என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 4

>> Saturday, November 8, 2008

Type your summary here
மருத்துவம். வாஞ்ஜுர்

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!

1 • அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!)மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?
2. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம்
3. சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்
4.குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம் சத்து அவசியம
5. ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய்!
6. காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா?
7. இதயமே...இதயமே...
8. பெண்களுக்கு ஏன் இதயநோய்?
9.நேஷல் அலர்ஜி (அலர்ஜியுடையசுவாச பாதை.)
10.தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி

1• அதிர்ஷ்டம் என பலர் நம்பும்(!)மாறுகண் பார்வை குறைபாட்டுக்கு சிகிச்சை என்ன?

மாறுகண் பார்வை அதிர்ஷ்டத்தின் அடையாளம் என்பது கிராமப் புறங்களில்பரவிக்கிடக்கும் பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஒன்று. அது கண்ணில் உள்ள ஒருவகை குறைபாடுஎன்பதையும், அதற்கான சிகிச்சையைஉரிய நேரத்தில் மேற்கொள்ளாவிட்டால் அது குழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்துவிடும்என்பதையும் பெரும்பாலானவர்கள் அறிந்து வைத்திருப்பதில்லை.

அப்துல் ஐந்து வயது சிறுவன். அவன் வீட்டிற்கு அவன் தந்தையின்நண்பர் வந்திருந்தார். சற்று நேரம் அவனோடு பேசிக் கொண்டிருந்தார். நண்பர் அப்துல் இடம்ஒரு சாக்லெட் பாக்கெட்டை கொடுத்தார். அப்துல் சாக்லெட் டப்பாவை நேராகப் பார்க்காமல்தலையை சாய்த்து, ஒரு கண்ணால் மட்டுமேபார்த்தவாறு வாங்கினான்.

அதனை கவனித்த நண்பர்;அப்துலின் தந்தையிடம் அப்துலுக்கு மாறுகண் பார்வை பிரச்சினை இருக்கும்போல் தெரிகிறது.உடனே கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று உரிய ஆலோசன பெறுவது நல்லது என்று அறிவுறுத்தினார்.

அதற்கு அவன் தந்தையோ அப்துலுக்கு மாறுகண் பார்வை என்பது அவன்ஆறு மாத குழந்தையாக இருக்கும்போதே தெரியும். அவன் பாட்டி இது அதிர்ஷ்டத்தின் அடையாளம்என்று சொன்னதால் அப்படியே விட்டுவிட்டோம்.

இது ஒன்றும் பெரிய பிரச்சினை இல்லையே! என்று சொல்ல, நண்பரோ மிகவும் வேதனயுடன் நீங்கள் செய்வதுதவறு. மாறுகண்ணுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் எத்தகைய தொடர்பும் கிடையா.து மாறுகண் உள்ளஎல்லோருமே அதிர்ஷ்டசாலிகளா? கிடையாது.உண்மையில், மாறுகண் ஒரு கண் நோய்ஆகும். குழந்தைப் பருவத்திலேயே கவனிக்காவிடில் பின்னர் பல பிரச்சினகள் வரலாம்.

குழந்தைப் பருவத்திலேயே கண் மருத்துவரின் ஆலோசனப்படி பயிற்சிகளோஅல்லது ஆபரேஷனோ மேற்கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏதுமின்றி நல்ல பார்வையுடன்திகழலாம் என்று ஆலோசனை கூறினார்.


நண்பரின் ஆலோசனப்படி அப்துலை குழந்தைகள் கண் சிகிச்சைப் பிரிவிற்குஅழைத்து வந்தார் அவர் தந்த. முழுமையான பரிசோதனக்குப்பின் மாறுகண் சரிசெய்தல் (Squint Correction) எனப்படும் எளிமையானஆபரேஷன் செய்யப்பட்டது. இப்போது அப்துல் பொருட்களை நேராக தெளிவாகப் பார்க்கிறான்.

ஆக, மாறுகண் பார்வை என்பது சிறு வயதிலேயே கவனிக்கப்பட வேண்டிய ஒரு குறைபாடு என்பதை நாம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும்.

மாறுகண் என்றால் என்ன?

பொதுவாக இரண்டு கண்களும் ஒரே நேரத்தில் ஒரே பொருளை தெளிவாகப்பார்க்கவேண்டும். அதுவே சிறப்பான பார்வை எனப்படுகிறது. நம் ஒவ்வொரு கண்ணையும் ஆறு தசைநார்கள் தாங்குகின்றன. இரண்டு கண்களுமே நேரான பார்வையப் பெறுவதற்கு வசதியாக, ஒரே இலக்கினை நோக்கிப் பார்ப்பதற்கு வசதியாகஅமைந்துள்ளது.

ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது, பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடிய ஒளிக்கதிர்கள்இரண்டு கண்களிலும் உள்ள கார்னியாவில் குவியவேண்டும். கார்னியாவில் குவிந்த ஒளிக்கதிர்கள் கண்ணின் உள்ளே பின்புறச் சுவரான விழித்திரையில் குவிந்து பிம்பம் உருவாக வேண்டும்.


அப்போதுதான் நாம் தெளிவான பார்வையப் பெறமுடியும். இரண்டு கண்களும்தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளயில் உள்ள பார்வை மண்டலத்திற்குச் சற்றே வித்தியாசமானகோணங்களில் அனுப்புகின்றது. பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாணபடமாக, பார்வை என்ற தீர்க்கமானபுலனாக நமக்கு வெளிப்படுகிறது.

அதற்கு இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக அமந்திருப்பதால்தெளிவான பார்வைய நாம் பெறும்படியாக நம் கண்கள் செயல்படுகின்றன.

ஒரு வேளை இரண்டு கண்களின் தசை நார்களும் ஒரே சீராக இல்லையெனில், அவற்றின் இயக்கமும் ஒரே சீராக இருக்காது.இந்நிலையில், ஒரு கண் மட்டுமே பார்க்கும்பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாகும்படி சிறப்பாகச்செயல்படுகிறது.
தசை நார்கள் சரியாக அமையாத கண், பார்க்கும் பொருளிலிருந்து ஒளிக்கதிர்கள்பெற்று விழித்திரையில் பிம்பம் பதிவாவதை சரிவர செய்வதில்லை. இந்நிலயே ஒன்றரைக்கண் பார்வைஅல்லது மாறுகண் எனப்படுகிற.து ஆங்கிலத்தில் ஸ்ட்ராபிஸ்ம்யுஸ் (Strabismus) என்கிறார்கள்.

மாறுகண் பிரச்சினைக்குக் காரணங்கள் என்ன?
பொதுவாக, இந்தப் பிரச்சினைகுழந்தைகளிடமே அதிகம் காணப்படுகிறது. சிலருக்கு இளமைப் பருவத்திலும் வரலாம். மாறுகண்பிரச்சினைக்கு இதுதான் காரணம் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடிவதில்லை.

- பரம்பரை மூலக்கூறியல்காரணங்கள்.
- பிரசவத்தின்போது குழந்தையின்கண்ணில் காயம் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
- நம் கண்ணின் அசைவுக்குக்காரணமாக இருக்கக்கூடிய ஆறு தசை நார்களும் நமது மற்றொரு கண்ணின் ஆறு தசைநார்களோடு ஒருங்கிணந்துஒரே நேர்கோட்டில் செயல்பட முடியாத சூழ்நிலை இந்த பிரச்சினக்கு ஒரு முக்கியக் காரணமாகிறது.சில நேரங்களில் நரம்புத்தளர்ச்சியும்; (Nerve Palsy) இந்தப் பிரச்சினைக்குக் காரணமாகிறது.

- சில நேரங்களில் தூரப்பார்வைக்குறைபாடு போன்ற பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கு ஒளிக்கதிர்கள் செல்லும் பாதை உள்நோக்கிமாறும்போது மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- கண் புரை போன்ற குறைபாடுகள்இருந்தாலும் மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.
- வேறு உடல் நலக்குறைகாரணமாகக்கூட மாறுகண் குறைபாடு ஏற்படலாம்.

எனவே உங்கள் குழந்தைக்கு மாறுகண் குறைபாடு இருக்குமேயானால் முழுமையான கண் பரிசோதனை அவசியம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

பைனாகுலர் (Binocular Vision பார்வை என்றால் என்ன?
பொதுவாக, இரண்டு கண்களும்ஒருங்கிணைந்து நல்ல பார்வைத் திறனுடன் இருக்கும்பட்சத்தில், நாம் ஒரு பொருளைப் பார்க்கும்பொழுது, நாம் பார்க்கும் பொருளிலிருந்து வரக்கூடியஒளிக்கதிர்கள் இரண்டு கண்களின் விழித்திரையிலும் குவிந்து பிம்பம் உருவாகிறது.
ஆக இரண்டு கண்களும் தாம் பார்க்கும் பொருளின் படத்தை மூளையில்உள்ள பார்வை மண்டலத்திற்கு சற்றே வித்தியாசமான கோணங்களில் அனுப்புகின்றது.

பார்வை மண்டலத்தில் இரண்டு படங்களும் இணந்து ஒரே முப்பரிமாணபடமாக தீர்க்கமான புலனாக நமக்கு வெளிப்படுகிறது. இதனயே சிறப்பான பார்வை அல்லது பைனாகுலர்பார்வை என்கிறோம்.

மாறுகண் குறைபாட்டினால் வரக்கூடிய பிரச்சினைகள் யாவை?
இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படாதபொழுது ஒரு பொருளைப்பார்க்கும்பொழுது இரண்டு கண்களும் இரு வேறு பொருள்களைப் பார்தது அவற்றிலிருந்து வரக்கூடியஒளிக்கதிர்கள் விழித்திரையில் குவிந்து மூளையில் உள்ள பார்வை மண்டலத்திற்கு செய்திகளஅனுப்புகிறது.


அங்கே இரண்டு விதமான பிம்பங்களின் பிரதிகள் தெரிவதால் குழப்பம்ஏற்படுகிறது. இக்குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஒருங்கிணந்து செயல்படாத குறைபாடுடய கண்ணிலிருந்துபெறப்பட்ட பிம்பம் தவிர்க்கப்பட்டு சரியாக செயல்படக்கூடிய கண்ணிலிருந்து வரக்கூடியபிம்பத்தை மட்டுமே பார்வை மண்டலம் பெற்றுக்கொண்டு செயல்படுகிறது.

எனவே இக்குறைபாடுடய குழந்தை தீர்க்கமான பார்வை எனும் புலனை பெறஇயலாமல் போகிறது. இந்நிலயில், குறைபாடுடையகண்ணை குழந்தைகள் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுகிறார்கள். எனவே அந்த கண் சிறப்பாகசெயல்பட முடியாமல் நாளடைவில் சோம்பேறியாகிறது. இதனை ஆம்பிளியோப்பியா என்கிறோம்.

ஓரளவு வளர்ச்சியடைந்தவர்கள் இரண்டு கண்களிலிருநது;ம் பெறப்படுகின்ற பிம்பத்தை தவிர்க்கமுடியாமல்பொருட்கள் இரண்டிரண்டாக தெரியும் அனுபவத்தைப் பெறுகிறார்கள். இதுவே இரட்டைப் பார்வைஅல்ல ஆங்கிலத்தில் Double Vision எனப்படுகிறது.

மாறுகண் குறைபாட்டின் அறிகுறிகள் எவை?
குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களே இரண்டு கண்களும் இணநது; செயல்படாமல் வித்தியாசமான கோணத்தில் பார்ப்பதைகவனிக்க முடியும். இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், பிறந்த குழந்தைகளின் கண்கள் எப்போதாவதான்ஒருங்கிணந்து ஒரே கோணத்தில் செயல்படாமல் இருக்கும். எனவே சில நேரங்களில் குழந்தைக்குமாறுகண் இருப்பதுபோல தெரியும்.


ஆனால் மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பின்னர், முழுமையாக தீர்க்கமான பார்வையப் பெறும் வண்ணம்இரண்டு கண்களும் ஒரே கோணத்தில் இணந்து செயல்படும். ஒரு வேளை அவ்வாறு இணந்து செயல்படாமல்இருந்தால் அந்தக் குழந்தக்கு, ஒரு கண் மருத்துவரின்முழுமையான ஆலோசனை தேவை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இளஞர்கள் இரட்டைப் பார்வைக் குறைபாடுகளோ அல்லது இரண்டு கண்களும்ஒரே கோணத்தில் செயல்படாமல் சிரமப்படுவதை அறிகுறியாக உணரமுடியும்.

மாறுகண் நோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
மாறுகண் குறைபாட்டின ஒரு கண் மருத்துவரே குறிப்பிட்டு கண்டறியமுடியும். கண் மருத்துவர் சில குறிப்பிட்ட பரிசோதனகள செய்து மாறுகண் குறைபாட்டினை உறுதிசெய்கிறார்.


முதலில் மாறுகண் குறைபாட்டிற்குப் பார்வைத்திறன் (Refractive Error) காரணமாக இருக்கிறதாஎன்பதை அறிய பார்வைத்திறன் குறைபாட்டை அறியும் பரிசோதனை செய்யப்படுகிறது.

சிலருக்குப் பார்வைக் குறைபாட்டின் காரணமாக, மாறுகண் பிரச்சினை வரலாம். எனவே அதற்கு முதலில்சிகிச்சையளிக்கப்படுகிறது. சில வகை மாறுகண் பிரச்சினைக்குப் பார்வைக் குறைபாட்டை சரிசெய்தாலேபோதுமானதாக அமைகிறது.


மாறுகண் குறைபாடு காரணமாக ஆம்பிளியோப்ரியா எனப்படும் சோம்பேறிக்கண் பிரச்சினை இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அதற்கு முதலில் சிகிச்சையளிக்கப்படுகிறதுஅதன்பின்னரே ஆபரேஷன் தேவைப்படுமேயானால் ஆபரேஷன் செய்யப்படுகிறது.
பொதுவாக, குழந்தைகளப்பொருத்தமட்டில் பெற்றோர்களுக்குச் சிகிச்சையின் முக்கியத்துவம் தீவிரமாக எடுத்துரைக்கப்படுகிறது.ஏனெனில் பெற்றோர், குழந்தை அனைவருடயஒத்துழைப்பே சிசிச்சையின் வெற்றி விகிதத்தை நிர்ணயிக்கிறது.

மாறுகண் பிரச்சினைக்கான ஆபரேஷன் ஒரு கண்ணிலோ அல்லது இரண்டு கண்களிலுமோதேவைப்படுமானால் செய்யப்படுகிறது. இந்த சிகிச்சையின்போது இரு கண்களும் ஒருங்கிணந்துசெயல்படுவதை தடுக்கும் தசையானது ஆபரேஷனின்போது வலுவடைவதோ அல்லது வலுக் குறைவதோ, தசை நார்கள் சமமாகச் செயல்படுவதற்கேற்ப அமைக்கப்படுகிறது.

சிலருக்கு இரட்டைப் பார்வை இருக்கும்பட்சத்தில் முப்பட்டக (Prism) கண்ணாடி வழங்கப்படுகிறது.
மேலும், இக்குறைபாட்டிற்கானகாரணத்தை அறியவும் முயற்சி செய்து எந்த அளவிற்கு குறைபாடுடைய கண் நல்ல கண்ணோடு இணைந்துசெயல்பட முடியாமல் மாறுபடுகிறது என்பதனை கண்டறிகிறார். சிலருக்கு நாசித்துவாரங்களின்அமைப்பு மாறுகண் உள்ள போன்ற பொய்த் தோற்றத்தை உருவாக்கலாம்.

ஒரு கண் மருத்துவர் மட்டுமே மாறுகண் போன்ற பொய்த் தோற்றத்திற்கும்(False Squint) உண்மையாகவே பாதிக்கப்பட்டமாறுகண் (True Squint) பிரச்சினக்கும் உள்ள வித்தியாசத்தை கண்டறிய முடியும்.

மாறுகண் பிரச்சினைக்குச் எப்போது சிகிச்சை தேவை?
- குழந்தைகளைப் பொருத்தமட்டில்மாறுகண் பிரச்சினக்கும் அது சார்ந்த ஆம்பிளியோப்பியா பிரச்சினக்கும் எவ்வளவு விரைவாகசிகிச்சையளிக்கப்படுகிறதோ அதுவே மிகச் சிறந்ததாகும்.
- பொதுவாக ஆம்பிளியோப்பியாமற்றும் மாறுகண் பிரச்சினைக்கான சிகிச்சை, குழந்தைப்பருவத்திலேயே வழங்கப்படும் பட்சத்தில் மட்டுமே பார்வையைப் பாதுகாப்பதற்கான வாய்ப்புஅதிகரிக்கிறது.

- நினவிருக்கட்டும்.மாறுகண் நாளடைவில் குழந்தை வளரும்போது சரியாகிவிடும் என்பது தவறு.
- சிகிச்சையளிப்பதில்தாமதம் ஏற்பட்டால், பார்வையை மீட்கவும்இரண்டு கண்களும் மிக சீராக இணந்து செயல்படும் வாய்ப்பும் குறையலாம்.
மாறுகண் பிரச்சினக்குச் சிகிச்சையளிக்க வேண்டியதன்முக்கியத்துவம் என்ன?
- நமது அல்லது நம் குழந்தைகளின்பார்வையப் பாதுகாப்பதற்கும் அல்லது இழந்த பார்வையை மீட்டுத்தருவதற்கும் மாறு கண் பிரச்சினக்குச்சிகிச்சை அவசியம்.

- இரண்டு கண்களையும்ஒருங்கிணந்து செயல்பட வைப்பதற்கு சிகிச்சை அவசியம்.
- பைனாக்குலர் பார்வைஎனப்படும் தீர்க்கமான பார்வையை மீட்டுத் தருவதற்கு சிகிச்சை அவசியம்.

சிகிச்சைக்குப் பின்னர் கண்ணாடி அணிவது அவசியமா?
அவசியமே. ஏனெனில் ஆபரேஷன் கண்ணாடி அணிவதற்கு மாற்றாக முடியாது.ஒரு வேளை குழந்தைகளுக்கு குறிப்பிடத்தக்க பார்வைக் குறை இருக்கும் பட்சத்தில் கண்ணாடிஅணிவது மிகவும் அவசியமே. சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மாறுகண் பிரச்சினை சரியாவதுஉண்டு. சில குழந்தைகளுக்கு கண்ணாடி அணிவதால் மட்டுமே பொருள்களைத் தெளிவாகப் பார்க்கமுடியும்.


இந்தத் தெளிவான பார்வை மட்டுமே ஆம்பிளியோப்பியா எனப்படும் பிரச்சினைக்குச்சிகிச்சையளிப்பதற்கும் இரண்டு கண்களும் ஒருங்கிணந்து செயல்படுவதற்கும் ஆபரேஷனுக்குபின்னர் உதவி செய்யும். நினவிருக்கட்டும். மாறுகண் அதிர்ஷ்டத்தின் அடையாளம் அல்ல. அதுகுழந்தைகளின் எதிர்காலத்தையே இருட்டடிப்பு செய்யக்கூடிய கண் நோய். மாறு கண் குழந்தைகளுக்கு, அடிப்படைத்தேவை குழந்தைகள் கண் நல நிபுணரின்ஆலோசனை.

அது ஒரு பள்ளிக்கூடம்.
இரண்டாம் வகுப்பு மாணவ_மாணவிகள்ஆசிரியை கரும்பலகயில் எழுதிய பாடத்தைப் பார்த்து தங்கள் நோட்டுகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.நான்காவது வரிசயில் அமர்ந்திருக்கும் குமரன் மட்டும் எழுதாமல் கரும்பலகயையே பார்த்துக்கொண்டுஅமர்ந்திருக்கிறான். ஆசிரியை அவனருகே வந்து அவன பாடத்தை எழுதுமாறு அறிவுறுத்திவிட்டுமற்ற மாணவர்களக் கவனிக்கிறார்.


ஆனால் குமரன் மட்டும் எழுதவேயில்ல. ஆசிரியை அவனருகே வந்து மீண்டும்சற்று தன் குரல உயர்த்தி அவன பாடத்தை எழுதுமாறு சொல்கிறார். அவன் தலய ஆட்டிவிட்டு எழுதமுயற்சிக்கிறான்இ ஆனால் எழுதவில்ல. ஆசிரியைக்குச் சற்று கோபம் வருகிறது.

''ஏன் எழுதாமல் இருக்கிறாய்?'' மாணவன் பதில் சொல்லவில்ல.
''உன்னத்தானே கேட்கிறேன்ஏன் எழுதாமல் இருக்கிறாய்?''


மாணவன் தலையக் குனிந்தவாறு நிற்கிறான். உனக்கென்ன இவ்வளவு திமிராநீ பாடத்தை எழுதிவிட்டுத்தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவனக் கட்டாயப்படுத்கிறார்ஆசிரியை. பள்ளி வேலைநேரம் முடிந்து மற்ற மாணவ மாணவியர் அனவரும் வீட்டிற்குக் கிளம்பிவிட்டார்கள்.அவன் மட்டும் தனியே அமர்ந்திருக்கிறான். வகுப்பறய சுற்று முற்றும் பார்க்கிறான். அவனத்தவிரஇஆசிரிய உள்பட எல்லோரும் வெளியேறி விட்டார்கள். அவன் மெவாக எழுந்து முதல் வரிசக்குச்செல்கிறான். இப்போது கரும்பலகயப் பார்க்கிறான். நோட்டில் பாடத்தை வேகமாக எழுகிறான்.

தினசரி இந்தச் சம்பவம் தொடர்கிறது.
ஒரு நாள் ஆசிரியை சற்று ஆச்சரியத்டன் கண்காணிக்க அவருக்கு விஷயம்புரிந்தது. குமரனனின் கண்ணில் ஏதோ பிரச்சின இருக்கலாம் என்று சந்தேகத்துடன் அவன பெற்றோரவரவழத்து சொன்னார். குமரனப் பரிசோதித்த டாக்டர் ''குமரனப் போல சொல்லத் தெரியாமல் அல்ல சொல்வதற்குப் பயந்துகொண்டுஅல்ல இதான் இயல்பான பார்வ என்று நினத்து சிரமமான வாழ்க்க வாழ்ந்து கொண்டிருக்கக்கூடியகுழந்தகள் ஏராளம்'' என்கிறார்.

ஆம் குமரனுக்குக் கிட்டப்பார்வக் கோளாறு. ஒரு நல்ல ஆசிரிய கிடத்தகாரணத்தால் உரிய நேரத்தில் குமரனுக்கு கண் பரிசோதன செய்யப்பட்டுஇ தற்போது கண்ணாடி அணிந்வருகிறான். மிக நன்றாகப் படிக்கிறான்.


கண்ணே கண்மணியே என்று குழந்தகளக் கொஞ்சி மகிழும் நாம் நம் குழந்தகளின்கண் நலம் குறித்து முறயான விழிப்புணர்வப் பெற்றிருக்கிறோமா? கேள்விக்கு விட தேவயான விழிப்புணர்வு இல்ல என்பதே.

குழந்தைகள் தங்களுக்கு கண்ணில் குறபாடு இருக்கிற என்பத அவர்களாகவே புரிந் கொள்ளமுடியாது. உதாரணமாக கண்ணில் குறபாடு உள்ள குழந்தகள் அந்த குறபாடுகளுடனேயேதமது வேலகளை இதுதான் இயல்பான பார்வ என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். இதன பெற்றோர்களும்ஆசிரியர்களும் மட்டுமே கவனித்து தேவயான உதவியை குழந்தகளுக்குச் செய்யலாம். குழந்தகளின்கண் நலத்தில் குழந்தகளின் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மிக முக்கியமான பங்குஇருக்கிற.த

2. உடல் உள்ளுறுப்புகளை பாதுகாக்கும் சீரகம்

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் 'சீரகம்', வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில்நமக்கு உபயோகப்படுகிற.து இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டக்காலத்திலிருந்தேஇந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறத

பெயர் வந்த விதம்: நம உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகசீர்கேடுகளச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் Spice என்பதால், இதற்கு தமிழில் 'சீரகம்' என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீர்-அகம் ஸ்ரீசீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.

சத்துப் பொருட்கள்: நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப்பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன. புரதம் 17.7 கிராம், கொழுப்பு 23.4 கிராம், பொட்டாசியம்2.1 கிராம், சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம், பாஸ்பரஸ் 0.5 கிராம், சோடியம் 0.2 கிராம், இரும்புச்சத்து48.1 மில்லி கிராம், தயாமின் 0.8 மில்லிகிராம், ரபோஃபிளேவின்0.4 மில்லிகிராம், நியாசின் 2.5 மில்லிகிராம், அஸ்கார்பிக்அமிலம் 17.2 மில்லிகிராம், வட்டமின் ஏ 175 ஐ.யு.


பொதுப் பயன்கள்: சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது.பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிற.து சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது.மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது.

செரிக்காமை, வாயுத் தொல்லஇவைகளுக்கு மாமருந்.து பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளக்குணப்படுத்தும் எளியமருந்து வயிற்றுப் பொருமல்,உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.

மருத்துவப் பயன்கள்:

சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டுநன்கு கொதிக்கது வத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைததுக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம்பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.

- சிறிது சீரகத்தை மென்றுதின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
- மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.

- சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக்கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம்மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக்குணமாகும்.

- சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலிஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராகஇயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும்.எனவே, வாரம் ஒருமுற தடுப்புமுறையாகக் கூட (Prophylactive) (இதைச் சாப்பிடலாம்.

- உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்குஉண்டு. எனவே, தினம் உணவில் சீரகதi;த ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.

- திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்தநோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்தஅழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.


- சிறிது சீரகம், நல்லமிளகு பொடிதது;, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.

- அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டிபொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம்மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.

- சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டுசிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாகசாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

- சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டுவர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சிகுணமாகும்.

- சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.

- சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

- ஓமத்துடன் சிறிதுசீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.

- பெண்களுக்கு ஏற்படும்வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன்சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில்கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.

- சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
- சீரகத்தை தேயிலைத்தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
- கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்துசாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
- மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால்உடல் எடை குறையும்.

3. • சருமத்தை பாதுகாக்கும் பழங்கள்
வைட்டமின்கள்-ஏ நிறைந்த பப்பாளிப் பழத்தின் தோலைசீவி அதை நன்குகூழ் போல ஆக்கி முகத்தில் 'பற்று"போலப் போட சருமத்தின் நிறம் கூடும். சருமம் பட்டுப்போல மென்மையாகும்.


ஆப்பிள் பழம் வைட்டமின் ;நிறைந்தது. இதையும் தோல் சீவி கூழ்போல ஆக்கி முகத்தில் 'பற்று" போல போட முகத்தில் வரும் கரும்புள்ளிகள் நீங்கும்.

சாத்துக்குடி பழமும் சி-வைட்டமின் செறிந்தது தான். இதன் மேல்தோல்- உள்தோல் இரண்டையுமே உரித்து அதை நன்கு பிசைந்து அதை முகத்தின் மீது அப்படியேவைக்கலாம். அல்லது இதன் சாற்றை முகத்தில் தடவலாம். முகத்தில் அதிகம் உள்ள எண்ணெய் பசையைஇது நீக்கி- சருமத்தைப் பாதுகாக்கும்.

ஆரஞ்சு(கமலா) பழமும் வைட்டமின்-சி நிறைந்தது. இதைசாத்துக்குடியைச்செய்வது போலச் செய்யலாம். இதன் சாறு சருமத்திற்கு பளபளப்பு தரும்.


கொய்யாப்பழமும் வைட்டமின்-சி அதிகம் கொண்டது. இதை நன்கு கூழ்போலஆக்கி முகத்தில் ஆகப் போட முகம் பளபளக்கும். நிறம் மேம்படும். எல்லா காலங்களிலுமே கிடைக்கும். வாழைப்பழம் உலர் சருமத்திற்கு மிகவும் நல்லது. இதை கூழ்போல ஆக்கி முகத்தில் பேக் போலப் போட வேண்டும். உலர் சருமம் உடையவர்களும், 40 வயது தாண்டியவர்களும்இதைப் பயன் படுத்தலாம்.


இந்த 'பேக்கு"களைபருக்கள் இருக்கும் போது கூட பயன்படுத்தலாம். இதைப் போட்ட பின்பு சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறி பின்பு வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவலாம்.பழங்களைப் போலவே நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளையும் கூட நாம் சருமத்திற்குப்பயன்படுத்தலாம்.

வாழை இலையில் சாப்பிட்டால் தோல் பளபளப்பு உண்டாகும். கபம், வாதம் தீரும், பித்தத்தை சமப்படுத்து

4.குழந்தைகள் எலும்புகள் வலுவாக கால்சியம் சத்து அவசியம

எலும்புகள் மற்றும் பற்கள் வலுவாக இருக்க கால்சியம் சத்து மிகவும்அவசியம். ஆனால் தற்போது பெரும்பாலான குழந்தைகளுக்கு கால்சியம் சத்துக் குறைவாக உள்ளது.சின்ன வயதில் இப்படி காணப்படும் குழந்தைகள்,வயது வந்த பருவத்தில் எலும்பு முறிவுகளுக்கு எளிதாக ஆளாகிறார்கள்.

லேசாக அடிபட்டால்கூட கை - கால் மற்றும் இடுப்பு எலும்புகள் முறிந்துபோகும். ஆஸ்டியோபோராசிஸ் எனப்படும் எலும்பு நோய் எளிதாக தாக்கும் வாய்ப்பு உள்ளது.
குழந்தைப் பருவத்தில் முதல் 2 வயதில் தாய்ப்பால் மூலம் கால்சியம் சத்து கிடைக்கிறது. ஆனால்பிற்பாடு என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே கால்சியம் சத்துகிடைக்கிறது. பண்ணைப் பொருள்கள் மூலம் கால்சியம் சத்து தாராளமாக கிடைக்கும் என்று கருத்து உள்ளது.

ஆனால் காலி பிளவர் போன்றகாய்கறிகளுடன் ஒப்பிடும் போது பண்ணைப் பொருள்கள் பெரிய விஷயமே அல்ல. இதனால் சின்ன வயதிலிருந்தேகுழந்தைகளை காய்கறிகளை விரும்பிச் சாப்பிட பழக்க வேண்டும்.


கால்பந்து, கைப்பந்து, கபடி,ஓட்டம், நீச்சல் போன்ற விளையாட்டுகள்மூலம் கால்சியம் சத்து அதிகரித்து, எலும்புகளும்வலுவாகும். ஆனால் பெண் குழந்தையாக இருக்கும்பட்சத்தில் பூப்பெய்திய பிறகு மாத விலக்குமூலம் இழப்பை வைட்டமின் டி தான் வகை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ரூபாய் நோட்டு மூலம் தொற்று நோய்! மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை
தொற்றுக் கிருமிகளை கண்டுபிடித்து உடனுக்குடன் முன்னெச்சரிக்கைநடவடிக்கை எடுக்க புது வழிகளை கையாள மருத்துவ வல்லுநர்கள் முடிவு செய்துள்ளனர். ரூபாய்நோட்டு மூலமும் கண்டுபிடிக்கலாம் என்று கூறியுள்ளனர். லண்டனில் இருந்து வெளிவரும் ஆன்லைன்மருத்துவ இதழான, 'நியூ சயின்டிஸ்ட்"என்ற இதழில் இதுகுறித்து கூறியிருப்பதாவது:

தொற்றுக்கிருமிகள் எப்படி பரவுகின்றன என்று லண்டன் பல்கலைக்கழககுயின்மேரி கல்லூரி மருத்துவ ஆராய்ச்சி வல்லுநர் குவாங்காங் ரென் ஆராய்ச்சி செய்துள்ளார்.அவர் சில வித்தியாசமான தகவல்களை கூறியுள்ளார் தன் ஆய்வுக் குறிப்பில்...

தொற்றுக் கிருமிகள் என்பது பல வழிகளிலும் மனிதர்களை தொற்ற முடியும்.காற்று மூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் குறைவுதான் என்றாலும், சில வானிலை பருவ காலங்களில் இப்படிக் காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகள் மிகவும் மோசமானதாக இருக்கும்.
சில இ.டங்களில் தொடர்பு ஏற்படுவதன் மூலம் கூட தொற்றுக் கிருமிகள்தொற்ற வாய்ப்புண்டு. குறிப்பாக சொன்னால், வங்கிகள்அளிக்கும் ரூபாய் நோட்டுகளில் இருந்துகூட தொற்றுக் கிருமிகள் வர வாய்ப்புண்டு. அதனால், அவற்றில் வைரஸ் தாக்குதலை தடுக்கும் 'ஆன்ட்டி வைரஸ் கோட்டிங்" தருவது முக்கியம்.அப்படி தந்தால், தொற்றுக்கிருமிகளைதடுக்க ஓரளவு முடியும

இத்தோடு தானியங்கி 'வெண்டிங்மிஷின்கள்" எங்கும் வந்துவிட்டன. ரயில் டிக்கெட் முதல் காண்டம்கள் வரை தானியங்கி'வெண்டிங் மிஷினில்" இருந்துதான்நாம் பெற்றுக் கொள்கிறோம். இவற்றில் கிருமிகளைத் தடுக்க, வெண்டிங் மிஷின்' பட்டன் பகுதியில், ஆன்டி வைரஸ் கோட்டிங்" தரலாம். அதுபோலத்தான், அலுவலகங்களில் பயன்படுத்தும் பேக்ஸ் பேப்பர்களும், அதன்மூலமும் இப்படி தொற்றுக் கிருமிகள் பரவவாய்ப்புண்டு. அதனால் அதிலும் இந்தத் தடுப்பு முறையை பயன்படுத்தலாம்.

மெட்டல் கோட்டிங், மெட்டல் ஆக்சைடு, செராமிக் நானோ பார்ட்டிக்கல்ஸ் போன்ற ரசாயனகலவைமூலம் 'ஆன்டி வைரஸ் கோட்டிங்"முறையை நடைமுறைப்படுத்தலாம். காற்றுமூலம் பரவும் தொற்றுக் கிருமிகளைத் தடுக்கவும், "நானோ மெட்டிரியல்" மூலம் புதுமுறைகளைநாம் கையாள வேண்டும். நானோ டெக்னாலஜி மூலம் பல வகையில் நாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைஎடுப்பது முக்கியம்.

6. காக்கா வலிப்பு நோய்க்கு மருந்தே கிடையாதா?இதைக் குணப்படுத்த வாழ்க்கை முழுக்க மருந்து சாப்பிட்டுக் கொண்டேஇருக்கவேண்டுமா? வலிப்பு வரும் என்பதைமுன்கூட்டியே தெரிந்து கொள்ள முடியுமா?"

சென்ன அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர் டாக்டர்பன்னீர் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார்.


"இந்த நோய் பற்றி மக்களிடம்பல தவறான கருத்துக்கள் உலாவுகின்றன. மக்கள் இந்தத் தவறான கருத்துக்கள திருத்திக் கொள்ளவேண்டும்.


முதலில் காக்கா வலிப்பு என்று சொல்வதே தவறு. கால் கை வலிப்புஎன்று அழகாக, தெளிவாக சொல்லப்பட்டுவந்த விஷயம், காலப்போக்கில் மருவிகாக்கை வலிப்பு என்று மாறி, இப்போது காக்காவலிப்பு என்றாகிவிட்ட.து காக்கைக்கு வலிப்பு வருவதில்ல. எனவே, இனிமேலும் அதை யாரும் காக்கா வலிப்பு என்றுசொல்ல வேண்டாம்.

கால் கை வலிப்பு ஏன் ஏற்படுகிறது என்கிற உணi;மயான காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகக்குணப்படுத்திவிடலாம். இதற்கு தீர்வே இல்லை; மருந்தே இல்லைஎன்று வருத்தப்பட்டு மூலையில் கிடந்த அந்தக் காலம். இப்போது மருத்துவம் எவ்வளவோ முன்னேறிவிட்டது.

கால் கை வலிப்புக்கு முக்கியமான காரணம், சரியாகத் தூங்காமல் இருப்பது சரியாகச் சாப்பிடாமல்இருப்பது ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கவலப்படுவது. நடப்பதயெல்லாம் நன்மைக்கே என்கிறமனநிலயோடு எந்த விஷயத்தையும் அதிர்ச்சியும்,வருத்தமும் அடையாமல் வேளாவேளைக்கு நன்கு சாப்பிட்டு, தூங்கி எழுந்தாலே போதும்; கால்கை வலிப்பு உங்களை அண்டாது.

இந்த நோய் வந்தவர்கள் மது, போதை பொருட்களை உட்கொள்வது கட்டாயம் கூடாது. டீ, காப்பி சாப்பிடக்கூடாது சத்தான உணவுகள சாப்பிட்டு, நிறைய ஒய்வு எடுக்க வேண்டும்.
கால் கை வலிப்புக்கு டாக்டர்கள் கொடுக்கிற மருந்தை காலந்தவறாமல்சாப்பிடுவது அவசியம்தான். அதற்காக வாழ்க்கை முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டும் என்கிறஅவசியம் இல்ல.

உங்கள் உடலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வந்தாலே போதும்; உங்கள் உடலில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து, உங்களுக்கு வலிப்பு வரப் போகிறதா, இல்லயா என்று முன்கூட்டியே கண்டுபிடித்துவிடலாம்.அப்போது மட்டும் வெகுதூரம் செல்லாமல், பழக்கமானநன்கு தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு செல்வது நல்லது."
- நரம்பியல் மருத்துவர்டாக்டர் பன்னீரசென்னை அப்பல்லோ மருத்துவமனை, சென்னை.

7. இதயமே...இதயமே...கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது.
'இருபத சதவீத இந்தியப்பெண்கள் ஏதேனும் ஒரு இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் வயது ஐம்பதக்கும்குறைவு" என்கிறது சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வு.

இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. நகர வாழ்ககை, வாழ்க்கை முறையில் மாற்றம், அலுவலகங்களில் ஏற்படும் மனஅழுத்தம், குறிக்கோளை அடைய எடுக்கப்படும் அசாதாரண முயற்சிகள்இப்படிப் பல காரணங்கள்.
பொதுவாகவே இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளப் பற்றிப்பெண்கள் அவ்வளவாகக் கண்டு கொள்வதேயில்லை. மாறாக, மார்பகப் புற்றுநோய்க்குத்தான் மிகவும் கவலைப்படுகிறார்கள்.

இதனைத் தவறென்று சொல்ல முடியாது. இருப்பினும் கணவருக்கோ குடும்பத்திலுள்ளமற்ற ஆண்களுக்கோ மாரடைப்பு வரும்போது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் பெண்கள், தங்களுக்கு மார்பில் வலி வரும்போது மட்டும், அதைக் கண்டு கொள்வதேயில்லை. அலட்சியப்படுத்திவிடுகிறார்கள். இதான் தவறு.

இளம் வயதில் பெண்களவிட ஆண்களுக்கே இதய பாதிப்பு வருவதற்குரியஆபத்து அதிகம். , பெண்களுக்கு இயற்கையின்கொடை, பெண்களின் உடலில்சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆகியவை தான் இதற்குக் காரணம். இந்த ஹார்மோன் நல்ல கொலஸ்ட்ரால்அளவை அதிகம் சுரக்க உதவுகிறது பெண்களிடம் மாதவிலக்கு நிற்கும்வரை இந்த ஹார்மோன் சுரப்பதுதொடரும். அதனால் மெனோபாஸ் வயதுவரை பெண்களிடம் மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் உண்டாகவாய்ப்பில்ல.

என்னதான் ஹார்மோன் சுரந்தாலும் மன அழுத்தம் தொடர்ந்தால் பிரச்னதான்.இதய பாதிப்புக்கு முக்கிய காரணமாக இருப்பது இந்த மனஅழுத்தம் தான். அலுவலகம், வீடு,வேல என பரபரப்பாக இருப்பவர்களிடம் மன அழுத்தம் ஏற்படுதது;ம் தாக்கம் அதிகம். இதன் விளவாக உயர் ரத்தஅழுத்தம் உண்டாகிற. விளவு? இதயநோய் வருவஉறுதி" என்று எச்சரிக்கிறார்கள் இதய நிபுணர்கள்.

உயர் ரத்த அழுத்தம் 130 ஃ 85 என்ற அளவில்இருப்பது நல்லது. அதேபோல் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருக்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின்அளவு நூறைத் தாண்டக் கூடாது. இந்த இரண்டின் அளவும் மீறும்போதுதான் பிரச்னயே.


உடல் எடைக்கும் இதய நோய்க்கும் சம்பந்தமுண்டு. உடல் எடை அதிகமிருப்பவர்களுக்கு மாரடைப்பு ஆபத்தும் அதிகம். எண்ணெய், கொழுப்புநிறைந்த உணவுகள், புகை, டி.வி. முன் உட்கார்நது; நீண்ட நேரம் சாப்பிடுவது, இவைதான் உடல் எடை கூடுவதற்கு முக்கியக்காரணங்கள்.எடை கூடுவது இடுப்பில் தெரியும் என்பார்கள். ஆண்களின் இடுப்பளவு தொண்ணூறு செ.மீ. வரைஇருக்கலாம். எந்தப் பாதிப்பும் இருக்காது.

ஆனால் பெண்களின் இடுப்பளவு தொண்ணூறு செ.மீட்டருக்கு மேல் போனால்மாரடைப்பு ஆபத்து உண்டு. எச்சரிக்கை தேவை. வேலக்குப் போகும் பெண்களுக்கு இடுப்பளவுஅதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் இல்லத்தரசிகளுக்கு?

பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதில்ல.சமைக்க, துவைக்க இயந்திரம்வந்விட்டது. போதாதற்கு வீட்டிற்கே கொண்டு வநது;உணவு 'டெலிவரி" செய்யும்வசதி என மாறிவரும் நகரவாழ்க்கையில் உடல் பெருததுவிட அதிக வாய்ப்பு உண்டு. இப்படி உடலுழைப்புஇல்லாமலிருப்பது பெண்களிடம் இதய நோய் ஏற்பட அதிக காரணமாகிறது.

பெரும்பாலான பெண்கள் மார்பில் வலி வரும்போது, அதனை ஏதோ தசைப் பிடிப்பு என்று விட்டுவிடுகிறார்கள்.டாக்டரிடம் காண்பிக்காமல் அவர்களே சிகிச்சை செய்து கொள்கிறார்கள். இந்த வலி மாரடைப்புக்கானஅறிகுறி என்று அவர்கள் உணர்வதில்ல்லை.


முதன் முதலில் மாரடைப்பின் போதே பெண்கள் உயிரிழக்கும் வாய்ப்புஅதிகம். இதற்கு அவர்களது ரத்த நாளங்கள் தான் காரணம். மாரடைப்பின்போ ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.அப்போது இந்தச் சிறிய ரத்த நாளங்கள் வழியாகச் செல்லும் ரத்தத்தின் அளவால் அவை உடந்துபோக வாய்ப்பு உண்டு. அதற்கு உடனடி சிகிச்சை அவசியம். தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் ஆபத்துதான்.


"மெட்டபாலிக் சிண்ட்ரோம்"(எம்.,.டி.எஸ்.) இந்த முறையின்மூலம் இதய பாதிப்பு வருமா, இல்லயா என்பதைத்தெரிந்து கொள்ள முடியும். இதற்கு ஒருவரது இடுப்பளவு, குறைந்த அளவு, அதிகமான அளவுடிரகிளிசரடுகள், உணவின்றி இருக்கும்போதுஉடலில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்தஅழுத்தம் போன்ற காரணிகளை ஆராய வேண்டும்.

இவற்றில் மூன்று பிரச்னகள் இருந்தால், மாரடைப்பு ஆபத்து அதிகம். அதனால் பெண்கள்தாங்களே சுயபரி சோதன செய்து கொள்ளாமல், டாக்டரிடம்போய்விடுவது பிரச்னயை எளிதில் தீர்க்க உதவும்.


8,பெண்களுக்கு ஏன் இதயநோய்?

நிரந்தரமான, நிறைய பிரச்னகள்.
பெண்களுக்கு சிறிய ரத்தக்குழாய் என்பதால் சீக்கிரமே தடைப்பட்டுப்போகும்ரத்த ஓட்டம்.
உயர் ரத்த அழுத்தம

மார்புவலி, மூச்சுவிடுவதில்சிரமம் போன்ற அறிகுறிகளக் கண்டுகொள்ளாமல் விடுவது.
மனச்சோர்வுக்கும் இதயத்தமனி நோய்களுக்கும் தொடர்பு இருப்பது.

டாக்டரை எப்போது தொடர்பு கொள்வது?
மூச்சுவிட முடியாமலிக்கும்போதும் அதிக இதயத்துடிப்பு இருந்தாலும்.
நெஞ்சுவலியானது மார்பு,தாடை, நுரையீரல் அல்லதுமேல் வயிற்றுக்கும் பரவும்போது.
ஓய்வின்றிப் பரபரவென்று இருக்கும் நிலயில், வாந்தி வரும்போது.
அடிக்கடி மயக்கம் வந்தால்.
உங்களின் உடல் எடையக் குறக்க முடியாத பட்சத்தில்.

9. நேஷல் அலர்ஜி (அலர்ஜியுடைய சுவாச பாதை.)

ஒருவருக்கு ரன்னிங் நோஸ், தும்மல் என்று ஆரம்பித்து கடைசியில் வாசனை அறியும் சக்தியையும்இழந்துவிட்டார். மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிறது. நிறுத்தினால் மீண்டும் வந்துவிடுகிறது.ஸ்கேன் அது, இது என்று எவ்வளவோசெலவழித்துவிட்டார். ஒன்றும் பலனில்ல. இவருக்கு என்ன பிரச்சின?

"அவருக்கு ஏற்பட்டிருப்பதுடஸ்ட் அலர்ஜி என்று சொல்வதைவிட நேஷல் அலர்ஜி என்று சொல்வதான் சரியாக இருக்கும். மூக்கில்ஏற்படும் சிறுசிறு ஒவ்வாமையினைத்தான் நேஷல் அலர்ஜி என்று சொல்கிறோம். நேஷல் அலர்ஜிக்குப்பல காரணங்கள் இருக்கலாம். சில வகையான சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் இருக்கலாம். மீன், ஆட்டுக்கறி போன்ற உணவுகளினால் கூட, அந்த ஒவ்வாமை ஏற்படலாம்.


சிலருக்கு சில மாதிரியான வாசனையினை முகர்ந்தாலே அலர்ஜி ஆகிவிடும்.சிலருக்கு செண்ட் ஒத்துக் கொள்ளாது. எதனால் அலர்ஜி ஏற்படுகிற என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும்.

இந்த அலர்ஜி எப்போதாவது வந்தால் சமாளித்துவிடலாம். ஆனால், அடிக்கடி வந்தால் உடனே மருத்வரை அணுகுவது நல்லது.


நம்முடைய உடம்பில் பலவிதமான நோய் எதிர்ப்புச் சக்திக் கூறுகள்உண்டு. இதில் ஐ.ஜி.இ . என்கிற நோய் எதிர்ப்புச் சக்தி மிக அதிகமாக இருந்தாலும், இந்த ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.எனவே, அது தேவையான அளவுக்குமட்டுமே நம்முடய உடலில் இருக்கும்படி செய்ய வேண்டும்."

10.தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி

வயதாக ஆக அறிவும், அனுபவமும்அதிகமாகிறதோ இல்லையோ முதுகெலும்பைச் சுற்றியுள்ள மூட்டுகள் எல்லாமே பெருத்து, திசுக்களின் எலாஸ்டிக் தன்மை கடினமடைகின்றது.மேலும் எலும்புகளின் அடர்த்தி குறைந்து அதிர்வுகளைத் தாங்கும் சக்தி குறைகிறது என்பதும்உண்மை.


இதன் காரணமாக முதுகெலும்பின் நடுவில் உள்ள தண்டுவடத்திலிருந்துநரம்பு வெளியேறும் துவாரங்கள் தடைப்படுகின்றன. இதைத் தொடர்ந்து அந்த நரம்புக்கு வந்துசெல்லும் ரத்தத்தின் அளவும் குறைகிறது. எனவே தொடை, கால்மூட்டின் பின்புறம் ஆகியவை இழுத்தது போல் வலியுடன் கொஞ்சம்மரத்தும் போகிறது.

இந்த வலிக்குப் பலரும் காலில் கட்டுப் போட்டுக் கொண்டு தன்னையேஏமாற்றிக் கொள்கிறார்கள்.


சில சமயம் கால் மரத்துப் போவது போல் இருக்கும் போது தாங்களாகவேநியூரோபியான் போன்ற மாத்திரைகளை விழுங்கி ஏமாந்தவர்களும் உண்டு. இது தங்களது சர்க்கரைநோயினால் ஏற்பட்ட நிலை என்று தவறாக எண்ணும் மக்களும் உண்டு. (அப்படி எண்ணி சில மருத்துவர்களும்தவறான சிகிச்சை அளித்திருக்கிறார்கள்!).

காலிலோ தொடையிலோ வலியுடன் மரத்துப் போனால் காலில் கட்டுப் போடுவதுஅபத்தம். இதனால் அவஸ்தைகள் அதிகரிக்கும். உங்கள் காலுக்கு வந்து செல்ல வேண்டிய ரத்தஓட்டம் தடைப்படுகிறது.

டெலிபோன் கேபிளுக்கும் மின்சார கேபிளுக்கும் வித்தியாசம் உண்டு.தொலைபேசிக்கான கேபிள் நேரடியாக இணைப்பகத்தில் இருந்து ஒவ்வொரு தொலை பேசிக்கும் பிரத்யேகமாகஇணைக்கப்படுகிறது. மின்சார கேபிள் அப்படி பிரத்யேகமானது அல்ல.
நம் உடலில் மூளை தொடங்கி கால் நுனி வரை ஒவ்வொரு பாகத்துக்கும்குறிப்பிட்ட நரம்புகள் செல்கின்றன. தொலைபேசி கேபிள் போல பிரத்யேக இணைப்புகள்!

தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி என்றால் அங்குஉணர்ச்சிகளை எடுத்துச் செல்லும் குறிப்பிட்ட நரம்பு ஏதோ ஒருவித அழுத்தத்தைச் சந்திக்கிறதுஎன்று அர்த்தம்.

இந்த அழுத்தம் ஓரளவுக்கு மேல் அதிகமானால் அதைக் காலில் வலியாகஉணர்கிறீர்கள். இந்த நிலையில் வலி ஏற்படும் பகுதியை அழுத்தமாகக் கட்டுப் போட்டுக் கொண்டால்அங்கு வரும் ரத்த சப்ளை குறைந்தோ - ஏன் நின்றோ கூட போய்விடலாம். காலில் பச்சிலைக் கட்டிக்கொண்டாலோ ஏதாவது ஆயின் மெண்ட் தேய்த்துக் கொண்டாலோ இந்த வலி மறைவதில்லை. குறைவதுமில்லை.களிம்பு தயாரிக்கும் நிறுவனத்தைத் தவிர வேறு யாருக்கும் லாபம் இல்லை. பின் என்னதான்செய்வது?

பரிசோதனைக்குப் பிறகு எக்ஸ்ரேயில் முதுகு, இடுப்புக்கட்டு ஆகியவற்றைப் பார்க்கும்போதுமூட்டுப் பிடிப்பு நோயினால் வரும் தொடை வலியா அல்லது இடுப்புமூட்டுத் தேய்மானத்தால்வந்த வலியா என்பதைப் பெரும்பாலும்; கண்டுபிடித்துவிட முடியும்.
இடுப்பு மூட்டு தேய்மானத்தின் காரணமாகத் தொந்தரவு என்றால் தொடையின்உள்பகுதியிலோ, கால்மூட்டின் உள்ளேயோவலி ஏற்படக்கூடும். ஆனால் தொடை வலியுடன் மரத்துப் போகாது. நின்றாலும், நடந்தாலும், உட்கார்ந்தாலும் அங்கே பிடித்துக் கொள்வதுபோல் இருந்து நடக்க நடக்க வலி அதிகமாகலாம

ஆனால் முதுகுச் சிக்கலால் ஏற்பட்டால் தொடையிலிருந்து கால் வரை'சுரீர்"என்று இழுக்கும் உணர்வுஏற்படும். கணுக்கால் வரை பரவும். முதுகைச் சற்று திருப்பினாலோ குனிந்து வேலை செய்தாலோஇது அதிகமாகும்.

ஸியாடிகா எனும் இந்த வலி இருமினாலோ தும்மினாலோ அதிகரிக்கும்.படுத்த பிறகு கொஞ்சம் குறைந்து, புரண்டு விட்டுஎழுந்திருக்கும் போது இந்த வலி அதிகரிக்கும். காலில் "ஜிவ்' எனத் தோன்றிய இந்த வலி, காலைச் சற்று மடித்து வைத்தால் குறைந்ததுபோல் இருக்கும். முதுகுக்கு பிஸியோதெரபி தருவது மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இந்த வலியைக் குறைக்கமுடியும்.


வலி குறைந்தவுடன் தொப்பை இருப்பவர்கள் அதைக் குறைக்க வேண்டும்.முன்பு வலி ஏற்பட்டதே என்பதையே நினைத்துக்கொண்டு சோம்பலாக இருக்காமல் வேலைகளை இயன்றஅளவு சுறுசுறுப்பாகப் பார்த்து ஊளைச்சதையை ஏற்றிக் கொள்ளாமல் இருந்தாலே சிலருக்குத்தானாகவே சரியாகிவிடும்.

மேலே குறிப்பிட்ட அத்தனையையும் செய்து, கால் வலியும் தொடர்ந்தால் சிறப்பு சிகிச்சைதான்செய்தாக வேண்டும். முன்பெல்லாம் முதுகில் ஊசியால் குத்தி, மைலோகிராம் எனப்படும் ஒருவித வேதனையான சோதனையைச்செய்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
எந்த ஒரு சோதனையும் வலிக்கு மாற்றாக அமைய வேண்டுமே தவிர அதுவேஅதிக வலியை அளிப்பதாக இருந்துவிடக் கூடாது.


நல்லவேளையாக இப்போது எம்.ர்.ஐ. தொழில்நுட்பம் வந்துவிட்டது.முதுகெலும்பின் உள்ளே உள்ள நரம்புகள், தசை மற்றும்தசைநார்களின் தன்மையை இதன் மூலம் அறிய முடியும். நரம்புக்குள்ளும் பாதிப்பு இருந்தாலோ, நரம்புக் குழாயின் அளவு குறித்தோ இதன் மூலம்கண்டறிய முடியும்.

ஜவ்வு மிகவும் விலகி இருந்தாலோ, நரம்புக்குள் ரத்த ஓட்டம் குறைந்து தண்டுவடத்தில் கட்டி போல் உருவாகியிருந்தாலோ எம்.ர்.ஐ. ஸ்கானின் மூலம் துல்லியமாகக் கண்டுபிடித்துவிடலாம். இலேசான வலி என்றால் முதுகில் எபிட்யூரல் ஸ்டீராய்ட் எனும் ஊசி மருந்தைச் செலுத்தி சிலரது கால் வலியைக் குறைக்க முடியும்.

ஆனால் தொடைவலி அல்லது கால் வலி மிகவும் அதிகமாகப் போய்த் தூங்கமுடியாத அளவுக்கு வலி அதிகமானாலோ கூடவே கால் மரத்துப் போனாலோ கீழ்முதுகில் ஒரு சிறியபரேஷன் செய்வது அவசியமாகிறது.


நகர்ந்து போன ஜவ்வை அகற்ற வேண்டியிருக்கும். அல்லது முதுகெலும்பிலிருந்துகுறிப்பிட்ட நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக்கும் திசுக்களை அகற்ற வேண்டி இருக்கும்.அப்போது தான் கால் மற்றும் இடுப்பு வலி குறையும்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP