என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

>> Saturday, July 30, 2011

இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் அசைக்க‌ முடியாத‌ அப்ப‌ட்ட‌மான‌ , ஆதார‌ பூர்வ‌மான‌ உண்மை வரலாறு.

"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு

இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்

உண்மை விளங்கும்.

CLICK TO READ.

அடியில் கண்ட படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீண்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.

க‌ல்லூரி க‌ழக‌ ஸ்தாபக‌ம். வ‌ர‌லாறு. 12.9.1968 லிருந்து
பக்க‌ம் 1

அன்றைய கால கட்டத்தில் நமது இளையாங்குடி இராமநாதபுரம் மாவட்டத்துக்குள் உட்பட்டிருந்த நிலையில், இளையாங்குடி பரமக்குடி அதன் சுற்று வட்டத்தில் கல்லூரி ஒன்று அமைப்பதற்கான வாய்ப்பு ஒன்றை 1970 ஜூலைக்குள்ளாக கல்லூரி செயல் பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் மாநில அரசாங்கம் அறிவித்ததை தொடர்ந்து,

நம் ஊரில் நலத்தை கருத்தில் கொண்ட தன்னலம் பாராத கண்ணியவான்கள் இளையாங்குடியில் கல்லூரி உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் 12. 9. 1968 இளையாங்குடி கல்லூரி கழகத்தை ஊதியம் பெறாத 14 கனவான்களை செயற்குழு உறுப்பினர்களாக கொண்டு உருவாக்கினார்கள்..

பக்க‌ம் 2

பக்க‌ம் 2 - பத்தி 3 ல்
கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் நிலம் வாங்க முடிவு செய்யப்படுகிறது.

( மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, இளையாங்குடி ‍பரமக்குடி மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்தனால் இன்று Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு முகப்பு இளையாங்குடி ‍ பரமக்குடி மெயின் ரோட்டில் சிறப்பான இடத்தில் அமையப்பெற்றுள்ளது. )

பக்க‌ம் 3
ஊழியர் நிய‌ம‌ன‌ம்.


பக்கம் 3 ‍ பத்தி 4 ல்
செயற்குழுவினர் தமது சொந்த வேலைகளால் கல்லூரி வேலைக்கு போதிய கவனம் செலுத்த முடியாத நிலையில் உள்ளதால் கல்லூரி வேலையை பிரத்தியேகமாய்க் கவனிக்கவும் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்தவும் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் ஊதியம் பெற்று செயலாற்றவும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வகையில் ஜனாப். அமீன் நயினார் ஹவுத் அவர்கள் கல்லூரி சம்பந்தப்பட்ட வகையில் முதல் ஊதியம் பெற்று செயலாற்றியவர் என்ற‌ பெருமை படைத்தவராகிறார்.

பக்க‌ம் 4

ஜனாப். அமீர் நயினார் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு கல்லூரி கழகத்திற்கு நில தானம் பெற்றுத் தருகிறார்கள்.

பக்க‌ம் 5


வ‌ர‌வு செலவு க‌ண‌க்கு
பக்க‌ம் 6

க‌ல்லூரி க‌ழக‌ அர‌ம்ப‌ கால‌ அங்க‌த்தின‌ர்க‌ள்
பக்க‌ம் 7

பக்க‌ம் 8

பக்க‌ம் 9

பக்க‌ம் 10

பக்க‌ம் 11

பக்க‌ம் 12

பக்க‌ம் 13

PAGE 14

க‌ல்லூரிக்கு நில‌ம் வாங்க‌ ப‌ண‌ம் கொடுத்த‌வ‌ர்க‌ள்.
PAGE 15

PAGE 16

கல்லூரி மனைக்கு நில தானம் செய்தவர்கள்.
PAGE 17

க‌ல்லூரிக்கு நில‌ம் விற்ற‌வ‌ர்க‌ள்
PAGE 18

க‌ல்லூரிக்கு என்டோமென்ட் நில தானம் செய்தவர்கள்.
PAGE 19.

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற‌ எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகி, 1968 ல் "இளையான்குடி கல்லூரி கழகம்" தொடங்கப்பட்டு,கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தும் ,

அத‌ற்காக‌ நில‌ தான‌ங்க‌ள் பெற்றிருந்தும்

நமது ஊருக்கு தெற்கில் பரமக்குடி ‍ ராஜசிங்கமங்களம் ரஸ்தாக்கள் இணையும் இடத்தில் கல்லூரி நிறுவுவதற்காக இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டிருந்தும்,

ஜூலை 1970 க்குள் க‌ல்லூரி தொட‌ங்க‌ப்ப‌ட்டு விட‌வேண்டும் என்ற அரசாங்க நிப‌ந்த‌னையை"இளையான்குடி கல்லூரி கழகம்", நம் ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல்,நிறைவேற்ற‌ முடியாத‌ நிலையில்

இதற்கும் மேலாக, நம் ஊரின் அப்பொழுது உள்ள இக்கட்டான நிலையை அறிந்து, நிதி வேண்டி 1.4.1970 ல் ஒருவர் நமக்காக ஓங்கி குரலெழுப்புகிறார்.. குரலெழுப்புவது யார்?

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கு கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை பற்றி தெரியாமலிருக்கலாம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் பிறந்த நாளை வருடாவருடம் தமிழக முதல்வர்கள் முன்னாள் முதல்வர்கள் சகல கட்சி தலைவர்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு தலைவர்களும் பல்வேறு சமுதாய மக்களும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அன்னாரின் அடக்கத்தலத்தில் மரியாதை செலுத்தி வருவது நாம் யாவரும் அறிந்ததே..

இந்திய‌ அரசாங்க‌மும் இம்மாமனித‌ரை கண்ணிய‌ப்ப‌டுத்தி தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்தி இருக்கிறது...


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் மர்ஹும். முஹம்மது இஸ்மாயில் சாஹிப்
அவர்களின் 39 வருடங்களுக்கு முன் அடித்த நோட்டீஸ் .
சிறிது கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டும்

முகப்பு


முதல் பக்கம்

இரண்டாம் பக்கம்



மூன்றாம் பக்கம்



நான்காம் பக்கம்

பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் ,

விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலையில்,

கைக்கெட்டிய‌து வாய்க்கெட்டாத‌ சூழ்நிலையில் த‌வித்து நிற்கும் பொழுது ,

உட‌னிருந்து நிலைமையை ந‌ன்குண‌ர்ந்த‌ மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்

தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்து

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் Dr.சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே Dr. சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, "இளையான்குடி கல்லூரி கழகம் இனாமாக எழுதிக் கொடுத்து

ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் அவர்களை அழைத்து மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டி,

அச்சமயம் நன்றி பெருக்கால்

சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டு.

அந்த இடத்தில் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக‌ யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும், உழைப்பிலும் குறிப்பிட்ட கால வரைக்குள் கல்லூரி தொட‌ங்க‌ க‌ட்டிட‌ம் க‌ட்டி கொடுத்து,

மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌(FOUNDER CORRESPONDENT) பொறுப்பேற்று,

Telegram from collector.

இளையாங்குடி க‌ல்லூரி க‌ழ‌க‌த்திற்கு வ‌ழ‌ங்க‌ப்பெற்ற‌ கால கெடுவுக்குள்

1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் அக்கட்டிடத்தை திறப்பு செய்து அதிலிருந்தே அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு இளையாங்குடி Dr. சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,

அல்ஹாஜ் V.M. பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் இளையாங்குடி Dr.சாகிர் உசேன் உசேன் கல்லூரி 5.7.1970ல் ஸ்தாபிக்கப்பட்டது.

Invitation

Kalvettu.


இளையாங்குடி ஜாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ (FOUNDER CORRESPONDENT) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே கல்லூரியின் முத‌ல்வ‌ர், பேராசிய‌ர்க‌ள் ம‌ற்றும் ஊழிய‌ர்க‌ளை தேர்வு செய்து பணியிலமர்த்தி,

Janab Ameerali appointment.

Salary receipt.



அன்றைய காலத்தில் முதல்வர் கேப்டன் அமீர் அலி அவர்கள் தன்னுடைய அலுவலகத்தில் ஹாஜி வி.எம்.பீர் முஹம்மது அவர்கள், அவர்கள் குடும்பத்தினர் அடங்கிய ஒரு பெரிய புகைபடத்தை மாட்டி அதன் கீழே தான் தன் இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார்கள்.

மேலும் அக்காலத்தே வேறு மற்ற யாருடைய புகைபடத்தையும் கல்லுரியின் எப்பகுதியிலும் கண்டதில்லை.

ஜூலை 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் Dr.சாகிர் உசேன் கல்லூரியை ஸ்தாபித்து தொடங்கி செயல் பட செய்தார்கள்..

அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்கள் தான் "கல்லூரி தந்தை"
என்று சுட்டிக்காட்டிய ஒரு சில இணையதள வெளியீடுகளும், பின்னூட்டங்களும் பின் வருமாறு:

படங்களின் மீது ஒரு முறை சொடுக்கி பெரிதாகா விட்டால் மீன்டும் ஒரு முறை சொடிக்கி படித்து பார்க்கவும்.



NIDUR INFO தமிழ் முஸ்லீம் அறிவியல் கலை கல்லூரிகள்.



அல்ஹாஜ் V.M. பீர்முஹமது அவர்களின் இல்லம்.

SIVAGANGAI ON LINE


IN MALAYA BURMA STAR



ITI VELLI VILA MALAR - IN ILY.ORG.




DR. MOHAMED ALI


www.ilayangudikural /A.E.Naina Mohamed Ambalam






க்ளிக் செய்து படிக்கவும்,


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

>> Wednesday, July 13, 2011

உழைப்பால் உயர்ந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர்

துபாஷ் காதிரின் முன்னோர்கள்
துபாஷ் அப்துல் காதிரின் முன்னோர் இளையான்குடியிலிருந்து நத்தம் அபிராமத்துக்குக் குடிபெயர்ந்து வந்தனர். இவர்களை இளையான்குடியில்” புகையிலைக் கட்டை வகையறா” என்று கூறப்படுகிறது.

உழைப்பால் உயர்ந்த உத்தமர்

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் உழைப்பால் உயர்ந்து உன்னத ஸ்தானத்தை அடைந்த பல்வேறு வரலாற்றை நாம் படித்திருக்கிறோம்.

அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கையில் தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்த இராமநாதபுர மாவட்டம் அபிராமம் நத்தத்தில் பிறந்த கான் பஹதூர் துபாஷ் அப்துல் காதிர் என்பவரது வாழ்க்கை வரலாற்றை சில ஆவணங்களுடன் எழுதி இருக்கிறேன்.

இளமைப்பருவம்
கி.பி.1847 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் நத்தத்தில் இவர் பிற்ந்தார்.

இவரது தந்தை பெயர் கலுங்கு இராவுத்தர். இவருக்கு முத்து முஹம்மது என்ற தம்பியும் மீராக்காள் என்ற தங்கையும் இருந்தனர். காலங்கள் உருண்டோடியது. தம் பதினெட்டு வயதை எட்டிய பொழுது வறுமையின் கோரப்பிடியில் சிக்கினார். குடும்பம் நொடித்தது.

இளமையில் பட்ட கஷ்டங்கள்இவர் சிறுவராயிருக்கும் போது அடிக்கடி தம் அன்னையிடம் முட்டை பொறித்துக் கேட்பாராம். வறிய நிலையில் இருந்த அன்னை தனயனின் ஆசையை நிறைவு செய்ய இயலாததால் கண் கலங்கி ஒரு நாள் வேப்பெண்ணெய்யில் முட்டையைப் பொறித்து வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டாராம். அன்னை சொல்லாமல் சொன்ன உண்மையைப் புரிந்துகொண்ட இவர் அன்றிலிருந்து இறுதிவரை முட்டை உண்பதே இல்லை என்று கூறுவர்.

வறுமையின் பிடியிலிருந்து தன்னையும் தன் குடும்பத்தையும் விடுவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவர் உள்ளத்தில் உதித்தது. அதுவே வரலாற்றில் முத்திரை பதித்தது. மீண்டும் உங்களைப் பார்க்கும்போது ஒரு கோடீஸ்வரனாகவே வந்து பார்ப்பேன் என தன் அன்னையிடம் சூளுரைத்தார்.

காரிருளைக் கிழித்துக் கொண்டு கதிரவன் உதிப்பது போல வறுமைப் பேயைத் துரத்துவதற்காக புதிய இடத்தை நோக்கி புறப்படலானார்.

பர்மா பயணம்


தென் கிழக்காசிய நாடான ஐராவதி நதிக்கரையில் அமைந்த கலைகள் மிகுந்த இயற்கை எழில் கொஞ்சும் பர்மாவுக்குப் பயணமானார். கம்பீரத் தோற்றம் அதுதான் இவரது வாழ்க்கையின் ஏற்றம். அதனால் அவருக்கு ஏற்பட்டது ஒரு மாற்றம்.

நார் பூவாக மாறியது வானத்தில் பிரகாசிக்கும் சந்திரனைப் போல இவரது வாழ்க்கையில் எதிர்பாராத ஒளி பிறந்தது. ஆம் பூவோடு சேரும் நாரும் மணம் பெறுவது போல இவருக்கு திருச்சியைச் சேர்ந்த எஹியா மெளலானா என்ற பெரியாரின் தொடர்பு கிட்டியது.

அந்தப் பெரியார் இவரை ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே காத்திருக்கச் சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டார். வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இருந்தும் இவர் காத்திருந்தார்.

அந்தக் காத்திருத்தல் ஒரு சரித்திரத்தை மாற்றி எழுதப் போகிறது என்பது வறுமைக் காதரின் வாட்டமுள்ள நெஞ்சுக்குத் தெரியாது. இறுதியில் சுபுஹுத் தொழுகை முடித்து வந்த அந்தப் பெரியவர் உபதேசித்தார்.

‘உனக்கொரு எதிர்காலம் உண்டு அதனால் கொலை மற்றும் கொள்ளைக் கும்பலை விட்டு அகன்று விடு' என்றுரைத்தார். மனம் மாறினார், மணம் வீசினார். திருந்திய அவர் அங்கு ஒரு பர்மியப் பெண்ணை மணந்து கொண்டார்.

ஏறுமுகம் தந்தது துறைமுகம்அன்று முதல் அவர் வாழ்க்கை உச்சக் கட்டத்தை அடையத் துவங்கியது. மனைவியின் மூலமாகக் கிடைத்த மூலதனத்தையும் தம் மூளை எனும் மூலதனத்தையும் பயன்படுத்தி படிப்படியாக முன்னேறினார். பெரிய கப்பல்கள் மற்றும் மற்றும் லாஞ்ச் போன்ற சிறிய படகுகள் மூலமும் வியாபாரம் செய்தார். கப்பல்களில் வரும் ஐரோப்பியர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களது மொழியை திறம்படக் கற்றுக் கொண்டார்.

ரங்கூன் “Soliya muslim association” இவருக்கு“Honourable Magistrate”என்ற பட்டம் கொடுத்தது.
இவரைப் பாராட்டி “KHAN BAHATHOOR”என்ற பட்டம் வழங்கப்பட்டது
(ஆதாரம்: ”THE RANGOON TIMES” - 1919 - june -03)

இவரது திறமையை மெச்சிய ஆங்கிலேய அரசு தம் அரசவையில் இவரை ஒரு அங்கத்தினராக (Fellow of Royal Society) ஏற்றுக் கொண்டது.

காசிம் பிரதர்ஸ் & கம்பேனி.ஆங்கிலேயர் நட்பைப் பெற்று வணிகம் தொடங்கிய இவர் தனியாகத் தானும் தன்னுடைய சகோதரர் முத்து முகம்மதுவும் சேர்ந்து காசிம் பிரதர்ஸ் & கம்பேனி என்ற நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

இதுவே அவர் பிற்காலத்தில் வணிகம் செய்து பெரும் செல்வந்தர் ஆகவும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. யின் நட்பைப் பெறவும், பாரதியாருடன் அறிமுகம் ஆகவும் காரணமாக அமைந்தது.

இரங்கூன் காசிம் பிரதர்ஸ் & கம்பேனியில், இவர் தம் மூத்த மருமகன் N.M. சேக் அப்துல் காதிரையும், இளைய மருமகன் விஜயன் அப்துல் ரஹ்மான் அம்பலத்தையும் பங்குதாரர்களாகச் சேர்த்துக் கொண்டார்.

இரங்கூன் நகரில் கப்பல் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும் முகவராகவும் இருந்து வந்தார். அத்துறைமுகத்தில் நிற்கக்கூடிய கப்பல்களுக்கு உணவு மற்றும் நிலக்கரி போன்றவற்றை விநியோகம் செய்வது இவரது முக்கியப் பணியாக இருந்தது.

பிரிட்டிஷ் இந்தியா நேவிகேஷன் கம்பெனியின் ஏஜென்டான “புல்லக் பிரதர்ஸ்” இவரின் வணிக ஆற்றலை உணர்ந்து இவரைத் தம்முடைய பங்குதாரர்களில் ஒருவராகச் சேர்த்துக் கொண்டனர்.

அபரித வாணிப வளர்ச்சிகி.பி. 1881ல் இவரது வாணிபம் பெரிதும் வளர்ந்தோங்கியது. இவர் இரண்டு சிறிய கப்பல்களுக்கும் 62 ராட்சஸப் படகுகளுக்கும் அதிபரானார்.

திருச்சி எஹியா மெளலானாவின் நட்பு ஒழுக்கத்தையும் நேர்மையையும் கற்றுத்தர அவற்றுடன் அவரது திறமையும்சேர்ந்து வியாபாரத்தில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்தோங்கினார்.

மனைவியர் நால்வர்இவர் பர்மியப் பெண்ணையும் சேர்த்து நான்கு பெண்களை மணம் முடித்துக் கொண்டார். அவர்களின் சொந்த ஊர்கள் முறையே 1, ரங்கூன், 2, நத்தம் 3, காரியாபட்டி 4, ஆந்திரா முதலியன ஆகும்.

இவருக்கு இந் நான்கு மனைவியர் மூலம் 9 ஆண் மக்களும் 9 பெண் மக்களும் பிறந்தனர். ஆலிம்களைப் பெரிதும் மதித்த இவர் தம் பெண் மக்களில் ஒருவரை ஆலிம் ஒருவருக்கு மணம் முடித்து வைத்தார்.

தம்முடைய பூர்வீகத்தலமான இளையான்குடி தொடர்பைப் புதுப்பிக்க விரும்பிய அவர்,

அவருக்கு மச்சான் முறையான நூருத்தீன் மதாறுப்புலவரின் மக்களான ஷேக் அப்துல் காதிருக்கு தம் மகள் ஆமினா பீவியையும், இராவுத்தர் நெய்னாருக்கு தம்முடைய இளவல் துபாஷ் முத்து முகம்மதுவின் மகள் பல்கீஸ் பீவியையும் மணம் முடித்துக் கொடுத்தார்.

நூருத்தீன் மதாறுப் புலவர் குடும்பத்துக்கும் தம் குடும்பத்துக்கும் ஏற்படுத்திய திருமண உறவுகளால் இளையான்குடிக்கும் நத்தம், அபிராமத்துக்கும் இடையே உறவுப் பாலம் ஏற்படுத்திக் கொடுத்தார் துபாஷ் அப்துல் காதிறு. இன்றளவும் ஆலமரம் போல் மண உறவுகளால் இரண்டு குடும்பங்களும் படர்ந்து வளர்ந்து வருகின்றன.

துபாஷ் காதிரின் புகழை அறிந்த மகா கவி பாரதியார் தம் நண்பர் வ.உ.சி. நிறுவனத்தில் துபாஷ் அப்துல் காதிர் பங்கு வாங்க வேண்டுமென வேண்டினார். அதற்கு அவர் “ எனக்குப் பங்கு வாங்க விருப்பமில்லை வேண்டுமென்றால் ஒரு தொகையைக் குறிப்பிடுங்கள், நான் அதைத் தந்து விடுகிறேன் என்றார் பெருந்தன்மையுடன்.


துபாஷ் காதிர் அவர்கள் பர்மாவில் ஈட்டிய செல்வங்களில் ஒரு பகுதியைக் கொண்டு தம் சொந்த ஊரில் ஒரு அழகிய பள்ளி வாசலைக் கட்டினார்.

பர்மாவில் உள்ள பள்ளி வாசல்களின் கட்டிடக் கலை அம்சங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டதாக இப்பள்ளி இன்றும் பொலிவோடு திகழ்ந்து வருகிறது. அழகான தோற்றமும், விண்ணை முட்டும் அளவிற்கு மினராக்களையும் இப்பள்ளி வாசல் பெற்று விளங்குகிறது.

சிற்றூரில் இப்படி ஒரு பள்ளி வாசலா! என்று காண்போர் நெஞ்சங்களை வியப்பூட்டி வருகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இப்பள்ளி கட்டப் பட்டாலும் இன்றுள்ள கட்டிடக் கலை அம்சங்களுக்குச் சவால் விடும் அளவிற்கு திகழ்ந்து வருகிறது.

துபாஷ் காதர் இப்பள்ளி வாசலைப் பராமரிப்பதற்காக1, keelaparuthiyur 2, serumangulam ஆகிய கிராமங்களை பள்ளிக்காக வக்பு செய்தார்.

இவர் பர்மாவிலிருந்து இந்தியா திரும்பும் போது அவரது சொந்த ஊருக்குச் செல்வதற்கு ஏதுவாக பார்த்திபனூர் அருகிலுள்ள சூடியூரில் பிரத்யோகமாக இரயில்வே ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. அவர் ஊருக்கு வருகிறார் என்றால் ஊரே விழாக்கோலம் கொண்டு விடும். வழி நெடுகிலும் அவரை மகிழ்வுடன் வரவேற்பர்.

அப்போதைய வெள்ளைக்கார ஆளுநர் ஒருவர் மதுரையில் ஒரு நூலகத்தை நிறுவுவதற்கு இராமநாதபுரம் ராஜா , சிவகங்கை மன்னர் போன்றோரிடம் நன்கொடை கேட்டார்.

அவரவர் தகுதிக்கேற்ப நன்கொடை அளித்தனர். ஆனால் துபாஷ் காதிரோ வெற்றுக் காசோலையை ( Blank cheque ) க் கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இதைக் கண்ணுற்ற அந்த வெள்ளை ஆளுநர் அனைவர் அளித்த நன்கொடைக்கு மேல் ரூ. 100 எழுதி அந்தச் செக்கை ஏற்றுக் கொண்டதோடு துபாஷ் காதிரின் பெருந்தன்மையையும் பாராட்டினார்.

THANKS TO: ABIRAMAM NATHAM.COM

INFO BY: Mohamed Zulfihar, Ministry Of Health,
Sultanate of Oman. GSM: 968-92272959

-----
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

வேலைகளை தள்ளிப்போடுவது வசதியாய் இருக்கிறதா?

>> Friday, June 18, 2010

தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள்.

வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும்.

சாப்பிட்ட பின் இலையை மூடுவதிலேயே ஏகப்பட்ட சடங்குகள் நம்மிடம் உண்டு. மேல் பகுதியைக் கீழ்நோக்கி மூடினால், “சாப்பாடு பிடித்தது, மீண்டும் வருவேன்” என்று பொருள். கீழிருந்து மேல் நோக்கி மூடினால் வேறு பொருள். நல்ல காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒருவிதமாகவும், கெட்ட காரியங்கள் நடக்கும் வீடுகளில் ஒரு விதமாகவும் இலையை மூடுகிறார்கள்.

இலையில் மிச்சம் வைக்காமல் சுத்தமாக சாப்பிடுபவர்களுக்கு இலையை மூட மனதே வராது. தாங்கள் சாப்பிட்ட அழகை, இலை புதிதாகப் போடப்பட்டது போல் இருப்பதை எல்லோரும் பார்க்க வேண்டும் என்று விரும்புவார்கள். இலையில் மிச்சம் வைப்பவர்களோ அடுத்தவர்கள் பார்க்கக் கூடாதென்று அவசரம் அவசரமாய் மூடுவார்கள்.

உணவை வீண் செய்யக்கூடாதென்று உருவான பஃபே முறையில்கூட தட்டில் எல்லாவற்றையும் அள்ளிவைத்துக்கொண்டு, அப்புறம் அசடு வழிந்துகொண்டு எங்காவது வைத்து விட்டு நழுவி விடுபவர்கள் உண்டு.

இதற்கும் இந்தக் கட்டுரைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?

எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு, செய்ய முடியாமல் தடுமாறி, சொன்ன சொல் தவறி, தங்கள் இஷ்டத்துக்கு வேலைகளைத் தள்ளிப் போடுபவர்கள் பஃபேயில் விழிபிதுங்கும் ஆசாமிகளைப் போன்றவர்கள்தான்.

இந்த உலகத்தில் நீங்கள் என்ன வேலை செய்தாலும், அது அடுத்தவர்கள் சம்பந்தப்பட்டது தான். உங்கள் வேலைகளை நீங்கள் எவ்வளவு குழப்பிக் கொண்டாலும், அதனால் இன்னொருவரோ, இன்னொரு நிறுவனமோ பாதிக்கப்படுவது தவிர்க்க முடியாது.

நீங்கள் செய்வதாக ஒத்துக்கொண்டது வருமானம் தருவதாக இருந்தாலும் சரி அல்லது உதவியாக இருந்தாலும் சரி, சொன்னதை சொன்ன நேரத்தில் செய்து முடிக்கும் அளவு உங்கள் வேலைகளைத் திட்டமிட்டுக்கொள்வது அவசியம்.

கூடுதல் முக்கியம் கொண்ட வேலைகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட வேலைகள் என்று தரம் பிரித்துக் கொள்ளலாமே தவிர, செய்ய வேண்டிய வேலையையோ உதவியையோ தள்ளிப்போடுவதும் தவிர்ப்பதும், உங்கள் நம்பகத் தன்மையை கேள்விக்குரியதாக்கும்.

உங்களால் செய்ய முடியாத அல்லது நீங்கள் செய்ய விரும்பாத ஒரு வேலையை ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் எதை சிறப்பாகச் செய்வீர்களோ அதில்கூட மற்றவர்கள் உங்களை நம்ப மறுப்பார்கள்.

வாழ்வில் வெற்றி பெறுவதற்கான அடிப்படைத் தகுதிகளில் திறமையைவிட ஒரு படி கூடுதல் முக்கியத்துவம் கொண்டது, நம்பகத்தன்மை.

நீங்கள் சொன்ன நேரத்தில், ஒப்புக்கொண்ட தரத்தில் ஏற்றுக்கொண்ட வேலையை செய்து முடிப்பது மட்டுமே உங்கள் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும்.

திட்டமிடாமை, அலட்சியம். பொறுப்பின்மை ஆகியவற்றின் வெளிப்பாடாகவே தள்ளிப்போகிற வேலைகளை இந்த உலகம் பார்க்கிறது.

எனவே தேவையில்லாமல் தள்ளிப்போடாதீர்கள்.

வேலைகளைத் தள்ளிப்போட தள்ளிப்போட வெற்றிகளும் தள்ளிப்போகும். -கிருபாகரன்
===============
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்.. உள்ளத்தை உருக்கும் விடியோ.

>> Tuesday, June 15, 2010

உள்ளத்தை உருக்கும் விடியோ.
நண்பர் தினேஷ் தயாரிப்பில் உருவான அற்புதமான படைப்பு. குழந்தைகள் உலகில் சாதியத்தின் தாக்கத்தை கருப்பொருளாக கொண்டுள்ளது.

VELLAIKKARI VIDEO
விடியோவின் “PLAY” பட்டணை அழுத்தினால்
சில வேலைகளில் விடியோ தோன்றாவிட்டாலோ,
“error occurred, try later “ என்ற அறிவிப்பு கருப்பு திரையில் தோன்றினாலோ கருப்பு திரையின் மேல் மௌஸை கொண்டு இருமுறை க்ளிக்
செய்தால் விடியோ தோன்றும்.

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்?

>> Monday, June 14, 2010

பத்திரிகைகள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள். முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரிந்து கொண்டிருக்கிறது! அல்லது சரிந்தே விட்டது என்று சொல்லும் அளவுக்கு, செய்தி ஊடகங்களின் செயல்பாடுகள் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் இந்த நான்காவது தூண்களான பத்திரிகைகள் முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

கவர் வாங்கிக் கொண்டு சினிமாக்காரர்களின் உளறல்களையெல்லாம் நான்கு பத்திச் செய்திகளாக வெளியிடும் இந்த நான்காவது தூண்கள், சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களுக்கும் சங்பரிவாரங்களுக்கும் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றன.

முன்னாள் மாராட்டியக் காவல் துறை அதிகாரியான முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.‘Who Killed Karkare?’ என்ற ஒரு நூலை வெளியிட்டு, முழு உண்மையையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். மிகப் பரபரப்புடன் வெளிவந்துள்ள இந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது.

முத்திரைத் தாள் மோசடியைக் கண்டுபிடித்து, பல அதிகாரிகளைத் தண்டித்தவர்தான் இந்த அய்.பி.எஸ். அதிகாரியான முஷ்ரிஃப்.

அண்மையில் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்கள் அவரைப் பேட்டி கண்டன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலரும் அவரைப் பேட்டி கண்டார்கள். ஆனால், இன்று வரை எந்தத் தொலைக்காட்சியிலும் சரி, பத்திரிகையிலும் சரி... அவரின் பேட்டி வரவேயில்லை!

இந்தப் பேட்டியில் தொலைக்காட்சிச் சேனல்களும், பத்திரிகையாளர்களும் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதைப்பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். அத்தனைக்கும் ஆதாரத்துடன் முஷ்ரிஃப் பதில் சொல்லியிருப்பார். பேட்டி வெளியே வந்திருந்தால், தொடர்புடையவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்.

ஆக, ஒட்டு மொத்த ஊடகங்களும் ஒரே அணியில் நின்று அவரின் பேட்டியை இருட்டடிப்புச் செய்து விட்டன.

மேலும், கார்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலைப்பற்றிக்கூட மவுனம் சாதித்து வருகின்றன.

இந்த ஊடகங்கள் ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பது உறுதியாகிறதுஉண்மையாகிறது.

மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அபிநவ்பாரத் என்ற இந்து வெறி அமைப்பினர் என்று தெரிந்தும், இந்துத்துவப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களான பிரக்யாசிங் தாகூர், கர்னல் புரோகித், தயானந்த் பாண்டே போன்றவர்கள்தாம் இதன் காரண கர்த்தாக்கள் என்று தெரிந்தும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தும்கூட.... இவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கின் தற்போதைய நிலை
என்ன என்பது பற்றியெல்லாம் எந்தப் பத்திரிகையாவது அக்கறைப்படுகின்றதா? செய்திகளை வெளியிடுகின்றதா?

இப்படித்தான் இந்துத்துவாக்களின் கோர முகங்கள் பற்றிய செய்திகளை இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய இந்த நான்காவது தூண்களான ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. அல்லது கண்டு கொள்ளாமலிருக்கின்றன.

இஸ்லாமியப் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள் என நாளும் நான்கு பத்திச் செய்திகளை வெளியிட்டு, நாட்டையும், மக்களையும் பீதிக்குள்ளாக்கித் தொடர்ந்து முஸ்லிம்களை அவமானப்படுத்தி அவதிக்குள்ளாக்கும் இந்த ஊடகங்கள் ஏன் இந்துப் பயங்கரவாதத்தைப் பற்றி, இந்துத் தீவிரவாதிகளைப்பற்றிச் செய்தி வெளியிடுவதில்லை? அலசி ஆராய்வதில்லை?

ஆக ஊடகங்களின் செயல்பாடுகள் நடுநிலைமையுடன் இல்லை என்பதும், இந்த நான்காவது தூண்கள் ஒரு பக்கச் சார்பாகவே செயல்படுகின்றன, செய்திகளைத் தயாரிக்கின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அலசி ஆராய்ந்து, காங்கிரஸ் கட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் இடையில் நடந்த திரை மறைவுப் பேரங்களை அம்பலப்படுத்தியுள்ளார் பிரபலப் பத்திரிகையாளர் சாய்நாத்.

ஆற்றல் மிக்க இளம் தலைவர் அசோக் சவான் என்ற செய்தி லோக்மத் என்ற மராத்தி நாளிதழில் பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக வந்தது. இதே செய்தி அப்படியே மகாராஷ்டிரா டைம்ஸ்லும் வந்தது. மறுபடி தலைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றி மராத்தி நாளிதழான புதாரியிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.

ஆக விளம்பரமே செய்தி என்ற பெயரில் இப்படி ஒரே மாதிரி வருவதைக் கவரேஜ் இதழியல் என்கின்றனர். மராட்டியத் தேர்தல் செய்திகளை இந்து நாளேடு ஆய்வு செய்துள்ளது. அதில் லோக்மத் செய்தித்தாளின் வெவ்வேறு பதிப்புகளில் அசோக் சவானைப் பற்றி 47 செய்திகள் வெளிவந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அசோக் சவான் தனது தேர்தல் விளம்பரச் செலவாக வெறும் 11,379 ரூபாய் மட்டும் தான் செலவிடப்பட்டதாகத் தேர்தல் கமிஷனில் கணக்குக் காட்டியிருக்கிறார்.

லோக்மத் பத்திரிகையின் 13 பதிப்புகளிலும் நான்கு பக்கங்களிலும் வண்ணத்தில் இலவச இணைப்பு வர வேண்டுமானால் சுமார் 1.5 கோடி ரூபாய் ஆகும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

இப்படிப் பணப் பரிவர்த்தனையில் உருவாக்கப்படும் செய்திகள் நம்பகமானதாக இருக்குமா?

இந்தியா முழுவதும் திட்டமிட்டுச் செய்திகளை இவ்வாறாகத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்குகின்றன.

இவர்கள் உருவாக்குவதுதான் செய்தியாக மக்களிடம் பரபரப்பாகத் திணிக்கப்படுகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் நடந்துள்ள செய்தி விளம்பர மோசடி இந்து நாளிதழ் நடத்திய ஆய்வின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன்படி, சி.பி.எம். தாக்கல் செய்த மனுவின் மூலமும் வெளிப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினர் இது போன்ற கவர் பண்ணும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் பணத்தால் ஏலம் விடப்படுகிறது.

இது பத்திரிகையாளர்களின் நேர்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் உள்ளது என்று பிரபலப் பத்திரிகையாளர்கள் பலர் குமுறுகின்றனர்.

இப்படிப் பணத்துக்காகச் செய்திகளை உருவாக்கும் அளவுக்கு ஊடகத்துறை சீரழிந்து போனதற்கு முதலாளித்துவமும், ஆதிக்க ஜாதியினரும்தான் காரணம்.

இந்திய ஊடகத்துறையில் தங்களை இன்றியமையாத சக்திகளாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

மிகப் பலம் வாய்ந்த வலிமைமிக்க இந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும், ஆளுபவர்களையும், அதிகாரிகளையும் கட்சி வேறுபாடின்றிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வரலாற்றைத் திரித்து எழுதியதிலிருந்து தொடங்குகிறது இந்த ஆதிக்க ஜாதியினரின் பிழைப்புவாதிகளின் ஊடகத் தொடர்பு!

எந்தப் படையெடுப்பின் போதும், யார் படையெடுத்து வந்தாலும் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தாலும் அப்பாவி மக்களைக் கொல்வதும், பெண்களைக் கடத்துவதும், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும், சூறையாடுவதும் நடைபெற்றுத்தான் வந்துள்ளன.

ஆனால், இத்தகைய வரலாறுகள் குற்றங்கள் தவறுகள் அனைத்தும் ஒரு மதப் பிரிவின் குறிப்பாக இஸ்லாத்தின் முஸ்லிம்களின் இயல்பான குணம், ஏகபோகம் என்பதைப் போன்ற கருத்தைத் தோற்றுவித்திருக்கின்றன இவர்கள் எழுதிய வரலாறு.

வரலாற்றைச் சொல்லும் முறையில் உள்நோக்கத்தோடு ஒரு மதப் பாகுபாடு அவர்களுக்குள் ஊடுருவியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதன் நீட்சி.... இன்று வரை தொடர்கிறது.

இன்று நீதி, நேர்மை, உண்மை, நடுநிலைமை இவற்றிலிருந்தெல்லாம் விலகி, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்கிற ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கப் பிழைப்பு வாதத்தை ஊடகத்துறையிலும் புகுத்தியிருக்கிறார்கள் அதே உள்நோக்கத்தோடு. இந்தச் சீரழிவிலிருந்து இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சரிப்படுத்தி நிலைநிறுத்த வேண்டியது மாற்று ஊடகக்காரர்களின் கைகளிலிருக்கிறது. ஆக, இவர்கள் இதைக் கட்டமைக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். கடமையுமாகும்.--சமரசம் 115 ஜூன் 2010
SOURCE:-http://viduthalai.periyar.org.in/20100612/spage04.html
*****************************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

கொடுமை!அவசியம் படியுங்கள்.விநோத தீர்ப்பு.

>> Wednesday, June 9, 2010


கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைய. மக்கள் ஆவேசம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.
25 ஆயிரம் பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்
bhopal gas tragedy.



போபால் பலியும், தீர்ப்பும்
மத்திய பிரதேசம் போபால் நச்சு வாயு -_ அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், ஊனமுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றிய நினைவு அனேகமாக மக்கள் மத்தியில் மறந்தே போயிருக்கும்.

ஆளும் வர்க்கம், முதலாளித்துவக் கூட்டம் காலம் கடத்துவதன் நுட்பமான இரகசியம் இதுதான்.

1984 டிசம்பர் 2 நள்ளிரவு இந்த விபத்து நடந்தது. தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்-டவர்களின் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 3787 பேர். உண்மையில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்.


26 ஆண்டுகளுக்குப்பின் இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர்களுக்கு தலா இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இன்னொருவர் மரணம் அடைந்துவிட்டார்.

இதில் வேதனையும், விபரீதமும் என்னவென்றால் துயரம் நடந்த மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லும்போது அழகாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகவே இருப்பதை அறிய முடிகிறது.

இந்தியக் குற்றப் பிரிவு சட்டம் 304 (ஏ) 336, 337 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 304 ஆவது பிரிவின்படி 10 ஆண்டுகள்வரை தண்டனை விதிக்க இடம் உண்டாம். ஆனால் இதுவரை இந்தப் பிரிவின் கீழ் ஈராண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டது கிடையாது என்று சொல்லுவது முடக்குச் சமாதானமே! இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று பாதிக்கப்பட்ட மக்கள் குரல் கொடுப்பதில் மிகுந்த நியாயம் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ஒழுங்காக நட்ட ஈடு அளிக்கப்பட வில்லை.

1989 பிப்ரவரி திங்கள் அந்த நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பலியான 3,787 குடும்பத்தினருக்கு 470 மில்லியன் டாலர் அளிப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனால் அதனை முறையாகப் பெற்றுக் கொடுக்கவேண்டிய மாநில, மத்திய அரசாங்கங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கின என்பது வெட்கப்படத்தக்கதே!

மாநிலத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்று மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் கொடிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வாங்கிக் கொடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை.

ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களுமே யாவர்.

இந்துத்தனம் பரவியிருக்கும் இந்தியாவில் எந்த பிரச்சினையைப் பிளந்து பார்த்தாலும், இந்த வருண பேதம் என்பது ஆழமாக இருக்கவே செய்யும்.


பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய பிரதேசத்திலிருந்து டில்லி வரை நடந்து வந்து பிரதமரை சந்தித்தபோதிலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எத்தகைய கொடுமை!

மேலும் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று இதில் இருக்கிறது. இந்திய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நச்சு வாயு விபத்தின் காரணமாக அதனுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்திய அரசின் நிறுவனமான யூனியன் கார்பைடு இந்திய நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. இதன் காரணமாக ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வீதிக்கு வந்த அவலம் ஏற்பட்டது.

இதுபோல் எத்தனை எத்தனையோ தீராப் பின்விளைவு காயங்கள் உண்டு.
ஓர் அமெரிக்க நிறுவனத்தை உள்ளே விட்டே இவ்வளவு பெரிய துயரம் என்றால், இன்னும் எத்தனை எத்தனையோ அபாயத்தை விளைவிக்க வாய்ப்புள்ள தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படை எடுக்கவும் ஆரம்பித்துவிட்டன. இவை எதில் போய் முடியுமோ என்ற திகிலும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.

இத்தகு நிறுவனங்களால் ஏற்படும் நச்சுக்கழிவுகள் பெரும் பிரச்சினையாகும்.
அமெரிக்க முதலாளிகளுக்கு மனித உயிர்கள் என்பவை அவர்களின் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் ஏற்படும் வீணான பொருள்களாக (Waste materials) இருக்கக்கூடும்.
ஆனால் இந்நாட்டு மக்கள் இந்திய அரசின்கீழ் பாதுகாப்பாக இருக்கவேண்டாமா-?
இந்த அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர முடியாவிட்டால் அரசு என்ற பெயர் எதற்கு?

SOURCE:http://viduthalai.periyar.org.in/20100608/news07.html
**************

25 ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்த போபால் நச்சு வாயு வழக்கு
8 பேர்களுக்கு 2 ஆண்டுகால தண்டனைமரண தண்டனை கொடு! மக்கள் ஆவேசம்


போபால், ஜூன் 8-_ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

உலகிலேயே மிகக் குரூரமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் அய்சோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 85 வயதான கேஸப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.

நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம்
திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றம்-சாற்றப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


குற்றப்பிரிவு 304_ஏ (மரணத்துக்குக் காரணமாக இருத்தல்) 304_2 (பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் (89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா, நிறுவனத்தின் முன்னாள் நிருவாக இயக்குநர் விஜய் கோகலே, நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார், செயல் மேலாளர் ஜே.என். முகுந்த், உற்பத்தி மேலா-ளர் எஸ்.பி. சவுத்ரி, ஆலை கண்காணிப்பாளர் கே.வி. ஷெட்டி, உற்பத்தி உதவியாளர் எஸ்.அய். குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் எஸ்.அய். குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் 9 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி. ராய், வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வாரென் ஆண்டர்சன் எங்கே?
நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன், இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. 2 ஆயிரம் டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.

மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 6 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஅய் தொடங்கியது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

சிபிஅய் தரப்பில் வழக்கறிஞர் சி. சஹாய் ஆஜராகி, யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.

இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர். காற்றில் பரவிய மீதைல் அய்சோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். 1982 ஆம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.

அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.

இந்த விபத்து நடந்தபிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிருவாகக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.

ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி. பிரசாத், அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர். 1982 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர்.

பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும், ஆலை நிருவாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குற்றவாளிகளுக்கு ஜாமீனாம்!
குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸாப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை.

தாமதமாகக் கிடைக்கும் நீதி; நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.

மரண தண்டனை கொடு - மக்கள் ஆவேசம்!

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது குறைவான தண்டனை என பொது-மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மனித உரிமை அமைப்பினரும், சமூகநல ஆர்-வலர்களும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு போபால் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர். மிகவும் காலதாமதமாக வந்த தீர்ப்பு. தண்டனையும் மிகக் குறைவு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

போபால் நகரையே நச்சுப் புகையால் சூழச் செய்த குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனையா? என பலரும் ஆவேசக் குரல் எழுப்பினர்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பலர் நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

போபால் விஷவாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேரை பலிகொண்ட இந்த விபத்தில் குற்றவாளிகளுக்கு மிகக்குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அவர்கள் தரப்பில் போராடி வந்த சமூக நல ஆர்வலர்களும், இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். மிகவும் காலம் கடந்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் நீதி சிறிதளவும் இல்லை என்று அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். போபால் நகரின் பல இடங்களில் குற்றவாளிகளின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

நீதிபதிகளின் போக்கு!
மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, இது குறித்து கூறியுள்ளது: இந்த வழக்கின் விசாரணை அமைப்பும் (சிபிஅய்), வாதாடிய அரசுத் தரப்பும் வழக்கை சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை. நீதிபதிகள், குரலைப் பதிவு செய்யும் இயந்திரமாக செயல்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பத்திரிகைகளும் விழிப்புடன் செயல்படவில்லை. பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சேர்ந்து வழக்கை பூசிமெழுகிவிட்டனர். இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படவில்லை. மிகக்கொடூரமான இந்த சம்பத்தை ஏதோ சிறிய சாலை விபத்து வழக்குபோல விசாரித்து முடித்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். குற்றவாளிகள் 8 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார் அவர்.

போபால் விஷயவாயு வழக்கு தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று விஷவாயு சம்-பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்-களும் வலியுறுத்தியுள்ளனர்.

மூதாட்டியின் துயரம்!

எனது கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தி உள்பட மொத்தம் 35 உறவினர்களை விஷவாயுக்கு பலி கொடுத்து விட்டு 26 ஆண்டுகளாக நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நிவாரணத் தொகை ஏதும் தேவை-யில்லை. அந்த குற்றவாளிக்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற 70 வயது மூதாட்டியின் குமுறல் கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்வதாக அமைந்தது.

SOURCE:http://viduthalai.periyar.org.in/20100608/news01.html

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

“தி இந்து” - பாசிச மோடிக்குப் புரியுமா? ஒரு தாயின் பரிதவிப்பு!

>> Thursday, June 3, 2010

உள்ளத்தை உலுக்கும் இந்தச் செய்தியை ஹிந்து ஆங்கில நாளேட்டில் (எழுத்தில் வடித்த ஹர்ஷ் மந்தர்) அதன் சுருக்கத்தை, "பாசிச மோடிக்குப் புரியுமா ஒரு தாயின் பரிதவிப்பு?" எனும் தலைப்பில்

மேலும் படிக்க...Read more...

****************************


இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP