என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தப்லீக் - 1

>> Monday, August 24, 2009

தப்லீக்-- தஃலீம் தொகுப்பு. **UPDATED**

குர்ஆனை விட அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு பள்ளிவாயில்கள் தோறும் படிக்கப்படுகின்ற தஃலீம் தொகுப்பு தப்லீக் ஜமாஅத்தினருக்குக் கிடைத்த புதியவேதமாக ஆகிவிட்டது.

தப்லீக் ஜமாஅத்தில் உள்ள மிகப் பாரதூரமான விடயம் என்னவென்றால் இந்த ஜமாஅத்தில் உள்ள சகோதரர்கள் அருள்மறையாம் திருமறையை வாசிக்கத் தயங்குவதும் தாங்கள் மேதாவிகள் மெத்தப் படித்தவர்கள் நபிமார்களின் வாரிசுகள் என்று கருதும் மனிதர்களை அளவு கடந்து புகழ்வதும் அவர்கள் எந்த முகாந்திரமும் இல்லாமல் கூறும் மார்க்கத்தீர்ப்புக்களுக்கு கண்மூடித்தனமாக கிளிப்பிள்ளை போல் தலையசைப்பதுமாகும்.


இரண்டு முழங்களுக்கும் அதிகமாக ஆடையணிந்து ஒரு சில சுன்னாக்களையும் நடைமுறைப்படுத்தி விட்டால் நாம் தூதரை மதித்து விட்டோம் என நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

தப்லீக் ஜமாஅத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

தொழுகையின் சிறப்பு, ஸதகாவில் சிறப்பு, ரமழானின் சிறப்பு என்றெல்லாம் பல்வேறு தலைப்புகளின் கீழ் தொகுக்கப்பட்ட இவரது நூலில் மிகவும் தந்திரமாக எவருக்கும் சந்தேகம் வராத வகையில் நச்சுக்கருத்துகள் பல புகுத்தப்பட்டுள்ளன.

ஸகரிய்யா சாஹிப் முதலில் சில குர்ஆன் வசனங்களை எழுதுவார். அடுத்து சில ஹதீஸ்களை எழுதுவார். இவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் இதை எழுதியுள்ளார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவார். அதன் பிறகு சிறப்புகள் என்ற பெயரில் தனது சொந்தச் சரக்குகளை விற்க ஆரம்பித்து விடுவார்.

ஆரம்பத்தில் உள்ள சில பக்கங்களில் இவர் மக்கள் உள்ளங்களில் நல்ல இடத்தைப் பெற்றுவிடுவதால் அடுத்தடுத்து இவர் அளக்கும் கப்ஸாக்களை பாமர உள்ளங்கள் கண்டு கொள்வதில்லை எனவே தான் தஃலீம் தொகுப்புகளில் மலிந்துள்ள அபத்தங்களை நாம் இனம் காட்ட வேண்டியுள்ளது.

சிந்தனையாளர்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் ஒரு சில அபத்தங்களை மட்டும்தான் இனம் காட்டுகிறோம்.

நல்ல நோக்கத்தில் தப்லீக் இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் இந்தக் கற்பனைத் தொகுப்பை தூக்கி எறிந்தால் வெற்றியடைவார்கள்.

தப்லீக் ஜமாஅத்தில் நல்ல சிந்தனையாளர்களும் உண்மையை அறிய விரும்புபவர்களும் கணிசமாக இருக்கிறார்கள் என்று நாம் நம்புவதால் தஃலீம் தொகுப்பில் காணப்படுகின்ற அபத்தங்களையும் பொய்களையும் கற்பனைக் கதைகளையும் அடையாளம் காட்ட விரும்புகின்றோம்.

பயபக்தியுடன் இந்த கப்ஸாக்கள் பள்ளிவாசல்களில் வைத்துப் படிக்கப்பட்டு வருகின்றன. தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?

முஸ்லிம்களைப் பண்டார சன்னிதிகளாகவும், துறவிகளாகவும் ஆக்கி அவர்களை முடக்குவதற்காகவே இப்படிபட்ட கதைகளை பொறுக்கி எடுத்து எழுதியுள்ளாரோ என்று என்னத் தோன்றுகிறது அல்லவா?

இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப் பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.

பல்வேறு கப்ஸாக்களை தப்லீக்கின் தஃலீம் தொகுப்பில் நாம் காணமுடிகிறது.

கப்ரில் ஒளி கிடைத்தது என்று கூறுவதென்றால் இவர் செத்துப் பிழைத்து இதைக் கூறினாரா?

கப்ரில் ஒளி கிடைத்ததை இவர் வேறு எந்த வழியில் அறிந்து கொண்டார்? தப்லீக் அறிஞர்கள் விளக்குவார்கள்?

ஏட்டில் எழுதப்பட்டு விட்டால், நம்பித் தொலைக்க வேண்டும் என்ற மனப்பான்மை மக்களிடம் நிலவுவதால் இவ்வாறெல்லாம் மக்களில் பலர் சிந்திப்பதில்லை. குண்டாந்தடியைத் தூக்கிக் கொண்டு கொசு பறக்கிறது என்று கூறினாலும் ஆமாம் என்று தலையாட்டுபவர்களாக மக்கள் இருப்பதால் ஸகரிய்யா சாஹிபுக்கு இந்தக் கதைகளை மார்க்கம் என்ற பெயரால் வியாபாரம் செய்ய முடிகிறது.

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும் என்று அடிக்கடி போதனை செய்யும் தப்லீக் ஜமாஅத்தினர் எப்படி இதை ஜீரணிக்கிறார்கள் என்பது தான் நமக்கு ஆச்சரியமாக உள்ளது.

நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதென்றால் சமுதாயத்தில் கலந்து வாழ்வதன் மூலமே இது சாத்தியமாகும்.


திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் அனுமதி உண்டா இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கடுகளவும் அக்கறை கொள்ளாமல் தனி நபர்களை அளவுக்கதிகமாக உயர்த்தும் வகையில் அமைந்துள்ள மற்றொரு கதையைப் பாருங்கள்.

முகவரியில்லாத ஒருவர் பகலெல்லாம் நோன்பு வைத்து இரவெல்லாம் நின்று வணங்கியதாகக் கூறப்படுகின்றது. நல்லடியார்கள் என்பதற்கு இதுவே அளவு கோலாகவும் அப்பாவி முஸ்லிம்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

ஷைகுமார்கள் என்ற போர்வையில் முரீதுகளை ஏமாற்றும் எண்ணம் படைத்தவர்கள் தான் இதுபோன்ற நம்பிக்கையை ஏற்படுத்தி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் முரீதுகளின் செயல்கள் தங்களுக்கு எடுத்துக்காட்டப்படும் என்று பயமுறுத்தி மக்களை அடிமைப்படுத்தவே இது போன்ற கதைகள்.

குர்ஆனும், நபிவழிக்கும் முரணான - தப்லீகின் ஸ்தாபகர் காலத்திற்குப் பின்னர் உள்ளங்களால் தயாரிக்கப்பட்ட இந்த நூலை தப்லீக் ஜமாஅத்தினரும் பொது மக்களும் புறக்கணிப்பார்கள் என்று நம்புவோமாக!!

CLICK AND READ


தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?

தொழுகையா? சொர்க்கமா?

பாவங்களைப் பார்த்த பெரியார்

பணக்காரராகும் வழி என்ன?

சொர்க்க்தில் தொழுகையா?

பிறர் மெச்சுவதற்காக வணங்குதல்

இருநூறு ரக்அத்கள் தொழுத பெரியவர்

மலஜலம் கழிக்காத பெரியார்

கடமை மறந்த கூலிக்காரர்

மண்ணறை நெருப்பைக் கண்ட பெரியார்

கப்ரில் தொழுத பெரியார்

இரவில் உறங்காத பெரியார்கள்

2 comments:

Unknown August 24, 2009 at 5:23 PM  

நான் இருமுறை முன்று நாள் ஜமாத் சென்றுக்கிறேன். இருமுறையும் வெறும் கதைகள் தான் படித்துக்காட்டினார்கள்.திரு குரானையோ, ஹதிஸையோ அவர்கள் படித்து காட்டவில்லை.இவர்கள் ஒரு கதை புத்தகத்தில் கட்டுண்டு கிடப்பது ஏன்? என்று தெரியவில்லை.

கிருது August 24, 2009 at 5:29 PM  

It's true, what you are saying about TABLIQ.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP