என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

I.N.P. ஜமாஅத் நிர்வாக ஆட்சி குழு அமைப்பு அராஜகவாதிகளின் சாதனமா?

>> Sunday, July 19, 2009

1.ஜமாத்தார்கள் சிலர் எங்களுக்கு அனுப்பியுள்ளதை வாசகர்களின் பார்வைக்கு:‍‍
இதுவ‌ரையிலும் ஜமாஅத் நிர்வாக ஆட்சி குழு அமைப்பு ஏதாவது ஒற்றை ஒரு ஜ‌மாத்தின‌ரின் வாழ்க்கை பிர‌ச்சினைக்கு தீர்வு காண‌,

ஒற்றை ஒரு ஜ‌மாத்தின‌ரின் தீய‌ பழக்க‌ வ‌ழக்க‌த்தை க‌ண்டிக்க‌, தீய‌ வ்ழியில் சம்பாதிப‌ப‌தை நிறுத்த அறிவுரை கூற‌ , வ‌ட்டி வாங்குவ‌தை த‌டுக்க‌, சீத‌னம் கொடுக்க‌ல் வாங்கலை நிறுத்த‌, குடும்ப‌ பிரச்சினைக‌ளில் மார்க்க‌ வழியிலான‌ தீர்வு காண‌, வ‌றுமையில் ப‌சியிலும் பிணியிலும் வாடுவோர்க்கு உத‌வி செய்திட‌ முய‌ன்று இருக்கிற‌தா?

2.திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.


ஏழை,எளியவர்கள் இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
வட்டி கொடுமைகளிலிருந்து சமுதாயத்தை பாதுகாத்தல்.
ஏழைகளின் ஜனாஸா செலவுக்கு உதவி செய்தல்.
ஏழை,எளிய சிறுவர்களின் கத்னா( சுன்னத்) செலவுக்கு உதவுதல்.
ஏழை,எளிய மாணவர்களின் உலக மற்றும் மார்க்க கல்விக்கு உதவி செய்தல்.
விதவைகள் மற்றும் கைவிடப்பட்டோர்களுக்கு அடிப்படை தேவைக்காக சிறிய தொகையை மாதம்தோறும் அளித்தல்.
ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு உணவு வகைக்கு உதவிச் செய்தல்.

வசதியற்றவர்களின் பழுது அடைந்த கூரை , வீடுகளை செப்பனிடுதல்.
மருத்துவ முகாம் அமைத்து ஏழை,எளியவர்களுக்கு இலவச மருத்துவம் செய்தல்.
இரத்ததான முகாம் அமைத்து அவசர நிலைக்கு உதவி செய்தல்.

இவைகளெல்லாம் நமக்கு ஆகாத காரியங்களாக எண்ணிவிடீர்களோ?
திரும‌ண‌ முடிக்கும் கால‌த்தில் ஏழை எளியவன் என்று பாராமல் கொடுக்க‌ப்ப‌டுவ‌தை வாங்கி உண்டு தின்று விட்டு ப‌ண‌மும் வாங்கிக்கொண்டு ப‌திவு செய்ப‌வ‌ர்க‌ளே. !!
ஒரு ல‌ட்ச‌த்திற்கு எத்தனை பூஜ்ய‌ம் என்று கூட‌ தெரியாத‌ ஆண்பிள்ளைக‌ளின் குடும்ப‌த்தார்

அரை வ‌யிற்று உண‌வுக்கே அல்லாடி த‌ன் பெண்பிள்ளைக‌ளுக்கு திரும‌ண‌ கால‌த்தில் ச‌ற்றேனும் இர‌க்க‌ம் இன்றி பிச்சை எடுத்தேனும் ல‌ட்ச‌க்க‌ணக்கில் தா என்று ஆண்பிள்ளைக‌ளின் குடும்ப‌த்தார் வாட்டி வ‌தைக்கும் கால‌த்தில் உங்களை அனுகினால்

பெண்ணை பெற்ற‌வ‌ர்க‌ளுக்கு சீதன‌த்துக்காக‌ பிச்சை எடுக்க உதவ அத்தாட்சி ப‌த்திரம் கொடுத்துத‌வுவர்க‌ளே !!
ம‌வுத்தானால் ச‌ந்தாக்கு பெட்டி தந்து குழி வெட்டி மைய‌த்து கொல்லையில் அட‌க்க‌ம் செய்ப‌வர்க‌ளே!!!.
ஆட்சி குழு கைக்கு வ‌ந்த‌வுட‌ன் யார் ஒருவ‌ரிட‌மாவது அபிப்பிராய‌ பேத‌ம் ஏற்ப‌ட்டுவிட்டா‌லோ , செய்யும் த‌வ‌றுக‌ளை எடுத்துரைத்தாலோ அவ‌ர்க‌ளின் குடும்ப‌ திருமணங்க‌ளுக்கு க‌லியாண‌ ப‌திவு புத்தக‌ம் த‌ர‌ மறுப்போம் , ஜ‌னாசாவுக்கு ச‌ந்தாக்கும் த‌ர‌ ம‌றுப்பபோம் மைய‌த்துக்கொல்லையில் புதைக்க‌ ம‌றுப்போம் என‌ அச்சுறுத்துவ‌‌ர்க‌ளே!!!.

ஏதோ ஒரு வழியில் பொறுப்பில் அமர்ந்துவிடோம் என்ற நிலையில் கணக்கு கேட்ட ஜமாத்தினரை "ஷைத்தான்கள்" என பட்டம் சூட்டி அவர்களை எப்படியாவது சிறையிலடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கெதிராக பல பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்து முழுதும் படித்து பார்க்க விடாமல் அப்பாவிகளிடம் தந்திரமாக கையெழுத்து வாங்கும் அவுலியாக்களே!!!

உங்கள் விருப்பபடி கையெழுத்து இடாதவர்களையும் க‌லியாண‌ ப‌திவு புத்தக‌ம் த‌ர‌ மறுப்போம் , ஜ‌னாசாவுக்கு ச‌ந்தாக்கும் த‌ர‌ ம‌றுப்பபோம் மைய‌த்துக்கொல்லையில் புதைக்க‌ ம‌றுப்போம் என‌ அச்சுறுத்துவீர்களோ.!!!.

நீங்களே அவுலியாக்களாக இருப்பதில் மகிழ்ச்சியே. இன்சானியத்தை குறைந்த பட்சமாகவாவது ஜமாத்தினரிடம் காட்டலாமே?

மடியில் கனமில்லாதோர்க்கு வழியிலும் பயமில்லை. கணக்கு கேட்பவர்கள் மீது கோபமும் குரோதமும் வளரலாமோ ? அனைத்து ஜமாத்தினரிடமும் வளர்க்கலாமோ?

ஐ.என்.பி. பள்ளி‍யை வக்பு போர்டு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது ஏன்?

தவறு யார் பேரில்?

வக்ஃபு போர்டு துணை ராணுவ படையுடன் உதவியுடனா I.N.P. பள்ளியை கையகப்படுத்தியது?

வக்பு போர்டு‍ ‍ பள்ளிகளை ஜமாத்தினரிடமிருந்து தட்டி பறிக்கும் ஸ்தாபனம் இல்லை. பள்ளிவாயில் நிர்வாகம் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்து பள்ளிவாயில் நிர்வாக தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டோ சுட்டிக்காண்பிக்கப்பட்டோ இருந்தால்

அவைகளுக்கு விளக்கம் கேட்டு தவறுகளை திருத்த சொல்லி நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எச்சரிக்கை செய்து அதுவும் மீறப்பட்டால் மட்டுமே வக்பு போர்டு‍ அப்பள்ளியை தன் மேற்பார்வையில் எடுத்துக்கோள்ளுகிறது .

வக்பு போர்டுக்கு வருடாவருடம் ஒழுங்காக கணக்கு சமர்ப்பிப்பதில் தயக்கம் ஏன்?

கணக்குகள் மற்றும் சில கேள்விகளும் உங்களிடம் கேட்டு வக்பு கேட்டது , தவணையும் தந்ததே?

வக்ப் வாரியம் முன்னால் நிர்வாகிகளுக்கு குடுத்த காரண கேட்பு தாக்கீது ....
க்ளிக் செய்து படிக்கவும்.

அலட்சியப்படுத்தப்பட்டதா?
வக்பு போர்டு‍ ஒன்றும் எடுப்பார் கைப் பிள்ளை இல்லை. யார் எதையாவது எழுதிப்போட்டாலோ அல்லது போன் செய்தாலோ அவரின் அல்லக்கையாக செயல்பட்டு பள்ளி நிர்வாகங்களை எல்லாம் வசப்படுத்திக் கொள்ளுவதற்கு.
இளையாங்குடியில் உள்ள மற்ற ஜமாத் பள்ளிகளை விட்டுவிட்டு ஐ.என்.பி. பள்ளி‍யை மட்டும் வக்பு போர்டு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது ஏன்?
தவறு யார் பேரில்?
I.N.P. பள்ளிவாயில்களையும் அதன் சொத்துக்களையும் யார் முறையாக‌ பட்டியலிட்டு கையெழுத்து இட்டு வக்பு போர்டிடம் ஒப்படைத்தது?
03/02/2009 அன்று வக்ப் வாரியம் நேரடி நிர்வாகத்திற்கு வக்ப் வாரியம் ஜனாப் ச சாகுல் ஹமீது அவர்களுக்கு I.N.P நிர்வாகி ஐ.என்.பி. பள்ளி‍யை ஒப்படைப்பு .

க்ளிக் செய்து படிக்கவும்.

நமதூரில் உள்ள மற்ற ஜமாத் பள்ளிகளுக்கெல்லாம் கிட்டாத இப்பாக்கியத்தை எப்படி ஐயா பெற்றீர்கள்?

வக்பு போர்டு கையிலிருந்து நீங்கள் காப்பாற்றிவிட்டதாக பறை சாற்றும் I.N.P மெட்ரிக் பள்ளியின் வருடாவருடமாய் புதுப்பிக்க வேண்டிய அரசு அங்கீகாரத்தை 2006 லிருந்து புதிக்கப்படாமல் I.N.P. பள்ளியை சட்ட விரோத பள்ளிகளின் நிலைக்கு கொண்டு வந்துவிட்ட அவுலியாக்களே!!!

2006 ல் இருந்து அரசு அங்கீகாரம் வாங்கவில்லையாம், கூறுகிறார்கள் அரசு அதிகாரிகள்,

க்ளிக் செய்து படிக்கவும்.

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரின் செயல்முறைகள், மதுரை

பதில் கிடைக்குமா?
I.N.P ஜமாத் நலம் விரும்பிகள்.

*********************
2..திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
CLICK TO READ.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

1 comments:

Anonymous July 19, 2009 at 7:36 PM  

"என்னெத்தெ சொல்லி ஏடெடுத்து உரைத்தாலும்,கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே" என்ப்து இளயாங்குடி பேச்சு வழ்க்கம்.. அதைப்போல்தான் இப்போ உள்ள ஐ.என்.பி. ஜமாத் நிர்வாகிகளுக்கு வெக்கம் வெள்ளரிக்கா! மானம் மாங்கா! சுரனை சுரக்கா இதுவெல்லாம் இல்ல...கே எம்.ஜபருல்லா

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP