என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அவமானப்படுத்துகிறவர்களை எப்படி வெற்றி கொள்வது?

>> Friday, April 23, 2010

அவமானம் என்பது அனைவருக்கும் ஒரு பொதுவான விஷயம், அவமானம் என்ற வார்த்தையில் சம்பந்தப்படாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஏதாவது ஒரு வகையில், விசயத்தில் இதை நாம் சிறிதளவேனும் சந்தித்து இருப்போம் அல்லது சம்பந்தப்பட்டு இருப்போம்.

அந்த சமயத்தில் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்கள் சொல்லி மாளாது, எதையுமே பிடிக்காது வாழ்க்கையே வெறுத்து போய் இருப்போம் கொஞ்ச நாட்களுக்கு, எனக்கும் இதை போல பல நடந்துள்ளது, குறிப்பாக முன்பு பதிவுலகத்தில். அப்போதெல்லாம் அடைந்த மன உளைச்சல்கள் கணக்கில்லாதது, அந்த சமயத்தில் சரியான அனுபவம் இல்லாததால் அதிகளவில் கோபமே ஏற்பட்டது, புறம் தள்ள தெரியவில்லை.

பொதுவாக எனக்கு கஷ்டப்படுவது பிடிக்கும் அல்லது சவால்களை எதிர் கொள்வது பிடிக்கும். எனக்கு எதிரில் இருக்கும் சவாலை பொறுமையுடன் எதிர்கொள்வேன். பதிவுலகம் வந்த போது அதிகளவில் இந்த அனுபவம் கிடைத்தது. தற்போது ஓரளவு பக்குவம் அடைந்து விட்டேன். எதிலும் அவசரப்படக்கூடாது என்பதும் கிண்டலடிப்பவர்களை பற்றியோ நம்மை பற்றி அவதூறு கூறுபவர்களை பற்றியோ கண்டுகொள்ள கூடாது என்பதும் நான் தெரிந்து கொண்டதில் குறிப்பிடத்தக்கது. நாம் தவறு செய்து இருந்தால் நம் தவறை சரிபடுத்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பாக கருதுங்கள்.

நம்மை கிண்டலடித்தவர்கள் அல்லது அவமானபடுத்தியவர்கள் முன்பு நம்மை நிரூபித்து காட்ட கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவே இதை கருத வேண்டும், நான் அப்படி தான். நான் எதையும் பேச மாட்டேன், யாரை பற்றியும் கூற மாட்டேன். என்னை பற்றி என் செயல்களில் காட்டவே எனக்கு விருப்பம். எனக்கு இதில் நல்ல ரோல் மாடல் என்றால் அது ரஜினி தான். ரஜினி சந்திக்காத பிரச்சனைகளா! அவமானங்களா!! எதற்கும் அசைந்து கொடுக்காமல் அமைதியாக இருப்பார். இது என்னை மிகவும் கவர்ந்த விஷயம்.

நம்மை கிண்டலடிக்கும் போதோ அல்லது வெறுப்பேற்றும் போதோ அமைதி காப்பதே நல்லது, நாம் நம் கட்டுப்பாட்டை இழக்கும் போது புது வகையான சிக்கல்களில் வலிய போய் நாமே சிக்கி கொள்கிறோம். நாம் எதையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அவ்வாறு செய்தவர்கள் வெறுத்து போய் அமைதியாக இருந்து விடுவார்கள். நம் செயல் நேர்மையாக நியாயமாக நம் மனசாட்சிக்கு சரியாக இருந்தால் போதுமானது யாரை பற்றியும் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இதை உறுதியாக நம்புங்கள்.

நான் இணையத்தில் படித்து கொண்டு இருந்த போது லேனா தமிழ்வாணன் அவர்களின் இந்த பதிவை படிக்க நேர்ந்தது. இதில் என் மனதில் இருந்ததை அப்படியே கூறியது போலவே இருந்ததால் உங்களுடன் பகிர்கிறேன். இதை நான் கூறியதாகவே கூறி இருக்கலாம் இருந்தாலும் அனுபவம் மிக்க ஒருவர் இதை கூறுவதை கேட்கும் பொழுது அதற்க்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் வேறாக இருக்கும்.

இனி லேனா தமிழ்வாணன் அவர்கள்

"நம்மைக் கேலி செய்து மகிழ்கிறவர்கள் உண்டு. இவர்களைப் பெருந்தன்மையோடு விட்டுவிடலாம்.

ஆனால் நம்மை அவமானப்படுத்துகிறவர்களை என்ன செய்வது என்றே தெரியாதவர்கள் உண்டு.

நறநற என்று பல்லைக் கடிப்பவர்கள்; உனக்கு வச்சிருக்கேன், இரு, வரட்டும் என்று பதிலுக்குச் சந்தர்ப்பம் தேடுகிறவர்கள்; இந்த அவமானத்தை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை என்று அழுகிறவர்கள் ஆகியோர் அவமானங்களைக் கையாளத் தெரியாதவர்களே!

அவமானப்படுத்துகிறவர்கள் இந்த மூன்று செயல்களையும் கண்டு முன்னிலும் மகிழ்கிறார்கள். நறநற என்று கடிக்கிறவர்களைப் பார்த்தும், அழுகிறவர்களைப் பார்த்தும் அட நம் முயற்சிக்கு நல்ல பலன் என்று பூரிக்கிறார்கள். பதிலுக்கு அவமானப்படுத்த முன்வந்தாலோ, முன்னிலும் தீவிரமான அவமானப்படுத்தல்களுக்குக் களங்களை உருவாக்குகிறார்கள்.

இதற்கு ஈடுகொடுக்கக்கூடிய ஆற்றல் எத்தனை பேருக்கு இருக்கிறது? இவர்கள் எடுக்கும் வீரிய ஆயுதங்களுக்கு தாக்குப் பிடிக்க முடியாதவர்கள் எதற்காக அடுத்த கட்டத்திற்குப் போகவேண்டும்?

அப்படியானால் இவர்கள் செய்வதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போகச் சொல்கிறீர்களா? என்கிற கேள்வி எழுகிறது. நியாயமான கேள்வி.

அவமானப்படுத்துகிறவர்களைச் சக்கையாக ஏமாற்றவும்; அடங்கிப் போகவும்; இது வீண் வேலை என்று ஒதுங்கிப்போகவும் செய்ய ஒரே வழி. இவர்கள் தரும் அவமானங்களை ஏற்றுக்கொண்டு சற்றும் பிரதிபலிக்காமலும் பொருட்படுத்தாமலும் அலட்சியப்படுத்தியும் நடந்து கொண்டால், சே! இது வீண் வேலை என்று வெறுத்துப் போகிறார்கள்.

வீசிய பந்தைத் திருப்பி அடித்தால்தானே எதிராளி மறுபடி வீசுவான்?"

THANKS TO SOURCE: http://www.giriblog.com/2009/07/blog-post_27.html

4 comments:

sowri April 23, 2010 at 2:45 PM  

I was fuming for last 36 hours with "not knowing" to handle a situation like this. Your post was just on time and much useful to comeout of the situation. Thank you very much

இளையான்குடி குரல் April 23, 2010 at 4:24 PM  

DEAR SOWRI,

I AM SO HAPPY THAT THIS ARTICLE WAS USEFUL TO YOU.

BE KIND ENOUGH TO INTRODUCE THIS SITE TO ALL OF YOUR FRIENDS.

REGARDS.
ILAYANGUDI KURAL

நளினி சங்கர் April 23, 2010 at 7:37 PM  

அன்பு நண்பரே,
நல்ல பதிவு. ஆனால், பல முறை,பொது மேடைகளிலும், நேர்காணல்களிலும் உளறிக்கொட்டி சர்ச்சைகளில் சிக்கிக்கொண்ட ரஜினியை நீங்கள் உதாரணம் கொள்வது பொருத்தமாக இல்லை. நான் அறிந்தவரையில் சச்சின் டெண்டுல்கரை இதற்கு உதாரணமாக சொல்லலாம். அவரைப்பற்றிய பல அவதூறுகளுக்கும், அவமானங்களுக்கும் எந்த காலத்திலும் வார்த்தைகளால் பதில் சொல்லும் பழக்கம் இல்லாதாவர். மாறாக, தன் பேட்டிங்கின் போது, வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் பௌண்டரி லைனுக்கு அனுப்பி பலமுறை பதில் சொல்லி எதிராளிகளை வாயடைக்க வைத்திருக்கிறார். இந்த தன்மை அவர் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்தே அவரிடம் இருந்து வருவதை மிகவும் பிரம்மிப்புடனே பார்த்து வருகிறேன்.

உங்கள் வலைப்பக்கத்தை நீங்கள் கட்டமைத்திருக்கும் விதம் அருமை. என்னுடைய வலைப்பக்கத்தினையும் இது போல் கட்டமைக்க உங்கள் உதவி தேவை முடிந்தால் உதவவும்.

வாழத்துக்கள்

இளையான்குடி குரல் April 23, 2010 at 8:22 PM  

DEAR SHANKAR,

THANK YOU FOR YOUR COMMENTS.

THA ABOVE ARTICLE WAS REPUBLSHED

FROM THE SOURCE
http://www.giriblog.com/2009/07/blog-post_27.html

I FOUND IT AND REPUBLISHED IT.
**********
THANK YOU FOR COMMENTING ABOUT MY BLOG TEMPLATE

YOU CAN DOWNLOAD THE TEMPLATE
FROM THE FOLOWING SITE :

http://www.ourblogtemplates.com/2008/09/blogger-template-palm.html

YOU CAN DOWNLOAD THE TEMPLATE AND SET THE COLOURS OF YOUR CHOICE.
++++++++++++++
http://www.ourblogtemplates.com/
HAS HUNDRED OVER TEMPLATES. MINE IS CALLED "palm".


AS I FOUND YOU HAVE SEVERAL BLOGS,
TRY IT IN ONE YOUR BLOGS AS A TEST AND IMPROVE IT TO YOUR DESIRE.

GOOD LUCK AND REGARDS.
ILAYANGUDIKURAL.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP