என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழன் என்ற அடையாளம் போலியானதா? கோவி.கண்ணன்.

>> Thursday, May 6, 2010


நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி.


நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம்?

தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது.

தேனீ உமர் : உலக தமிழ் மாநாட்டில் தேனீ உமருக்கான அங்கீகாரம் வேண்டும் என்ற தலைப்பில் வரும் பதிவுகளைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலும் இஸ்லாமிய பதிவர்களின் பெயர்களின் தான் வருகின்றன. தமிழ் மணமும் உமரை நினைவு கூர்ந்து முகப்பில் அவரது படத்தை வைத்து, இணைப்புக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கது.

தமிழுக்காக பாடுபட்டு மறைந்த ஒருவரை அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தான் நினைவு கூற முடியும் என்கிற ஒரு மத அடிப்படையிலான நிலைக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம் என்று நினைக்க தமிழன் என்ற அடையாளம் போலியானதா என்று நினைக்கத் தோன்றுகிறது.

தேனீ 'உமர்' என்கிற பெயரில் 'உமர்' - க்கு பதிலாக ஒரு இந்து பெயர் இருந்திருந்தால் அவருக்கான அங்கீகாரம் ஏற்கனவே கிடைத்திருக்கும் அளவுக்கு எடுத்துச் சென்றிருப்போமோ ? மத அடிப்படையில் பிரிந்து கிடக்கும் நம்மால் ஒன்றுபட்டு ஒருவரின் சாதனைகளைக் கூட எடுத்துச் சொல்ல முடியவில்லை என்று நினைக்கும் போது நாமெல்லாம் தமிழன் என்று எதை வைத்து பெருமைப்படுகிறோம் என்றே தெரியவில்லை.

தேனீ உமர் பற்றி அறிந்து கொள்ள
சுட்டி 1,    சுட்டி 2

THANKS TO :-
கோவி.கண்ணன். -கலவை 05/மே/2010 !- தேனீ உமர்


+++++++++++++

சிங்கை த‌மிழ் ச‌ங்க‌த்தில் அளிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌னு விப‌ர‌ம்


அனுப்புன‌ர்: ஏ.ஹ‌ச‌ன் , 87 ஹிந்து ரோடு, சிங்க‌ப்பூர்.

பெறுந‌ர்: த‌லைவ‌ர் அவ‌ர்க‌ள்,சிங்கை த‌மிழ்ச்ச‌ங்க‌ம்,க‌ம்போங் ரோடு,சிங்க‌ப்பூர்.

பொருள்: க‌ணினித‌மிழின் க‌தாநாய‌க‌ன் ம‌ரைந்த‌ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு த‌மிழ்செம்மொழி மாநாட்டில் வ‌ர‌லாற்று அங்கிகார‌ம் கிடைக்க‌ தீர்மான‌ம் நிறைவேற்றி த‌மிழ‌க‌ அர‌சை கேட்டு கொள்வ‌து ச‌ம்ம‌ந்தமாக‌.

ஐயா: இன்று நாம் வாழ்ந்து வ‌ரும் ந‌வீன‌ யுக‌த்தில் த‌மிழில் க‌ணினியைன்ப‌ய‌ன்ப‌டுத்தும் ஒரு உன்ன‌த‌ மென்பொருளை உருவாக்கிய‌ சாத‌னை ம‌னித‌ன் த‌ய‌வால் இன்று உல‌த்த‌மிழ‌ர்க‌ள் த‌மிழில் க‌ணியை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகிறோம்.

ம‌றைந்த‌ உம‌ர்த்த‌ம்பி அவர்க‌ள் இந்த‌ செய‌லியை வெகு நாட்க‌ள் போராடி பெற்று இந்த‌ ம‌ன்னிற்க்கு விட்டு சென்ற‌த‌ன் விழைவு நாம் இன்று த‌மிழில் மின்ன‌ஞ்ச‌ல், ம‌ற்றும் வ‌லைப்பூ, வ‌லைத‌ள‌ம், என்று என்னில‌ட‌ங்கா இணைய‌த்தேவைக‌ளை த‌மிழில் செய்து கொண்டுள்ளோம் என்ப‌தை யார‌லும் ம‌றுக்க‌ இய‌லாது

இந்த‌ உன்ன‌த‌ ப‌ணியை எந்த‌ வித‌ பிர‌திப‌ல‌னும் இல்லாம‌ல் இந்த‌ த‌மிழ் ம‌ன்னிற்க்கு கொடையாக‌ அளித்துள்ளார் என்ப‌தை அவ‌ர் ம‌ரைந்தும் ம‌றையாம‌ல் இருக்கும் அவ‌ர‌து செய‌லியான‌ "தேனீ" எழுத்துரு மென்பொருள் உப‌யோக‌ப்ப‌டுத்தும் அனேக‌ இணைய‌த‌ள‌ங்க‌ளே சாட்சி. இதில் என‌க்கு கிடைத்த‌ சில‌ இணைய‌ முக‌வ‌ரிக‌ளை ம‌ட்டும் கீழ்காண்ப‌வையில் குறிப்பிட்டுள்ளேன்.

என‌வே சிங்கையை சிறைபிடித்திருக்கும் ல‌ட்ச‌ க‌ண‌க்கான‌ த‌மிழ‌ர்க‌ளின் சார்பாக‌ கோவையில் ந‌டைபெற‌ இருக்கும் த‌மிழ் செம்மொழி மாநாட்டில் தேனீ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு வ‌ர‌லாற்று அங்கிகார‌ம் கிடைக்க‌ வ‌ழிவ‌கை செய்ய‌ த‌மிழை உயிர்மூச்சாக‌ சுவாசிக்கும் த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ர் மு.க‌ருணாநீதி அவ‌ர்க‌ளையும்

அவ‌ர்க‌ள் த‌லைம‌யில் த‌னித்துவ‌ம் பெற்றிருக்கும் த‌மிழ‌க‌ அர‌சையும் ந‌ம‌து சிங்கை த‌மிழ் ச‌ங்க‌த்தின் சார்பாக‌ தீர்மான‌ம் நிறைவேற்றி ம‌றைந்த‌ தேனீ உம‌ர்த்த‌ம்பி அவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழங்கி இணைத்த‌மிழ் ஆர்வ‌ல‌ர்க‌ளின் அவாவை நினைவாக்கி த‌ர‌ அன்போடு கேட்டு கொள்கிறேன். ந‌ன்றி. - ஏ.ஹ‌ச‌ன். சிங்க‌ப்பூர்.

+++++++++++++++++++++++++

நான்காம் தமிழ் தந்தை உமர்தம்பி.

தனக்கு வந்த புற்றுநோயையும் பொருட்படுத்தாமல், தனது வாழ்நாளின் கடைசி ஓரிரு நாட்கள் முன் வரை, தமிழ் இணைய வளர்ச்சிக்கு பங்காற்றிய உமர் தம்பி அவர்களது பங்களிப்புகளை கோவையில் நடைபெற உள்ள தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழக அரசு அங்கீகரிக்கவேண்டும் என்பது தமிழ் கணிமை ஆர்வலர்களின் எதிர்ப்பார்ப்பு.

விண்டோஸ் 98 பயனர்கள் தமிழிணைய தளங்களை எவ்வித சிரமமுமின்றி கணினியில் பார்வையிடவும், யூனிகோட் ஒருங்குறியில் தட்டச்சவும் உமர் தம்பி உருவாக்கிய 'தேனீ' வகை எழுத்துருக்கள் மற்றும் நிரழிகள் இன்றும் பல தமிழ்தளங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துறுக்கள் (Theenee, Theneeuni மற்றும் சில..) ஆங்கிலம்-தமிழ் அகராதி, தமிழ் எழுத்துறுமாற்றி (தமிழெழுதி), மற்றும் தமிழ் இணைய தளங்களைப் பார்வையிட உதவும் தானியங்கி/டைனமிக் எழுத்துறுமாற்றி மற்றும் பல தொடக்கநிலை நிரழி/மென்பொருள்களின் சொந்தக்காரராக இருந்தாலும் அவை எதிலும் தனது பெயரோ அல்லது அவற்றிற்குண்டான கிரடிட்டோ எதிர்பாராது சேவையாற்றியவர்.

நான்காம் இணையத் தமிழுக்காகச் செய்த தமிழ்ச்சேவை மகத்தானது.

இ-கலப்பை தமிழ் தட்டச்சு மென்பொருள் உருவாக்கத்தில் பின்னணியிலிருந்து செயல்பட்டவர்களில் உமர்தம்பியும் ஒருவர்.

ஐரோப்பாவில் நடைபெறும் தமிழ் இணைய மாநாட்டில், நமக்கு அறிமுகமானவர், பழகியவர், தமிழ் தட்டச்சு, தமிழ் இணைய நுட்பங்களை கற்றுத்தந்தவர்.

சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் உத்தமம் (INFITT) சார்பில் நடந்த மாநாட்டில் 'உமர்தம்பி அரங்கு' என்று பெயரிட்டிருந்ததாக தமிழூற்று மாஹிர் தெரிவித்திருந்தார்.

தமிழா,அன்புடன்,அதிரை வெப் கம்யூனிடி மற்றும் பல குழுமங்களிலிலும் உமர்தம்பி அவர்களின் கருத்துப் பரிமாற்றங்கள் பலருக்கும் பயனுள்ளதாக இருந்துள்ளன. மொத்தத்தில் தமிழ் கணிமையின் முன்னோடியாக அரியபல தொண்டாற்றியுள்ள அதிரையின் தவப்புதல்வர்களில் ஒருவரான உமர்தம்பி வாழும்காலத்தில் கவுரவிக்கப்பட்டிருக்க வேண்டியவர்.

'உமர்தம்பி'யை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் அங்கீகரிக்க.
 
இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

4 comments:

கோவி.கண்ணன் May 6, 2010 at 12:39 PM  

உமர் அவர்களுக்கான அங்கீகாரம் மநாட்டில் கிடைக்க வேண்டும்.

மீண்டும் எடுத்துச் சொல்லும் வகையில்

இணைப்புக்கு மிக்க நன்றி.

VANJOOR May 6, 2010 at 1:20 PM  

கோவி. கண்ணன் அவர்களுக்கு நன்றி.

வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

தாஜுதீன் (THAJUDEEN ) May 6, 2010 at 1:27 PM  

உமர்தம்பி அவர்களின் செய்திகளை தொகுத்து வழங்கியதற்கு மிக்க நன்றி

தாஜுதீன் (THAJUDEEN ) May 8, 2010 at 11:30 PM  

http://ilayangudikural.blogspot.com/2010/05/blog-post_06.html

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP