- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
திருடனின் கையில் சாவி...!
>> Thursday, September 17, 2009
உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா?
தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான்.
அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு.
மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.
கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!
இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.
இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?
அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-
வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-
இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.
கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...
எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...
ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
SOURCE: DINAMANI
0 comments:
Post a Comment