என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத்.

>> Monday, September 7, 2009

நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா என்பது இதுதானா?

விடியோ காணுங்கள்.இந்த தரீக்கா / ஷைகு / முரீது / பைஅத் /, கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு , பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய‌ நிலை உருவாகிவிடும்.

முரீது என்பது சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர்.

அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.

இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும்.

உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது!

அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.

முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம்.
அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்.

மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர்.
முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம்.

இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை.

அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர்.

இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.
இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும்.
ஸூஃபியிஸம் பற்றி விரிவாக அறிவதற்கு ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி அவர்கள் எழுதிய சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற நூலை பதிவிறக்கம் Download செய்து படித்துப்பாருங்கள்.
http://islamkural.com/downloads/soofi.pdf


அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது சொல்ல இருப்பது திரித்த கட்டுக்கதை அல்ல. படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.

ஒரு “தரீக்கா” வாசி அவன் கூறுவதாவது:
”எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது ………….? “

இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர்.

அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம். நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் (ஸல் ) வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.அவர் கூறியதற்காக தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.

மேலும் அவன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று.

அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன். நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்

இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.

நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்! இணை வைக்கும் இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் கையேந்தி நமது ஈமானை பாழாக்காமல் பள்ளிவாசலுக்கு மட்டும் சென்று,
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது தூதர் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களாகிய நாம் அங்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற செயல்கள் நடைபெறுமானால் அவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் நம்மால் இயன்றவைகளைச் செய்து அந்த மாபெரும் ஷிர்க்கை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை! மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும். ஆமீன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!

நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த நன்றி ‍ இஸ்லாம் குரல் இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம். நன்றி:- ‍ இஸ்லாம் குரல்.

மேற்கண்ட விடியோவில் அவிழ்த்துவிடப்படும் கப்ஸா கதைகள் போல் பல‌ கப்ஸாக்களை தப்லீக் ஜமாத்தினர் குரான் ஹதீஸை விட முக்கியத்துவம் கொடுத்து தூக்கிப்பிடிக்கும் தஃலீம் கிதாப் -- "அமல்களின் சிறப்பு "- "ஃபளாயிலே அஃமால்" ல் காணலாம்.

க்ளிக் செய்து படிக்கவும்
தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?

சிந்தித்து முடிவெடுங்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.

3 comments:

Unknown September 7, 2009 at 3:24 PM  

தரீக்கா கூட்டத்தினர் ஒரு போதும் திருந்தமாட்டார்கள்.இங்கு மஸ்கட்டிலும் தரீக்கா கூட்டத்தினர் உண்டு அதில் நமது இளையான்குடியை சார்ந்தவரும் உண்டு. வியாழகிழமை இரவு அனவுடன் அனைவரும் ஒன்று கூடி இருட்டில் திக்ரு செய்வதாக கேள்விப்பட்டேன்.

இளையான்குடி குரல் September 9, 2009 at 5:38 AM  

Comment sent by Muslim Muhmin Wednesday, September 09, 2009 12:33 AM

Muslim Muhmain said

அஸ்ஸலாமு அலைக்கும்.

பயங்கரமான வ்ழிகேடு. இவர்களை மக்களிடம் அடையாளப் படுத்த வேண்டும்

நன்றி நண்பரே

வலையுகம் April 7, 2011 at 9:01 PM  

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இந்த வழிகேட்ட கூட்டத்தினரிடம் இருந்து நாம் சமூகத்தை இறைவன் காப்பானாக

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP