என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 3

>> Saturday, November 8, 2008

Type your summary here
மருத்துவம். வாஞ்ஜுர்

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!! உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

ஆப்பிள் பயன்கள-- .குழந்தை நோஞ்சானா?-- வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?-- தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?-- வேனல் கட்டி தொல்லையா?-- இளநீர்-- சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?-- இன்சுலினுக்கு இணையான பாகற்காய்.-- பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்-- வாயுத் தொல்லை-- டிப்ஸ்...டிப்ஸ்...--பூண்டு-- எலுமிச்சம் பழம்--விரட்டுவோம் குறட்டையை--பப்பாளி--பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு!

ஆப்பிள் பயன்கள.

ஆப்பிள் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப் படுத்தும். வைட்டமின்குறைவால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும். உடல் செயல்களை ஒழுங்குபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும்.

ஆப்பிளை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். அப்படியே கடித்துஉண்ணலாம். பழத்தை நறுக்கி மிக்ஸியிலிட்டு கூழாக்கி தேன் சேர்த்தோ, பால் சேர்த்தோ அருந்தலாம். பழச்சாறாக்கி தேவையானஇனிப்பு, ஒரு ஏலக் காய் சேர்த்துஅருந்தலாம். ஜாம் பழக்கூழ் செய்து பயன்படுத்தலாம். பழுக்காத ஆப்பிள் காயை கொண்டு சட்டினி செய்யலாம்.

எவ்வடிவில்உண்டாலும் அனைத்து சத்துக்களும் தாராளமாகக் கிடைக்கும். ஆப்பிள் தோலிலும் சத்து உள்ளதால்தோலை சீவி எறிந்துவிட வேண்டாம்.

குழந்தைகளுக்கு ஆப்பிளை கொடுத்துவர அவர்களின் எலும்பு வளர்ச்சிக்கும், பற்களின் உறுதிக்கும் உதவுகிறது. ஆப்பிள்சாறு அருந்திவர தோல் சுருக்கம் மாறி உடல் பளபளப்பாகும்.

இளைஞர்களைவிட வயதானவர்களுக்கு அதிக சக்தி ஊட்டக் கூடிய கனி ஆப்பிளாகும்.ரத்த விருத்தியை அதிகப்படுத்தும் ஆப்பிளுக்கு தோல் சுருக்கத்தைகுறைக்கும் ஆற்றலும் உண்டு.

சிலவகையான நோய்களை வர விடாமல் செய்கின்ற சக்தியும் ஆப்பிளுக்குஉள்ளது. நீரிழிவு, வலிப்பு நோய், ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய் போன்றவற்றை வர விடாமல் செய்யும்.ஆப்பிள் பழத்தை நறுக்கி சுத்தமான தேனில் நனைத்துச் சாப்பிட வேண்டும்.சில வாரங்களாவது சாப்பிட வேண்டும். அதன் பிறகு உங்கள் கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த ஒளியையும் பெறும்.

ஆப்பிளில் உள்ள பெக்டின் என்ற நார்ப்பொருள், கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

குழந்தை நோஞ்சானா? கவலை வேண்டாம்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து கொடுங்கள். உடல் எடை அதிகரிக்கும்.குழந்தைகளுக்கு பாசிப்பருப்பு அல்லது பொட்டுக்கடலை மாவு முறுக்கு, உருண்டை, கேப்பை ரொட்டி, வேர்க்கடலைமுதலிய வற்றை தினமும் கொடுத்து வந்தால் திடகாத்திரமாக வளருவார்கள்.

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய்துர்நாற்றம்நீங்கும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப்பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க, முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா? வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீதுதடவி வர அது உடையும்.தினமும் சப்போட்டா பழம் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் அண்டாது.

பொன்னாங்கண்ணி கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். உடம்பில் உள் சூடும் குறையும்.இக்கீரையின் தைலத்தை தலை முழுகப் பயன்படுத்தி வந்தால் கண் நோய் அண்டாது. உடல் சூடுதணியும். அரைக் கீரை தைலமும் உடல் சூட்டைத் தணிக்கும்.

பாகற்காய் வற்றலை உணவுடன் உண்டு வந்தால் மூலம், காமாலை நோய் தீரும்.

ஹோட்டல்களில் சாப்பிடுவதால் ஏற்படும் நாக்குப் பூச்சித்தொல்லை, சிறுவர்களுக்குஏற்படும் வயிற்றுப் பூச்சித் தொல்லை நீங்க சுண்டைக்காயை உணவுடன் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

இரவு உணவில் சுண்டைக்காய் வற்றலை சேர்த்து வந்தால் ஆஸ்துமா, நெஞ்சு சளி, காச நோய் நீங்கும். வயிற்றுப் போக்கும் நிற்கும்.கற்கண்டு, இஞ்சி சாறு சேர்த்து அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

இஞ்சி ஊறுகாய் ஜீரணத்துக்குப் பயன்படும். பித்தத்தைத் தணிக்கும்.

மருதாணி இலையை எலுமிச்சைச் சாற்றில் கலந்து அரைத்துகட்டினால் குதிகால் வாதம், பாத எரிச்சல் தீரும்.துளசி இலையை வாயில் போட்டு மென்று தின்றால் பல் வலி, கூச்சம் நீங்கும். சில இலைகளைக் கசக்கி முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு நீங்கும்.

வேப்பிலையை அரைத்து கட்டி வந்தால் ஆறாத ரணமும் ஆறும்.உடையாத பழுத்த கட்டியும் உடையும்.


இளநீர்
உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து இரத்தத்தில் சேர வேண்டிய தாதுஉப்புக்களைச்சேர்த்து, உடலின் செயல்திறனைஊக்குவிக்கிறது.இளநீர், இயற்கை அளித்தஇனிய பானம் மட்டுமல்ல.. பிணிகளைத் தீர்க்கும் மாமருந்தும் ஆகும்.

இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் இரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.

மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ,ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்குக் காரணமாக வரும் இரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.

பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது டாக்டரிடம் செல்வதற்குமுன் 2 டம்ளர் இளநீர் சாப்பிடுவது என்பது1 பாட்டில் சலைன் வாட்டர் ஏற்றுவதற்குச் சமமாகும்.

நீர்க்கடுப்பு மே, ஜூன் ஆகியஇரு மாதங்களிலும் வெயில் தகிக்கும். அப்போது வியர்வை ஏராளமாக வெளியேறுவதால் சிறுநீரகம்வற்றித் தடித்துச் சிவந்து சொட்டு சொட்டாகப் போகும். அப்போது 2 டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.

சிறுநீர்த் தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் PUS CELLS அதிகமாகி எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம்அரைக்கால் ஸ்பூன் தூள் செய்து கலந்து பருகிவர,5 நாளில் அவை நீங்கும்..

பெண்களின் மாத விலக்கின் போது அடிவயிறு வலிக்கும். அதற்கும் இளநீரே மருந்து.

உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.பேதி, சீதபேதி,இ,ரத்த பேதிஆகும்போது மற்றெல்லா உணவுகளையும் தவிர்த்துவிட்டு உடனடியாக இளநீர் பருகிவர, உடல் அசதி, மயக்கம் வராது.

சிறுநீரகக்கல், சதையடைப்பு URINARYINFECTION; போன்ற கோளாறுகள் வந்துவிட்டால்முதல் மருந்தே இளநீர் தான்.

கோடைகாலம் மட்டுமின்றி எல்லாக் காலங்களிலும் அருந்தக் கூடியஇனிப்பும் குளிர்ச்சியும் கொண்ட இளநீரை அருந்தி வந்தால் உடல் வளமை பெற்று நோயற்று, புண்,ரணம் ஏதுமின்றி ஆரோக்கியத்துடன் வாழலாம்.

கூல்டிரிங்க்ஸ், ஐஸ்கிரீம்ஆகியவற்றை விட உடலுக்குப் பல மடங்கு நலம் தருமஇளநீரை இயற்கைப் பானமாக பயன்படுத்துவதே ஆரோக்கியமான வழி.

டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்திபேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.

அறுவை சிகிச்சைகளுக்குப் பின் திரவ ஆகாரம் மட்டுமேசாப்பிட வேண்டிய சமயங்களில் இளநீருக்கு முன்னுரிமை வழங்கி உபயோகித்தால் அறுவைச் சிகிக்சைபபுண் OPERATION SORE சீக்கிரம் ஆறிவிடும்..

உணவு எளிதில் ஜீரணமாவதற்கு இளநீரில் உள்ள தாதுக்கள் பயன்படுவதால்ஜீரண உறுப்புக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு வாந்தி வரும்போது இளநீர் கொடுத்தால்வாந்தி கட்டுப்படும். நாக்கு வறட்சி நீங்கும

நீரழிவு நோயாளிகள் சர்க்கரை வியாதிக்கு எளியவைத்தியம் தெரியுமா?

தினமும் ஒரு முறை அல்லது இரு முறை வெந்தயத்தூள் சாப்பிட வேண்டும்.சளித் தொல்லை உடையவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளலாம்.காய வைத்த வெந்தயத்தை பொடியாக்கி கொள்ளுங்கள்.

காய்ச்சி ஆறிய தண்ணீரில் பொடியை போட்டு கலக்கி, தினமும் குடித்துவந்தால் சர்க்கரை வியாதிக்கு டாடா காட்டி விடலாம்.

வெந்தயத்தை நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை3 தேக்கரண்டி அளவு எடுத்து அரை டம்ளர் வெது வெதுப்பான நீரில் கலந்து களிபோல் ஆக்கி காலை, இரவு வெறும் வயிற்றில் உண்டு வர மூன்று வாரத்தில் நீரீழிவு நோய்கட்டுப்படும்.

இதனுடன் தொடர்ந்து நீரீழிவு நோய்க்கான மாத்திரைகளை மூன்று வாரம்சாப்பிட்டு வந்து பின் மாத்திரை களை நிறுத்திவிட்டு வந்தயப் பொடியை உட்கொண்டும், நீரீழிவு நோய்க்கான யோகாசனங்களையும் செய்துவர நீரீழிவு நோய் கட்டுப்படுவதுடன் இந்த நோயைதொடர்ந்து வரும் மற்ற நோய்களில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளலாம்.

வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து காணப்படுவதாகவும், இதை சாப்பிடுவதால் பசி மந்தப்படுவதாகவும்நிரூபித்து உள்ளார்கள். நீரீழிவு நோயாளிகளுக்கு உணவு கட்டுப்பாடு மிக முக்கியம். இந்தவெந்தயமானது பசியை மந்தப்படுத்தி உணவை கட்டுப்படுத்துவதால் நீhயீழிவு நோயையும் கட்டுப்படுத்தும் என்பதில்எள்ளளவும் சந்தேகமும் இல்ல

இன்சுலினுக்கு இணையான பாகற்காய். பாகற்காயில், இன்சுலின்போன்ற ஒரு பொருள்சுரந்து, மனிதனின்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாக பிரீட்டனில் கண்டு பிடித்துள்ளனரஃ தினசரீ காலையில் வெறும் வயிற்றில் நாலைந்து பாகற்பழங்களை பிழிந்துசாறு எடுத்து சாப்பிட்டுவர, இன்சுலினைகுறைத்துக் கொள்ளலாம்.

வாரம் 1 நாள் சமைத்துண்ண நீரிழிவைத் தடுக்கலாம். வாரம் 2 நாள் - 3 நாள் பாகற்காய் சாறு, சூப் சாப்பிட்டு வர,நீரிழிவைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம

ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை க்ளைகோஜன் என்னும்சேமிப்புப் பொருளாக மாற்றுவதற்கு உதவி புரிகின்றது.ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையினை ஆற்றலாகச் செலவிடும் திறனை அதிகரிக்கின்றது.

நீரிழிவு நோயினை உடைய அன்பர்களே பாகற்காயினை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு நீரிழிவு நோயினை வெல்லுங்கள். சாப்பிட வேண்டிய காய்கறிகள் : கத்தரீக்காய், அவரைக்காய், வெண்டைக்காய், கொத்த வரங்காய், வெண் பூசணி, வெள்ளை முள்ளங்கி, முருங்கைக்காய், புடலங்காய், பலாக்காய், பாகற்காய், வெங்காயம், காலிபி;ளவர், முட்டை கோஸ், வாழைத்தண்டு, வாழைப்பூ, சிவப்பு முள்ளங்கி, சுரைக்காய்போன்றவை.

முருங்கைக் கீரையை நாள் தவறாமல் கொண்டு வந்து நெய்விட்டு வதக்கி பொரியல் செய்து பகல் உணவில் சாப்பிட்டுவர சர்க்கரை நோயாளிக்கு உடம்பில் சர்க்கரை நோய் நீங்கி சுகம் பெறலாம்.

1 மண்டலம் முதல் 2, 3 மண்டலம் நோய்க்குத் தக்கபடி சாப்பிட்டு வருவது சிறப்பு.சாப்பிடக்கூடாத காய்கறிகள் : வாழைக்காய், உருளைக்கிழங்கு, காரட், பீட்ரூட், கருணைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சர்க்கரைப் பூசணி, கிழங்கு வகைகள், பீன்ஸ்..ஃசர்க்கரை நோயாளிகள்,பச்சைக் காய்கறிகளையே முழுவதும் உண்டால்,மிகுந்துள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும

சாப்பிட வேண்டிய பழங்கள் :ஆப்பிள், வாழை,ஆரஞ்சு, பேரீக்காய், பப்பாளி, வெள்ளரீப்பழம், கொய்யாப்பழம்.

சாப்பிடக்கூடாத பழங்கள் : பேரீச்சம் பழம், பலாப்பழம், உலர்ந்த பழ வகைகள், பெரீய வாழைப்பழம், டின்னில் அடைக்கப்பட்ட பழ வகைகள், பெரீய ஆப்பிள், பெரீய மாம்பழம், பெரீய கொய்யாப்பழம், சப்போட்டா.

அருந்த வேண்டிய பானங்கள் : சர்க்கரையில்லாத காபி, டீ,பால், சர்க்கரை சேர்க்காதஎலுமிச்சைஜூஸ், தக்காளி சூப், சோடா. .சாப்பிடக்கூடாத பானங்கள் : சர்பத் வகைகள், சர்க்கரை வகைகள், இளநீர், தேன், மதுவகைகள், ஆப்பிள் ஜூஸ், ஐஸ்கிரீம், பாதாம், கற்கண்டு, வெல்லம், பாயாசம், முந்திரி, கடலை,கேக் முதலியவை.

இன்சுலின் வழக்கத்துக்கு மாறாக நிறம் மாறி இருந்தால் பயன்படுத்த வேண்டாம்.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால்சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பச்சையாக வெங்காயத்தை சாப்பிடவேண்டும். அதாவது வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 100 கிராம் அளவுக்கு எடுத்து தயிரீல் பச்சடியாகதயார் செய்து சாப்பிட வேண்டும். அல்லது கேழ்வரகு, கோதுமை போன்ற கஞ்சிகளில் கலந்தும் சாப்பிடலாம்.நீரீழிவு நோயாளிகள் பொதுவாக அளவுச் சாப்பாடு சாப்பிட வேண்டும்.உடற்பயிற்சிகள் செய்தல் வேண்டும். உணவில் கசப்பையும், துவர்ப்பையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்

பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்

அந்தக் காலத்தில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டு பகையாளியாகி விட்டால்விருந்துகளில் நஞ்சு கலந்து கொன்று விடுவார்களாம். அவ்வாறு நேராதிருக்க பங்காளி, பகையாளி வீடுகளில் விருந்துக்குச் செல்லும் போது 10 மிளகை தூள் செய்து 1 வெற்றிலையில் வைத்து மென்று விழுங்கி விடுவார்களாம்.

அப்போது அந்த விருந்தில் ஏதாவது நஞ்சு இருந்தால் அது முறிந்துஉயிரைக் காப்பாற்றி விடுமாம்.

உண்மை சம்பவம். -1952ல் என் சிறிய தங்கை5 வயதில் அறியாது கடுமையானதொரு எலி பாஷாணத்தை உட்கொண்டு விட்டார்.துடி துடித்து செய்வதறியாது அருகில் குடியிருந்த கருத்த தம்பி பாவலர் அவர்களடைம் தங்கையை தூக்கிச் சென்றேன்.அவர்கள் உடனே 10 மிளகை தூள் செய்து தேனில் குழைத்து ஊட்டச் சொன்னார்கள்.அதன்படி செய்ததில் எல்லாம் வல்ல இறையவனின் நல்லருளால் என் தங்கைக்கு நலம் கிட்டியது.--வாஞ்ஜுர்]

எல்லாம் நஞ்சுமயம் நம்முடைய இன்றைய வாழ்வில் நஞ்சுமயம் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.குடிக்கின்ற தண்ணீரில் நஞ்சு. இழுக்கின்ற மூச்சில் நஞ்சு . சாப்பிடுகின்ற உணவில் நஞ்சு.

இப்படி முக்கால் மூணு வீசம் நஞ்சுமயமாகிவிட்ட நம் அன்றாட வாழ்வில் .இதன் பாதிப்பு- உடலில் இரத்தமும் நஞ்சுமயமாகி இறுதியில் வயிறு, இதயம், கல்லீரல், மூளை, சிறுநீரகம் என்று முக்கிய உறுப்புகளில் நஞ்சுசேர்ந்து அவை சிர்குலைகின்றன.

இவற்றை இணைத்துச் செயல்பட வைக்கும் இரத்தக் குழாய்களில் இந்த நஞ்சுகள் உப்புப் படிவம், கொழுப்புத் திரட்சிகளாகப் படிந்து இறுதியில் இதயம், சிறுநீரகம், மூளை ஆகியவற்றை சேதமுறச் செய்கின்றன.

ஆக மெல்லக் கொல்லும் இந்த நஞ்சுகளை அவ்வப்போது அகற்ற வேண்டும்.அதற்கு என்ன மருந்து சாப்பிட வேண்டும் என்று கேட்கின்றீர்களா?

அதைச் சாப்பிட்டால் இரத்தத்தில் நஞ்சு முறியும். அது என்ன?

பத்து மிளகைத் தூள் செய்து தினசரி மோரிலோ, தேனிலோ அல்லது 1 பிடி சாதத்துடனோ பிசைந்து சாப்பிட்டால் போதும்.காலை - இரவு என இப்படி தினசரி இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சேரும் எல்லாநஞ்சுகளும் முறியும

வாயுத் தொல்லை வாயுத் தொல்லை பல காரணங்களால் ஏற்படலாம். நாம் உணவைச் சாப்பிடும்போது சிறிது வாயு நம் வயிற்றுக்குள் செல்கிறது. தவிர, சில வகை உணவுப் பொருட்கள் சிறுகுடலில் சரியாகச்செரிமானம் ஆகாமல், பெருங்குடலுக்குச்செல்கையில் புளித்து நுரைக்கும். அப்படியும் கியாஸ் உருவாகும்.

வாயுத் தொல்லையை விரட்டிட இதோ சில வழிகள்:1. வாயுப் பிரச்சினைஉள்ளவர்கள் செரிக்க எளிதான உணவுகளை, சாவகாசமாகமென்று சாப்பிட வேண்டும்.2. உருளைக்கிழங்கு, வாழைக்காய், காலிஃப்ளவர் போன்ற வாயுப் பதார்த்தங்களைத் தவிர்க்கலாம்.3. டென்ஷன் தவிர்க்கவேண்டும்.

பதற்றமும், படபடப்பும் அஜீரணத்தைஏற்படுத்தும். அஜீரணத்தால் வாயுத் தொல்லை உருவாகும்.

4. காலையில் வெறும் வயிற்றில் 2 டம்ளர் நீர் அருந்தி வந்தால், வாயுத் தொல்லை நீங்கும். வாயுத்தொல்லை உள்ளவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.இயற்கையான உணவு வகைகளை அதிகம் சேர்த்து உண்ண வேண்டும். உணவில் அதிகம் பூண்டு சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. ஒரு டம்ளர் மோரில்ஒரு மிளகு அளவு பெருங்காயத்தை கரைத்துக் குடித்தால் வாய்வு மற்றும் வயிற்று வலி குணமாகும்.

மகிழ்ச்சியான மனநிலை உள்ளவர்களுக்கு வாயுத்தொல்லை வராதாம்.

டிப்ஸ்...டிப்ஸ்...

பசி இல்லாதவர்களுக்கு...• உணவில் சுக்கு, சீரகம் இவைகளைப் பயன் படுத்த வேண்டும். • வாழைப்பழம் அதிகம்சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்!

பசி எடுக்காமல்,வயிறு மந்தமாக உள்ளதா ?• பெருங்காயத்தை குழம்பில் சேர்த்து சாப்பிடவேண்டும்! • வெந்தயக்கீரை சாப்பிட, அகோர பசி எடுக்கும்!

வயிற்றுப்பிரச்சினைகளுக்கு...• தயிரில் உள்ள பாக்டீரியாக்கள், குடல் மற்றும் இரைப்பைக் கிருமிகளை அழிக்கிறது.• பாகற்காயை வாரம் ஒருமுறை குழம்பு வைத்து சாப்பிட்டால், வயிற்றுப் பூச்சி உண்டாகாது. • குடல் புண்கள் உள்ளவர்கள், வாழைக்காயை குழம்பு வைத்துச் சாப்பிட்டால், குணமாகும். • வயிற்றுப் புண்கள் குணமாக, தினமும் மதியம் கெட்டித் தயிர் சாப்பிடலாம்.

பூண்டு

1 .பூண்டையும் உப்பையும்சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல்சரிவு குணப்படும். 2 காது மந்தமாக இருப்பவர்களுக்குதொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.

3 பூண்டு சாறினை வலிப்புவருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம். 4 இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள்உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.

5 டான்ஸில் என்கிறஉள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள்-அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டுசாறினை தடவி குணம் கிடைக்கும். 6 பூண்டை பாலில் வேகவைத்துசாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்குபூண்டு நல்ல மருந்து.

7 பூண்டில் பலவித மானசத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாகசமையலில் பயன் படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்துதப்பித்துக் கொள்ளலாம். 8 பூண்டை வறுத்து சாப்பிடுவதைவிடவேக வைத்து சாப்பிடுவதே நல்லது.

9 பூச்சிக்கடி, உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.10 பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.11 வெள்ளைப்பூண்டை தினமும்சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும். 12 பூண்டு சாப்பாட்டின்வாய் துர் நாற்றம் இருப்பது உண்மை. எனவே பூண்டை தவிர்க்காதீர்கள்.

பூண்டை சாப்பிட்டவுடன்கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.13 சளிப்பிடிக்கக் கூடியவர்களுக்குபூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள். சளி போயே போச்சு.14 வெள்ளைப் பூண்டைபாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.

15 பூண்டு கொஞ்சம் எடுத்துஅதே அளவிற்கு வெற்றிலையும் வைத்துச் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசிவைத்திருந்து நன்கு ஊறவிட்டுக் கழுவிவிட்டு,மறுபடியும் போட வேண்டும். மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்தே விடும்.16 பூண்டை உணவில் அதிகம்சேர்ப்பவர்களுக்கு, மலேரியா நோய் வராத17 வெள்ளைப்பூண்டை உணவில்சேர்த்தால் கொழுப்பு குறையும்.1

8 கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள்இருக்க, தினமும் காலை, 4 வெள்ளைப்பூண்டுத் துண்டைச் சாப்பிடலாம19 பூண்டு பல மருத்துவநன்மை கொண்டு இருப்பினும்கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

எலுமிச்சம் பழம் 1. எலுமிச்சையில் காய், பழம்,தோல் முதலியவை மருந்தாகும். உலர்ந்த எலுமிச்சம் பழத் தோலை சீயக்காய், உலர்ந்த கறிவேப்பிலை, வெந்தயம், பச்சைப் பயறு ஆகியவற்றுடன் கலந்து அரைத்து தலையில் நன்கு தேய்த்துக்குளித்து வர பொடுகு நீங்குவதுடன் தலைமுடி வளர் வதற்கும், கருமையாவதற்கும் உதவும்.

உடலில் தேய்த்துக்குளிக்க மேனி அழகு பெறும். 2. இது பித்தத்தைப் போக்கும்.எலுமிச்சம் பழத்தைத் துண்டுகளாக்கி துணியில் பொட்டலமாகக் கட்டிக் காய்ச்சிய நல்லெண்ணெயில்தொட்டு ஒத்தடம் கொடுக்க எலும்பு இணைப்புகளில் உண்டாகும் வலி போகும்.

3. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும், கர்ப்பமுற்று ஆரம்பநிலையில் ஏற்படும் வாந்திக்கும் எலுமிச்சம் பழம் அரு மருந்து. மூல நோய், வயிற்றுக் கடுப்பு, பித்தநோய் ஆகியவற்றையும் இது போக்கும்.

இளநீரில் புதிதாகப் பிழிந்த எலுமிச்சம்பழ ரசத்தைச் சேர்த்துக்கொடுத்து வர டைபாய்டு காய்ச்சலில் குணம் தெரிவதுடன் வாந்தி எடுப்பது போன்ற உணர்ச்சியும்தடைபடும்.4. எலுமிச்சம் பழச்சாற்றில்இரண்டு, மூன்று துளி வீதம்காலை மாலை காதில் விட்டு வந்தால் காது குடைச்சல் குணமாகும்.

5. எலுமிச்சைச் சாற்றுடன்சர்க்கரை கலந்து தினமும் சாப்பிட்டு வர, மஞ்சள் காமாலை, கண் நோய்கள் கட்டுப்படும 6. எலுமிச்சையால் அடங்கும் காமம் ஏப்பத்தை அடக்கும் ஓமம் -என்ற மூலிகை ஆத்திச்சூடியால் இப்பழத்தின் பண்பை நாம் உணரலாம்.

காமத்தை கட்டுப் படுத்தி விட்டால் விலைமகள் உறவு இல்லை. விலைமகள் உறவு இல்லையெனில் எய்ட்ஸ் வரவு இல்லை.நூறு மில்லி நீரில் அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிந்து சிறிதளவுஉப்பு சேர்த்து குடிக்க காமம் கட்டுப்படும்.

7. மேலும் நோய்களைத் தடுக்கும் சக்தி இப்பழத்தில் அதிகம் உள்ளது. இதிலுள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை எளிதில்கொல்லும். 8. எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிப் பழச்சாறு, தேன் கலந்து தினசரி ஒருவேளை வீதம் தொடர்ந்துகுடிக்க நாசம் பண்ணும் காசம் கட்டுப்படும்.

9. பேதி, சீதபேதி, இரத்தபேதி, இரத்தப் போக்குஉள்ள காலங்களில் வியாதியை விரைவில் கட்டுப்படுத்த காய்ச்சிய நூறு மில்லி பாலில் அரைமூடிஎலுமிச்சம் பழச் சாறு கலந்து, வடிகட்டியபாலை மட்டும் குடிக்கவும்.10. உடல் எரிச்சல் உள்ளவர்கள்குளிக்கும் நீரில் கொஞ்சம் எலுமிச்சை சாறை சேர்த்து குளித்தால் உடல் எரிச்சல் நீங்கும்.

11. எலுமிச்சையை பிழிந்து, குளிக்கும் நீரில் சில சொட்டுக்கள் விட்டுக்கொண்டால், சருமம் பளபளப்பாகும12. எலுமிச்சைச்சாறு 10 தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம்ஊறவைத்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள், முகவாட்டம் நீங்கி முகம் பளபளக்கும்.

13. எலுமிச்சைச் சாறுவல்லாரைக் கீரை அல்லது மஞ்சள் கரிசலாங் கண்ணி ஆகிய வற்றை தவறாமல் உணவில் சேர்த்து வந்தால்வெண் புள்ளிகள் விரைந்து குணமாகும்.14. எலுமிச்சைச் சாற்றை பசி வந்தால் நாளடைவில் முழங்கையில் உள்ள கருமை நிறம் மறையும்.

15. எலுமிச்சைச் சாறில்சிறிது தேன் கலந்து முகத்தில் ப+சிக் கொண்டு சிறிது நேரம் களித்து முகம் கழுவி வர தோல்சுருக்கம் மறையும். 16. எலுமிச்சை பழத்தைப்பிழிந்ததும் தோலின் உட்பறத்தை வெளிப்பறமாக வரும்படி செய்து முழங்;கை பின் கழுத்து போன்ற இடங்களில் தேய்த்துவந்தால் கரு நிறம் மறைந்து விடும்.

விரட்டுவோம் குறட்டையை டாக்டர் ரவி ராமலிங்கம்

சாதாரணமாக நோயாளிதான் 'எனக்கு இப்படிஇருக்கு டாக்டர் இங்கே வலிக்குது டாக்டர்" என்று தனக்குள்ள பிரச்சினையைச் சொல்வார்.ஆனால், குறட்டையைப்பொருத்தவரை நோயாளி எதையும் சொல்லமாட்டார். உடன் வருகிறவர்கள்தான் அவர் விடுகின்ற குறட்டையால்அதிகம் பாதிக்கப்பட்டு "இவர் ரொம்ப குறட்டை விடுறார் டாக்டர். இவர் நல்லா தூங்கிடுறாரு.

எங்களுக்குத்தான் தொந்தரவா இருக்கு" என்பார்கள்.உண்மையில் குறட்டை விடுகிறவர்கள் நிம்மதியாகத் தூங்குகிறார்களா? என்றால் அதுதான் இல்லை.
நாக்கு அண்ணம் ஆகியவை நாம் அசந்து தூங்குகிறபோது இறுக்கம் தளர்ந்துசுவாசக் குழாய் மேல் படிந்து அழுத்துகிறது. இதனால் சுவாசம் தடைப்பட்டு அதிர்வு உண்டாகிசப்தம் வருகிறது.

ஆக குறட்டை விட்டால் சரியான சுவாசம் இருக்காது. ஒருவிதத் தடங்கலோடுதான்தூங்க வேண்டியதிருக்கும் என்கிறார் டாக்டர் ரவி ராமலிங்கம். அவர் மேலும் கூறியதாவது:-பொதுவாக நமக்கெல்லாம் குறட்டை ஒரு விளையாட்டான விடயமாகத்தான்தெரிகிறது. ஆனால், குறட்டையை விளையாட்டாகஎடுத்துக் கொள்ள முடியாது. குறட்டையினால் உயிரே கூடப் போயிருக்கிறது.

குறட்டை விடும்போதுசுவாசம் தடைப் படுவதோடு மட்டுமல்லாமல், சில சமயம்மூச்சுத் திணறல் உண்டாகிவிடும்.

குறட்டை விட்டுத் தூங்குபவர் அலறியடித்து திடீரென்று எழுவதுஇதனால்தான். விழித்ததும் சுவாசம் திரும்பக் கிடைத்து விடுகிறது. இவ்வாறு உண்டாகிற மூச்சுத்திணறலை "ஸலீப் அப்னியா சிண்ட்ரோம்" என்கிறோம்.

ஒருவர் ஏழு மணிநேரம் தூங்குகிறார் என்றால், அதில் குறைந்தது 30 தடவை மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றாலோ, "ஹீரோயிக் ஸ்னோரிங்" என்கிற தீவிர குறட்டைவிடுகிறவர்களாக இருந்தாலோ, விட்டுவிட்டுத்தூங்கக் கூடியவராக இருந்தாலோ அதாவது இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூக்கமும் தலைவலியோடு விழிப்பது, உற்சாகமாக இல்லாமல்இருப்பது போன்ற பாதிப்புள்ளவர்களாக இருந்தாலோ "ஸ்லீப் அம்னீசியா சிண்ட்ரோம்"வர வாய்ப்புகள் உள்ளன.

மூளையில் இருக்கிற "தூக்கம் சம்பந்தப்பட்ட செல்களில் கோளாறுஏற்பட்டாலும் அதனால் சுவாசம் சரியாக நடைபெறாமல் சுவாச நிலையும் பாதிக்கப்பட்டு அதனாலும் இந்த சிண்ட்ரோம் வரலாம்.

குழந்தைகளைப் பொருத்தவரை டான்சில் மற்றும் அடினாய்டு சதை வளர்ச்சியால்சுவாசப் பாதை தடைப்பட்டு குறட்டை வரலாம். சிலருக்குத் தாடை சின்னதாக இருக்கும். நாக்குபெரியதாக இருக்கும். வாயில் இடம் போதாமல் சுவாசப் பாதை அடைத்துக் கொண்டிருக்கும். இதனாலும்குறட்டை வரும்.

தவிர, மூக்குச்சம்பந்தப்பட்ட பிரச்சினைகளான மூக்கு எலும்பு வளைந்து இருத்தல், பாலிப் சதை வளர்ச்சி, மூக்கடைப்பு போன்றவையாலும் தொண்டை மற்றும்குரல் வளையில் ஏற்படுகிற அடைப்புகளாலும் குறட்டை வரும்.சாதாரணமாக ஒருவர் விழித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய ரத்தத்தில்நூறு சதவிகிதம் ஆக்சிஜன் இருக்கிறது என்றால்,அவர் தூங்குகிற வேளையில் 90 சதவிகிதஆக்சிஷன் தான் இருக்கும்.

இது சாதாரண நிலையில். ஆனால், ஒருவர் குறட்டை விட்டுத் தூங்குகிறார் என்றால், சுவாசம் தடைப்பட்டு அவருடைய ரத்தத்தில் ஆக்சிஜன்அளவு எழுபது சதவிகிதமாகக் குறைந்துவிடும்.

இப்படியே தொடர்ந்து குறட்டை விட்டுக் கொண்டிருந்தால், குறைச்சலான ஆக்சிஜனால் மூளைத் திறன் குறைந்து, மறதி,எரிச்சல், கோபம் போன்ற பாதிப்புகள்ஏற்படு கிறது. ஆக்சிஜன் குறைவினால் இதயம் செயலிழந்து போகும் அபாயம் ஏற்படுகிறது.

தவிர குறட்டை விடுவது தொடர்ந்தால் ரத்தக் கொதிப்பு, நெஞ்சு வலி, பக்க வாதம் போன்றவையும் ஏற்படலாம். குறட்டை விடுவதைச் சரி செய்தாலே இவற்றையெல்லாம் சரி செய்துவிடலாம்."ஸ்லீம் - லே-பரட்டரி" என்று இப்போது நிறைய வந்துவிட்டன. நோயாளியின் குறட்டைஎந்த அளவுக்குப் பாதிப்பை உண்டாக்கக் கூடியது என்பதை இங்கே கணித்துச் சொல்கிறார்கள்.

நோயாளியை இங்கே ஓர் இரவு தூங்கக் கூறி அந்த சமயத்தில் அவருடையகுறட்டை அளவு, இதயத் துடிப்பு, மூளையின் செயல்பாடு, கண்,அடிவயிற்றின் அசைவு, மூக்கு மற்றும்வாய்ப் பகுதிகளில் காற்றின் போக்கு, நாடித் துடிப்பு, ரத்தத்தில் இருக்கிற ஆக்சிஜன் அளவு, எத்தனை முறை மூச்சுத் திணறல் உண்டாகிறது இப்படிபலதரப்பட்ட விடயங்களைக் கவனித்து அந்த நோயாளியின் குறட்டை தூக்கத்தை அக்கு வேறு ஆணிவேறாக அலசி விடுகிறார்கள்.

அந்த முடிவை வைத்து அவருடைய குறட்டையின் வலிமையை உணர்ந்து சிகிச்சைதரப்படுகிறது. லேப்களில் கண்டுபிடிக்கிற இந்த அக்குவேறு ஆணி வேறு அலசலை "பாலிசோம்னோகிராம்"என்கிறோம்.

பப்பாளி சம்மர்ல பல இடங்களில் பப்பாளிப் பழத்தை துண்டுகளாக வெட்டி வண்டியில்வைதது விற்கிறார்கள். ஆனால் பொதுவாக பப்பாளி சூடு என்று சொல்லப்படுகிறது. வெயிலுக்குபப்பாளி நல்லதா?

'பப்பாளியை நாம் எந்தக்காலத்திலும் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது ஒரு திகட்டாத பழம் என்பதால், நாம் அளவுக்கதிகமாக சாப்பிட்டு விடுவோம்.அப்பொழுதுதான் பிரச்னை. அளவோடு சாப்பிடும் வரை இது அபூர்வமான பழம்.பெண்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள்.அதுவும் தவறு.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்றபின் எடை கூடி, இரத்த அழுத்தம், முதுகு, இடுப்பு, மூட்டுகாளில்வலி ஏற்பட்டு நடக்க சிரமப்படுவர். அவர்கள் தினசரி இரண்டு கீற்று பப்பாளி சாப்பிட்டால்எடை சடசடவென குறயும். மூட்டு வலி குறையும்.

முகெலும்பு பிதுக்கம் அல்ல நழுவல் காரணமாக வரும் கடுமயான வலிக்குபப்பாளியில் உள்ள 'கமோ பாப்பன்' என்ற கெமிக்கல் நல்ல குணமளிப்பதாக அமெரிக்காவில்ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ளனர்.

பொவாகவே பப்பாளி தலைமுடி, சருமம், கண்பார்வை, தொண்டை, வயிறு, சிறுநீரகம்அனைத்துக்கும் மிகவும் ஏற்றது. எக்காரணத்தைக் கொண்டும் பப்பாளியை நாம் தவிர்த்தால், நம் ஆரோக்கியத்தை நாம் தவிர்க்கிறோம் என்றுதான்அர்த்தம்."

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலே சிறந்த உணவு!

பாலூட்டும் தாய்மார்களுக்கு அதுகூட்டும் அழகு!!குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்கான சத்து தாய்ப்பாலில்தான் இருக்கிறது. அதனால் ஒவ்வொரு தாயும் தன் கடமையை உணர்ந்து பாலூட்டுவதைஎக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கக் கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தாய்ப்பாலின்பெருமையும், குழந்தைக்கும் தாய்க்கும் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் கீதா.

தாய்ப்பாலில் ஆண்டிபாடிஸ் இருப்பதால் பிறந்த குழந்தைக்கு எந்தவிதவைரஸ் மற்றும் பாக்டீரியல் இன்ஃபெக்ஷன்கள் ஏற்படாமல் பாதுகாக்கும். அதுவும் எந்த பாட்டிலிலும் போடாமல் நேரடியாக குழந்தைக்குக் கொடுக்கப்படுவதால் கலப்படமில்லாத பரிசுத்தமான பால்குழந்தைக்குக் கிடைத்துவிடுகிறது.

மேலும் இந்தப் பாலில் கொழுப்புச் சத்து, சர்க்கரை, தண்ணீர், புரதச் சத்துதேவையான அளவில் இருப்பதால் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், மூளை வளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் கிடத்துவிடுகிறது.

தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைதக்கு உடலில் எந்தவித ஒவ்வாமைஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒவ்வாமை ஏற்பட்டாலும் அது தாய் எடுத்துக்கொண்ட உணவுப் பொருட்கள் ஏதோ ஒன்றின் ஒவ்வாமையினால்தான் இருக்கக் கூடும்.

தாய்ப்பால் சாப்பிடும் குழந்தைகள் வெயிட் போடாமல் ஒல்லியாகத்தான்இருப்பார்கள். ஆனால் ஆரோக்கியமாக இருப்பார்கள். சில தாய்மார்கள் குழந்தை எடை கூட வில்லையேஎன்று மிக விரைவில் தாய்ப்பாலுடன் பாட்டில் உணவுகளுக்கு மாறிவிடுவார்கள். இப்படிச் செய்வது குழந்தையின் உடல்நலத்துக்கு நல்லது கிடையாது.பாட்டில் பாலில் கொழுப்புச் சத்து சற்று அதிக சதவிகிதத்தில் இருப்பதால் எடை கூடத்தான்செய்யும்.

ஆனால் ஆரோக்கியமானதல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்குழந்தைகள் எதிர்காலத்திலும் அதிக வெயிட் போடாமல் ஆரோக்கியமாக இருப்பார்கள். தாய்ப்பால்குழந்தைகளிடம் ஓபிஸிட்டிக்கான ரிஸ்க் மிகவும் குறைவு. அதே போல குழந்தையின் எலும்புவளர்ச்சிக்கும் தாய்ப்பால் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எவ்வளவு நாட்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்றால், குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலிருந் ஒருவருடம் வரை குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தாய்ப்பால் கட்டாயம் தேவை. இந்தஒரு வருட காலத்தில் முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும்.

ஒரு நாளைக்கு எட்டு ஃபீடிங் கொடுக்கலாம். அடுத்த ஆறு மாதங்களில்மற்ற உணவு முறைகளுடன் தாய்ப்பாலும் கொடுக்கப்படவேண்டும். சிலர் மற்ற உணவுகள அறிமுகப்படுத்தியவுடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுகிறார்கள்.

அப்படிச் செய்யாமல் மற்ற டின் ஃபுட் கொடுக்கத் தொடங்கிய பின் எட்டு ஃபீடிங்கக் குறைததுக் கொள்ளலாம்.

இரவு நேரங்களில் ஃபீடிங் கொடுத்தால் தாயின் உடலில் ஹார்மோன்களின்செயல்பாடு அதிகரித்து பால் சீராகச் சுரக்கும். அதிகமாக பால் சுரக்கும்போது குழநi;தக்கு ஃபீட் செய்தால் உரிஞ்சி எடுக்க முடியாமல்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.

அதனால் இந்தச் சமயத்தில் தாய்ப்பாலபை; பிழிந்து எடுத்து சுத்தமான பால் புட்டியில்போட்டுக் கொடுக்க வேண்டும்.தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்க்கு சில அசௌகரியங்கள் ஏற்படத்தான்செய்யும். அதை சில எளிய வழிகளில் சரிப்படுத்தலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது மார்பகத்தில்வலி ஏற்படும்.
ஆனால் போகப் போக உடல் இதற்குப் பழகிவிடும்போது சரியாகிவிடும்.

தாய்ப்பால் கொடுக்கும் முன்பு மார்பகங்களை இளஞ்சூடான துணியால் மென்மையாக ஒத்தி எடுங்கள்.தாய்ப்பால் கொடுக்கும் முன்பு இளஞ்சூடான தண்ணீரில் குளித்தால் பால் சுரப்பது கொஞ்சம் ஈஸியாகிவிடும்.

ஒரே பொஸிஷனில் ஃபீட் செய்யாமல் உங்கள் நிலையைக் கொஞ்சம் மாற்றியும்தாய்ப்பால் கொடுத்துப் பழகலாம். வலி நிவாரணிகள் மருத்துவரின் ஆலோசனப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும். தாய்ப்பால் கொடுத்து மார்பக நிப்பிள்களில் வெடிப்பு ஏற்பட்டால், செயற்கயான மாய்சுரஸர்கள் பயன்படுத்தத் தேவையில்ல.

தாய்ப்பாலே மாய்சுரஸராக வெடிப்ப ஆற்றிவிடும். தாய்ப்பால் கொடுக்கத்தொடங்கும் தாய்மார்களுக்கு ஆரம்பத்தில் உடல் அளவிலும், மனசிலும் சில அசௌகரியங்கள் ஏற்படும். மருத்துவரின் ஆலோசனப்படியும், வீட்டில் உள்ள பெரியவர்களின், குறிப்பாக அம்மாவின் யோசனைகள்படி நடந்து கொண்டால் தாய்ப்பால்கொடுப்பது சுலபமாகப் பழகிவிடும்.

சரி.. தாய்ப்பாலினால் குழந்தைக்கு மட்டும்தான் நன்மை கிடக்குமா? தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும்சமபங்கு நன்மைகள் கிடைக்கும்.- பாலூட்டும் தாய்மார்களுக்குஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் வெளிப்படுவதால் பிரசவத்தின் போது விரிந்த கருப்பை நார்மலானஅளவுக்குச் சுருங்கத் தொடங்கும்.- பிரசவ காலத்தின்போதுஉடலில் சேர்ந்துள்ள அதிகப்படி கொழுப்புச் சத்து குறைந்து உடல் எடை இளைத்து சிக்கென்று திரும்புவார்கள். இவை இயற்கை ஏற்படுத்திக் கொடுத்த வரப்பிரசாதங்கள்.

- மாதவிடாய் தள்ளிப்போடப்படுவதால் இயற்கையான முறையில் கரு உண்டாவது தடுக்கப்படுகிறது.- தொடர்ந்து இருபத்து நான்கு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்த பெண்களுக்கு ஓவரியன் மற்றும் மார்பக புற்று நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவு.- பாலூட்டுவதால் உடல்எடை இளைத்து அழகுகூடுமே தவிர, எந்தவிதத்திலும் தாயின் அழகு பாதிக்கப்படாது என்பதை உறுதியாகச் சொல்லாம்.- பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தையின் மனதளவில் நெருங்கி ஒரு அரவணைப்பு கொடுக்க இயலும். குழந்தைக்கு ஒருவித பாதுகாப்பு உணர்வு இதனால் ஏற்படுகிறது என்பது உண்மை.

- பாலூட்டுவதால் மனதளவில்ஏற்படும் டிப்ரஷன்கூட குணமாகி இழந்த உற்சாகத்தைத் திரும்பிப் பெற முடியும்.டி.பி., ஹெபாடிடிஸ், எய்ட்ஸ் நோயாளிகள் மட்டும் பாலூட்டுவதைத் தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள் எந்த மாத்திரகள் எடுத்துக் கொண்டாலும் மருத்துவரின் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.

சில மருந்துகள் தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும். தாய்ப்பாலின் பெருமையை உணர்ந்து குழந்தைகளுக்குப் பாலூட்டி வந்தால் ஆரோக்கியமான குழநi;தகளை இந்த சமுதாயத்துக்கு அளிக்கலாம்.

சமீபத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளிடம் ஐக்யூ டெஸ்ட் எடுத்துப் பார்தார்கள். இதில் தாய்ப்பால் சாப்பிட்டு வளர்ந்த குழந்தைகளின் ஐக்யூ லெவல் தாய்ப்பால் அளிக்கப்படாத குழந்தகைளவிட சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியப் பங்கு வகிக்கும் தாய்ப்பாலின்பெருமையை ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டும்.

தாய்-தந்தை உறவைப் பொறுத்தே குழந்தைகளின் மன நலம் அமையும்.. பெற்றோருக்கும்இ குழந்தைக்கும் இடையிலான உறவைப் பொறுத்தே குறிப்பிட்டகுழந்தையின் மன நலம் அமையும் என்பது உளவியலாளர்களின் கூற்று. ஆனால் புதிதாக நடந்த ஆய்வு இந்த விவகாரத்தில் மாறுபட்ட தகவலை தெரிவித்துள்ளது..

அப்பா - அம்மா இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி அன்னியோன்யமாகநடந்து கொண்டால்இ அவர்களின் குழந்தைகள் பாதுகாப்பான உணர்வை பெறுகிறார்கள். பிற்பாடுஅவர்கள் சமுதாயத்துடன் இணைந்து பழகுவதற்கும் மன நலத்துடன் இருப்பதற்கும் இதுதான் காரணமாக அமைகிறது என்கிறது அந்த ஆய்வு.

குழந்தைகள் மீது அன்பு காட்டுவதில் பெரும்பாலான பெற்றோர் எந்தகுறையும் வைப்பதில்லை. ஆனால் தங்களுக்கிடையே ஏற்படு;ம் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் கருத்து வேறுபாடுகளுக்காக ஆவேசமாக மோதிக் கொள்கிறார்கள். குழந்தைகள் கண் எதிரில் இதுபோல நடந்து கொள்வதால் அவர்கள் மனதளவில் வெகுவாக பாதிக்கப்படுவார்கள்;. சண்டை- சச்சரவுகளின்போது பெற்றோர் பயன்படுத்தும் வார்த்தைகள் கூட அவர்களை காயப்படுத்தும்.

இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் குழந்தைகள் பெற்றோர் மீதான மதிப்பைகுறைத்துக் கொள்ள ஆரம்பிப்பார்கள். இதனால் பெற்றோர் சொல்லுக்கு கட்டுப்பட மறுத்து தங்கள் மனம் போன போக்கிலேயே நடக்கத் தொடங்குவர். தாங்கள் செய்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பிக்கும்.

இது கெட்ட சகவாசம் கெட்ட பழக்கங்களுக்கு அடி கோலும். தாய்- தந்தை இடையிலான வெறுப்பு முடிவுக்கு வராத கோபதாபங்கள் ஆகியவை குழந்தைகளைத்தான் பாதிக்கும்.சண்டைக்கோழிகள் போல மல்லுக்கு நிற்கும் பெரும்பாலான பெற்றோர்இதாங்கள் சண்டை போட்டுக் கொண்டால் அது குழந்தைகளின் மென்மையான உள்ளத்தை காயப்படுத்தும் என்பதை உணர மறுக்கிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்த பிறகுதான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள்என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் இது மிகவும் தவறானது. அனைத்து வகையான உணர்வுகளும் குழந்தைப் பருவத்திலேயே முளை விட தொடங்கி விடும்.

அம்மாவை அப்பா அடிக்கும் போதும் அல்லது ஆவேசமாக திட்டும்போதும் கைக்குழந்தைகள் வீறிட்டு அழுவது இதனால்தான். இந்நிலையில் அவர்கள் வளர வளர உணர்வுகளும் வளர்ந்து தெளிவடையும் என்பதால் தாய்- தந்தை இடையிலான பிணக்கு அவர்களை இன்னும் கடுமையாக பாதிக்கும். ஒழுக்கமான நெறிகளில் இருந்து பல்வேறு குழந்தைகள் வழி தவறிச் செல்வதற்கு இதுதான் காரணம்.

இதனால் பெற்றோர்களே!!! உங்களுக்கு இடையில் தகராறு- சண்டை சச்சரவுஇருந்தால் தாரளமாக வெளிப்படுத்தலாம். ஆனால் குழந்தைகள் அங்கே இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அதுதான் ரொம்ப முக்கியம்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP