என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அன்புடன் ஆசா

>> Tuesday, November 11, 2008

Type your summary here
1.ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது. .

2.பேச்சு சுதந்தரம்… இல்லை போச்சு சுதந்தரம்… வீணாப் போச்சு சுதந்தரம்

1.ஊராட்சி போனது : உலக வங்கி ஆட்சி வந்தது.

திருப்பூர்,தூத்துக்குடி,வேலூர் நகராட்சிகள் அடுத்தடுத்து மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. பெரும் பொருட்செலவில் இவற்றின் தொடக்க விழாக்கள் கோலாகலமாக நடத்தப்பட்டுள்ளன. நவீன பாதாளச் சாக்கடைத் திட்டங்கள்,சாலைகளை அகலப்படுத்துவது,திடக்கழிவு மேலாண்மை எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தி.மு.க. அரசு, நகர்ப்புற மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து மேம்படுத்துவதாக மக்களும் கருதுகின்றனர்.

மாநகராட்சிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்திருப்பதன் பின்னணியைப் புரிந்து கொள்ள முதலில் நாம் "மூன்றாவது தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்' (த.நா.ந.வ.தி.) பற்றித் தெரிந்து கொள்ளவேண்டும்.

47 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழும் தமிழ்நாட்டில்தான் நகரமயமாக்க வேகம் இந்தியாவிலேயே அதிகம் என்பதால், இம்மக்களுக்கு தரமான சேவை செய்திடவும் உள்கட்டுமானங்களை வலுவாக்கிடவும் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டத்தினை உருவாக்கி அதற்கு 8.5 சதவீத வட்டியுடன் 20 ஆண்டுகளில் திருப்பச் செலுத்தும் வகையில் ரூ. 1200 கோடி கடன் தந்திருக்கிறது, மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான பன்னாட்டு வங்கி.

2005இல் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் மூன்று முக்கிய நோக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று, மாநில, மைய அரசுகளின் பிடியில் இருந்து நகர்மன்றங்களை விடுவித்து, அவற்றை வலிமையான நிறுவனங்களாக்குதல்¢ இரண்டு, எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தனியார் மூலதனங்கள் வாயிலாக நகர உள்ளாட்சியின் தேவைகளை விரைவில் பூர்த்தி செய்தல்¢ மூன்று, உள்ளாட்சியும் தனியாரும் இணைந்து நலத் திட்டங்களை நிறைவேற்றுதல்.

பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் இந்திய நகர வளர்ச்சிக்காகத் தேவைப்பட்ட 28 ஆயிரம் கோடி ரூபாயைக் கடனாக வழங்க வேண்டுமானால், உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அவை மைய, மாநில அரசுகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு, உலக நிதி மூலதனத்தை நேரடியாகக் கையாள வகை செய்யப்பட வேண்டும் என உலக வங்கி நிபந்தனை விதித்து, அதன்படி த.நா.ந.வ.தி. வடிவமைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்படி த.நா.நகர்ப்புற வளர்ச்சி நிதி ஒன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த அமைப்புக்கு நேரடியாக உலக வங்கி கடன் தந்தது. வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தமிழகமெங்கும் உள்ள நகராட்சிகளில் பாதாளச் சாக்கடைகள், குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கு ரூ. 440 கோடி இந்நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டது.

நகராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் மட்டுமல்லாமல், திட்டத்தை வடிவமைத்துத் தருவதிலும் பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, தூத்துக்குடியின் புதிய பாதாள சாக்கடைத் திட்டத்தை வடிவமைத்தது ""வில்பர்ஸ்மித் அசோசியேட்ஸ்'' எனும் அமெரிக்க நிறுவனம். நாமக்கல்லுக்கான திட்டத்தை வடிவமைத்தது ""தலால்மாட் மெக்டொனால்டு'' எனும் பிரிட்டன் நிறுவனம்.

திண்டுக்கல், விருதுநகர், நீலகிரி, இராமநாதபுரம், கடலூர் ஆகிய நகராட்சிகளுக்கும் இவ்வாறான கழிவுநீர் வடிகால் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. வளர்ச்சி நிதியில் இருந்து, வைகை அணையில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவர ரூ.10 கோடியும், மதுரையில் திடக்கழிவு மேலாண்மைக்கு ரூ.11.48 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
புதிய மாநகராட்சிகளான வேலூருக்கு முறையே ரூ.10 கோடியும் ரூ.9 கோடியும் கடனாக வழங்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சிதனியார் கூட்டுத் திட்டங்களுக்காக த.நா.நகர வளர்ச்சி நிதியில் ஐ.எல்.எப்.எஸ். நிறுவனமும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியும், ஹெச்.டி.எப்.சி.யும் பங்குதாரர்களாகச் சேர்க்கப்பட்டன. (ஹெச்.டி.எப்.சி. வங்கியில் உள்ள உலக வங்கியின் பங்கு ரூ. 400 கோடி). கரூரில் அமராவதி ஆற்றைக் கடக்க உதவும் பாலம் இக்கூட்டுத் திட்டத்தின் கீழ்க் கட்டப்பட்டு, அதனைப் பயன்படுத்துவோரிடமிருந்து சுங்கம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு சுங்க வசூல் சட்டம் திருத்தப்பட்டு, உள்ளாட்சிகள் தனியாருடன் இணைந்து சாலைகள், பாலங்கள் கட்டிச் சுங்கம் வசூலிக்க வகை செய்யப்பட்டது.

இதன்படி மதுரை புறவழிச்சாலை, சென்னைவளசரவாக்கம் மழை நீர் வடிகால் திட்டம் வடிவமைக்கப்பட்டன. திடக்கழிவு மேலாண்மையிலும் தனியார் கூட்டுத் திட்டம் ஆலந்தூரில் அறிமுகமாகியுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் மாதந்தோறும் ரூ.150 தரவேண்டுமென அதன் திட்ட அறிக்கை கூறுகிறது.

முதல் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் 1996இலேயே தொடங்கப்பட்டு விட்டது. அதற்கும் உலக வங்கிதான் மூளை. இத்திட்டத்தின் மைய நோக்கமே தாராளமயம் என்பதால், அதற்கு ஏற்றபடி உள்ளாட்சி ஊழியர்களுக்கும், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும், புதிய முறைக்கு ஏற்றபடி கணினி மென்பொருள், புதிய தொழில்நுட்பம், நிதி வசூல் திட்ட மேம்பாடு போன்றவற்றில் பயிற்சிகள் தொடர்ச்சியாகத் தரப்பட்டு வருகின்றன.

2006–07இல் இதற்காக ரூ. 5.44 கோடி ஒதுக்கப்பட்டு, மக்கள் பிரதிநிதிகள் பயிற்சிக்காக வெளிநாடுகளுக்குக் கூட அனுப்பப்பட்டனர். 2004இல் பொன்னம்பட்டி ஊராட்சித் தலைவி சல்மா (எழுத்தாளர்) பாகிஸ்தானுக்குப் போய் வந்ததும் இத்தகைய திட்டத்தின்கீழ்தான்.
தற்போது தமிழ்நாட்டிலிருக்கும் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் புவியியல் தகவல் அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்டு திட்டமிடல், வருவாய் வகைகள் உயர்த்தப்படல், கட்டிடங்கள், நிலங்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மதுரை, கோவை, திருச்சி, இராசபாளையம், கோபிச்செட்டிபாளையம் ஆகிய உள்ளாட்சி அமைப்புகள், உலகவங்கி மீளாய்வு செய்வதற்கு வசதியாக இணையம் மூலம்
இணைக்கப்பட உள்ளன.

கொடுத்த கடன்களை எல்லாம் எவ்வகைகளில் உலக வங்கி திரும்பப் பெறும்? அதற்கான வழிமுறைகளையும் அவ்வங்கியே திட்டத்தில் சொல்லியிருக்கிறது. ரூ.46.4கோடி மதிப்பிலான தூத்துக்குடி திட்டத்தில் உலக வங்கியின் கடன் ரூ.26 கோடி. இதனை வசூலிக்கும் வகையில், இத்திட்டத்திற்கு ஒவ்வொரு குடும்பமும் ரூ.3 ஆயிரமும், பள்ளி, கடைகள் ரூ.7500மும், தொழிலகங்கள் ரூ. 10 ஆயிரமும் தர வேண்டும்¢

இத்திட்டத்தில் இணைக்கப்பட உள்ள மொத்த வீடுகள் 42,955. இவர்களிடமிருந்து மாதம் ஒன்றுக்கு ரூ. 26 லட்சம் வசூலிக்கப்பட வேண்டும்¢ இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி பராமரிப்பையும் கழிவு நீர் சுத்திகரிப்பையும் தனியாரிடம் விட்டுவிடலாம் என்கிறது திட்ட அறிக்கை.

த.நா.ந.வ.தி. அறிக்கையில் ஏற்கெனவே பத்துக்கும் மேற்பட்ட நகராட்சிகள் சிறப்புப் பிரிவின்கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றிற்கு வழங்கப்பட்ட கடனும் பிற நகராட்சிகளை விட மிகவும் அதிகம். அப்பட்டியலில் இருக்கும் திருப்பூர், தூத்துக்குடி, வேலூர் நகராட்சிகள்தான் தற்போது மாநகராட்சிகளாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தரம் உயர்த்துவதன் மூலம், சொத்து வரி போன்ற மாநகராட்சி வருவாய் பல மடங்கு உயரும்.

அதாவது, இனி இந்நகரங்களில் குடியிருக்கும் மக்கள் முன்பைவிட அதிகமாக வரி செலுத்த நேரிடும்.
ஆக, அரசின் கட்டுப்பாட்டிலிருந்து தமிழக நகரங்களின் நிர்வாகங்களைப் பறித்தெடுத்து உலக நிதிமூலதனத்திடம் கொடுக்கும் வேலையைத்தான் மாநில உள்ளாட்சித் துறை செய்துவருகிறது. கடன் வலையில் உள்ளாட்சிகள் சிக்கி உலக வங்கியின் எடுபிடிகளாக அவை மாற்றப்படுவதுதான் நல்லாட்சியா?

இந்த "நல்லாட்சியின்' உண்மையான நிர்வாகி யார்? மு.க.ஸ்டாலினா? உலகவங்கியா?· புதிய ஜனநாயகம்

2.பேச்சு சுதந்தரம்… இல்லை போச்சு சுதந்தரம்… வீணாப் போச்சு சுதந்தரம்

வாளைவிட விட கூர்மையானது பேனா… இதற்குச் சான்றுகள், பல நேரங்களில் பலமுறை வரலாற்றின் ஏடுகளில் செதுக்கப்பட்டுள்ளன. சென்ற நூற்றாண்டில், பல நாடுகளில் அடிமைச் சங்கிலியை உடைத்தெறிந்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தது, போராளிகளின் கையில் கிடைத்த பேனாக்கள்தாம். நவீன யுகம் என்று அதிகாரவர்க்கத்தினரால் இன்றைய மக்களிடையே மூளைச்சலவை செய்யபட்டுள்ள இந்த நூற்றாண்டிலோ, அதே பேனாவானது சைத்தான்களின் கைளில் சிக்கி அல்லல்படுகிறது.

அந்த சைத்தானியப் பேனாக்கள், “பத்திரிக்கை சுதந்தரம்” என்று பெயரில் உலகெங்கும் தனது கோரமுகத்தை காட்டி மனித மனங்களை சிதைத்து ரணமாக்கி சமுதாய ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்க ஆரம்பித்துவிட்டது.

செப்டம்பர் 30, 2005 – ம் ஆண்டு “ஜெய்லண்ட் போஸ்டன்” என்ற டென்மார்க்கிய பத்திரிக்கை முகம்மது நபி (ஸல்) அவர்களின் கேலிச்சித்தரத்தை வெளியிட்டு “பேச்சுச் சுதந்தரத்திற்கு” புதிய வரையறையை உலகுக்கிற்கு சொல்லிக்கொடுக்க முயன்றது. சிந்தனையாளர்களிடம் எடுபடுமா அந்த சப்பைக் கட்டு? பற்றி எரிந்தது ப+கோளப் பந்து.

“பேச்சு சுதந்தரத்திற்கு” தடை ஏன் என்று ஃபரெஞ்சு பத்திரிக்கைகள் டென்மார்க் பத்திரிக்கைக்கு ஆதரவாக களத்தில் குதித்தன. பத்திரிக்கை சுதந்தரத்தையும் பேச்சுச் சுதந்தரத்தையும் “கட்டி காப்பாற்றிய” மேற்கத்திய நாடுகளில் தவறு செய்தவர்களை துளியும் தட்டிக்கேட்கவில்லை. கேலிச் சித்திரம் வரைந்த பத்திரிக்கையாளர்கள் சுதந்தரமாக உலவிக் கொண்டுள்ளனர். அந்த விசமிகளுக்கு சாமாரம் வீசிக்கொண்டிருந்தது அந்த “சிந்திக்கத் தெரிந்த.(.?) " நாகரீக சமுதாயம்.

ஆனால் எதிர்த்தவர்களையோ அநாகரிமாக சித்தரித்தனர் அந்த கற்ற மேதாவிகள்.
இவர்களுக்கு நாங்கள் என்ன இளப்பமா என்று தன் பங்குகிற்கு விசத்தைக் கக்க ஆரம்பித்துள்ளது தினமலர் பத்திரிக்கை. ஏற்கனவே முஸ்லிம் விரோதப் போக்கை தனது கொள்கையாக பின்பற்றி வரும் இந்த சமுதாய விரோதி பத்திரிக்கைக்கு, முஸ்லிம்களை பிரச்சனையின் முகங்களாகக் காட்டுவது கைவந்த கலை. இந்து பயங்கரவாதிகளைப் பற்றி வாயைத்திறக்காது தனது “நடுநிலைமையை” கட்டிக்காத்துவரும் உலகில் கோடானகோடி கேடிகளில் தினமலரும் ஒன்று என்று எல்லாரும் அறிந்ததே...!

செப்டம்பர் 2, 2008 ஆம் நாள், தினமலரில் துர்நாற்றமெடுக்கும் மலமாக வெடித்த அந்த விசமத்தனமும், பேனாக்கள் இன்னும் சைத்தானியர்களின் கிடிக்கிப்பிடிக்குள் தான் உள்ளன என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. அசிங்கம் பிடித்த இந்த பத்திரிக்கைக்கு தினமலர் என்ற பெயரை விட தினமலம் என்ற பெயரே சாலப் பொருத்தம். இந்த கேலிச்சித்திரம் வெளியிடுவது சர்சையைக் கிளப்பக் கூடும் என்பது தெளிவாக தெரிந்திருந்தும், விமத்தனமாக செய்துள்ளது தினமலம்.

சங்பரிவார அமைப்புகள் மேற்கத்திய பாணியில் தினமலம் பத்திரிக்கையின் பத்திரிக்கைச் சுதந்தரத்தை கட்டிக்காக்க முற்பட்டுள்ளன. அந்த மலத்தின் உரிமையாளர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால் அந்த முறையற்றச் செயலைத் தட்டிக்கேட்டவர்களுக்கு தடியடி பரிசு.

ஜான் கென்னடியின் கடைசி தம்பி 1969 ம் ஆண்டு சக பெண் ஊழியருடன் பார்ட்டி முடிந்து திரும்புகையில் அப்பெண் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இது ஒருபுறம். டேவிட் இர்வின் என்ற வரலாற்று நிபுணர் ஹோலோகாஸ்ட் என்ற ய+தப் படுகொலைகள் ஹிட்லரின் காலத்தில் நடைபெறவே இல்லை என்று வாதிடுபவர்.

இதனால் ய+தர்கள் இர்வின் மேல் ஒரு காட்டமாகவே இருந்தனர். எத்தனை ய+தர்கள் விசவாயு அறையில் அடைத்துக்கொல்லப்பட்டனர் என்று ஒருமுறை கேட்டதற்கு, இர்வின் அளித்த பதில் “எட்வர்ட் கென்னடியின் காரின் பின் இருக்கையில் உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கையானது, “ஆவ்ஸ்விட்ச்” என்ற நாஜி கேம்ப்பில் விசவாயு அறையில் உயிரிழந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம்” என்பதுதான்.

இதற்கு அர்த்தம் ய+தர்கள் யாரும் (அவ்வளவாக) கொல்லப்படவில்லை ஆகும். இதற்காக டேவிட் இர்வின் கைது செய்யப்பட்டார். காரணம் ய+தர்களின் மனதை புண்படுத்தியதாலாம். இதனைக் கூறியதற்காக, 2006 – ம் ஆண்டிலிருந்து இன்று வரை ஆஸ்திரிய சிறையில் வாடும் டேவிட் இர்வினுக்கு பேச்சு சுதந்தரம் கிடையாதா?

அதைப்பற்றி மேற்கத்திய பத்திரிக்கைகள் ஏன் வாயைத்திறக்கவில்லை? புண்பட்ட மனம் யூதர்களுடையது என்பதாலா? அவருக்கு மட்டும் ஏன் 3 ஆண்டுகள் சிறைவாசம்? இது இஸ்லாமியர்களின் நபிகள் முகம்மதுவை தாக்கி வரையப்பட்ட கார்ட்டுனை விட மனதை புண்படுத்தும் வாசகமா?; என்று கேட்கிறார் தி ஸ்கெப்டிக்ஸ் மேகஸின் ஆசிரியர் மைக்கேல். நியாயம் தானே?

டேவிட் இர்வின்
தினமலம் பத்திரிக்கை என்றைக்காவது இர்வினைப் பற்றி தனது வாயைத்திறந்திருக்குமா? நல்ல எண்ணங்கள் என்றாவது நிழலாடியிருந்தால் நல்ல விசயங்கள் எழுதியிருப்பார்கள். அவர்களின் திருவாய் நாற்றமெடுக்கும் கால்வாய் அல்லவா? அதனால் தான் கீழ்தரமான முறையில் விளம்பரம் தேடி வியாபாரம் செய்கிறார்கள். தமிழகத்தில் தனது விற்பனையைக் அதிகப்படுத்த எளிதில் உணர்ச்சிவசப் படக்கூடிய சிறுபான்மையினத்தோரின் மனங்களுடன் விளையாடிப் பார்த்துள்ளனர்.

தினமலர் எடிட்டர்
பத்திரிக்கைச் சுதந்தரம், பேச்சுச் சுதந்தரம் என்று சொல்லிக்கொண்டு ஏதுமறியா அப்பாவிகள் போல் நடிப்பதும், அந்தப் போர்வையில் இருந்துகொண்டு தவறுகளைத் தெரிந்தே செய்தவதும் அதிகமாகிக் கொண்டுவருகின்றன. கேட்பதற்கும் பதில் தாரது கோழைகளாகி, கிணற்றில் போட்ட கல்லைப் போல் பதுங்கிக் கொண்டு காவல்துறை என்று மற்றவர்களை “அடியாட்களாக” அனுப்பி அராஜகம் செய்கிறார்கள்.

ஆனால் அதனைத் தட்டிக்கேட்பவர்களுக்கு கலகக்காரர்கள் என்று பெயரிட்டு கண்டனங்களும் தடியடிகளும் பரிசுகளாகக் கிடைக்கிறன. ஆகவே இது போன்ற விசக்கிருமிகளை சமுதாயத்தில் செயல்பட விடாது தடுப்பதே சிறந்தது. அத்தகைய பத்திரிக்கைகளுக்கும் ஆதரவினை நாம் யாரும் தராது விலகியிருப்பது மிகவும் சிறந்தது. வெட்கம் மானம் உடைய எவரும் இந்த விசமப் பத்திரிக்கைகளுக்கு ஆதரவு தரக்கூடாது. அவ்வாறு ஆதரவு தரும் முஸ்லீம்களையும், மனசாட்சியுடைய நல்ல முஸ்லிம்கள் தடுக்கவேண்டும்.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP