என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நான் ஏன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.? Dr பெரியார்தாசன்.

>> Monday, March 15, 2010


பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.


தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டாக்டர் பெரியார்தாசன் அவர்கள், சிறு வயதில் இந்து மத நம்பிக்கையாளராக இருந்து, பிறகு நாத்திகராக மாறி, பல ஆயிரம் பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக ஆவதற்கு காரணமானவர்,

ஒரு கட்டத்தில் முன்னால் கல்லூரி நண்பன் கேட்ட கேள்வி, “கடவுள் இருக்கிறாரா? இல்லையா?” என்பது பற்றியும் “இறந்த பிறகு நாம் எழுப்பப்படுவோமா? இல்லையா?” என்பது பற்றியும் தன்னை சிந்திக்கத் தூண்டியதாக தெரிவித்தார்.

நண்பரின் கேள்வி, மன நல நிபுணரான தன்னை, ஆழமான சிந்தனையிலும் மன உளைச்சலில் வீழ்த்தியதாக தெரிவித்தார். அதன்பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கடவுள் மற்றும் மறுமை தொடர்பான ஆராய்ச்சி சிந்தனையில் இருந்ததாகவும்,

முதலில் இந்துத்துவத்தை பற்றியும், கிருஸ்துவத்தைப் பற்றியும் ஆராய்ந்த பிறகு இறுதியாக இஸ்லாத்தைப் பற்றி படிக்க முற்பட்டதாகக் குறிப்பிட்டார்.
தான் பல பேர்களை கடவுள் மறுப்பாளர்களாக வளைத்துவிட்டதாகவும் அவர்களை நிமிர்த்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

முன்பு “கடவுள் யாருமில்லை” என்று பிரச்சாரம் செய்தவர் இப்பொழுது “கடவுள் யாருமில்லை அல்லாஹ்வைத் தவிர” என்று கூறுவதற்கான காரணங்களை கண்டறிந்துவிட்டதாக குறிப்பிட்டார்.

“அல்லாஹ்” முஸ்லிம்களுக்கு மட்டும் கடவுளல்ல. “அல்லாஹ்”தான் இவ்வுலகின் அனைவருக்கும் கடவுள் என்றார்.

ஒரு பக்கம் இஸ்லாமியர்கள் தன்னுடைய மாற்றத்தினால் சந்தோசமடைந்தாலும்

இன்னொரு சாரார் தனக்கு எதிராக இப்பொழுதே கிளம்பிவிட்டதாகவும்,

டாக்டருக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளதாகவும், எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் அதனை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்


பலபேர் ஆராய்ச்சி செய்து ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை, முஸ்லிம்கள் கற்று தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றும்

முஸ்லிமல்லாத சகோதரர்கள் இஸ்லாம் சொல்லும் “கடவுள்” கோட்பாட்டினை காய்தல் உவத்தலின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
**********

சுட்டுப்போட்டாலும் இவனுக்கு சரிவராது என்று இவரை கேவலப்படுத்தியவர்களுக்கே அவர்களை சுட்டிக்காட்டும் வகையில் தன் விடாமுயற்சியால் உயர்ந்து அவமானப்படுத்தியவர்களின் தலைகளை குனியச்செய்தவர்.

இன்று உலகம் போற்றும் பேச்சாளராக இருந்தபோதிலும் இளமைப்பருவத்தில் அவருக்கு இருந்த திக்குவாயினை ஒரு குறையாக நினைக்காமல் தான் எதிர்காலத்தில் பெரிய பேச்சாளனாக வரவேண்டும் என கடுமையான பயிற்சிகளை செய்து திக்குவாயினை போக்கி இன்று உயர்ந்த நிலையில் உள்ளார்.

பெரியாரை பார்க்கும், அவரை வாழ்த்தி கவிதை பாடும் அவசரத்திலேயே சேஷாசலம் என்ற அவரது இயற்பெயர் பெரியார்தாசன் ஆனது. பெரியாரைப்போலவே… “தனது கருத்து என்பதற்காக தனது பேச்சினை அனைவரும் ஏற்றாகவேண்டும் என்ற எண்ணம் ஒரு துளியும் இன்றி தனது பேச்சுக்களையும் உங்கள் அறிவினால் திறனாய்வு செய்து பாருங்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்”.

“தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்களுக்கே உரிய ஒரு குணம், அவர்கள் தமக்கான ஒரு நிலையினை எடுத்தவுடன் புதிதாக வருபவர்களுக்கு, முன்னுக்கு வருபவர்களுக்கு இடம்கொடுப்பதில்லை” அனால் பேராசிரியர் பெரியார்தாசன் வித்தியாசமானவர்.

பலபேர் முன்னுக்குவர ஏணியாக இருந்தவர். இன்றைய பிரபலங்கள் பலரை தன் கையால் அரவணைத்து வழர்த்துவிட்டவர். தான் சிகரங்களில் இருந்தாலும்கூட, புதிதாக ஒருவன் சிகரத்திற்கு வர எண்ணி இரண்டு எட்டு வைத்தாலும் ஓடிவந்து அவனுக்கு கைகொடுத்து வாழ்த்து சொல்பவர்.

படிக்கவும்.
பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP