என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இளையான்குடி கல்வி நிறுவனங்கள்.

>> Monday, August 17, 2009

1. இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ? UPDATED 20.09.09

2. ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.

zulfi said... August 16, 2009 11:59 AM …
இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?........ நூறு வயது வரை கோழைகளாக வாழ்ந்து எதை சாதிக்க போகிறீர்கள். .......???அநியாயத்திற்க்கு எதிராக குரல் கொடுப்பதை எது தடுத்தது?


1. இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா?

இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?

நமது கல்லூரிக்கு சிறுபான்மை தகுதி இல்லையா? என்ன கொடுமைங்க.

இந்திய அரசாங்கத்தால் சிறுபான்மையினருக்கு ஒரு சில உரிமைகளே தரப்பட்டுள்ளன. அதையும் நாம் போராடி பெறத்தவறினால்,பிறகு நமக்குத் தரப்படாத உரிமைகளை எப்படி பெற போகிறோம்.

தன் இரும்புபிடிக்குள் கல்லூரின் நிர்வாகம் இருக்க வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு பதவிகள் தரவேண்டும், தன்னை எதிர்த்தவர்களை இருக்கும் இடம் தெரியாமல் செய்து விட வேண்டும் என்பன போன்ற குணங்களை உடையவர்கள் அட்சி செய்ததால் என்னவோ, நமது கல்லூரி அது தன் வளர்ச்சியை பெறாமலும்,அது தன் உரிமை இழந்தும் உள்ளது என்று நான் சொல்லி பிறர்க்கு தெரியவேண்டிய அவசியம்யில்லை.

சுயநல விரும்பிகள் தலைமை பதவிக்கு வந்தால் அவர்களை சார்ந்து இருக்கும் சமுதாயமும்,நிர்வாகமும் சீர்கெட்டுபோகும் என்பதற்க்கு உதாரணம் இன்றைய தமிழக முஸ்லிகள்.

கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்கள் காலத்தில்,தி.மு.கவினர் 40 இடங்களை முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்கினர். சமுதாய சிந்தனையாளர் கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று உண்மை சம்பவம், ஒரு முறை அன்றை முதல்வராக இருந்த அண்ணா துரை அவர்கள் காயிதே மில்லத் அவர்களை சந்திக்க அவருடைய விட்டிற்க்கு சென்றுருக்கிறார்.

அவர் எதிர்பார்த்ததுபோல் அல்லாமல் காயிதே மில்லத் அவர்களின் வீடு மிகவும் சிறியதாக தான் இருந்துருக்கிறது. மேலும் உள்ளே சென்றவருக்கு அதிர்ச்சி,ஒரே ஒரு நாற்க்காலி தான் இருந்துருக்கிறது அதற்க்கும் இரண்டு கால்கள் தான், மீதி இரண்டு கால்களுக்கு சுவரை ஆதாரமாக கொண்டு இருந்துருக்கிறது.

கண்ணியம் மிகு காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் அவர்களை போன்ற முஸ்லிம் தலைவர்களை தமிழகத்தில் இன்று காண இயலாது.

அவர்களுக்கு பின் முஸ்லிம் லீக்கின் தலைவர்களாக வந்தவர்கள் தங்களுடைய சுயநலத்திற்க்காக முஸ்லிம் சமுதாயத்தை அடமானம் வைத்து ஒரு சில இடங்களை பெற்று பதவி சுகம் அனுபவித்தனர்.

இப்பொழுது ஒன்று அல்லது இரண்டு இடங்களை பெற்றாலும் கூட தங்களுடைய கட்சி சின்னத்தில் தேர்தலில் நிற்க்க இயலாமல் தங்களுடைய கூட்டனியின் கட்சியின் சின்னத்திலே நிற்க்கும் அவலநிலைக்கு வந்துவிட்டனர்.

நமது கல்லூரியின் நிலைமையும் இப்படி தான் சென்று கொண்டிருக்கிறதோ என்னவோ?

அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டிய முஸ்லிம் சமுதாயம்,இன்று பணம் படைத்தவர்களையும்,ஆட்சியாளர்களையும்,ஃபாசிஸ்டுகளை பார்த்து அஞ்சுகின்றனர்.
ரசூல்(ஸல்) அவர்களும்,சகாபக்களும் அவ்வாறு அஞ்சி இருந்தால் இஸ்லாம் இன்று உலகம் எங்கும் பரவியிருக்காது.

இளையான்குடி முஸ்லிம்களே, நீங்கள் அதிகம் விரும்பும் உங்களுடைய வியாபாரம்,சொத்து மற்றும் குடும்பத்தினருக்கு எதுவும் ஆகிவிடும் என்று அஞ்சுகிறீர்களா?

அநியாயத்திற்க்கு எதிராக குரல் கொடுப்பதை எது தடுத்தது?

நான் சொல்லும் அநியாயம் இளையான்குடியில் நடப்பது மட்டும் அல்ல இன்று இந்தியா அளவில் உலக அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் அநியாயத்தையும் சேர்த்து தான்.

நூறு வயது வரை கோழைகளாக வாழ்ந்து எதை சாதிக்க போகிறீர்கள்.
*****************************************************************
மேற்கண்ட கருத்தை ஜனாப் முஹம்மது ஸுல்ஃபிகார் (ZULFI) இந்த பதிவுக்காக

க்ளிக் செய்து படிக்கவும்.
இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ?

க்ளிக் செய்து படிக்கவும்.
2. ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.
ஐ.டி.ஐ. களில் அரங்கேறும் அவலங்கள்.

8 comments:

Anonymous August 17, 2009 at 8:26 PM  

ஆட்கள்,ஊரை சுரன்டிய காசு அரசியல் மிறட்டல் ஜால்ரக்கள் இவ்ர்கலிடம் நாங்கள் குடும்பத்த பாஅர்க்காமல் எதிர்க்க சொல்கிரீரா?

Asik

Unknown August 18, 2009 at 2:44 PM  

"ஒற்றுமையாய் வாழ்வதலே உண்டு நன்மையே.
வேற்றுமையைய் வளர்பதினாலே விளையும் தீமையே."

ஆசிக் அவர்களே,

எதிர்ப்பது என்பது வேறு, நமது உரிமைக்காகவும்,அநியாயத்திற்க்கு எதிராக குரல் கொடுப்பது என்பது வேறு.நீங்கள் யாரையும் எதிர்க்க வேண்டாம். எல்லோருடனும் இணக்கமாகவும்,நட்புடனும் வாழுங்கள் "ஒற்றுமையாய் வாழ்வதலே உண்டு நன்மையே.
வேற்றுமையைய் வளர்பதினாலே விளையும் தீமையே". அதே சமயத்தில் இந்திய ஜனநாயகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நமது உரிமைக்காகவும்,அநியாயத்திற்க்கு எதிராகவும் குரல் கொடுக்கலாமே.நமது சமுதாயத்தை சார்ந்தவர்கள் தவறு செய்தால் "கடிதொச்சி மெல்ல எறிக" அவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டு மென்மையாக கண்டிக்கலாம் அல்லது தவறை சுட்டிக்காட்டலாம்.நமது உரிமைக்காக எவ்வாறு போராடுவது,உதாரணத்திற்கு நமது முஸ்லிம் சமுதாயம் கல்வியுலும்,பொருளாதரத்திலும்,அரசு வேலை வாய்ப்புக்களிலும்,அரசியலிலும் மிகவும் பின்தங்கி உள்ளனர்.உங்களால் முடிந்தால்,ஒரு முஸ்லிம் ஏழை மாணவனுடைய கல்விக்கு நூறு ருபாய் கொடுத்து உதவினிர்கள் என்றால் அது அவன் கல்வி பெற்று அவன் அரசு வேலை வாய்ப்பு பெற நீங்கள் அடித்தளம் அமைத்து தருகிறீர்கள் என்று தானே அர்த்தம். உங்களுடைய வருமானத்தையும்,கையிருப்பையும் கணக்கிட்டு அந்த வருடத்திற்க்கான ஜகாத்தை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை ஒருவருக்கு தொழில் தொடங்க உதவி செய்தால், அது நமது சமுதாயத்தை பொருளாதரத்தில் உயர்த்த நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.நாம் அனைவரும் இந்தியா அளவில் ஒரு அணியில் திரண்டு ஒரு தலைமையின் கீழ் பாடுப்பட்டால் அரசியலில் வெற்றி பெறலாம் தானே. முன்று சதவிதம் இருக்க கூடியவர்களால் ,இந்தியாவின் ஆட்சியை பிடிக்க முடிகிறது. முப்பது சதவிதம் இருக்க கூடிய நம்மால் முடியாதா? எதையும் சாதிப்பதற்க்கு ஒரு முயற்ச்சி வேண்டும்,நல்ல பயிற்ச்சி வேண்டும்.நமக்கும் நமது குடும்பத்திற்க்கும் ஒரு பிரச்சனை என்றால் நாம் நமது சமுதாயத்தின் உதவியை நாடுகின்றேம்,பிறரின் உதவியை தேடுகின்றேம். அதுவே,பிறர்க்கு என்றால் நமது குடும்பத்தின் நலனை கருத்தில் கொண்டு ஒதுங்குதல் முறையா?சரியா? 3.5 சதவிதம் இட ஒதிக்கீடு பெற எவ்வளவு முஸ்லிம் சகோதரர்கள் தங்களுடைய குடும்ப நலன் பாராமல் போராடி இருப்பார்கள்.இந்தியா சுதந்திரம் பெற எவ்வளவு முஸ்லிம்மானவர்கள்,தங்களுடைய உயிர் ,பொருள் தியாகம் செய்திருப்பார்கள்(தங்களுடைய குடும்ப நலன் பாராமல்).இஸ்லாத்தை பரப்ப சகாபாக்கள் எவ்வளவு உயிர் ,பொருள் தியாகம் செய்திருப்பார்கள்(தங்களுடைய குடும்ப நலன் பாராமல்).சுக்கா,மிளகா சுதந்திரம் என்ன சும்மா கிடைக்க.

Anonymous August 18, 2009 at 3:47 PM  

MrZulfi
இந்தகாலெஜ் துடங்க்கியVanjoor குடும்ப்த்தாரெ இன்றுவரஇ எதும்தட்டி கேட்கவில்ல?

Asik

இளையான்குடி குரல் August 18, 2009 at 7:38 PM  

தம்பி ஆசிக்,

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )

அன்று 1970 களில் ILY கல்லூரி கழத்துடன் மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் பீர் முஹம்மது அவர்களின் முயற்ச்சியுடன் கூடிய உதவியும் தான் இளையாங்குடியில் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி.

இல்லையென்றால் கல்லூரி பரமக்குடிக்கு அல்லது ராமனாதபுரம் ஜில்லாவில் வேரு ஒரு ஊருக்கு. இது மறுக்கமுடியாத உண்மை.

கல்லூரியின் தற்போதைய சூழ்நிலையை 26 வருடங்களுக்கு முன்பே 1983 லே முன்னறிந்து (தற்போதைய சூழ்நிலை போன்று உருவாகிவிடக்கூடாது என்பதற்காக‌) மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்சூர் பீர் முஹம்மது அவர்கள் கல்லூரியின் நிர்வாகத்தை திறமையான தன்னலமற்ற நம்மூர் பெருமக்களை நிர்வாகத்தில் அமரச்செய்த முயற்ச்சி.......

க்ளிக் செய்து படிக்கவும்
யார் குற்றம் ???

யார் குற்றம்??? உங்களுடைய முடிவுக்கே!!!

தம்பி, எனக்கு 71 வயது ஆகிறது.
மீதியை புரிந்து கொண்டு நீயும் உன் போன்ற இளைஞர்களும் இணைந்து தோள் கொடுத்து செயல் படுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

வாஞ்சையுடன்
வாஞ்சூர் முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா.
ஆசிரிய‌ர்‍ இளையாங்குடி குர‌ல்.

இளையான்குடி குரல் August 18, 2009 at 7:54 PM  

தம்பி ஆசிக்,

மேலே உள்ள

க்ளிக் செய்து படிக்க
கருத்தில் யார் குற்றம் ???


என்று காண்பிக்கப்பட்டிருக்கும்‍‍
லின்க்

யார் குற்றம் ???

http://ilayangudiyinvelicham.blogspot.com/2009/05/blog-post_05.html

Unknown August 19, 2009 at 12:17 PM  

சிறுபான்மை அந்தஸ்து குறித்து ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டியதில்லை.- உயர் நீதிமன்றம்.


மதிப்பிற்க்குறிய வாஞ்சூர் முஹம்மதுதலி ஜின்னா அவர்களே,

சிறுபான்மை அந்தஸ்து குறித்து ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டியதில்லை.- உயர் நீதிமன்றம். இது நமது கல்லூரிக்கு பொருந்துமா? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ஆதாரம்:http://epaper.dinamani.com/epapermain.aspx#

இளையான்குடி குரல் August 19, 2009 at 2:34 PM  

எனதன்பிற்குரிய ZULFI
அஸ்ஸ‌லாமு அலைக்கும் (வ‌ர‌ஹ்)

ந‌ம‌து க‌ல்லூரியின் நிலையே வேறு.
+++++++++++++++++++++++++++++++++++++
ZULFI சுட்டிக்காட்டும் தின‌ம‌ணி க‌ட்டுரை :-

சிறுபான்மை அந்தஸ்து குறித்து ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டியதில்லை

சென்னை, ஆக. 18: சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக கல்வி நிறுவனங்கள் ஆண்டுதோறும் அறிவிக்க வேண்டியதில்லை என்று சென்னை உயர் நீதி மன்றம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆசான் மெமோரியல் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இந்த உத்தரவு பிறப்பிககப்பட்டுள்ளது.

ஆசான் மெமோரியல் சங்கம் தாக்கல் செய்த மனு விவரம்: எங்கள் சங்கத்தின் சார்பில் ஆசான் மெமோரியல் ஹோட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் கேட்டரிங் கல்லூரி நடத்தப்படுகிறது.

ஆசான் மெமோரியல் சங்கத்துக்கு தமிழக அரசு மொழி சிறுபான்மை அந்தஸ்தை வழங்கியுள்ளது.

இதற்கு கால வரையறை நிர்ணயிப்பதும், ஆண்டு தோறும் இந்த அந்தஸ்தை அறிவிக்கக் கோருவதும் சட்டப்படி சரியானதல்ல.

இதன் காரணமாக, எங்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, ஆண்டுதோறும் சிறுபான்மை அந்தஸ்தை அறி விக்க வேண்டும் என்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி என். பால்வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மொழி மற்றும் மத சிறுபான்மையினர் நடத்தும் நிறுவனங்களுக்கு அரசியல் சட்டத்தில் உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. இந்தச் சலுகைகளை அரசு அங்கீகரிக்க வேண்டும். இதில் எந்த வித கட்டுப்பாடு விதிப்பதையும் அனுமதிக்க முடியாது.

மனுதாரர் நடத்தும் கல்வி நிறுவனத்துக்கு 2000- 01- ல் மொழி சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதன் பிறகு ஆண்டுதோறும் சிறுபான்மை அந்தஸ்தை மனுதாரர்கள் அறிவிக்க வேண்டியதில்லை. இதில் ஏதேனும் விதி மீறல் ஏற்பட்டால், நோட்டீஸ் அளித்த பிறகு அரசு சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளôர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++


குறிப்பிட‌ப்ப‌ட்ட‌ க‌ல்லூரி சிறுபான்மை அந்தஸ்து கால‌ வ‌ரையின்றி பெற்றிருப்ப‌தால் அத‌ற்கு தான் அந்த‌ நீதி ம‌ன்ற‌ உத்திர‌வு பொருந்தும்.

ந‌ம‌து க‌ல்லூரியின் நிலையே வேறு.

1984 லிலேயே க‌ல்லூரி சிறுபான்மை அந்தஸ்து பெற்றிருக்க‌வில்லை என்று அரசாங்க‌ம் தெளிவாக‌ அறிவித்து விட்ட‌தை தொட‌ர்ந்து முறையான‌ ந‌ட‌வ‌டிக‌கை முய‌ற்ச்சி மேற்கொள்ளாம‌ல் தூங்கி கிட‌ந்த‌தா க‌ல்லூரி நிர்வாக‌ம்.?

க்ளிக் செய்து படிக்கவும்.

பொதுக்குழு உறுப்பினர்களின் மன வேதனை


இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரி 2003 லிருந்து 2004 வரைக்கும் மட்டுமே ஒரு வருடத்திற்கு மட்டுமே சிறுபான்மை அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. !!!! ?????

க்ளிக் செய்து படிக்கவும்.

2003ம் ஆண்டு வெளிவந்த அரசாங்க ஆர்டர்


2005 லிருந்து சிறுபான்மை அந்தஸ்து ஆலோச‌னையில் போட‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ??? NOW 2009.

க்ளிக் செய்து படிக்கவும்.

விளக்க அறிக்கை

அனைத்தும் படிக்க:
http://ilayangudiyinvelicham.blogspot.com/2009/08/minority.html


சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் நம் கல்லூரி பெற்று வளமடைய நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோமாக.

நாம் தயார் எப்போதும். நிர்வாகம்?

சிறுபான்மை அந்தஸ்து தரப்படாமல் அர‌சாங்க‌மே க‌ல்லூரியை எடுத்து கொண்டு விட்டால் இருக்க‌வே இருக்கிறார்க‌ள் ப‌லி க‌டாக்க‌ள். ப‌லி சும‌க்க‌.


வாஞ்சையுடன்
வாஞ்சூர் முஹ‌ம்ம‌த‌லி ஜின்னா.
ஆசிரிய‌ர்‍ இளையாங்குடி குர‌ல்.

Unknown August 19, 2009 at 5:32 PM  

சுயநலவாதிகளால்,இது போல இன்னோரு கல்லூரி ஆரம்பிக்க ஒரு செங்கல் கல்லாவது வாங்க முடியுமா?

மதிப்பிற்க்குறிய வாஞ்சூர் முஹம்மதுதலி ஜின்னா அவர்களே,

மிகவும் தெளிவான விளக்கம் தந்தீர்கள்.பொதுநல நோக்கோடு,தன்னலமற்ற நமது முன்னோர்களின் அயராத உழைப்பால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரி,அரசு கைகளுக்கு சென்றுவிடுமோ?என்று நினைக்கையில் நெஞ்சு பதறுகிறது.அப்படி நடந்து விட்டால்,வருங்கால இளையான்குடியின் இளைஞர்களின் கல்வி கேள்விகுறி ஆகிவிடுமோ?என்று உள்ளம் குமுறுகிறது.இதையேல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டிருக்கும் நம்மை,வருங்கால சந்ததியினர் பழி சொல்லி விடுவார்களோ?என்று பயம் தொற்றுகிறது. சுயநலவாதிகளால்,இது போல இன்னோரு கல்லூரி ஆரம்பிக்க ஒரு செங்கல் கல்லாவது வாங்க முடியுமா?அது எப்படி முடியும், கொடைவள்ளல் ஹாஜி வாஞ்சூர் பீர் முஹம்மது போலவும்,சமூகசிந்தனைவாதி ஹவுத் நெய்னார் போலவும், இருவர் பிறந்து வந்து ஆரம்பித்தால்,அதில் ஆட்சி செய்ய ஒடோடி வருவார்கள்.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP