என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

திருத்த வேண்டிய கடமை யாருக்கு?

>> Saturday, August 1, 2009

இளையாங்குடியில் நடக்கும் வேதனை தரும் நிகழ்வுகள்.BY "ILAYANGUDI ISLAMIC SOCIALISM FORUM",

சுனாமி! இது அலையல்ல... ஆட்கொல்லும் போதை!!,நெய்னாபிள்ளை அப்துல் ரஹிம்,.

இளையான்குடி என்ற பெயருக்கு ஏற்றாற்போல் என்றும் இளமையுடன், மக்களின் மகிழ்ச்சியுடன் வாழ மக்களில் ஒருவனாக இதை எழுதுகிறேன்.

ஏன் இந்த பிறப்பெடுத்தோம் என்று பறவையினமும், விலங்கினமும் வருத்தப்பட்டு இவ்வூர் மனிதப்பிறப்பெடுக்க தவறிழைத்தோமோ? என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் இன்று பறவையினமே தென்படுவதில்லை இளையாண்குடியில் பள்ளிய்ல வசிக்கும் புறாக் கூட்டங்களே இல்லையென்றாகி விட்டது.

தங்சாவூர், திருநெல்வேலி ஜில்லாவிலிருந்து வந்ததால் என்னவோ அம்மண்ணின் வீரத்துடன் மற்றவர்கள் தவறிழைத்தால் தண்டிக்கும் வகையிலும், எண்ணி வருந்துகையிலே அதை மன்னிக்ககூடிய பெருமையுடன் வாழ்ந்திருந்தனர்.

கால்காசு நேறாத செயலானாதும் அதை கண்ணியத்துடன் சிரத்தை எடுத்து ஊரின் பெருமையை நிலைநாட்டும் வகையிலும் செயல்படுத்தியவர் வாழ்ந்த காலம் போய், சொந்த விருப்பு வெறுப்புகளால் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து செயல்படாமல் ஊரில் வேற்றுமையை உண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.

ஊரில் வசிக்கும் மக்களிலே முன்னர் ஒரு வீடு தள்ளியிருருந்தாலும், ஓராயிரம் வீடு தள்ளியிருந்தாலும் மச்சான், மாப்ளே, மருமவனே என்று அழைத்த காலம் போய் ஒருவரக்கொருவர் முகம் கொடுத்து பேச மறுக்கும் காலம் ஆகிவிட்டது. சொந்த பந்தங்களின் முகம் தெரியாமல் வைபவங்களுக்கு அழைக்கவில்லை எனில் அதுவும் தெரியாமல் போகும்! காரணம் என்னவென்று அறிகையிலே சமூக ஒழுக்ககேடுகளும், இறை நம்பிக்கையின் பலகீனத்தால் தான்!

ஆரம்பகாலம்
உழைத்தால் உயர்வு உண்டு என்று எண்ணி கலனியிலே உழைத்து கட்டை உண்டியிலே வியாபாரம் செய்தும் தன்மானத்துடன் பிறர் மானம் காக்க உதவிகள் செய்து வந்த மாண்பு எங்கே? காலம் உருண்டோடியது.

வியாபாரம், தொழில், தொழுகை இல்லவிடினனும் சமூக ஒற்றுமைக்கு வழிகாணும் அமைதி, ஊரின் நலம் என்று முன்னோர்கள் செய்த காரியங்கள் இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன அவர்களின் பெயர்களின் வாயிலாக!!

ஆனால் இன்று?

கழனியிலே காவலுக்கு நின்றும், சிலம்பு, கு°தியிலே ஒருவனை வீழ்த்தவல்ல பெருமையுடனும், கால்பந்திலே கரை கண்ட பெயருடனும் இருந்த இளைஞர் படை இப்போது எங்கே? கேலிபேச்சுகளும், ஆராவர சேட்டைகளும், மதி மயங்கிய செயல்களும், நபி வழி இல்லா வாழ்க்கையும், முடமான படிப்பு வளர்ச்சியும் அவனை எங்கு கொண்டு செல்லும் . . . ? ? ? ? ?

பெற்றோரின் கவனிப்பின்றி விளையாட்டாய் திரிந்து எல்லாம் அவனை திருப்பி தாக்குகையிலே, அவனின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் முடங்கி போகின்றன. இளைஞன் எதிலும் நாட்டமில்லா வாழ்க்கை வாழ்ந்து, ஏதோ சம்பாரித்தோம், அவ்வளவு தான் வாழ்க்கை என்று இருந்துவிடுகின்றான்.

சுயநலம் தலைதூக்குகிறது. ஊரின் அக்கரையில் கவனம் செலுத்துவதில்லை. எதிலும் தைரியத்துடன் இறங்கும் வேலையிலே முடமாகி விடுகிறான். ஒரு நாயைக்கண்டு பயந்தோடும் முடமாக இளைஞன் அப்போது உண்டா ? ? ?

விளையாட்டு புத்தியும், வாலிப சேட்டைகளும், பெண் பித்தமும் அவனை இருளைபோல கவ்வியது எதனால்? ஏன்? பொது சிந்தனை இல்லை, ஒழுக்க மாண்புகள் எங்கே? பிறரை போலவே இருந்து விட்டால் அவன் தனித்தன்மை புலப்படுவது எப்போது? இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாது இருந்தால் நளை அசிங்க செயல்கள் நடைபெறாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

சைத்தான் தான் இஞ்ச் இடைவெளி போதும் என்கிறானே? ? குடும்பசூழல், பொறுப்பின்மை, மார்க்க சிந்தனை போன்ற கட்டமைப்புகள் குலைய நம் சந்ததிகளை நாம் காரணமாக்கி விட துணிவோமா? கண்ணிய வான்களா இருந்தால்?

ஏதோ நாம், வாழ்க்கைக்கு ஒரு சம்பாத்தியம், திருமணம், குடும்பம் என்று நம் சுயநலத்திற்கு வாழ்ந்து விட்டு, அந்த சந்ததிகளுக்கும் அதனை சொல்லி கொடுத்து இயந்திர தனமாக வாழ்கிறோம். மார்க்கம், பொதுநலம், ஒழுக்கம் என்ற பொது சிந்தனைகளை குழந்தைகளுக்கு வழங்குகிறோமா?

ஒருவரிடம் கேட்கிறேன் குறிப்பிட்ட இந்த நபர் கடன் வாங்கி இருக்கின்றாரா என்ற ஆம் வாங்கியிருக்கின்றார். வாங்கிய அந்த நபரின் அத்தா கடன் பத்திரத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டு இருக்கிறார் என்று வெளிப்படையாக கூறினார். அவரை கவனித்ததில் ஒரு பதட்டம், எங்கு தெரிந்து விடுமோ? என்று இப்படியாக ஒரு சந்ததிகளை அல்லவா கெடுத்து கொண்டிருக்கின்றோம். வட்டிக்கு விட்டதை ஆதரிக்க அல்லவா சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

இவைபோன்ற காயிங்களால் தான் நம் ஊரின் பெயர் தரம் தாழ்ந்து கொண்டிருக்கிறது. மேல்மட்ட அதிகார துஷ்பிரயோகத்தை மட்டும் பாராமல், ஆட்சி அதிகாரம் கெட்டு கொண்டிருக்கிறது என்று ஒருவருக் கொருவர் ஈகோ பார்த்து கொண்டிருக்காமல் ஒரு ஊரின் சமூக ஒற்றுமைக்கு, பாடுபட பொது சிந்தனைகள் வளர வேண்டும்.

விஜயன் தெருவில் வசிக்கும் நபர், என் சொந்தத்தில் ஒருவருக்கு வட்டிக்கு விட்டார் என்று கேள்விபட்டிருக்கிறேன். இதனை கொடுக்கும் நபர் இந்த மார்க்கத்தில் செயல்பட்டு கொண்டு தான் ஒரு இ°லாமியர் என்று கூற கேட்கையிலே ஒரு ஒழுக்க மின்மை, புரிதல் இன்மை, சுயநலம் அல்லவா தம்பட்டம் அடிக்கிறது.

மேலும் தேவூரணி கரையோரம் ஒரு நபரின் இல்லத்தில் xxxxx என்ற நபர் பெண்களை வைத்து விபசாரம் நடந்து வந்தது என்று அறிந்து காவல்துறை நடத்திவந்த நபரை கைது செய்து வைத்திருந்தனர். இப்போது அவர் பெயிலில் வந்துவிட்டார். இவர் ஒரு இ°லாமியர் என்று எண்ணுகையிலே மார்க்க விளக்கங்கள் பொது சிந்தனைகள் ஒருவனின் மனதில் வேரிடவேண்டும் என்று ஆவல் கொள்கிறேன்.

இ.மே. பள்ளி வாசலிலே துப்புரவு வேலைபார்க்கும் ஒருவர் மார்க்கத்திற்கு விரோதமாக, பள்ளிவாசல் வரும் சிறுவர், இளைஞர்களிடம் தப்பாக நடக்க முயற்சிக்கிறார் என்று இளைஞர்கள் வாயிலாக கேள்விபட்டு, பள்ளிவாசலில் அனாச்சாரம் செய்யும் நபரின் கைகளே அப்பள்ளிவாசலை துடைத்து கொண்டிருக்கும் என்று எண்ணுகையிலே எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.

நூர்தீன் தெருவிலே வசிக்கும் ஒரு நபர் செட்டியார் நபர்களிடம் பணம் கொடுத்து வட்டி வடுகிறார் என்று கேள்விபட்டு, அவருடன் பழகும் நபர்களுக்கு ஏன் இதைக் கேட்க திராணி இல்லை என்று எண்ணத்தோன்றுகிறது. இ.மே.நி. பள்ளியிலே வேலை பார்க்கும் சாலையூரை சேர்ந்த நபரும், இளையான்குடி சேர்ந்த நபரும் சிறுவர்களிடம் தப்பான முறையில் நடக்க முயற்சிக்கின்றனர் என்று கேள்விபடும் பொழுது கல்வி நிலையமா? அது என்று எண்ணத்தோன்றுகிறது.

ஹமிதியா உயர்நிலைப் பள்ளியிலே கடை வைத்திருக்கும் நபர் பல நபர்களுடன் சேர்ந்து பள்ளி முடியும் வேளையிலே, இரவில் காம களியாட்டங்களை நடத்தி கொண்டிரக்கின்றார் என்ற செய்தி சில இளைஞர்களிடம் கேட்டறிந்து அவர்களின் வாயிலாக துப்பறிந்து வெளியிடும் செய்தி இதுவாகும்.

முதலியார் தெருவிலே வசிக்கும் ஒரு இளைஞர் செல் பேச்சினால் பெண் மோகத்தால் முறை கூடா நட்பு கொண்டு பிறகு ஊர்விட்டு சென்று இப்போது திரும்பிவந்துள்ளார்.
இவையெல்லாம் நபர்களின் மேல்கொண்ட வெறுப்பின் உமிழ்வாக என்ன வேண்டாம்.

கண்டும், கேட்டும் அறிந்த செய்தி. இதுபோன்ற காரியங்கள் நடப்பதற்கு என்ன காரணம் என்று அறிகையில் பல சமூக சீர்கேடுகள் தான் காரணம். முறையான மார்க்க போதனைகள் இல்லாமை, குடும்ப வேற்றுமைகள், சைத்தானின் சூழ்ச்சிக்கு இறையாகிறோம் என்றுஎன்னாமல் இதுபோன்ற காரியங்கள் நடைபெறுகின்றன.

தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும். மார்க்க விளக்கம் முழுமையாக கிடைக்கவேண்டும். இந்த சீர்கேடுகளை இப்பொழுதே வெளிப்படுத்தவில்லை எனில் சந்ததி அழிவிற்கும், சீர்கேட்டிற்கும் இட்டு செல்லும். பிறகு ஏன் சுனாமி வியாபாரம், முறைகேடான சமூக உறவுகள் பெருகாது? வேறுபாடுகள் தோன்றாது?

செய்திகள், தகவல்கள் கிடைத்துக் கொண்டிருக்கும் உண்மைகள் வெளிப்படுத்த ஆயத்தமாகி இருக்கிறோம்.---BY "ILAYANGUDI ISLAMIC SOCIALISM FORUM",
******************************

நெய்னாபிள்ளை அப்துல் ரஹிம், சிங்கப்பூர்.
க்ளிக் செய்து படிக்கவும்.
சுனாமி! இது அலையல்ல... ஆட்கொல்லும் போதை!!

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP