என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 5.

>> Saturday, November 8, 2008

மருத்துவம் பகுதி 5.

8. X’ ray எடுக்கனுமா? இதை கொஞ்சம் படியுங்கள்
7. மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்
6. உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்? 29/10
5.``எந்தெந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்” 26/10
4. இஸ்லாத்தின் நம்பிக்கையும் மருத்துவத்தின் உண்மையும் 22/10
3.தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள்
2.மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது
1.தேளின் நஞ்சும் மருந்தாகிறது

8. X’ ray எடுக்கனுமா? இதை கொஞ்சம் படியுங்கள்

`எக்ஸ் கதிர்களால் ஏற்படும் புற்றுநோய் வாய்ப்பு, அணுகுண்டால் ஏற்படும் புற்று நோய் வாய்ப்பை விட அதிகம்' John Goffman மருத்துவர், குறைந்தபட்ச கதிர்வீச்சு பாதிப்பு வல்லுநர்.
2005-ல் அமெரிக்க பொது சுகாதாரத்துறை சனவரி 31-ல் எக்ஸ் கதிர்கள் புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டவை (Careinogen) என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்தது. (Hindu, மார்ச் 31, 2005).

எந்த வயதில்‘X’ ray எடுக்கப்படுகிறது என்பது மிக முக்கியம். சிறு குழந்தைகளுக்கு புற்றுநோய் (குறிப்பாக இரத்தப் புற்றுநோய், தைராய்டு) ஏற்படும் வாய்ப்பு அதிகம். இள வயதினருக்கு குறிப்பாக பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம். வயது வந்தவர்களுக்கு (பெரியவர்களுக்கு) நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் `‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை கையாளுவது என்பது நடைமுறையில் முறையாக அமல்படுத்தப்படுவதில்லை என்பதை திரு. பார்த்தசாரதி (Hindu June முன்னாள் செயலர்) வேதனையுடன் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

அவை
1. IAEA (International Atomic Energy Agency) 12 வளரும் நாடுகளில் செய்த ஆய்வில் 53% எக்ஸ்ரேக்கள் சரியாக எடுக்கப்படவில்லை என்றும், அதனால் மீண்டும் ‘X’ ray எடுக்க வேண்டியிருப்பதால் மக்கள் தேவையற்ற அதிக கதிர்வீச்சிற்கு ஆளாகி பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதை American Journal of Roentgenology, June 2008 குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டுகிறார்.

இந்தியாவில் AERB (Atomic Energy Regulatory Board) க்கு ‘X’ ray தொடர்பான அனைத்து பாதுகாப்பு விதிமுறைகள் தெரிந்திருந்தும் அதை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை என்பதையும் தெளிவாக அவர் எழுதியுள்ளார்.
2. இந்தியாவில் 175 ‘X’ ray எடுக்கும் இடங்களை ஆய்வு செய்ததில், அவற்றில் 12% இடங்கள், நோயாளிகளை 200% மேல் தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு ஆளாக்கியது தெரிய வந்துள்ளது. ‘X’ ray எடுக்கும் முறை சரியாக இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனவும் தெரிய வந்துள்ளது.

3. மார்பக (Breast) புற்றுநோய் இருப்பதை அறிய Mainmo graphy எனும் பரிசோதனை செய்யும் மும்பையில் உள்ள 30 மருத்துவமனைகள் நோயாளிகளை தேவையற்ற கதிர்வீச்சு பாதிப்புக்கு உட்படுத்தியது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1994_ல் AERB செய்த ஆய்வில் 30% ‘X’ ray உபகரணங்கள் (30,000 உபகரணங்களை பரிசோதித்ததில்) 15 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்பதும், அதன் காரணமாக நோயாளிகள் அதிக கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் CT Scan பரிசோதனைகள் செய்யப்படுபவர்களில் 9% குழந்தைகள். 71 CT Scan பரிசோதனைக் கூடங்களை ஆய்வு செய்ததில் அவற்றில் 32 இடங்களில் குழந்தைகள் மிகவும் அபாயகரமான கதிர்வீச்சிற்கு தேவையற்று ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

குழந்தைகளுக்கு CT Scan எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம். மேலும், இந்தியாவில் எடுக்கப்படும் ‘X’ ray க்களில் 20% குழந்தைகள் மீதானவை என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் 2500 CT Scan மையங்கள் இருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை வளர்ந்தாலும், CT Scan மூலம் பெறப்படும் படங்களின் தரம் உயர்வது சரியாக நடைபெறவில்லை.

இதற்குத் தீர்வாக, அவர் ‘X’ ray எடுக்கும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை Atomic Energy (Radiation Protection) Rules 2004 தெளிவாக குறிப்பிட்டுள்ளது என்றும், அதை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், அதைக் கண்காணிக்கும் நிறுவனங்கள் மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இல்லாமல் அதிகாரம் பரவலாக்கப்பட்ட 5 நடைமுறை படுத்தப்படும் மையங்கள் அமைய வேண்டும் என்றும் ஆலோசனை தெரிவித்துள்ளார். AERB ‘X’ ray பாதுகாப்பு விதிமுறைகளை நடைமுறைப்படுத்த மாநில அளவில் உள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் விழித்துக் கொண்டால் மட்டுமே தேவையற்று நிகழும் கதிர்வீச்சு பாதிப்புகளை குறைக்க முடியும்.

மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கிறதா? என பார்ப்போம்.

(‘X’ ray எடுத்து 40 ஆண்டுகள் கழித்தபின் புற்றுநோய் ஏற்பட்டது மருத்துவ ஆய்வுகளில் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும்).

ஆக, தேவையற்ற ‘X’ ray எடுப்பதை தவிர்ப் பதே சிறந்தது. ‘

X’ ray எடுப்பதால் பெரும் பாதிப்பு வராது என கூறும் மருத்துவர்கள் தனது மகளுக்கு பேறு காலத்தில் சிறு குழந்தைகளுக்கு ‘X’ ray எடுக்கத் தயாரா?

கதிர்வீச்சை பொறுத்தமட்டில் இந்த அளவிற்கு மேல்தான் அபாயம் என்பதை சொல்வதற்கில்லை. (There is no safe dose) என்பது மனதில் கொள்ள வேண்டும். மிகச்சிறிய அளவும் பாதிப்பை உண்டாக்கலாம் என்பதை உணர்ந்து செயல்படுவதே சிறந்தது.

7.மூளைக்கு ஏற்ற சூப்பர் உணவுகள்

வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் – கே.எஸ்.சுப்ரமணி

மூளைக்குச் சரியான உணவு கிடைத்தால்தான் ஞாபக சக்தி, ஒருமுகக் கவனத்துடன் செயல்படும் ஆற்றல் முதலியன நமக்குக் கிடைக்கும்.

மூளைக்கு உதவும் சரியான உணவைத் தேர்ந்தெடுக்க ஓர் எளிய வழி உண்டு. பளபளப்பாக ஒளிரும் நிறத்தில் இருக்கும் உணவு வகைகள் பெரும்பாலும் மூளையின் பசியைப் போக்கும் முக்கிய உணவுகளாகும். ஏனென்றால் இந்த உணவு வகைகளில் போதுமான அளவு வைட்டமின்கள், தாது உப்புகள், பைட்டோ கெமிக்கல்கள் முதலியன உள்ளன.

இவை மூளையின் செயல் திறமை பாதிக்கப்படாதபடி பராமரித்து வருகின்றன. திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, காரட், செர்ரிப் பழங்கள் முதலியன இந்த வகையில் மூளைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் நல்ல உணவுகளாகும். இவற்றில் மூன்று M-கள் உள்ளன.

நல்ல மனப்பாங்கு (Mood) எப்போதும் செயல் நோக்கமாயிருத்தல் (Motivation) மன உறுதியாக எடுத்ததைச் செய்து முடித்தல் (Mental Performance) ஆகிய செயல் விளைவுகளை இந்த உணவுகள் ஏற்படுத்தியே தீரும்.

ஒரு வாரம் காரட் சாப்பிட்டவர்களையும், காரட் சாப்பிடாதவர்களையும் பரிசோதித்த போது, காரட் சாப்பிட்டவர்களின் அறிவாற்றலும், ஆர்வமும் மிகச்சிறப்பாக இருந்தது என்கிறது வர்ஜீனியா பல்கலைக் கழகத்தின் மனோதத்துவ பேராசிரியர் பால்கோல்ட் என்பவரின் ஆய்வு முடிவுகள்.

இந்த உணவுகள் மூலம் மூளையில் செரோட்டனின், அசிட்டின் கோலைன் என்ற இரசாயனப் பொருட்கள் உற்பத்தியாகி உடல் இயக்கத்தில் கலப்பதால் மேற்கண்ட மூன்று M-களும் நம்மிடம் எப்போதும் தொடரும்.

மூளைக்கு எப்போதும் ஞாபக சக்தித்திறன் இருக்க வேண்டும். அதற்குத் தேவை கொழுப்பு. வெண்ணெய், நெய் முதலியவற்றிலிருந்து கிடைக்கும் கொழுப்பு தீங்கானது.

மீனிலிருந்தும், மீன் எண்ணெயிலிருந்து கிடைக்கும் என்-3 என்ற கொழுப்பு அமிலமே தினமும் தேவை. மீன் உணவு சாப்பிட இயலாது எனில், மீன் எண்ணெய் மாத்திரை இரண்டு மட்டும் சாப்பிடுவது நல்லது என்கிறார் ஒரிகான் உடல்நல விஞ்ஞானப் பல்கலைக்கழகத்தின் மருத்துவத்துறைப் பேராசிரியர் வில்லியம் கான்னர் என்பவர்.

மூளையில் ஏற்படும் ஓட்டையைத் தையல்காரர்போல் சிறப்பாகதத் தைத்து மூளையை ஒழுங்காகச் செயல்படுத்துபவை, மீனும் மீன் எண்ணெயும் என்கிறார் இவர்.

திடீர் முடிவுகளை எல்லோருக்கும் நன்மையாக முடியும் விதத்தில் எடுக்க மீனும் ஏதேனும் ஓர் இனிப்புமே போதுமாம்.

'மீனா? உவ்வே!' என்பவர்கள் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றைப் பயன்படுத்தி வந்தால் போதும்.

உடலில் எந்த உறுப்பையும்விட அதிகமாக ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்வது மூளைதான். எனவே, மூளையின் செல்கள் அழிந்துவிடாமல் இருக்க பைட்டோ கெமிக்கல் உள்ள உணவுகள் தேவை.

இத்துடன் மூளை பலவீனம், குழப்பம், நோய்த்தாக்குதல், அல்ஜிமெர்ஸ் என்ற ஞாபக மறதிநோய் முதலியன ஏற்படாமல் இருக்க பி, ஏ, ஈ ஆகிய வைட்டமின் உள்ள உணவுகளும் தேவை.

இவற்றை எல்லாம் பார்த்துச் சாப்பிடவும் ஓர் எளிய வழி உண்டு.

மிகவும் கூர்மையாகச் சிந்தித்து முடிவு எடுக்கச் சர்க்கரை உதவும். இதற்கு பழம் அல்லது இனிப்பு வகைகள் சாப்பிடவும்.

அரிசி, ரொட்டி, கோதுமை, உருளைக்கிழங்கு முதலியன கோபம் மற்றும் பதற்றம் போன்ற உணர்ச்சிகளை மெல்ல மெல்லக் கட்டுபடுத்திவிடும்.

மூளையைச் சரியாக, பாதுகாப்பாக பராமரிப்பதுடன் நல்ல மனப்பாங்கையும், காரியத்தைச் செய்து முடிக்கும் விடா முயற்சியையும், பெர்சி மற்றும் செர்ரி பழங்கள், அப்ரிகாட், பீச், அவரைக்காய் முதலியன தந்துவிடுகின்றன.

மனதை அமைதிப்படுத்தி, தன்னம்பிக்கையை உணர்த்துவது வெள்ளைப்பூண்டு. மூளையின் செல்கள் வேகமாக அழிந்து போய்விடாமல் பாதுகாப்பதில் வெள்ளைப் பூண்டுக்கு நிகர் வேறு இல்லை.

ஞாபக சக்தி உள்ள உயிரினங்கள் எல்லாம் நீண்ட நாள் வாழ்கின்றன.

எனவே, ஞாபக சக்தி அழியாமல் இருக்க வெள்ளைப் பூண்டைத் தவறாமல் சாப்பிடவும்.

மேற்கண்ட உணவு வகைகள் தினமும் இடம் பெற்றால் வைட்டமின்களுடன் உடலுக்கு பைட்டோ கெமிக்கல் என்ற இராசயனப் பொருளும் கிடைக்கும். அறிவாற்றல் பத்து வயதில் இருந்து எண்பது வயதிலும் கூட மிகச்சிறப்பாக இருக்கும்.

எனவே, சோர்வான மனநிலை தொடர்ந்தால் மூளைக்குப் பசி எடுக்கிறது என்று தெரிந்து கொண்டு மேற்கண்ட உணவு வகைகளை எல்லா வயதுக்காரர்களும் பின்பற்றுவார்கள்.


6.உணவில் கறிவேப்பிலை சேர்ப்பது ஏன்?

கறிவேப்பிலை - பெயரைக் கேட்டதுமே சமையலில், உணவுப் பதார்த்தங்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படுவது என்று தான் பலரும் நினைப்பார்கள்.

ஆனால், அதிலும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருப்பது எவ்வளவுப் பேருக்குத் தெரியும்? அதனால்தான் காலங்காலமாக கறிவேப்பிலையை முன்னோர்கள் உணவில் பயன்படுத்தி வந்துள்ளனர்.

தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, உணவு தயாராகி சாப்பிடு கையில், கறிவேப்பிலையை பலர் தனியாகத் தூக்கி வைத்து விடுவதைப் பார்த்திருக்கிறோம்.

பொதுவாக காரியம் ஆகும்வரை காலைப் பிடித்துக் கொண்டு, அவர்களின் காரியங்கள் அனைத்தும் முடிந்ததும், நம்மை புறக்கணித்து விடுவோரைப் பார்த்து, கறிவேப்பிலை போன்று பயன்படுத்திக் கொண்டார்களே என்று வேடிக்கையாகக் கூறுவதுண்டு.

கறிவேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள் நிறைந்த சாறு, உணவில் முழுவதுமாக இறங்கி உணவுக்கு சுவை கூட்டுவதுடன், உடலுக்கு ஜீரணசக்தியை அளித்து பித்தம், வாயு, கபம் போன்றவற்றையும் போக்குகிறது.

எந்த உணவானாலும், கடைசியாக அவற்றை தாளிக்கும் தருணத்தில், ஒன்றிரண்டு கறிவேப்பிலைகளை கிள்ளிப் போட்டு இறக்கி வைப்பார்கள்.
மலச்சிக்கலை தவிர்த்து, தேவையான பசியைத் தூண்டும் வேலையையும் கறிவேப்பிலை செய்கிறது.

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து மற்றும் வெந்தயத்தை வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மிளகாய் மற்றும் தேவையான உப்பைச் சேர்த்து சட்னியாக செய்து இட்லி, தோசை போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம்.

கறிவேப்பிலை சட்னி சுவையைத் தருவதுடன் உடல் எடையை சீராக வைப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது.

கறிவேப்பிலையையும், பச்சைக் கொத்தமல்லியையும் சேர்த்தும் இதுபோன்று துவையல் அரைத்து சாப்பிடலாம். கறிவேப்பிலையைப் போலவே, மல்லி இலையும் ஜீரண சக்திக்கு முக்கியப் பங்காற்றக்கூடியது.

தவிர, கறிவேப்பிலை இலையை அரைத்து காய வைத்த பின், தேங்காய் எண்ணெய் அல்லது தலைமுடிக்கு உபயோகிக்கும் எண்ணெயில் போட்டு சில நாட்கள் ஊற வைத்து, அந்த எண்ணெயைத் தேய்த்து வர,நரை முடி நம்மை நெருங் காது. மேலும் முடி உதிர்தலையும் இந்த எண்ணெய் தடுத்து நிறுத்தும்.

உணவில் மட்டுமல்லாது, நமது புற ஆரோக்கியத்திற்கும் கறிவேப்பிலையின் பங்கு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.

5.``எந்தெந்த உடல் உறுப்புகளை தானம் செய்யலாம்”


``உடல் உறுப்பு தானம்'' என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலில் நின்று கொண்டு பரிதவிக்கும் ஒருவருக்கு, தாமாக முன்வந்து தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவதாகும்.

நம் உடலில் தானம் செய்யக்கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்விகளுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் அருணா ராமகிருஷ்ணன்.

"பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டு வித தானங்கம் தான் அதிக அளவில் இருந்து வருகின்றன. வேறு எந்தமாதிரியான உடல் தானங்கள் கொடுக்கப்படுகின்றன என்பதை சொல்லலாமே?''

"உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முதலாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இரண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது.

"உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன?''

"ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகுதி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.''

"இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன?''
"இரண்டு சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், நுரையீரல், குடல் முழுவதும், கண் விழித்திரை (கார்னியா).''

"யார் யார் உடல் உறுப்புக்களை தானமாக தரமுடியும்?''
"நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெபடைடீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாதவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.''

"உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா?''
"18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள்,அது ஆணாக இருந்தாலும் சரி அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி தாமாக முன் வந்து தானம் செய்யலாம்.''

"உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதி முறைகள் உள்ளனவா?''
"ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யலாம். என்றாலும் அதற்கென்று சில விதி முறைகள் உள்ளன.'' 1954 ஆம் ஆண்டு முதல் கடை பிடிக்கப்படும் விதிகள்:-

1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மாமா, அத்தை, சித்தப்பா, அவர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்தங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம்.

2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர்கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்பவர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமானவர்களும் தரலாம்.

3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர்களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தாமல், மற்றொரு நோயாளிக்கு பொருந்துமேயானால் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் சிறுநீரகங்களை பரிமாறிக் கொள்ளலாம்.

"தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா?''
"பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபாடீஸ் தான் காரணம்.
ஆனால் தானமாக பெற்ற உறுப்பை பொருத்துவதற்கு முன்னால் ``ப்ளாஸ்மா பெரிஸிஸ்'' என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார்கள். அவ்வாறு, மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.''

"உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தானம் செய்பவருக்கு ஏதாவது ஆபத்து இருக்கிறதா?''

"பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதில்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும் போது, இரண்டு உறுப்புகள் செய்ய வேண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும்,

ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொம்ளலாம்,பாதிப்பு இருக்காது. கல்லீரலின் ஒரு பகுதியை தானம் செய்த பின், தானாகவே மறுபடியும் வளர்ந்து விடும்.

நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமுள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை.

ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும்.

ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக்கூடாது, ஆன்டிபயாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட்டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி இருக்கக்கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பிட்டிருக்கக் கூடாது,

உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாகவோ இருக்கக்கூடாது. ரத்த சோகை இருக்கக்கூடாது, குறைந்தது மூன்று மாதங்களுக்கும் ரத்தானம் செய்திருக்கக் கூடாது. மற்ற அனைவரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.''

"வேறு என்னென்ன உறுப்புகளை தானமாக தர முடியும்?''
"கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ்ஜை (போன் மாரோ), ரத்த நாளங்கள், தோல், இதயம், இதயத்திலுள்ள வால்வுகள்,கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அனைத்தையும் தானமாக தரலாம்.

ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர்களுக்கு தன் உறுப்புக்களை தானமாக தர முடியும்.

ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரையீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோனரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருதயம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர்களுடைய நெருங்கிய உறவினரின் சம்மதம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக்களையும், திசுக்களையும், எடுத்து தேவையானவர்களுக்கு பொருத்தலாம்.
எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந்தாலும், எடுத்து மற்றவர்களுக்கு பொருத்தலாம்.

ஆனால் உடல் உறுப்புக்களான, இதயம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதாவது மூளை செயல் இழந்து,உயிர் மட்டும் ஊசலாடிக் கொண்டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன்படும்.''

"ஒருவரின் மூச்சு - சுவாசம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது?''
"ஒருவரின் சுவாசம் நின்றவுடன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளையின் செல்கள் செயல் இழந்து போகின்றன.

மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது.
பத்தாவது நிமிடத்தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படுகின்றன
நோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.''

"உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்?''
"உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உபயோகப்படும் ரசாயன கலவையை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத்தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக்கும்படி செய்கிறார்கள்.

கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன்படுத்தலாம். எடுக்கப்பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத்திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக்கப்படுகின்றது.

அந்த பாத்திரத்தை சுற்றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறைத்தும் போகக்கூடாது.

இதற்கென்று சில ரசாயன கலவைகம் உள்ளன. அவை ``வயாஸ்பான் திரவம்'', ``ïரோ கால்லின்ஸ்'' திரவம், ``கஸ்டோயியல்'' திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன.

சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நிலையில் வைத்தாலே போதும்.''

"முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டது?''
"நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக ``அலெக்ஸில்'' கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முதலாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணைத்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.''
1905 ஆம் வருடம் டிசம்பர் மாதம், டாக்டர் எட்வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறுவை சிகிச்சை செய்தார்.
1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது.
1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் ``பாஸ்டன்'' நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.

1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவமனையில், ரிச்சர்ட், ரோனால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டிற்கு பொருத்தினார்கள்.
1960 ஆம் ஆண்டு - ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார்.
1963 ஆம் ஆண்டு ``கொலராடோ'' விலும்ள டென்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்தவரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உபயோகித்தார்கள்.
1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் ``கேப்டவுன்'' நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.``டென்னிஸ் டார்வெல்''என்பவரின் இதயத்தை``லூயிஸ் வாஷ்கேன்ஸ்க்கி'' என்பவருக்கு பொருத்தினார்.

1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
1983 ஆம் ஆண்டு ``சர். மாக்டியா கூப்'' என்பவர் ஐரோப்பாவிலுள்ள மருத்துவமனையில், நுரையீரலையும், இதயத்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய்தார்.
1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார்.

2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார்.
2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக்களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை.

***
உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்?
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை
கல்லீரல் - 18 மணி நேரம் வரை
இதயம் - 5 மணி நேரம் வரை
இதயம்/ நுரையீரல் - 5 மணி நேரம் வரை
கணையம் - 20 மணி நேரம் வரை
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கம் வரை
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம், அதற்கு மேலும்
பொதுவாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். NANDRI TO : DINATHANDHI
-----------------------------------------------------------
4. இஸ்லாத்தின் நம்பிக்கையும் மருத்துவத்தின் உண்மையும்.
உலகினை உருவாக்கி அதில் தன் கலிபாவாக மனிதனை எவன் ஒருவன் உருவாக்கம் செய்தானோ அந்த ஓர் இறையின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்தும் ஒவ்வொரு செயலும் மனிதவாழ்வின் நலத்திற்கும் வளத்திற்கும் வழிகாட்டும் சிறப்பிற்குரியதாகும். தனது இறுதி மறையின் மூலம் மனித குலத்திற்கு நல்வழிகாட்டும் வல்லோன் மார்க்கத்தின் அடிப்படை கடமைகளான ஐந்தில் ஒன்றான நோன்பு என்பதின் தாக்கமும் அதன் அறிவுசார் மற்றும் அறிவியல் வெளிப்பாடு மருத்துவ உண்மைகள் என்ன என்பதை அலசி ஆராய்வோம்.

மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேரான வழியை தெரிவிக்ககூடியதாகவும் நன்மை தீமைகளை பிரிதறிவிக்க கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் என்னும் இறைவேதம் அருளப்பட்ட ரமளான் மாதத்தை நீங்கள் அடைந்துவிட்டால் அதில் நோன்பு நோற்கவும். (அல்குர்ஆன் 2:185)

ஆதமுடைய மக்களின் இரத்தம் ஓடுகின்ற இடங்கள் அனைத்திலும் ஷைத்தானும் சேர்ந்தே ஊடுருவுகிறான் அதனால் அவன்செல்லும் பாதையை நோன்பின் (பசியின்) மூலம் அடைந்துவிடுங்கள் (நபிமொழி)

புனித வேதம் இறங்கிய காலத்தில் நோன்பு நோற்க்கப்படுவதால் மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் ஆசைகளை கட்டுப்படுத்துதல் மனோ இச்சைகளை ஒழித்துக்கட்டுதல் ஆகியவைகள் வெளிப்படையாகக் கிடைக்கும் பொருட்டு இவைகள்தான் நோன்பின் நோக்கங்கள் என நம்பப்பட்டுவந்தாலும் உண்மையான இறையச்சநோக்கம் என்ன என்பதை அல்-குர்ஆன் கீழ்கண்டவாறு தெளிவாக அறிவிக்கின்றது

நம்பிக்கை கொண்டோரே நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டது நோன்பின் நோக்கம் - நோன்பு நோற்பவரை அது இறையச்சம் உள்ளவராக ஆக்கிவிடும் என்பதாகும்.

ரமளான் நோன்பிற்கு முன் ஒருவர் இறையச்சம் இல்லதவராக இருந்து புனித ரமளான் நோன்பிpருந்து இறையச்சமுள்ளவராக ஆகாவிட்டால் அவர் நோற்றது நோன்பே அல்ல.(ஆதாரம் : சிவகங்கை மாவட்ட உலமா சபை 2005 ல் வெளியிட்ட ரமளான் சிறப்புமலர் – பக்கம் 20 பத்தி 04)

இதையே இன்னும் சரியாக சொன்னால் நோன்பாளிகள் பலருக்கு அவர்களின் நோன்பின் பலன்களிருந்து பசித்திருப்தை தவிர வேறெதுவும் கிடைப்பதில்லை (நபிமொழி)

சஹர்(நோன்பு துவக்குவதற்கு சாப்பிடுவது) இஃப்தார் (நோன்பு திறப்பதற்கு சாப்பிடுவது) உணவுகளை எளிமையான உணவாக உட்கொள்வதும் குறைந்த அளவே உட்கொள்வதும் அறிவுடைமையாகும்.

அதுவே நோன்பின் குறிக்கோளை நிறைவு செய்வதாகவும் அமையும். மனித உறுப்புகள் இயங்கி அதனதன் பணிகள் நிறைவேற மனிதனுக்கு சுமார் 2500 கலோரி சக்தி தேவைப்படுகின்றது.

இதனை நாம் தினசரி சாப்பிடும்போது நமது உணவிலிருந்து பெற்றுக்கொள்கிறோம். சக்திகள் தேவைக்கு அதிகமாக கிடைத்துவிட்டால் அவைகள் கொழுப்பாக மாற்றப்பட்டு உடலில் தேக்கி வைக்கப்படுகின்றது. தேவைப்படும்போது அக்கொழுப்பில் இருந்து மீண்டும் தேவையான அளவு சக்தியை பெற்றுக்கொள்கின்றது நமது உடல்.

நோன்பு காலங்களில் சுமார் 13 அல்லது 14 மணிநேரம் உணவும் தண்ணீரும் தவிர்க்கப்படும்பொழுது உடலுக்கு ஊறு ஏற்படாமல் உடல் தன்னை அமைத்துக்கொள்வதுடன் மேலே கூறப்பட்ட கொழுப்பிலிருந்து அந்த நேரதேவைக்காண சக்தியை உடல் பெற்றுக்கொள்கின்றது. மேலும் உடல் அதன் வெப்பத்தை தனித்தும் தசைகளின் விரைப்பை குறைத்தும் உடலியக்க சக்திக்கு தேவையான அளவை குறைத்துக்கொள்கிறது. எனவே உடல்பணிகள் தொய்வின்றி தொடர்கின்றன.

நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் குளுக்கான் அளவு சற்று அதிகமாகவே காணப்படுவதால் அந்த நேரத்தில் நோன்பாளிகளுக்கு கேடு விளைவிக்கும் மற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

நோன்புடைய நேரத்தில் வயிற்றில் சுரக்கும் அமிலங்களின் நொதிகள் குறைந்த அளவே சுரக்கின்றன. எனவே ஜீரண சக்தி குறைந்தே காணப்படும். இதனால்தான நோன்பு திறப்பதற்கு தண்ணீரையும் பேரீத்தம் பழத்தையும் அண்ணலார் பயன்னடுத்தினார்கள்.
தண்ணீர் காய்ந்து கிடக்கும் வயிற்றுக்கு இதமாக அமையும் பேரீத்தம் பழம் அனைத்து சக்திகளும் பொதிந்த முழு உணவாகி ஜீரணப்பணிகளை மெல்லத்தூண்டும் பிறகு சற்று நேரம் கழித்து உணவு உண்பதால் எளிதில் ஜீரணிக்க ஏதுவாக அமையும்.

உடல் நோயிற்றிருக்கும் போது உணவை தவிர்ப்பதால் நிவாரணம் ஏற்படுகின்றது என்பதால்தான் பட்டினி ஒரு சிறந்த மருந்து (லங்கனம் பரம ஓளஷதம்) என்ற முதுமொழி வழக்கிலுள்ளது இதனையே இஸ்லாம் நோன்பு என்ற கட்டாயக்கடமையாக்கியுள்ளது.

இதை எங்குசென்றும் நாம் தெரிந்து கொள்ளவேண்டியதில்லை. ஆறறிவு அற்ற (Sixth Sense) பிராணிகள் நோயிற்றிருக்பொழுது அவை இரை திண்ண மறுப்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.

ஒரு மாத ரமளான் நோன்பின் போது ஜீரண உறுப்புக்கள் பணி ஓய்வு பெற்று செப்பனிட்டு புதுப்பிக்கப்படுகின்றன வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரப்பது குறைந்து வயிற்றில் ஏற்படும் புண்கள் விரவில் குணமாக நோன்பு உதவுகின்றது இதனை தெளிவு செய்ய எங்கும் போகவேண்டாம்

மனித சக்தியால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அறிவியல் உபகரணங்கள் மோட்டார் வாகனங்கள் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எந்திரங்கள் இவைகளை இத்தனை மணிநேரம் ஓடவிட்டால் இத்தனை கீ.மீ தூரம் ஓடிவிட்டால் சர்வீஸ் செய்துகொள்ளுங்கள் என்கிறோமே அதே போல்தான் 11 மாதங்கள் ஓடிய உடலுறுப்புகளை 1 மாதம் சுத்தம் செய்து நோன்பு என்ற போர்வையில் சாவீஸ் செய்து கொள்கிறோம்.

உடல் பருமன் உள்ளவர்கள் நோன்பிருப்பதால் கட்டுப்பாடான உணவினால் உடலைக்குறைத்துகொள்வதுடன் நோன்பு இரத்த நாளங்களின் மென்தன்மையை நீடிக்க செய்வதால் இரத்த நாளங்கள் தடித்து உயர் இரத்த அழுத்தம் மாரடைப்பு முதலிய கடுமையான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

தொடர்ந்து ஆண்டுதோறும் 1 மாத காலம் நோன்பிருப்பவரின் ஆயட்காலம் அதிகரிப்பதுடன் உயர்ந்த இறையுணர்வு வழங்கி உணவிலும்; உறக்கத்திலும் கட்டுப்பாட்டை தோற்றுவித்து ஒழுக்கத்தையும் புலனின்பங்களை வென்றுவிடும் மன வலிமையை தந்து மனித வாழ்வை சிறக்க செய்கின்றது.

இதனால்தான் அண்ணல் நபி(ஸல்) அருளியுள்ளார்கள்.
நோன்பு என்பது மனித குலத்திற்கு ஓர் கேடயமாகும் (நபி மொழி)

1. நோன்பு பசியையும் தாகத்தையும் முறியடித்து ஐம்புலன் ஆசைகள் என்ற கோட்டையையும் தகர்த்து விடுகின்றது (அல்லாம இக்பால்)
2. நோன்பு நோற்பதால் மனநிம்மதி கிடைக்கின்றது இச்சைகளின் வேகம் குறைகின்றது கெட்டவைகளும் பாவங்களும் விலகிச்செல்கின்றன(டாக்டர் மைக்கேல்)
3. நோன்பு ஆத்ம நோய்களுக்கு பரிகாரம் அது ஆத்மாவை பரிசுத்தம் அடைய செய்கிறது. (டாக்டர் சாமுவேல்)
4. இஸ்லாமிய நோன்பு மனிதனை எதையும் தாங்கும் இதயம் உள்ளவராக மாற்றுகின்றது. அதேசமயம் வறுமையில் வாடும் ஏழைமக்களின் பசி உணர்வு இவைகளை அறிய துணைபுரிகின்றது. (டாக்டர் ராபர்ட் ஜான்)

மேலே கண்ட அறிஞர்களின் கருத்துபடியும் நமது கட்டுரையில் கண்டுள்ள ஆய்வின் படியும் நோன்பு என்பது அறிவியல் வெளிப்பாட்டுடன் கூடிய மனநிறைவான தாக்கமே என புலனாகிறது அதனால்தான் இஸ்லாம் மனித குலத்திற்கு நோன்பை கட்டாயக்கடமையாக்கியுள்ளது எனக்கூறி எனது சிற்றறிவிற்கு தெரிந்த ஒரு சில விஷயங்களை இக்கட்டுரையின் மூலம் சமர்ப்பிப்பதில் பெருமைகொள்கிறேன். இன்ஷாஅல்லா கட்டுரைகள் பல இன்னும் தொடரும் . . . . . . வ ஆகிரிதாவன ரப்பில் ஆலமீன் T.S.. ஜாகிரா தஸ்னீம் ......T.S.. ஜாகிரா தஸ்னீம், இளங்கலை பட்டம், கணினியுடன் வணிகவியல், இரண்டாம் ஆண்டு, 22 பெரியமீரான் தெரு, இளையான்குடி – 630702

கட்டுரை எழுதியிருக்கும் T.S.. ஜாகிரா தஸ்னீம் ) சகோதரியும், தூங்காலயன் அப்துல் ரசாக் ஷானவாஸ் - ஆமத்தூரான் அப்பாஸ் ரஹ்ம்த்னிஷா தம்பதியரின் குமாரத்திகளில் ஒருவர் .

3.தொற்றுநோயைத் தவிர்க்கும் பழம்-காய்கறிகள்

பழங்கள், காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதால்,அவற்றில் காணப் படும் குவர்சடின் எனும் வேதிப் பொருள் நமது உடலில் `ஃப்ளூ' போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைப்பதோடு, மன அழுத்தத்தை தாங்கக்கூடிய சக்தி யையும் அளிக்கிறது.

தடகள வீரர்கள், ராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் கடுமையான பயிற்சியில் ஈடுபடும்போது இந்த வேதிப்பொருள், அவர்களின் உடலுக்கு தாங்கும் திறனைக் கொடுக்கிறது. திராட்சை உள்ளிட்ட பல்வேறுவகை பழங்களிலும், சிவப்பு வெங்காயம் மற்றும் காய்கறிகளிலும், தேநீரிலும் குவர்சடின் வேதிப்பொருள் காணப்படுகிறது.


எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனையின் அடிப்படையில் குவர்சடின் வேதிப்பொருள் மனிதர்களுக்கும் செயல்படக்கூடியது என்பதால், பழங்கள்-காய்கறிகளை அதிக அளவில் சாப்பிடுவோருக்கு நோய்த் தாக்குதல் குறைவு என்று தெரியவந்துள்ளது.

எலிகளை தீவிர சோதனைக்குட்படுத்தி, அவற்றை குவர்சடின் உள்ள பொருட்களை உணவாகக் கொடுத்து ஒரு பிரிவாகவும், குவர்சடின் இடம்பெறாத உணவுப் பொருட்களைக் கொடுத்து வேறு ஒரு பிரிவாகவும் பிரித்து சோதிக்கப்பட்டது.

அந்த எலிகள் அனைத்தும் ஹெச்1என்1 வைரஸ் செலுத்துதலுக்கு உட்படுத்தப்பட்டு சோதித்துப் பார்க்கப்பட்டன. இதில் குவர்சடின் வேதிப்பொருள் கொண்ட உணவைச் சாப்பிட்டதுடன் கடுமையான உடற்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட எலிகளுக்கு வைரஸ் நோய் தாக்குதல் குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

2.மீன் சாப்பிட்டால் இதய நோய் வராது

மீன் உள்ளிட்ட கடல் வகை உணவுகளைச் சாப்பிட்டால் இதய நோய் வராது என்பது அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மீன் உள்ளிட்ட கடல் உணவு வகைகளை தொடர்ந்து நாம் சாப்பிட்டு வந்தால் இதய ரத்த நாளங்களில் கொழுப்பு படியாது என்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காலேஜ் ஆப் கார்டியோலோஜி பத்திரிகையில் இந்த ஆய்வு குறித்து விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடல் வாழ் மீன் வகைகளில் உள்ள ஒமேகா3 எண்ணெய் இதயத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது. ஜப்பானில் இதய நோய் மற்றும் மாரடைப்பு மிக மிகக் குறைவாக இருப்பதற்கு அவர்களது அன்றாட உணவில் மீன் இடம் பெறுவதே காரணம்.

40 வயதிலிருந்து 49 வயதுக்குள்பட்ட 868 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில்281 பேர் ஜப்பானைச் சேர்ந்தவர்கள். 306 பேர் வெள்ளையர்கள். 281 பேர் அமெரிக்காவில் வசிக்கும் ஜப்பானியர்கள்.

இவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்பட அனைத்து சோதனைகளும் செய்யப்பட்டன. இதய ரத்த நாளங்களின் அடர்த்தி, கொழுப்புச் சத்து ஆகியவை கணக்கிடப்பட்டன.

அதுபோல் ரத்தத்தில் கால்சியத்தின் படிவு எவ்வளவு என்பதெல்லாம் சோதனை மூலம் பதிவு செய்யப்பட்டது. இதில் மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்கள் உடலில் இதய நோய்களைத் தடுக்கும் ஒமேகா 3 எண்ணெய் மற்றவர் களை விட இரண்டு மடங்கு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வெள்ளையர்களுக்கும் அமெரிக்காவில் வாழும் ஜப்பானியர்களுக்கும் ஒமேகா 3 எண்ணெய் ஒரே அளவில் தான் இருந்தது. எனவே மீன்களை அதிகம் சாப்பிடும் ஜப்பானியர்களுக்கு ரத்தத்தில் ஒமேகா 3 எண்ணெய் அதிக அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

1.தேளின் நஞ்சும் மருந்தாகிறது

தேளின் நஞ்சு கட்டிகளைக் குணப்படுத்தும் மருத்துவ குணம் உள்ளதாம். கட்டிகள் என்றால் புற்று நோய்க் கட்டிகள். அதிலும் குறிப்பாக அறுவை செய்து அகற்ற முடியாத கட்டிகளைக் குணமாக்கும் ஆற்றல் உள்ளதாம். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டும் இந்த நஞ்சு தாக்குமாம். நல்ல நிலையில் உள்ள செல்களைத் தாக்காதாம்.

தேளின் நஞ்சு மனிதர்களைக் கொல்லக் கூடிய அளவு நச்சுத் தன்மை கொண்டது அல்ல. மார்பு, தோல், மூளை, நுரையீரல் ஆகிய இடங்களில் பாதிக்கும் புற்றுநோய் செல்களைத் தாக்கும் நச்சுத் தன்மை உள்ளது என்பதை ஆய்வுகள் வெளிப் படுத்துகின்றன. இதன் நஞ்சை 59 நோயர்களுக்குச் செலுத்திப் பார்த்ததில், நோயால் இறந்துவரும் காலத்தை விடக் கூடுதலாக 3 மாதங்கள் உயிருடன் இருந்திருக்கிறார்கள். இந்த ஆய்வை மாசசூசட்ஸ் ஆய்வு நிலையம் செய்து பார்த்துள்ளது.

சிகாகோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலவிதப் புற்றுநோயர்களுக்குச் செலுத்திப் பரிசோதனை செய்து வருகின்றனர். அதேபோல, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் நோயர்களுக்கு தேளின் நஞ்சை கீமோதெரபி மருந்துடன் சேர்த்து செலுத்தி ஆய்ந்து வருகின்றனர்.

தொடக்க நிலையில் இருந்து வரும் ஆய்வுகள் மேலும் நம்பிக்கையைத் தரும் வகையில் அமைந்திருப்பதால், ஆய்வுகள் தொடர்கின்றன. மருந்தே கண்டுபிடிக்க முடியாத இந்த நோய்க்கு முடிவைத் தரும் மருந்தை மருத்துவ அறிவியல் கண்டுபிடித்து மனித குலத்தைக் காப்பாற்றும் என நம்பிக்கை துளிர்க்கிறது.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP