமல் ஈமெயில் அனுப்புங்கள்.
எல்லாவற்றையும் விட முக்கியம், உடனடி பதில் எதிர்பார்த்துத்தான் ஈமெயில் அனுப்பப் படுகிறது. எனவே, ஆற அமர பதில் எழுதாதீர்கள். “போனவாரம் நீங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைத்தது” என்று உங்கள் பதில் தொடங்கினால் உங்கள் “சுறுசுறுப்புக்கு” ஈடுகொடுக்க, பதில் கொடுக்க முடியாதென்று உங்களுடன் வணிகத் தொடர்பு வைத்துக் கொள்ளவே தயங்குவார்கள்.
மின்னஞ்சல் என்பது விஞ்ஞானம் தந்துள்ள வரங்களில் ஒன்று. அதை மிகச் சரியாகப் பயன்படுத்தி வளருங்கள்
கீழ்காணும் லின்க்குகளை க்ளிக் செய்து படியுங்கள்.
மின்னஞ்சல் கடிதங்களுக்கான பத்து அன்புக் கட்டளைகள்.
ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்'
எச்சரிக்கை!! நண்பர்களிடமிருந்தே!! எதிரிகளிடமிருந்தல்ல!!
>> Wednesday, April 21, 2010
சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள்.!
வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான நண்பர்களைச் சந்திக்கிறோம். பிறகு அவர்களிடம் நாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி சிந்திக்கிறோம். பாடமும் பெறுகிறோம்.
எல்லா நட்பும் ஒரே வகையானதல்ல. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது (குறள்788)
வள்ளுவர் வகுத்த வாழ்வியலில், ஒருவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும்போது, உடனே ஓடோடி தானியங்கிபோல் உதவுவதுதான் அவ்வகை_ முதல்வகை. கைம்மாறு கருதாத நட்பு.
அத்தகைய நண்பர்களே மறக்கப்படக்கூடிய, இழக்கக் கூடாத நண்பர்கள் ஆவார்கள்.
மற்றொரு வகையாளர்கள், பயன் கருதிப் பழகுவார்கள். நம்மிடமிருந்து சதா, சர்வகாலமும் எதை எதையோ எதிர்பார்த்து_கணக்குப் போட்டுப் பழகும் பண்பாளர்கள்.
ஒரு சிறு ஏமாற்றம் அவர்களுக்கு என்றாலும் அவர்கள் மெல்ல மெல்ல காணாமற் போவார்கள்.
அந்த அற்றகுளத்து அறுநீர்ப்பறவைகள்! அவர்களைப் புரிந்தும் கூட, தாட்சண்யத்திற்காக அவர்களை நாமே கத்தரித்துவிடாமல், அவர்களது முகமன் கண்டுகூட முகம் சுளிக்காமல் பழகித் தொலைப்பது உண்டு.
அவர்களது பல பரிந்துரைகளை நாம் ஏற்று செயல்படுத்தி அவர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தியிருந்தால்கூட பத்து நடந்து, பதினொன்றாவது நடக்க இயலாமல்போனால், நடந்த பத்தை மறந்து, நடக்காத பதினொன்று பற்றியே அலுத்து அங்கலாய்ப்பார்கள் அவர்கள்!
நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்து சிறப்புடன் ஆட்சி புரிந்து வரலாறு படைத்த பனகல்அரசர் (Raja of Panagal) அவர்கள் கூறுவாராம்!
‘‘For every 10 recommendations I get nine enemies and one doubtful friend’’ 10 பேர் பரிந்துரைகளுக்கு என்னிடத்தில் வரும்போது, ஒன்பது பேர்கள் எதிரிகளாகவும், பயன் அடைந்த ஒருவர் சந்தேகத்திற்குரிய நண்பராகவும் தொடருவார்களாம்!
கிடைக்காத 9 பேர் எதிரிகளாகிறார்கள் என்பதை விட, அவரது கூற்றில் ரசிக்க வேண்டியது கிடைத்த 10ஆவது நண்பர்கூட, கிடைத்த பிறகு இது இவரால்தான் நடந்தது என்று சொல்லிவிட முடியுமா? சந்தேகத்துடன் நட்பு பாராட்டுவதோடு, கிடைத்தபிறகு அவரது தகுதி திறமை, அறிவாற்றல் இவைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூட நினைப்பார்!
சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,
அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள். ( ஒரு வகையில் அது நிம்மதி_ நமக்கும் விடுதலைதான்!)
நட்பு பலருக்கு ஒருவழிப் பாதைதான்; ஒரு சிலருக்கு மட்டுமே அது இருவழிப்பாதைகள் ஆகும்.
ஒரு நண்பர் பரிந்துரைகளைச் சொல்லி, அது நடக்காதபோது, அதன்பிறகு நம்மிடம் நடந்து கொள்வதைப் பொறுத்தே அவர் பண்புள்ளவரா? இல்லையா என்பதை அந்த அளவுகோல் கொண்டு அளக்கமுடியும்.
எனவே எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்_ சரியான நண்பர்கள் தேர்வைப் பற்றியே கவலைப்பட்டு வாழுங்கள்!
Source: வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி.
********************
படிக்கலாமே!!!
வெற்றியை விதைதிடுவோம்.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!! வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.
கத்திரிக்கோல் வேண்டாமே!.யாரையும் கத்தரித்துவிடாதீர்கள்.
மேலும் படிக்க...Read more...
370 வயதாகும் சென்னை- மதராஸ்-மதரசா பட்டணம். வரலாறு
>> Tuesday, April 20, 2010
மதரசா பட்டணம் – மதராஸ் - சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்கள் - ஆற்காடு நவாப்.. சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி. புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.
சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்றால் நம்ப முடிகிறதா?. நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முகம்மது அப்துல் அலி.
13வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனராம். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.
மதரசா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
சைதாப்பேட்டை ஆன சைதாபாத்...
அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.
அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்கு கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.
உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.
இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
ஆற்காடு நவாப் வம்சத்தினர் ஏராளமான கோவில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் பெருமளவில் நிலங்களை, நிதியை தானமாக அளித்துள்ளதே நல்லிணக்கத்திற்கு நல்ல சான்றாகும்.
இவையெல்லாம் நமது நாட்டின் அருமையான மத நல்லிணக்கத்திற்கு சான்றுகள் ஆகும் என்றனர்.
THANKS TO: http://srivaimakkal.blogspot.com/2009/08/blog-post_2425.html
********************
இவைகளையும் க்ளிக் செய்து படியுங்கள்.
நம்ப முடிகிறதா? சென்னைக்கு வயது 370
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மற்றவர்களிடத்தில் மனம் விட்டுப் பேசலாமா?
>> Monday, April 19, 2010
எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடத்தில் சொல்லலாமா?
எல்லோரிடத்திலும் யதார்த்த உணர்வோடு மனம்விட்டுப் பேசாதீர்கள்!
இப்படி மனம்விட்டுச் சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?
கடுகளவு ஆறுதல் கூடக் கிடைக்காது.
நீங்கள் வறுமையில் வாடியபோது உங்களுக்கு உதவி செய்ய எவரும் வந்திருக்கமாட்டார். ஆனால் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழும்போது உங்களை நாடி ஆயிரம் பேர் வருவார்கள்.
உயர்ந்த நட்புடையவர்கள் எப்போதும் மலர்ந்தபடியே உள்ள குவளை மலர்போல இருப்பார்கள். ஆனால் கெட்டவர்கள் பகலில் குவிந்து இரவில் மலரும் ஆம்பல் மலர் போல அடிக்கடி மாறுவார்கள். ஆதாயம் இருந்தால் மட்டுமே அண்டி வருவார்கள்.
நீங்கள் உங்கள் வாழ்வில் பட்ட அவமானங்கள், துன்பங்கள், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், உங்களுக்கு உண்டான கேவலங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இறைவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மன நிம்மதி உறுதியாகக் கிடைக்கும்.]
நீங்கள் உங்களுக்குப் பழக்கமானவரிடத்தில் எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேசுகிறீர்கள். நடந்த உண்மைகளை அப்படியே யதார்த்தமாகச் சொல்கிறீர்கள்! எல்லா விஷயங்களையும் மற்றவர்களிடத்தில் சொல்லலாமா? இப்படி மனம்விட்டுச் சொல்வதால் உங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? கடுகளவு ஆறுதல்கூடக் கிடைக்காது.
எனவே ஒருபோதும் எவரிடமும் மனம்திறந்து பேசாதீர்கள். சில விஷயங்களைப் பிறரிடம் சொல்லவே கூடாது.
பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுப் பிரச்னை, தாம்பத்ய அனுபவம், செய்த தானம், அடைந்த புகழ், ஏற்பட்ட அவமானங்கள் ஆகியவற்றைப் பிறரிடம் சொல்லவே கூடாது.
இதை மற்றவர்களிடத்தில் சொன்னால், நீங்கள் பலவீனர்களாகி விடுவீர்கள்.
உங்களுடைய பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலத்தை நீங்கள் இழப்பதுடன் அவர்களுடைய அடக்குமுறைக்கும் ஆளாகிவிடுவீர்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கேட்டு மற்றவர்கள் பொறாமை கொள்வார்கள். "அடேங்கப்பா!... இவருக்கு மாதந்தோறும் இவ்வளவு வருமானமா? மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா?'' என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருப்பார்கள்.
அவர்களின பார்வை உங்கள் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்திவிடும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதல்லவா?
உங்கள் கருத்துகளைப் பிறரிடம் கூறவே கூடாது. இதனால் உங்கள் பிரச்னைகளின் தீவிரம் கொஞ்சம்கூடக் குறையாது. எனவே ஒருபோதும் மற்றவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள்.
உங்கள் உயிர் நண்பராக இருந்தாலும் சரி, அவரிடத்திலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளாதீர்கள். அவர் உங்கள் உயிரை வாங்கும் எமனாக மாறிவிடுவார். இடுக்கண் களையும் நட்பை இன்று தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது.
கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதில் பிழையொன்றும் இல்லை. திருமணத்துக்கு முன்பு தாயிடமும் தந்தையிடமும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.
நீங்கள் உங்கள் வாழ்வில் பட்ட அவமானங்கள், துன்பங்கள், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், உங்களுக்கு உண்டான கேவலங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இறைவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மன நிம்மதி உறுதியாகக் கிடைக்கும்.
மன அமைதி என்பது உங்களுக்கு இல்லாமல் போய்விட்டதா? நல்ல நூல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள். ஆன்மிகச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள். சான்றோர்களுடைய நல்லுரைகளைக் கேளுங்கள். இவைகளால் உங்களுடைய மனம் விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடையும்.
நீங்கள் வறுமையில் வாடியபோது உங்களுக்கு உதவி செய்ய எவரும் வந்திருக்கமாட்டார். ஆனால் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழும்போது உங்களை நாடி ஆயிரம் பேர் வருவார்கள். உயர்ந்த நட்புடையவர்கள் எப்போதும் மலர்ந்தபடியே உள்ள குவளை மலர்போல இருப்பார்கள். ஆனால் கெட்டவர்கள் பகலில் குவிந்து இரவில் மலரும் ஆம்பல் மலர் போல அடிக்கடி மாறுவார்கள். ஆதாயம் இருந்தால் மட்டுமே அண்டி வருவார்கள்.
அன்புடையவர்கள் உயர்ந்த நட்புடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் ஒரே தன்மையுடன் பழகும் பண்புடையவர்களாகத் திகழ்வார்கள். நற்குடியில் பிறந்தவர்கள் கடமை தவறாமல் காரியங்களைச் செய்வார்கள். சமூகத்தில் பெரிதும் புகழப்படுவார்கள். கௌரவிக்கப்படுவார்கள்.
எனவே, உயர்ந்த நட்புடையவர், அன்புடையவர், நற்குடியில் பிறந்தவர், நட்புக்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணிபவர், ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர். சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அவரிடம் நட்புக்கொண்டு, அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்! இதை விட்டுவிட்டு எல்லோரிடத்திலும் யதார்த்த உணர்வோடு மனம் விட்டுப் பேசாதீர்கள்!
நன்றி: சுருணிமகன்
SOURCE: www.nidur.info
கத்திரிக்கோல் வேண்டாமே!.யாரையும் கத்தரித்துவிடாதீர்கள்.
>> Friday, April 16, 2010
உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பிரச்சாரம் செய்வார்கள்.
மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்.
ஆயக்கலைகள் 64 பற்றி கேள்வி பட்டிருக்கிறோம். கற்றிருந்தாலும் கைவிடப்பட வேண்டிய கலை ஒன்று இருக்கிறது தெரியுமா? .... கத்தரிக்கோல் கலை.
இயல்பாகவே சிலருக்கு இது கைவந்த கலையாக இருக்கும்.
இக்கலை வல்லுனர்களை எளிதில் இனம் காணலாம்.
காரியம் ஆகும்வரை வளைந்து நெளிந்து குழைந்து பேசுதல்;, அடிக்கடி போன் செய்து நலம் விசாரித்தல், நம்மைப் பாராட்டி நம்மிடமே அளத்தல், காரியம் ஆனதும் "டக்" என கத்தரித்துக் கொள்ளுதல்¸ வலியப்போய் பேசினாலும் "வேலை இருக்கு, நாளைக்கு பேசவா?" என்று நழுவுதல் ....
இப்படியாக கத்திரிக்கோல் கலைஞர்களை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
இவர்களை இப்படிப்பட்ட கலைஞர்களாக மாற காரணம் என்ன? மனசுதான்!
"ஏதோ ... ஒரு உதவி செய்துட்டார்னு, திரும்பத் திரும்ப நாம அவருக்கு ஏதாவது செய்யணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்?"
"அன்னிக்கு .... ஒரு உதவி செய்துட்டார்னு, திரும்பத் திரும்ப நாம அவருக்கு ஏதாவது செய்யணும்னு எப்படி எதிர்பார்க்கலாம்?" அதுக்காக இப்ப என்னோட அந்தஸ்துக்கு இவனோடெல்லாம் சகவாசம் வச்சுக்க முடியுமா?"
இப்படி எண்ணி எண்ணி அத்தகைய நட்பும் உறவும் இனி தேவையில்லை என்ற முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.
நீங்களும் இந்த வகை கலைஞருள் ஒருவரா? உங்களுக்கு சில வார்த்தைகள்:
யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள். இவரால் நமக்கு இனி ஆக வேண்டியது ஒன்றுமில்லை என யாரையும் எடைபோட வேண்டாம். யார் உதவி எப்போது தேவைப்படும் என்பது இப்போது தெரியாது.
சிறு உதவி செய்ததற்கே நீங்கள் நன்றியுள்ளவராக இருக்கும் பட்சத்தில் மேலும் பெரிய உதவிகளை அவராக முன்வந்து செய்யக்கூடும்தானே. அவருக்கு பெரிய மனசு இருந்ததால்தானே உங்கள் காரியத்தை அவர் மூலம் சாதித்திருக்கிறீர்கள்.
நீங்கள் கத்தரிக்க நினைப்பதை புரிந்துகொண்டால், அவர் முந்திக்கொள்வதுடன் நன்றி கெட்டவர் என்கிற பட்டத்தையும் உங்களுக்குத் தருவார்.
அப்புறம் நீங்கள் வலியப் போனாலும் அவர் மனதில் நீங்கள் செல்லாக்காசாகி விடுவீர்கள்தானே.
சின்னஞ்சிறு உதவி செய்தவரைக்கூட மறக்காதீர்கள். எதையும் சிறிது என மதிப்பிடாதீர்கள். சமயங்களில் சின்னச்சின்ன உதவிகள்தான் நமக்கு தேவையாக இருக்கும்.
பணக்காரர் இல்லையே என ஏளனமாக நினைக்க வேண்டாம். ஆபத்து காலத்தில் உதவி செய்யாத கோடீஸ்வர அண்ணனைக் காட்டிலும் கையிலிருந்ததை அப்படியே கொடுத்து உதவிய ஏழை நண்பனே மேல்.
சிறு துரும்புதான் பல் குத்த உதவும். பெரிய துடுப்பு இருக்கிறதே என்று அதை எடுத்து பல் குத்த முடியுமா?
கத்தரிக்கோல் கைவசம் வைத்திருப்பவர்களுக்கு உள்ளன்பான நண்பர்களோ உறவினர்களோ இருக்க மாட்டார்கள்.
"இவரைத் தெரியாதா? காரியம் ஆகும்வரை காலைச் சுத்தி வருவார். காரியம் ஆனதும் காலை வாருவார்" என்று நிச்சயம் உங்களைப் பற்றி அவர்கள் மத்தியில் ஒரு பேச்சிருக்கும்.
உங்களால் கத்தரிக்கப்பட்டவர்கள் உங்களைப் பற்றி அவதூறாக தமக்குள் மட்டுமல்ல, உறவினர், நண்பர்களிடமும் பிரச்சாரம் செய்வார்கள்.
மொத்தத்தில் அதனால் உங்கள் குடும்பத்தினரும் மரியாதை இழக்க நேரிடும்.
எனவே யாரையும் எந்தக் காலத்திலும் எக்காரணம் கொண்டும் கத்தரித்துவிடாதீர்கள்.-- கீதா சிகாமணி
THANKS TO :www.nidur.info
விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!
>> Thursday, April 15, 2010
விவசாயிகள் தற்கொலைக்கு ஒரே தீர்வு இஸ்லாமிய வங்கிமுறை மட்டுமே!
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பேச்சு
கடன்சுமை தாளாமல் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நம்நாட்டில் தொடர்கதையாகி விட்டது. சென்ற வாரம் கூட விதர்பா பகுதியில் 30 விவசாயிகள் கடன் கொடுமையைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர்.
இது குறித்து ஒரு விழாவில் கருத்து கூறிய பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், இஸ்லாமிய வங்கி முறையால் மட்டுமே இத்தகையத் தற்கொலைகளைத் தடுத்து நிறுத்த முடியும் என்று ஆணித்தரமாக எடுத்துரைத்துள்ளார்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம், கடனை செலுத்த முடியாமை அல்ல, அந்தக் கடனுக்கு விதிக்கப்படும் கொடுமை யான வட்டியைக் கட்டமுடியாமையே.
விவசாயிகள் மட்டுமின்றி, ஏழை எளிய மக்கள் கந்து வட்டிக் கொடுமை யின் காரணமாக, குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்கிற செய்தி கள் அடிக்கடி நெஞ்சைச் சுடுகின்றன.
வட்டியில்லாத கடனை வழங்கும் இஸ்லாமிய வங்கிமுறையே, இந்தக் கொடுமைகளுக்கு ஒரே தீர்வு என சென்னையில் நடைபெற்ற ‘கருணா ரத்னா’ விருதுகள் வழங்கும் விழாவில் எம்.எஸ்.சுவாமி நாதன் பேசியுள்ளார்.
அகிம்சை, மரக்களி உணவு, சுற்றுப் புறச்சூழல் ஆகிய தளங்களின் சிறந்த சேவை ஆற்றுவோருக்கு கருணா ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இவ்வாண்டு பத்மஸ்ரீ முசாபர் ஹூசேன், சின்னி கிருஷ்ணா, நந்திதா கிருஷ்ணா ஆகியோருக்கு விருதும் 1 லட்ச ரூபாய் பொறிகிழியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் விருதுகளை வழங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் இஸ்லாமிய வங்கி முறையே தேசத்தின் பிரச்சினைக்குத் தீர்வு என்றுள்ளார். சு.சுவாமி என்ற அரசியல் தரகரோ, கேரள அரசு இஸ்லாமிய வங்கியைத் தொடங்குவதற்குத் தடை விதிக்குமாறு வழக்குப் போடுகிறார். எம்.எஸ். சுவாமி நாதன் உரையை கேட்டாவது, சுப்ரமணியசுவாமி திருந்த வேண்டும்.
THANKS TO T.M.M.K-ஹாஜாகனி
பெற்றோரை புறக்கணிக்கிறீர்களா? உங்கள் சொத்து பறிபோகும். எச்சரிக்கை!!!
>> Tuesday, April 13, 2010
சென்னை, ஏப்.12_ பெற்ற மகன்களால் புறக்கணிக்கப்பட்டு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் பராமரிப்புத் தொகைக்காக இனி நீதிமன்றங்களுக்கு போய் ஆண்டுக் கணக்கில் அல்லாட வேண்டாம்.
ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்து பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக அரசு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் சமூக நலத்துறை முயன்று வருகிறது.
தாங்கள் பெற்ற குழந்தைகளை கண்ணும், கருத்துமாக வளர்த்து ஆளாக்கும் பெற்றோர், 'வயதான காலத்தில் குழந்தைகள் எங்களைப் காப்பாற்றும்' என்று பெருமையோடு சொல்வதுண்டு.
அவ்வாறு பெற்றோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, குழந்தைகள் செயல்படுகிறார்களா, பெற்றோரின் தேவைகளை நிறைவேற்றி, அவர்களை பாதுகாக்கிறார்களா என்றால் சந்தேகம்தான்.
முடிந்த வரை பெற்றோர் உழைப்பைச் சுரண்டிக்கொண்டு, வயதான காலத்தில் அவர்களை ஓரங்கட்டியவர்களும் நம்மில் உண்டு. வசதி படைத்த இடங்களில் கூட, வயதான காலத்தில் உபத்திரவமாக இருக்கிறார்களே எனக் கூறி, பெற்றோரை முதியோர் இல்லத்தில் தள்ளிவிடும் மகன்களும் இல்லாமல் இல்லை.
'எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று பெற்றோரை விழுந்து விழுந்து கவனித்து நம்பிக்கையைப் பெற்று, சொத்துக்களை தன் பெயருக்கு மாற்றி எழுதிக்கொண்டு, அதன் பின் பெற்றோரை விரட்டியடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, வயதான காலத்திலும், தன்னம்பிக்கையோடு உழைத்து வாழும் முதியோரை நாம் காண முடிகிறது. இப்படி புறக்கணிக்கப்பட்ட பெற்றோர், முதியோர் நீதிமன்றத்துக்கு போய் அலைந்து, திரிந்து மகன், மகளிடம் பராமரிப்புத் தொகை வாங்கும் நிலையிலும் அவர்கள் இல்லை.
அப்படியே நீதிமன்றத்துக்குப் போனாலும், வழக்குகள் ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், தள்ளாத வயதிலும் நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி, இறங்கி சிரமத்துக்குள்ளாக வேண்டியுள்ளது. இவ்வாறு பரிதவிக்கும் பெற்றோர், மூத்த குடிமகன்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.
பெற்றோர், மூத்த குடிமக்கள் நல மற்றும் பராமரிப்புச் சட்டம் 2007இன்படி புகார் கொடுத்தால், உடனுக்குடன் பிரச்சினையை தீர்த்து பராமரிப்புத் தொகை பெற்றுத் தரும் வகையில், 2009 டிச., 31இல் தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, அருகிலுள்ள ஆர்.டி.ஓ.,விடம் (கோட்டாட்சியர்) பாதிக்கப்பட்ட முதியோர் புகார் செய்தாலே போதும். அவர் சம்பந்தப்பட்டவர்களை விசாரித்து, முதியோருக்கு, பெற்றோருக்கு பராமரிப்புத் தொகை பெற்றுத் தர முடியும். மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்களிடமும் புகார் செய்யலாம்.
வழக்கை விசாரித்து முடிவுக்கு கொண்டு வரவும், பராமரிப்புத் தொகை தர மறுப்போருக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் அல்லது சிறைக்குள் தள்ளவும், அபராதமும், தண்டனையையும் சேர்த்து வழங்கவும் ஆர்.டி.ஓ.,க்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், வயோதிகத்தின் காரணமாக, விசாரணைக்கு வர முடியாத முதியோர், தங்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள் தரப்பில் ஒருவரை பிரதிநிதியாக நியமித்துக் கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சமூக நலத்துறை பல கட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
சமூக நலத்துறை ஆணையர் நிர்மலா கூறியதாவது:
சிறீரங்கத்தில் தந்தை இறந்துவிட்டதாக கூறி, பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை தனது பெயருக்கு மகன் மாற்றிக் கொண்டார். தந்தையையும் ஓரங்கட்டி விட்டார். விஷயமறிந்த தந்தை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் செய்தார்.
விசாரணையில், மகன் மோசடி செய்தது உண்மை என தெரிந்து, சொத்துக்கள் அனைத்தையும் தந்தை பெயருக்கே மாற்றிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் புதிய உத்தரவின் மூலம், எழுதி வைத்த உயிலைக்கூட பெற்றோர் மாற்றி எழுதவும் வகை செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களும், பெற்றோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு நிர்மலா கூறினார்.
காஷ்மீர் காணும் இடமெல்லாம் மரணப் புதைகுழிகளால் நிரம்பியுள்ளது.
>> Monday, April 12, 2010
அங்கே நீங்கள் யாரை வேண்டுமானாலும் வீடு புகுந்து கைது செய்யலாம்; பள்ளிக்குச் செல்லும் மாணவியை வீதியில் வைத்துச் சுடலாம்; பேருந்து நிலையத்தில் காத்திருப்பவரை கைது செய்து என்ன குற்றச்சாட்டை வேண்டுமானாலும் சுமத்தலாம்; பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தலாம்; ஆயுதத்தை சோதித்துப் பார்க்கச் சிலரை கொல்லலாம். இன்னும், இன்னும்... எது வேண்டுமானாலும் செய்யலாம்.
நன்றி : அ.முத்துக்கிருஷ்ணன், கீற்று.காம்.
.
மேலும் படிக்க மேலும் படிக்க...Read more...
நன்றி : அ.முத்துக்கிருஷ்ணன், கீற்று.காம்.
.
மேலும் படிக்க மேலும் படிக்க...Read more...
உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது”
>> Monday, April 5, 2010
அவசியம் படிக்க வேண்டிய அருமையான, உபயோகமான பதிவு.
சிவாஜியால் ஒரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை.
நெப்போலியனால் ஒரு நெப்போலியனை உருவாக்க முடியவில்லை
குழந்தை சுடப்படாத ஈரக்களிமண் .
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல. அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது.
அன்னையும் பிதாவும்.
அப்பாவும் பையனுமாக குற்றாலத்திற்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கே பல இடங்களில் “திருடர்கள் ஜாக்கிரதை” “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதப்பட்டுள்ளது.
இதை வாசித்த அந்த சிறுவன் தந்தையிடம் கேட்கிறான் “திருடர்கள் ஜாக்கிரதை” என்று எழுதியிருந்தால் மட்டும் திருடர்கள் பயந்து விடவா போகிறார்கள். தந்தை பதில் கூறுகிறார். “இந்த எச்சரிக்கை திருடர்களுக்காக அல்ல. திருடர்களிடமிருந்து நம்மை காத்துக்கொள்ள நம்மை போன்ற சுற்றுலா பயணிகளுக்குக் கொடுக்கப்படும் அறிவுரை”. எனவே திருடர்கள் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
இது போலவே அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற பழமொழி குழந்தைகளுக்காக அல்ல.
அப்பாக்களுக்கும் அம்மாக்களுக்குமான அறிவுரை இது. குழந்தைகள் பெற்றோரை தெய்வம் போல பார்க்கிறார்கள். ஒரு வழிகாட்டியாக (Role Model) கவனிக்கிறார்கள்.
ஆகவே நாம் நமக்காக மட்டுமல்ல நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருப்பதற்காக குறையற்ற நல்ல பழக்க வழக்கங்களை, ஒழுங்குகளை கடைப்பிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.
நமது ஒவ்வொரு செயல்களையும் நமது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒவ்வொரு வார்த்தைகளையும் குழந்தைகள் ஆழ்ந்து கவனித்து பின்பற்றுகிறார்கள்.
நாம் அவர்களுக்கு என்ன சொல்கிறோம் என்ன அறிவுரை கூறுகிறோம் என்பதை அல்ல, என்ன செய்கிறோம் என்பதையே அவர்கள் பார்க்கிறார்கள் பின்பற்றுகிறார்கள்.
“என் வாழ்வே என் செய்தி” என்ற அண்ணல் காந்தி கூறியது போல நமது செயல்களே நம்மையறியாமல் நம்மை அவர்கள் பின்பற்ற காரணமாக அறிவுரையாகிறது. எனவே நமது நடவடிக்கைகள் சரியானதாகவும் ஒழுக்கமானதாகவும், திறமையானதாகவும், வழிகாட்டும்படியாகவும் இருக்க வேண்டும்.
எது சிறந்த முதலீடு
நமது செல்வத்தை எதில் முதலீடு செய்யலாம்? தங்கத்திலா? நிலத்திலா? பங்கு சந்தையிலா? வங்கி கணக்கிலா? எதில் முதலீடு செய்வது சிறந்தது? என்று பல வல்லுனர்கள் அறிவுரை கூறுகிறார்கள்.
மிகச்சிறந்த முதலீடு என்பது நமது குழந்தைகள்தான். கோடி கோடியாக பணம்
இருந்தாலும் குழந்தைகள் சரியாக வளர்க்கப்படவில்லை என்றால் என்ன பயன்? நம் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க நம்மில் அனேகர் ஆர்வத்துடன் இருக்கக்கூடும்.
மிகச்சிறந்த பள்ளியில் சேர்ப்பதாலோ, டியூசன் ஏற்பாடு செய்வதாலோ ஒரு குழந்தை சிறப்பு பெற்றுவிடுவதில்லை. குழந்தைகள் மீது நாம் எடுத்துக் கொள்ளும் சிரத்தை உணர்வுதான் குழந்தையின் வெற்றிக்கு ஆதாரம்.
ஈன்றபுறந்தருவது தாயின் கடனே
சான்றோன் ஆக்குவது தந்தையின் கடனே
தாயோடு அன்பு போகும், தந்தையோடு கல்வி போகும் இவைகள் தமிழ் வாக்குகள்.
ஆனால் குழந்தை வளர்ப்பதில், சான்றோன் ஆக்குவதில் தந்தையின் பங்கை விட தாயின் பங்கே அதிகம். ஒரு சிறந்த தாயால் மட்டுமே உயர்ந்த மனிதனை உருவாக்க முடியும்.
சிவாஜியால் ஒரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை. நெப்போலியனால் ஒரு நெப்போலியனை உருவாக்க முடியவில்லை.
சாதிப்பது வேறு. சாதனையாளரை உருவாக்குவதுவேறு. சிறந்த குழந்தைகளை உருவாக்க நாம் நிறைய நேரத்தை அவர்களுக்காக செலவு செய்தாக வேண்டும்.
புதிய குறள்:
வெள்ளத்தனைய மலர் நீட்டம் பெற்றோர் தம்
உள்ளத்தனைய (குழந்தையின்) உயர்வு
ஒரு தாய்க்கு குழந்தை பற்றிய தன்மதிப்பு எத்தனை உயர்வாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த குழந்தை தன் வாழ்வில் சாதிக்கிறான்.
தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் இருந்து படிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்டார். அந்த குழந்தையின் தாய் என் மகனின் திறமைகளை இந்த உலகம் இன்று புரிந்து கொள்ளவில்லை. ஆனால் பின்பு புரிந்து கொள்ளும் என நம்பினார். தானே குழந்தைக்கு அத்தனை பாடங்களையும் சொல்லிக் கொடுத்து அவன் செய்யும் பரிசோதனைகளுக்கு உதவினார். மிகச் சிறந்த விஞ்ஞானியாக உருவாக்கினார். அந்த தாய்க்கு இன்று இந்த உலகே கடமைப்பட்டிருக்கிறது.
முட்டாள்தனமாக கேள்வி கேட்டு கொண்டிருக்கிறான். அவன் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று பள்ளி ஆசிரியர் ஐன்ஸ்டினை வெறுத்தார். உற்றார் உறவினர்களும் அவரை ஒதுக்கினர்.
ஆனால், அவரது தாயும் ஜேக்கப் என்ற அவரது மாமாவும் அவரை மதித்து அவரது கேள்விக்கு விடை காண உதவினர். அவருக்கு ஊக்கம் கொடுத்தனர். அவர்களின் ஊக்கத்தால் அந்த மாமேதை உருவானார்.
இன்று நாம் அறிந்த சானியா மிர்சா, மகாநதி ஷோபனா, இளம் பேச்சாளர் சங்கமித்திரை இவர்களின் வெற்றிக்குப்பின் அவர்கள் பெற்றோரின் கடின உழைப்பு, பெரும் முயற்சி காரணமாக இருக்கிறது.
குருடும் குருடும்
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார்
குருட்டினை நீக்கா குருவினைக் கொள்வர்
குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே - திருமூலர்
ஒரு மனிதன் சிறந்த குழந்தைகளை உருவாக்க வேண்டுமானால் தானும் சிறந்த அறிவாளியாக இருக்க வேண்டும். குழந்தைகள் கேட்கும் ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்ல வேண்டும். பதில் தெரியவில்லை என்றால் எனக்குத் தெரியாது நீயே கண்டு பிடித்துக் கொள் என்று சொல்ல வேண்டும்.
அப்படி இல்லாமல் தவறான பதில்களையோ, மழுப்பலான பதில்களையோ கூறக்கூடாது. குழந்தைகளின் வயிற்றுப்பசியை தீர்த்தால் போதாது. அவர்களின் அறிவுப்பசியை தீர்க்க வேண்டும்.
நமது எண்ணங்களும் நமது சிந்தனைகளும் நமது கருத்துக்களும் மிகச் சரியானவை என்று சொல்ல முடியாது. நாம் இந்த சமுதாயத்தால் உருவாக்கப்பட்டுள்ளோம். சமுதாயத்தின் சீர்கேடுகள், முட்டாள் தனங்கள் நம்முள் நிறைந்திருக்கின்றன.
குழந்தைகள் புதிய மலர்கள். அவர்கள் சுடப்படாத ஈரக்களிமண். அவர்கள் மீது நாம் நமது சொந்த கருத்துக்களை திணிக்கக்கூடாது.
நம் குழந்தைகள் அல்ல!
நம் குழந்தைகள் உண்மையில் நம் குழந்தைகள் அல்ல, அவர்கள் நம் மூலமாக வந்தாலும் நம்மிடமிருந்து வரவில்லை. அவர்கள் இறைவனிடமிருந்து வந்தவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள்.
அவர்கள் நம்மோடிருந்தாலும் நமக்குச் சொந்தமில்லை. அவர்கள் நம் எண்ணங்களை எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவந்தவர்கள் அல்ல. அவர்கள் தன் எதிர்பார்ப்புகளை, அல்லது இறைவனின் கட்டளைகளை நிறைவேற்றவந்தவர்கள். நமது குழந்தைகள் மேல் நாம் அதிகமான உடைமை மனப்பான்மை (Possessiveness) கொள்ளலாகாது.
“உன் குழந்தையை உன்னுடைய நகலாக (Xerox copy) ஆக்க நினைக்காதே. அது நடவாது” என்கிறார் எமர்சன்.
ஒரு மாமரத்தை நட்டு நீர் ஊற்றி உரமிட்டு வளர்த்தால் நன்கு வளரும். ஆனால் நம் விருப்பத்தினால் அது பலா மரமாக மாறிவிடாது.
அது போலவே குழந்தைகளும். இருந்தாலும்கூட ஐந்து வயதில் இருக்கும்போதே ஒரு குழந்தை எதில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படுகிறதோ அதில் சாதனை படைக்க முடியும்.
தாவரங்களில் விதையின் மூலம் வருவதும் உண்டு, குச்சிகளின் (ஒட்டுச்செடி) மூலம் வருவதும் உண்டு. குச்சி மூலம் (குளோனிங் குட்டிகள் போல) வருவது தாய்ச் செடியின் குணம் அப்படியே இருக்கும். விதைகள் மூலம் உருவான செடிகள் தாய் தாவரத்திலிருந்து சற்று மாறுபட்டு இருக்கும். தாய் தாவரத்தில் இல்லாத சிறப்புகளும் சில குறைகளும் இதில் இருக்கும்.
அதுபோலவே ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொருவிதம் அவர்கள் ஒரு புதிய பரிணாமம். இறைவனின் உன்னத படைப்பு.
நம் குழந்தைகள் மட்டும் நம் குழந்தைகள் அல்ல
நம் குழந்தைகள் மட்டும் நமக்கு குழந்தைகள் அல்ல. நம்மைச் சுற்றியுள்ள குழந்தைகளையும் நம் குழந்தைகள் போல் நேசிக்க வேண்டும். அவர்கள் முன்னேற்றத்திற்கும் நாம் பல உதவிகளை செய்யலாம். அப்போதுதான் நம் குழந்தைகளுக்கும் ஒரு சமுதாயப் பார்வை வரும்.
படி, படி, படி
சில மாதங்கள் மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஒலிக்கக்கூடிய எலக்ட்ரானிக் பெட்டி இப்போது கடைகளில் கிடைக்கிறது. அதை ஆன் செய்தால் தொடர்ந்து மந்திரங்களை திரும்ப திரும்ப கூறிக்கொண்டே இருக்கும். அது போல ஒரு பெட்டி நம்முள் இருக்கிறது என நினைக்கிறேன்.
ஆகவேதான் குழந்தைகளைக் கண்டால் படி, படி என இடையறாது
கூறிக்கொண்டே இருக்கிறோம். ஒரே வார்த்தையை அடிக்கடி கேட்கும்போது குழந்தைகளுக்கு அதன் மீது ஒரு வெறுப்பு உருவாகிறது. எப்போதாவது ஒருமுறை சற்று விளக்கங்களோடு, சில கதைகள் சேர்த்து, உதாரணங்களோடு படிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும்.
குழந்தை வளர்ப்பு
குழந்தை வளர்ப்பு என்பது குழந்தையின் கரு உருவாகும்போதே ஆரம்பமாகிறது. ஒரு தாயாகப் போகிற பெண் தன்னை குழந்தை பெற்றுக் கொள்ள தயாரான உடலையும் மனதையும் பெற்றிருக்க வேண்டும்.
வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த உணவு உண்டு உடலையும் மனதையும் ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டும். நிறைய ஆக்சிஜன் தேவைப்படும். நல்ல காற்றோட்டமான இடத்தில் வசிக்க வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கரு உருவாகும் காலங்களில் வாந்தி வரும். அப்போது உணவு உள்ளே செல்லாது. அப்போது புளிப்பான பழரசங்களை அருந்தலாம். அப்போது உணவு உள்ளே செல்லாததால் உடலின் எடை குறையும் அது பற்றி கவலை இல்லை. பின்பு சரியாகிவிடும்.
கருவுற்ற தாய்க்கு நிறைய கால்சியம், இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் தாது உப்புக்களும் தேவை. இவைகளை பார்த்து உண்ண வேண்டும். உடலை அசுத்தம் செய்யும் உணவுகள் ஆகாது. உப்பு, கொழுப்பு குறைவான உணவுகள் ஏற்றது. சிறிய உடற்பயிற்சிகளும், மூச்சுப் பயிற்சிகளும் நல்லது.
பிறந்த பின்
தாய்ப்பாலே குழந்தைக்கு சிறந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய் உணவு விசயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.
மூன்று மாதத்திற்குப்பின் தேன்கலந்த சாத்துக்குடி ஜுஸ் கொடுக்கலாம். ஆறு மாதத்திற்கு பின் வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் பழ ஜுஸ்கள் கொடுக்கலாம்.
இட்லியைவிட சத்து மாவு குழந்தைகளுக்கு நல்லது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ஜங்க் புட் என்ற உணவுகளை கொடுக்கக்கூடாது. பேக்கரி உணவுகள் நல்லதல்ல. வெறும் மைதாவில் செய்யப்பட்ட பிஸ்கட் சிறந்த உணவல்ல. கேரட் துருவி, தேங்காய் சேர்த்து சற்று இனிப்பும் சேர்த்து கொடுக்கலாம்.
எந்த உணவினால் நமக்கு சர்க்கரை வியாதியும், இதயநோயும் வந்ததோ அதே உணவை நம் குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? ஆகவே அரிசி உணவு (சோறு, இட்லி, தோசை) ஒருவேளைக்கு மேல் கொடுக்கவே கூடாது.
மூன்று வேளை கண்டிப்பாக குழந்தைகளுக்கு திணிக்க வேண்டாம். காரம் உப்பு நிறைந்த உணவுகளை கொடுக்கக்கூடாது. பசி வரும்போது கேட்டு வாங்கி உண்பார்கள்.
குழந்தைகள் சத்துப்பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கூடிய மட்டும் நிறைய பழங்களும் கொஞ்சம் புரதமும் இருந்தால் போதுமானது. அதிக உணவே ஆபத்து. வீட்டில் எங்கு நோக்கினும் கைக்கு, கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பழங்கள், பயறுகள், நிலக்கடலைகள் போன்ற உணவுகளே இருக்க வேண்டும். ஜங்க் புட் , பேக்கரி உணவு மற்றும் சுவீட் கடையின் இனிப்பு கார வகைகள் கண்ணில் படக்கூடாது. பசிக்கும்போது குழந்தைகள் கைக்கு எது
கிடைக்கிறதோ அதை உண்பார்கள்.
பாதுகாப்பு
இந்த குழந்தைகளைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் வைத்திருக்க வேண்டும். நெருப்பு, தொட்டியில் உள்ள நீர், கத்தி, ஆணி, மருந்துகள் இவைகளில் இருந்து பாதுகாக்க சரியான வழிமுறைகள் இருக்க வேண்டும்.
உடற்பயிற்சி
உடலைப் பற்றிய ஒரு அறிவு குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். தினமும் விளையாட்டு, கராத்தே, ஓட்டம் மற்றும் நடனம் போன்ற பயிற்சிகள் செய்வதற்கு ஒரு மணி நேரமாவது செலவிடவேண்டும்.
என்னதான் சிறந்த உணவு உண்டாலும் உடலின் மெட்டோபாலிசம் சிறப்பாக வேலை செய்தால்தான் உடல் வளர்ச்சி, ஆரோக்யம் சிறந்து விளங்கும். அதற்கு இந்த பயிற்சிகள் அவசியம்.
மேலும் உடல் உற்சாகமாக இருக்கவும், ஞாகபசக்தி, சிந்தனைத்திறன் சிறந்து விளங்க உடற்பயிற்சி மிக மிக அவசியம். ஆகவே உடற்பயிற்சிக்கு கண்டிப்பாக
நேரம் ஒதுக்க வேண்டும்.
மூன்று வித நோய்கள்:
டெட்டனஸ், கக்குவான், இளம்பிள்ளை வாதம் இம்மூன்றும் சிறு குழந்தைகளை பாதிக்கும் உடல்நோய்கள். தடுப்பூசி மூலம் இவைகள் வராமல் தடுக்கப்படுகிறது. இது போல குழந்தைகள் மனதை பாதிக்கும் நோய்கள் குற்ற உணர்வு, பயம், நேசிக்கப்படா நிலை.
இந்த மூன்று குறைகளும் குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை கெடுக்கிறது. எப்போது ஒரு குழந்தை தன் பெற்றோரால் நேசிக்கப்படுகிறதோ அப்போதே அதற்கு உயர்ந்த தன்மதிப்பு (Self Esteem) உருவாகிறது.
திட்டுதல்
அநேக பெற்றோர்களுக்கு பல பிரச்சனைகள், சிக்கல்கள், கவலைகள், மன போராட்டங்கள். இதன் காரணமாக குழந்தைகள் மேல் எரிந்து விழுகிறார்கள். பாவம் அந்த குழந்தைகள் என்னதான் செய்யும், யாரிடம் போய் சொல்லும். இப்படி எப்போதாவது நாம் நடந்துகொண்டால் பின்பு அவர்களை அழைத்து, அவர்களிடம் நம் தவறுக்கு மன்னிப்பு கோரவேண்டும். அப்போது அவர்கள் நம்மை புரிந்துகொண்டு மிகுந்த பாசத்துடன் இருப்பார்கள்.
அநேகமாக ஐந்து வயதுக்குள் குழந்தைகளுக்கு மனம் உருவாகிறது. அந்த வேளையில் தாயின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் முகபாவங்களும், சொல், செய்கையுமே குழந்தையின் மனதை பாதிக்கின்றன. நம்பிக்கையூட்டும் உற்சாகமான மகிழ்வான முகத்தை பார்க்கும் குழந்தைகளுக்கு நல்ல மனம் உருவாகிறது.
செயல்கள் செய்யும்போது தவறுகள் வரும். தவறுகள், தவறுகள் அல்ல. ஆனால் ஒரு தவறை மறுமுறை வராமல் இருக்க அதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
தவறுகள் செய்யும்போது அதற்கான பலன்கள் கிடைக்கும் அதை எதிர்கொள்ள துணிவு வேண்டும். தவறுகள் வந்தால் குழந்தைகளை திட்டி உனக்கு இதை செய்ய தகுதி இல்லை என்று மட்டும் கூறவே கூடாது. தாழ்வு மனப்பான்மை உருவாக்கக் கூடாது. தவறாமல் இருக்க வழிகளையும், தவறுகளின் பின்விளைவுகளையும் எடுத்துக் கூறவேண்டும்.
திட்டுக்கள், தண்டனைகள் அதிகமாகும்போது அநேக விசயங்களை நமக்கு தெரியாமல் குழந்தைகள் மறைப்பார்கள். அதனால் இன்னும் குற்ற உணர்வு கூடி மனம் நம்பிக்கையிழந்து குறுகிப் போகும்.
பயம்
நாம் குழந்தைகளின் தொல்லைகளில் இருந்து விடுபட குழந்தைகளை சாப்பிட வைக்க பேய், பூச்சாண்டி, போலீஸ்காரன், பிள்ளைபிடிப்பவன் என பல வித பெயர்களில் பயப்படுத்துகிறோம். தற்காலிகத் தீர்வுக்காக குழந்தைகளின் மனதில் பயம் என்ற விசத்தை தூவுகிறோம். பயம் என்றால் என்னவென்றே தெரியாமல்தான் குழந்தைகளை வளர்க்க வேண்டும். வீரம் இல்லாவிட்டால் அறிவால் எந்த பயனும் இல்லை. அறிவு சிறப்பாக செயல்பட வீரம் வேண்டும்.
நேருக்கு நேர் பார்
இன்று கதிரவன் உதிப்பதை கூட குழந்தைகள் தொலைக்காட்சியில்தான் பார்க்கிறார்கள். குழந்தைகளுக்கு உலகத்தைக் காட்ட வேண்டும். உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் காட்ட வேண்டும். அவர்களின் சிந்தனைக்கும் கற்பனைக்கும் அவைகள் பயனுள்ளதாக இருக்கும்.
உயர்ந்த மலைகளை, அடர்ந்த காடுகளை, கடற்கரைகளை, பவுர்ணமியை, கதிரவன் உதயத்தை, பறவைகள், புழுக்கள் கூடு கட்டுவதை, முட்டையில் இருந்து குஞ்சு வெளிவருவதை.
கிராமங்களை, நகரங்களை, சந்தைகளை, தொழில்கூடங்களை, நீதிமன்றங்களை, காவல் நிலையங்களை, அதிகாரிகளை, அமைச்சர்களை, பாராளுமன்றம், சட்டமன்றம் இப்படி வாழ்வின் எல்லா அம்சங்களையும் குழந்தையாக இருக்கும்போதே நேரில் பார்ப்பது விசாலமான மனதை உருவாக்கும்.
உயர் அதிகாரிக்கும், பணம் பெற்றிருப்பவர்களுக்கும் இருக்கும் அந்த செல்வாக்கை அவர்கள் உணர வேண்டும். இவைகள் தன் இலக்கினை உருவாக்க அவர்களுக்கு உதவும். இதுவே கல்விச்சுற்றுலா.
இயந்திரங்கள் அல்ல
இன்று எல்லாமே இயந்திரமாகி போய்விட்டது. நமது வாழ்க்கை இயந்திரத்தனமாக ஆகிவிட்டது. எல்லாவற்றையும் வியாபார நோக்கோடு பார்க்கிறோம்.
மாடு என்றால் பால் கொடுக்கும் இயந்திரம். கோழி என்றால் முட்டை போடும் இயந்திரம். மனிதன் என்றால் பணம் உண்டாக்கும் இயந்திரம், குழந்தைகள் என்றால் (புரிந்தாலும் புரியாவிட்டாலும்) மார்க்குகள் வாங்கும் இயந்திரங்கள்.
இவைகளால் முடங்கிப் போவதல்ல வாழ்க்கை, குழந்தையானாலும் பெரியவரானாலும் வாழ்க்கை வாழப்பட வேண்டும்.
வாழ்வதற்கே படிப்பு, வாழ்வதற்கே உழைப்பு, வாழ்வதற்கே வருமானம். ஆகவே ஆனந்தமாக வாழத் தெரிந்திருக்க வேண்டும்.
பண நிர்வாகம்:
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு திறமை இருக்கும். சில குறைகளும் இருக்கும். ஆனால் எல்லா குழந்தைக்கும் பொதுவாக மொழிப் பாடமும் கணிதப் பாடமும் சொல்லித் தருகிறோம். அதுபோன்ற அடிப்படையான பாடம் ஒன்று உண்டு.
அதுதான் பண நிர்வாகம் (Finance Management) என்ற வரவு செலவு கணக்கு. எப்படியும் வரவுக்குள் செலவு இருக்க வேண்டும். செலவுகளில் சிக்கனம் வேண்டும்.
எந்த திறமை இல்லாவிட்டாலும் பண நிர்வாகம் என்ற திறமை இருந்தால் என்றும் நிம்மதியாக வாழலாம்.
எப்போது வேண்டுமானாலும் சிக்கல்கள் வரலாம். அமெரிக்காவே இன்று சிக்கல்பட்டு இருக்கிறது. வரவுக்குள் செலவை வைக்கவும், கடன் வாங்காதிருக்கவும் பழக்க வேண்டும். தேவையற்ற செலவுகள் செய்யாதிருக்கவும் சில்லரைகளிடம் கவனமாக இருந்தால் பெருந்தொகை தானாக வரும்.
சிக்கனம் என்றுமே மனிதனை காப்பாற்றும். அதிகமாக சம்பாதிக்கும் அநேகர் அல்லல்படும்போது, குறைவான வருமானத்தில் மகிழ்வாக வாழ்பவர் அநேகர்.
தந்தையிடம் கோடி கோடியாக பணம் இருந்தாலும் செலவில் சிக்கனம் என்ற குணம் யாவருக்கும் வேண்டும்.
சிக்கனம் மனிதனின் சிறந்த பாதுகாப்பு கவசம். குழந்தை மனதில் இது உருவாக்கப்பட வேண்டும்.
“ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகாறு அகலாக் கடை”- திருக்குறள்
குழந்தைகளிடம் பணத்தை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை அவர்களே வாங்கவும் கணக்குகளை பார்க்கவும் மீதி காசை கவனமாக திருப்பி வாங்கவும் நாம் பயிற்றுவிக்க வேண்டும்.
சமுதாய நோக்கு
இன்று நாம் குழந்தைகளுக்கு நல்ல வருமானம் வரக்கூடிய தொழிற்கல்விகளை கொடுக்கலாம். கூடவே சுயநலத்தோடு வாழவும் சொல்லித் தருகிறோம். நம்மிடம் ஒரு சமுதாய நோக்கு இல்லை.
நம் வீட்டை பளிங்கு போல வைத்திருப்போம். நம்மைச் சுற்றியுள்ள சாலைகள் படு மோசமாக இருக்கும். சாக்கடைகள் தேங்கி துர்நாற்றம் வீசும். அதைப்பற்றி நாம் கவலை கொள்ள மாட்டோம்.
நமக்கு பணம் வருகிறது என்னும் போது அந்த பணம் வரும் வழி நல்ல வழியாக இருக்கிறதா? நம் செயல் சமுதாயத்திற்கு பாதிப்பு வராமல் இருக்கிறதா? என்று சிந்தனையை உருவாக்க வேண்டும்.
இந்த குழந்தை தன்னை உயர்த்தினால் போதாது. தன்னைச் சுற்றியுள்ளவரும் உயர வழி காண வேண்டும். அப்போது அந்த குழந்தை நல்ல குடிமகனாக, நல்ல தலைவனாக நல்ல வழிகாட்டியாக உயரும்.
THANKS TO SOURCE:நம்ம குழந்தை நல்ல குழந்தை (A GUIDE FOR PARENTS) BY தே. சௌந்தரராஜன். IN NAMADHU NAMBIKKAI. மேலும் படிக்க...Read more...
தள்ளிப்போடாமல் இருப்பது எப்படி? தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.
>> Friday, April 2, 2010
இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா?
பொறுங்கள் - கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!!
என்ன - முதலுக்கே மோசமாக இருக்கிறதா?
யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள்.
1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை, சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா?
2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் குறித்து வையுங்கள்.
3. தள்ளிப் போடுவதை ஒரு வழக்கமாகத் தொடங்கி, வாழ்க்கை முறையாகவே ஆக்கிக் கொண்டவர்கள் எத்தனை பேர்களை உங்களுக்குத் தெரியும்? அவர்கள் என்ன ஆனார்கள்?
இதையெல்லாம் செய்தாலே தள்ளிப் போடுவதில் இருக்கும் எதிர்மறையான விளைவுகள் பற்றி நமக்குப் புரிந்துவிடும்.
ஒரு மளிகைக் கடைக்குப் போகும்போதே நம்மிடம் வாங்க வேண்டிய பொருட்களின் பட்டியல் இருக்கிறதே, ஒவ்வொரு விடியலின் போதும் அந்த நாளில் செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் வேண்டாமா என்ன?
தள்ளிப் போடும் பழக்கம் நம்மை விட்டுத் தள்ளிப் போக அடிப்படையில் இன்னொரு வேலையையும் செய்தாக வேண்டும்.
அதுதான் விடியல் பொழுதைப் பயன்படுத்துவது. விடிந்து சிறிது நேரம் சென்றபிறகு விழிப்பவர்களுக்கு நாள் நகர்கிற வேகத்திற்கு ஈடு கொடுத்து, அதைத் துரத்திப் பிடிப்பதே பெரியபாடாகி விடுகிறது.
விடியல் நம்மை நன்றாக வேலை வாங்கக் கூடிய நேரம். தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால், அந்த வேலைக்குத் தேவையான அடிப்படைப் பொருட்களை சேகரித்துக் கொண்டு, அதன் பின்னர் வேலையைத் தொடங்குவதே உத்தமம்.
இந்தக் கட்டுரையை எழுதுவதற்குக்கூட பேனா, பேப்பர், கிளிப், எழுதுவதற்கான அட்டை என்று ஒவ்வொன்றையும் தவணை முறையில் எடுத்துக் கொண்டு வந்தால், இதை எழுதி முடிக்கிற வேலை கண்டிப்பாகத் தள்ளித்தான் போகும்.
இதையெல்லாம்விட முக்கியம், ஏன் தள்ளிப் போடுகிறோம் என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது.
ஒரு நாள் முழுவதும் இயந்திரம்போல் யாரும் வேலை பார்த்துக் கொண்டே இருப்பதும் சாத்தியமில்லை.
உல்லாசத்திற்குக் கொஞ்ச நேரம், பொழுதுபோக்குக் கொஞ்ச நேரம், நண்பர்களுடன் பேச சிறிது நேரம் என்று எத்தனையோ விஷயங்களுக்கு சில நிமிஷங்களை அவ்வப்போது ஒதுக்க வேண்டிவருகிறது.
ஏகத்துக்கு வேலை இருப்பதாக நினைப்பவர்கள் இந்த சின்னச் சின்ன சந்தோஷங்களை முற்றாக நீக்கிவிட்டு, வேலையிலேயே முழு கவனம் செலுத்துவதாய்த் தொடங்குவார்கள்.
இடையில் அலுப்புத்தட்டத் தொடங்கிவிட்டால் போச்சு. இந்த வேலை - சொந்த வேலை - எந்த வேலையையும் செய்யாமல், வேலைக்கான ஆயத்தப் பணியை வேண்டுமென்றே நீட்டிக்க மனது தூண்டத் தொடங்கும். உற்சாகமும் தூங்கத் தொடங்கும்.
நம்முடைய நேரங்களை சமவிகிதத்தில் சரியாகப் பங்கிட்டு வேலைகளில் ஈடுபடப் பழகிவிட்டால் நேரம் வீணாவதை நிச்சயமாகத் தடுக்கலாம்.
என்ன செய்ய விரும்புகிறோம் - என்ன செய்து கொண்டிருக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியை அதிகமாக்குவதே தள்ளிப் போடுகிற மனோபாவம்தான்.
இன்னொன்றும் முக்கியம். ஒரு நாளில் எத்தனையோ வேலைகள் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் மிக முக்கியமான வேலை என்று மூன்றை மட்டும் பட்டியலிடுங்கள். அவற்றை முதலில் முடித்துவிடுங்கள். அதன்பின், மற்றவற்றைச் செய்ய உங்களுக்கு உற்சாகம் தானே பிறக்கும்.
நாள் முழுவதும் காரியங்களைத் தள்ளிப் போடாமல் சாதகமாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கு விடியற்காலை விசேஷமானது என்று பார்த்தோம்.
விடியற்காலையைப் பயன்படுத்திக் கொள்ள மிகவும் உகந்த வழி, இரவு விரைவிலேயே உறங்கப் போவதுதான்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரங்கள் முன்பே தொலைக்காட்சி - கணினி ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.
தள்ளிப் போடத் தூண்டும் சோம்பல், உங்களை விட்டுத் தள்ளிப் போகும். தள்ளிப் போடாதீர்கள். துள்ளியெழுங்கள்.
குருடர்கள் உலகில் கண்கள் இருந்தால் அதுதான் தொல்லையடா !---
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்
16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதற் எறிவோம்
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது
SOURCE: NAMADHUNAMBIKKAI. மேலும் படிக்க...Read more...

Subscribe to:
Posts (Atom)