என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

2011-க்கான இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு. துணை புரிய.

>> Sunday, May 2, 2010

அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது நமது ஜமா அத்தார்கள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும்.

ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.


120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

மறந்துவிடாதீர்கள்!

மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு. இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது. தற்போது 2011-க்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

1872 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது 15-வது கணக்கெடுப்பாகும். சுதந்திரத்துக்குப் பின் 7-வது கணக்கெடுப்பாகும்.

சுதந்திரப் போராட்டம், பாகிஸ்தான் பிரிவினை, போர்கள், வெள்ளம், நிலநடுக்கம் போன்றவை நிகழ்ந்தபோதும் பத்தாண்டுக்கு ஒரு முறை தடைபடாமல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது என இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் சந்திரமௌலி தெரிவித்தார்.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப் பணி தொடங்கப்பட்டது..

o தற்போது இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பூமியில் 2.7 சதவீத பரப்பளவை கொண்டுள்ள இந்தியாவில், உலக மக்கள் தொகையில் 17.5 சதவீத மக்கள் வசிக்கின்றனர். 28 மாநிலங்கள், 7 யூனியன்கள், 640 மாவட்டங்கள், 7,742 நகரங்கள், ஆறு லட்சத்து 8 ஆயிரத்து 786 கிராமங்கள் மற்றும் 30 கோடிக்கும் அதிகமான வீடுகள் இந்தியாவில் உள்ளன. இங்கு பல மொழிகள் பேசும் மக்கள் வாழ்கின்றனர்.

o இந்தியாவின் 15 வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி தற்போது நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு தனி மனிதன் குறித்த பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்படும். 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டையும், அடையாள எண்ணும் வழங்கப்படும்.

மேலும் அடையாள அட்டையில் புகைப்படம், அவரது கைரேகை ஆகியவை பதியப்படும். அது மட்டுமின்றி, ஒவ்வொருவரின் கண் விழிகளையும் பதிவு செய்வது குறித்தும் ஆலோசனை நடந்து வருகிறது.

o ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், 1824-ம் ஆண்டில் அலகாபாத் நகரிலும், 1827-ம் ஆண்டில் பனாரஸ் நகரிலும், 1830-ம் ஆண்டில் டாக்காவிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால் அதிகாரப் பூர்வமாக முதன் முதலாக 1860-ம் ஆண்டில் தொடங்கி 1871 வரை கணக்கெடுப்பு நடந்ததாக வரலாற்று குறிப்புகள் உணர்த்துகின்றன.

ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பு, பின்னர் ஒன்றாக இணைக்கப்பட்டு 1872-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்த திட்டம் வகுக்கப்பட்டது.

o 1931-ம் ஆண்டில் மட்டும் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் அந்த மாதிரியான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. விடுதலைப் போராட்டம், நாடு பிரிவினை, மதக்கலவரம், நிலநடுக்கம் ஆகிய காலங்களில் கூட மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கணக்கெடுப்பு நடத்த முடியாத பகுதிகளில், இடைக்கணிப்பு முறையில் மக்கள் தொகை கணிக்கப்பட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது.

o 1981-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் தொகை பதிவேடுகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் முழுமையான தகவல்கள் அழிந்து போயின! அதே ஆண்டில் அசாம் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் கலவரத்தால் கணக்கெடுப்பு
நடத்தப்படவில்லை.

1991-ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிரச்சினையால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் ஜுன் முதல் தேதியில் இருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கிறது. o 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை.

எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுறது. இந்தியாவில் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.

o தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், புதுமையாக செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதி, குடிநீர் பயன்பாடு, குடிசை, மாத வருமானம், வங்கி சேமிப்பு ஆகிய 35 தகவல்கள் இடம் பெறுகின்றன! இந்த கணக்கெடுப்புக்கு மட்டும் சுமார் 2300 கோடி ரூபாயும், பதிவேடுகள் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 3550 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது அடையாள அட்டை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

o கடந்த 1901-ம் ஆண்டில் 24 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள் தொகை படிப்படியாக அதிகரித்து கடந்த 2001-ம் ஆண்டில் கிட்டத்தட்ட 103 கோடியை தொட்டது! இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரவாணிகளையும் சேர்க்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விடுத்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இதில் வீடுகள் மட்டுமின்றி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், விடுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற நிறுவனங்கள் தொடர்பான விவரங்களும் கணக்கெடுக்கப்படும்.

உலகிலேயே அதிக மக்களை ஒரே புள்ளி விவரப் பட்டியலுக்குள் கொண்டு வர செய்யப்படும் மாபெரும் முயற்சியாகும் இது. இது குறித்து செய்தியாளர்களிடம் மத்திய உள்துறைச் செயலர் கோபால் கே.பிள்ளை கூறியதாவது:

o பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி நடைபெறுகிறது.

o மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இப்பணியில் 25 லட்சம் பேர் ஈடுபடுவர். இதற்காக ரூ.2,209 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. o இப்பணியில் முதல் முறையாக செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வைத்துள்ள விவரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கிறதா போன்ற விவரங்களுடன் வீட்டிலுள்ள அனைவரது புகைப்படங்களும், கைரேகைகளும் பெறப்படும்.

o உள்நாட்டுப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்க இந்த விவரங்கள் உதவிகரமாக இருக்கும். நாட்டில் தற்போது உள்ள சுமார் 120 கோடி மக்கள் குறித்த விவரங்களை சேகரித்தபின் தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படும். o இதில் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் விவரமும் பதிவு செய்யப்படும். இப்படிப்பட்ட பதிவேடு தயார் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதற்கு ரூ.3539.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

o பதிவேடு தயாரானவுடன் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள எண் தரப்படும்.

o மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிப்புக்கான விவரங்கள் சேகரிக்கப்படும். இப்பணி அந்தந்த மாநிலத்துக்கு ஏற்றவாறு ஏப்ரல் முதல் ஜூலை வரை பல்வேறு காலகட்டங்களில் 45 நாள்கள் மேற்கொள்ளப்படும்.

o இப்பணி 640 மாவட்டங்களில் 5,767 தாலுகா, 7,742 நகரங்கள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெறும்.

o 2-வது கட்டத்தில், இவ்வாறு சேகரிக்கப்பட்ட விவரங்கள் 2011 பிப்ரவரி 9 முதல் 28 வரை தொகுக்கப்படும். நாட்டில் உள்ள எல்லா கணக்கெடுப்புகளுக்கும் அடிப்படையானது மக்கள்தொகை கணக்கெடுப்பு.

இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நடைபெறுகிறது.

இந்த கணக்கெடுப்பில் எத்தனை வீடுகள் உள்ளன, எவ்வளவு உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களது வயது, கல்வித்தகுதி, வருமானம், தொழில், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் தீட்டப்படுகின்றன. நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

நாட்டின் பாதுகாப்பு குறித்த அடிப்படை திட்டங்களும் இதன் மூலம் உருவாக்கப்படும்.

சென்சஸ் கணக்கெடுப்பு விவரங்களை அனுமதியின்றி வெளியிட்டால் சிறை.

சென்சஸ் கணக்கெடுப்பின்போது பெறும் விவரங்களை அரசின் முன் அனுமதியின்றி வெளியிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு-2011 பணி நாடு முழுவதும் 2 கட்டமாக நடக்கிறது. வரும் ஜூன் 1 முதல் ஜூலை 15 வரை முதல்கட்ட பணியும், 2ம் கட்ட பணி 2011 பிப். 9 முதல் 28 வரை நடக்கிறது.

இப்பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கான மத்திய அரசு அறிவித்துள்ள உரிமைகள் & கடமைகளை:

o சென்சஸ் பணிக்காக உள்ளூர் வழக்கத்திற்குட்பட்டு ஒவ்வொரு வீடு, வளாகத்திற்குள் செல்லலாம்.

o தேவைக்கேற்ப கட்டடம், வீடுகளில் சென்சஸ் எண்களை எழுதலாம்.

o வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு அட்டவணையில் கேட்கப்பட்டவாறு எல்லா கேள்விகளையும் கேட்கலாம்.

o அட்டவணையில் அச்சடிக்கப்பட்டுள்ள கேள்விக்கான பதிலை பதிலளிப்பவரிடமிருந்து பெற உரிமையுள்ளது.

கடமை: கணக்கெடுப்பவர்,மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டவர் அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியை கவனத்துடன் செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.

o ஒருவருக்கு தரப்பட்ட கடமையை செய்ய மறுப்பது அல்லது அவ்வாறு பணி செய்பவரை தடுப்பது.

o ஒருவரின் மனதை பாதிக்கும்படி, பொருத்தமற்ற கேள்விகளை கேட்பது அல்லது தெரிந்தே தவறான விவரங்களை பதிவது. o சென்சஸ் கணக்கெடுப்பின்போது பெற்ற விவரங்களை அரசின் அனுமதியின்றி வெளியிடுதல். இதுபோன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சகோதரர்களே!
நமது ஜமா அத்தார்கள் அரசாங்க அதிகாரிகள் மக்கள் கணக்கெடுப்பு பணிக்காக வரும்போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

அத்துடன் விபரமறியாத மக்கள் அதிகமிருக்கும் நம் சமூகத்திலுள்ளவர்களுக்கு சரியான விளக்கத்தையும் முன் கூடியே கொடுத்தால் அவர்களது பெயர் விடுபட்டுப்போகாமல் இருக்கும். ஆகவே ஒவ்வொரு மஹல்லாவைச் சேர்ந்தவர்களும் தங்கள் மஹல்லாவிலுள்ள எல்லோருடைய பெயரும் இடம்பெற துணை புரிய வேண்டும்.

மறந்துவிடாதீர்கள்! மண்ணின் மைந்தர்களாகிய எல்லோருடைய பெயரும் இந்த கணக்கெடுப்பில் இடம்பெறுவது மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

எச்சரிகை:-கணக்கெடுக்க வரும் நபர் அரசு அதிகாரி தானா என்பதை உறுதிபடுத்தி கொள்ளுங்கள்.

அன்புடன்,
முஹம்மது ஜுல்ஃபிகர்
***********

இத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்

2 comments:

Unknown May 2, 2010 at 2:30 PM  

"இந்தியாவில் நாத்திகர்கள் சுமார் 15 சதவீதம் கருணாநிதி உட்பட. இந்த திருட்டு அரசு எப்போதுமே இவர்களை ஹிந்து என வகைப்படுத்துகிறது. மேலும் மலைவாழ் மக்கள் சமணர்கள் யாவரையும் இந்து என வகைப்படுத்துகிறது. இது ஒரு மனிதஉரிமைப் பிரச்சனை. ஒவ்வொருவரும் ஐ.நா. சபைக்கும், ஜெனிவாவில் உள்ள மனிதஉரிமை அமைப்புக்கும் இதனைத் தெரிவிக்கவேண்டும்."

நன்றி
மதிப்பிற்க்குறிய ஆடிட்டர் ஃபெரோஸ் கான்

Unknown May 2, 2010 at 2:35 PM  

ஐ.நா. சபைக்கும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமை அமைப்புக்கும் தெரிவிப்பது எப்படி?

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP