என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கொடுமை!அவசியம் படியுங்கள்.விநோத தீர்ப்பு.

>> Wednesday, June 9, 2010


கல் நெஞ்சம் கொண்டோரையும் கரைய. மக்கள் ஆவேசம். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி.
25 ஆயிரம் பேர் பலியானார்கள். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்
bhopal gas tragedy.போபால் பலியும், தீர்ப்பும்
மத்திய பிரதேசம் போபால் நச்சு வாயு -_ அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம், ஊனமுற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள் பற்றிய நினைவு அனேகமாக மக்கள் மத்தியில் மறந்தே போயிருக்கும்.

ஆளும் வர்க்கம், முதலாளித்துவக் கூட்டம் காலம் கடத்துவதன் நுட்பமான இரகசியம் இதுதான்.

1984 டிசம்பர் 2 நள்ளிரவு இந்த விபத்து நடந்தது. தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக் கொண்-டவர்களின் எண்ணிக்கை அரசு கணக்குப்படி 3787 பேர். உண்மையில் 25 ஆயிரம் பேர் பலியானார்கள் என்று கூறப்படுகிறது.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஊனமுற்றனர் புரியும்படி சொல்ல வேண்டுமானால் நடைப் பிணங்களாகக் கொல்லாமல் கொன்று விட்டனர்.


26 ஆண்டுகளுக்குப்பின் இந்த விபத்துக்குக் காரணமான யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர்களுக்கு தலா இரண்டாண்டு காலம் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்புக் கூறப்பட்டுள்ளது.

மொத்தம் 10 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒருவர் தலைமறைவாகிவிட்டார். இன்னொருவர் மரணம் அடைந்துவிட்டார்.

இதில் வேதனையும், விபரீதமும் என்னவென்றால் துயரம் நடந்த மூன்று ஆண்டுகள் கழித்துத்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்று வாயளவில் சொல்லும்போது அழகாகத்தான் இருக்கிறது. நடைமுறையில் மறுக்கப்பட்ட நீதியாகவே இருப்பதை அறிய முடிகிறது.

இந்தியக் குற்றப் பிரிவு சட்டம் 304 (ஏ) 336, 337 ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 304 ஆவது பிரிவின்படி 10 ஆண்டுகள்வரை தண்டனை விதிக்க இடம் உண்டாம். ஆனால் இதுவரை இந்தப் பிரிவின் கீழ் ஈராண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டது கிடையாது என்று சொல்லுவது முடக்குச் சமாதானமே! இந்தத் தண்டனை போதுமானதல்ல என்று பாதிக்கப்பட்ட மக்கள் குரல் கொடுப்பதில் மிகுந்த நியாயம் இருக்கிறது.

இதில் இன்னொரு கொடுமை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இதுவரை ஒழுங்காக நட்ட ஈடு அளிக்கப்பட வில்லை.

1989 பிப்ரவரி திங்கள் அந்த நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி பலியான 3,787 குடும்பத்தினருக்கு 470 மில்லியன் டாலர் அளிப்பதாக அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுவிட்டது. ஆனால் அதனை முறையாகப் பெற்றுக் கொடுக்கவேண்டிய மாநில, மத்திய அரசாங்கங்கள் நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்கின என்பது வெட்கப்படத்தக்கதே!

மாநிலத்தில் காங்கிரஸ், பி.ஜே.பி. என்று மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் கொடிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்ட ஈடு வாங்கிக் கொடுப்பதில் அக்கறை செலுத்தவில்லை.

ஏனெனில் பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட மக்களும், முஸ்லிம்களுமே யாவர்.

இந்துத்தனம் பரவியிருக்கும் இந்தியாவில் எந்த பிரச்சினையைப் பிளந்து பார்த்தாலும், இந்த வருண பேதம் என்பது ஆழமாக இருக்கவே செய்யும்.


பாதிக்கப்பட்ட மக்கள் மத்திய பிரதேசத்திலிருந்து டில்லி வரை நடந்து வந்து பிரதமரை சந்தித்தபோதிலும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்பது எத்தகைய கொடுமை!

மேலும் குறிப்பிடத்தக்க தகவல் ஒன்று இதில் இருக்கிறது. இந்திய யூனியன் கார்பைடு கார்ப்பரேசன் நச்சு வாயு விபத்தின் காரணமாக அதனுடன் கூட்டுச் சேர்ந்திருந்த இந்திய அரசின் நிறுவனமான யூனியன் கார்பைடு இந்திய நிறுவனமும் இழுத்து மூடப்பட்டது. இதன் காரணமாக ஒன்பதாயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து வீதிக்கு வந்த அவலம் ஏற்பட்டது.

இதுபோல் எத்தனை எத்தனையோ தீராப் பின்விளைவு காயங்கள் உண்டு.
ஓர் அமெரிக்க நிறுவனத்தை உள்ளே விட்டே இவ்வளவு பெரிய துயரம் என்றால், இன்னும் எத்தனை எத்தனையோ அபாயத்தை விளைவிக்க வாய்ப்புள்ள தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து படை எடுக்கவும் ஆரம்பித்துவிட்டன. இவை எதில் போய் முடியுமோ என்ற திகிலும் மக்கள் மத்தியில் இருக்கவே செய்கிறது.

இத்தகு நிறுவனங்களால் ஏற்படும் நச்சுக்கழிவுகள் பெரும் பிரச்சினையாகும்.
அமெரிக்க முதலாளிகளுக்கு மனித உயிர்கள் என்பவை அவர்களின் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களில் ஏற்படும் வீணான பொருள்களாக (Waste materials) இருக்கக்கூடும்.
ஆனால் இந்நாட்டு மக்கள் இந்திய அரசின்கீழ் பாதுகாப்பாக இருக்கவேண்டாமா-?
இந்த அடிப்படை உத்தரவாதத்தைக் கூட தர முடியாவிட்டால் அரசு என்ற பெயர் எதற்கு?

SOURCE:http://viduthalai.periyar.org.in/20100608/news07.html
**************

25 ஆயிரம் பேர்களின் உயிரைக் குடித்த போபால் நச்சு வாயு வழக்கு
8 பேர்களுக்கு 2 ஆண்டுகால தண்டனைமரண தண்டனை கொடு! மக்கள் ஆவேசம்


போபால், ஜூன் 8-_ மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள விஷவாயு வழக்கில் 8 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து 26 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத்தண்டனையும் தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

உலகிலேயே மிகக் குரூரமான தொழிற்சாலை விபத்து இதுவாகும். போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ஆலையில் மீதைல் அய்சோசயனைடு நச்சுவாயு கசிந்ததில் 25 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி நள்ளிரவில் இந்த கோர விபத்து நிகழ்ந்தது.

இந்த வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா உள்ளிட்ட 8 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 85 வயதான கேஸப் மஹிந்திரா இந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் பொறுப்புகள் இல்லாத செயல் தலைவராக இருந்தார்.

நீதிமன்றத்தில் மக்கள் கூட்டம்
திங்கள்கிழமை இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்றத்தில் ஏராளமானோர் கூடியிருந்தனர். இதனால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குற்றம்-சாற்றப்பட்டிருந்தவர்களில் ஒருவர் தவிர மற்ற 7 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.


குற்றப்பிரிவு 304_ஏ (மரணத்துக்குக் காரணமாக இருத்தல்) 304_2 (பெரும்பாலான மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருத்தல் மற்றும் விதி 336 மற்றும் 337 பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இருப்பினும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரென் ஆண்டர்சன் (89) பற்றி நீதிபதி தனது தீர்ப்பில் எதுவும் குறிப்பிடவில்லை. தலைமறைவு குற்றவாளி என்று 23 ஆண்டுகளுக்கு முன்னரே வாரென் ஆண்டர்சன் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகளாக நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கேஸப் மஹிந்திரா, நிறுவனத்தின் முன்னாள் நிருவாக இயக்குநர் விஜய் கோகலே, நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கிஷோர் காம்தார், செயல் மேலாளர் ஜே.என். முகுந்த், உற்பத்தி மேலா-ளர் எஸ்.பி. சவுத்ரி, ஆலை கண்காணிப்பாளர் கே.வி. ஷெட்டி, உற்பத்தி உதவியாளர் எஸ்.அய். குரேஷி ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர். இவர்களில் எஸ்.அய். குரேஷி மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இந்த வழக்கில் 9 ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த துணை செயல் மேலாளர் ஆர்.பி. ராய், வழக்கு விசாரணையின்போதே உயிரிழந்துவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 178 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சாட்சிகள் அளித்த 3008-பக்க ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

வாரென் ஆண்டர்சன் எங்கே?
நிறுவனத்தின் உரிமையாளரான வாரென் ஆண்டர்சன், இதுவரை விசாரணை எதிலும் பங்கேற்கவில்லை. 2 ஆயிரம் டாலர் ஜாமீன் தொகை செலுத்தி அமெரிக்கா சென்ற ஆண்டர்சன் அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வரவேயில்லை.

மிக மோசமான இந்த விஷ வாயு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கை 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. பின்னர் டிசம்பர் 6 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை சிபிஅய்க்கு மாற்றப்பட்டது. 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையை சிபிஅய் தொடங்கியது. இதையடுத்து இந்த வழக்கை விசாரிக்க உள்ளூர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது.

சிபிஅய் தரப்பில் வழக்கறிஞர் சி. சஹாய் ஆஜராகி, யூனியன் கார்பைடு ஆலையில் உள்ள உலை உரிய வகையில் பரமாரிக்கப்படதாததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக வாதிட்டார்.

இந்த விபத்து நடந்த உடனேயே 2,259 பேர் உடனடியாக உயிரிழந்தனர். காற்றில் பரவிய மீதைல் அய்சோ சயனைடு நச்சால் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக அவர் குறிப்பிட்டார். 1982 ஆம் ஆண்டே இந்த ஆலையை ஆய்வு செய்தபோது இதில் பராமரிப்பு குறைபாடுகள் இருப்பது தெரியவந்தது.

அமெரிக்காவிலிருந்து நிபுணர்கள் வந்து பராமரிப்பு குறையை சுட்டிக் காட்டியபோதிலும் அவை மேற்கொள்ளப்படவேயில்லை என்று சஹாய் கூறினார்.

இந்த விபத்து நடந்தபிறகு மத்திய குழு இந்த ஆலையைச் சுற்றிப்பார்த்தபோது பாதுகாப்பு மற்றும் நிருவாகக் குறைபாடுகள் இருந்தது தெரியவந்ததாக அவர் கூறினார்.

ஆனால் ஆலை உரிய வகையில் பராமரிக்கப்பட்டு நிருவகிக்கப்பட்டு வந்ததாக எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் டி. பிரசாத், அமித் தேசாய் ஆகியோர் வாதாடினர். 1982 ஆம் ஆண்டு இந்த ஆலையில் ஊழியர் ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள தாய் நிறுவனத்திலிருந்து நிபுணர்கள் வந்து ஆலையை சோதித்ததை வழக்கறிஞர்கள் மறுத்தனர்.

பாதுகாப்பு விஷயத்தில் யூனியன் கார்பைடு ஆலை ஒருபோதும் சமரசம் செய்து கொண்டது கிடையாது என்றும், ஆலை நிருவாகம் மற்றும் பராமரிப்புக்கென்றே பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

குற்றவாளிகளுக்கு ஜாமீனாம்!
குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அனைவரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதுக்கு கேஸாப் மஹிந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மீது வழக்கு விசாரணை நடைபெற்றதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படவில்லை.

தாமதமாகக் கிடைக்கும் நீதி; நீதி மறுக்கப்படுவதற்கு சமம் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்.

மரண தண்டனை கொடு - மக்கள் ஆவேசம்!

போபால் விஷவாயுக் கசிவு வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது குறைவான தண்டனை என பொது-மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக மனித உரிமை அமைப்பினரும், சமூகநல ஆர்-வலர்களும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத் தீர்ப்பைக் கேட்டு போபால் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மிகுந்த ஆவேசமடைந்தனர். மிகவும் காலதாமதமாக வந்த தீர்ப்பு. தண்டனையும் மிகக் குறைவு என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

போபால் நகரையே நச்சுப் புகையால் சூழச் செய்த குற்றவாளிகளுக்கு 2 ஆண்டுகள் மட்டும்தான் தண்டனையா? என பலரும் ஆவேசக் குரல் எழுப்பினர்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு பலர் நீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

போபால் விஷவாயு கசிவு வழக்கில் 26 ஆண்டுகளுக்குப் பின் 8 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பேரை பலிகொண்ட இந்த விபத்தில் குற்றவாளிகளுக்கு மிகக்குறைந்த தண்டனையே வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், அவர்கள் தரப்பில் போராடி வந்த சமூக நல ஆர்வலர்களும், இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்துள்ளனர். மிகவும் காலம் கடந்து வழங்கப்பட்ட இந்த தீர்ப்பில் நீதி சிறிதளவும் இல்லை என்று அவர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். போபால் நகரின் பல இடங்களில் குற்றவாளிகளின் உருவ பொம்மைகளை தூக்கிலிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

நீதிபதிகளின் போக்கு!
மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி, இது குறித்து கூறியுள்ளது: இந்த வழக்கின் விசாரணை அமைப்பும் (சிபிஅய்), வாதாடிய அரசுத் தரப்பும் வழக்கை சரியான பாதையில் கொண்டு செல்லவில்லை. நீதிபதிகள், குரலைப் பதிவு செய்யும் இயந்திரமாக செயல்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பத்திரிகைகளும் விழிப்புடன் செயல்படவில்லை. பணக்காரர்களும், அதிகாரம் படைத்தவர்களும் சேர்ந்து வழக்கை பூசிமெழுகிவிட்டனர். இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படவில்லை. மிகக்கொடூரமான இந்த சம்பத்தை ஏதோ சிறிய சாலை விபத்து வழக்குபோல விசாரித்து முடித்து விட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருக்கிறோம். குற்றவாளிகள் 8 பேருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றார் அவர்.

போபால் விஷயவாயு வழக்கு தொடர்பாக 25 ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் பல்வேறு சமூக நல அமைப்பினரும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகள் அனைவருக்கும் தூக்கு தண்டனை வழங்க வேண்டுமென்று விஷவாயு சம்-பவத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழந்தவர்களின் உறவினர்-களும் வலியுறுத்தியுள்ளனர்.

மூதாட்டியின் துயரம்!

எனது கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தி உள்பட மொத்தம் 35 உறவினர்களை விஷவாயுக்கு பலி கொடுத்து விட்டு 26 ஆண்டுகளாக நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனக்கு நிவாரணத் தொகை ஏதும் தேவை-யில்லை. அந்த குற்றவாளிக்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற 70 வயது மூதாட்டியின் குமுறல் கல் நெஞ்சம் கொண்டோரையும் கரையச் செய்வதாக அமைந்தது.

SOURCE:http://viduthalai.periyar.org.in/20100608/news01.html

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP