என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

>> Monday, March 22, 2010

வட்டிக்குப் பதிலாக மகளையே தூக்கிச்சென்று சீரழித்த கொடூரம்!!
தடுத்து நிறுத்த முன் வருமா தமிழக அரசு!!!

நன்றி: ஜூவி

கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி!

நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் கோரத் தாண்டவம் ஆடும் கந்து வட்டி விபரீதத்தால், கடந்த வாரம் பள்ளிப்பாளையம் ஏரியாவில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்!

பள்ளிப்பாளையம் பகுதியில் தறி ஓட்டும் தொழிலாளர்கள் அதிகம். ஏழ்மையில் இருக்கும் இவர்கள், கந்து வட்டிக்கு பணம் வாங்குவது சகஜம். அப்படிப் பணம் வாங்கிய ஒரு பெண்மணி தவணையை ஒழுங்காகக் கட்ட முடியாமல் போக... அவரது வயதுக்கு வந்த மகளையே வட்டிக்கு பதிலாகத் தூக்கிச்சென்றிருக்கிறார்கள்!

அந்தப் பெண்ணை சீரழித்ததோடு, அதை வீடியோவாகவும் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டு காசு பார்த்தும் இருக்கிறார்கள்.


சினிமா வில்லத்தனத்தையே ஜுஜுபி ஆக்கும் இந்தக் கொடூரர்களைத் தட்டிக் கேட்கப் போய்த்தான் பரிதாபமாகக் கொலையானார் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் தோழரான வேலுச்சாமி.

தட்டிக் கேட்க ஆளில்லாமல் கொங்கு மண்டலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடரும் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி விசாரிக்கப் புறப்பட்டபோது தலை சுற்றியது. முன்பு, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இதற்கு எதிராகப் போட்ட சட்டம் சுத்தமாக செத்துப் போய்விட்டதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

அரசியல் செல்வாக்கில் ஈரோடு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த கிரிகோரி என்பவர், ''விவசாயிகளுக்கு விதைப்புல தொடங்கி அறுவடை வரைக்கும் காசு நீட்டுறது கந்து வட்டிப் பேர்வழிங்க தான். இங்கே 'மைக்ரோ'ல ஆரம்பிச்சு 'மேக்ரோ' வரைக்கும் வட்டி பிசினஸ் சக்கைப்போடு போடுது. நாள் வட்டி, வார வட்டின்னு பல டைப். இதுல ஒரு தவணை கட்டத் தவறினாலே, வட்டி குட்டி போடும்.

விவசாயிகளுக்கு நிலத்தின் பேர்ல கந்து வட்டிக்கு பணம் தந்து, கட்டமுடியாம அபகரிச்சு பல நூறு ஏக்கருக்கு அதிபதியா மாறிய ஆசாமிகள் இங்கே ஏராளம்.

நிலத்தை பறிகொடுத்த விவசாயி, அதே நபர்கிட்ட அதே நிலத்தை குத்தகைக்கு எடுத்து உழைக்கிற கொடுமையும் நடந்துகிட்டிருக்குது. இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எக்கச்சக்கமா இருக்கிறதால எதுவும் பண்ண முடியல...'' என்றார்.

அபராத வட்டி.. செடி வேர் அடி..!

கடம்பூர், தாளவாடி போன்ற மலைகளில் வாழும் மலைவாழ் மக்களுக்கு கந்து வட்டிக்கு பணம் கொடுப்பதற்கென்றே கோவை, நீலகிரியைச் சேர்ந்த ஒரு டீம் இருக்கிறது. சந்தை கூடும் நாட்களில் பணத்தைக் கொடுத்துவிட்டு, அடுத்த சந்தையன்று வட்டியை வசூலிக்க வருவார்கள். இரண்டு மூன்று தவணைகள் வட்டி தவறினால், அபராத வட்டி போடுவதுடன், கடன் வாங்கியவரின் முதுகில் காட்டுச் செடி வேரினால் அடிக்கும் காட்டுமிராண்டித்தனங்களும் நடக்கிறதாம்!

ராத்திரி நேரம்... நடு வீட்டில்...

சேலம் மார்க்கெட் ஏரியா கந்து வட்டி கொடூரங்கள் ரொம்ப கொடுமை..! ''காலையில 1,000 ரூவா கொடுப்பாங்க. சாயந்திரம் வீட்டுக்குப் போறப்ப 1,100 ரூவாயா திருப்பிக் கொடுக்கணும். ஒருநாள் லேட்டானாலும் அந்த 100 ரூவாய்க்கும் சேர்த்து வட்டி போட்டுருவாங்க.

1,000 ரூவா கடன் வாங்கியிருந்தா... மாசம் 3,000 ரூவா வட்டி மட்டுமே கட்டியாகணும். கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னா, கடன் கொடுத்த ஆளு பொழுது சாய்ஞ்சா கடைக்காரரோட வீட்டுக்குப்போய் நடு வீட்டுல சேரைப் போட்டு உட்கார்ந்துக்குவாரு. ராத்திரி 11 மணி வரைக்கும் உட்கார்ந்து இருந்துட்டு, கிளம்பி வந்துடுவாரு. கடைக்காரரு வீட்டுக்கு வர்றதுக்கே 10 மணியாகும். அப்படி இருக்கும்போது தெனமும் ஒரு ஆம்பளை வீட்டுக்கு வந்துட்டுப் போறதை பார்த்தா அக்கம்பக்கத்துல என்ன நினைப்பாங்க, சொல்லுங்க? இப்படி டார்ச்சர் செஞ்சு வசூலிக்கறது சகஜம்!'' என்றார் மார்க்கெட் கடைக்காரர் ஒருவர்.

''சேலம் மாநகராட்சியில வேலை பார்க்குற துப்புரவு தொழிலாளர்களை மட்டுமே குறிவச்சு ஒரு கும்பல் செயல்படுது. வட்டிக்குப் பணம் கொடுத்துட்டு, அவங்களோட ஏ.டி.எம். கார்டை வாங்கிக்குவாங்க. ஒவ்வொரு மாசமும் சம்பளம் போட்டதும் வட்டிப் பணத்தை எடுத்துக்கிட்டு அக்கவுன்ட்ல மிச்சம் பணம் இருந்தா... அதை சம்பந்தப்பட்டவங்களுக்கு எடுத்துக் கொடுப்பாங்க. கார்டு அவங்க கையிலதான்!'' என்றார் ஒரு மாநகராட்சி ஊழியர்.
கொள்ளை போகும் பொருட்கள்..!

கேரளா, குஜராத், உ.பி., என்று மற்ற மாநிலத்த வரும், நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா போன்ற வெளிநாட்டினரும் கூட வாழும் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமை இன்னும் அதிகம்.

''தெரு முனையில நின்னுகிட்டு பணம் கொடுக்கிற கந்து வட்டிக்காரனுங்க எண்ணிக்கைதான் இங்கே அதிகம். எந்த டாக்குமென்ட்டும், ஆதாரமும் இல்லாம பணம் தர்றதால இவர்களை கடவுளா நினைக்குறாங்க பாவப்பட்ட மக்கள்.

பனியன் பிசினஸ்ல பணப்பட்டுவாடா ஒழுங்கா நடக்காம எங்கேயாச்சும் சிக்கிடுச்சுன்னா... நிலையை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கித்தான் ஆகணும்... வட்டியும், அசலும் தவறுனா வீட்டுக்கு வந்து டி.வி., பைக்குன்னு கண்ல பட்டதை தூக்கிட்டுப் போயிருவாங்க...'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த மணி.

தொடர்கதையாகும் கொடுமைகள்..!

கந்து வட்டி கொடுமையை எதிர்த்து தொடர்ந்து போராடிவரும் குடியுரிமை பாதுகாப்பு நடுவத்தின் வழக்கறிஞர் தமயந்தி, ''ராசிபுரத்துல ஒரு கும்பல் வட்டிக்கு பணம் கொடுத்துட்டு கட்ட முடியாதவங்க வீட்டுக்கு போய் உட்கார்ந்துக்குவாங்க.

மது பானங்களை கொண்டுவந்து வீட்டுலேயே வெச்சு குடிக்கிறது... வீட்டுல இருக்குற பொண்ணுங்களை தரக்குறைவா பேசுறதுன்னு நடக்குற அநியாயங்கள் எல்லாம் உச்சகட்டக் கொடுமை.

இதனால, ராசிபுரத்துல தற்கொலை வரைக்கும் போய், காப்பாத்தப்பட்டவங்க பலர் இருக்காங்க. பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகள்ல, விசைத்தறி ஓட்டும் குடும்பங்கள் நிறைய. அங்கெல்லாம் திருப்பிக் கட்ட முடியாதவங்க வீட்டுப் பொம்பளைங்களை பாலியல் ரீதியா துன்புறுத்தும் கொடுமைகளை இன்னும் தடுத்து நிறுத்தவே முடியல. கந்து வட்டி கொடூரர்களுக்கு போலீஸ்காரங்களே பக்கத்துணையா நிற்குறாங்க. ஏன்னா, அவங்களுக்கு மாசம் தவறாம மாமூல் கொடுத்துடுறாங்க...'' என்று வேதனைப்பட்டார்.

கொடுமைகள் குறைஞ்சிருக்காம்..!

''மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அரசிடமிருந்து தாராளமான நிதி உதவி கிடைப்பதால், கந்து வட்டி கொடுமைகள் இங்கே மிகப்பெரிய அளவில் குறைந்திருக்கிறது!''- என்று தான் கலந்துகொள்ளும் விழாக்களில் சொல்லி பெருமைப்படும் நாமக்கல் தொகுதி எம்.பி-யும் மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சருமான காந்திசெல்வனை தொடர்பு கொண்டோம். ''நான் பர்சனலா இந்த விவகாரத்தைப் பற்றி கேட்டுத் தெரிஞ்சு விசாரிச்சுட்டுத்தான் பேசுறேனே தவிர, மேடை அலங்காரத்துக்காக எதையும் பேசல. பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு ஏரியாக்கள்ல ஒரு காலத்துல கொடிகட்டிப் பறந்த கந்து வட்டி பிசினஸ், இப்போ ஒடுங்கி இருக்குது. இதுக்கு முக்கியக் காரணம்... கடந்த நாலஞ்சு வருஷங்கள்ல தமிழக அரசு மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வெகுவான நிதிஉதவி வழங்கி ஊக்குவிச்சு இருப்பதுதான்...'' என்றார் அவர்!

விஷச் செடி... மூலிகைச் செடி..!

மேற்கு மண்டல ஐ.ஜி-யான சிவனாண்டியிடம் பேசினோம். ''சமீபத்துலதான் இந்தப் பொறுப்புக்கு வந்திருக்கேன். இதில் ஈடுபட்டிருக்கிற கிரிமினல்களை கூடிய சீக்கிரமே ஒழிச்சுக் கட்டுவேன். அதோடு, ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கு உதவி செய்யக்கூடிய திட்டங்களையும் இங்கே செயல்படுத்தி வருகிறோம்.

அடுத்த தலைமுறையாவது நல்ல கல்வியோடு நிமிரும்போது, கந்துவட்டி போன்ற ஆபத்தான வலையில் விழாமல் இருப்பார்கள். அதோடு, நல்ல தொரு வேலையில் அமர்ந்து தங்கள் குடும்பத்தை இன்னல்கள் இல்லாமல் காப்பாற்றுவார்கள். ஒரு விஷச் செடி யைப் பிடுங்குகிற அதேசமயம், ஒரு நல்ல மூலிகைச் செடியை வைக்கிற மாதிரி, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவ வசதியுள்ளவர்கள் தாராளமாக முன்வரவேண்டும்'' என்று தொலைநோக்கோடு பேசினார் ஐ.ஜி.

அனைத்துக்கும் மேலாக, 'இரக்கமற்ற கந்து வட்டிக் கும்பல்களுக்கு அடைக் கலம் தரக்கூடாது என்று' அரசியல் கட்சித் தலைவர்கள் ஆணை போடுவது முக்கியம்! ஒளிய இடம் இல்லாவிட்டால் விஷப் பாம்புகளை அடித்துப் போடுவது காவல் துறைக்குப் பெரிய வேலையாக இருக்காது!
நன்றி: ஜூவி
**************************

படியுங்கள்.

கேவலமான வட்டி தொழில்,கொடுமை பற்றி இஸ்லாம்.

1 comments:

தமயந்தி March 22, 2010 at 1:39 PM  

க‌ந்து வ‌ட்டியால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ விட‌ய‌ம் என் ப‌ளாக்கில் பார்க்க‌.www.nizhalvalai.blogspot.com

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP