என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மருத்துவம் பகுதி 2.

>> Saturday, November 8, 2008

மருத்துவம். வாஞ்ஜுர்.

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!

உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

1.விழுங்கும் போது வலிக்கிறதா?
2.ஆஸ்துமா
3.டான்ஸில் தொல்லையா?
4. B -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)
5.வெங்காயம். மருந்தாகின்றது கொழுப்பை குறைக்க நினைக்கிறீர்களா?
6.சுகப் பிரசவம் ஆக...!
7.அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பெண்களுக்குவிரைவில் முதுமை வரும்!
8.தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

1.விழுங்கும் போது வலிக்கிறதா? டாக்டர் நாகேஸ்வரன
விழுங்கும்போது தொண்டையில் வலி ஏற்படுவதை ஆங்கில மருத்துவம்ஒடினோ ஃபேஜியா எனக் குறிப்பிடுகிறது. விழுங்குவது சிரமமாயிருப்பதை டிஸ்ஃபேஜியா எனக்கூறுகிறோம்.

கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கக் கூடும்.
'உணவு இறங்கவில்லை; உணவு திரும்ப மேலேறுகிறது; உணவு ஒட்டிக் கொள்கிறது"தொண்டையில் கட்டிஇருப்பதுபோல உணருகிறேன். விழுங்கும்போது சிரமமாயிருப்பதோடு வலியுமிருந்தால், அமிலப் பின்னேற்றம் காரணமாக உணவுக் குழல்அழற்சி காரணமா யிருக்கும் வாய்த் தொண்டைப் பகுதி அல்லது உணவுக் குழல் காரணமாயிருக்கலாம்.

வாய்த் தொண்டைக் காரணங்கள
வாய்த் தொண்டைப் பகுதி கட்டி போன்று அடைக்கும் காரணங்கள்.
திடீர் டான்சில் (தொண்டைச் சதை) அழற்சி, வாய்த் தொண்டையில் சீழ்க்கட்டி தொண்டைச் சதைச்சுற்றுப் பகுதி சீழ்க்கட்டி அல்லது தொண்டைப் பக்க அல்லது பின் பகுதியில் சீழ்க்கட்டிபோன்ற அழற்சி நிலைகள்.

வாய்ப்பூட்டு நோய் மற்றும் வெறிநாய்க் கடி போன்றவற்றால் ஏற்படும்இசிவுச் சுருக்க நிலைகள்.

டிப்தீரியா, மூளை நாளத்தாக்கம்மற்றும் மூளை பாதிப்பு போன்றவற்றில் ஏற்படும் செயலிழப்பு நிலைகளால், மூக்கிற்குள் புரை ஏறுதல்.
வலியுள்ள புண்கள், அண்ணப் பிளவு, கீழ்த்தாடை முறிவு, பொட்டுக் கீழ்த்தாடை மூட்டுக்கோளாறுகள்.

உணவுக் குழல் காரணங்கள்...

வெளிப்பொருள், கட்டிகள், சுருக்கம், தேய்வு போன்றவற்றால் உள்ளிட அடைப்பு.

திடீர் அல்லது நாள்பட்ட உணவுக் குழல் அழற்சி.

இயக்கக் கோளாறுகள்; பரவலான உணவுக்குழல் சுரிப்பு, வெளிப்பக்கமிருந்துஉணவுக் குழல் அமுக்கப்படுவதால் ஏற்படும் அடைப்பு.
தொண்டைக் கீழ்பக்கப்பை துளைப் பிதுக்கம்
கழுத்து என்புத்துருத்தங்கள் உணவுக் குழலை அமுக்குதல்
தைராயிடுக் கட்டிகள்,தைராயிடு அழற்சி, நடு மார்புக் கட்டிகள், நிணக்கட்டிகள்

பிற காரணங்கள்...
நமது வெளி நோயாளிகள் பகுதியில் பல பேர் குறிப்பாக பெண் நோயாளிகள்தொண்டையில் கட்டியிருப்பதாகக் கூறு கிறார்கள். உண்மையாக விழுங்கலில் ஏதும் பிரச்சினையில்லை.கட்டியிருப்பது போன்ற உணர்வு, உணவு உண்ணும்போதுஇல்லாமல் உணவுகளுக்கிடையில்தான் அதிகமாக உள்ளது.

இந்த உணர்வு மனப்பதற்றத்தினால் உண்டாகிறது அல்லது அதிகமாகிறது.அவர்களுக்கு உண்மையில் எந்த உறுப்புக் கோளாறுகளும் இல்லை. மன நல ஆலோசனையும், மன தைரியம் உண்டாக்குவதும் தான் சிகிச்சைமுறையாகும்.

திடீரென்று உண்டாவது...
வெளிப்பொருள், நரம்பு மண்டலபாதிப்பு, முன் உள்ள குறுக்கத்தில்உணவு தேங்குவது சிறிது சிறிதாக அதிகமாகும் விழுங்கற்கோளாறு
கொடும் புற்றுநோய், இடையிடையேதோன்றுவது, சுருக்க இசிவு, திரவப் பொருள்களுக்கு அதிகத் துன்பம், செயலிழப்புக் கோளாறுகள்
திடப் பொருள்களை விழுங்குவது தீவிரமாகி திரவப் பொருள்களுக்கும்விழுங்கலில் பிரச்சினை...

புற்றுநோய் அல்லது சுருக்கம், பழச்சாறுகள் அல்லது அமில உணவு ஏற்காமை, புண்ணான கோளாறுகள், எதுக்களித்தலும் நெஞ்செரிச்சலும், துளைப் பிதுக்கம், நுரையீரல்களுக்குள் உள்ளேறல், குரல்வளை செயலிழப்பு, மூக்குக்குள் ஏறுதல், அண்ணச் செயலிழப்பு
விழுங்கல் பிரச்சினையோடு குரலும் பாதிப்ப

தொண்டை, குரல்வளை, தைராய்டுக் கட்டிகள், தொண்டை, குரல்வளை அழற்சி, பின்னேற்றஉணவுக் குழல் அழற்சி. வயதை ஒட்டிய காரணங்கள்.
பிறவிக் கோளாறுகள

குரல்வளை தொண்டையிடைத் துளை,துணைப் பிதுக்கம்,பிறவி ஒட்டுக
நடுவயது: கட்டிகள், துளை விரிப்பு, பின்னேற்ற உணவுக் குழலற்சி,மனப் பிராந்தி,வயதானவர்களில்: தொண்டை மற்றும் உணவுக் குழல்கொடும் புற்று.

நாள் பட்ட உணவுக் குழலழற்சியின் காரணமாக குறுக்கங்கள்.
எலும்புத் துருத்தங்கள் உணவுக் குழலை அமுக்குதல் வாய்ப் பகுதியையும், தொண்டையையும் பரிசோதனை செய்வதன்மூலம் பெரும்பாலானகாரணங்களைக் கண்டுபிடிக்க முடியும்.

நோயாளியின் ஊட்ட நிலையைக் கண்டுபிடிக்க இரத்தப் பரிசோதனை செய்யவேண்டும்.

நெஞ்சு எக்ஸ்ரே படத்தின் மூலம் இதய நாள, நுரையீரல் சார்ந்த நடு மார்புக் காரணங்களைகண்டுபிடிக்க முடியும். கழுத்தின் பக்கப் பகுதி எக்ஸ்ரே: கழுத்தென்புத் துருத்தங்களை கண்டுபிடிக்கலாம்.


அழுத்தமானிச் சோதனை மற்றும் அமில கார நிலை சோதனை....
இயக்க கோளாறுகளையும்,இரைப்பை உணவுக் குழல் பின்னேற்றத்தையும் அறிய முடியும்.

உணவுக் குழல் உள்நோக்கிச் சோதனை மூலம் உணவுக் குழல் சீதச்சவ்வைப்பரிசோதிக்க முடியும். வளை இழைக்காட்சி அல்லது வளையா உள் நோக்கிகளைப் பயன்படுத்த முடியும்.

மற்ற பரிசோதனைகள்...
மூச்சுப் பிரி குழாய் சோதனை (சீதச் சவ்வைப் பார்க்க) இதய நாளசோதனை (இதய நாளக் கோளாறுகள்) தைராய்டு குகேன் (தைராயிடு, கொடும்புற்று) காரணத்தைக் கண்டறிந்த பிறகு, காது,மூக்கு தொண்டை சிறப்பு மருத்துவர், இரைப்பை குடல்மருத்துவர், மார்பு அறுவை மருத்துவர்ஆகிய தகுந்த மருத்துவருக்கு அனுப்பி காரணத்துக்கான சிகிச்சை அளித்தல்.

2.ஆஸ்துமா
ஆஸ்துமா பெரும்பாலும் ஆண்களுக்குதான் வரும் என்று கூற முடியாது.பெண்களுக்கும் ஆஸ்துமா வரும். பரம்பரையாக வரும் கோளாறு என்பதால், ஆண்,பெண்களுக்கு இந்த வகையில் வருவதை தவிர்க்க முடியாது. ஆனால் எதிர்ப்புச் சக்தியைஏற்படுத்திக் கொள்வதன் மூலம் இந்த பாதிப்பை குறைக்கலாம்.

அதிக தக்காளி, கேரட் சாப்பிடுவது, பச்சைக் காய் கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது, பெண்களுக்கு வரும் ஆஸ்துமாவை விரட்;டி அடித்து விடும். மாத விலக்;கு சமயங்கலில்; ஹார்மோன் மாற்றம் காரணமாக வர வாய்ப்பு அதிகம்உண்டு. அதைத் தடுக்க பச்சைக் காய்கறி மட்டுமே நல்ல பலன் உடையது என்று குறிப் பிட்டுள்ளனர்.பச்சைக் காய்கறிகளால் எதிர்ப்பு சக்தி ஏற் படுகிறது. அது உடலுக்கு மிகுந்த பலத்தை தருகிறது.அதனால், சுவாசப் பிரச்சினைகுறைகிறது என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்தனர்.

3.டான்ஸில் தொல்லையா?
"டாக்டர், என் குழந்தைக்கு ஐந்து வயசாகுது. விழுங்கும்போது தொண்டையில் வலி என்கிறாள். கொஞ்சம் தொண்டையைப் பாருங்கள் டாக்டர்."

"அம்மா, குழந்தைக்கு ஒரு பிரச்னையுமில்லை. கொஞ்சம் புண்ணாய்தான் இருக்கு. இந்த மாத்திரையைச் சாப்பிடுங்க. ஒரு வாரத்தில் குணமாயிடும்."
(புருவத்தைச் சுருக்கியபடி), "கொஞ்சம் நல்லா பாருங்க டாக்டர். நான் டார்ச்அடிச்சுப் பார்த்தேன்; இரண்டு பக்கமும்சதை தெரிஞ்சுச்சு ஆபரேஷன் பண்ண வேணாமா?

"ஏன் அதையும் நீங்களேபண்ணிடுங்களேன்!" என்கிறார் டாக்டர் சிரித்துக் கொண்டே....

"இதுதான் இன்றைய காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் நிலைமை. டான்ஸில் பற்றிய பல தவறான கருத்துகள்மக்கள் மத்தியில் உள்ளன. அதைக் கண்டிப்பாக எழுதுங்கள்" என்கிறார் திருச்சி தில்லை நகரில் அமைந்துள்ள ராயல் பேர்ல் மருத்துவமனையின் ஈ.என்.டி. டாக்டர் டி.என். ஜானகிராம்.

டான்ஸில் என்பது இலத்தின் மொழிச் சொல்! டான்ஸிலாஎன்றால் மூரிங்போஸ்ட் என்று பொருள். நம் வயிற்றைப் பாதுகாக்க பாதுகாவலனாக டான்ஸில்தொண்டையில் அமைந்துள்ளது.

டான்ஸில் என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு லிம்பாய்ட் டிஷ்யூ.கிருமிகளை அகற்றக்கூடிய தன்மை டான்ஸில் சதைக்கு உள்ளது. இதே போன்று சதை நமது மூக்குக்குப்பின் புறமும் உள்ளது. அதற்கு அடினாய்டு என்று பெயர்.

இந்த இரண்டு சதைகளும் சுமார் 6 மாத குழந்தையிலிருந்து தோன்றி, கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி ஐந்து வயதுக்குள்முழுமை அடைந்து அதன்பின் பெரும் பாலான நபர்களுக்கு அது சுருங்கி விடுகிறது.


நம் முகப்பகுதி பெரிதாக ஆக, இந்தச் சதைகள் சுருங்குவதுபோல் தோற்றம் அளிக்கின்றன. ஒருசில நபர்களுக்கு மட்டும் அடினாய்டு மற்றும் டான்சில்சதைகள் மிகவும் பெரிதாகி பிரச்னைகளை உண்டாக்குகின்றன.

அடினாய்டு சதையினால் குறட்டைப் பிரச்னை. டான்ஸில் சதையினால்விழுங்குவதற்கு வலி, குறட்டை, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம். மற்ற சில நபர்களுக்குடான்ஸில் பகுதியில் ஸ்ட்ரெப்டோகாகஸ் என்ற பாக்டீரியா தாக்கி அதனால் ருமாடிக் பீவர்(மூட்டு வலி, இருதயப் பகுதியில்வலி) மற்றும் சிறுநீரகப் பிரச்னைகள் ஏற்படலாம்.

டான்ஸில் சதையை எப்போது அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்பதைஇப்போது பார்ப்போம். டான்ஸில் சதையைப் பார்த்தவுடனேயே ஈ.என்.டி. டாக்டர்கள் அதற்குஅறுவை சிகிச்சை செய்வதில்லை. பெரும்பாலும் மருந்து மாத்திரைகளால் குணப்படுத்த முயல்வார்கள்.முடியாதபட்சத்தில் மட்டுமே அறுவை சிகிச்சையை சிபாரிசு செய்வார்கள்.

அடினாய்டு சதை மூக்குக்குப் பின்புறம் அமைந்துள்ளதால், இந்தப் பிரச்னை உள்ள நோயாளிகள் மூக்கு வழியாகமூச்சுவிட இயலாது. அதனால் குறட்டை சத்தம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாய் வழியாக மூச்சுவிடுவதால் சில குழந்தைகளுக்கு பற்கள் சீராக வளராமல் இருக்கும்.


சில குழந்தைகளுக்குநடுக்காதில் நீர் கோத்துக் கொண்டு அவஸ்தை தரும். இதுபோன்ற நிலையில், அடினாய்டு அறுவை சிகிச்சையை செய்தே ஆக வேண்டும்.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒருவருக்குநான்கு அல்லது ஐந்து முறை தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால்டான்ஸில் அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். குறட்டைப் பிரச்னைக்கும் டான்ஸில் ஒரு காரணமாகஇருக்கலாம். ஒருசிலருக்கு டான்ஸில் சதையில் புற்றுநோய் கூட ஏற்படலாம்.

இத்தகையவர்களுக்கும் அறுவை சிகிச்சை மிக அவசியமானது.
டான்ஸில் அறுவை சிகிச்சையை பலமுறைகளில் செய்யலாம்.
டிஸெக்ஷன் முற லேசர் டான்ஸில் சர்ஜர காபுலேஷன் முற

இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு முன், இரத்தப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும். இந்தஅறுவை சிகிச்சையை ஜெனரல் அனஸ்தீஷியா கொடுத்துத்தான் பெரும்பாலான டாக்டர்கள் செய்வார்கள்.ஆபரேஷனுக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பிருந்தே நீராகாரம் கூட சாப்பிடக் கூடாது.


லேசர்கதிர்கள் கொண்டு அறுவை சிகிச்சை செய்யும் போது இரத்த சேதம் இன்றி வலி இன்றி இந்த அறுவைசிகிச்சையை செய்ய முடியும். ஆபரேஷனுக்குப் பிறகு நான்கு மணி நேரம் கழித்து ஐஸ்க்ரீம், ரோஸ் மில்க் போன்றவை கொடுக்கப்படலாம். சூடானமற்றும் காரமான உணவை ஒரு வாரத்துக்குச் சாப்பிடக் கூடாது.

நிறைய பேர் கேட்கும் பொதுவான சந்தேகங்கள்:
"டாக்டர், டான்ஸில் ஆபரேஷன் செய்து விட்டால்அது, திரும்பவும்வளருமா?

வளராது. ஆனால் டான்ஸில் ஆபரேஷன் ஒருவர் செய்து விட்டால் அந்தநபருக்கு தொண்டை கட்டவே கட்டாது என்று சொல்ல இயலாது.
"டான்ஸில் ஆபரேஷன் செய்வதால் குரலில் மாற்றம் ஏற்படுமா?"
பெரும்பாலானவர்களுக்கு இது ஏற்படாது. ஒருசிலருக்கு போஸ்டீரியர்பில்லர் என்ற உறுப்பில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனால் குரல் மாற்றம் ஏற்படலாம்.

"எந்த வயதில் டான்ஸில் ஆபரேஷன் செய்வது நல்லது?'
"4 வயதிற்குக் கீழ்இந்த அறுவை சிகிச்சையைப் பொதுவாகச் செய்வதில்லை. அதற்கு மேல் செய்யலாம்."

4, B -வைரஸ் - கல்லீரல் அழற்சி (HEPATITIS-B)கடந்த சில ஆண்டுகளாக,நாம் அதிகம் கேள்விப்படும், பேசப்படும்நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதும்ஆன நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி நோயாகும். ஆங்கிலத்தில்இதை “ஹெப்பட்டைடிஸ் B” என்று அழைப்பர்.


நாம் அதிகம் இந்நோயைப் பற்றிகேள்விப் பட்டாலும், இதேபோன்ற 5 வகை வைரஸ்கள் கல்லீரல் அழற்சியையும், மஞ்சள் காமாலையையும் உண்டாக்கும். A> B,C,D,E என்று ஐந்து வகை வைரஸ்கள்கல்லீரலை தாக்கி, மஞ்சள் காமாலையை உண்டாக்கும்.

இதில் B வகை வைரஸ்தான் ஆபத்தானது. A, E வகை வைரஸ்கள், உணவின் மூலமும், கழிவுகள் மூலமும் பரவும். இவை சாதாரணமாகவேஅதிக ஆபத்தில் லாதவை. நோய்தாக்கம் 10 நாட்களில்தானாகவே சரியாகும். மற்ற மூன்று வகைகள், ஏறத்தாழ ஒரேமாதிரி பரவும் தன்மை உடையவை.
B வைரஸ் பரவும்வகைகளையும், அவை ஏற்படும் தாக்கத்தையும்இனி காண்போம்.

நோய்க்காரணியம்: B வைரஸ், HBV என்று அழைக்கப்படும். கல்லீரல் அழற்சி உண்டாக்கும்B வைரஸ் (Hepatitis B (வைரஸ்) என்று பொருள் படும் HBV வைரஸ்தான் இந்நோயைஉண்டாக்குகின்றன.

நோய் பரவும் வகைகள்: இந்நோய் ஊசிகள் மூலம்தான் அதிக அளவில் பரவுகிறது.இந்நோய் பரவும் முறைகளை நோக்குவோம்.

1. போதை மருந்து பழக்கத்தில், ஊசிகளை போட்டுக் கொள்ளும்பொழுது, அந்த ஊசிகள் சரியாக சுத்திகரிக்கப்படாமல்பயன்படுத்தப் படுகின்றன.

நோய் தாக்கிய ஒருவர் பயன்படுத்திய ஊசியை, மற்றவர் போட்டுக் கொள்ளும்பொழுது, அவருக்கும் எளிதாக நோய் தொற்றும்.

பெரும்பாலும்போதை மருந்துகளை, இளைஞர்கள் அதிகமாகபயன்படுத்தும் நிலையில் இளைஞர்கள் பெரும்பாலும் இந்த முறையிலேயே நோய்த் தொற்றுக்குஆளாகின்றனர்.

2. இரத்தம் கொடுக்கும்பொழுது, அதில் B வைரஸ் இருப்பின், இரத்தம் ஏற்றப்படுபவருக்கு நோய்த் தொற்றுஏற்படுகிறது. ஆனால் மருத்துவ அறிவியல் வளர்ச்சியாலும், இரத்தம் கொடுப்பதில் உள்ள கடுமையான தரக்கட்டுப்பாடுகளினாலும், இம்முறையில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புமுற்றிலுமாக இல்லை என்றே சொல்லலாம்.

3. தகாத உடலுறவின் மூலம்இந்நோய் பரவும். நோயுள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு ஏற்பட்டால் நோய்த் தொற்றுஏற்படும். உடலுறவின் மூலம் பரவும் தன்மையால்,பால்வினை நோய்களில் ஒரு வகையாக இப்பொழுது வரையறுக்கப்படுகிறது.

ஒழுக்கக்கேடான உடலுறவு,பலருடன் உடலுறவு, இயற்கைக்குப் புறம்பானஉடலுறவு, ஓரினச் சேர்க்கை ஆகியவைஇந்நோய் எளிதாக பரவ காரணமாகின்றன.

4. நோயுற்ற தாய்மார்களிடமிருந்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கு, நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகம். இதன் காரணமாகநோய்த் தொற்று ஏற்பட்டு 30 முதல் 75 நாட்களில் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.

நோயின் அறிகுறிகள்: நோய்த் தொற்று ஏற்பட்டு 30 நாட்களில் முதல் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலை தெரியாது. முதலில் களைப்பு, அசதி,பசியின்மை, குமட்டல், சில சமயங்களில் வாந்தி போன்றவை ஏற்படும்.

உடம்பின் மேல் பகுதியில் வலி இருக்கும். ஓரிரு நாட்களில் மஞ்சள்காமாலை தெரியத் துவங்கும். அடர்த்தி மிகுந்த,மஞ்சள் நிற சிறுநீர் வெளிப்படும். கண்களின் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக இருக்கும்.நகக்கண்கள் மஞ்சள் நிறமடையும். சவ்வுத் தசைகள்,தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தும். களைப்பும், அசதியும் அதிகமாகும். பசியின்மை, வாந்தி அதிகமாகும்.

மலம் அதிக மஞ்சளாக வெளிப்படும். தோல் அரிப்பு ஏற்படும். உடலின்எடை வேகமாகக் குறையத் துவங்கும். சில சமயங்களில் 15 கிலோ வரை கூட எடை குறைவு ஏற்படும். கல்லீரல், மண்ணீரல் வீங்கத் துவங்கும். சாதாரண நிலையில்தொட்டுப் பார்த்தால் தெரியாத கல்லீரல் மண்ணீரல் நன்றாகத் தொட்டு உணரும் நிலையில் இருக்கும்.வலியும் இருக்கும்.

இந்நிலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவம் செய்து கொண்டால்நோய் குணமடைய நல்ல வாய்ப்பு உண்டு. இந்த நிலையிலும் சரியான மருத்துவம் கிடைக்காத நோயாளிகள்மேலும் தொல்லைகள் படத் துவங்குவர்.

வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விடுவதால், நோய்த் தொற்று அதிகமாகும். கல்லீரல் செல்கள்அதிக அளவில் அழற்சி அடையும். சிறிது சிறிதாக அழியத் துவங்கும். கல்லீரல் செல்கள் அழிவடைவதால், கல்லீரலின் செயல்பாடுகள் தடை ஏற்படும்.

உடலின் உதிரத்தில் பரவும் வைரஸ்களால் மற்ற உறுப்புகளும் பாதிப்படையும்.மூளையும் பாதிப்படையும். மூளைக் காய்ச்சல் ஏற்படும். அதிக அளவு தலைவலி, காய்ச்சல், மூட்டு வலி, வலிப்பு போன்றவைஏற்படும். உடல் முழுதும் தோல் அரிப்பு அதிகமாகும். உணவு முழுமையாக ஏற்க முடியாத நிலைஏற்படும். நோயாளி மிகவும் ஆபத்தான நிலையை அடைவார்.

இந்நிலையிலிருந்து பாதிப்படையும் கல்லீரல் செல்கள் மீண்டும்சீரடையும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும். இரத்த ஓட்டமும், சிகப்பணுக்களின் தோற்றமும், சிதைவும் பாதிப்படையும். அதனால் இரத்தத்தின்செயல்பாடுகள் பாதிப்படையும். அதன் தொடர்ச்சியாக உடலின் மற்ற அவயவங்களின் செயல்பாடில்பாதிப்பு ஏற்படும். நோயாளி மரணத்தின் எல்லையை தொடுவார்.

சரியான மருத்துவமும்,நோயைப் பற்றிய சரியான அறிவும் இல்லாத நிலையில், நோய் முற்றி, நோயாளி யின்மரணம் தவிர்க்க முடியாத நிலையை அடைய ஏதுவாகும். ஆனால் ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்துகொள்வதால், நோய் முற்றுவதை முழுமையாகத்தவிர்த்து முழுக் குணமடையும் வாய்ப்பு ஏற்படும்.

சில நோயாளிகளுக்கு ஆபத்து அதிகமாகும் நிலைக்கு முன்பு, கல்லீரல் பாதிப்பும், கல்லீரல் செல்கள் அழிவும், கல்லீரல் புற்று நோயாகவும் உருப்பெறும்.

நோயறிதல்: மருத்துவ ஆய்வக சோதனைகள் மூலம் எளிதாக நோயை அறிய முடியும்.இரத்தத்தில் கலந்துள்ள ‘பிலுருபின்’ (Sereen Bilirubin)) அளவு சாதாரணநிலையை விட மிக அதிகமாக இருக்கும். நோயின் எதிர்ப்பான்கள் (Antibodies) அதிக அளவில்இரத்தத்தில் இருக்கும். ஆய்வக சோதனைகள் மூலம் எளிதில் அறியும் நோயை உடனடியாக மருத்துவம்செய்வித்தல் வேண்டும்.

மருத்துவம்: நோயாளிகளுடன் தொடர்புகளை கட்டுப்படுத்துதல் வேண்டும்.நோயின் அறிகுறிகள் தெரியத் துவங்கிய உடனே, கட்டாய ஓய்வு, உணவுக் கட்டுப்பாடு உறுதியாக பின்பற்றப்படவேண்டும்.

எண்ணெய், கொழுப்புபதார்த்தங்களையும், உணவு வகைகளையும் முழுமையாகபயன்படுத்தக்கூடாது. தாளிப்பதற்கு பயன்படும் எண்ணெய் அளவுகூட உணவில் சேர்க்கக்கூடாது.

மாவுச் சத்து அதிகம் உட்கொள்ளுவதன் மூலம் இழந்த சத்தை நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அழித்துவிட வேண்டும். நோயாளியின்எதிர்ப்புச் சக்தி குறைவதால் மற்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே மருத்துவகண்காணிப்பு மிகவும் அவசியம்.

கல்லீரல் மேன்மேலும் பாதிப் படைவதைத் தவிர்ப்பதற்கும் மருத்துவகண்காணிப்பு உதவும். நோயைக் குணப்படுத்த நேரடியாக மருந்துகள் இல்லாவிட்டாலும், நோயாளியை தகுந்த முறையில் ஓய்வு, நல்ல உணவு, கல்லீரலை பலப்படுத்தக்கூடிய மருந்துகள், நோயாளியின் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்புச்சக்தி ஆகியவை, நோயாளி குணமடைய உதவிசெய்யும்.

சித்த மருத்துவத்தில் கூறப்படும் ‘மஞ்சள் கரிசிலாங்கண்ணி’, கீழா நெல்லி ஆகியவை சிறந்த பயனைத் தரும்.இதில் கீழா நெல்லி ,லைகளை அரைத்து உணவோடுசேர்த்து உண்ணலாம். இது மஞ்சள் காமாலை நோயில்,நோய்த் தொற்றை அழிக்க உதவும்.

மஞ்சள் கரிசிலாங்கண்ணி,பாதிப்படைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்க உதவும். ஆங்கில மருத்துவ ஆராய்ச்சித்துறையிலும், இதனைப் பற்றி தீவிர ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வருமுன் காத்தல்: B வைரஸ் கல்லீரல் அழற்சி நோய் ஆபத்தான ஒருநோயாக இருந்தாலும், தடுப்பூசிகள் உள்ளன.இந்த தடுப்பூசிகள் முழுமையாக நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தவை. அதை போட்டுக்கொள்ளுதல் அவசியம். மருத்துவத் துறையில், எல்லா மக்களும்இதை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். DR இரா. கவுதமன் . MDS

5.வெங்காயம். மருந்தாகின்றது

வாயில் புண் இருக்கிறதா?வெங்காயம் சாப்பிடுங்கள். வெங்காயத்தில்உள்ள ரிபோபிளேவின் பி குரூப் வைட்டமின் தான் வாய் புண்ணிற்கு மருந்தாகின்றது.

ரத்தசோகை, உடம்பில் ரத்தமின்றி இருப்பவர்கள் அடிக்கடி வெங்காயம் சாப்பிட ரத்தம் ஊறும்.

பாலியல் நடவடிக்கைக்கு உத்வேகம் அளிக்கக் கூடியது.

சிறுநீர் சொட்டு சொட்டாக போவது, சிறுநீர் கடுத்துக்கொண்டு போவது, எரிச்சலுடன் போவது போன்ற குறைபாடு உள்ளவர்கள்வெங்காயச் சாறினை நான்கு தடவை சாப்பிட உடன் குணம் பெறலாம்.

நெஞ்சு வலி இருப்பவர்கள், இருதய நோயாளிகள் வெங்காயத்தை வெளுத்துக்கட்டுங்கள்.

இருதய ரத்தக் குழாய்களில் ரத்தம் உறையாமல் பாதுகாக்கும் இயற்கைதந்த அரிய மருந்து இத

.கொழுப்பை குறைக்க நினைக்கிறீர்களா?வெங்காயத்தை வித விதமா சாப்பிட்டு பாருங்க.அப்புறம் தெரியும்.

புகை பிடித்து கெட்டுப் போயிருக்கிற நுரையீரலுக்கு நல்லது செய்து, சிகரெட் பிடிப்பவர்களின் நண்பன் என்ற பெயரினையும்பெற்றது வெங்காயம்.

இரத்தத்தில் கொழுப்பு,மாரடைப்பு வரும் வாய்ப்பு உள்ள நோயாளிகள் தினமும் ஒரு பாலாடை சாம்பார் வெங்காயச்சாறில், ஒரு துளி தேன்விட்டுச் சாப்பிட்டு வர சரியாகும். சாம்பார் வெங்காயத்துக்கு இரத்த நாள அடைப்புகளை நீக்கும் வலிமை உண்டு.

வெங்காயம் உடம்பில் சூட்டை உண்டு பண்ணி விந்துவை பெருக்கும்தன்மை கொண்டது. ஆணின் வீரியத்தையும் அதிகப்படுத்தும் தன்மையும் கொண்டது.

உடல் வலிமையை ஏற்படுத்தி பசியை தூண்டக்கூடியது. தாகத்தையும்அதி கரிக்கும் சக்தியும்; இதற்குண்ட

.வெறிநாய்கடிக்கு வெங்காயத்தையும் தேனையும் கலந்து கொடுத்தால்விஷத் தன்மை மறையும்.

குழந்தைகளின் வயிற்றுப் பூச்சிகளை கொல்லக்கூடிய சக்தியும் வெங்காயத்திற்குஉண்டு.

நெருப்பில் வெங்காயத்தை கருக்கி அதனுடன் சர்க்கரை, தேங்காய் எண்ணெய் மூன்றும் அளவோடு கலந்துகொடுத்தால் நாள்;பட்ட இருமல் குணமாகும்.அத்துடன் சளியையும் வெளி யேற்றும

.தீப்பட்ட இடத்தில் வெங்காய சாறினை போட்டால் புண் விரைவில் ஆறும்.

வினிகரோடு வெங்காய சாற்றை சேர்த்து போட்டால் தோலின் புள்ளிகளும்தழும்புகளும் மறையும்.

காதில் எழும் சத்தங்களுக்கும், காது வலிக்கும் வெங்காய சாற்றை ஊற்றினால்நிவர்த்தியாகும்.

முகத்தில் இடது பக்கம் பாதியிலோ, அல்லது வலதுபக்கத்தில் பாதியிலோ, முகவாதம் வந்தால் அதற்கு வெங்காயத் தை கொண்டுதயாரிக்கப்பட்ட ஹோமியோ மருந்தை கொடுக்க குணம் பெறலாம்.

நீண்ட நாளாக மூட்டு வலி இருப்பவர்கள் உளுந்து, முடக்கத் தான் கீரை, வெங்காயம் மூன்றையும் போட்டு வடை சுட்டு சாப்பிடலாம். வெங்காயத்துடன் சதகுப்பையை (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) அரைத்து கால் மூட்டுப்பகுதிகளில் போட்டால் மூட்டு வலி போய் விடும

..வெயில் நாட்களில் முக்கியப் பிரச்சினையே Nடு பிடித்துக் கொள்வது தான். சொட்டுச் சொட்டாக சிறு நீர் எரிச்சல் கலந்து வரும். வெங்காயம் நிறைய சேர்த்துக் கொண்டாலே இந்தத் தொந்தரவைத்தவிர்த்து விடலாம்.

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால் வெங்காயத்துடன் சீரகத்தையும்,வெந்தயத்தையும் சமமாகக் கலந்து அரைத்து கொதிக்கவிட்டு, நன்றாக வடிகட்டி ஒருபாலாடை குழந்தைக்குப் புகட்டினால் வயிறு கேடு குறைந்து வயிற்றுப் போக்கு நிற்கும்.

தினமும் எழுந்தவுடன் ஐந்து சிறிய வெங்காயத்தை பச்சையாகக் கடித்துச்சாப்பிடுங்கள். சுறுசுறுப்பு மட்டுமல்ல-வாதம்,நீரிழிவு பற்றிய பயமின்றி இருக்கலாம். வெங்காயம் நுரையீரல் பிரச்சினைகளுக்கு நல்லது.

வெயில் காலத்தில் உடல் டே;டைக் குறைக்க பயத்தம் பருப்பில் நிறைய வெங்காயம் அரிந்து போட்டு, காரமற்ற சாம்பார் வைத்து அடிக்கடி சாப்பிடுங்கள்.பயத்தம் பருப்பு, வெங்காயமும் நல்லகுளிர்ச்சி.

பெண்கள் பச்சை வெங்காயத்தை பீரியட்ஸ் சமயத்தில் மட்டும் சாப்பிடவேண்டாம்.

வெங்காயச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இருமல், மார்புச்சளி, மார்புதொடர்பான நோய்கள் நீங்கும்.

சின்ன வெங்காயம்
பெரிய வெங்காயத்தைவிட சிறிய (நாட்டு) வெங்காயத்துக்கே மருத்துவக்குணங்கள் மிக அதிகம்.

பிளட் பிரஷர்காரர்களுக்கு இது கண் கண்ட மருந்து உடம்பில் கொழுப்புச்சத்துஏறுவதைத் தவிர்த்து, ரத்தத்தையும் சுத்திகரிக்கும்அற்புத வேலையை வெங்காயம் செய்கிறது.

வெங்காயத்தின் முக்கியமான பயன் இன்சுலினைத் தூண்டுவது. இதனால்சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
அம்மை போட்டிருக்கும் ஒருத்தருக்குச் சாப்பிட மோர்சாதமும், பச்சை வெங்காய மும் தருவோம். ஏன் தெரியுமா? வெங் காயம் குளிர்ச்சியானது என்பதால்தான்.

அழாத பெண்களைக்கூட வெங்காயம் கண்ணீர்விட வைத்துவிடுகிறதே என்றுயாரும் வெங்காயத்தின் மேல் கோபம் கொண்டு விட வேண்டாம்ழூ வெங்காயம் உரிப்பதன் மூலம்கண்ணீர் வந்தால் அது நல்லது தான். இதனால் கண்கள் சுத்தம் ஆகின்றன. மூக்கடைப்பு போன்றபிரச்சினைகளும் சரியாகின்றன.

வெங்காயத்தில் கொழுப்பு கிடையாது. புரோட்டீன், கார்போஹைடிரேட், சல்பர், கந்தகம், நார்ச்சத்துபோன்ற சத்துக்கள் இருப்பதால் வெங்காயம் சாப்பிட, சாப்பிட உடம்பு சுறுசுறுவென்று ஆகும்.

பெண்களின் ஓவரான வெள்ளைப் படுதலையும் வெங்காயம் தடுக்கிறது.பொதுவாகவே வெங்காயத்துக்கு தாம்பத்திய உறவுக்குரிய உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதில் பெரும்பங்குஉண்டு.

வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அதைச் சாப்பிடுபவர்களுக்குமலச்சிக்கல் இல்லாமல் உடம்பு கலகல வென இருக்கும்.

6.சுகப் பிரசவம் ஆக...!

ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது கர்ப்ப காலம்தான்.அந்த 10 மாதங்களில் ஒரு நாளைக்கு8 மணி நேரத்திற்கு குறையாமல் தூங்க வேண்டும்.அதிக எடை கொண்ட பொருள்களைத் தூக்கக் கூடாது.

ஒரே சமயத்தில் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டுசெய்யக் கூடாது. இருக்கைகளின் விளிம்பில் அமராமல் நன்கு உள்நோக்கி அமரவேண்டும்.

நல்ல சத்துள்ள... எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளை சாப்பிட வேண்டும்என்பது தவிர, சில உடற்பயிற்சிகளையும்பெண்கள் மேற்கொள்ளலாம். இவை சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும்.

எனினும், கர்ப்பிணிபெண்களுக்கான உடற்பயிற்சிகள், மற்ற பயிற்சிகளைப்போல்மளமளவென்று செய்வதற்கில்லை. பெண்கள் தங்கள் உடல்வாகுக்கு ஏற்றாற்போல மெதுவாக செய்யக்கூடியவை. பொதுவில் ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு வாக்கிங் போவதே சிறந்த உடற்பயிற்சி ஆகும்.ஆகவே, மாலையில் சற்று வாக்கிங்செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.

மற்றபடி இந்த சிறுசிறு பயிற்சிகளை நீங்கள் தாராளமாக... பக்குவமாக மேற்கொள்ளலாம்.

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு காலை சற்று அகல விரித்துவைத்து மூச்சை நன்றாக மெதுவாக இழுத்து விடுங்கள். இதனை சுமார் 10 முறைகள் செய்த பின், அமர்ந்து கொண்டு சில நிமிடங்கள் இருந்து எழுங்கள்.நாள்தோறும் இதனைச் செய்யுங்கள்.

முன்பு போல் தரையில் படுத்துக் கொண்டு கால் முட்டிகளை மெதுவாகமடக்குங்கள். பிறகு நீட்டுங்கள். இப்படி 5,6 முறைகள் செய்யவும்.
பிறகு அதே நிலையில் படுத்தபடியே இடது காலை வலது பக்கமாகவும், வலது காலை இடது பக்கமாகவும் மாற்றி மாற்றிமெதுவாக செய்யுங்கள்.

பல கர்ப்பிணிப் பெண்களுக்கு முதுகுவலி இருக்கக் கூடும். அவர்கள்இப்படி படுத்துக் கொண்டு முதுகுக்கு கீழே கை வைத்தபடி சில நிமிடங்கள் இருங்கள். நாள்தோறும்இதைச் செய்து வரவும்.

நாள்தோறும் வாய்ப்புக் கிடைக்கும்போது ஏதாவது ஒரு புத்தகத்தைஎடுத்து வைத்துக் கொண்டு இந்த நிலையில் இருந்தபடியே சில நிமிடங்கள் பழகவும்.

இப்படியான பயிற்சிகளை செய்யும்போது வயிறு எந்த விதத்திலும் பாதிக்காதபடிமெதுவாகச் செய்யவேண்டும் என்பது அவசியம்!
இதன்மூலம் அறுவை சிகிச்சை சிக்கலில் இருந்து விடுபட்டு எளிதாககுழந்தையைப் பெற்றெடுப்பீர்கள். நன்றி: மாலை மலர், மகளிர் மலர், 17.3.2006

7.அடிக்கடி குளிர்பானம் குடிக்கும் பெண்களுக்குவிரைவில் முதுமை வரும்!

அளவுக்கு அதிகமாகக் குளிர்பானங்களை இளம் பெண்கள் அருந்தினால், அவர்களுக்கு விரைவில் வயோதிகத் தோற்றம் ஏற்படுவதோடு, அவர்களின் உடல் எடை அதிகரிக்கும் அபாயமும்உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள 400 இளம் பெண்களிடம்கடந்த பத்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. ஒன்பது முதல் 19 வயது வரையிலுள்ள இளம் பெண்கள் வழக்கமாக அருந்துவதைவிட தற்போது குளிர்பானங் களை அருந்துவது, இரண்டு முதல்மூன்று மடங்கு வரை அதிகரித்து இருப்பதாகவும்,அதே நேரத்தில் அவர்கள் பால் சாப்பிடுவது வெகுவாகக் குறைந்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள்கண்டு அறிந்துள்ளார்கள்.

இதனால் இளம் பெண்களுக்கு தினசரி கலோரி கூடுவதோடு, உய ரத்திற்கேற்ற எடை இல்லாமல், உடல் எடையும் கூடுகிறது. குளிர்பானங்கள் கலோரியை மட்டுமே அதிகரிக்கின்றன.

உடலுக்கு எந்தஊட்டச் சத்தையும் தருவதில்லை. இதனால், குளிர் பானங்களைஅதிக அள வில் சாப்பிடுவது இளம் பருவத்திலேயே உடல் பருமனை அதிகரிப்பதோடு, விரைவில் வயதான தோற்றத்தையும் உருவாக்குகிறது.

தற்போது டீன்-ஏஜ் எனப் படும் இளம் பெண்கள், பால் மற்றும் பழம், காய்கறி, இறைச்சியின் சாறு அடங்கிய பாரம்பரிய காலை உணவை உண்ணாமல் விட்டுவிடுகின்றனர். பாஸ்ட் புட் எனப்படும் துரித உணவுகளையே விரும்பி உண்கிறார்கள். இவற்றைபெற்றோர் அனுமதிக்கக் கூடாது.

தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமான காலை உணவை உண்பதற்கும், தாகம் தணிப்பதற்கு, சர்க்கரை கலந்த பானங்களுக்கு பதிலாக தண்ணீரைஅருந் துதற்கும் பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நறுமண சுவையூட்டப் பட்ட மற்றும் பக்குவப்படுத்தப்பட்ட பழச்சாறுகளுக்கு பதிலாக, குறைந்த கொழுப்புசத்துள்ள பால், பழம் அல்லது காய்கறிசாறு அருந்துவது மட்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று இளம் பெண்கள் உணரவேண்டும .இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

8..தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க...

தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம்அடையும்.
தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமாஉபாதையிலிருந்து தப்பலாம்.
இருமல், சளித் தொல்லைநுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்துசாப்பிட, இருமல் மட்டுப்படும்.சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும்சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.
வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன்தடவினால் வலி நீங்கும்.
தேனோடு பாலோ, எலுமிச்சம்பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன்,அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும்நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத்தொடர்ந்து சாப்பிட்டு வர,
குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை
நீங்கும்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP