என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தகவல்கள்

>> Friday, July 10, 2009

1.கட்டாய திருமண பதிவு-இஸ்லாமிய அமைப்புக‌ள் வேண்டுகோள்.

2.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?

3.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?

4.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)?

5..அழகிற்காக திருமணம் செய்யாதீர்.

6.பாப் அப் வழி தூண்டில்கள்.

7.பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்.

கட்டாய திருமண பதிவு-இஸ்லாமிய அமைப்புக‌ள் வேண்டுகோள்.
சென்னை: தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மையினரி்ன் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:

தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.

தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப் பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த திமுக பாடுபடும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.

அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து, பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


SEE VIDEO CLICK---> 6) "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?

SEE VIDEO CLICK---> 5.)”நச்”.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?

SEE VIDEO CLICK ---> 4.“நச்” கேள்வி.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)?

அழகிற்காக திருமணம் செய்யாதீர்.

"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச்சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக! நீர் மார்க்கப்பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்; உமக்கு நலம் உண்டாகட்டும்,'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதன்படி, ஒரு பெண்ணிடம் நான்கு குணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

சிலர் அவள் செல்வம் உடையவளா என்று கவனிக்கிறார்கள்.
ஒரு சிலர் அவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவளா எனக் கவனிக்கிறார்கள். ஒரு சிலர் அழகிற்காகவே திருமணம் செய்கிறார்கள்.இன்னும் சிலர்தான் மார்க்கப்பற்றைப் பார்க்கிறார்கள்.

""ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி, அவளுடைய மார்க்கப் பற்றும், இறையச்சமுமே ஆகும்.

இதனுடன் மற்ற சிறப்புகளும், தகுதிகளும் ஒன்று சேர்ந்துவிட்டால் அதுவும் நன்றே!

எனினும், மார்க்கப்பற்றை பார்க்காமல் புறக்கணித்துவிடுவதும், செல்வத்தையும், அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று,'' என்றும் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.

இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, ""பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள். அவர்களுடைய அழகு, அவர்களை அழித்துவிடக் கூடும்.

பெண்களை செல்வந்தர்கள் என்பதற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும், அடங்காப்பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும்.

மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கறுப்பு நிற அடிமை பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடையவள். மார்க்கப்பற்றில்லாத குடும்பப் பெண்ணைவிட சிறந்தவள் ஆவாள்,'' என்றும் சொல்கிறார்கள்.

பாப் அப் வழி தூண்டில்கள்.

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் கம்ப்யூட்டர் இன்பெக்ட் ஆகிவிட்டதாகவும், கம்ப்யூட்டர் மிகவும் ஸ்லோவாக செயல்படுவதாகவும் மெசேஜ் பாப் அப் செய்யப்பட்டு அதற்கு இலவச தீர்வு வேண்டும் என்றால் கிளிக் செய்யவும் என ஒரு லிங்க் அல்லது சிகப்பு கலரில் எக்ஸ் அடையாளம் தரப்படுகிறது. இது உண்மையா? என்ன செய்ய வேண்டும்?


சற்று விரிவாக இந்த பிரச்சினையை இங்கு காணலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வரும் இத்தகைய தூண்டில் செய்திகள் குறித்து பொதுவாக அனைவருமே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப இப்போது ஏமாற்றும் விதமும் அதிகரித்து வருகிறது.

இந்த செய்திகளைக் கவனித்தால் அவற்றை அனுப்புபவரின் தந்திரம் தெரியவரும்
1. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்ற தொனியில் நம்மை எச்சரிக்கும் விதமாக இந்த செய்தி அமைக்கப்பட்டிருக்கும்.

வைரஸை எடுக்க வேண்டும்; உடனடியாக அப்டேட் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் கம்ப்யூட்டர் நாசமாகிவிடும் என நம்மை பயம் அடைய வைக்கும் விதமாக இது அமைந்திருக்கும்.

2. பல வேளைகளில் இந்த செய்தி ஓரு பிரபலாமான நிறுவனம் (மைக்ரோசாப்ட், நார்டன், சைமாண்டெக், அடோப், குயிக் டைம் போன்றவை) ஒன்றின் பெயரில் தரப்படும்.

இது ஒரு ஏமாற்று வேலை. இந்த செய்தியை நன்றாக உற்றுக் கவனித்தால் பல எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் இருக்கும். புகழ் பெற்ற நிறுவனங்கள் நிச்சயம் இந்த வகை பிழைகளுடன் செய்திகளைத் தர மாட்டார்கள்.

இவை டவுண்லோட் செய்திடச் சொல்லும் புரோகிராமின் பெயர் அல்லது விசிட் செய்யச் சொல்லும் வெப்சைட்டின் முகவரியினை காப்பி செய்து கூகுள் சர்ச் இஞ்சினில் போட்டுப் பார்த்தால் இவை உண்மையா என்பது தெரியவரும்.

எனவே இது போன்ற மெசேஜ் பாப் அப் ஆகி வருகையில் என்ன செய்திட வேண்டும்? 1. உங்கள் மவுஸின் கர்சரை எந்தக் காரணத்தைக் கொண்டும் லிங்க் அருகே கொண்டு செல்ல வேண்டாம்.

2. விண்டோவின் எந்த இடத்திலும் மவுஸைக் கிளிக் செய்திட வேண்டாம். செய்தால் உடனே நம்மைக் கவிழ்க்கும் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகத் தொடங்கும்.

3. உடனடியாக ஆல்ட்+எப்4 கீகளை அழுத்துங்கள். அந்த விண்டோ அல்லது பிரவுசர் மூடப்படும். பின் மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுஸ் செய்திடலாம்.

அல்லது கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1.விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைத் திறக்கவும். இதற்கு Ctrl+Alt+Del கீகளை அழுத்தவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Applications டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.
3. உங்கள் பிரவுசர் புரோகிராம் மீது இடது கிளிக் செய்திடவும்; அல்லது நீங்கள் பிரச்சினை என்று முடிவு செய்திடும் புரோகிராம் மீது கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் ஹைலைட் ஆகும். பெரும்பாலும் இது நீல நிறத்திற்குச் செல்லும்.

4. அடுத்து End Task பட்டனில் கிளிக் செய்திடவும். புரோகிராம் மூடப்படும்.
உங்கள் கம்ப்யூட்டரில் பயர்வால் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எப்போதும் அப் டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் பிரவுசரில் இது போன்ற பாப் அப் விண்டோக்கள் வராதவாறு தடை செய்திடும் வசதி இருக்கும். அதனை இயக்கி வைக்க வேண்டும்.

இது போல பிரவுசரில் பாப் அப் தடை செய்யப்பட்டிருந்தாலும் இயங்கும்படி இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் செட் செய்யப்பட்டிருக்கலாம். எனவே பிரவுசரில் தடை செய்யப்பட்ட பின் வரும் பாப் அப் செய்திகள் எல்லாம் உண்மையானவை என்று எண்ண வேண்டாம்.

பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்

- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.

- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே-

தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.

சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன.

இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம்.

இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.

நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.-

கேரி பேக்குகள்- காய்கறி கேரி பேக்குகள்- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்- வீட்டு குப்பை பைகள்- வணிக குப்பை பைகள்- தொழிற்சாலை லைனர்கள்- மருத்துவ, ஹோட்டல்

குப்பை பைகள் மக்கிப் போவதற்கு ஆகும் காலம்

பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள் வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்

பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்காகிதம் - 2-5 மாதங்கள் கயிறு - 3-14 மாதங்கள் ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள் உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்

டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்தோல் காலணி - 25-40 ஆண்டுகள் நைலான் துணி - 30-40 ஆண்டுகள் தகர கேன் - 50-100 ஆண்டுகள் அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள் பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்

டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது

எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள்.

அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.

இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.

நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?

சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமைஅனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன நன்றி: ஆதி

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP