என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
Showing posts with label டாக்டர் பெரியார்தாசன். Show all posts
Showing posts with label டாக்டர் பெரியார்தாசன். Show all posts

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.

>> Monday, March 15, 2010


பணமே உலகத்தின் ஒரே கடவுள்,அதற்காக எத்தனை குட்டிக்கரணங்களும் போடும் இவ்வுலகில் பாமரர்களுக்கு இந்த படித்த அறிவாளி எவ்விதத்திலும் சளைத்தவரில்லை என இவர் எச்சத்தால் அறிகிறோம். நேற்று முன்தினம் இந்து நேற்று பவுத்தம் இன்று முஸல்மான் இடையில் பெரியாரிஸ்ட் நாளை கிறித்துவர்?!?!?! ஆனாலும் ஆகலாம்.

அறிஞர்கள் என மக்களால் காட்டப்படுகிற சிலரில் இது போன்ற கோமாளிகளும் உண்டு என்பது தான் கசப்பான உண்மை. அதுசரி இவருடைய பயணத்திற்கும்,ம(த)ன மாற்றத்திற்கும் என்ன செலவு ஆனது??/
This Periyar thasan is one useless guy.
He is looking for monetary gain for converting to Islam and hence announced that in Riyadh.
It's good for Hinduism and loss to Islam.

என்றும் இன்னும் பலவாறும் பெரியார்தாசன் இஸ்லாத்தை தானாக தழுவி ஏற்றுக்கொண்ட பின் வர்ணிக்கின்றவர்களுக்கு பெரியார்தாசன் தரும் விடியோ பதில் இதோ.

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) அவர்கள் தமுமுக இணையதளத்திற்காக அளித்த நேர்காணல்.


"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர்,

பெரியார்தாசன் வெகு காலத்துக்கு முன்பே சங்கராச்சாரியார், ராமகோபாலன் ஆகியோருடன் வாதாடி, அவர்களை ஓட ஓட விரட்டியவர். இவரது கேள்வி எதற்கும் அவர்களால் சரியாக பதில் சொல்ல முடியவில்லை.

"படைத்தவன் என்றொருவன் இல்லை என்ற நாத்திக கொள்கைதான் சரியானது எனில் அதனால் நம்முடைய மரணத்துக்குப் பின் எந்த இழப்பும் இல்லை.

ஆனால், அதற்கு மாறாக ஒருவேளை படைத்தவன் என்றொருவன் இருந்து விட்டால் மரணத்துக்குப் பின் நாம் மிகப் பெரிய நஷ்டவாளியாக நிற்க நேருமே" என்ற சிந்தனையினால் எழுந்த அச்சம்தான் "படைத்தவன் என்றொருவன் இருக்கிறானா?" என்ற தேடுதலுக்குத் தன்னை உந்தித் தள்ளியதாகக் கூறுகிறார்.


"2000இல் மனதினுள் எழுந்தக் கேள்வி, பல வேத கிரந்தங்களையும் ஆராயச் சொன்னது.

இந்துமத வேதங்களில் கடவுளைத் தேடுபவன், கடவுள் மறுப்புக் கொள்கையில்தான் போய் சேருவான்.

பைபிளிலும் படைத்தவனைக் குறித்த தெளிவு இல்லை.

இறுதியில் இஸ்லாத்தில் - திருக்குர்ஆனில் தேட முற்பட்டேன். திருக்குர்ஆனை வாசிக்க ஆரம்பித்ததிலிருந்தே மனதினுள் தெளிவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

ஒரு கட்டத்தில் தினசரி வேலைகளை ஒதுக்கி, நாளுக்கு 5 மணி நேரம் வரை திருக்குர்ஆனை வாசித்து முழுமையாக முடித்தேன். அதன் பின் ஹதீஸ்களையும் வாசிக்க ஆரம்பித்தேன்.

2004 இல் கடவுள் மறுப்புப் பிரச்சாரத்தை முழுமையாக நிறுத்தி விட்டேன். அதன் பிந்தைய 6 ஆண்டுகளும் முழுமையாக இஸ்லாத்தை ஆய்வு செய்வதிலேயே செலவழித்து, இறுதியில் உண்மையான இறைவனை இஸ்லாத்தின் மூலம் கண்டுகொண்டேன்" என்று தன் இறைதேடுதல் பயணத்தின் கடந்த 10 ஆண்டுகால முக்கிய நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் நினைவு கூர்கிறார்.

"கடவுள் இல்லை" என்ற சிந்தனையை ஆயிரக்கணக்கானோருக்கு விதைத்த இறைமறுப்பாளர் ஒருவர் இன்று இறைவனைக் கண்டுகொண்டுள்ளார்.

கடுமையான தேடுதல் மூலம் கண்டு கொண்ட ஓரிறையை இனிவரும் காலங்களில் மக்களுக்கு எடுத்தியம்ப இருக்கும் அன்னாரின் கண்டறிதலைத் தமிழ்ச் சமூகம் மனம் திறந்து கேட்கட்டும்; உண்மையான படைத்தவனைக் கண்டு கொள்ளட்டும்.

முஸ்லிம்கள், குறிப்பாக தமிழக முஸ்லிம்களைக் குறித்து கூறும்போது, இறையியல் தத்துவம், வணக்க வழிபாடுகள், மறுமை நம்பிக்கை என்கிற மூன்று அம்சங்களிலேயே மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்களே தவிர, இரத்தமும் சதையும் உள்ள சகதமிழர்களாக, அவர் தம் தொப்புள்கொடி உறவாகத்தான் இன்றைக்கும் இருக்கிறார்கள் என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்.

முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், கடத்தல்காரர்களாகவும், பலதார மணமுடிப்பவர்களாகவும் கருதும் போக்கு கடந்த சில வருடங்களாகத்தான் கட்டிஎழுப்பப்பட்டது என்ற பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் , பாபர்மசூதி இடிப்பு அதன் தொடர்ச்சியே என்றார்.

முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகிய ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைவதன் மூலமே தங்கள் உரிமைகளை சரியாகப் பெற முடியும் என்ற பேராசிரியர் அப்படி ஒன்றிணைந்து விடாமல் சுட்டா'ராம்' கட்சியும், செத்தா'ராம்' கட்சியும் சூழ்ச்சி வலை பின்னுவதை எளிதாக விளக்கினார். "நான் அடிக்கற மாதிரி அடிக்கறேன், நீ அழற மாதிரி அழு" கதை தான்.

செத்தவனும் ராம் ராம் என்று சொன்னான், சுட்டவனும் ராம் ராம் என்று தான் சொன்னான். ஆக, இந்த சூனாராம் சேனாராம்களே இந்திய அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை 'நாம்' தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும் என்றார். இங்கே, 'நாம்' என்பது ஒடுக்கப்பட்ட அனைவரும்.

" முஸ்லிம்களை வைத்தே முஸ்லிம்களுக்கெதிராகத் தீர்மானம் நிறைவேற்றுவார்கள் ஆதிக்க வாதிகள். அப்படிப்பட்ட முஸ்லிம்களைத் தான் தம் இயக்கத்தில்; கட்சியில் பதவியில் வைத்து அழகு பார்ப்பார்கள்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்

"ஒரு ஊரில் மூன்று முஸ்லிம்கள் தான் இருக்கிறார்கள். ஆனால், நான்கு இயக்கங்கள் இருக்கின்றன. நாலாவதாக வெளியிலிருந்து வந்தவன், இந்த மூன்று பேரையும் ஒற்றுமைப்படுத்துவதற்காகவே இயக்கம் கண்டதாகச் சொல்கிறான்" என்றார் பேராசிரியர் பெரியார்தாசன்
**********
டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவி டாக்டர் அப்துல்லா ஆகியுவுடன் மக்காவில் உம்ரா நிறைவேற்றிய பொழுது


மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP