என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி பாச உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?

>> Saturday, August 1, 2009

தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?

தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா?

நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும்

தன்பெண்டு, தன் பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.

. உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்க-வைத்துக்கொள்வது என்பது வேறு.

SYMPATHY சிம்பதி- EMPATHY.எம்பதி

உதவி செய்வதிலே கூட இந்த இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது. சிம்பதி என்று சொல்லும்பொழுது அதற்கு என்ன பொருள்? நாம் அவரைப் பார்த்து பரிதாபப்படுகிறோம் என்று அர்த்தம், அதற்குப் பெயர் சிம்பதி.

ஆனால், அதைவிட சிறந்த சொல் ஒன்று உண்டு. ஆங்கிலத்திலே எம்பதி என்ற சொல். சிம்பதி என்ற சொல்லுக்கும் எம்பதி என்ற சொல்லுக்கும் என்ன வேறுபாடு என்றால், சிம்பதி என்பது வெறும் இரங்குதல். பரிதாபப்படுதல் அய்யோ அவர் இப்படி இருக்கிறாரே என்று நினைப்பது, அது ஓரளவு தான்.

ஆனால், எம்பதி என்ற சொல் இருக்கிறதே_ துன்பப்பட்டவர் இடத்தில் அவராகவே மாறி, அவரிடத்தில் இருந்து நம்மை வைத்துப் பார்ப்பது-.

.நாம் அந்த இடத்திலே இருந்தால் நமக்கு அப்படி ஏற்பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும்? ஆகவே நாம் உதவ வேண்டாமா? என்று நினைக்கின்ற பொழுது தான் அவன் உயர்ந்த மனிதனாகிறான். சிறந்த மனிதனாகிறான். எப்பொழுதும் மற்றவர்களாலே மதிக்கக் கூடிய மனிதன் ஆகின்றான்.

எதை வைத்து மனிதனை அளக்க வேண்டும்?

மனிதர்கள் எதை வைத்து அளக்கப்பட வேண்டும் என்று சொன்னால், பணத்தால் அல்ல; அல்லது பட்டத்தால் அல்ல; அல்லது அவர்களுடைய பெருமைகளால் அல்ல. அவர்களுடைய தொண்டினால் மனிதர்கள் அளக்கப்பட வேண்டும். தெண்டினால் அவர்கள் எவ்வளவு உயர்ந்திருக்கிறார்களோ, அந்த அளவிற்குத் தான் அவர்கள் சிறந்த மனிதர்கள். மாமனிதர்களாக இருக்க முடியும்.

புகழ்வேட்டை என்பது வரக்கூடாது. புகழ்_-தானே இவரை அடையாளம் கண்டு வரவேண்டுமே தவிர, புகழை நோக்கி நாம் போகக் கூடாது. அந்த வகையிலே ஒரு கருத்து மனிதனுக்கும், மிருகத்திற்கும் இருக்கின்ற வேறுபாடு என்ன? மனித குலம் பெற்ற பயன் என்ன?
எல்லோருக்கும் பகுத்தறிவு இருக்கிறது. ஆறாவது அறிவு இருக்கிறது. வளர்ச்சி மனிதனுக்கு ஓங்கிக்கொண்டேயிருக்கிறது.

நேற்றைய விஞ்ஞானம் இன்றைக்குப் பழையதாகப் போய்விட்டது. இன்றைக்கு மின்னணுவியல் யுகம். எனவே தான் இதை எல்லாம் நினைத்துப் பார்க்கிற பொழுது இந்த வளர்ச்சியினாலே மனித குலம் பெற்ற பயன் என்ன? முன்னேற்றம் என்ன? ஆக்கரீதியான பயன் என்ன? என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

மனித சுபாவம் என்னவென்று பார்த்தால், ஜீவன்களுக்கு இல்லாத சுபாவமுள்ளவனாக இருக்கின்றான்.

நாய்க்காகிலும் நன்றி விசுவாசமென்பது மிகவும் உண்டு. நன்றியைக் கொஞ்சம் கூட மறக்காமல் நாய் தன் எஜமானனிடம் விசுவாசத்துடன் இருக்கும் தன் எஜமானன் தன்னை விட்டு வெளியே சென்று விட்டு வந்த பிறகும் தன் நன்றியின் அறிகுறியாக எட்டித்தாவி வாலை ஆட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து, மேலே விழுந்து விளையாடுவதற்கு முயற்சிக்கும்.

மனிதனோ நாயைப் போல நன்றி விசுவாசம் உடையவன் அல்லன்.
நன்றி காட்டுவது என்பது அரிதிலும் அரிது. அதிலும் பிள்ளைகளை நாம் இப்பொழுது நிறைய படிக்க வைக்கின்றோம்.

ஒரு சிறிய உதாரணம்.. ஒருவர் பெரிய வீடு கட்டினார். வீடு திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ்களை எல்லாம் கொடுத்தார். பெரிய உத்தியோகத்தில் இருக்கிறவர். தன்னுடைய நண்பர்கள் எல்லாம் வந்தார்கள். வீட்டிற்குப் பெயரோ அன்னை இல்லம்.....!

அவருடைய வீட்டிற்கே அன்னை இல்லம் என்று பெயர் வைத்திருந்தார். எல்லோரும் அந்த அழைப்பிதழைப் பார்த்து அவருடைய புதுமனை விழாவிற்கு வந்திருந்தார்கள்.

அந்த இல்லத்துக்காரர் வந்திருந்த முக்கிய பிரமுகர்களுக்கு ஒவ்வொரு அறையாகக் காட்டினார். வீடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறது என்று பாராட்டினார்கள். அதிலே ஒருவர் கேட்டார். அன்னை இல்லம் என்று நீங்கள் பெயர் வைத்திருக்கின்றீர்களே, இவ்வளவு பெரிய பாசத்தை தாய் மீது நீங்கள் வைத்திருக்கின்றீர்கள். அதனால் தான் அன்னை இல்லம் என்றே பெயர் சூட்டியிருக்கின்றீர்கள்.

ஆகவே, உங்களுடைய தாயாரைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபொழுது,அந்த புதிய இல்லத்துக்காரர், அவர் முதியோர் இல்லத்தில் இருக்கிறார் என்று பதில் சொன்னார்.

இது கற்பனை அல்ல. வாழ்க்கை ஒரு பக்கம் உயர்ந்திருக்கிறது. சம்பளங்கள் கை நிறைய கிடைக்கிறது. பணம் இருக்கிறது. ஆனால் தன்னுடைய தாயிடத்திலே, பெற்றோரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி பல குடும்பங்களிலே இருக்கிறதா? என்று பார்க்கின்ற நேரத்திலே நீங்கள் எத்தனையோ உதவிகளை செய்கிறீர்கள். இடையிடையே அதை நீங்கள் வலியுறுத்த வேண்டும்.

ஏனென்றால் நோய்களிலே பெரிய நோய் அறியாமை மற்றும் இது போன்ற சிக்கல்களான நிலைகள்தாம். ஆகவே அதைச் சொல்லுகிறார்கள்.

நாயைத் தன் எஜமானன் எவ்வளவு அடித்தாலும், உதைத்தாலும் அதே நாய் தன்னுடைய எஜமானனிடம் அன்பு காட்டுவதைக் காணலாம். சோறு போடாவிட்டாலும், நாய் விசுவாசம் காட்டும்.

ஆனால், மனிதன் அப்படி அல்லன். மனிதனுடைய இயல்பு தன்மை என்ன?
மனிதன் அப்படி அல்ல. என்ன நன்மை அடைந்தாலும் ஒரு தீமை நேர்ந்துவிட்டாலும் முன்பு அடைந்த நன்மைகளை மறந்து தீமையை மட்டும் எடுத்துக்கொள்வான்.

நாம் எத்தனை நண்பர்களைப் பார்க்கின்றோம். எத்தனையோ உதவிகளைத் தொடர்ந்து செய்திருப்பீர்கள். ஒரே ஒரு உதவியை நீங்கள் மறுத்தீர்கள் என்று சொன்னவுடனே பல உதவிகள் செய்தது அவருக்கு நினைவுக்கு வராது. எட்டாவது உதவியை நீங்கள் செய்யவில்லையே அதை மட்டும் தான் சொல்லிச் சொல்லிக் காட்டக் கூடிய, சுட்டிக்காட்டக்
கூடிய உணர்வோடு இருப்பார்கள்.

எனவே, மனிதனுக்கு சகலமும் சுய நலம். வியாபாரமுறை.
மனிதனுக்கு துரோகம் என்பது இயல்பு என்ற நிலையிலே இப்படி இருக்கிறார்கள்.

பூமிக்கு மேல் மைல் கணக்கில் தூரத்தில் பறக்கும் பருந்து பூமியில் கிடக்கும் சிறிய வஸ்துகளை அது கண்டுபிடித்து விடுகிறது.
கரும்பை பயிர் செய்ய யானைக்குத் தெரியாது

நம்முடைய கண் பருந்தின் கண்களைவிட பெரிது நம் கண் உருவத்தில் பெரிதே தவிர, பறவைக்குள்ள கண்ணின் சக்தியைவிட அதிகம் சக்தி கொண்டதில்லை.

பருந்தின் கண்களுக்கு தனி சக்தி இல்லை. மனிதன் கரும்பை உற்பத்தி செய்கிறான். ஆனால் யானைக்குக் கரும்பைத் தின்பதற்குத் தான் தெரியும். கரும்பை பயிர் செய்யத் தெரியாது.
எவ்வளவு அழகான கருத்து என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.

மனிதன் பிறருக்குத் தொண்டு செய்து வாழ்வதையே குறியாகக் கொண்டுள்ளான். ஆனால் இந்தக் குறிக்கோள் மற்ற ஜீவனுக்கு இல்லை. எனவே தொண்டு செய்து அதன் விளைவாக மனிதன் புகழ் ஈட்டுவதிலே அவனுக்குத் தனி சிறப்பாகும். தொண்டின் மூலமாக கிடைக்கின்ற பெருமை தான்

அதைப் பார்க்கும் பொழுதுதான் உங்களுடைய தொண்டின் சிறப்புத் தெரிகிறது.இவ்வளவு பேர் சேர்ந்து அற்புதமான ஒரு புதிய சமுதாயத்தை இதற்கு விதிவிலக்கான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் திட சித்தத்தோடு உறுதி எடுத்துக்கொண்டு நாம் தொண்டாற்ற வேண்டும்.

1 comments:

Anonymous August 1, 2009 at 2:39 PM  

manithanaga pirandha ovvuruvarum allah(subh) virkku payappada vendiya veshayam....

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP