என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

எச்சரிக்கை!! நண்பர்களிடமிருந்தே!! எதிரிகளிடமிருந்தல்ல!!

>> Wednesday, April 21, 2010

சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,

அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள்.!

வாழ்க்கையில் நாம் எத்தனையோ வகையான நண்பர்களைச் சந்திக்கிறோம். பிறகு அவர்களிடம் நாம் பெற்ற அனுபவங்களைப் பற்றி சிந்திக்கிறோம். பாடமும் பெறுகிறோம்.

எல்லா நட்பும் ஒரே வகையானதல்ல. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு என்பது (குறள்788)

வள்ளுவர் வகுத்த வாழ்வியலில், ஒருவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகும்போது, உடனே ஓடோடி தானியங்கிபோல் உதவுவதுதான் அவ்வகை_ முதல்வகை. கைம்மாறு கருதாத நட்பு.

அத்தகைய நண்பர்களே மறக்கப்படக்கூடிய, இழக்கக் கூடாத நண்பர்கள் ஆவார்கள்.

மற்றொரு வகையாளர்கள், பயன் கருதிப் பழகுவார்கள். நம்மிடமிருந்து சதா, சர்வகாலமும் எதை எதையோ எதிர்பார்த்து_கணக்குப் போட்டுப் பழகும் பண்பாளர்கள்.

ஒரு சிறு ஏமாற்றம் அவர்களுக்கு என்றாலும் அவர்கள் மெல்ல மெல்ல காணாமற் போவார்கள்.

அந்த அற்றகுளத்து அறுநீர்ப்பறவைகள்! அவர்களைப் புரிந்தும் கூட, தாட்சண்யத்திற்காக அவர்களை நாமே கத்தரித்துவிடாமல், அவர்களது முகமன் கண்டுகூட முகம் சுளிக்காமல் பழகித் தொலைப்பது உண்டு.

அவர்களது பல பரிந்துரைகளை நாம் ஏற்று செயல்படுத்தி அவர்களுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தியிருந்தால்கூட பத்து நடந்து, பதினொன்றாவது நடக்க இயலாமல்போனால், நடந்த பத்தை மறந்து, நடக்காத பதினொன்று பற்றியே அலுத்து அங்கலாய்ப்பார்கள் அவர்கள்!

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவராக இருந்து சிறப்புடன் ஆட்சி புரிந்து வரலாறு படைத்த பனகல்அரசர் (Raja of Panagal) அவர்கள் கூறுவாராம்!
‘‘For every 10 recommendations I get nine enemies and one doubtful friend’’ 10 பேர் பரிந்துரைகளுக்கு என்னிடத்தில் வரும்போது, ஒன்பது பேர்கள் எதிரிகளாகவும், பயன் அடைந்த ஒருவர் சந்தேகத்திற்குரிய நண்பராகவும் தொடருவார்களாம்!

கிடைக்காத 9 பேர் எதிரிகளாகிறார்கள் என்பதை விட, அவரது கூற்றில் ரசிக்க வேண்டியது கிடைத்த 10ஆவது நண்பர்கூட, கிடைத்த பிறகு இது இவரால்தான் நடந்தது என்று சொல்லிவிட முடியுமா? சந்தேகத்துடன் நட்பு பாராட்டுவதோடு, கிடைத்தபிறகு அவரது தகுதி திறமை, அறிவாற்றல் இவைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் கூட நினைப்பார்!

சில நண்பர்கள் மேலே விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். நாம் எங்கே போனாலும் அங்கே வந்து முதலில் முகங்காட்டி நிற்பர்! நம்மால் ஒரு காரியம் ஆகும் வரையில்,

அந்தச் செயல் முடிந்த பிறகு அவர்கள் நம்முன்பு தோன்றவே மாட்டார்கள். ( ஒரு வகையில் அது நிம்மதி_ நமக்கும் விடுதலைதான்!)

நட்பு பலருக்கு ஒருவழிப் பாதைதான்; ஒரு சிலருக்கு மட்டுமே அது இருவழிப்பாதைகள் ஆகும்.

ஒரு நண்பர் பரிந்துரைகளைச் சொல்லி, அது நடக்காதபோது, அதன்பிறகு நம்மிடம் நடந்து கொள்வதைப் பொறுத்தே அவர் பண்புள்ளவரா? இல்லையா என்பதை அந்த அளவுகோல் கொண்டு அளக்கமுடியும்.

எனவே எதிரிகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்_ சரியான நண்பர்கள் தேர்வைப் பற்றியே கவலைப்பட்டு வாழுங்கள்!

Source: வாழ்வியல் சிந்தனைகள், கி.வீரமணி.
********************

படிக்கலாமே!!!


வெற்றியை விதைதிடுவோம்.வீழ்ச்சியை வென்றிடு! எழுச்சியாய் நின்றிடு!! வலையைக் கிழித்து வெளியேறுங்கள்.



கத்திரிக்கோல் வேண்டாமே!.யாரையும் கத்தரித்துவிடாதீர்கள்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP