- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.-- அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
>> Wednesday, June 10, 2009
இளையான்குடியின் முக்கியஸ்தர்கள்.
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது.
பயோ டேட்டா
வம்சம் : வாஞ்சூர். தந்தை : வாஞ்சூர் முஹம்மது;
தாயார் : பாத்துமுத்து. பிறப்பு : 1914
கல்வி : பர்மா ரங்கூனில். பாசைகள்: தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, உருது, ஹிந்தி, குஜராத்தி, ஆங்கிலம், மலாய்
தொழில்: தோல் பொருள் தயாரித்தல், விவசாயம், மிளகாய் கமிசன் மண்டி. மின்சார நுனுக்க பொருட்கள், மின்சார சாதனங்கள், சிஙகப்பூரில் பிரிட்டிஷ் ரானூவத்தினர்க்கு சப்ளை கண்ட்ராக்டர்.
பதவிகள்: ஐ.ஏன்.பி. பள்ளிவாசல் டிரஸ்டி, தர்ம ஸ்தாபனங்களில், அரசாங்க ஆலோசணை குழுக்களில், கல்வி ஸ்தாபனங்களில் அங்கத்தினர்.
சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்களில் ஒருவர். கல்லூரியின் முதன் முதல் தாளாளர்.
மரணம்: 26.03.1987
அரசியல்: பர்மா ரங்கூனில் அல்லாமா கரீம் கனி அவர்களுடைய அமைப்புகளில் தொண்டூழியம் செய்தவர். இளையாங்குடியில் இந்திரா காங்கிரசை தோற்றுவித்து அதன் தலைவராக செயலாற்றி அன்னை இந்திரா காந்தியிடமிருந்து பாராட்டு பெற்றவர். இளையாங்குடிக்கு வருகை தரும் தலைவர்களுக்கு தன் வீட்டில் விருந்தளித்து உபசரித்தவர்
வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயர் எல்லா சமூகத்தினரிடையும் இளையாங்குடியில் மட்டுமன்றி சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் எதிரொலித்து வந்த ஒரு பெயராக இருந்து வந்தது.
சிவந்த மேனி, சதா சிரித்த அழகிய முகம், பேச ஆரம்பித்தால் ஒட்டு மொத்த சபையையே கவரும் நாவண்மை.. அஞ்சா நெஞ்சர். தேவை ஏற்பட்டால் சீறும் சிங்கம் போன்ற தன் கண் பார்வையினால் அடிக்காமலே அடக்கும் திறன். ஊர் மக்கள் அனைவரும் குறிப்பாக பெண்களும் கல்வியில் திறன் பெற வேண்டும் எனத்தாங்கொனா தாகம். கடுமையான அயராத உழைப்பாளி.
“வாருங்கள் வாஞ்ஜூர் பீர் முஹம்மதிடம் முடிவு கேட்போம்” என்று உள்ளூரிலும் சுற்று வட்டங்களிலும் எந்த சிக்கலான பிரச்ச்சினைகளிலும் நியாயமான நல்லதொரு முடிவை பெற அணுகப்பட்டவர்.
பெண்களிடம் சீதனம் வாங்குவதையும் சீதனம் கொடுப்பதையும் மிக கடுமையாக எதிர்த்ததுடன் நில்லாது தனது ஆறு ஆண் பிள்ளைகள், மூன்று பெண் பிள்ளைகள் திருமணங்களையும் அக்கொள்கைகளிலே நிறைவேற்றியவர்.
தன் பெண்களுக்கு சீதனம் கேட்டவர்களிடம் ' என் பெண் வேண்டுமானால் பெண்ணை கட்டிககொள்" பணம் வேண்டுமானால் பணம் தருகிரேன் பணத்தை கட்டிக்கொள்" என முகத்திலடித்தாற்போல் கூறியவர். அத்துடன் சீதனம் கொடுக்கபடும் , வாங்கப்படும் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளாது ஊரார் பலரின் வெறுப்புக்கஞ்சாது வாழ்ந்தவர்
நியாயத்தை நிலை நிறுத்த போராடும் பொழுது வரும் பகை, துன்பம், இழப்பு அவதூறு, உடன் இருந்தவர்கள்/இருப்பவர்களின் துரோகம் இவைகளை சிறிதும் சட்டை செய்யாமல் தாங்கிக்கொண்டு தனித்து தனி மரமாக கடைசி வரை போராடி வாகை சூடியவர்.
இக்கொள்கயினால் வெளிக்காட்டாமல் உள்ளுக்குள் அவர் மீது பகை வளர்த்து வந்தவர்கள் ஏராளம் ஏராளம்.
நிறைய தருவதாக வாக்களித்துவிட்டு இறுதியில் அறவே இல்லாமலோ அல்லாது குறைத்தே நிறைவேற்றும் பழக்கத்தை கைக்கொள்ளாது வாக்களித்தற்கு மேலாகவே எதையும் வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் நிறைவேற்றி கொடுப்பவர். கொடையாளி.
39 ஆண்டுகளுக்கு முன் இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வரவேண்டும் என்ற எண்ணம் ஊர் நல தொண்டர்களிடையே உருவாகிய காலத்தே அதை செயல் படுத்த பல வெளியூர் செல்வந்தர்களிடம் நம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் கூடி வராத நிலையில்,
அடுத்தவர்களின் முதுகில் சவாரி செய்யாதவராக, வெறும் நாற்காலி மாப்பிள்ளையாக இல்லாமல் இளையாங்குடியில் ஓர் கல்லூரி அமைத்திட வேண்டும் என்ற எண்ணத்திற்கு அச்சாணியாக நின்று அதை செயல் வீராராக பொருளும் உழைப்பையும் தந்து நிறைவேற்றிக் கொடுத்த மாமனிதர்.
அணுகப்பட்ட ஒருவரும் முன் வராத நிலையில் தானே தனித்து கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் மட்டுமே முன் வந்த பொழுது சில ஊர் பிரமுகர்கள் மறைமுகமாக இளையாங்குடி கல்லூரிக்கு " வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி " என்று பெயர் வைக்கலாம் என கருத்து தெரிவித்த பொழுது அதை தன்னடக்கத்துடன் மறுத்து விட்டவர்.
அவர் மட்டும் விரும்பியிருந்தால் “ஜாகிர் உசேன் கல்லூரி” என்றில்லாமல் “வாஞ்ஜூர் பீர் முஹம்மது கல்லூரி” என பெயரிடப்பட்டிருக்கும்
அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் சாகிர் உசேன் கல்லூரியை நிறுவ தானே சாகிர் உசேன் காலேஜுக்கு ஆரம்ப கட்டிடம் கட்ட, மெயின் ரோட்டின் முகப்பு இடத்தை 2 ஏக்கர் 78 கிரையம் வாங்கி, இனாமாக எழுதிக் கொடுத்து
அன்றைய மாநில கவர்னரை அழைத்து அடிக்கல் நாட்டி, தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து
1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் திறப்பு செய்து அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு அதனை கொண்டே இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,
அன்றைய மாநில கவர்னரை அழைத்து அடிக்கல் நாட்டி, தானே தன் சொந்த குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தை ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று முழுமையாக யாருடைய உதவியும்,பொருளும் இல்லாமல், தன் சொந்த பொருளிலும்,உழைப்பிலும் கட்டிக் கொடுத்து
1970 ஜூலை 5 ல் கண்ணியமிக்க காயிதே மில்லத் அல்ஹாஜ் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தலைமையில் திறப்பு செய்து அன்றைய கல்வி அமைச்சர் மாண்புமிகு இரா. நெடுஞ்செழியன் அவர்களைக் கொண்டு அதனை கொண்டே இளையாங்குடி சாகிர் உசேன் உசேன் கல்லூரி தொடங்கப்பட்டு,
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
இரா. நெடுஞ்செழியன் அவர்களால் “கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர்” ஒரு வாஞ்ஜூர் பீர் முஹம்மது போன்றவர்கள் இருந்தால் உலகில் கல்விக்கு பஞ்சமேயில்லை என புகழாரம் சூட்டப்பட்டு,
முதல் தாளாளராக அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தலைமையில் கல்லூரி நிர்வாகம் தொடங்கியது
அப்பொழுது சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த கேப்டன் அமீர் அலியை கல்லூரி முதல்வராகவும், மற்றும் பாதுஷா உஸ்மான், கமாலுதீன், ராஜ சேகரன் ஆகிய விரிவுரையாளர்களையும் கொண்ட திறமை மிக்க ஆசிரியர் குழுவை அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நியமித்து கல்லூரியை செயல்படுத்தினார்கள்.
நன்றி மிகுதியால் கல்லூரி முதல்வர் அமீர் அலி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் குடும்ப போட்டோவை தன் முதல்வர் அறையிலேயே தன் பதவிக்காலம் வரை மாட்டி வைத்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூலை 1 1970ல் Pre-University l Level ல் 173 மாணவர்களுடன் ஜனாப் அல்ஹாஜ் பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடத்தில் சாகிர் உசேன் கல்லூரி செயல் பட தொடங்கியது.
அன்று அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நம் இளையாங்குடியில் கல்விக்காக விதைத்த "விதை " எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் ஆழமாக வேறூன்றி வளர்ச்சி அடைந்து கொண்டே வருவதுடன் இன்றைய இளம் அறிவாளிகளை பல துறைகளிலும் உருவாக்கிக்கும் பணியை செவ்வனே செய்து கொண்டு வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
*****
சகோதரர் ஜனாப் ஆலம்
15 FEBRUARY 2011 ல்
ily.org இணையதளத்தில் இவ்வாறு தன் கருத்தை பதிப்பிருந்தார்.
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
*********
சகோதரர் ஜனாப் ஆலம்
15 FEBRUARY 2011 ல்
ily.org இணையதளத்தில் இவ்வாறு தன் கருத்தை பதிப்பிருந்தார்.
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
*********
கல்லூரி திறப்பு விழாவின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்திலும் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் உருவம் அகற்றப்பட்டு பதிலாக பிற நாற்காலி மாப்பிள்ளைகள் உருவப்படங்கள் இணைக்கப்பட்டு கல்லூரி மலர்களில் பிரசுரித்த அறிவு ஜீவிகள், அதை அறிந்தும் அறியாதவர்கள் செயல் பட்ட நிர்வாக செயல் வீரர்கள்!!!
இன்றுவரை திருத்துவதற்கு யாரும் திருந்தவில்லையா?
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று இதிலிருந்தே இளையாங்குடிக்கு அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது செய்ததெற்கெல்லாம் இளையாங்குடி செய்ததென்ன? செய்து வருவதென்ன? மீதியை நீங்களே விளங்கிக்கொள்ளுங்கள் .
யா அல்லாஹ் சகலத்தையும் பார்த்தும் ,கேட்டும், மறைவானவைகளை அறிந்தும் கொண்டிருப்பவனே. உன்னிடமே இதை விட்டு விடுகிறோம்.
*********
*********
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி தொடங்க திட்டமிடப்பட்டு அதற்கு இடம் கிட்டாமல் இருப்பதை இளையாங்குடி முஸ்லீம் கல்வி டிரஸ்டின் தலைவர் புதுக்குளத்தார் ஜனாப் இபுறாஹிம் அலி அவர்கள், பொருளாளர் ஜனாப் இபுறாஹிம்ஷா அம்பலம் அவர்கள் மூலமாக அறிந்து அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் நிதி உதவு அளித்ததுடன் பள்ளிக்காண கட்டிடம் கட்டி முடியும் வரை தன்னுடய சொந்த கட்டிடத்தை இலவசமாக பள்ளி நடத்திக் கொள்ள அளித்தார்கள்.
இளையாங்குடி பெண்கள் மேல் நிலைப்பள்ளி அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது க்கு சொந்தமான 65 சுல்தான் அலாவுதீன் தெருவிலுள்ள கட்டிடத்திலேயே தொடங்கப்பட்டது.
பின் அப்பள்ளி மறைந்த ஹாஜி T.K . ஹமீது சுல்தான் அவர்களின் தாயாரின் நினைவு கட்டிடத்துக்கு இடம் பெயர்ந்தது.
இளையாங்குடியில் 1914 ல் உதித்து, சுய தொழில்களை செய்து வந்தார் .
அப்பொழுதே பணமே குறி என்று இருக்காமல் பொது சேவையிலும் நாட்டமும் ஆர்வமும் உள்ளவராக இருந்தபடியால் அப்பொழுது ரங்கூனில் இருந்த “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு
அவருடைய இயக்கங்களில் தன்னுடைய ஒய்வு நேரங்களை பயன்படுத்திக் கொண்டு, “இனி வரும் காலங்களில் பர்மாவில் வெளி நாட்டவர்கள் யாவரும் துன்பத்திற்கே ஆளாவார்கள் ஆதலால் தென் கிழக்காசியா (சிங்கப்பூர் மலேயா) சென்று தொழில் செய்யுங்கள்” என்ற “அல்லாமா அறிஞர் கரீம் கனி” அவர்களின் கூற்றை மனதில் பதித்துக் கொண்டார்.
தோல் பை தயாரிக்கும் தொழில் இளையாங்குடியில் தொடங்கி அல்லாமா அறிஞர் கரீம் கனி அவர்கள் தென் கிழக்காசியாவுக்கு சென்று தொழில் செய் என்று கூறியிருந்தபடி 1939ல் இரண்டாம் உலகப் போருக்கு முன் சிஙகப்பூருக்கு வந்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் வேலையில் யுத்தம் மேகம் சூழ்ந்தபடியால்
பெங்களூரில் தொழில் தொடங்கி பின் சென்னையில் ஜூபிடர் லெதர் வொர்க்ஸ் ,7 முத்துமாரி செட்டி தெரு , மற்றும் 154 அங்கப்ப நாயக்கன் தெருவில் ஜூபிடர் லாட்ஜ், என்ற பயணியர் தங்கும் விடுதியையும் தொடங்கி வரும் காலத்தே மீண்டும் அறிஞர் கறீம் கனி அவர்களின் கூற்று படியே மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பி தோல் பை வியாபரத்தை PEER LITTLES என்ற பெயரில் தொடங்கி இறையவனின் அருளால் பெரும் செல்வந்தரானார்.
சிங்கப்பூரில் முதலில் சொந்த தொழில் ஆரம்பித்த, சிங்கப்பூரில் முதலில் குடும்பத்துடன் வசித்த இளையாங்குடியார் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களே என்பது குறிப்பிடத்தக்கது
சிங்கப்பூரில் 1954ல் பேன்ஸி ஸ்டோர் வியாபரத்தையும் தொடங்கி பின் அத்துடன் எலக்ட்ரிகல் வியாபாரத்தையும் இணைத்து விரிவாக்கி 1974 வரை பிரிட்டீஷ் முப்படை ராணுவத்தினர்க்கு எலக்ட்ரிகல் குட்ஸ் சப்ளை கண்ட்ராட்ராக.
V.M.PEER MOHAMED = “ YOU NAME IT WE GOT IT
என்ற சிறப்புடன் சிங்கப்பூரில் தொழில் செய்து ஆங்கிலேயர்களிடம் இங்கிலாந்து வரை V.M.PEER MOHAMED என்ற பெயரை எட்ட வைத்தவர்.
சிங்கப்பூரின் அதி உச்ச நீதி மன்றத்தில் தனக்கு நியாயம் கிடைக்காத ஒரு வழக்கை பிரிட்டனுக்கும் அனைத்து காமன்வெல்த் நாடுகளின் உச்ச நீதி மன்றங்களுக்கும் உச்சமான லண்டணில் உள்ள பிரீவி கவுன்சிலுக்கு (PRIVY COUNCIL) எடுத்து சென்று தனக்கு சார்பான தீர்ப்பு பெற்று சாதனை படைத்த ஒரே இளையாங்குடியர்.
பிள்ளைகளை தொழிலில் நன்கு பழக்கப்படுத்திவிட்டவராக 1962 க்கு இளையாங்குடியில் விவசாயத்தை கவனித்துக் கொண்டும், மிளகாய் கமிஷன் மண்டி நடத்திக் கொண்டும் ஊர் நலனில் முழு சிரத்தை எடுத்து செயலாற்றி வந்தார்.
இளையாங்குடியிலேயே விவசாயத்திற்கு வருமான வரி கட்டியவர்கள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மதுவும் , தூங்காலயன் சிக்கந்தர் அவர்களும் அண்ணாமலை அவர்களும் செட்டியார் தான்.
இராமநாதபுரம் மாவட்டத்திலேயே அரியாண்டிபுரத்தில் 1 ஏக்கருக்கு ஐ.ஆர்.8 சம்பை நெல் சாகுபடியை அதிகமாக உற்பத்தி செய்து காட்டி 1969 அரசாங்க கெஜட்டில் இடம் பெற்றவர்.
அரியாண்டிபுரத்தில் தனக்கு சொந்தமான 2.ஏக்கர் 70 சென்ட் நஞ்சை நிலத்தை அப்பகுதி தாழ்த்தப்ப்ட்ட ஹரிஜனங்களுக்கு அவர்கள் குடியிருப்புக்காக இனாமாக சாசனம் செய்து கொடுத்துவிட்டார்.
சிவகங்கை மாவட்டத்தில் இளையாங்குடி வட்டத்தில் மல்பெரி செடி வளர்த்து அதன் மூலம் பட்டுப்புழு வளர்த்து சென்னை அகில இந்திய வானெலியில் வயலும் வாழ்வும் நிகழ்ச்சியில் பேட்டி காணப்பெற்றவர்.
இளையாங்குடியில் 1971 ல் முதன் முதலாக இந்திரா காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து இந்திரா காந்தியிடமிருந்து கடித வாயிலாக அங்கீகாரம் பெற்றவர்.
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
ஒரே ஒரு ரூபாய் மட்டுமே ரொக்க இருப்பாக வைத்துக் கொண்டு ஐ.என்.பி நெசவு பட்டடை நிர்வாகம் இருந்த நிலையில் டிரஸ்டியாக பொறுப்பேற்று ,கடந்த கால அத்தனை ஆவணங்களையும் ஒழுங்குடுத்தி கடந்த கால அனைத்து ஊழல்களையும் பகிரங்கமாக்கி , பள்ளி சொத்துக்களை ஆண்டுக்கணக்காக மிக மிக குறைந்த வாடகையில் அனுபவித்துக்கொண்டு,
அவ்வாடகைகளையும் பல்லாண்டுகளாக பாக்கி வைத்துக் கொடாது வந்த அனைவர்கள் மீதும் பாரபட்சம் பாராது வழக்கு தொடர்ந்து அதன் விளைவாக ஏற்பட்ட அனைத்து பகைகளையும் பொருட்படுத்தாது , உச்ச கட்டமாக தன்னை கொலை செய்ய நள்ளிரவில் தன் வீட்டில் வந்த ஜமாஅத்தை சேர்ந்த கொலையாளிகளை தன்னந்தனியே விரட்டி அடித்து , வழக்குகள் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றதுடன்,
அனைத்து நிலுவைகளயும் வசூல் செய்து , வாடகைகளை உயர்த்தி பள்ளியின் வருமானத்தை , கையிருப்பை , நிதி நிலைமையை மிக மிக சிறப்பாக அமைத்தார்.
பள்ளி காம்பவுண்டு சுவரை இடித்துவிட்டு கடையையும் அதன் மேலே ரூம்களும் கட்டி பள்ளியின் வருமானத்தை பெருக்கினார்.
அவர் டிரஸ்டியாக செயல் பட்ட காலத்தே உரிமையுடன் தன்னுடைய சுய செல்வாக்கை பயன்படுத்தி கல்கத்தா தென்மலைக்கான் ஜனாப் அப்துல் ரஹீம் அவர்களை நெருங்கி " தென்மலைக்கான் மதுர கவி பாட்சா புலவர் அரபி மதரஸா" கட்டச்செய்தார்கள்.
மேலும் ஆண்கள் , பெண்கள் பயனடையக் கூடிய பல நல்ல திட்டங்களையும் முறையாக திட்டமிட்டு செயல் படுத்தினார்கள்.
நெசவு பட்டடை தொழுகை மேடை பள்ளியின் பூர்வீக சாசன அத்தாட்சிகளை கண்டுபிடித்ததோடல்லாமல் அவைகளை முறைபடுத்தி அரசாங்க அலுவகலங்களில் மறு உறுதிப்படுத்தி. சர்வேயர்களை அழைத்து வந்து பள்ளிவாசலின் நில அளவு எல்லைகளை தெள்ளத் தெளிவாக குறியீடுகள் செய்து பட்டா போட்டு சாசனத்தை அமைத்து வைத்து விட்டார்.
அவர் செய்த அச்சாதனையின் பலனாகத்தான் கோயில், தேவஸ்தானம், பஞ்சாயத்து போர்டு, அரசாங்க பொது நில நிர்வாகங்களின் எந்த விதமானதொரு சிறு பிரச்சினை,குறுக்கீடு இன்றி இப்பொழுது இன்றைய INP புதுப் பள்ளிவாசல் கட்டப்பட முடிந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.
கீழ முஸ்லீம் தெருவின் இறுதியில் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் தன் வயலில் இருந்த 2 பெரிய கிணறு மூலமாக மேல் தொட்டி கட்டி நாலாபுறமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும்படி செய்து பெண்கள் குளிக்க தனித்தனியாக அறைகள் கட்டிக் கொடுத்தது எல்லாம் அதை அனுபவித்த தாய்க் குலம் அறியும். இது அவர் ஊருக்கு செய்த பல பல காரியங்களில் ஒன்று
அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள் ஊருக்கு செய்த தான தர்ம காரியங்கள் அனைத்தையும் பட்டியலிடுவது என்பது அவர்கள் விரும்பாததொரு விசயம்.
அந்த நாளில் இறைவன் சன்னதியில் பதில் கூற வேண்டியிருக்குமே என்பதை மறந்து விட்டு இன்று இளையாங்குடியின் வரலாறு என்றும் மற்ற கல்விகூடங்கள், தர்ம ஸ்தாபனங்கள் வெளியிட்ட, வெளியிடும் பதிப்புகளில் உண்மை வரலாறுகளை மறைத்து அறிந்தும் அறியாதவர்கள் போல் எழுதி தங்களது கயமைத்தனத்தை வாந்தி எடுத்து வைத்திருப்பவர்கள், மேலும் சமூக ஸ்தாபனங்களில் எப்படி எப்படியோ தங்கள் பெயர்களை பொரித்துத்து விட்டோம் என இறுமாந்து பலர் சென்றடைந்து விட்டார்கள் சிலர் நம்மிடையே உலவி வருகின்றனர் என்பது வாசகர்கள் அறியாத ஒரு உண்மை..
இளையான்குடி கல்விச் சங்கத்திற்கு அவர் செய்த நிதி உதவி ஏராளம்.அவைகளெல்லாம் தஸ்தாவேஜுகளில் இருந்து "நல்லோர்களால்" அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது என்ற பெயர் நீக்கப்பட்டு நிம்மதி தேடிக்கொள்ளப்பட்டது..
செய்த நன்மை தீமைகளை அணுவும் குறையாது வல்ல இறையவனின் ஏட்டில் பதிக்கப்பட்டு விட்டது என்ற உண்மையை உணராத அறிவு ஜீவிகள் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களின் பெயரை எப்படி எப்படியெல்லாமோ அழிக்க முடியுமோ, மறைக்க முடியுமோ அதையெல்லாம் செவ்வனே செய்து,
முழுதும் மறைக்க முடியாத பொழுது அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது தொடங்கினார் அதை இன்னார் முடித்து நிறைவேற்றினார் என்று பிறர் பெயரை இணைத்தும்,
ஹாஜி வி.எம் பீர் முஹம்மது என்ற பெயரை ஹாஜி உ.ற.இ. பீர் முஹம்மது என்பது போல் பல வகைகளில் மாற்றி திருத்தியும்,
இன்றைய இளைய தலைமுறைகள் " வாஞ்ஜூர் பீர் முஹம்மது" என்ற சொல்லுக்கே விளக்கம் தெரியாமல் செய்து விட்டதாக ஆனந்தமடைந்தவர்களாக பலர் சென்றடைந்து விட்டார்கள் சிலர் உலவி வருகிறார்கள். அவர்கள் நெஞ்சே அவர்களை இம்மையில்லாவிட்டாலும் மறுமையில் ?
அவரவர்கள் செய்த நன்மை தீமைகளுக்குரிய பலனை அவரவர்களே அனுபவிக்கட்டும் என தன்னுடைய 73 ம் வயதில் 1987 ல் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்.
*********************************************
அல்ஹாஜ் மர்ஹூம் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்களையும் அவர்களது மகனார் V.M.P. முஹமதலி ஜின்னா ( வாஞ்ஜூர்- இளையாங்குடிகுரல் ஆசிரியர்) அவர்களை பற்றியும் ஊர் பிரமுகர்கள் சிலரின் கருத்துக்கள்.
படங்களின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கலாம்.
"உங்களுக்கு எதிரிகள் வேண்டுமா? ஏற்கெனவே இருக்கும் ஒரு நியாயமில்லாத விஷயத்தை மாற்ற முயற்சி செய்யுங்கள்.
தானாக எதிரிகள் தோன்றுவார்கள்'' என்று சொல்வார்கள்.
தானாக எதிரிகள் தோன்றுவார்கள்'' என்று சொல்வார்கள்.
எதிரிகள் இல்லாதவர்கள் எந்த மாற்றத்தையும் விரும்பாதவர்களாகத்தான் இருப்பார்கள்.
.
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
very nice to read this document,,,,,
thoongalayan sickander
he was one of income tax return to govt for form.this is indicate by ILAYANGUDI KURAL.COM.LOT OF THANKS TO PUBLISH NEWS OF MY GRAND FATHER.
BY ARABATH
SICKANDER T.A.J.
assalamu alaikum,
is there only one important pesonality ever existed in this huge town called ilayangudi.would be better if more light is thrown the same way into other eminent personalities as well.
வாசகர்களே,
இளையாங்குடி மற்றும் அதன் சுற்று வட்டங்களில் பிறந்து அவைகளின் நலத்திற்கும் வளத்திற்கும் தன் நலம் பாராது தாங்களின் உழைப்பையும் பொருளையும் தந்து
பின் சந்ததியினர் பயனடைய செய்துவிட்டு மறைந்த நல்லோர்களை நாம் நினைவு கூறி நாமும் அவர்களை போன்று என்ன என்ன செய்ய இயலும் என நாம் தூண்டப்பட ...
அப்பெரியோர்களின் வாழ்க்கை குறிப்புகளை எங்களுக்கு ilayangudikural2@gmail.com மூலமாக அனுப்பித்தருவதன் மூலம் நாங்கள் அவைகளை இத்தளத்தில் பிரசுரம் செய்ய அன்பு கூர்ந்து உதவுங்கள்.
*********************************
Assalamuallikum,
This kind of charity(கல்விகூடங்கள்)is accepted by Allah and it comes even after death.
சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்து வந்த கேப்டன் அமீர் அலி is my professor and I know him well and he has visited my brother`s (Nidur sayeed`) house.
Late (இளையாங்குடி)Ameer ali(Honkong) and Rahseed had been my collage and hostel mates
Please send your mail address too me.
With regards
nidrali@gmail.com
நல்ல கட்டுரை .
realy good man
realy good
Post a Comment