என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நல வாழ்வுக்குச் சில "டிப்ஸ்". தவறாது படியுங்கள்.

>> Tuesday, March 30, 2010

காய்கறி, பழங்கள் சாப்பிட வேண்டும் என்று சொல்கின்றனர் டாக்டர்கள். ஆனால், எல்லா காய்கறிகளும், பழங்களும் சத்தானவை என்று சொல்ல முடியாது; நாற்பதை கடந்தால், சிலவற்றை ஒதுக்கி விட வேண்டும்.

முளைக்கீரை

இந்த கீரையை தினமும் சாப்பிடலாம். எல்லா வயதினரும் சாப்பிடக்கூடிய கீரையும் இதுவே. பசியைத் தூண்டிவிடும் சக்தி இதற்கு உண்டு.

சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு முளைக்கீரையை சேர்த்து கொடுத்தால், சாப்பாடு கொடு என்று அடம் பிடிப்பார்கள்!

காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முளைக்கீரையை அதிகம் சாப்பிடலாம். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் இந்தக்கீரைக்கு மட்டுமே உண்டு.

நாம் பயன்படுத்தும் காய்கறிகளில் சிலவற்றை தழைகள் என்று ஒதுக்கி விடுகிறோம். ஆனால், அதில் உள்ள சத்துக்கள் பற்றி அறிவதில்லை.

முள்ளங்கி தழையும்....

முள்ளங்கி சாப்பிடும் பழக்கம் உண்டா? இல்லையெனில் உடனே வாங்கி சாப்பிட பழகுங்கள். இதில் இல்லாத சத்துக்களே இல்லை. ஜீரணம் ஆவது
முதல் பித்தநீர்ப்பை கல் வரை நீக்குகிறது.

முள்ளங்கியில் பல நிறங்கள் உள்ளன.வெள்ளை முள்ளங்கியாகட்டும், சிவப்பு முள்ளங்கியாகட்டும் நார்ச்சத்தில் குறைவில்லை.

இதை உணவாக சமைத்து சாப்பிடலாம்; அப்படியே கேரட் போல சாப்பிடலாம்; ஜுஸ் செய்து குடிக்கலாம். எதிலும் சத்துக்கள் உள்ளன.

முள்ளங்கியில், கால்சியம், வைட்டமின் சி, சோடியம், பாஸ்பரஸ், சல்பர், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன. முள்ளங்கி தழையை பலர் உணவாக சாப்பிடுவதில்லை. அதில்தான் சத்துக்கள், முள்ளங்கி தண்டைவிட அதிகமாக உள்ளன. ஜூஸ், சூப்பில், முள்ளங்கி துண்டுகளுடன் இதை பயன்படுத்தி சாப்பிடலாம்; நன்றாக சுவையாக இருக்கும்.

ஒரு நாளுக்கு ஒரு முட்டை

கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டைவிட அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ் கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது.

ஒரு வேறுபாடு காய்கறி உணவைவிட, முட்டையில் இருந்து கிடைக்கும் இந்த சத்து, உடனே உடலில் ஏற்றுக் கொண்டு விடுகிறது. இதனால் பலன் கைமேல்.

ஒரு நாளுக்கு ஒரு முட்டை போதும். கொலஸ்ட்ரால் அளவு கூடி விடுமே என்று பயப்பட வேண்டாம்.

கொலஸ்ட்ரால், ட்ரை கிளசரைடு அளவை கூட்டாமல் தான் முட்டை, இந்த சத்தை தருகிறது.

கேரட்டோட, காய்கறியோட, முட்டையையும் தான் சாப்பிடுங்களேன்!

கிரீன் டீ சாப்பிடறீங்களா!
காலம் காலமாக காபி, டீ சாப்பிட்டு வந்தால் அதை மாற்றவே கூடாது; தேவையும் இல்லை. ஆனால், உடல் பாதிப்பு என்று வந்துவிட்டால், டாக்டர் சொல்படி தான் பின்பற்ற வேண்டும்.

அதுபோல, வாழ்க்கை முறை மாறியுள்ள இளைய தலைமுறையினருக்கு எவ்வளவோ சக்தில்லா பாக்கெட் உணவுகள் விற்பனையில் இருந்தாலும், சத்தான சில பொருட்கள் இருக்கின்றன.

அவற்றில் ஒன்றுதான் கிரீன் டீ. இப்போது கிரீன் டீ, பிளாக் டீ சாப்பிடுவது பேஷன் என்பது போய், சத்தான உணவாகி விட்டது. டாக்டர்களே இதை பரிந்துரைக்கின்றனர்.

மூளை சுறுசுறுப்பு, மறதி நோய் வராமல் இருப்பதற்கு இது மிகப் பயனுள்ளது. ஜப்பானியர் இதைத்தான் பல ஆண்டாக பயன் படுத்துகின்றனர். அதனால்தான், சுறுசுறுப்பாகவும், அல்சீமர் நோய் வராமலும் உள்ளனர் என்பது நிபுணர்கள் கருத்து, கிரீன் டீக்கு எங்கும் அலைய வேண்டாம்; கடைகளில் விற்கிறது;

தரமான பிராண்ட் வாங்கி பயன்படுத்துங்கள். ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டால், மூளை சூப்பர்தான்.

ஏதாவது ஒரு ஜுஸ்?

தினசரி தண்ணீர், ஜுஸ், சூப் குடிப்பது நல்லது. முன்பெல்லாம் காலையில் எழுந்தது, முதல் இரவு படுக்கப் போகும் வரை உணவு முறை சீராக இருக்கும். இப்போது அப்படியல்ல; தலைகீழாய் மாறிவிட்டது.

மீன் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்
மீனில் காணப்படும் `ஓமேகா 3' என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.

கேரடில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு
சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும்.

இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது.

அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்..
SORCE: VIDUTHALAI.
==========
இதையும் தவறாது படியுங்கள்.
காய்கறிகள் பழங்கள் மூலமாக இருதய அடைப்பை நீக்க முடியுமா ?

1 comments:

mohamedali jinnah April 11, 2010 at 3:58 AM  

நல்ல கட்டுரை அதிகம் அதில் எனக்கு பங்கு வேண்டும்

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP