என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

பத்திரிகைகள் ஏடுகள் ஊடகங்கள் யார் கையில்?

>> Monday, June 14, 2010

பத்திரிகைகள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள். முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரிந்து கொண்டிருக்கிறது! அல்லது சரிந்தே விட்டது என்று சொல்லும் அளவுக்கு, செய்தி ஊடகங்களின் செயல்பாடுகள் தரம் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பாற்றி வரும் இந்த நான்காவது தூண்களான பத்திரிகைகள் முக்கியச் செய்திகளை இருட்டடிப்பு செய்து வருகின்றன.

கவர் வாங்கிக் கொண்டு சினிமாக்காரர்களின் உளறல்களையெல்லாம் நான்கு பத்திச் செய்திகளாக வெளியிடும் இந்த நான்காவது தூண்கள், சுப்ரமணியசாமி போன்ற அரசியல் தரகர்களுக்கும் சங்பரிவாரங்களுக்கும் ஊதுகுழல்களாகவே செயல்படுகின்றன.

முன்னாள் மாராட்டியக் காவல் துறை அதிகாரியான முஷ்ரிஃப் அய்.பி.எஸ்.‘Who Killed Karkare?’ என்ற ஒரு நூலை வெளியிட்டு, முழு உண்மையையும் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். மிகப் பரபரப்புடன் வெளிவந்துள்ள இந்த நூல் பரபரப்பாக விற்பனையும் ஆகி வருகிறது.

முத்திரைத் தாள் மோசடியைக் கண்டுபிடித்து, பல அதிகாரிகளைத் தண்டித்தவர்தான் இந்த அய்.பி.எஸ். அதிகாரியான முஷ்ரிஃப்.

அண்மையில் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்ட தொலைக்காட்சிச் சேனல்கள் அவரைப் பேட்டி கண்டன. புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள் பலரும் அவரைப் பேட்டி கண்டார்கள். ஆனால், இன்று வரை எந்தத் தொலைக்காட்சியிலும் சரி, பத்திரிகையிலும் சரி... அவரின் பேட்டி வரவேயில்லை!

இந்தப் பேட்டியில் தொலைக்காட்சிச் சேனல்களும், பத்திரிகையாளர்களும் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டதைப்பற்றிப் பல கேள்விகளைக் கேட்டிருப்பார்கள். அத்தனைக்கும் ஆதாரத்துடன் முஷ்ரிஃப் பதில் சொல்லியிருப்பார். பேட்டி வெளியே வந்திருந்தால், தொடர்புடையவர்களுக்குப் பிரச்சினை ஏற்படும்.

ஆக, ஒட்டு மொத்த ஊடகங்களும் ஒரே அணியில் நின்று அவரின் பேட்டியை இருட்டடிப்புச் செய்து விட்டன.

மேலும், கார்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலைப்பற்றிக்கூட மவுனம் சாதித்து வருகின்றன.

இந்த ஊடகங்கள் ஆதிக்கச் சக்திகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பது உறுதியாகிறதுஉண்மையாகிறது.

மாலேகான் குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் திட்டமிட்டு நடத்தியவர்கள் அபிநவ்பாரத் என்ற இந்து வெறி அமைப்பினர் என்று தெரிந்தும், இந்துத்துவப் பயங்கரவாத அமைப்பின் தலைவர்களான பிரக்யாசிங் தாகூர், கர்னல் புரோகித், தயானந்த் பாண்டே போன்றவர்கள்தாம் இதன் காரண கர்த்தாக்கள் என்று தெரிந்தும் வலுவான ஆதாரங்கள் கிடைத்தும்கூட.... இவர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த வழக்கின் தற்போதைய நிலை
என்ன என்பது பற்றியெல்லாம் எந்தப் பத்திரிகையாவது அக்கறைப்படுகின்றதா? செய்திகளை வெளியிடுகின்றதா?

இப்படித்தான் இந்துத்துவாக்களின் கோர முகங்கள் பற்றிய செய்திகளை இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கிய இந்த நான்காவது தூண்களான ஊடகங்கள் மூடி மறைக்கின்றன. அல்லது கண்டு கொள்ளாமலிருக்கின்றன.

இஸ்லாமியப் பயங்கரவாதம், முஸ்லிம் தீவிரவாதிகள் என நாளும் நான்கு பத்திச் செய்திகளை வெளியிட்டு, நாட்டையும், மக்களையும் பீதிக்குள்ளாக்கித் தொடர்ந்து முஸ்லிம்களை அவமானப்படுத்தி அவதிக்குள்ளாக்கும் இந்த ஊடகங்கள் ஏன் இந்துப் பயங்கரவாதத்தைப் பற்றி, இந்துத் தீவிரவாதிகளைப்பற்றிச் செய்தி வெளியிடுவதில்லை? அலசி ஆராய்வதில்லை?

ஆக ஊடகங்களின் செயல்பாடுகள் நடுநிலைமையுடன் இல்லை என்பதும், இந்த நான்காவது தூண்கள் ஒரு பக்கச் சார்பாகவே செயல்படுகின்றன, செய்திகளைத் தயாரிக்கின்றன என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மராட்டிய மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது அங்குள்ள பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை அலசி ஆராய்ந்து, காங்கிரஸ் கட்சிக்கும், பத்திரிகைகளுக்கும் இடையில் நடந்த திரை மறைவுப் பேரங்களை அம்பலப்படுத்தியுள்ளார் பிரபலப் பத்திரிகையாளர் சாய்நாத்.

ஆற்றல் மிக்க இளம் தலைவர் அசோக் சவான் என்ற செய்தி லோக்மத் என்ற மராத்தி நாளிதழில் பெரிய அளவில் தலைப்புச் செய்தியாக வந்தது. இதே செய்தி அப்படியே மகாராஷ்டிரா டைம்ஸ்லும் வந்தது. மறுபடி தலைப்பை மட்டும் கொஞ்சம் மாற்றி மராத்தி நாளிதழான புதாரியிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.

ஆக விளம்பரமே செய்தி என்ற பெயரில் இப்படி ஒரே மாதிரி வருவதைக் கவரேஜ் இதழியல் என்கின்றனர். மராட்டியத் தேர்தல் செய்திகளை இந்து நாளேடு ஆய்வு செய்துள்ளது. அதில் லோக்மத் செய்தித்தாளின் வெவ்வேறு பதிப்புகளில் அசோக் சவானைப் பற்றி 47 செய்திகள் வெளிவந்துள்ள விவரம் தெரிய வந்துள்ளது. அசோக் சவான் தனது தேர்தல் விளம்பரச் செலவாக வெறும் 11,379 ரூபாய் மட்டும் தான் செலவிடப்பட்டதாகத் தேர்தல் கமிஷனில் கணக்குக் காட்டியிருக்கிறார்.

லோக்மத் பத்திரிகையின் 13 பதிப்புகளிலும் நான்கு பக்கங்களிலும் வண்ணத்தில் இலவச இணைப்பு வர வேண்டுமானால் சுமார் 1.5 கோடி ரூபாய் ஆகும் என்கின்றனர் பத்திரிகையாளர்கள்.

இப்படிப் பணப் பரிவர்த்தனையில் உருவாக்கப்படும் செய்திகள் நம்பகமானதாக இருக்குமா?

இந்தியா முழுவதும் திட்டமிட்டுச் செய்திகளை இவ்வாறாகத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் உருவாக்குகின்றன.

இவர்கள் உருவாக்குவதுதான் செய்தியாக மக்களிடம் பரபரப்பாகத் திணிக்கப்படுகிறது. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி அதை உண்மை என்று நம்ப வைக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் நடந்துள்ள செய்தி விளம்பர மோசடி இந்து நாளிதழ் நடத்திய ஆய்வின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன்படி, சி.பி.எம். தாக்கல் செய்த மனுவின் மூலமும் வெளிப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தினர் இது போன்ற கவர் பண்ணும் செய்திகளை வெளியிடக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

பத்திரிகைகளில் வெளியாகும் ஒவ்வொரு வார்த்தையும் பணத்தால் ஏலம் விடப்படுகிறது.

இது பத்திரிகையாளர்களின் நேர்மைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், அபாயமாகவும் உள்ளது என்று பிரபலப் பத்திரிகையாளர்கள் பலர் குமுறுகின்றனர்.

இப்படிப் பணத்துக்காகச் செய்திகளை உருவாக்கும் அளவுக்கு ஊடகத்துறை சீரழிந்து போனதற்கு முதலாளித்துவமும், ஆதிக்க ஜாதியினரும்தான் காரணம்.

இந்திய ஊடகத்துறையில் தங்களை இன்றியமையாத சக்திகளாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

மிகப் பலம் வாய்ந்த வலிமைமிக்க இந்த ஆயுதத்தைக் கையில் வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளையும், ஆளுபவர்களையும், அதிகாரிகளையும் கட்சி வேறுபாடின்றிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் வரலாற்றைத் திரித்து எழுதியதிலிருந்து தொடங்குகிறது இந்த ஆதிக்க ஜாதியினரின் பிழைப்புவாதிகளின் ஊடகத் தொடர்பு!

எந்தப் படையெடுப்பின் போதும், யார் படையெடுத்து வந்தாலும் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தாலும் அப்பாவி மக்களைக் கொல்வதும், பெண்களைக் கடத்துவதும், வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவதும், கொள்ளையடிப்பதும், சூறையாடுவதும் நடைபெற்றுத்தான் வந்துள்ளன.

ஆனால், இத்தகைய வரலாறுகள் குற்றங்கள் தவறுகள் அனைத்தும் ஒரு மதப் பிரிவின் குறிப்பாக இஸ்லாத்தின் முஸ்லிம்களின் இயல்பான குணம், ஏகபோகம் என்பதைப் போன்ற கருத்தைத் தோற்றுவித்திருக்கின்றன இவர்கள் எழுதிய வரலாறு.

வரலாற்றைச் சொல்லும் முறையில் உள்நோக்கத்தோடு ஒரு மதப் பாகுபாடு அவர்களுக்குள் ஊடுருவியிருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இதன் நீட்சி.... இன்று வரை தொடர்கிறது.

இன்று நீதி, நேர்மை, உண்மை, நடுநிலைமை இவற்றிலிருந்தெல்லாம் விலகி, பணம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்கிற ஏகாதிபத்திய மறுகாலனியாதிக்கப் பிழைப்பு வாதத்தை ஊடகத்துறையிலும் புகுத்தியிருக்கிறார்கள் அதே உள்நோக்கத்தோடு. இந்தச் சீரழிவிலிருந்து இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணைச் சரிப்படுத்தி நிலைநிறுத்த வேண்டியது மாற்று ஊடகக்காரர்களின் கைகளிலிருக்கிறது. ஆக, இவர்கள் இதைக் கட்டமைக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயமாகும். கடமையுமாகும்.--சமரசம் 115 ஜூன் 2010
SOURCE:-http://viduthalai.periyar.org.in/20100612/spage04.html
*****************************
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP