என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

“அடேய்! பறக்காதே!” கொக்கு! பற! பற!

>> Friday, May 14, 2010

உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயம் மதிக்கும்.
நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.
வெற்றியாளர்களுக்கு ஒரு விஷயம் நன்றாகத் தெரியும். “நாம் சராசரி மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறோம்.

சராசரி நடைமுறைகள் சார்ந்தே வாழ்க்கையை அணுகவேண்டியவர்களாய் இருக்கிறோம்.

ஆனால், வேளை வரும்போது, நாம் வித்தியாசமானவர்கள் என்பதை வெளிப்படுத்தியே தீருவோம்” என்பதுதான் அது.

இந்த உலகம் போட்டிகள் நிறைந்ததுதான். ஆனால், நம்மை நாம் நிரூபிப்பதில் நிதானம் காட்ட வேண்டுமா, அவசரப்பட வேண்டுமா என்பது, நம்மோடு யார் மோதுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

ஒரு ரயில் நிலையம். முன்பதிவு செய்யப்பட்ட சீட்டு உங்களிடம் இருக்கிறது. ரயில் வந்து நிற்கிற பிளாட்பாரத்தில் நுழைய, முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து அலைமோதுகிறார்கள் என்றால், அவர்களுடன் நீங்கள் போட்டி போட வேண்டிய அவசியமில்லை.மிக நிதானமாய், மிக உறுதியாய் உங்கள் இடத்தை நீங்கள் சென்றடையலாம்.

தகுதிகளாலும், திறமைகளாலும் வழி நடத்தப்படுபவர்களின் பாதை, எப்போதும் தனிவழி தான்.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் நல்ல அனுபவம் வாய்ந்த அலுவலராகத் திகழ்கிறீர்கள். வேறொரு நிறுவனத்திற்குப் போகலாம் என்று தோன்றினால், அங்கோ இடம் காலியாகிறதா என்றெல்லாம் கேட்டுத் தெரிந்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

உங்கள் தகுதிகளை அந்த நிறுவனத்திற்குத் தெரியப்படுத்தினால் உங்களை வேலையில் அமர்த்திக்கொள்ள அந்த நிறுவனம் ஆர்வம் காட்டும்.

சராசரிகளுக்கு மத்தியில் நீங்கள் உலவி வந்தாலும் சரியான விதத்தில் உங்களை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரிந்தால் போதும். உங்களுக்கு உரிய அங்கீகாரம் உரிய முறையில் வந்து சேரும்.

ஏதேனும் ஓர் அரசு அலுவலகத்தில் பொதுமக்கள் மிகவும் அலட்சியமாக நடத்தப்படுகிற இடத்தில் நீங்கள் உங்கள் ஆளுமையை சரியாக வெளிப்படுத்தும் போது சூழலே மாறும்.

உங்களுக்கு மட்டுமின்றி பாமர விண்ணப்பதாரர்களுக்கும் உரிய மரியாதை கிடைக்கும்.

இதற்கெல்லாம் அடிப்படை, சுயகௌரவம். உங்கள் மேல் உங்களுக்கிருக்கிற உயர்ந்த அபிப்பிராயம்.

ஓர் அரசன் இருந்தான். பெரும் புலவர்களுக்கு உரிய மரியாதை தருவதில் மிகவும் ஆர்வம் காட்டுபவன். நீண்ட காலமாய் வறுமையில் வாடிய புலவர் ஒருவர், அவனிடம் சென்று தன் பாடல்களைப் பாடிப் பரிசுப் பெறப் புறப்பட்டார்.

தன் மீதும், தன் தமிழ் மீதும் போதிய மரியாதை அந்தப் புலவருக்கிருந்தது. நீண்ட பயணம். வறுமையில் வறண்ட மேனி. அழுக்கடைந்த ஆடைகள்.
அரண்மனையை நெருங்கிய புலவர் அதிர்ந்தார். பெருங்கூட்டம் அலைமோதியது. அன்று அரசனுக்குப் பிறந்தநாள் என்பது அவருக்குத் தெரியாது. ஜனத்திரளுக்குள் சிக்கினார் புலவர். கூட்டம் தள்ளிய தள்ளலில், அரசனுக்கு மிக அருகில் போய் விழுந்தார்.

கூட்ட நெரிசலைக் கண்டு அரசன் ஏற்கெனவே எரிச்சலில் இருந்தான். வந்து விழுந்தவர் புலவர் என்பது அவனுக்குத் தெரியாது. யாரோ இரவலர் என்று எண்ணியவன், விழுந்து கிடந்த புலவரைப் பார்த்து “அடேய்! பறக்காதே!” என்றார்.

விழுந்த புலவர் எழுந்தார். எழும்போதே பாடல் “கணீர்” என்று புறப்பட்டது.

“கொக்கு பறக்கும்! புறா பறக்கும்!
குருவி பறக்கும்! குயில் பறக்கும்!
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்…
நான் ஏன் பறப்பேன் நராதிபனே!”

இந்த வரிகளே, வந்திருப்பவர் புலவர் என்பதை அரசனுக்கு உணர்த்தியது.

மனம் வருந்தினான். உரிய மரியாதைகள் செய்தான்.
தன் மீதும் தன் புலமை மீதும் புலவருக்கிருந்த மரியாதை, அரசனையும் பணிய வைத்தது.

உங்களை நீங்கள் மதியுங்கள். உலகம் நிச்சயம் மதிக்கும்.

Thanks to:சிவராமன்

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP