என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

'யார் டாக்டர்?' இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும்!!!

>> Monday, June 8, 2009

'யார் டாக்டர்?' 'யார் டாக்டர்?'

'யார் டாக்டர்?' 'யார் டாக்டர்?'

'யார் டாக்டர்?'

இந்தக் கேள்வி மிக ஆச்சர்யமானதாகவும், தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக வேண்டியதாகவும் இருக்கிற ஒரு கேள்வி.


'யார் டாக்டர்?' என்று கேட்டால், நாம் ஒவ்வொருவரும் மிகச் சுலபமாக, நமக்கு ஊசி போடுகிற, மருந்து கொடுக்கிற டாக்டரைத்தான் சொல்வோம்.


இப்படி சிகிச்சை கொடுக்கிறவர்களை டாக்டர் என்று அழைத்தாலும் இந்தப் பட்டத்தை போட்டுக் கொள்கிறவர்கள் இப்போது பல துறைகளிலும் அதிகமாகி 'டாக்டர்' என்ற சொல் படு குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறது..டாக்டர் என்ற சொல் அல்ல பட்டம் இன்று பல்வேறு நபர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் வருகிறவர்கள் ஆய்வாளர்கள். இவர்கள் தமிழ், பொருளாதாரம், கணக்கு, கச்சேரி என்று ஒவ்வொரு துறையிலும் ஒரு தலைப்பை எடுத்க்துகொண்டு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து அதற்காக டாக்டரேட் பிஎச்டி என்கிற நிலையைப் பெறுகிறவர்கள்.

இது அந்தத் துறையின் ஒரு தலைப்பில் நுட்பமாக கவனித்து அதில் நிபுணத்வம் அடைந்துவிட்டவர் என்று பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்படுகிற நிலை.

இதற்கு 'முனைவர்' என்கிற அழகான தமிழ்ச்சொல் கொடுக்கப்பட்டும் இந்த முனைவர்கள் தமது பெயருக்கு முன்னால் இதைப் போட்டுக்கொள்ள விரும்புவதில்ல. டாக்டர் என்றே பட்டம் சூட்டிக்கொண்டு மகிழ்கிறார்கள்.

டாக்டர் என்ற பட்டத்தை மலினப்படுத்தி தமிழ்ச் சூழலில் உலவவிட்ட பெருமை இந்த முனைவர்களுக்கு உண்டு. இது தேவையில்லாமல் மக்களைக் குழப்புகிற வேலை என்பதை அரசாங்கமும் உணருவதில்ல.

'நெடுநல்வாடயில் நரி' என்று ஒரு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துவிட்டு பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொள்கிற தேவை என்ன இருக்கிற என்பது தெரியவில்ல?

''சார்... டாக்டர்னு சொல்றீங்க... அப்பாவுக்கு திடீர்னு நெஞ்சுவலி... கொஞ்சம் வந்து பாருங்க...'' என்று நடு ராத்திரியில் பக்கத்து வீட்டுக்காரர் கதவைத் தட்டும்போதான் ''ஹி... ஹி...'' என்று தனது நரிக்கதையைச் சொல்வார்.

இன்று இப்படி பிஎச்டி ஆய்வு செய் கட்டுரை சமர்ப்பிக்கிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். தொடர்ந்து இப்படி கட்டுரை சமர்ப்பித்து டாக்டர் ஆகி, அதைக் கேட்டுபார்த்து ஒவ்வொருவரும் குழம்பவேண்டுமா? என்பதை அரசு யோசிக்கவேண்டும்.

திட்டவட்டமாக ஆய்வுக்கட்டுரைகள் மூலம் பிஎச்டி பட்டம் அடைகிறவர்கள் 'முனைவர்' என்ற சொல்லத்தான் பயன்படுத்த வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அடுத்து வருவது பல்கலக்கழகங்கள் தருகிற டாக்டர் பட்டம். ஒரு துறையில் மேன்மை நிறந்த சாதனைகளைச் செய்தவர், கல்விக் கூடங்களுக்குச் செல்லாதவராக இருக்கலாம். ஆனால் அங்கு செல்லாமலே ஒரு துறைக்கு அளப்பரிய செயல்களைச் செய்திருப்பார்.

அந்தத் துறையில் படித்தவர்களைவிட, படிக்காத அந்த நபரால் அந்தத் துறை பெரும் பயனை அடைந்திருக்கும். அந்தத் துறையில் நிபுணத்துவம் அடைந்தவருக்கு டாக்டரேட் தரவேண்டியது பல்கலக்கழகத்தின் கடமை.

கல்வி கற்காதவர் என்றாலும் அவர் அந்தத் துறையில் நிபுணத்துவம் அடைந்தவர். அந்தத் துறை அவரால் கௌரவம் பெற்றிருக்கிறது என்று பல்கலைக்கழகம் நம்பும்போது அவரை அழைத்து 'கௌரவ' பட்டம் கொடுக்கிறது.

இதன்மூலம் கல்வி பெற்று நிபுணத்துவம் அடைந்தவர்களோடு, கல்வி பெறாமலேயே நிபுணத்துவம் அடைந்த உங்களை, உங்களுக்கு கௌரவ பட்டம் தந்து இந்தப் பல்கலக்கழகம் பெருமைப்படுகிறது என்பதுதான் இதன் பொருள். அதற்காக அதைப் பெயரோடு சேர்த்துக்கொண்டு போகும் இடம் எல்லாம் சொல்வது சிறப்பானது அல்ல.

பத்மஸ்ரீ பட்டத்தை பெயருக்கு முன்னால் போட்டுக்கொள்வதோ, அழைப்பிதழிலோ, போஸ்டர்களிலோ பயன்படுத்தக்கூடாது என்கிற விதி இருந்தும் யாரும் பின்பற்றுவதில்லை.

அதைப் போலவே இருக்கும் இந்த கௌரவ டாக்டர் பட்டங்களும் பெயருக்கு முன்பாக டாக்டர் என்று போட்டுக்கொள்ள முடியாதவை. பெரும்பாலும் இந்தப் பட்டங்களச் சுமந்து நிற்கிறவர்கள் பெரிய பெரிய பொறுப்பில் இருக்கிற அரசியல்வாதிகள். அவர்களிடம் போய் யார் சொல்வது?

அடுத்து வருகிறவர்கள் டாக்டர் படிப்பை படித்து முடித்து, ஆனால் மருத்துவத் தொழிலைச் செய்யாமல் வேறு வேலைக்குச் சென்றுவிட்டவர்கள். உதாரணத்திற்கு நடித்துக்கொண்டிருக்கும் டாக்டர் ராஜசேகர். இவர் படித்த டாக்டர் படிப்புதான். ஆனால் வேலை பார்க்கும் துறை சினிமா. நடிக்கிற வேலை தனது என்று தேர்ந்தெடுத்துக் கொண்டுவிட்டவர். ஆனால் டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுகக்கொள்கிறார்.

இது சரியா என்று யோசிக்கும்போது, சரியில்லை என்றே தோன்றுகிறது. படிப்பு மருத்துவம்தான் என்றாலும் அது வெறும் பட்டம் அல்ல. மருத்துவத் தொழிலைச் செய்கிறவருக்கான அடமொழி. மருத்துவத் தொழிலைச் செய்யாத ஒருவர் ஏன் டாக்டர் என்ற அடைமொழியைத் தேவையில்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்?

அடுத்து வருகிறவர்கள் ஹோமியோபதி, சித்தா, யுனானி போன்ற மருத்துவத் துறையில் பட்டம் பெற்றவர்கள். இவர்கள் எப்படி அழைக்கப்பட வேண்டும்? இந்தப் பெயர்களில்தான்இன்றக்கு பல போலி டாக்டர்கள் தமிழகத்தில் ப்ராக்டிஸ் செய்கிறார்கள். ஆறு மாதம் தபால் வழியில் படித்தால் சில சித்தா, யுனானி விஷயங்களில் டாக்டர் பட்டம் தருகிறார்கள்.

இது மிக மிக மோசமான அபாயகரமான விஷயம். இவர்கள் மக்களை ஏமாற்ற வைத்திருக்கிற ஒரே சொல் 'டாக்டர்' என்பதுதான். இதனைத் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இவர்கள் டாக்டர் என்று போட்டுக்கொள்வதைவிட ஹோமியோபதி மருத்துவர், சித்த மருத்துவர், யுனானி மருத்துவர் என்று தங்கள் பெயருக்கு கீழே எழுதிக் கொள்ளவேண்டும்.

இவர்களில்தான் நிறைய போலிகள் கலந்திருப்பதால் இவர்கள் ஒவ்வொருவரும் எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பதை கட்டாயம் தங்கள் பெயருக்குக் கீழே ப்ராக்டிஸ் செய்கிற இடங்களில் எழுதி வைக்கவேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும். அப்போதான் மக்களுக்கு அவர் சிறந்த ஒரு இடத்தில் நல்ல பயிற்சி பெற்று வந்தவரா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஏன் இவர்கள் டாக்டர் என்று போட்டுக்கொள்ளக்கூடாது? இவர்களும் சிகிச்சைதானே தருகிறார்கள்? என்று கேட்கலாம். சிகிச்சை பல விதங்களில் உங்களுக்குக் கிடைக்கலாம். அதற்காக சிகிச்சை தருகிற எல்லோரும் டாக்டர் அல்ல. பல கிருத்துவ ஜெபக் கூட்டங்களில் பல மனிதர்களுடய நோய்கள் தீர்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது. அவர்களும் நோயைத் தீர்க்கிறார்கள்தானே? அவர்களை ஏன் டாக்டர் என்று சொல்வதில்லை?

பல ஊர்களில் பேய் ஓட்டுகிறவர்கள் இருக்கிறார்கள். இவர் பேய் ஓட்டித்தான் எனக்கு சரியாப் போச்சு என்று சொல்கிற நபர்கள் இருக்கிறார்கள். அதற்காக அவரை ஏன் நீங்கள் டாக்டர் என்று சொல்வதில்லை?

சிசிச்சயை பலர் தரலாம். ஆனால் சிகிச்சை தருகிற எல்லோரும் டாக்டர் அல்ல.முறையான மருத்துவப் படிப்பு என்பது இப்போதைக்கு எண்பது சதவிகிதம் பேரால் நம்பப்படுகிற அலோபதி மருத்துவம்தான். அதைப் படித்து பயிற்சி செய்கிறவர்களே 'டாக்டர்' என்கிற அடைமொழிக்கு_பட்டத்துக்கு தகுதி உடையவர்கள். சித்தா, யுனானி, அக்குபஞ்சர் உட்பட மற்றவர்கள் நேரடியாக தாங்கள் எந்தத்துறை மருத்துவர் என்பதை போட்டுக்கொள்ளலாமே தவிர 'டாக்டர்' என்ற முன் அடைமொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும்.

ஏன் இந்த டாக்டர் என்ற சொல்லுக்கு இவ்வளவு எதிர்க்கேள்விகள் என்று நீங்கள் கேட்கலாம்.

தமிழகத்தின் சூழல் அப்படி இருக்கிறது. இங்கு 'லா' படிக்காத ஒருவர் டூப்ளிகேட் வக்கீலாகி கோர்ட்டுக்குச் சென்று வாதாட முடியாது. இன்ஜினீயரிங் படிக்காத ஒருவர் டூப்ளிகேட்டாக கட்டடம் கட்ட முடியாது.

ஆனால் எதுவுமே படிக்காத ஒருவர் டாக்டராக ஆகி நோயாளிகளைக் கவனிக்க முடியும். ஏகப்பட்ட போலி டாக்டர்கள் இருக்கிறார்கள். மக்களை குழப்பி, மயக்கி, ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை ஏமாறச் செய்வது இந்த 'டாக்டர்' என்ற சொல்தான். இதைப் பயன்படுத்கிறவர்கள் யார் என்பத அரசு கடுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு பல நல்ல விஷயங்கள் நடக்க வாய்ப்பு அதிகரிக்கிறது.

பல சித்தா, ஹோமியோபதி டாக்டர்கள் அலோபதி மருத்துவர்கள் பயன்படுத்கிற ஸ்டெத்தாஸ் கோப்பை பயன்படுத்துகிறார்கள். இது கடுமையாக கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அந்தக் கருவியைப் பயன்படுத்தி அவர்களால் இம்மி அளவு கூட ஒரு பிரச்னையைப் புரிந்கொள்ள முடியாது என்று தெரிந்தும் தேவையில்லாமல் மக்களைக் குழப்புகிற, ஏமாற்றுகிற வேலையில் ஈடுபடுகிறார்கள்.

இதைப் போலவேதான் 'டாக்டர்' என்கிற அடைமொழியும்.

மூளை அறுவ சிகிச்சையில் தேர்ச்சி பெற்ற நியுரோ சர்ஜனும் டாக்டர், தபால் மூலம் ஆர்.ஐ.எம்.பி.படிக்கிற (அதுவும் ஆறு மாதம் பயிற்சி?) ஒருவரும் டாக்டர்.

இந்த இருவரும் பக்கத்து பக்கத்து வீடுகளில் 'டாக்டர்' என்று போட்டுக்கொண்டு இந்த தமிழ்நாட்டில் ப்ராக்டிஸ் செய்யமுடியும். இதைவிட அபத்தம், மக்களை ஏமாற்றுகிற அரக்கத்தனம் வேறு எதுவும் இல்லை. இந்த இருவரும் டாக்டர் என்ற ஒரே சொல்லால் அழைக்கப்படுவதை அரசாங்கம் குரூரமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

டாக்டர் என்கிற ஒரே ஒரு சொல் சமநிலையில் இல்லாத இந்த இருவரயும் சமம் போல பாவிக்க வைக்கிறது. மேலே சொன்ன யார் டாக்டர்? என்ற கேள்வியை அரசாங்கமும், மக்களும் ஒருமுறை திரும்பக் கேட்டுக்கொள்ள வேண்டும்.

''நான் 1977களில் பிரான்சில் சில ஆராய்ச்சி வேலை நிமித்தமாக தங்க நேர்ந்தது. தங்கிய வீட்டின் கதவில் என் பெயரை டாக்டர் க.ப. அறவாணன் என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன்.ஒரு முறை பக்கத்து குடித்தனக்காரர்கள் ஒரு ஆள என் வீட்டுக்கு கூட்டி வந்தார்கள்.

தூக்கிவரப்பட்ட ஆளுக்கு திடீரென சுகவீனம் ஏற்பட்டு விட்டதாகவும் அதற்கு உடனடியாக ஏதாவது சிகிச்சை செய்யும்படியும் என்னக் கேட்டுக் கொண்டார்கள்.அப்போதான் விளங்கியது, நான் என் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்ட தப்பு. அன்றிலிருந்து என் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று எழுவதை நிறுத்திக் கொண்டேன்.

ஆனால் இன்னும் பலர் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டு மக்களை குழப்புகிறார்கள்.

பிஎச்டி (PHD) படித்தவர்கள் எல்லாம் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர் என்று போட்டுக்கொள்கிறார்கள்.

பிஎச்டி என்றால் டாக்டரேட் (doctorate of phiLosophy) ஆஃப் ஃபிலோசஃபி என்று அர்த்தம்.

டாக்டரேட் என்ற சொல்லின் முதல் எழுத்தான டி_ஐயும் இடையில் வரும் ஆர்_ஐயும் சேர்த்தான் Dr என்று சுருக்கி, டாக்டர் என்று போட்டுக் கொள்கிறோம் என்று இந்த மெத்தப் படித்த பிஎச்டி ஆய்வாளர்கள் நியாயம் கற்பிக்கின்றனர்.

மேற்கு நாடுகளில் எல்லா சொற்களையும் சுருக்கி எழுவதில்லை. எதைச் சுருக்க வேண்டும், எதை விரித்து எழுத வேண்டும் என்ற இலக்கண அக்கறை அவர்களுக்கு உண்டு.

வெளிநாட்டவர்கள் போல்தான் சுருக்கி எழுகிறோம் என்று இங்குள்ளவர்கள் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள்.

பிஎச்டி_ஐ யாரும் Dr என்று சுருக்கி மேலை நாடுகளில் எழுதிக் கொள்வதில்லை.

நம் தமிழ் கலாச்சாரத்தில் கூட 1950களுக்கு முன்பு வரை பிஎச்டிக்கு நல்ல தமிழ்ப் பெயர் இருந்தது.

அவர்களுக்கு பண்டாரம் என்ற பெயர் இருந்தது. பண்டாரம் என்ற வார்த்தை பண்டம், பணியாரம் என்று இருப்பதாக நினைத்த சில பண்டாரங்கள் அந்த பண்டாரம் என்ற வார்த்தையை உபயோகிப்பதை நிறுத்திக் கொண்டனர்.

பிறகு இலங்கக்காரர்கள் பிஎச்டி என்ற வார்த்தைக்கு நல்லதொரு தமிழ்ப் பெயரை இன்றும் உபயோகித்து வருகின்றனர். அதாவது கலாநிதி என்றழைக்கின்றனர்.

இதையும் நம் தமிழ்நாட்டு பி.எச்டி பண்டாரங்கள் உபயோகிப்பதில்லை. கலாநிதியில் என்ன பணியாரத்தைக் கண்டார்களோ தெரியவில்லை.

பிறகு நம் தமிழ் பிஎச்டிகள் முனைவர் என்ற பெயரைக் கண்டுபிடித்தனர்.

இதையும் உபயோகிப்பதில்லை. தமிழ்ப் பற்றுடையவர்கள் சிலர் முனைவர் ராமநாதன், முனைவர் மகாலிங்கம் என்று போட்டுக்கொள்கிறார்கள்.

நிஜத்தில் இந்த முனைவர் பட்டத்தை பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதே சிறப்பானதாக இருக்கும்.

பல்கலக்கழகங்கள் சில பெரிய மனிதர்களுக்கு கொடுக்கும் டாக்டர் பட்டங்கள அவர்கள் ஏதோ மருத்துவம் படித்த மருத்துவர்கள் மாதிரி தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்கிறார்கள்.

பல்கலைக்கழகங்கள் கொடுக்கும் டாக்டர் பட்டத்துக்கு டி.லிட் (D.Litt) டி.எஸ்ஸி (DSC) அதாவது இலக்கியத்துக்கான டாக்டர், விஞ்ஞானத்துக்கான டாக்டர் என்றுதான் அர்த்தம்.

இந்தப் பட்டங்களைப் பெயருக்கு முன்னால் போடுவது சரியல்ல.

வெளிநாடுகளில் பிஎச்டி படித்தவர்கள், தங்கள் பெயருக்கு பின்னால்கூட தாங்கள் படித்த படிப்பின் சுருக்கத்தைத்தான் இட்டுக் கொள்கிறார்கள்.

உதாரணமாக ஸ்டுவர்ட், பிஎச்டி இன் பயோசயின்ஸ், க்ளார்க்_பிஎச்டி இன் அக்ரிகல்ச்சர் என்று தான் போட்டுக் கொள்கிறார்கள்.

எல்லோரும் டாக்டர் என்று போட்டால் நாடு எப்படி குழப்பமடையும் என்று யோசித்துப் பாருங்கள்?'' என்று தன் பேச்சை முடித்தார்.டாக்டர்.கே.பிரகாசம்

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., எம்.டி., மற்றும் ஹோமியோபதி, ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்றவற்றைப் படித்து முடித்தவர்கள்தான் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு போட்டுக்கணும்.

சில நிறுவனங்கள் சில நபர்களுக்கு மருத்துவ படிப்பு படிக்காதவர்களுக்கெல்லாம் டாக்டர் பட்டங்கள் கொடுக்கிறது.

ஒரு கன்வன்ஷன் நியதி நிமித்தம் இந்தப் பட்டங்களை கொடுக்கிறார்கள். அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதற்காக அந்தப் பட்டங்களை வாங்கும் நபர்கள் எல்லா இடங்களிலும் தங்கள் பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு எழுதிக்கொண்டு வலம் வருவது ஒரு மரியாதையில்லாத செயலாகும்.

நிறைய நபர்களுக்கு மாலை போடுகிறோம். சால்வை போத்துகிறோம். ஆனால் அந்த மாலை, சால்வையுடன் எப்போதும் ரோட்டில் வலம் வருவது பைத்தியக்காரத் தனத்தைத்தான் காட்டுகிறது.

அதுபோல்தான் ஒரு மரியாதைக்காக கௌரவத்துக்காக கொடுக்கப்படும் டாக்டர் பட்டத்தை எப்போதும் தோளில் சுமந்து திரியும் செயலும் ஆகும்.

பி.எச்.டி. எனும் படிப்புக்கு அர்த்தம் டாக்டரேட் இன் ஃபிலாசஃபி ஆகும்.

இந்தப் படிப்பு முடித்தவர்கள் தங்கள் பெயருக்கு பின்னால் தாங்கள் எந்தத் துறையில் டாக்டரேட் வாங்கியிருக்கிறோம் என்று போடலாமே தவிர பெயருக்கு முன்னால் டாக்டர்ன்னு போடுவது தவறாகும்.

டாக்டரேட் என்றால் தமிழில் முனைவர் என்று பொருள்படும். முனைவர் இராமநாதன் என்று தங்கள் பெயரைப் போடலாம்.

நமது ஜனாதிபதி என்பவர் விஞ்ஞானியே (Scientist) தவிர டாக்டர் அல்ல. அவரையும் டாக்டர் அப்துல் கலாம் என்றே பலர் அழைக்கிறார்கள். இது அப்துல் கலாமால் நிகழ்ந்ததா பொதுமக்களால் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை.

அரசியல் சாசனத்தில் யார் டாக்டர்ன்னு போடலாம் என்றெல்லாம் வரையறை இல்லை.

நிறுவனங்கள், மருத்துவ படிப்பு படிக்காதவர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதும், அதை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டு வலம் வருவதையும் தண்டிப்பதற்கான சட்டங்கள் நம்மிடையே இல்லை.

ஆனால் இனிதான் இதுபற்றி யோசிக்கவேண்டும்.

மருத்துவம் படித்த டாக்டர்களே இப்படிப்பட்ட மரியாதையில்லாத செயலைப் பார்த்து கண்டுகொள்ளாமல் இருப்பது டாக்டர்களின் பொதுவான அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

பூனைக்கு யாராவது மணி கட்டத்தானே வேண்டும்.பட்டங்கள் கொடுப்பவர்களுக்கு பெரிய மனசுதான்.

ஆனால் அதை வாங்கி விக்கிரமாதித்தன் போல் சுமப்பவர்களின் மனசு எவ்வளவு சின்னதாக இருக்கு பாருங்கள்!

நுகர்வோர் உரிமைக்காக பல காலமாக போராடி வருபவர் தேசிகன். அவரிடம் டாக்டர் பட்டம் குறித்து கேட்க,

சென்னயில் மட்டும் இப்போதைக்கு 1500 போலி டாக்டர்கள் இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் மீது இந்திய மேஜிக்கல் ரெமடீஸ் ப்ராக்டீஸ் ஆக்ட் கிரிமினல் வழக்குகளப் போடலாம். ஆனால், இவரது இப்படிப்பட்ட போலியான டாக்டர்களின் சிகிச்சைக்கு உட்படும் ஒரு நோயாளி, அந்தச் சிகிச்சையால் பாதிப்பு அடையும் போதுதான் அந்த டாக்டர் போலி டாக்டர் என்று தெரிய வருகிறது. பிறகே போலி டாக்டர்களை போலீஸ்காரர்கள் கைது செய்கிறார்கள்.

சர்க்கரை நோயை குணப்படுத்துகிறேன். கான்சரை கீரையில் குணப்படுத்துகிறேன் என்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கும் டாக்டர்கள் மேல் நான் வழக்குத் தொடுக்க உள்ளேன்.

மனித உடற்கூறுகளின் செயற்பாடுகளைக் கற்றுக் கொள்கிறவர்களெல்லாம் கூட டாக்டர்கள் என்று போட்டுக் கொள்வது அறிவற்ற தன்மையே.அரசாங்க அனுமதி இல்லாத நிறுவனங்களில் 5 வருடத்துக்கும் குறைவாக படித்தவர்களெல்லாம் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வது சட்டப்படி குற்றமாகும்.

6 மாதம் அக்குபஞ்சர் கோர்ஸ் படித்தவர்கள்கூட டாக்டர் என்று போட்டுக் கொள்கிறார்கள்.

இவர்கள் ட்ரெய்னர் என்று ஓரளவு போட்டுக் கொள்ளலாம்.ஒவ்வொரு டாக்டரும் அவர் டாக்டர் என்பதற்கான சர்ட்டிஃபிகேட், அரசு ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் உண்டு.

ஒரு டாக்டர் பற்றி சந்தேகம் உள்ளவர்கள் அவரது ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் குறித்த சான்றிதழை பார்வயிட அனுமதி கோர வேண்டும்.மந்திரத்தால் மாங்காய் பறிக்கலாம் என்று சொல்லும் டாக்டர்களை மக்கள் கூண்டிலேற்ற வேண்டும்.

''தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில், தலைவர்.நம் நாட்டில் யார் யாரெல்லாமோ டாக்டர்கள் என்று பெயருக்கு முன்னால் எழுதிக் கொள்கிறார்கள்.

Ph.d படித்தவர்களுக்கு முனைவர் என்ற அழகான தமிழ்ப் பெயர் உண்டு. அதனைப் பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்களாகவே இருக்கிறார்கள்.

அப்துல்கலாம், சோனியா காந்தி, கருணாநிதி, ஜெயலலிதா, கமல்ஹாசன் போன்றவர்களையும் அவ்வாறே நடைமுறையில் குறிப்பிடுகிறார்கள்.

இதனைத் தவறு என்று சொல்வதை விட, டாக்டர்கள் என்பதற்குப் பதில் மாற்றுப் பெயர்களை வைத்துக் கொண்டால் சிறப்பானது.

தமிழில் முனைவர் என்ற வார்த்தை உள்ள மாதிரி, அவரவர் தாய்மொழிகளில் உள்ள வார்த்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அதற்கு மாநில அரசுதான் முயற்சி செய் சட்டம் கொண்டு வர வேண்டும். யாராவது நான் போலீஸ்காரர் என்றோ பிரதமர் என்றோ எழுதிக் கொள்ள முடியுமா?

ஆனால் டாக்டர் என்ற பெயரைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு உயர்நீதிமன்ற உத்தரவில், ''மருத்துவர் படிப்பு படித்து, மாநில கவுன்சிலில் பதிவு செய்து அங்கீகரிக்கபட்டவர்கள் மட்டுமே மருத்துவர்கள்' என்று கூறியிருக்கிறது.

ஒருஅவசரமான சூழ்நிலயில் பி.எச்.டி. பயின்றவர்களால், நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க முடியுமா?


கட்டுரை----'குமுதம் இதழில் "ரஞ்சித். NANDRI : KUMUDAM.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP