என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

புதுக் கம்ப்யூட்டரா! படியுங்கள் கீழே.

>> Thursday, June 4, 2009

புதியதாக டெஸ்க் டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரை உங்களுக்கென வாங்கியுள்ளீர்களா! பாராட்டுக்கள். அந்த கம்ப்யூட்டர் உங்களுக்கு எந்த வேலைக்கு வேண்டுமானாலும் பயன்படலாம். வீட்டில் பொழுது போக்க, மல்ட்டி மீடியா பார்த்து ரசிக்க, குழந்தைகள் விளையாட, சிறிய அலுவலகங்களில் பயன்படுத்த, சிறிய வர்த்தக காரியங்களுக்கு பயன்படுத்த என நோக்கம் எது வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் சற்று தாமதியுங்கள்.


உடனே கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் தொடர்பு கொண்டு உங்கள் நண்பர்களுக்கெல்லாம் நீங்கள் கம்ப்யூட்டர் வாங்கிய செய்தியை இமெயிலாக அனுப்ப முயற்சிக்க வேண்டும். அல்லது உங்களுக்குப் பிடித்தமான பாடல்களை அல்லது ஆடல் காட்சிகளை உடனே இயக்கி ரசிக்க வேண்டாம். அந்த கம்ப்யூட்டரில் பாதுகாப்பாக இயங்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். அவை எவை என இங்கு பார்க்கலாம்.

1.எமர்ஜென்ஸி டிஸ்க் தயாரியுங்கள்: சில கம்ப்யூட்டர்களுடன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை சிக்கலான நேரங்களில் மீண்டும் பதிந்திட ஓ.எஸ். உள்ள சிடி அல்லது டிவிடியினை வழங்கி இருப்பார்கள். சில நிறுவனங்கள் ரெகவரி சிடி என ஒன்றை வழங்குவார்கள். ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போனால் இந்த ரெகவரி சிடியை இயக்கி கரப்ட் ஆன பைல்களை சரி செய்திடலாம். இது போன்ற சிடிக்கள் கொடுக்கப்பட்டால் அவற்றைப் பயன்படுத்தி புதிய கம்ப்யூட்டரில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அமைத்தவுடன் பத்திரமாக வைத்திட வேண்டும்.

அதனை எங்கு பத்திரமாக வைத்துள்ளீர்கள் என்பதனையும் குறித்து வைக்க வேண்டும். ஒரு சில நிறுவனங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்தே தரப்படுகிறது என்று கூறி அதற்கான விலையையும் சேர்த்தே நம்மிடம் வாங்கி விடுவார்கள். ஆனால் லைசன்ஸ் கீ என்று சொல்லி ஒரு பேப்பர் உரிமை கொடுப்பார்கள். சில நிறுவனங்களோ சிபியு கேபினட்டின் பின்புறம் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அதுதான் ஓ.எஸ். லைசன்ஸ் என கூறிவிட்டுச் சென்றுவிடுவார்கள்.

இப்படி ஒன்றும் உங்களிடம் தரப்படவில்லை என்றால் உடனே சிஸ்டத்துடன் வந்துள்ள மேனுவல் எனப்படும் குறிப்பு நூலைப் படித்து எப்படி எமர்ஜென்சி ஓ.எஸ். சி.டி தயாரிப்பது என அறிந்து அதில் குறிப்பிட்டுள்ள வழிகளைப் பின்பற்றி ஒரு எமர்ஜென்ஸி ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிடி தயரித்துக் கொள்ளுங்கள். ஒன்றுக்கு இரண்டாகத் தயாரித்து வைத்துக் கொள்வதும் நல்லது.

2. பாதுகாப்பு சாப்வேர் இன்ஸ்டால் செய்க: கம்ப்யூட்டரை இன்டர்நெட்டுடன் இணைக்கும் முன் அதில் செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை இன்ஸ்டால் செய்திட வேண்டும். நன்றாகச் செயல்படக் கூடிய பயர்வால் மற்றும் ஆண்டி வைரஸ் தொகுப்பு கட்டாயம் பதியப்பட வேண்டும். இவை இல்லாமல் இன்டர்நெட்டில் உலா வந்தால் நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டர் வைரஸ், மால்வேர் மற்றும் பல வகை கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களால் பாதிக்கப்படும் சூழ்நிலைகள் நிச்சயம் உருவாகும்.

உங்களிடம் அல்லது அலுவலகத்தில் அல்லது நண்பரிடத்தில் உள்ள இன்னொரு கம்ப்யூட்டர் மூலம் பயர்வால், ஆண்டி வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான சாப்ட்வேர்களை டவுண்லோட் செய்து அதனை சிடி அல்லது பிளாஷ் டிரைவில் காப்பி செய்து பின் புதிய கம்ப்யூட்டரில் பதியவும். இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் புது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கிய நிறுவனம் ஏதேனும் இது போன்ற செக்யூரிட்டி சாப்ட்வேர்களில் ஒன்றை பதிந்தே உங்களுக்கு விற்பனை செய்திருக்கும்.

பொதுவாக அத்தகைய சாப்ட்வேர்கள் அவ்வளவு திறனுடம் இருக்காது. எனவே தான் வேறு செக்யூரிட்டி சாப்ட்வேர் களை நாம் புதிய கம்ப்யூட்டரில் பதிக்கிறோம். அவ்வாறு பதியும் முன் கம்ப்யூட்டருடன் வந்த செக்யூரிட்டி சாப்ட்வேர் தொகுப்புகளை நீக்கிவிட வேண்டும்.

3. தேவையற்றதை நீக்குங்கள்: கம்ப்யூட்டருடன் வந்த அனைத்து புரோகிராம்களையும் கவனமாகப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் "Add/Remove Programs"ஐகானில் கிளிக் செய்தால் இந்த பட்டியல் கிடைக்கும். இதில் ஏதேனும் ட்ரையல் கேம்ஸ், உங்களுக்குத் தேவையில்லாத போட்டோ அப்ளிகேஷன் புரோகிராம்கள், வெப்சைட் டூல்பார்கள் என தேவையற்ற புரோகிராம்களை நீக்கிவிடுங்கள். அதற்கான வசதி அந்த விண்டோவிலேயே கிடைக்கும்.

4. புதிய வெப் பிரவுசர்: உங்கள் கம்ப்யூட்டருடன் வெப் பிரவுசர் புரோகிராம் ஒன்று இணைந்தே தரப்பட்டிருக்கும். இதனைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மொஸில்லா பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா எனப் பல பிரவுசர்கள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். புதிய ஒன்றைப் பயன்படுத்தினாலும் சிஸ்டத்துடன் வந்த பிரவுசரை அவ்வப்போது அப்டேட் செய்திடவும். அப்போதுதான் வைரஸ் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் புரோகிராம்களிலிருந்து முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

5. அனைத்தையும் அப்டேட் : இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன் இணையப் பக்கங்களைத் தேடிச் செல்லாமல் உங்களிடம் உள்ள வெப் பிரவுசர்கள், ஆண்டி வைரஸ் புரோகிராம் மற்றும் இணையம் சம்பந்தப்பட்ட அனைத்து சாப்ட்வேர்களையும் அப்டேட் செய்துவிடவும். குறிப்பாக அடோப் அக்ரோபட் ரீடர் மற்றும் மல்ட்டி மீடியா புரோகிராம்களை அவசியம் அப்டேட் செய்திட வேண்டும்.

இவற்றுடன் இன்டர்நெட்டிலிருந்து இறக்கப்படும் பைல்களை இயக்கும் புரோகிராம்கள் அனைத்தையும் அப்டேட் செய்வது நல்லது. இந்த புரோகிராம்களில் உள்ள வலுவற்ற கட்டமைப்பின் வழியாக நுழையும் வகையிலேயே வைரஸ்களும் மற்ற மோசமான மால்வேர்களும் எழுதப்படுவதால் இவற்றைக் கட்டாயம் அப்டேட் செய்திட வேண்டும்.

அப்டேட் செய்திடுகையில் அண்மைக் காலம் வரை இத்தகைய வலுவற்ற இடங்களைச் சரி செய்திட தரப்பட்டுள்ள பேட்ச் பைல்கள் இயக்கப்பட்டு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களின் கட்டமைப்பு சரி செய்யப்படும். இதனால் வைரஸ்கள் வருவது தடுக்கப்படும். மேலே சொன்ன ஐந்து வழிமுறைகளை அவசியம் புதிய கம்ப்யூட்டரை இயக்கி இணையத்தில் நுழையும் முன் மேற்கொள்வது மிக அவசியம்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP