- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
வாழ வைக்கும் வைட்டமின்கள் & அரிய தகவல்கள்
>> Tuesday, December 1, 2009
வாழ வைக்கும் வைட்டமின்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச் சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும்.
அதனால், என்ன வைட்டமின் குறைந்தால் என்ன நோய்வரும், எவற்றில் அந்த வைட்டமின்கள் உள்ளன என்பது பற்றி பார்ப்போம்:
வைட்டமின் `ஏ' : இது குறைந்தால் கண் பார்வை மங்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். கருப்பையில் கரு வளர்வதற்கும், பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளரவும் இந்த வைட்டமின் தேவை. எலும்புகளும் பற்களும் வளர இதுதான் முக்கியக் காரணம்.
முருங்கைக் கீரை, பச்சைக் காய்கறிகள், வெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மீன் எண்ணெய் ஆகியவற்றில் வைட்டமின் `ஏ' அதிகம் காணப்படுகிறது.
வைட்டமின் `பி' : இது குறைந்தால் வயிற்று மந்தமும், அஜீரணமும், ரத்த சோகையும் ஏற்படலாம். பக்கவாதம், இதய பாதிப்பு ஏற்படவும் சாத்தியக் கூறுகள் அதிகம். அத்துடன், வாயில் புண் உண்டாகும்.
கைக்குத்தல் அரிசி, இறைச்சி, முட்டை, காய்கறிகள் ஆகியவற்றில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.
வைட்டமின் `சி' : இது குறைந்தவர்கள் மன அமைதி இழப்பர். மேலும், தோற்றத்தில் சிடுமூஞ்சியாக காணப்படுவர். எலும்புகள் பலம் குறையக்கூடும். பல் ஈறு வீங்கி பற்கள் ஆட்டம் காணலாம். பல் ஈறுகளில் ரத்தம் கசியும். தோலில் ரத்தப் போக்கு ஏற்படும்.
ஆரஞ்சுப்பழம், திராட்சை, சமைக்காத பச்சைக் காய்கறிகள், நெல்லிக்காய், எலுமிச்சை, தக்காளி, கொய்யா, உருளை, வெற்றிலை, பப்பாளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது.
வைட்டமின் `டி' : வைட்டமின் `டி' இல்லாவிட்டால் எலும்புகள் வலு விழந்துவிடும். பற்கள் கெடக்கூடும். வைட்டமின் `டி' போதிய அளவு இல்லாத குழந்தைகளின் கால்கள் வில் போல் வளைந்துவிடும். வயிறு ஊதும்.
போதுமான சூரிய வெளிச்சம் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் உடலே வைட்டமின் `டி'யை தயாரித்துக்கொள்ளும். முட்டை, மீன், வெண்ணெய் ஆகியவற்றிலும் வைட்டமின் `டி' அதிகம் உள்ளது.
வைட்டமின் `ஈ' : இது குறைந்தால் தசைகள் பலவீனமடையும். மலட்டுத்-தன்மையையும் உண்டாக்கும்.
கோதுமை, கீரை, பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்தால் வைட்ட மின் `ஈ' சமச்சீர் விகிதத்தில் கிடைக்கும்.
அரிய தகவல்கள்
ஃ ஒரு அடி எடுத்து வைப்பதற்கு நீங்கள் 200 தசைகளைச் செயல்படுத்துகிறீர்கள்.
ஃ உங்கள் கால் கட்டைவிரல்களில் இரண்டு எலும்புகள் உள்ளன. மற்ற விரல்களில் மூன்று எலும்புகள் உள்ளன.
ஃ உங்கள் வயிற்றில் இருக்கும் அமிலத்தில் ஒரு பிளேடைப் போட்டால் அந்த பிளேடு கரைந்துவிடும்!
ஃ உங்களின் ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் இருக்கும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை சுமார் ஒரு டிரில்லியன்தான்!
ஃ நீங்கள் பிறப்பதற்கு ஆறு மாதங்கள் முன்பே உங்களுக்குப் பல் முளைக்கத் தொடங்கி விட்டது. ஃ உங்கள் கட்டை விரலின் நீளம் உங்கள் மூக்கு நீளத்துக்கு சமமானது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment