- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
மருத்துவம்
>> Saturday, August 1, 2009
மருத்துவ டிப்ஸ்
அரைக் கீரையை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, உடல் வலிமை பெறும்; தலைமுடியும் நன்கு வளரும்.
அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.
பசலை மற்றும்.....
பசலை மற்றும் வெந்தயக் கீரையை சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
புளிச்சக் கீரையில் அதிக இரும்பு சத்து இருப்பதால் உடல் பலவீனமானவர்கள் உண்டு வந்தால் உடல் பலம் பெறும்.
தூதுவளைக் கீரை சளிக்கு மருந்தாக அமையும், அதனை துவையல் செய்து சாப்பிடலாம்.
கறிவேப்பிலையை உணவு பதார்த்தத்தில் இருந்தாலே தூக்கி எறியும் பழக்கம் கொண்டவர்கள் இருக்கும் போது, பச்சை கறிவேப்பிலையை மென்று திண்ணலாம் என்கிறார்கள் ஆராய்ச்சி நிபுணர்கள்.
கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால் பரம்பரை நரை முடி பிரச்சினை ஏற்படாது.. கண்பார்வை குறைபாடும் ஏற்படாது.
கறிவேப்பிலையை அரைத்து விழுதாகவோ அல்லது சாறு எடுத்தோ உண்டு வந்தால் நுரையீரல், இதயம் மற்றும் ரத்தம் தொடர்பான நோய்களே நம்மை அண்டாது.
கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவும்.
கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.
நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம்
கறிவேப்பிலையை பறித்து பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
கறிவேப்பிலைக்கு இருக்கும் மருத்துவ குணங்களைப் படித்தால் இனி எப்போதும் கறிவேப்பிலையை தூக்கி எறிய மாட்டீர்கள்.
உடல் உஷ்ணமாக இருப்பவர்களும், உஷ்ணமான இடத்தில் வேலை செய்பவர்களுக்கும் கறிவேப்பிலை தான் உரிய மருந்தாகும்.
அதாவது, கைப்பிடி அளவு கறிவேப்பிலையை நன்கு அரைத்து அதன் சாற்றை, 100 கிராம் தேங்காய் எண்ணையில் சேர்த்து மிதமான சூட்டில் நன்கு காய்ச்சவும்.
இந்த எண்ணெயை ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஊற்றி மூடி வைக்கவும். இந்த எண்ணெயைத் தொடர்ந்து தலைக்குத் தடவி வர உடல் உஷ்ணமா அப்படி என்றால் என்ன என்று கேட்பீர்கள்.
இப்படி செய்து வந்தால் இளம் வயதில் நரை வராது. கண் பார்வையின் சக்தி அதிகப்படும்.
செய்து பாருங்கள்.. நல்ல பலன் கிட்டும்.
வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.
வாயுத் தொல்லை என்பது பொதுவாக 35 வயதைக் கடந்த அனைத்து தரப்பினருக்குமே இருக்கக்கூடிய ஒரு இன்னல் எனலாம்.
ஒரு சிலருக்கு சிறிய அளவு உருளைக்கிழங்கை சாப்பிட்டாலே இந்த வாயுத் தொல்லை ஏற்படும். வேறு சிலருக்கு பருப்பு மற்றும் அவற்றில் செய்யப்படும் பதார்த்தங்களினால் வாயுத் தொந்தரவு உருவாகும்.
வாயுத்தொல்லைக்கு ஏற்ற அருமருந்து வெள்ளைப் பூண்டு.
முடிந்தால் அப்படிய 4 பல் பூண்டை தோலுரித்து சாப்பிடலாம். அல்லது அடுப்பில் வைத்து கருகும் அளவுக்கு சுட்டு, பின்னர் அதன் தோலை உரித்து பாலுடன் சேர்த்து உண்ணலாம்.
வாயுத்தொல்லை இருப்பவர்கள் பூண்டு சாப்பிட்ட உடனேயே அதில் இருந்து விடுபட்டதை உணரமுடியும். வேண்டுமானால் பூண்டு காரம் போக, மோர் அருந்தலாம்.
பொதுவாக உணவுக்குப் பயன்படுத்தும் குழம்பில் வெள்ளைப்பூண்டை அன்றாடம் சேர்த்துக் கொள்வது சிறந்தது.
பெண்கள் குழந்தை பெற்ற பின் அதிகளவு சோர்வு இருக்கும் என்பதால், வாரத்திற்கு 2 அல்லது 3நாட்கள் பூண்டு குழம்பை சாதத்துடன் கொடுப்பார்கள். தவிர தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பூண்டு மிகவும் சிறந்ததாகும்.
எனவே பூண்டை அன்றாடம் சிறிதளவாவது சேர்த்துக் கொள்ளப் பாருங்கள்.
மஞ்சள் ஒரு கிருமி நாசினி
மஞ்சளையும் வேப்ப இலைகளையும் அரைத்து அம்மை நோய் வந்தவர்களுக்குத் தேய்த்து தலைக்கு நீராட்டப் பயன்படுத்துவார்கள்.
அம்மை நோய் வந்தவர்களைச் சுற்றி மஞ்சள் நீரைத் தெளிப்பதால் நோய் பரவாமல் தடுக்கலாம்.
மது வகைகள், பழச்சாறு போன்றவற்றிலும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதோடு செரிமானத்திற்கும் உதவும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் உடலுரம் தரும். ரத்தத்தை சுத்தப்படுத்தும், குடற்பூச்சிகளைக் கொல்லும். நீரிழிவு மற்றும் தொழுநோயைக் கட்டுப்படுத்திக் குறைத்திடும். சரும நோய்களைப் போக்கக்கூடிய சக்தி மஞ்சளுக்கு அதிகம் உண்டு.
மஞ்சள் கரிப்பொடியை பற்பொடியாய் உபயோகித்தால் பல் நோய்கள் குணமாகும்.
மஞ்சளின் சத்து எண்ணெய் உட்கொண்டால் கல்லீரலில் பித்தநீர் சுரப் பதையும் கட்டியாவதையும் குணப்படுத்திவிடும்.
கலப்படமில்லாமல் மஞ்சள் தூள் கடைகளில் கிடைப்பது அரிதுதான். சுத்தமான விரலி மஞ்சளை வாங்கி வீட்டிலோ, மெஷினிலோ அரைத்து வைத்துப் பயன்படுத்துங்கள்
அன்னாசி
சீரண உறுப்புகளை வலுப்படுத்தும் அன்னாசி
மஞ்சல் காமாலையை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் அன்னாசி சாறுக்கு உண்டு. இரத்தமிழந்து பலவீனமாக இருப்பவர்களுக்கு அன்னாசி மிகசிறந்த மருந்து. பித்த சம்பந்தமான கோளாறுகள் காரணமாக காலை வாந்தி, கிறுகிறுப்பு, பசி மந்தம் போன்றவற்றை நீக்குவதில் அன்னாசி சூரன்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாக அன்னாசி உதவும். ஒரு பக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி கண், காது, பல், தொண்டை சம்பந்தமான அனைத்து நோய்களையும். வாய்ப்புண், மூலைக்கோளாறு, ஞாபக சக்தி குறைவு போன்றவை தேனும் அன்னாசிப்ழமும் சேர்த்து செய்யப்படும் அன்னாசிப்பழ சர்பத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைவில் குணம் தெரியும்.
அன்னாசிப்பழம் அதிக சூடு, சீதபேதி, வயிற்றுவலி ஏற்படுத்தும் எனபது மூட நம்பிக்கை, மாம்பழம், ஆரஞ்சு பழங்களில் உள்ள அதே 14 கலோரி தான் அன்னாசியிலும் உள்ளது இது நாம் தினமும் பயன்படுத்தும் புலியின் அளவான 82 கலோரியைவிட மிகக்குறைவு. இரத்தத்தைச் சுத்தி செய்வது, சீரண உறுப்புகளை வலுப்படுத்துவது, மலக்குடலைச் சுத்தப்படுத்துவது அன்னாசியின் சிறப்பு.
0 comments:
Post a Comment