என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மதுவிலக்கே மந்திரமாகட்டும்

>> Tuesday, November 24, 2009

காலம் எத்தனை மாற்றங்களை ஏற்படுத்தினாலும் மனித குலத்துக்கு நன்மையை உடனடியாக அது செய்யாத போது நீண்ட காலத்துக்கான அடிப்படையிலும் அது நன்மை தருவதில்லை.

நன்மையைத் தராவிடினும் தீமையைத் தராமலாவது இருக்கலாம். குறிப்பாக பொழுது போகுக்கான பழக்கங்கள் ஒரு தலைமுறையை அழிப்பதோடு நான்கைந்து தலைமுறையையும் பாழ்படுத்தாமல் இருப்பதில்லை. பரம்பரையாய் உயிர்க் கொல்லி நோயாய் இருப்பது மதுப்பழக்கம்.

மது என்பது எந்த வகையாக இருந்தாலும் அது ஏதோ ஒரு வகையில் தீமை பயப்பதுதான். இன்றைக்குக் 'கள்' இறக்குவதைச் சட்டப்படி குற்றமற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் 'கள்'ளை மதுபான பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்கிற குரலும் எழுந்திருக்கிறது.

அதற்கு ஆதரவாகப் பல அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை எந்த லட்சியமும் அற்ற கொள்ளைக் கூட்டணியாகச் செயல்படுவதால் இதைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒரு காலத்தில் மாப்பிள்ளைக்குக் குடிக்கிற பழக்கம் இருக்கிறதா? என்றுதான் பார்ப்பார்கள்.

இப்போது படித்த மாப்பிள்ளைகள் 'பாரில்' அமர்ந்து குடிப்பதை நாகரிகமாகவும் 'பார்ட்டி' என்கிற பெயரில் குடித்துக் கும்மாளமிடுவதை உயர்வென்றும் கருதுவதும் குடியின் ஆதிக்கமாகக் கருதலாம்.

குடித்து விட்டுத் தெருவில் வீழ்ந்து கிடப்பதும் தகராறு செய்வதும் பண்பற்ற செயல்களாக இருந்த நிலைகூட மாறி, இதுவெல்லாம் இனித் தடுக்க இயலாது என்கிற பொதுப்புத்தி நிலைக்கு இந்த நாடு தள்ளப்பட்டு விட்டது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் என்று சகல துறையினரும் குடிப்பதைப் பற்றிக் குற்றவுணர்வு ஏதும் இல்லாமல் இயல்பாக அதுபற்றி, இது தனிமனித சுதந்திரம் என்று கருத்துரைப்பதும் இதற்கு ஆதாரம் தேடி சங்க இலக்கிய உதாரணங்கள் என்று பிதற்றுவதும் வெட்கக் கேடான விஷயம் என்பது மட்டுமன்றி, ஒரு தலைமுறைக்கே தவறான வழிகாட்டும் கைகாட்டி மரங்களாகவும் இவர்கள் வலம் வருகிறார்கள்.

குடியால் உயர்ந்தவர்களைப் பற்றி இவர்களால் யாரேனும் ஒருவரை அடையாளம் காட்ட முடியுமா...?

அரசுக்கு வருமானம் மதுக்கடைகள் என்று அரசுகள் பிதற்றுகின்றனவே, இது வரை வறுமை ஒழிந்திருக்கிறதா...?

வேலை வாய்ப்புகள் தான் பெருகியுள்ளதா...?

படித்த பண்புள்ள இளைஞர்கள் பலரும் 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் வேலைக்குச் சேர்ந்தபின் புதிய குடிகாரர்களாய் மாறிப்போனதை யாராலும் மறுக்க இயலுமா...?

மேலதிகாரிகளைச் சரிகட்ட, எப்படியாவது சம்பாதிக்கிற உத்திகளைப் பழகவில்லையென்றாவது கூற முடியுமா...?

கல்லூரி மாணவர்களில் சிலர் மேலைநாட்டுத் தாக்கத்தின் விளைவாகக் குடிக்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.

குடிக்கிற ஆண்களைக் கண்டிக்க வேண்டிய மாதர்கள்கூட குடிக்கத் தொடங்கிய வரலாறுகளும் நம்மிடம் உண்டு.

தாயே தன் மகனுக்கு ஊற்றிக் கொடுக்கிறாராம். வெளியே சென்று அதிகமாகக் குடித்துப் பழகி விடுவானாம். வீட்டிலேயே ஒரு 'பெக்கோ' இரண்டு 'பெக்கோ' கொடுத்து விட்டால் வெளியே சென்று சீரழிய மாட்டானாம். குடிக்கு வக்காலத்து வாங்குகிற வணிக ஊடகத்தில் பிதற்றுகிற பேட்டியின் குரல் இது.

குடியின் தீமைகளைப் பற்றிப் பல நூற்றாண்டுகளாக பலரும் குரல் கொடுத்து வரும்போது இந்த நூற்றாண்டிலும் தேவைதானா....? என்கிற ஒரு பழமைக் கேள்வி புதுமையாய் எழுந்து வரும்!

எந்த நூற்றாண்டானால் என்ன? நெருப்பு சுடத்தானே செய்யும்! குடி, குடியை எப்போதும் கெடுக்கத்தான் செய்யும். மிகப் பெரிய சாதனையாளர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு பகுதியில் குடித்தே அழிந்து போயிருக்கிறார்கள்.

சில கருத்துகளை ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டது என்று ஒதுக்கி விட முடியாது. திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும். புதிய தலைமுறைக்கு இந்தக் கருத்துகள் மிகவும் அவசியம் தான்.

ஒரு தவறை தவறே இல்லையென்று சமாதானப்படுகிற ஒரு தலைமுறை உருவாகி வருகிறபோது இத்தலைமுறையை யார் எப்படிக் காப்பாற்றுவது?

குடி, ஒருவகையில் தனிமனிதப் பிரச்னைதான். அவர்களின் பணம், செல்வம் குடியில் அழிந்து விடுகிறபோது மீறிப்போனால் அக்குடும்பம் பாழ்படும். இது மேலோட்டமானதுதான். குடிக்கிற ஒருவனுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் நோய்க்கூறு ஏற்படும். குறைந்த விலை மருந்து, உழைக்கும் திறன் குறைவதால் நாட்டுக்கு இழப்பு என்று தொடர் சங்கிலிபோல் குடிகாரர்கள் பிரச்னைகள் தொற்று நோயாகி விடுகின்றன.

குடியை ஒழிக்க அல்லது கட்டுப்படுத்த இடைவிடாத பிரசாரமும் கருத்துப் பரிமாற்றமும் இன்றைக்குத் தேவை. இதற்கான வாய்ப்புகள் உருவாக்குகிற எந்தக் கட்சியையும் அமைப்பையும் ஆதரிக்கத்தான் வேண்டும்.

பூரண மதுவிலக்கே நம் நாட்டின் அறிவுச் செல்வத்தை தக்க வைக்கும். உழைக்கும் திறனை மேம்படுத்தும்! தனி நபர் சேமிப்பைப் பெருக்கும்! வாழ்க்கை வளமும் நலப்படும்! பூரண மதுவிலக்குக்கு யார் குரல் கொடுக்கிறார்களோ அவர்களை அமைப்பு ரீதியாக ஆதரித்துச் செயல்படுவது காலத்தின் கட்டாயம்!--நன்றி : - க. அம்சப்ரியா - தினமணி
http://www.satyamargam.com/1356

மேலும் படிக்க...Read more...

செல்போன்? ‍மி‌ன்சாதன‌ங்கள்.? எச்சரிக்கை. இதை படியுங்கள்

>> Wednesday, November 18, 2009

3வது காதாக மொபைல் உள்ளதா? இதைப் படிங்க.

எ‌ந்த நோயு‌ம் வ‌ந்த ‌பிறகு ‌சி‌கி‌ச்சை மே‌ற்கொ‌ள்வதை ‌விட, வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே ‌சிற‌ந்தது எ‌ன்று கூறு‌கிறா‌ர் மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை ‌நிபுண‌ர் சா‌‌ர்‌லி டியோ.

ம‌‌‌னித‌ர்க‌ள் த‌ங்களது செ‌ல்போனை ல‌வ்டு‌ஸ்‌பீ‌க்க‌ரி‌ல் வை‌த்து‌ப் பேசுவது‌ம், மை‌க்ரோவேவ‌னி‌ல் வேலை முடி‌ந்தத‌ற்காக ‌பீ‌ப் ஒ‌லி எழு‌ம்‌பிய ‌பிறகு ‌சி‌றிது நேர‌ம் க‌ழி‌த்து ‌திற‌ப்பது‌ம் ந‌ல்லது எ‌ன்று‌ம் நம‌க்கு அ‌றிவுறு‌த்து‌கிறா‌ர் இ‌ந்த புக‌ழ்பெ‌ற்ற மரு‌த்துவ ‌நிபுண‌ர்.

மூளை அறுவை ‌சி‌கி‌ச்சை‌யி‌ல் கைரா‌சியான, ‌சி‌ட்‌னியை‌ச் சே‌ர்‌ந்த இ‌ந்த ‌நிபுண‌ர், ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து வரு‌ம் க‌தி‌ர்‌வீ‌ச்‌சி‌ல் இரு‌ந்து ந‌ம்மை‌‌க் கா‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் அவ‌சிய‌ம் எ‌ன்று‌ம், அதுபோ‌ன்ற பொரு‌ட்களை ந‌ம்முடனேயே வை‌த்து‌க் கொ‌ண்டு வா‌ழ்‌க்கை‌யி‌ல் இதுபோ‌ன்ற சவாலை யாரு‌ம் ச‌ந்‌தி‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்று‌ம் கூறு‌கிறா‌ர்.

மேலு‌ம், செ‌ல்பே‌சிக‌ளி‌ல் ஒரு நபரை அழை‌க்கு‌ம் போது அவ‌ர் இணை‌ப்‌பி‌ற்கு வரு‌ம் வரை செ‌ல்பே‌சியை உ‌ங்க‌ள் காத‌‌ல் இரு‌ந்து ‌சி‌றிது தூர‌ம் நக‌ர்‌த்‌தி வை‌ப்பது‌ம், பொதுவாக ல‌வ்டு ‌ஸ்‌பீ‌க்க‌‌ரி‌ல் பேசுவது‌ம் உ‌ங்க‌ள் மூளையை‌க் கா‌ப்பா‌ற்‌றி‌க் கொ‌ள்ள உதவு‌ம் எ‌ன்‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.

முத‌லி‌ல் செ‌ல்பே‌சிக‌ளி‌ல் அலார‌ம் வை‌த்து‌வி‌ட்டு, அதனை தலையணை‌க்கு அடி‌யி‌ல் வை‌த்‌திரு‌க்கு‌ம் பழ‌க்க‌த்தை கை‌விடு‌ங்க‌ள் எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

எவ‌ர் ஒருவ‌ர் 10 ஆ‌ண்டுகளு‌க்கு‌ம் மேலாக செ‌ல்பே‌சியை‌ப் பய‌ன்படு‌த்து‌கிறாரோ அவ‌ர்களு‌க்கு மூளை‌யி‌ல் ‌சில பா‌தி‌ப்புக‌ள் ஏ‌ற்படு‌கிறது எ‌ன்று‌ம், செ‌ல்பே‌சிகளை ஆ‌ண்க‌ள் த‌ங்களது பெ‌ல்‌ட் அதாவது இடு‌ப்பு‌ப் பகு‌தி‌யி‌ல் வை‌த்‌தி‌ரு‌ப்பதா‌ல் எலு‌ம்பு தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைக‌ள் ஏ‌ற்படுவதை ஒரு ஆ‌ய்வு க‌ண்டு‌பிடி‌த்து‌ள்ளதையு‌ம் அவ‌ர் மே‌ற்கோ‌ள் கா‌ட்டினா‌ர்.

முடி‌க்கு ‌நிறமூ‌ட்டுபவைக‌ள், செ‌ல்பே‌சிக‌ள் போ‌ன்றவை நேரடியாக மூளையை‌த் தா‌க்‌கி பா‌தி‌ப்பை ஏ‌ற்படு‌த்துவ‌தி‌ல் முத‌ன்மையாக செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்‌கிறா‌ர் இவ‌ர்.

உ‌ங்க‌ள் படு‌க்கை அறை‌யி‌ல் உ‌ள்ள ‌மி‌ன்சாதன‌ங்கள‌் எ‌ல்லா‌ம் தலை‌க்கு அருகே இ‌ல்லாம‌ல், கா‌ல் ப‌க்கமாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பார‌்‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள் எ‌ன்று கூறு‌கிறா‌ர்.

அதாவது படு‌க்கை அறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் ‌மி‌ன்சார அலரா‌ம் பொரு‌த்‌த‌ப்ப‌ட்ட கடிகார‌ம், ரேடியோ, நை‌ட் லே‌ம்‌ப், ஏ‌சி போ‌ன்றவை.

அ‌வ்வாறு இ‌ல்லையெ‌னி‌ல், ‌இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌மி‌ன்சாதன‌ங்க‌ளி‌ன் இணை‌ப்‌பை‌த் து‌ண்டி‌த்துவ‌ி‌ட்டு படு‌க்கை‌க்கு‌ச் செ‌ல்லு‌ங்க‌ள். அதுபோல மை‌க்ரோவே‌வி‌ல் சமைய‌ல் முடி‌ந்தது‌ம் 5 ‌பீ‌ப் ஒ‌லிக‌ள் வ‌ந்தது‌ம் உ‌ங்க‌ள் கைகளை உ‌ள்ளே‌ ‌‌வி‌‌ட்டு உணவு‌ப் பொரு‌ட்களை எடு‌க்கவு‌ம் எ‌ன்‌‌கிறா‌ர் அவ‌ர்.

மூளை‌யி‌ல் உ‌ண்டாகு‌ம் க‌ட்டிகளை அ‌க‌ற்று‌ம் அறுவை ‌சி‌கி‌ச்சைகளை வெ‌ற்‌றிகரமாக செ‌ய்து வரு‌ம் டியோ, தலை‌ முடிக்கு‌ப் ப‌ய‌ன்படு‌த்து‌ம் ‌சில ‌நிறமூ‌ட்டிகளு‌ம் (டை), கு‌றி‌ப்பாக ‌சிவ‌ப்பு ‌நிற மூ‌ட்டிக‌ள், மூளை‌ப் பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்பட வா‌ய்‌ப்ப‌ளி‌க்‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.


ம‌ற்ற பு‌ற்றுநோ‌ய் செ‌ல்களை ‌விட, மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் வேகமாக வள‌ர்‌‌கி‌ன்றன. அதாவது, மா‌ர்பக பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் த‌ங்களது எ‌ண்‌ணி‌க்கையை ஒரு வார‌த்‌தி‌ல் அ‌ல்ல‌து ஒரு மாத‌த்‌தி‌ல் அ‌ப்படியே இர‌ட்டி‌ப்பா‌க்கு‌கி‌ன்றன.

ஆனா‌ல் மூளை பு‌ற்றுநோ‌ய் செ‌ல்க‌ள் இதனை வெறு‌ம் 16 ம‌ணி நேர‌த்‌தில‌் நட‌த்‌தி‌விடு‌கி‌ன்றன. மேலு‌ம், மூளை‌யி‌ல் க‌ட்டி வளர எ‌ந்த வயது வர‌ம்பு‌ம், வயது‌த் தடையு‌ம் இ‌ல்லை.


த‌ற்போது மூளை‌க் க‌ட்டிகளை அக‌ற்ற ப‌ல்வேறு ‌சி‌கி‌ச்சை முறைக‌ள் வ‌ந்து‌வி‌ட்டன. அதாது, மை‌க்ரோவே‌வ் ‌சி‌கி‌ச்சை போ‌ன்றவை நேரடியாக க‌ட்டிக‌‌ள் ‌மீது செலு‌த்த‌ப்ப‌ட்டு அவ‌ற்றை அ‌ழி‌க்கு‌ம் வகை‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.



எதுவாக இரு‌ந்தாலு‌ம் ந‌ல்ல உணவு ம‌ற்று‌ம் பழ‌க்க வழ‌க்க‌ங்களா‌ல் உடலை ஆரோ‌க்‌கியமாக வை‌த்‌திரு‌ப்பதே ‌சிற‌ந்தது. வரு‌ம் மு‌ன் கா‌ப்பதே நல‌ம் எ‌ன்று ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் எடு‌த்து‌க் கூ‌று‌கிறா‌ர் சா‌ர்‌லி டியோ.-S.Gulam thasthageer

மேலும் படிக்க...Read more...

உலகை முத்த‌மிடுவோமா? வெற்றியின் தெளிவு.

>> Tuesday, November 17, 2009

வெற்றியின் எளிய பன்முகங்கள் -- SUBROTO BAGCHI.

வாழ்க்கை பாதையில் கற்ற அனுபவங்கள்.



அவசியம் படித்து சிந்திக்கவும்.


க்ளிக் செய்து படிக்கவும்.

Go Kiss the World

மேலும் படிக்க...Read more...

உங்கள் கழுத்துக்கு Neck Exercise - ǝsıɔɹǝxǝ ʞɔǝu

>> Monday, November 16, 2009

A doctor advises his patients to exercise their neck by just reading this message.

In the end, all patients go home happily without asking the doctor for any medications. 'It is very effective,' said the doctor.

'My patients never come back to me again.'
READ BELOW - CLICK OVER THE PICTURE TO ENLARGE
is it good pass it to your friends - ˙spuǝıɹɟ ɹnoʎ oʇ ʇı ssɐd ˙pooƃ ʇı sı

மேலும் படிக்க...Read more...

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.-ஆ. சிவசுப்பிரமணியன்,

>> Friday, November 13, 2009

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.

இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?

இஸ்லாமியப் படையெடுப்பும் இந்துப் படையெடுப்பும்.
- ஆ. சிவசுப்பிரமணியன்.

நாடாளும் மன்னனுக்குத் தேவையான ஆறு உறுப்புக்களுள் முதலாவதாகப் படையைக் குறிப்பிடுவார் வள்ளுவர். பிற்காலச் சோழர் காலத்தைச் சார்ந்த சீவகசிந்தாமணிக் காப்பியம் படையினால் விளையும் நன்மைகளைப் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

பொன்னின் ஆகும் பொருபடை யப்படை
தன்னில் ஆகுந் தரணி தரணியிற்
பின்னை யாம் பெரும்பொருள் அப்பொருள்
துன்னுங் காலைத் துன்னாதன இல்லையே (செய்யுள்: 1923)

பொன் இருந்தால் போரிடும் படையைத் திரட்டலாம். படை இருந்தால் ஆட்சி கிடைக்கும். ஆட்சி கிடைத்தால் கிடைக்காதன என்று எவையும் இல்லை என்பது இச்செய்யுளின் பொருளாகும். ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்துவதே மன்னர்களின் குறிக்கோள். இதனால்தான் இடைக்குன்றூர்க்கிழார் என்ற கவிஞர்,

"ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை (புறம் 76: 12)

என்று பாடியுள்ளார். இவ்வாறு போர் என்பது மன்னர்களுக்கிடையில் மிக இயல்பாக நடைபெறும் நிகழ்வாக இருந்தது. ஆயினும், மன்னர்கள் அவர்களது படைவீரர்கள் ஆகியோருடன் இது நின்று விடவில்லை. குடிமக்களையும் பாதிக்கும் ஒன்றாகவே போர் அமைந்தது. இதைச் சங்க நூல்கள் சுட்டுகின்றன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியின் வீரச்செயல் நெட்டிமையார் என்ற புலவரால் இவ்வாறு புகழப்படுகிறது,

"பகைவர் நாட்டில் தேர் செல்லும் தெருக்களைக் கழுதை பூட்டிய ஏரால் உழுது பாழ்படுத்தினாய். பறவைகள் ஒலிக்கும் புகழமைந்த வயல்களில் குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்தி விளைபயிர்களை அழித்தாய்". (புறநானூறு 15). இதே மன்னனைக் காரிகிழார் என்ற புலவர் வாழ்த்தும் பொழுது,

"வாடுக இறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்தலானே" (புறம் 6)

என்று வாழ்த்துகிறார். பகைவருடைய நாட்டினைச் சுட்டெரிப்பதால் எழும் புகையால் உன் தலைமலை வாடட்டும் என்பது இதன் பொருளாகும்.

சோழன் கரிகால் பெருவளத்தான் பகலும் இரவும் கருதாது பகைவரது ஊரைத் தீயிட்டு அந்த ஒளியில் பகைவர்களின் புலம்பலோசையுடன் கொள்ளையிடுதலை விரும்புபவன் என்பதனை,

"எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர்
ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின்"

என்ற புறநானூற்றுப் பாடலால் (7) அறிகிறோம். சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி பகைவரது நெல் விளையும் வயல்களைக் கொள்ளையடித்து வீடுகளைக் கொளுத்திய செயல் போற்றப்படுகின்றது.

பகைவர் நாட்டை எரிக்கும் இக்கொடுஞ்செயல் அடிக்கடி நிகழ்ந்தமையால்தான் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, வற்றிய பாலை நிலத்திற்கு "செருமிகு சினவேந்தன் சிவந்திறுத்த புலம்போல" என்ற உவமையைப் பயன்படுத்துகிறார்.

பகைவர் நாட்டைத் தீயிட்டு அழிக்கும் கொடுமை மட்டுமல்லாது போரில் தோற்றவர்களைக் கொடூரமாகப் பழிவாங்கும் செயல்களும் நிகழ்ந்துள்ளன.

நன்னன் என்ற குறுநில மன்னன் தன்னுடைய பகைவர்களை வென்ற பிறகு அவர்களின் உரிமை மகளிரின் தலையை மழித்து அக்கூந்தலைக் கயிறாகத் திரித்து, அக்கயிற்றால் அப்பகைவரின் யானையைப் பிணித்தான் (நற்றிணை 270).

வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் பழையன் என்ற மன்னனை வென்று அவன் மனைவியாரின் கூந்தலைக் கொண்டு திரிக்கப் பெற்ற கயிற்றினால் யானைகளை வண்டியில் பூட்டி அவ்வண்டியில் வெட்டப்பட்ட பழையனது காவல் மரத்தை ஏற்றிச் சென்றான் (பதிற்றுப் பத்து 5ம் பத்து)

கணைக்கால் இரும்பொறை என்ற சேர மன்னன் மூவன் என்பவனைப் போரில் வென்று அவனது பற்களையெல்லாம் பிடுங்கித் தொண்டி நகர் கோட்டைக் கதவில் பதித்தான்.

மத்தி என்ற பரதவர் தலைவன் எழினி என்ற குறுநில மன்னனின் பற்களைப் பிடுங்கி தனது வெண்மணிக் கோட்டைக் கதவில் பதித்து வைத்தான். (அகம் 211).

இத்தகையக் கொடுமைகள் தமிழ் மன்னர்களுக்கிடையில் நிகழ்ந்துள்ளன என்பதனையும் தமிழ் மக்களின் சொத்துக்களே அழிவுக்கு ஆளாயின என்பதனையும் நினைவிருத்திக் கொள்ளுவது அவசியம். எல்லாவற்றிற்கும் மேலாகத் தனி மனிதர்களின் நாடு விரிவாக்கும் கொள்கையால் தமிழ்ச் சமுதாயம் அவலத்திற்காளானது.

இவையெல்லாம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு நடந்த கொடுமைகள் என்றால் பதினொன்றாவது நூற்றாண்டில் படையெடுப்பின்போது நிகழ்ந்த கொடுமைகள் இவற்றை விஞ்சுவதாகவே உள்ளன.

ராஜ ராஜ சோழனின் மெய் கீர்த்திகளில் அவனது வெற்றிச் சிறப்புகளில் ஒன்றாக "இரட்டைபாடியும், ஏழரை இலக்கமும் வென்று" என்ற தொடர் இடம்பெறுகிறது. ராஜ ராஜன் தன் மகன் முதலாம் இராசேந்திரனை அனுப்பி இவ்வெற்றியைப் பெற்றான்.

முதலாம் இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழர் படை சத்யாசிரையன் என்ற மேலைச் சளுக்கர் மன்னனுடன் போரிட்டு வென்று இரட்டைபாடியைக் கைப்பற்றியது இப்போரில் இராசேந்திரன் மேற்கொண்ட பழி செயல்களை சத்தியாசிரையனின் கி.பி. ஆயிரத்தி ஏழாம் ஆண்டு காலத்திய கல்வெட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 23940).

நாட்டை சூறையாடி பாழ்படுத்தினான். நகரங்களைக் கொளுத்தினான். இளங்குழவிகள் அந்தணர் என்றும் பாராமல் அவர்களைக் கொன்றும் கன்னியரைக் கைப்பற்றி மனைவியராக்கினான். அந்தணச் சாதியை அழித்தும் அளவற்ற பொருள்களைக் கவர்ந்து கொண்டும் தன் நாட்டிற்குத் திரும்பினான்.

இவ்வாறு சூறையாடி வந்த செல்வத்தின் ஒரு பகுதியைத் தஞ்சை பெருவுடையார் கோவிலுக்கு வழங்கினான். சத்தியாசிரயனின் கல்வெட்டுச் செய்தி குறித்து தமிழ்நாட்டின் இரு பெரும் வரலாற்றுப் பேராசிரியர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

(இண்) பகைவனின் கல்வெட்டில் காணப்படும் பெரும் நாச வேலைகளையும் கற்பழிப்புகளையும் சோழ இளவரசன் ராஜேந்திரன் செய்திருக்கக் கூடுமா? என்ற வினா எழுந்தாலும் . . . (நீலகண்ட சாஸ்திரி 1989: 240).

(இண்) பகையரசன் நாட்டிய கல்வெட்டாகையால் இது கூறும் செய்திகளை உண்மையென்று நம்பலாகாது. நீதியிலும், நேர்மையிலும் சிவத்தொண்டிலும் மேம்பட்டிருந்த சோழ மன்னனின் படைகள் இத்தகையக் கொடுமைகளை மக்களுக்கு இழைத்திருக்க முடியாது. (கே.கே. பிள்ளை 1981: 272)

இராஜேந்திரன் இத்தகைய செயல்களைச் செய்திருக்கக்கூடுமா? என்று சாஸ்திரியார் ஐயப்பட, கே.கே. பிள்ளையோ அப்படிச் செய்திருக்க முடியாது என்று சான்றிதழ் வழங்கிவிடுகிறார்.

இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேட்டின் மெய்கீர்த்திப் பகுதி " . . . யானைகள், குதிரைகள், ரத்தினங்கள், பெண்கள், குடைத் தொகுதிகள்" ஆகியனவற்றை சத்தியாசிரயனிடமிருந்து ராஜராஜன் பறித்துக் கொண்டதாகக் குறிப்பிடுகிறது (தந்தையாகிய இராஜராஜனால் அனுப்பப்பட்டமையால் இராஜேந்திரனின் வெற்றிச் சிறப்பு இராஜ இராஜனின் வெற்றிச் சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது).

இராஜேந்திரன் பட்டத்திற்கு வந்த பிறகு (1012-1044) நிகழ்த்திய போர்களில் அவன் செயல்பாடு எத்தகையது? என்பதைக் கண்டால் மேற்கூறிய கல்வெட்டுச் செய்திகள் உண்மையா? பொய்யா? என்பது புலனாகும்.



கி.பி. 1017-18இல் இவன் நடத்திய ஈழப் போரில் ஈழ மன்னனை இவன் வெற்றி கண்டு கைப்பற்றிய பொருள் குறித்து இவன் வெளியிட்ட கரந்தைச் செப்பேடு (செய்யுள் 58-59) பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"அவனுடைய நாட்டையும், அவனுடைய முடியையும், அவனுடைய அரச பத்தினியையும், அவளுடைய முடியையும், அவனுடைய மகளையும், மற்றப் பொருட் குவியல்களையும் . . . கைப்பற்றினான். "

சிங்கள நூலான மகாவம்சம் சிங்கள மன்னன் காட்டுக்குள் ஓடிப்போனதாகவும், உடன்பாடு செய்து கொள்ளுவதாகச் சொல்லிய சோழப்படை அவனை உயிரோடு பிடித்துக் கொண்டு, மேற்கொண்ட செயல்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது.

"தாங்கள் பிடித்த அரசனையும் தங்கள் கைக்குள் சிக்கிய கருவூலங்களையும் உடனே சோழ மன்னனுக்கு அனுப்பி வைத்தனர். பாதுகாப்பாக பல இடங்களில் இலங்கை முழுவதும் வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்ன அறைகளை உடைத்து அவற்றிலிருந்த பொன்னாலான உருவங்களை அவர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் கண்பட்ட இடங்களிலெல்லாம் பெளத்த சமயத்து மடங்களை அழித்து இரத்தத்தை உறிஞ்சும் அரக்கர்களைப் போல் இலங்கையின் செல்வங்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்" (சாஸ்திரி, 1989: 272).

வங்காள தேசத்து மன்னன் மகிபாலனை வென்று யானைகள், பெண்கள், செல்லம் எல்லாவற்றையும் கைப்பற்றிக் கொண்டான் (மேலது: 281).

முதல் இராஜேந்திரனின் மூத்த மகனான ராஜாதிராஜன் (1018- 1054) இலங்கையின் மீது படையெடுத்து, வீரசாலமேகன் என்ற சிங்கள மன்னனை வென்றான். சிங்கள மன்னன் ஓடி ஒளிய அவனது தமக்கையையும், மனைவியையும் சிறை பிடித்ததுடன் அவனது தாயின் மூக்கை அறுத்தான் (ளு11 111; 5056).

ராஜாதிராஜன் சாளுக்கியர்களுடன் 1048இல் நிகழ்த்திய போரில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் உள்ள பூண்டூர் என்ற ஊரில் குறுநில மன்னர்களுடன் எண்ணற்ற பெண்களும் சிறைபிடிக்கப்பட்டனர்.

பூண்டூர் நகர் அழித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. கழுதைகள் பூட்டிய ஏரால் உழுது வரகு விதைக்கப்பட்டது. மாளிகை தீக்கிரையாக்கப்பட்டது. சோழர் கல்வெட்டுக்கள் கூறும் இச்செய்திகள் மிகைப்படுத்தப்பட்டன என்று கூறும் சாஸ்திரியார் (1989; 346), இத்தகைய செயல்கள் சோழர் காலக் கல்வெட்டுக்களில் பரவலாக இடம்பெற்றுள்ளன என்பதை மறந்துவிடுகிறார்.

1894ம் ஆண்டுக்கான கல்வெட்டு ஆண்டறிக்கையில் (எண். 172) ஆகவமல்லன் அனுப்பிய தூதுவர்கள் இருவரில் ஒருவனுக்கு ஐங்குடுமி வைத்து ஆகவல்லமன் என்று பெயரிட்டும் மற்றொரு தூதுவனுக்கு பெண்களுக்கு உரிய ஆடையை உடுக்க வைத்து ஆகமவல்லி என்று பெயரிட்டும் ராஜராஜன் அனுப்பியதாக குறிப்பிடுகிறது. (சாஸ்திரி 1989: 347).

சாளுக்கியர்களின் பழமையான நகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி அதை இடித்துத் தரைமட்டமாக்கி அங்கிருந்த ஒரு தூவாரபாலகர் உருவத்தைக் கொண்டு வந்தான். தஞ்சை மாவட்டம் தாராசுரம் கோவில் இடம்பெற்ற அப்படிமத்தின் பீடத்தில் "ஸ்ரீ விஜய ராஜேந்திரத் தேவர் கல்யாணபுரம் எரித்து கொண்டு வந்த துவார பாலர்" என்று குறிக்கப்பட்டுள்ளது.

முதல் குலோத்துங்கச் சோழன் (1070---1120) இரண்டாம் கலிங்கப் போரில் (கி.பி. 1110) வென்று குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் மற்றும் செல்வங்களுடன் மகளிரையும் கைப்பற்றி வந்தான். மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178- 1218) மதுரையின் மீது படையெடுத்து வென்ற பின்னர் அவன் செய்த செயல்களாக அவனது மெய்கீர்த்திகள் பின்வருபவனற்றைக் குறிப்பிடுகின்றன.

1. பெண்கள் அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
2. தோற்றவர்களின் மூக்கு அறுக்கப்பட்டது.
3. பாண்டியனின் கூட மண்டபத்தை (முடி சூட்டும் மண்டபம்) இடித்து கழுதை ஏரைப் பூட்டி உழுதனர்.


திருவாரூர்த் தலைவனாக இருந்த கங்கை கொண்டான் உத்தம சோழராயனின் படையதிகாரியான கூத்தன் கணபதி என்பவனை "பகைவர்களின் மனைவியர்க்குக் கணவன்" என்று ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது (ARE 1913 ப. 97).

கி.பி. 1219இல் சோழ நாட்டின் மீது படையெடுத்த முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216 -1238) தனது வீரச்செயல்களை, செய்யுள் வடிவிலான மெய்கீர்த்தியாக கல்வெட்டில் பொறித்துள்ளான் (I.P.S; 290, 323) புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அக்கல்வெட்டின் உரைநடை வடிவம் வருமாறு:

கொடுங் கோபமுடைய குதிரைகளையும், யானைகளையும் செலுத்திச் சென்று சோழர்களின் தஞ்சை நகரையும் செந்தழலிட்டுக் கொளுத்தினான்.

அழகிய குவளை மலர்களும், நீல மலர்களும் தம் அழகை இழக்கும்படி குளங்களையும் ஆறுகளையும் கலக்கினான்.

கூடம், மதில், கோபுரம், ஆடல் நிகழும் அரங்கங்கள், மாட மாளிகைகள், கருவூலங்கள் ஆகியனவற்றை இடித்துத் தள்ளினான்.

தன்னை வந்து அடிபணியாத பகை மன்னர்களின் மனைவியர்கள் அழுத கண்ணீர் ஆறாக ஓடும்படிச் செய்தான்.


பகைவரது நிலத்தை, கழுதை பூட்டிய ஏர் கொண்டு உழுது வெள்வரகை விதைத்தான். சோழர் தலைநகராக விளங்கிய முடிகொண்ட சோழபுரம் சென்று "விஜயாபிஷேகம்" எனனும் சடங்கை இவன் செய்தான். அதன் பொருட்டு சோழ அரசியும், அந்தப்புரத்துப் பெண்களும் தண்ணீர்க்குடம் முதலிய மங்கலப் பொருள்களை சுமந்து வரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் (சாஸ்திரி, மேலது, 579).

பல்லவ மரபைச் சேர்ந்த கோப்பொருஞ்சிங்கன் என்பவன் வைதீக சமயத்தைச் சேர்ந்தவன். சிறந்த சிவ பக்தன். சிதம்பரம் நடராசர் மீது பெரும்பற்று உடையவன் என்று இவனது வரலாற்றை எழுதிய எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் (1965: 117) குறிப்பிடுகிறார்.

சைவர்களின் முக்கிய புண்ணியத் தலங்களுள் ஒன்றான சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலில் தெற்குக் கோபுரம் கட்ட தானம் செய்துள்ளான். இதனால் இவனது பட்டப் பெயர் ஒன்றின் பெயரால் "சொக்கசீயன் திருநிலை எழுகோபுரம்" என்று இக்கோபுரம் அழைக்கப்பட்டது. சிதம்பரத்தின் கீழைக் கோபுரத்தை எழுநிலைக் கோபுரமாக உயர்த்திக் கட்டினான். தன் பகை மன்னர்களின் தங்கக் கிரீடங்களை உருக்கி இக்கோபுரத்தின் தங்கக் கலயங்களைச் செய்தான். திருவண்ணாமலை, காஞ்சி ஏகாம்பரநாதன் கோவில், திருவீரட்டாணம், ஜெம்புகேஸ்வரம், மதுரை, காளகஸ்தி ஆகிய சிவத்தலங்களில் திருப்பணிகளும் தானங்களும் செய்தான்.

"திருப்பதிகளெல்லாம் கும்பிட்டருளி தேவதானங்களும் திருவிடையாட்டங்களும் இறையிவி விட்டருளி திருப்பணியெல்லாம் செய்தருளி" என்று ஆக்கூர் சாசனம் (SI XII; 129) இவனது பக்தி உள்ளத்தைச் சுட்டிக் காட்டும்.

இத்தகைய சிவபக்தனான கோப்பெருஞ்சிங்கனுக்குரிய பட்டயங்களுள் "பரராஜ அந்தப்புர பந்திகாரன்" என்பதும் ஒன்று என இவனது ஆற்றூர் சாசனம் கூறும் (SII XII; 120). பிற மன்னர்களின் அந்தப்புரத்தை சிறைபிடிப்பவன் என்பதே இப்பட்டத்தின் பொருளாகும்.

தன் பகை நாடான சோழ நாட்டின் மீது படையெடுத்த இக்கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் ராஜராஜனை சிறை பிடித்தான். கோப்பெருஞ்சிங்கனுடன் போரிட்ட போசல நாட்டு மன்னன் மூன்றாம் ராஜராஜனை சிறை மீட்டான்.

இவ்விரு நிகழ்வுகளையும் 'திருவய்ந்திரபுரக் கல்வெட்டு' குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் கோப்பொருஞ்சிங்கன் சோழநாட்டுக் கோவில்களை இடித்தசெயலும் அவனுடன் போரிட்டு வென்ற போசல நாட்டு மன்னன் செய்த கொடுஞ் செயல்களும் இடம் பெற்றுள்ளன. அக்கல்வெட்டு வருமாறு: (கல்வெட்டு வரிகளில் அழுத்தம் எமது)

ஸ்வதி ஸ்ரீ திரிபுவன சக்கரவர்த்திகள் ஸ்ரீ ராஜராஜதேவர்க்கு
யாண்டு 15 ஆவதின் எதிராம் ஆண்டு பிரதாப சக்கரவர்த்தி
ஹோய்ஸண ஸ்ரீ வீரநரசிம்மதேவன் சோழசக்கரவர்த்தியைக்
கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் பிடித்துக்

கொடு இருந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்துத் தேவாலயங்களும்
விஷ்ணு ஸ்தானங்களும் அழிகையிலே இப்படித்தேவன் கேட்டருளி,

சோழமண்ல பிரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலை நிறுத்தி அல்லது எக்காளம் ஊதுவதில்லை என்று தோர
சமுத்திரத்தினின்றும் எழுந்துவந்து, மகாராஜ்ய நிர்மூலமாடி
இவனையும் இவன் பெண்டு பண்டாரமும் கைக்கொண்டு

பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ்சிங்கன் தேசமும் அழித்துச்
சோழச் சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக்கொடு என்று
தேவன் திருவுளமாய் ஏவ,

விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமான் மகாபிரதானி பிரம விசுவாசி தண்டினகோபன் ஜகதொப்பகண்டன் அப்பண தன்னக்கனும்,

சமுத்திரகோபய்ய தன்னக்கனும் கோப்பெருஞ்சிங்கன்
இருந்த எள்ளேரியும், கள்ளியூர் மூலையும், சோழகோன்
இருந்த தொழுதகையூரும் அஷ்த்து வேந்தன் முதலிகளில்
வீரகங்க நாடாள்வான், சீனத்தரையன் ஈழத்து ராஜா பராக்கிரமபாகு உள்ளிட்ட முதலி 4 பேரையும் கொன்று இவர்கள் குதிரையும் கைக்கொண்டு, கொல்லி சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,

பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எதுத்துவந்த தொண்டைமா
நல்லூர் உள்ளிட்ட தமக்கூர்களும் அழித்து . . . .
வெட்டிவித்து திருப்பாதிரிப்பூலியூரிலே வீற்றிருந்து,
திருவதிகை திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு,

சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழியூர்களும், குடிக்கால்
களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளைப் பிடித்தும் கொள்ளை கொண்டும்

சேந்தமங்கலத்தே எடுத்து விடப்போகிற அளவிலே கோப்பெருஞ்சிங்கன் குழைந்து சோழ சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக
தேவனுக்கு விண்ணப்பம் செய்ய, இவர் விட்டு, நமக்கும்
ஆள்வரக் காட்டுகையிலே, சோழ சக்கரவர்த்தியை
எழுந்தருளுவித்து கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது உ"

சோழ மன்னர்கள் பாண்டிய நாட்டின் மீதும் இலங்கையின் மீதும் படையெடுத்தபோது பகை மன்னர்களின் மகன், மனைவி, தாய் ஆகியோரின் மூக்கை அறுத்ததை ஏற்கனவே கண்டோம். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் (1623-1659) காலத்தில் பகை நாட்டுக் குடிமக்களின் மூக்கை அறுக்கும் பழக்கமாக இது வளர்ச்சியுற்றது.

கந்திருவ நரசராஜன் (1638-1659) என்ற மைசூர் மன்னன் திருமலை நாயக்கருடன் போரிட, தன் படையை அனுப்பினான். அப்படை மதுரை நோக்கி வரும்போது வழியிலுள்ள ஊர்களை எல்லாம் கொள்ளையிட்டும், நெருப்பிட்டும் அழித்தது.

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்ற வேறுபாடு இன்றி எதிர்பட்டோர் மூக்குகளையெல்லாம் அறுத்தது. அறுபட்ட மூக்குகள் சாக்கு மூட்டைகளில் மைசூருக்குச் சென்றன.

நாட்டுத் துரோகிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே மூக்கறுத்தல் இருந்தது. மைசூர் மன்னன் எதிரி நாட்டு மக்களுக்கு வழங்கும் தண்டனையாக இதை மாற்றினான். மூக்கறுப்பதற்கென்றே ஓர் இரும்புக் கம்பியை மைசூர்ப்படை வீரர்கள் வைத்திருந்தனர். இக்கருவியின் துணையால் மூக்கையும் மேலுதட்டையும் அறுத்துவிடுவார்கள். அறுத்த மூக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. மீசை உள்ள மேலுதட்டுக்குப் பரிசு அதிகம் (சத்தியநாதய்யர் 1956; 50-52).

இதற்குப் பழிவாங்கும் முறையில் தன் தம்பி குமாரமுத்துவின் தலைமையில் ஒரு படையை திருமலை நாயக்கர் மைசூருக்கு அனுப்பினார். மைசூர்ப் படைவீரர்கள் தமிழ்நாட்டில் நிகழ்த்திய மூக்கறுத்தலை மைசூரில் நாயக்கர் படை மேற்கொண்டது. இறுதியில் மைசூர் மன்னனைக் கைது செய்து அவன் மூக்கையும் அறுத்தனர். (மேலது)

ஃரையர் என்ற ஆங்கில அறுவை மருத்துவர் 1673க்கும் 1681க்கும் இடைப்பட்ட காலத்தில் மைசூர்ப் பகுதியில் சுற்றுப்பயணம் செய்துள்ளார். மூக்கறுக்கும் செயல் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மன்னர் தன் படைவீரர்களுக்கு, பகைவர்களின் மூக்கை அறுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார். ஒரு கோணிப்பை அளவிலான மூக்குகள் மன்னரின் காலை உணவுக்கு வழங்கப்பட்டன. உயிர்களைக் கொல்வது அவரது சமய நம்பிக்கைக்கு மாறானது என்பதால் அவர் இவ்வாறு செய்கிறாராம் (மேலது).

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மடம் கருநாடகத்தில் உள்ளது. பரசுராமபாகு என்ற மராட்டிய இந்துத் தளபதி கருநாடகத்தின் மீது படையெடுத்தபோது இந்து மடம் என்று சிருங்கேரி மடத்தைக் கொள்ளையடிக்காமல் விட்டுவிடவில்லை.

60 லட்சம் பெருமானம் உள்ள அணிகலன்கள் யானை, குதிரை, பல்லக்கு ஆகியவற்றை அங்கிருந்து கொள்ளையடித்தான். சிருங்கேரி மடாதிபதிகள் வணங்கி வந்த சாரதா தேவியின் விக்ரகத்தைப் புரட்டிப் போட்டான்.

பல பிராமணக் குருக்களைக் கொன்றான். உயிருக்குப் பயந்து போய் சங்கராச்சாரியார் காஞ்சிலா என்ற இடத்திற்கு ஓடி ஒளிந்தார்.

அங்கிருந்தபடியே மைசூரில் இருந்த திப்பு சுல்தானுக்கு உதவி வேண்டி கடிதம் எழுதினார். திப்புவும் சாரதா பீடத்தை மீண்டும் நிறுவ பணமும் தானியங்களும் தந்துதவினான். சாரதா பீடத்தைக் காக்க படைகளையும் அனுப்பினான். இச்செய்திகளை சிருங்கேரி சாரதா மடத்திலுள்ள ஆவணங்களால் அறிகிறோம் (சிவண்ணா, 1999 : 4142).


தஞ்சையை ஆண்ட மராத்திய இந்து மன்னன் ஹாஜி (16851712) ராணி மங்கம்மாளின் ஆளுகையில் இருந்த திருச்சி பகுதிக்கு தன் படைகளை அனுப்பிக் கொள்ளையடித்தான்.

ஆர்.எஸ்.எஸ். நிறுவனரான ஹெட்கேவார் காலமான பிறகு அவரையடுத்து அதன் தலைவராக விளங்கியவர் கோல்வல்கர். ஆர்.எஸ்.எஸ்.க்காரர்களால் ஸ்ரீகுருஜி என்றழைக்கப்படும் அவர் இந்தியாவின் மீது படையெடுத்த முஸ்லீம் படையெடுப்பாளர்கள் குறித்து:

அந்தப் படையெடுப்பாளர்கள் நமது நாட்டுப் பெண்கள் பலரைக் கற்பழித்தனர். நமது கோவில்களையும், யாத்திரைத் தலங்களையும் தகர்த்துத் தரைமட்டமாக்கியவர்கள். சுகபோகங்களைத் தருவதாக ஆசை காட்டியோ அல்லது வாள்முனையில் மிரட்டியோ பெரும் எண்ணிக்கையினரைத் தமது மதத்திற்கு மாற்றினார்கள். என்று எழுதியுள்ளார் (கோல்வல்கர், 1992 : 8) .


ஸ்ரீ குருஜி' குறிப்பிடும் கொடுமைகள் இந்திய நாட்டு வரலாற்றில் புதிய செய்திகளல்ல என்பதை இதுவரை நாம் பார்த்த வரலாற்றுச் சான்றுகள் உணர்த்துகின்றன.

இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் செய்த கொடுஞ்செயல்களை சைவ, வைணவ, பெளத்த, சமணத்தைப் பின்பற்றிய இந்திய மன்னர்களும் நிகழ்த்தியுள்ளனர்.


இதனடிப்படையில் சைவமும், வைணவமும் கொள்ளையடித்தல், கோவிலிடித்தல், பெண்களைக் கவர்தல் ஆகிய சமூக விரோதச் செயல்களை வலியுறுத்துகின்றன என்று பொதுப்படையாக கூறிவிட முடியுமா?

படையெடுப்பு என்ற பெயரில் கொடூரமான, அநாகரிகமான செயல்களை மேற்கொள்வோர் மதங்கடந்து நிற்பவர்கள் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு வேண்டுவன எல்லாம் தங்கமும், வெள்ளியும், வெண்கலமும்தான்.


முதலாம் இராஜேந்திரன் தனது வடஇந்தியப் படையெடுப்பின் போது வடஇந்தியாவிலுள்ள மதுரா, என்ற நகரைக் கைப்பற்றினான். இந்நகர்தான் கஜினி முகம்மதுவின் தாக்குதல்களுக்கு அடிக்கடி ஆளான நகரமாகும். இது குறித்து கே.கே. பிள்ளை (1981; 278, 279) பின்வருமாறு அவதானிப்பார்.

அந்நகர் அக்காலத்தில் செல்வமும் புகழும் பொதிந்து காணப்பட்டதால் அந்நகரின் மேல் கஜினி முகம்மது பன்முறை தாக்குதல் தொடுத்தான். பன்முறை அதைக் கொள்ளையிட்டான். இவ்வட மதுரையை இராசேந்திரனும் வென்று கைப்பற்றினான். இவ்விரு மன்னரின் போர்களுக்கிடையே ஒரு தொடர்பு காண விழைவதில் வழுவேதுமில்லை.
தனது இலங்கைப் படையெடுப்பின்போது இலங்கைக்கு ராஜேந்திரன் நெருப்பூட்டியதை அவனது திருவாலங்காட்சுச் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. மேலும் ஈழ நாட்டு கிராமங்களை தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குத் தானமாக ராசேந்திரன் வழங்கினான்.

பொலனறுவை என்ற ஊரை, ஜனநாதமங்கலம் என்று பெயர் மாற்றியதுடன் அங்கு சிவன் கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். ஆதிக்கத்தை நிலைநாட்டவும் பொருளைக் கவரவும் மன்னர்கள் நிகழ்த்தும் போர்களில் அறநெறிகள் பார்க்கப்படுவதில்லை என்பதே வரலாற்று உண்மை.

இவ்வுண்மைக்கு கோரி முகம்மது, கஜினி முகம்மது, மாலிக்கபூர் போன்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மட்டுமின்றி இராஜராஜன், இராஜேந்திரன் என இந்து மன்னர்களும் எடுத்துக்காட்டாக அமைகின்றனர்.

இதனால்தான் ஜார்ஜ் ஸ்பன்சர் என்பவர் சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பு குறித்து, தாம் எழுதிய கட்டுரைக்கு ‘The Politics of Plunder�, �The Cholas in the 11th Century Ceylon� (அரசியல் கொள்ளை பதினோறாவது நூற்றாண்டு இலங்கையில் சோழர்கள் என்று தலைப்பிட்டுள்ளார்.

சோழ மன்னர்களின் இலங்கைப் படையெடுப்பை வீரச்செயல் என்று தமிழர்கள் கருதினால் சோழ மன்னர்கள் நிகழ்த்திய கொள்ளையென்று சிங்களவர் அதைக் கருதுகின்றனர். உணர்ச்சி வயப்படாமல் சிந்தித்தால் அவ்வாறு அவர்கள் கருதுவதில் நியாயம் உள்ளது என்பது புலனாகும்.

அதே நேரத்தில் இலங்கையில் வாழும் இன்றைய பெளத்தர்கள் சோழர்களின் படையெடுப்பை தமிழ்நாட்டுச் சைவர்களின் படையெடுப்பு என்று சமய வண்ணம் பூசி இன்றைய இலங்கைத் தமிழ்ச் சைவர்களை வெறுப்புடன் நோக்கினால் அது எந்த அளவு தவறானதோ,


அந்த அளவு தவறானது கஜினி முகம்மது, கோரி முகம்மது ஆகியோரின் படையெடுப்பை இஸ்லாமியப் படையெடுப்பு என்று கருதுவதும்,


அப்படையெடுப்பாளர்களின் வாரிசாக இன்றைய இஸ்லாமியர்களை நோக்குவதும், படையெடுப்பு என்ற பெயரால் கொள்ளையடிக்கும் மன்னர்கள் எதாவது ஒரு மதத்தைச் சார்ந்துதான் இருப்பார்கள்.

இது இயற்கையானது. இதற்கு இஸ்லாமிய சமயம் சார்ந்த படையெடுப்பாளர்களும் விதிவிலக்கல்ல.

(மதுரை பாரதி புக் ஹவுஸ், 'இஸ்லாமியர் குறித்த வரலாற்றுத் திரிபுகள்' என்ற தலைப்பில் இக்கட்டுரையாசிரியரின் நூலிலிருந்து ஒரு பகுதியை இங்கு கட்டுரையாக இடம்பெற்றுள்ளது.)

http://thatstamil.oneindia.in/art-culture/visai/mar05/siva.html

மேலும் படிக்க...Read more...

மரபணு கத்தரிக்காய் உண்ணாதீர்கள் – எச்சரிக்கை.

>> Thursday, November 12, 2009

பி.டி.கத்தரிக்காய்: எதிர்ப்புகள் வலுப்பது ஏன்?

கத்தரிக்காய் முற்றினால் கடைக்குத் தான் வந்தாகனும்' என்ற பழமொழி தமிழ்நாட்டில் பிரபலம். இப்போது பி.டி. கத்தரிக்காய் எனப்படும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் விவகாரம் சந்தைக்கு வருவதற்கு முன்பே சந்தி சிரிக்கிறது.

இந்த சர்ச்சைகளுக்கு வித்திட்டிருப்பது மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகம். அதன் கீழ் வரும் 'மரபணு பொறியியல் அங்கீகார குழுமம் இதற்கும் அமைச்சர் 'முல்லை பெரியாறு'' புகழ் ஜெய்ராம் ரமேஷ்தான்!

மான்சான்ட்டோ

இதில் என்ன பிரச்சனை? நவீன விவசாயத்தை ஏற்கவேண்டியது தானே? விஞ்ஞான வளர்ச்சி மூலம் அதிக லாபம் பெறலாமே? என பலரும் கேட்கிறார்கள். இதில் தொலை நோக்கு அபாயம் இருக்கிறது. நமது சந்ததிகளின் நலன் குறித்த எச்சரிக்கை இருக்கிறது.

அமெரிக்காவின் மான்சான்டோ நிறுவனத்தின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் மற்றும் விவசாய பொருள்களின் விதைகளை நமது வயல்களில் தெளித்தால் அது செழித்து வளரும், காய்த்து கொட்டும்.

ஆனால் அதன்மூலம் வரும் விதைகளைப் பயன்படுத்த முடியாது.விதைகளின் விற்பனை உரிமை மான்சான்டோ என்ற அமெரிக்கா நிறுவனத்தின் கீழ் இருக்கும். (பார்க்க:பெட்டிச் செய்தி)

பழைய அனுபவம்

இதன் அபாயங்கள் இந்தியாவுக்கு புதிதல்ல. இவர்களின் மரபணு மாற்று பருத்தி விதைகள் பெரும் விளம்பரங்களோடு 1990களில் இந்தியாவுக்கு அறிமுகமானது.

அது உணவுப்பொருள் அல்ல என்பதால் பெரிதாக யாரும் எதிர்க்கவில்லை. எழுந்த எதிர்ப்புகளும் வலுவாக உருவாகவில்லை.

அந்த பருத்தி விவசாயம் ஆரம்பத்தில் லாபம் தருவதுபோல் தெரிந்தது. பின்னர் தன் வேலையை காட்டியது, அந்த பருத்திகளை தின்ற மாடுகள் தொண்டை புற்று நோய் வந்து மண்டன. ஆடுகள் கொத்து, கொத்தாக மண்ணில் வீழ்ந்தன.

அந்த பருத்தியை பயிரிட்ட மண் பாதிப்புக்குள்ளானது. மறு விவசாயம் செய்ய முடியவில்லை. விவசாயம் கேள்விக்குறியானது. விவசாயிகள் கடனாளியாயினர். அதனால் ஆந்திராவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலையால் மரணம் அடைய, அது ஆந்திராவில் புயலை கிளப்பியது.

அந்த மான்சான்டோ நிறுவனம் இப்போது மஹிகோ என்ற தனது துணை நிறுவனம் மூலம் கத்தரிக்காயை மரபணு மாற்றம் செய்து நுழைய பார்க்கிறது. இந்திய வேளாண் விஞ்ஞானிகளையும். ஆட்சியி¬ருக்கும் புள்ளிகளையும் சரி கட்டி இந்திய விவசாயத்தை விழுங்க பார்க்கிறது.

இது பருத்தி போல் அல்லாமல் உணவுப் பொருள் என்பதால் எதிர்ப்பு வலுவாகி அது மக்கள் மயப்படுத்தப்பட்டதால் மத்திய, மாநில அரசுகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளன.

ஏன் இந்த மரபணு மாற்றம்?

சமீபகாலமாக புதிய வகை பூச்சிகள் கத்தரிக்கயை தாக்குவதால், கத்தரிக்காய் விவசாயிகள் சமீபகாலமாக பாதிப்புக்குள்ளாகினர். இதை எதிர்கொள்ள அதிக வீரியம் கொண்ட பூச்சி மருந்துகளை தெளித்தனர். அதில் விளைந்த கத்தரிக்காய்களை உண்பதால் மனிதர்களுக்கு சுகாதார கேடுகள் வருவதாக புகார்கள் எழுந்தன, இதற்கான மாற்று முயற்சியாக மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை அறிமுகப்படுத்துவது என யோசிக்கப்பட்டிருக்கிறது.

இந்த பி.டி. கத்திரிக்காயில் பூச்சிகளின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் அதன் மரபணுவில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்கி அதன் மரபணுவை மாற்றம் செய்து, விவசாயிகளை நஷ்டத்திலிருந்து காப்பாற்ற எடுத்த விஞ்ஞான முயற்சி!

அதாவது பல்வலி என டாக்டரிடம் வந்தவருக்கு, கேன்சர் நோய் வருவதற்கான மருந்துகளை எழுதிக் கொடுப்பது போல! விஷத்தை விஷத்தால் முறியடிப்பது என விளக்கம் வேறு!

இப்படித்தான் இ.ப.பருத்திக்கும் விளக்கம் சொன்னார்கள், பருத்தியும் அழிந்து விவசாயிகளும் வீழ்ந்த அனுபவத்தை அறிந்திருந்த இந்திய விவசாய அமைப்புகள், வேளாண் நிபுணர்கள், தொண்டு அமைப்புகள் பி.டி. கத்தரிக்காயை ஏற்கமாட்டோம் என கொந்தளித்துவிட்டனர். நாடு முழுவதும் பொதுமக்களின் கருத்தை கேட்ட பின்னரே பி.டி. கத்தரிக்காயை வணிக நோக்கில் பயிரிட அனுமதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவித்து பின்வாங்கியிருக்கிறார்.

உடல் நலத்திற்கு ஆபத்து

இந்த மரபணு மாற்ற கத்தரிக்காய் குறித்து பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி எரிக் செரா¬னி என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதை சாப்பிட்ட எலிகள் தண்ணீர் தாகத்தோடு தவித்ததாகவும், அதன் ஈரலின் எடை குறைந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

செடியில் இந்த கத்தரிக்காய் இருக்கும்போது அதோடு ஒட்டி வாழும் இதர உயிரினங்களுக்கும் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்திருக்கிறார்.

அப்படியெனில், மனிதர்களுக்கு என்ன ஆபத்துகளை தரும் என்பதை விளக்க தேவையில்லை. உடல்அரிப்பு, தோல் வெடிப்பு, உடல் உறுப்புகள் வீக்கம் என மனிதர்களை இ.ப, கத்தரிக்காய் பலவகையிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. பிரபல இந்திய இயற்கை விவசாய ஆர்வலர் தேவந்திர சர்மா இதற்கு எதிரான எழுத்து யுத்தத்தையே நடத்தி வருகிறார்.

சர்வதேச எதிர்ப்புகள்

சமீபத்தில் ரோமில் கூடிய ஐ.நா. உணவு மாநாட்டில் மரபணு மாற்று இ.ப. விதைகள் பற்றி உரையாற்றியவர்கள் இது ஆபத்தானது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர்.

இங்லாந்து, பிரான்ஸ், இத்தாலி போன்ற பல ஐரோப்பிய நாடுகள் விதைகளை எதிர்த்துள்ளன.

2006 ல் அக்ரா என்ற அமைப்பு ஆப்பிரிக்காவில் உருவாக்கப்பட்டது. இதன் தலைவர் முன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளரான கோபி அன்னான்!

ஆப்பிரிக்காவின் முக்கிய உணவுப் பொருள்களுக்கான விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்படுவதை அனுமதிக்கமாட்டோம். பாரம்பரிய விவசாய முறையை பின்பற்றுவோம். விவசாயத்தை வணிகமாக்க அனுமதிக்க மாட்டோம் என்று அக்ரா அமைப்பு பிரகடனப்படுத்திவிட்டது.

தேவை தடை

.விவசாயத்துறை என்பது மாநில அதிகாரத்தின் கீழ் இடம் பெறுகிறது தமிழக அரசு நமது மண்வளம், விவசாய முறைகள், அடுத்த தலைமுறைகளின் நலன், நிகழ்கால தலைமுறைகளின் ஆரோக்கியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மரபணு மாற்ற விதைகளை தடை செய்வதாக அறிவித்து மத்திய அரசுக்கே முன் மாதிரியாக திகழ வேண்டும்,

மான்சான்டோவின் உலக முதலாளித்துவ சதிக்கு பலியாகாமல் வேளாண் விஞ்ஞானிகள் இதற்கு எதிராக அணி வகுக்க வேண்டும்.

இன்று கத்தரிக்காய் என்பார்கள், பிறகு தக்காளி, உருளை, தேங்காய், மா, பலா, வாழை, என நுழைந்து இறுதியாக நெல். கோதுமை என அனைத்திலும், ஏதாவது ஒரு காரணத்தை கூறி மரபணு மாற்ற முயற்சிகளை நம்மீது திணிப்பார்கள், பிறகு அனைத்து உணவு பொருள்களுக்கும் அவர்களிடமே கையேந்த வேண்டிய அவலம் வரும். இதன் மூலம் நமது நாட்டில் அனைத்து சமூக, அரசியல் சிக்கல்களும் உருவாகும்.

இப்போது நாட்டில் உணவுபஞ்சம் இல்லை! விலைவாசி உயர்வு தான் இருக்கிறது! மரபணு மாற்று விதைகளை பயிரிட வேண்டிய எந்த நெருக்கடியும் இல்லை. விவசாயிகளும் கேட்கவில்லை.

உண்மையான இந்தியா, கிராமங்களில் இருப்பதாக காந்தி கூறினார், கிராமங்கள் விவசாயத்தை சார்ந்தே இருக்கின்றன. காந்தியின் இந்தியா என்பது இந்தியாவை விவசாய நாடு என்ற தூர நோக்கில் விளக்குகிறது. நமது சமூகமும். நாடும் வாழவேண்டுமெனில் விவசாயமும் , விவசாயிகளும் பாதுகாக்கப்பட வேண்டும், அப்படியெனில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை நிரந்தரமாக தடைசெய்து மத்திய அரசு சட்டம் ஏற்ற வேண்டும்.

பெட்டிச் செய்தி - அது என்ன மான்சான்டோ?

அமெரிக்காவின் புகழ்பெற்ற (?) மான்சான்ட்டோ என்ற விவசாய நிறுவனம்தான் மரபணு மாற்று கத்தரிக் காய் விதையின் தந்தை. உலக விவசாயத்தை தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வருவதுதான் இக்கம்பெனியின் லட்சியம்.

அதிக மகசூல், குறைந்த செலவு, நிறைந்த லாபம், குறுகிய கால உழைப்பு என்பதெல்லாம் இக்கம்பெனியின் விளம்பர வாசகங்கள். ஆசிய, ஆப்பிரிக்க, தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளத்தையும், விவசாயத்தையும் அழித்து அந்நாடுகளை அமெரிக்காவிடம் அடிமை படவைப்பதும்,உலகத்தையே உணவுக்காக தன்னிடம் கையேந்த வைப்பதும் மான்சான்ட்டோ நிறுவனத்தின் திட்டமாகும். இச்சதித்திட்டங்களுக்கு பல நாடுகளும், கோடிக்கணக்கான விவசாயிகளும் பலியாகும் அபாயம் உருவாகியிருக்கிறது.இந்த விதைகளினால் அப்படி என்ன இழப்பு?

நம்ம ஊர் தக்காளியை பயிரிட்டு, அது செடியாகி, அதன்வழி காய்க்கும் கனிகளி¬ருந்து நாம் மீண்டும் விதைகளை பிரித்து, செலவில்லாமல் நடும் இயற்கை விவசாய முறை இதில் எடுபடாது,

மான்சான்ட்டோவின் விதைகளை ஒரு முறை பயிரிட்டால் அதன் விதை பயனை தொடர்ச்சியாக அனுபவிக்க முடியாது, ,மீண்டும் பயிரிட மான்சான்ட்டோ கம்பெனியிட மிருந்துதான் அவர்கள் விற்கும் விலைக்கே விதைகளை வாங்க வேண்டியது வரும்.,
அவர்களது விதை விழுந்த நிலத்தில் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய முடியாது, மண் மலடாகிவிடும், அந்த அளவுக்கு அவர்களது விதையின் வீரியமும், மரபணு மாற்று தந்திரமும் அடங்கியுள்ளது,

மான்சான்ட்டோ கம்பெனியின் வழிகாட்டல் படி; அவர்களது விலை நிர்ணயத்தின் படிதான் விவசாயிகள் செயல் பட முடியும் ஆரம்பத்தில் பரபரப்பாக தொடங்கும் இந்த விவசாய முறையில், வளரும் மற்றும் ஏழை நாடுகளை சேர்ந்த விவசாயிகளால் அடுத்தடுத்து தாக்குப்பிடிக்க முடியாத நிலை உருவாகிவிடும், தங்கள் கட்டுப்பாட்டில் விவசாயத்தை நடத்தியவர்கள். மான்சான்ட்டோ கட்டுப் பாட்டுக்கு தானாகவே வந்துவிடுவார்கள், மிகுந்த நச்சு சிந்தனைகளுடன், தொலைநோக்கோடு உருவாக்கப்படும். இந்த சதிகளுக்கு வேளாண் விஞ்ஞாணிகள், அரசியல்வாதி கள், பத்திரிக்கையாளர்கள், ஆட்சியாளர்கள் எளிதாக துணை போகின்றனர், காரணம் லஞ்சம்!
இதற்காகவே தனி ஒரு வர்த்தக பிரிவை மான் சான்ட்டோ நிறுவனம் இயக்கி வருகிறது, தன்னை எதிர்ப்பவர்களையும், விமர்சிப்பவர்களையும் பணத்தால் வளைப்பதுதான் இப்பிரிவின் வேலை, இதை இந்தியாவிலும் வெற்றிகரமாக செய்ய தொடங்கியிருப்பது தான் அபாயத்தின் அறிகுறி.

-அபூ அயிஷா . TMMK INFO

மேலும் படிக்க...Read more...

மிஸ்டு காலா? பெண்களே எச்சரிக்கை! அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும்

>> Wednesday, November 11, 2009

உங்கள் செல்போனுக்கு ஒரே நொடியில் “ரிங்” வந்து “கட்” ஆகிறதா.

அது உங்கள் வாழ்க்கையை சீரழித்து விடும் ஒரு நொடி எமன் ரிங் ஆக இருக்கலாம். இந்த மிஸ்டுகால் செக்ஸ் கொக்கு கால் என்று கூறுகிறார்கள்.

ஆர்வத்தில் மிஸ்டு கால் எண்ணை நீங்கள் தொடர்பு கொண்டால் முதல் நாளில் எதிர்முனை மவுனமாகி இருக்கும்.

2-வது நாளில் அதே... நேரத்திற்கு மீண்டும் அந்த ஒரு நொடி ரிங் வரும். மீண்டும் ஆர்வத்தில் நீங்கள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் மீண்டும் எதிர்முனை மவுனமாக இருக்கும்.

3-வது நாளும் நீங்கள் அந்த மிஸ்டு கால் எண்ணை தொடர்பு கொண்டால் வலையில் மீன் விழுந்து விட்டது என அந்த செக்ஸ் கொக்கு துள்ளி குதித்து விடும். ஆற்றில் மீனுக்காக கொக்கு தண்ணீருக்குள் தலையை ஆழ்த்தி வைத்து காத்திருந்து மீன் வந்ததும் லபக்கென்று பிடிக்கும் என்பதால் இந்த ஆசாமிகளை செக்ஸ் கொக்குகள் என்று அழைக்கிறார்கள்.

பெயரை மாற்றி ஊரை மாற்றி தொழிலை மாற்றி பேச்சை தொடங்கும் செக்ஸ் கொக்குகள் மெது மெதுவாக அந்தரங்க பேச்சை தொடங்கும். செக்ஸ் கொக்குவின் வலையில் திருமணமாகாத பெண் என்றால்... காதல் வலைவரிக்கும்.

திருமணமான பெண் என்றால் கள்ளக்காதலை தொடங்கும். சில செக்ஸ் கொக்குகள் வெறும் போனிலேயே ஆபாசமாக பேசி இன்பம் அடைந்து கொள்வார்கள். சில செக்ஸ் கொக்குகள் பெண்களை தங்கள் இருப்பிடம் தேடி வரவழைத்து நாசப்படுத்தி விடுவார்கள்.

இப்படி செக்ஸ் கொக்குகளிடம் ஏமாந்து கற்பையும், உயிரையும் இழக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திருச்சி போலீசார் கூறுகின்றனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த ஸ்டெல்லாமேரி (வயது30). என்பவரின் கணவர், இறந்து விட்டார். ஒரு மகன், மாமியாருடன் ஸ்டெல்லா மேரி தனியாக வசித்து வந்தார்.

ஒரு நாள் ஸ்டெல்லா மேரியின் செல்போனுக்கு மிஸ்டு கால் வந்தது. அந்த நம்பரை தொடர்பு கொண்டு ஸ்டெல்லா மேரி ஹலோ என்றார் பதில் ஏதும் இல்லை. 2-வது நாள் 3-வது நாள் இதே போன்று மிஸ்டு கால் வருவதும் ஸ்டெல்லா மேரி தொடர்பு கொண்டால் எதிர் முனை அமைதியாக இருப்பதும் தொடர்ந்தது.

அது மீனுக்காக செக்ஸ் வெறியில் காத்திருக்கும் கொக்குவின் வலை என்று தெரியாமல் ஸ்டெல்லா மேரி ஒரு முறை போன் செய்து பேசினார். அப்போதுதான் செக்ஸ் கொக்கு தன்னை செல்வராஜ், நாகை என அறிமுகம் செய்து கொண்டது தான் ஒரு பாதிரியார் என கூறிக்கொண்டது.

இந்த நிலையில் வேளாங்கண்ணியில் உள்ள ஒரு லாட்ஜில் பாதிரியார் செல்வராஜ் தலையில் அடிபட்ட நிலையில் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தார். போலீசார் அவரது செல்போனில் பதிவாகியிருந்த ஒரு நம்பருடன் பாதிரியார் இரவில் அதிக நேரம் பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதை விசாரித்த போது திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ஸ்டெல்லா மேரியின் நெம்பர் என தெரிய வந்தது.

ஸ்டெல்லா மேரியை பிடித்து விசாரித்தனர். அவர் பாதிரியாரை கொன்றதை ஒப்புக்கொண்டார். மிஸ்டு கால் மூலம் அறிமுகமான பாதிரியார் செல்வராஜ், ஸ்டெல்லா மேரியை அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து ஜாலியாக இருந்து உள்ளார். கணவனை இழந்த ஸ்டெல்லா மேரி தன்னை பாதிரியார் திருமணம் செய்வார் என நம்பி உடலை ஒப்படைத்து உள்ளார்.

ஆனால் செக்ஸ் கொக்கான பாதிரியார் செல்வராஜுக்கு ஸ்டெல்லா மேரியின் உடல் மேல் மட்டும் ஆசை. சம்பவத்தன்று போதையில் ஸ்டெல்லா மேரியை மீண்டும் மீண்டும் உறவுக்கு அழைத்து சித்ரவதை செய்தார். ஆத்திரத்தில் செல்வராஜை ஸ்டெல்லா மேரி தள்ளிவிட.. போதையில் கீழே விழுந்த செல்வராஜ் இறந்து விட்டார்.

இப்போது செக்ஸ் கொக்குவிடம் மாட்டிய ஸ்டெல்லா மேரி... இப்போது சிறைக்கும் கோர்ட்டுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறார்.

பீம நகரை சேர்ந்த ஒரு முஸ்லிம் பெண் அவர். அவருக்கும் இரவில் ஒரு செக்ஸ் கொக்குவிடம் இருந்து அடிக்கடி மிஸ்டு கால் வந்தது. அவரும் பேசினார். நாளடைவில் அந்த பெண்ணை செக்ஸ் கொக்கு உறவுக்கு அழைத்து டார்ச்சர் செய்ய கணவரிடம் தைரியமாக அவள் கூறி விட்டாள்.

பீமநகரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த செக்ஸ் கொக்குவை கண்டுபிடித்து நாலு சாத்து சாத்தினார் கணவர். ஒரு முறை அந்த கணவர் ஈ.சி.ரீசார்ஜ் முறையில் பீமநகர் கடையில் தனது மனைவியின் செல்போனுக்கு சார்ஜ் செய்து உள்ளார்.

அப்போது அந்த நம்பரை குறித்து வைத்துக் கொண்டு செக்ஸ் கொக்கு இரவில் அடிக்கடி மனைவியிடம் பேசி வலையில் வீழ்த்த துடித்தது தெரிய வந்தது. நல்ல வேளையாக அந்த முஸ்லீம் பெண் செக்ஸ் கொக்குவிடம் இருந்து தப்பி விட்டார்.

இதுபோன்ற செக்ஸ் கொக்குவிடம் சமீபத்தில் சிக்கி பிணமானவர் அன்பரசி. 21 வயதான லால்குடி அன்பரசி, திருமணமான 3 மாதத்தில் தனது செல்போனுக்கு வந்த மிஸ்டு காலை தொடர்பு கொண்டு உள்ளார். எதிர்முனையில் முத்தரசநல்லூரில் இருந்து அங்கமுத்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டது அந்த செக்ஸ் கொக்கு.

ஏற்கனவே நந்தினி என்ற பெண்ணை காதலித்து வந்த செக்ஸ் கொக்கு அங்கமுத்து நண்பர்கள் மூலம் கிடைத்த அன்பரசியின் செல்போனுக்கு பேசி அவளை வலையில் வீழ்த்தியது.

கடைசியில் புதுக்கணவரை விட செக்ஸ் கொக்கு அங்கமுத்து கொடுத்த சுகம் பிடித்து விட... கணவரை உதறிவிட்டு அங்கமுத்து வீட்டிற்கே வந்தாள் அன்பரசி. காதலி நந்தினியை உதறி விட்டு என்னை திருமணம் செய் என்று அங்கமுத்துவை அன்பரசி வற்புறுத்தினாள். எரிச்சலில் அன்பரசியை கொன்று புதைத்தான் அங்கமுத்து.

இப்படி மிஸ்டு காலால் செக்ஸ் கொக்குகளிடம் சிக்கி சில பெண்கள் உயிரை இழந்து உள்ளனர். பல பெண்கள் கற்பை இழந்து உள்ளனர். சில பெண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பைத்தியம் பிடித்தவர் போல உள்ளனர்.

ஸ்டெல்லமேரி, அன்பரசி வாழ்க்கையை பாடமாக கொண்டு செக்ஸ் கொக்குகளிடம் சிக்காமல் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றனர் போலீசார்..

எனவே மிஸ்டு காலா... பெண்களே எச்சரிக்கை அது உங்கள் வாழ்க்கையை சீரழித்துவிடும்.

- Hussainghani - muthupetxpress.blogspot.

மேலும் படிக்க...Read more...

விருதே! உன் விலை என்ன? தலைசிறந்த கேலிக்கூத்து.

>> Tuesday, November 10, 2009

அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப் படுகிறது. இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த ஜோக் இதுவாகத்தான் இருக்கும்.

இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப்படும் தலைசிறந்த கேலிக்கூத்து ஒபாமாவுக்கு விருது வழங்கும் விழாவாக அமையும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் கமலஹாசனிடம் ஒரு பத்திரி்கையாளர், "உங்களின் அடுத்த இலக்கு ஆஸ்கர் விருதுதானே?" என்று கேட்டார். அதற்குக் கமல், "ஆஸ்கர் விருது என்பது உலகத்தரம் வாய்ந்ததல்ல. அது அமெரிக்கத் தரம் வாய்ந்தது. அமெரிக்காவின் தரத்தைத்தான் நாம் இராக்கிலே பார்க்கிறோமே!" என்று பதிலளித்தார். உண்மையும் அதுதான்.

அதுபோலவே மேற்கத்தியர்களால் வழங்கபெறும் விருதுகள் அவர்களின் சிந்தனைகளையும் கருத்துகளையும் ஏற்பவர்களுக்கே வழங்கப்படுவது மீண்டுமொரு நிரூபிக்கப் பட்டுள்ளது.

தகுதியில்லாத அமெரிக்க அதிபர் ஒருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசினை வழங்கியதன் மூலம் அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா போன்றவர்களை நோபல் கமிட்டி அவமானப் படுத்தியிருக்கிறது!

ஒபாமா எந்த விதத்தில் இவ்விருதிற்குப் பொருத்தமானவர் என்பது நோபல் குழுவிற்கே வெளிச்சம்.

பெண்களையும் குழந்தைகளையும் -குறிப்பாக இஸ்லாமியர்களைக்- கொல்வதையேக் கொள்கையாக கடைப்பிடித்து வரும் அமெரிக்க அதிபர்கள் வரிசையில் ஒபாமாவும் ஒருவர்.

அமெரிக்காவின் பாரம்பர்யமிக்க இக்கொள்கையினைச் சற்றும் பிசகாமல் கடைப்பிடித்து வரும் ஒபாமாவிற்கு இவ்விருதினை வழங்கியதன் மூலம் இவ்விருதின் தராதரத்தினை உலகம் அறிந்துக்கொள்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பை நோபல் கமிட்டி வழங்கியுள்ளது.
அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு, ஒபாமா கடந்த பத்து மாதங்களில் சாதித்தவை யாவை?

• மற்ற அமெரிக்க அதிபர்களைவிட, "அமைதி, அமைதி வேண்டும்" எனப் பத்திரிகையாளர்களிடம் பேட்டி என்ற பெயரில் கூடுதலாக பம்மாத்துச் செய்வதாலா?

• ஆப்கானிய அப்பாவிகளைக் கொல்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான கொடுங்கோல் இராணுவத்தினை அனுப்ப முயலுவதாலா?

• தீவிரவாதிகள் என்ற பெயரில் தினம் தினம் குழந்தைகள் பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவி பாகிஸ்தானியர்களை ஆளில்லா விமானத்தின் மூலம் கொன்றொழிப்பதாலா?

• பொருளாதாரத் தடை என்ற பெயரில் லட்சக்கணக்கான இரானியர்களை இன்னும் துன்பப் படுத்தத் துடிப்பதாலா?

• தவறான பொருளாதாரக் கொள்கையால் உருவாக்கப்பட்டப் பொருளாதார வீழ்ச்சியினால் உலகில் பீதியை ஏற்படுத்தி, தமது ஆயுத விற்பனையைப் படுஜோராக விரிவு படுத்துவதாலா?

• அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் பயங்கரவாதச் செயல்களைத் தொடர்ந்து ஆசிர்வதிப்பதாலா?

• "பாலஸ்தீனில் வரலாறு காணாத பெரும் போர்க் குற்றத்தினை அப்பாவிகள் மீது இஸ்ரேல் அரங்கேற்றியது" என்ற உண்மையை யூதராக இருந்தும் உலகிற்கு ஆதாரத்துடன் நிரூபித்த கோல்டுஸ்டோனின் அறிக்கையை வழக்கம்போல் தமது வீட்டோ என்ற அதிகாரத்தைப் பயன்படுத்திக் கிடப்பில் போட்டதாலா?

• தமக்கு ஒத்து ஊதாத ஆட்சியாளர்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு உள்நாட்டுக் குழப்பத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்குவதற்குத் தமது உளவுத்துறையைப் பயன்படுத்துவதாலா?

• மனித இனம் பார்த்திராத சித்ரவதைகளை அபூகுரைப் மற்றும் குவாண்டனமோ சிறைக் கூடங்களில் அரங்கேற்றுவதாலா?

• அரபு நாடுகளை அச்சுறுத்துவதற்காகத் தன் கள்ளப் பிள்ளை இஸ்ரேலுக்கு மேலும் மேலும் ஆயுதங்களை வாரி வழங்குவதாலா?

• கோடிக்கணக்கான குழந்தைகள் பசியாலும் பட்டினியாலும் ஆப்ரிக்காவில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது வட்டி என்ற பெயரில் கொள்ளையடிக்கும் தமது கட்டுபாட்டில் இயங்கும் உலக வங்கியினை மென்மேலும் கொள்ளையடிக்க ஊக்கப்படுத்துவதனாலா?

• அமைதி, பேச்சுவார்த்தை என்று பாகிஸ்தானும் இந்தியாவும் நெருங்கி வரும்போது இந்தியாவைப்பற்றி பாகிஸ்தானிடமும், பாகிஸ்தான் பற்றி இந்தியாவிடமும் போட்டுக் கொடுப்பதனாலா?
இவற்றில் எந்தக் காரணத்திற்காக ஒபாமாவிற்கு நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கிறது?

வாங்கிய பிறகாவது நோபல் விருதிற்குத் தன்னைத் தகுதியானவராக மாற்றிக் கொள்ள வேண்டுமேயானால் அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். அதற்காக,

1. மனித இனத்திற்கு எதிராகத் தமக்கு முன்னாள் இருந்த அமெரிக்க அதிபர்கள் செய்த அநியாயங்களுக்காகவும் அக்கிரமங்களுக்காகவும் அப்பாவி மக்களிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடப் போகிறாரா?

2. தம்மிடமுள்ள ஆயிரக்கணக்கான அணு ஆயுதங்களில் ஒன்றையாவது அழிக்கப் போகிறாரா?

3. அமெரிக்காவின் கள்ளப் பிள்ளை இஸ்ரேலின் போர்க் குற்றங்களையும் கொடுஞ் செயல்களையும் கண்டிக்கவாவது போகிறாரா?

4. பாலஸ்தீன மக்களை ஏமாற்றுவதை நிறுத்தத்தான் போகிறாரா?

5. இராக்கிலும் ஆப்கனிலும் தங்கள் இராணுவத்தினர் புரியும் அடாவடிகளை நிறுத்துவதற்கு உத்தரவிடப் போகிறாரா?

6. தனது நாட்டு இராணுவத்தால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு பில்லியன் பில்லியன் டாலர்களை நஷ்டயீடாக வாரி இறைக்கப் போகிறாரா?

7. அமெரிக்கா என்பது உலகச் சட்டாம்பிள்ளை என்று காட்டுவதற்காக உலகில் பல பகுதிகளில் நிறுத்தி வைத்திருக்கும் தமது இராணுவத்தினரை திரும்ப அழைக்கத்தான் போகிறாரா?
இவற்றுள் எதையுமே செய்யாதவரை அமைதிக்கான நோபல் விருதுக்கு ஒபாமா எவ்வகையிலும் பொருத்தமானவருமில்லை; தகுதியானவருமில்லை!
ஆக்கம்: சகோ. ஃபைஸுர் ஹாதி SATYAMARKAM.COM

மேலும் படிக்க...Read more...

சொர்க்கத்தின் கல்லை முத்தமிடுவது ஏன்?

>> Friday, November 6, 2009

சொர்க்கத்தின் கல்லை(ஹஜருல் அஸ்வத்)முத்தமிடுவது ஏன்?

ஹஜ் கடமையை நிறைவேற்ற உலகின் பல்வேறு பகுதிகளிருந்தும் மக்காவை நோக்கி முஸ்லிம்கள் குழுமும் காலமிது!

ஹஜ்ஜின் பல செயல்முறைகளில் ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிடுவதும் ஒன்று. இப்படி நீங்கள் கல்லை முத்தமிட்டு வணங்குகிறீர்களே? என்று முஸ்லிம் அல்லாதவர்கள் கேட்பதுண்டு.

ஓரிறைக் கொள்கையைக் கூறும் இஸ்லாத்தில் இப்படி ஒரு கல் வழிபாடு இருப்பது எப்படி? என்ற கேள்வி முஸ்லிம்களில் சிலரிடம் கூட உண்டு.

கண்டதையும் கடவுள் என வழிபாடு செய்யும் மக்களிடம் இதுமாதிரியான வழக்கங்கள் இருக்குமானால், இதுகுறித்து எவரும் விமர்சனம் செய்ய மாட்டார்கள். ஆனால் அல்லாஹ்வை மட்டுமே கடவுள் என நம்பி, அவனை மட்டுமே வணங்கும் மக்களிடம் கல்லை முத்தமிடல் எனும் வழக்கம் இருப்பது எவருக்கும் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

இஸ்லாத்தின் மீது எதையேனும் தூற்ற வேண்டும் என்ற கருத்தில் இருப்போர், நாங்கள் மட்டும்தான் கற்சிலையை வணங்குகிறோம். நீங்களும்தானே கல்லை வணங்குகிறீர்கள்? என்று கூறுவர்.

கஃபாவை வலம்வரும் மக்கள் கஃபாவின் சுவற்றில் பதியப்பட்டுள்ள கருப்பு நிறக் கல்லை முத்தமிடுவது திடீரென உருவான வழக்கம் அல்ல. நம் நபி (ஸல்) அவர்களும்கூட இந்த கல்லை முத்தமிட்டு இருக்கிறார்கள். இப்படி முத்தமிட்டதைத்தான் வணக்கம் வழிபாடு என சிலர் புரிந்து கொண்டனர்.

இது வெறும் முத்தம்தான். வணங்குவது என்ற நோக்கில் இடப்படும் முத்தமல்ல! ஒன்றை வணங்குவது என்பதன் பொருளைப் புரிந்து கொண்டால் இதுபோன்ற விமர்சனமும், தேவையற்ற விவாதமும் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

ஒருவர் கற்சிலையை வணங்குகிறார். அவர் கூறும் வேதச்சொற்களை அந்த கற்சிலை புரிந்து கொள்ளும், ஏற்றுக் கொள்ளும் என்று நம்புகிறார்.

ஒருவர் அதே கற்சிலை முன் பிரார்த்தனையிலும் ஈடுபடுகிறார். இது நம் பிரார்த்தனையைக் கேட்டு, நமக்கு உதவி புரியும் என்றும் நம்புகிறார்.

இந்த கற்சிலை முன் நாம் பயபக்தியுடன் நடந்து கொள்ளாவிட்டால் இந்த கற்சிலை நம்மை தண்டித்துவிடும், நம் பிரார்த்தனையை ஏற்காமல் புறக்கணித்துவிடும் என்றும் நம்புகிறார்.

இந்த நம்பிக்கை முறைதான் கற்சிலையை வணங்குவது என்பதன் பொருள். எது கேட்டாலும் தரும். கேட்காவிட்டால் தண்டிக்கும் என்று அதற்கு மதிப்பளிப்பதோ, பயப்படுவதோ தான் வணக்கத்தின் அளவுகோலாக அமைந்து விடுகிறது.

இது மாதிரியான நம்பிக்கையை ஏக இறைவன் முன்தான் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் வணக்கம் எனக் கூறுகிறது இஸ்லாம். கற்சிலை முன் அல்லது சாதாரணமாக உள்ள நம்மைப் போன்ற மனிதன் முன்கூட இப்படி நடந்துகொள்வது கூடாது என்று இஸ்லாம் எச்சரிக்கிறது.

அப்படியானால் ஹஜ்ஜுக்குச் செல்வோர் கல்லை முத்தமிடுகிறார்களே என்ற வினா மீண்டும் எழவே செய்யும். அந்தக் கல்லை முத்தமிடுவது என்பது அதை வணங்குவது என்ற பெயரால் நடப்பதல்ல! நபி (ஸல்) அவர்கள் செய்ததால் நாமும் செய்கிறோம் என்ற நிலையிலேயே அந்தக் கல் முத்தமிடப்படுகிறது.

இஸ்லாமியப் பேரரசின் இரண்டாம் கலீபாவும், நபி (ஸல்) அவர்களின் நெருங்கியத் தோழருமான உமர் (ரலி) அவர்கள் தமது ஹஜ்ஜின் போது அந்தக் கல்லை முத்தமிட்டுவிட்டு, அந்தக் கல்லை நோக்கி நிச்சயமாக நீ ஒரு கல் என்பதை நான் அறிவேன். உன்னால் எந்த நன்மையும், எந்தத் தீமையும் செய்ய முடியாது என்பதையும் அறிவேன். நபி (ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்த்திருக்கா விட்டால் நான் உன்னை முத்தமிட்டு இருக்கவே மாட்டேன் என்று கூறினார்கள். (புகாரி 1597, முஸ்லிம், அஹ்மத், நஸயீ)

மக்காவை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டபோது, கஃபா ஆலயம் சிலை வணங்கிகளின் கையில் இருந்தது. அதில் ஏராளமான சிலைகள் இருந்தன. ஓரிறைக் கொள்கையை போதித்த இப்றாஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) ஆகியோரும்கூட சிலைகளாக கஃபாவினுள் நிறுத்தப்பட்டிருந்தனர்.



மக்காவைக் கைப்பற்றியதும் கஃபாவில் நுழைந்த நபி (ஸல்) அவர்கள் அங்கிருந்த சிலைகளை முதலில் அப்புறப்படுத்தினார்கள். அப்படி கற்சிலைகளை அப்புறப்படுத்திய அவர்கள் கல்லை வணங்கி இருப்பார்களா?

அப்படியானால் அந்தக் கல்லை ஏன் முத்தமிட வேண்டும்! நபி (ஸல்) அவர்கள் முத்தமிட்டதன் காரணம் என்ன? என்பதை ஆராயும் போது ஒரே ஒரு காரணம் மட்டுமே நமக்கு புலனாகிறது.

ஆம்! அந்தக் கல் சொர்க்கத்தின் கல்லாகும். சொர்க்கத்தின் பொருள் ஒன்று. பூமியில் இருப்பது மகிழ்ச்சியான விஷயமல்லவா! சொர்க்கத்தில் பொருளாக இதைத் தவிர வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை என்பதும் முக்கியக் காரணமாகும்.

ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக் கல் சொர்க்கத்தின் கற்களில் உள்ளதாகும். இவ்வுலகில் சொர்க்கத்தின் பொருள் என்று வேறு எதுவும் இதைத் தவிர கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ர¬) அறிவிக்கிறார்கள். (தப்ரானி)

நாம் அதிகம் நேசிக்கும் பொருள் ஒன்று நம் கண்முன்னே இருக்கிறது. அதை கூடுதல் கவனத்துடன் வைத்துக் கொள்வோம். அதை பழுதடையாமல் பாதுகாப்போம். காணாமல் போகாத அளவுக்கு கூடுதல் கவனம் வைப்போம். இதுதான் இயல்பு.

மேலும் இனி நாம் சேரவேண்டிய இடமான சொர்க்கத்தின் கல்லே நம் கண்முன்னே இருப்பது நம் நேசத்திற்குரியதாக மாறிவிடுகிறது. இந்த வகையில்தான் அதை முத்தமிட்டார்கள் என்று கருதலாம். வழிபாடு , வணக்கம் என்ற நிலையில் நபி (ஸல்) அவர்கள் அதை அணுகவில்லை என்பதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்து கஃபாவை தவஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல் அருகே வரும்போது தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி சைகை செய்துவிட்டு, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி¬) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரி 1613)

இந்த சம்பவத்தில் கருப்புக் கல்லை முத்தமிட முடியாதபோது அதை நோக்கி கையால் வேறு பொருளால் சைக்கினை செய்துள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

மேலும் அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறி அல்லாஹ்வை முன்னிலைப் படுத்தியுள்ளார்கள் என்பதையும் அறிகிறோம். அதாவது நீ கல் தான். சொர்க்கத்துக் கல் என்பதால்தான் உனக்கு மதிப்பு. என் இறைவன் அல்லாஹ்தான். அவன்தான் மிகப்பெரியவன் என்ற கருத்திலேயே அல்லாஹு அக்பர் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி உள்ளார்கள்.

எனவே கஃபாவில் உள்ள கருப்புக் கல் வழிபாடு செய்யும் நோக்கில் அமைக்கப்பட்டதல்ல; அது சொர்க்கத்துக் கல் என்ற அளவிலான மதிப்பை மட்டுமே பெறுகிறது என்பதை நினைவில் கொள்வோம்!
THANKS: TMMK

மேலும் படிக்க...Read more...

வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

>> Wednesday, November 4, 2009

1.வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!
2."வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
3.`வந்தே மாதரம்' பாடலுக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு -பா.ஜனதா கடும் கண்டனம்

1.வந்தே மாதரம் : எட்டப்பர்களின் தேச பக்தி பஜனை!

சக மனிதர்களைக் கூட நம்ப மறுக்கும் அளவிற்கு நாட்டு மக்களை நிரந்தர பயத்தில் ஆழ்த்துவதற்காக ""முஸ்லீம் பயங்கரவாதம், குண்டு வெடிப்பு, முக்கிய தலைவர்களைக் கொல்ல தீவிரவாதிகள் சதி'' என்ற வழக்கமான பீதியை மீண்டும் ஒருமுறை அனைத்து ஊடகங்களும் ஆகஸ்ட் 15ஐ முன்னிட்டு உரக்கச் சொல்லி ஓய்வதற்குள், அடுத்து கல்லா கட்ட ஆரம்பித்து விட்டது

""தேசபக்தி'' பஜனையும் அதையொட்டிய லாவணிக் கச்சேரிகளும்.
மைய அமைச்சர் அர்ஜுன் சிங், "வந்தே மாதரம்' பாடலின் நூற்றாண்டு விழாவினை முன்வைத்து, செப்டம்பர் ஏழாம் தேதியன்று நாட்டிலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் கட்டாயமாக "வந்தே மாதரம்' பாடவேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதைத் தொடர்ந்து, தேசபக்தியை ஒட்டுமொத்தக் குத்தகைக்கு எடுத்துள்ள பா.ஜ.க. கும்பல், பாட மறுப்பதை தேசத் துரோகமாகச் சித்தரித்து, சிறுபான்மையினருக்கு எதிரான தனது வழக்கமான அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டது. தான் ஆளும் மாநிலங்களில் இப்பாடலைப் பாடவேண்டியது கட்டாயம் என உத்தரவிட்டது.

குறிப்பாக அம்மாநிலங்களில், அனைத்து மதரஸாக்களும் இந்தப் பாடலைத் தங்களது மாணவர்களைக் கட்டாயமாகப் பாடச் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார். மறுபுறம், ""சுதந்திரப் போராட்டக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

"திராவிட நாடு' கேட்டுக் கொண்டிருந்தபோது, இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதியோ, இன்று பெருமுதலாளியாகி, தேசிய நீரோட்டத்தில் கலந்து விட்டதால், "பாட வேண்டியது கட்டாயமில்லை' என்று இந்தப் பஜனைக்குச் சுருதி தப்பாமல் பின்பாட்டுப் பாடுகிறார். சென்னை மேயராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையில், சுதந்திரப் பொன்விழாவை ஒட்டி ஒரு மைல் நீளத்துக்கு தேசியக் கொடியைத் தெருவெங்கும் பரத்திப் பரவசப்பட்டவர்கள்தானே இவர்கள்! சமயம் கிட்டும்போதெல்லாம் ""கழக அரசுதான் கார்கில் நிதியை அதிகமாகக் கொடுத்தது'' என்று தம்பட்டம் அடித்து இந்திய தேசிய சாக்கடையில் மூழ்கவும் தயங்காத இவர்கள், இம்முறை பா.ஜ.க.வின் பஜனையில் கரைந்து போனது ஆச்சரியமில்லைதான்.

இவர்கள்தான் இப்படி என்றால், மே.வங்கத்தை ஆளும் போலி கம்யூனிஸ்டும், தரகு முதலாளிகளின் கையாளுமான புத்ததேவ் பட்டாச்சார்யாவும், ""அனைவரும் பாடலாம்; ஆனால் பாடவேண்டியது கட்டாயம் இல்லை'' என்று கூறி ஒதுங்கிவிட்டார். மதச்சார்பின்மைக்காக காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறிக் கொள்ளும் இவர்கள், பா.ஜ.வின் இந்து தேசியவெறியை எதிர்க்கத் துப்பில்லாமல், காங்கிரசும் பா.ஜ.க.வோடு ஓரணியில் நிற்பதைப் பார்த்து அடங்கிப் போய் மவுனம் காக்கின்றனர்.

முதலில் இந்த ஆண்டு, வந்தே மாதரம் பாடலின் நூற்றாண்டே அல்ல. 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டுக்கு இந்த ஆண்டுதான் நூற்றாண்டு எனத் திடீரென விழா எடுப்பதற்கு அவசியமென்ன வந்தது? அமெரிக்காவின் அடியாளாக மாறிக் கொண்டிருக்கும் இந்த அரசு சமீபத்தில் அமெரிக்காவுடன் கையெழுத்திட்ட அணுசக்தி ஒப்பந்தத்திற்கு, அணுசக்தி விஞ்ஞானிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வந்து சேர்ந்து, தனது முகமூடி கிழிந்து தொங்கியதாலும், மறுகாலனியத் தாக்குதலால் உழைக்கும் மக்களிடம் வெறுப்பும் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆத்திரமும் பெருகி வருவதாலும், பிரச்சினையைத் திசைதிருப்பி தேசபக்தித் தீயை மூட்டிக் குளிர்காய அரசு நினைத்தது. ஆளும் கட்சியினருக்கு இது ஒன்றும் புதியதல்ல; முந்தைய பா.ஜ.க. ஆட்சியின்போது தேசிய வெறியைக் கிளப்ப போக்ரானில் அணுகுண்டு வெடித்தும், பிரச்சினைகள் முற்றியபோது எல்லைப்புறத்தில் சிப்பாய்களைக் கொண்டு போய் நிறுத்தி தோட்டா ஒன்றைக் கூடச் சுடாமல் "போர் பீதி'யை கிளப்பியதும் யாவரும் அறிந்ததுதான்.

கட்சிக்குள் நிலவும் கோஷ்டி தகராறால் உமாபாரதி வெளியேற்றம், போதைப் பொருள் உபயோகித்துக் கையும் களவுமாய் மாட்டிய ராகுல் மகாஜன் விவகாரம், ஜார்கண்ட் மாநிலத்தில் பறிபோன ஆட்சி, முக்கிய தலைவர்களின் ஒழுக்கக்கேடுகள் ""வீடியோ சிடி''களாக வெளிவந்த விவகாரம் என அழுகி நாறிக் கொண்டிருக்கும் பா.ஜ.க.விற்கு, அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் வரப்போகும் உ.பி., போன்ற மாநிலங்களின் தேர்தலுக்கு உதவிட அருமருந்தாய் இந்த வந்தே மாதரம் விவகாரம் கிடைத்தவுடன் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தது. "முஸ்லீம்கள் பாட மறுக்கிறார்கள், அதனால் அவர்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்கள்' என மக்களிடையே இந்துமுஸ்லீம் பிளவைக் கூர்மைப்படுத்தி, தனது இந்துவெறி ஓட்டு வங்கியைத் தூசு தட்ட ஆரம்பித்தது. ஏற்கெனவே "கிரிக்கெட்டில் பாகிஸ்தான் ஜெயித்தால் வெடி போடுகிறார்கள்' என்று முஸ்லீம்களுக்கு எதிராகச் சொல்லி வந்த அவதூறின் தொடர்ச்சியாக "வந்தே மாதர' விவகாரத்தை அக்கட்சி கையில் எடுத்துக் கொண்டது. செப்டம்பர் 7ஆம் தேதியன்று காங்கிரசு தலைவி சோனியா "வந்தே மாதம்' பஜனையில் கலந்து கொள்ளாததை ஊதிப் பெருக்கி ""சிறுபான்மையினரை தாஜா செய்கிறார்'' என்று தனது மதவெறிப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.

1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது. அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது?

பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய். பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.

இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது. இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி'' SONY தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

போலியான தேசபக்தி அரட்டைக் கச்சேரி செய்யும் காங்கிரசு கும்பலோ தாம் ஆண்ட ஐம்பது ஆண்டுகளில் அடுத்தடுத்து நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுத்து, இந்திய ராணுவத்திற்கு போர் விமானம், போபர்சு பீரங்கி, நீர் மூழ்கிக் கப்பல் வாங்குவதிலும் ஊழல் செய்து திளைத்தது. அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?

ஒரு நாடு என்பது நாட்டு மக்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் இயற்கை வளங்களையும் பண்பாட்டையும் குறிப்பதாகும். நாட்டு மக்களின் மீதும், நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுடன், அந்நிய ஆக்கிரமிப்புக்கும், ஆதிக்கத்துக்கும் எதிராகவும், நாட்டு மக்கள் நலன் மீது மாளாக் காதலுடனும் போராடுவதே உண்மையான நாட்டுப் பற்றாகும். இதைச் செய்யாமல் தேசத்துரோக ஒப்பந்தங்கள் மூலம் நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து விட்டு, "வந்தே மாதரம்' பஜனை பாடுவது நாட்டுப் பற்றாகாது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரத்தைவிட வேறு இரண்டு முழக்கங்கள் ஓங்கி ஒலித்தன. அவை: சுபாஷ் சந்திரபோஸின் ""ஜெய்ஹிந்த்'' மற்றும் பகத்சிங்கின் ""இன்குலாப் ஜிந்தாபாத்'' 1929இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவிருந்த தொழிலாளர் நலனுக்கு எதிரான சட்டத்தைக் கண்டித்துப் போராடும் விதமாக வெடிகுண்டு வீசியபோதும், பின்பு ராஜகுரு, சுகதேவுடன் தூக்கிலிடப்பட்டபோதும் பகத்சிங் முழங்கியது இதே "இன்குலாப் ஜிந்தாபாத்'தான். அத்தகைய தேசப்பற்றாளனின், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியின் பிறந்தநாள் நூற்றாண்டும் இந்த ஆண்டுதான்.

""புரட்சி ஓங்குக!'' (இன்குலாப் ஜிந்தாபாத்!) என பகத்சிங் முழங்கிய முழக்கம்தான் நூற்றாண்டுகளைக் கடந்து இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இனிவரும் நூற்றாண்டும் புரட்சியின் நூற்றாண்டாக இருக்கப் போகிறதே அன்றி, இந்துவெறி தேசியவெறிக்கானதாக இருக்கப் போவதில்லை. ஏகாதிபத்திய எதிர்ப்பும் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் நாட்டுப்பற்றும் மதச்சார்பின்மையும் கொண்ட புரட்சியின் முழக்கம்தான் இனி நாடெங்கும் எதிரொலிக்கப் போகிறதே தவிர, ஏகாதிபத்திய கைக்கூலிகளின் வந்தேமாதரம் பஜனை அல்ல.

மு அன்பு
Written by புதிய ஜனநாயகம் Sunday, 08 October 2006 21:23 புதிய ஜனநாயகம் 2006

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&catid=35:2006&id=1281:2008-05-08-20-29-19
***********************
2."வந்தே மாதரமா' ?? "வந்தே ஏமாத்துறோமா' ???
1937 இல் பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

இதே பாடலை "வந்தே ஏமாத்துறோம்' என நக்கலடித்த கருணாநிதி;

இந்த நாட்டை விட்டு வெளியேறி அந்நிய நாட்டில் அடிமை வேலை செய்யும் ""அம்பி''கள் அனுப்பும் அமெரிக்க டாலரை நன்கொடையாக வாங்கிக் குவிக்கும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பன்னாட்டுத் தலைவரான அசோக் சிங்கால், ""வந்தே மாதரத்தைப் பாட மறுப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்'' என்று பேட்டி கொடுத்துள்ளார்.

மக்களைப் போராட்டத்தை நோக்கி ஈர்த்த இந்தப் பாடலைப் பாட மறுப்பது தேசத்துரோகச் செயல்'' என ஆட்சியாளர்களால் விரிவாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது.

முதலில் , வந்தே மாதரம் . 1870களில் எழுதப்பட்டு 1882இல் ஒரு நாவலில் சேர்க்கப்பட்ட ஒரு பாட்டு;

வந்தே மாதம் பாடலுக்கும் நாட்டுப்பற்றுக்கும் அப்படியென்னதான் சம்பந்தம் இருக்கிறது?

1882ஆம் ஆண்டு வெளிவந்த ""ஆனந்த மடம்'' எனும் வங்க நாவலில் இடம் பெற்ற பாடல்தான் "வந்தே மாதரம்'. இந்த நாவலை எழுதியவர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி என்ற வங்காளப் பார்ப்பனர், அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தில் டெபுடி மாஜிஸ்ரேட்டாக விசுவாசமான காலனிய சேவை செய்த சாட்டர்ஜி, 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வங்காளத்தில் நவாபுக்கு எதிராக நடந்த வைணவ சந்நியாசிகளின் கலகத்தைப் பின்னணியாகக் கொண்டு இந்நாவலை எழுதினார்.1773ஆம் ஆண்டில் வங்காளத்தில் வந்த பஞ்ச காலத்திலிருந்து நாவல் தொடங்குகிறது.

அன்றைய வங்காள நவாபான மீர் ஜாபரின் கஜானாவை சந்நியாசிகள் கொள்ளையடிக்கின்றனர். இந்த நாவலில் வரும் பவானந்தன் எனும் கதாபாத்தி ரம், நவாபுக்கு எதிராக வைணவத் துறிவிக் கூட்டத்துடன் அரசாங்கக் கஜானாவைக் கொள்ளையிடவும், முஸ்லீம் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவும் செல்லும்போது "வந்தே மாதரம்' பாடலினைப் பாடியபடியே மக்களைத் திரட்டுவதாய் நாவல் செல்கிறது.

""இந்தப் பாதகர்கள் நிரம்பிய யவனபுரியைத் தகர்த்து ஆற்றில் வீழ்த்தவிட வேண்டும்'' என்றும், ""இந்தத் துன்மார்க்கர்கள் கூட்டத்தை தீ வைத்து எரித்து அன்னையாகிய நமது தாய்நாட்டை மீண்டும் பரிசுத்தமாக்க வேண்டும்'' என்றும் ""நமது தேவாலயங்களை இடித்து அவற்றின் மீது அவர்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த்தெறிந்து மறுபடியும் ராதா மாதவர்களுக்கு (கிருஷ்ணனுக்கு) கோயில் கட்டுவோமாக!'' என்றும் முஸ்லீம்களுக்கு எதிராக இந்நாவல் நெருப்பைக் கக்குகிறது.

""இத்தாடிப் பயல்களைத் தேசத்தை விட்டுத் துரத்தினாலன்றி இந்து மார்க்கத்திற்குச் சேமமில்லை'' என்றும் ""இம் மகம்மதியர் ஜாதி எனும் குருவிக் கூட்டைப் பிரித்தெறிய வேண்டுமென்று அடிக்கடி நினைத்தோம். நம் மத எதிரிகள் நகரை அழித்து ஆற்றில் விடக் கருதினோம். இப்பன்றிகளின் கிடையைச் சாம்பலாக்கிப் பூமாதேவியின் துன்பத்தைத் துடைத்தெறிய எண்ணினோம்! நண்பர்களே! அதற்கான காலம் வந்துவிட்டது. வாருங்கள்! நாம் சென்று அந்த இஸ்லாமியப் பாவிகளின் இருப்பிடத்தை அழிப்போம். அப்பன்றிகளை அடைக்கும் பட்டியை எரிப்போம். அக்குருவிக் கூட்டைக் கலைத்துக் குச்சிகளை எல்லாம் காற்றில் பறக்க விடுவோம்'' என்றெல்லாம் நஞ்சைக் கக்கி விட்டு, கூடவே, ""பகவான் நாமம் ஸ்தோத்திரம் செய்வோமாக!'' என்கிறார் பங்கிம் சந்திர சாட்டர்ஜி.

முஸ்லீம்களை தீ வைத்துப் பொசுக்குவதுதான் தேசத்தைப் பரிசுத்தமாக்குவதாம்! இதைத்தானே சங்கப் பரிவார பாசிஸ்டுகள் குஜராத்தில் செய்து முடித்தார்கள்! முஸ்லீம்கள் எழுப்பிய கட்டிடங்களைத் தகர்த் தெறியும் திட்டத்தின் மூல விதையை பார்ப்பனபாசிச கும்பலுக்கு இந்த நாவல்தான் விதைக்கிறது எனும்போது, இந்நாவலில் இடம் பெறும் பாடலும் இந்து பயங்கரவாதிகளுக்கு உவந்து போனதில் வியப்பென்ன?

வந்தே மாதரம் என்றால் "தாய்க்கு வணக்கம்' என்று பொருள். எந்தத் தாய்க்கு வணக்கமாம் அது? பாட்டின் இரண்டாம் பகுதியில் இதற்கு பதில் இருக்கின்றது. பார்வதி, காளி, துர்க்கை, சரஸ்வதி, லட்சுமி என்றெல்லாம் சுட்டப்படுபவள்தான் இந்தத் தாய்.

பாரதியார் மொழிபெயர்த்துள்ள வந்தேமாதம் பாடலில் இது தெளிவாகவே உள்ளது.இந்தத் தாயைப் ""அகண்ட பாரத மாதா''வாக புரமோஷன் கொடுத்த கைங்கர்யத்தைக் காங்கிரசுக் கட்சி 1906இல் செய்தது. 1930களின் இறுதியில் இப்பாடலை "தேசிய கீதமாக்க' காங்கிரசுக் கட்சி முயன்றது.

இப்பாடலுக்கு இசையமைத்த கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் ""வந்தே மாதரம் பாடல் துர்க்கை அன்னையை வணங்குவது போலப் பாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்துக்கள் தவிர முஸ்லீம்கள் மற்றும் பல மதத்தினர் இருக்கின்றனர். எனவே இந்தப் பாடலைத் தேசிய கீதமாக அறிவிக்கக் கூடாது'' என்று 1937இல் எதிர்த்துள்ளார். எம்.என்.ராயும், சுபாஷ் சந்திரபோசும் இப்பாடலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.

1937இல் சென்னை மாகாண பிரீமியராக ராஜாஜி இருந்தபோது, சென்னை சட்டசபையில் இப்பாடலைப் பாடச் சொல்லி கட்டாயப்படுத்தினர். பாடல் பாடுகையில் எழுந்திருக்க மறுத்து 2 இஸ்லாமிய உத்யோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரிஸ்ஸா சட்டசபையிலும் இது எதிர்ப்பை சம்பாதித்தது. பெரியாரின் ""குடியரசு'' பத்திரிகை அப்போதே இப்பாடலின் முஸ்லிம் விரோதப் போக்கை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

நான்கு கைகள் முளைத்த லட்சுமியைக் காட்டி அவள்தான் "பாரதமாதா' என்றும், அவளை அனைவரும் வழிபட வேண்டும் என்று மற்ற மதத்தினரைக் கட்டாயப்படுத்துவதும் பார்ப்பன (இந்து) வெறியன்றி வேறென்ன?

முஸ்லீம்களை வெறுக்கக் கற்றுத்தரும் இதே நாவல், ஆங்கிலேயர்களுக்கு அதிக விசுவாசமாக ""ஆங்கிலேயர்கள் நமக்குப் பகைவர்கள் அல்லர்'' என்றும் ""இந்த சந்தான சந்நியாசிகள் செய்த புரட்சியின் காரணமாகவே அரசுப் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஏற்க வேண்டி வரும்'' என்றும் கூறுகிறது. பல இடங்களில் பிரிட்டிஷாரை வெகுவாகப் புகழ்கிறது. இந்து தர்மம் தழைக்கக் கூட ஆங்கிலேயனின் ஆதிக்கம் வேண்டுமென ஆன்மீகக் கயமைத்தனத்தைக் காட்டுகிறது இந்நாவல்.

நமது நாட்டின் சக குடிகளான இசுலாமியர்களை அழிக்கவும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடிகளை உருவாக்கவும் முனையும் இந்த நாவலில்தான் இன்றைக்கு தேசபக்தியின் அடையாளமாகக் காட்டப்படும் "வந்தே மாதரம்' பிறந்துள்ளது.

இப்பாடலை வைத்து தேசபக்தி பஜனை பாடும் பா.ஜ.க., காங்கிரசு இரண்டுமே நாவல் குறிப்பிடுவது போலவே நாட்டின் சிறுபான்மை மக்களை அழிப்பதிலும், நாட்டை அன்னியனுக்குக் காட்டிக் கொடுப்பதிலும் ஓரணியில் நிற்கின்றன.

வந்தே மாதரத்தைப் பாடுவதன் மூலம் ஒருவன் தேசப் பற்றாளன் என்றோ, அதைப் பாட மறுப்பவன் தேசத்துரோகி என்றோ கருதி விட முடியுமா? அப்படியானால் ""வண்டே... மாட்றம்'' என்று நவீன மெட்டுக்கள் மூலம் ஏ.ஆர்.ரகுமான் போன்ற பிரபலங்களை வைத்து இந்தியா முழுவதும் இப்பாடலை ஒலிக்கச் செய்து, கல்லாவை நிரப்பிக் கொண்ட அந்நிய நிறுவனமான ""சோனி''தான் "இந்திய நாட்டின் சிறந்த தேசபக்தனாக' இருக்க முடியும்.

அதீத கூச்சல் போடும் பா.ஜ.க.வோ, சீமைச் சாராயம், விபச்சார அழகிகளுக்காக ராணுவ ரகசியங்களை விற்க முன்வந்ததையும், கார்கில் போரில் மாண்ட வீரர்களின் உடலை எடுத்துச் செல்லும் சவப்பெட்டிகளில்கூட கமிஷன் அடித்ததையும் மறைத்துவிட்டு, "வந்தே மாதரம் பாடுவதுதான் தேச பக்தி' எனக் கூச்சல் போடுகிறது. காசுக்காகவும், சாராயத்துக்காகவும், விபச்சாரிகளுக்காகவும் நாட்டின் பாதுகாப்பையே விற்ற இவர்களுக்குத் தேச பக்தி பற்றிப் பேசிட அருகதை உண்டா?


SOURCE: VIDUTHALAI.COM
******************
3.`வந்தே மாதரம்' பாடலுக்கு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு -பா.ஜனதா கடும் கண்டனம்


புதுடெல்லி, நவ.4-
`வந்தே மாதரம்' பாடலுக்கு ஒரு முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உம்ளது. இஸ்லாமியர்கம் யாரும் `வந்தே மாதரம்' பாடலை எப்போதும் பாடக் கூடாது என்று அந்த அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

முஸ்லிம் அமைப்பு எதிர்ப்பு
தாருல் உலூம் என்ற இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் நீதி பரிபாலனத்துறை கடந்த 2006-ம் ஆண்டு ஒரு தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் ``வந்தே மாதரம் பாடல் இஸ்லாமியத்துக்கு எதிரானது. ஆகவே அந்த பாடலை முஸ்லிம்கம் யாரும் பாட வேண்டாம். எந்த முஸ்லிம் நிகழ்ச்சியிலும் அந்த பாடலை பாடக் கூடாது'' என்று கூறி இருந்தது.
இந்த தீர்ப்புக்கு இன்னொரு முஸ்லிம் அமைப்பும் நேற்று ஆதரவு தெரிவித்து, `வந்தே மாதரம்' பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

சிதம்பரம் முன்னிலையில் தீர்மானம்
அந்த முஸ்லிம் அமைப்பின் பெயர் ஜாமியத் உலாமா-இ-ஹிந்த் ஆகும். இந்த அமைப்பின் 30-வது பொதுக்குழு கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் டியோபாண்ட் என்ற இடத்தில் நேற்று நடந்தது. நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரம் இஸ்லாமிய குருமார்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு மத்திய உம்துறை மந்திரி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் 25 தீர்மானங்களை அந்த அமைப்பு நிறைவேற்றியது. அதில் ஒரு தீர்மானத்தில் ``தாருல் உலூம் கடந்த 2006-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது, எந்த முஸ்லிம் நிகழ்ச்சியிலும் சேர்க்கக் கூடாது என்று அளித்த தீர்ப்பு மிகவும் சரியானது. சுப்ரீம் கோர்ட்டு கூட வந்தே மாதரம் பாடலை பாடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெளிவாக தீர்ப்பளித்து உள்ளது. ஆகவே முஸ்லிம்கள் யாரும் வந்தே மாதரம் பாடலை பாடக் கூடாது. முஸ்லிம்களின் நிகழ்ச்சியில் அந்த பாடலை சேர்க்கக் கூடாது'' என்று கூறப்பட்டு உள்ளது.

``தாயை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால் அவரை வணங்க மாட்டோம். வந்தே மாதரம் பிரச்சினையை வேண்டுமென்றே ஒரு மதத்துக்கு எதிராக கிளப்பி, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் சூழ்நிலையை உருவாக்கக் கூடாது.
வந்தே மாதரம் பாடல் முஸ்லிம்களை குறிவைத்து எழுதப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்'' என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உம்ளது.
தாய் நாட்டை மதிக்கிறோம்

``தேசிய உணர்வுக்கு, தியாகத்துக்கு வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. தாய் நாட்டை நாங்கம் (முஸ்லிம்கள்) மிகவும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். இதை பலமுறை நிரூபித்து இருக்கிறோம். ஆனால் வந்தே மாதரம் ஒரே கடவுள் என்ற எங்களது சித்தாந்தத்துக்கு எதிரானது'' என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு உம்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை கண்டித்தும் தீர்மானங்கம் நிறைவேற்றப்பட்டன. ``சிறுபான்மையினரிடம் அரசியல் ஆதாயம் தேடும் வகையில் மத்திய அரசு தங்களுக்கு சாதகமான வாக்குறுதிகம் அளிப்பதை நிறுத்திக்கொண்டு, சச்சார் கமிட்டி பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்'' என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு தேவையில்லை என்றும், மதரசா வாரியம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும், அரசியல் சட்டம் 377-வது பிரிவை அமல்படுத்தக் கூடாது என்றும், சிறுபான்மையினர் நடவடிக்கைகளில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்றும் பல தீர்மானங்கள் மத்திய அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன.

பா.ஜனதா கண்டனம்
முஸ்லிம் அமைப்பு வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

அந்த கட்சியின் தேசிய துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி இது பற்றி கூறும்போது, ``நாங்கள் வந்தே மாதரம் பாடலைப் பாடி எந்த நிகழ்ச்சியையும் தொடங்குகிறோம். ஆனால் இந்த முஸ்லிம் அமைப்பு தேசிய கீதத்துக்கு எதிராக தொடங்கி உள்ளது. ஒரு மத்திய மந்திரி முன்னிலையில் வந்தே மாதரம் பாடலுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி இருப்பது அவரும் அதை நியாயப்படுத்துவது போல உள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மத்திய மந்திரி சிதம்பரம் பேசுகையில், இது பற்றி ஏதாவது கூறி இருக்கலாம். ஆனால் வந்தே மாதரம் பற்றிய தீர்மானம் பற்றி எதுவும் சொல்லாமல், பாபர் மசூதி இடிப்பு, மத கலவரம் பற்றி மட்டுமே பேசி இருக்கிறார். மந்திரி சிதம்பரம் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் தெளிவு படுத்த வேண்டும்'' என்று தெரிவித்தார்.

முரளி மனோகர் ஜோஷி
பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், ``வந்தே மாதரம் பாடலுக்கு எதிரான தீர்மானத்தை ஏற்றுக் கொம்ள முடியாது. அது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. சுதந்திரப் போராட்டத்தின் போது வந்தே மாதரம் பாடல் ஒரு உத்வேகத்தை கொடுத்தது. நாட்டு பற்று உடைய ஒவ்வொருவரும் பாடவேண்டிய பாடல் இது'' என்று தெரிவித்தார். SOURCE : DINATHANDHI
+++++++++++++++++++++++++++++

அல்லாவைத்தவிர வேறு எதையும் வணங்கக்கூடாது என்பதே இஸ்லாமின் அடிப்படையாகும், தாய்நாட்டை உயிரினும் மேலாக மதிக்கலாம், அதை வணங்கத் தேவையில்லை.அதுபோன்றே வணங்குகிறேன் என்றும் தேசபக்தி என்றும் சொல்லிக் கொண்டே தாய்நாட்டிற்கு துரோகம் செய்வதையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP