என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல்கள், செய்திகள்,

>> Friday, July 3, 2009

1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!-ஹாஜாகனி
2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா
3.ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
4'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.
5..யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா?!?!?!?! கெட்டதா!?!?!?!?
6.யார் வெற்றியாளர்.

1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!-ஹாஜாகனி

இஸ்ரேல் இந்த பூமிப்பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு.

மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது.

ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது.

நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.

அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர்.

அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.

இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது.

மத்திய அரசின் உயர் அதிகாரிகளையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது. Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர்.

14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.

சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் இஸ்ரேல் பார்வையிட முடியும்.

பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.

இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம். SOURCE: TMMK.

************************
2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா

மைசூரிலிலுள்ள கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் இந்த‌ மாத‌ம் 2ஆம் தேதி ந‌டைபெற்ற‌ க‌ல‌வ‌ர‌த்தில் 3 பேர் ம‌ர‌ணிப்ப‌த‌ற்கு கார‌ண‌மான‌ ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை எறிந்த‌ ச‌ம்ப‌வ‌த்திற்கு பின்னால் ஸ்ரீராம‌ சேனா தான் கார‌ண‌ம் என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ அத‌ன் உறுப்பின‌ர்க‌ள் ச‌ம்ம‌தித்துள்ள‌ன‌ர்.

ஹிந்துத்தீவிர‌வாத‌ இய‌க்க‌மான‌ ஸ்ரீராம‌சேனாவின் தீவிர‌த்தொண்ட‌ர்க‌ளாகிய‌ கிருஷ்ணா, ராஜு ஆகியோர்தான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ப‌ள்ளிவாச‌லில் போட்ட‌து. இதைத்தொட‌ர்ந்து ஏற்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌த்தில்தான் 3 பேர் ம‌ர‌ண‌ம‌டைய‌வும் ஏராள‌மானோர் காய‌ம‌டைய‌வும் கார‌ண‌மான‌ க‌ல‌வ‌ர‌ம் ஏற்ப‌ட்ட‌து. ச‌ம்ப‌வ‌த்தைத் தொட‌ர்ந்து கைதுச் செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா(வ‌ய‌து30) குற்ற‌த்தை ஒப்புக்கொண்ட‌தை உய‌ர் போலீஸ் அதிகாரிக‌ள் தெரிவித்த‌ன‌ர்.

இவ‌னுடைய‌ கூட்டாளியான‌ த‌லைம‌றைவாக‌ இருக்கும் ராஜுவை கைதுச்செய்வ‌த‌ற்கு காவ‌ல்துறை முடுக்கிவிட‌ப்ப‌ட்டுள்ள‌து. இர‌ண்டுமுறை கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியில் ஸ்ரீராம‌சேனா த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக் ந‌ட‌த்திய‌ ஆவேச‌க‌ர‌மான‌ உண‌ர்ச்சியைத்தூண்டும் உரைதான் ப‌ன்றியின் மாமிச‌த்தை ஹ‌லீமா ப‌ள்ளிவாச‌லில் எறிய‌ கார‌ண‌மான‌து என‌ கைதுச்செய்ய‌ப்ப‌ட்ட‌ கிருஷ்ணா போலீஸ் விசார‌ணையில் கூறியுள்ளான்.

முன்பே ஸ்ரீராம‌சேனாதான் ப‌ள்ளிவாச‌லில் ப‌ன்றியின் மாமிச‌த்தை போட்ட‌து என‌ ப‌த்திரிகையாள‌ர் ச‌ந்திப்பில் வெளிப்ப‌டுத்திய‌ பாப்புல‌ர் ஃப்ர‌ண்டின் மாவ‌ட்ட‌த்த‌லைவ‌ர் செய்ய‌த் க‌லீம் உட்ப‌ட‌ 14 மாவ‌ட்ட‌ பாப்புல‌ர்ஃப்ர‌ண்ட் பொறுப்பாள‌ர்க‌ளை கைதுச்செய்து ஜாமீன் வ‌ழ‌ங்க‌முடியாத‌ வ‌ழ‌க்குக‌ளை ப‌திவுச்செய்து சிறையில் அடைத்த‌து

க‌ர்நாட‌கா காவ‌ல்துறை. ஸ்ரீர‌ங்க‌ப்ப‌ட்டின‌த்திலிலுள்ள‌ ஒரு இறைச்சி வியாபாரியிட‌மிருந்து 1500 ரூபாய்க்கொடுத்து பூஜைக்காக‌ என்றுச்சொல்லி பன்றி இறைச்சியை வாங்கி ப‌ள்ளிவாச‌லில் கொண்டு போட்ட‌தாக‌ கிருஷ்ணா கூறியுள்ளான். மேலும் இவ‌னுக்கு கைதாம‌ர‌ந‌ஹ‌ள்ளியிலிலுள்ள ஒரு ந‌பருடைய‌ உத‌வியும் கிடைத்துள்ள‌து.

மைசூர் க‌ல‌வ‌ர‌த்தில் கைதுச்செய்ய‌ப்பட்டு பல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள‌ அப்பாவி முஸ்லிம்க‌ள் ம‌ற்றும் ஹிந்துக்க‌ள் 300க்கு மேற்ப்ப‌ட்டோர்க‌ளை விடுத‌லைச்செய்ய‌ கோரி மைசூரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாத்தலைமையில் முஸ்லிம்க‌ள் ந‌ட‌த்திய‌ அமைதியான‌ ஆர்ப்பாட்ட‌த்தில்தான் காவ‌ல்துறை அராஜ‌கமாக‌ அடித‌டி ந‌ட‌த்தி க‌ண்ணீர் புகை உப‌யோகித்த‌து.

முஸ்லிம்க‌ளை ஆவேச‌ம் அடைய‌ச்செய்து க‌ல‌வ‌ர‌த்தை ஏற்ப‌டுத்த‌ ஸ்ரீராம‌சேனாவும் அத‌னுடைய‌ த‌லைவ‌ன் பிர‌மோத் முத்த‌லிக்கும் ந‌ட‌த்திய‌ ச‌தித்திட்ட‌ம் வெளிப்ப‌டுத்த‌ப்ப‌டுள்ள‌தைத்தொட‌ர்ந்து க‌ர்நாட‌கா அர‌சும், காவ‌ல்துறையும் சிக்க‌லில் மாட்டியுள்ள‌ன‌.

ப‌ஜ்ர‌ங்த‌ள் ம‌ற்றும் ஸ்ரீராம‌சேனா ஆகிய‌வ‌ற்றை த‌டைச்செய்து பிர‌மோத் முத்த‌லிக்கை கைதுச்செய்ய‌வேண்டும் என‌ க‌ர்நாட‌கா ச‌ட்ட‌ச‌பை காங்கிர‌ஸ் உறுப்பின‌ர்க‌ள் கூட்ட‌த்தில் வ‌லியுறுத்த‌ப்ப‌ட்ட‌து. செய்தி:தேஜ‌ஸ் ம‌லையாள‌ நாளித‌ழ்
*************************************
3.ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?

‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா.

பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!

டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது.

முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை.

சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.

ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள்.

ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.

இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார்.

பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.

டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார்.

டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.

இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார்.

கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது.

இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.

மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.

டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும்.

அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.

‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம்.

ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.

இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.

இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும்.

டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார்.

நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.

டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாகஇருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர்.

வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே! - புதிய ஜனநாயகம், ஜூலை-2009
*************************************
4.'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.

சான்பிரான்ஸிஸ்கோ: முன்பு எதற்கெடுத்தாலும் மைக்ரோசாப்டையே நிறுவனங்கள் நம்பிக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது போட்டிக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

இதன் விளைவு, விஸ்டாவுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் புதிதாக அறிமுகப்படுத்திய 'விண்டோஸ் 7' ஆபரேடிங் சிஸ்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன.

10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.

அதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
விஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது.
மைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது.

இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.



5.யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா?!?!?!?! கெட்டதா!?!?!?!?

இரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் லேசாக தலை வலிப்பது போல் இருந்ததால் அலுவகத்துக்கு விடுப்பு சொல்லி விட்டு படுத்து இருந்தேன் ( அன்று நெறய வேலை இருந்ததால் என்று கூட சொல்லலாம்). நமக்குதான் விடுமுறை கிடைத்தால் உடல்நிலை சரியாகி விடுமே!!! காலை உணவை 11 மணிக்கு முடித்து, பதிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தேன்.

மிகவும் போர் அடிப்பதால், நண்பர்களுடன் அரட்டை அடித்தால் தேவலாம் போல இருந்தது, இல்லையென்றால் தூக்கம் வந்து விடுமே என்ற கவலை(!!!!!) வேறு.அன்னிக்கின்னு பாத்து, எல்லாருமே பிஸியாக இருந்தனர்.

எவனுக்கு ஃபோன் பண்ணாலும், "மச்சி, கொஞ்ச நேரம் கழிச்சு பண்றா, ஈவ்னிங் பேசுவோமே" னு பதில் வந்துச்சு. கடுப்பா இருந்ததால, சரி கொஞ்சம் தெரியாத முகங்களுடன் சாட் பண்ணுவோமேனு இந்த யாஹூ மெசஞ்சர்ல லாகின் பண்ணிட்டு தமிழ் நாட்டு ரூம்க்கு கனெக்ட் பண்ணேன் (சத்தியமா, அந்த ஜெனெரல் ரூம்லாம் கனெக்ட் பண்றது, அப்பதாங்க என்னோட முதல் தடவை,தனியா நண்பர்கள் கூட பேசி இருக்கேன் தனி chat room). எல்லாமே கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சுது.

எல்லா ரூம்லயும் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட ஆரம்பிச்சப்போ, ஒரு ரூம்ல கொஞ்சம், இல்லைங்க நெரயவே அசிங்கத்த பாத்தேன்.இப்போ மேட்டருக்கு வருவோம்( ஒரு வழியா இட்டானு வந்துட்டேன்).நான் என்டெர் ஆன உடனே சும்மா பொது மெசேஜ் தான் கொடுத்தேன். "நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்" னு தான் நான் எப்பவுமே தெரியாத இடத்துல ஸ்டார்ட் பண்ணுவேன்.

ஒரு பத்து நிமிஷத்துல ஒரு நாலஞ்சு தனி அழைப்பு வந்துடுச்சி."hi, how are you?""asl""xx m xxxxx"எல்லாம் சொல்லி வச்சா மாதிரி ஒரே கேள்விய கேட்டு குடைஞ்சாங்க.சரி, சாதரணமா தான பேசுராங்கனு நானும்,hi, my name is Tamil.I am looking for good friends to chat and spend my time xx male Chennai னு (ASLனு கேட்டதால தான்)reply பண்ணேன்.அதுவரைக்கும், எனக்கு ஒண்ணும் வித்தியாசமா தெரில.

அடுத்த reply எதிர்முனைல இருந்து வந்தது என்னை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது."I too want a friend to pass my time, xxx? xxx?"இந்த ரெண்டு xxx உம் சென்சார்டு வொர்ட்ஸ். சுருக்கமாகச் சொன்னால், ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு என்று சொல்லலாம்.எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

ஒருவர் மட்டும் அல்ல, அங்கு இருந்த பலபேர் அதற்கு தான் அழைப்பு விடுத்த படி இருந்தனர்.நான் கூறிய வணக்கத்தை பொருட்படுத்தாதவர்கள், மற்ற அழைப்புகளுக்கு தவறாமல் பதிலளித்த வண்ணம் இருந்தனர்.இதிலும், ஒரு சின்ன பையன், 17 male want to xxxx, any hard xxxx னு தொடர்ச்சியாக பொது இடத்தில் மெசேஜ் அனுப்பிய வண்ணம் இருந்தான்.

சரி, நமக்கு தெரியாத மாதிரி காட்டிக் கொண்டால் விட்டு விடுவார்கள் என்று நினைத்து, எனக்கு வந்த ஒரு சில அழைப்புகளுக்கு sorry, I don't know what are you speaking. bye னு reply பண்ணேன்.அப்பவும் ஒரு தளரா தமிழர்,xxx means .............. னுஒரு பெரிய லெக்சர ஸ்டார்ட் பண்ணார்.

"அய்யயோ! வேணாம் நமக்கு இந்த விளையாட்டு oh sorry! I am not like that. Bye னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.அதுக்கு அப்புறம் வர்ற மாதிரி இருந்த தூக்கமும் போய்டுச்சு.படுத்துக் கிட்டே யொசிச்சேன்.

வெளிநாட்டுல தான் இப்படி கலாச்சாரம் சொல்லித் தர ஆள் இல்லாம எல்லாரும் இப்பிடி ஆயிட்டாங்கனா, நம்ம நாட்டுல எங்க தப்புனு.அதிலும் அந்த 17 வயசுப் பையன் கொடுத்த மெசேஜ் எல்லாமே ஒரு பொண்ணு கூட கேட்க வெக்கப் படுவா.அவனுக்கு எங்க இருந்து இந்த ஆசை வந்துச்சு.

வீட்ல அவன கவனிக்க ஆள் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு இந்த மாதிரி தவறான வழிக்கு இட்டுச் சென்றது கண்டிப்பாக ஏதெனும் website or இந்த மாதிரி சாட்களுமே என்று நான் அடித்து சொல்லுவேன்.இது பற்றி நான் நண்பர்களிடம் கூறிய போது, இன்னும் பல தகவல்கள் வந்தன.

அவற்றில் சில chat with couple - ஒரு couple இன்னொரு couple பாத்துக்கிட்டே அனுபவிக்கறது.chat with cam - வீடியோ சாட், இது நல்ல தொழில் நுட்பமாகக் கருதினேன். இதுவும் இங்கு அழிவுக்கு பயன் படுத்தப்படுகிறது.xxx - ஆண் ஆண் உறவுக்கு அழைப்புxxx xxx - ஆண் ஆண் உறவு + வீடியோ இருந்தால் மட்டுமே தொடர்ச்சி.எல்லாவற்றிற்கும் மேலாக, நெருங்கிய உறவுகளுக்குள், குடும்பத்திற்குள் நடக்கும் காமம் பற்றி கொச்சையாக அரட்டை.இது 24 மணி நேரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று பின்குறிப்பு வேறு.

இதை யாராவது கேட்டால், "உனக்கென்ன, வேலையைப் பார்த்துக் கொண்டு போ!" என்று தான் பதில் வந்ததே ஒழிய, யாரும் கேட்பார் இல்லை.

என்னுடைய கவலை:வயதுவந்தவர்களுக்கு என்று தளங்களைப் பிரிப்பது போல் இந்த அரட்டை அரங்கத்தை பிரிக்க இயலாது, சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யஹூ ID இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நுழையலாம்.இதற்கு எந்த தடையும் இல்லை. அந்த இடத்தில் கொஞ்சம் நாகரிகம் கருதி, பொது இடத்தில் தனது இச்சையை வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இது போன்ற தவறான பழக்கம் கட்டுப்படுத்தப்படும்.

நம்மைப் போன்ற வயது வந்தவர்களுக்கு!!!!!!!!!!! எது தவறான பாதை, எது சரியான பாதை என்று முடிவெடுக்க கொஞ்சமாவது தெரியும், atleast அதிலிருந்து நம்மால் மீள முடியும்.ஆனால் சிறு வயது விடலைகளுக்கு இது புதிய பழக்கத்தை தோற்றுவிப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி விடும் அபாயம் உள்ளது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்கள் சகோதரரோ, சகோதரியோ நீங்கள் சாட் செய்வதைப் பார்த்து கொண்டு இருந்தால், உங்களுக்கு அது போல் பேசத் தோன்றுமா?பல விதமான கருத்துகளைப் பரப்பவும், தொலை தூரத்தில் பிரிந்து இருக்கும் உறவுகளை இணைக்கவும் பயன்படும் இந்த யாஹூ மெசஞ்சர் சேவை, இது போல் தவறான வழிக்குப் பயன்படுத்தக் கூடாது.

தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். படித்த, சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள பலரும் இந்த மாதிரி கூட்டத்தில் அடங்குவர் என்பது நண்பரின் தகவல்.சமுதாயத்தைத் திருத்த முன் வரவில்லையென்றாலும், அழிவுக்கு வழிவகுக்காதீர்!!!!! SOURCE tamilpaechublogspot.

க்ளிக் செய்து படிக்கவும்.
6.யார் வெற்றியாளர்.

1 comments:

ilayangudi may know July 3, 2009 at 2:30 PM  

ulaga alivin arampam
noogh(alai) kalathil intha anacharam nadandhu,allah(subh) kuttra vali anaivarayaum alithan.adhu pol nadakka thuva seivom..................
keep always our rsul words

by
ily taliban rules

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP