என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அரியலூரில் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள்.

>> Friday, October 2, 2009

அரியலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்
6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை.பரபரப்பு தகவல்கள்



அரியலூரில் காவிரி ஆற்றுப் படுகையில் கிடைத்த டைனோசர் முட்டைகள் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. அந்த டைனோசர்கள், தாவரங்களை சாப்பிடும் வகையை சேர்ந்தவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.

காவிரி ஆற்றுப்படுகை

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை கழகத்தை சேர்ந்த புவியியல் துறை மாணவர்களும், பேராசிரியர்களும் காவிரி ஆற்றுப்படுகை பகுதிகளில் ஆய்வு செய்து வந்தனர்.

அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் உள்ள காவிரி படுகையில் ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் மிருகங்களின் முட்டைகள் கிடைத்தன.

வெளிநாடுகளில் மட்டுமே வாழ்ந்ததாக கருதப்பட்டு வந்த டைனோசர் மிருகங்கள், தமிழகத்திலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்குள் கொத்து கொத்தாக டைனோசர் முட்டைகள், முட்டை ஓடுகள் மற்றும் சிதறல்கள், கழிவுகள் போன்றவை கிடைத்தன.

ஏற்கனவே, மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தற்போது, தென்னிந்தியாவில் முதன் முறையாக டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. இது குறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவரும் புவியியல் துறை பேராசிரியருமான முத்துவைரசாமி ராம்குமார் கூறியதாவது:-

20 செ.மீ. குறுக்களவு

அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள கள்ளமேடு காவிரி படுகையில் டைனோசர் முட்டைகளை நாங்கள் கண்டு பிடித்தோம். கொத்து கொத்தாக முட்டைகள் கிடந்தன. ஒவ்வொரு கொத்திலும் தலா 8 முட்டைகள் இருந்தன. கோள வடிவிலான அந்த முட்டைகள், 13 முதல் 20 செ.மீ. குறுக்களவு (விட்டம்) கொண்டவை ஆகும். மேலும், 11/2 மீட்டர் அளவிலான மணல் கூடுகளும் கிடைத்தன.

சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் ஏராளமான டைனோசர் முட்டைகள், கூடுகள், கூடுகளின் சிதறல்கள் போன்றவை கிடைத்தன. இந்தியாவில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்ட பெரிய இடமாக இது இருக்கும் என்று கருதுகிறோம். தேசிய அளவில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த பகுதியை அறிவிக்க வேண்டும். எதிர்கால ஆராய்ச்சி மற்றும் டைனோசர் முட்டைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் இந்த இடத்தை பாதுகாப்பது அவசியம். இவ்வாறு போராசிரியர் ராம்குமார் தெரிவித்தார்.

எந்த வகை டைனோசர்?

அரியலூரில் கிடைத்துள்ள டைனோசர் முட்டைகள் அனைத்தும் 61/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. மிகவும் கொடூர குணமுடைய `கார்னோசர்' வகை டைனோசர் மற்றும் இலை, தழைகளை சாப்பிடும் `சவுரோப்போட்' வகை டைனோசர் ஆகியவற்றின் முட்டையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

`சவுரோப்போட்' வகையை சேர்ந்த டைனோசர்கள், ராட்சத உருவமாக வளரும் தன்மை கொண்டவை என்பதும் நீண்ட கழுத்துடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைனோசர் முட்டைகளில் சிவப்பு நிற தூசி மற்றும் சாம்பல்கள் காணப்படுகின்றன. எனவே, எரிமலை வெடித்து சிதறும்போது வெளியேறிய நெருப்பு குழம்பில் டைனோசர் முட்டைகள் உருட்டி வரப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கு புகைப்படங்கள்

டைனோசர் மற்றும் அவற்றின் முட்டைகள் பற்றிய ஆராய்ச்சி நிபுணராக பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் சகானி உள்ளார். எனவே, அரியலூரில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகளின் படங்கள், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கெர்தா கெல்லருக்கும் அந்த புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன.

முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் டைனோசர் எலும்புகளும் கிடைத்தன. அவற்றின் படங்களும் உறுதி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த தகவல்களை, பேராசிரியர் முத்துவைரசாமி ராம்குமார் தெரிவித்தார்.
Source: Dinathandhi.

4 comments:

ஊர்சுற்றி October 2, 2009 at 2:27 PM  

ஆச்சரியமாக இருக்கிறதே!

அன்புடன் நான் October 2, 2009 at 2:58 PM  

வியப்பாக உள்ளது தங்களின் செய்தி. நானும் அந்த ஊர் பக்கம்தான்.

Anonymous October 2, 2009 at 3:04 PM  

//மிகவும் கொடூர குணமுடைய `கார்னோசர்' வகை டைனோசர் மற்றும் இலை, தழைகளை சாப்பிடும் `சவுரோப்போட்' வகை டைனோசர் ஆகியவற்றின் முட்டையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்//

I thereore believe that these eggs must have been laid by pure ,original,dravidian tamil dinosaurs and unlikeley to have been those of aryan ones which came thru khyber pass.

Anonymous October 5, 2009 at 2:29 PM  

Aryans never splitted india. Keep in mind.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP