என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

சிரிக்க- எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா? JOKES

>> Monday, January 18, 2010

எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா?-தப்பிக்கவா தெரியாது -காலை வெட்டினா என்ன ஆகும்? -வயசைப் பத்தி….-எப்போலேருந்து இந்த கெட்ட பழக்கம்?-எங்கெங்கு தொட்டாலும்…நியூட்டனின் மூன்றாம் விதி-தமிழ் பேசு – தந்திரங்கள் தூசு!-இடுப்பைக் களைவதாம் நட்பு…


எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா?


அந்த இந்தியர் முதல் முறையாக ஸ்பெயின் போயிருந்தார்.
புல் பைட் என்று உலக அரங்கில் புகழ் பெற்ற காளைச் சண்டை பார்த்து விட்டு வெளியே வந்தார். சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குள் போனார். எல்லா ஐட்டங்களும் மசமசவென்று இருந்தன. என்னத்தைச் சாப்பிடுவது என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி.

எதிர் மேசையில் ஒருத்தர் தட்டில் பீட்-ரூட் சைசில் செவசெவ என்று எண்ணை போட்டு வறுத்த இரண்டு சமாச்சாரங்கள் இருந்தன. பார்க்கிற போதே இவருக்கு நாக்கில் எச்சில் ஊறியது.

“எனக்கும் அதுவே ஒரு ப்ளேட்”
“மன்னிக்கணும் சார். அது ஸ்பெஷல் ஐட்டம். ஒரு நாளைக்கு ஒண்ணுதான் கிடைக்கும். வேணும்ன்னா இன்னைக்கு புக் பண்ணிக்கங்க. நாளைக்கு தர்றேன்”

“ஏன் ஒண்ணே ஒண்ணுதான்னு சொல்றே?”
“புல் பைட் ஒரு நாளைக்கு ஒரு ஷோ தானே.. பைட் முடிஞ்சதும் பாடி எங்களுக்கு வந்துடும். இன்னைக்கு வந்த மாட்டோட டெஸ்ட்டிக்கில்ஸ் இது”
“நாளைக்கு எனக்கு கட்டாயம் கிடைக்குமில்லே?”
“ஓ… பேஷா”

மறுநாள் சீக்கிரமே போய் நாக்கை சப்புக் கொட்டியபடி காத்திருந்தார்.
ஒரு வழியாக ஐட்டம் வந்தது.

இந்தியருக்கு ஏமாற்றம்.
அவருக்கு தரப்பட்ட தட்டில், சின்னதாக சீடை சைசில் கருகிப் போய் இரண்டு உருண்டைகள்!

“என்னய்யா…வெளியூர்க்காரன்னு ஏமாத்தறீங்களா? எந்த மாட்டுக்குய்யா இவ்வளவு சின்னதா இருக்கு?”
“அய்யா, எல்லா நாளும் மனுஷனே ஜெயிக்கிறது இல்லைங்க. இன்னைக்கு மாடு ஜெயிச்சிடிச்சு”
---------------------------------
தப்பிக்கவா தெரியாது

“ஏய், என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங் கிளம்பிட்டே?”
“முண்டம், கண்ணு தெரியல்லையா? இது நாய்”
“தெரியும். நான் கேட்டது நாய் கிட்டே”
==========================
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”
“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
-------------------------------------------------
தப்பிக்கவா தெரியாது?

அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,

“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.

“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,

“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.
----------------------------------------------
காலை வெட்டினா என்ன ஆகும்?

ஒரு ஆள் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு, “குதி” என்றார்.
சில வினாடி தாமதத்துக்குப் பிறகு அது குதித்தது.
இரண்டு கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
இன்னும் கொஞ்சம் தாமதத்துக்குப் பிறகு அது குதித்தது.
மூன்று கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
மிகுந்த சிரமத்துடன் அது குதித்தது.
நாலு கால்களையும் வெட்டி விட்டு “குதி” என்றார்.
ரொம்ப நேரமாகியும் எதுவும் நிகழவில்லை.
அவர் தன ஆராய்ச்சிக் குறிப்பில் பின் வருமாறு எழுதிக் கொண்டார்.
‘தவளையின் நாலு கால்களையும் வெட்டி விட்டால் அதற்கு இரண்டு காதுகளும் கேட்காது’
----------------------------------
வயசைப் பத்தி….

எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ச்சே! ஒருபயலுக்காவது இன்றைக்கு நம்ம பிறந்த நாள்ன்னு தெரியலையே.
ஒருத்தொருத்தனுக்கு ஊர் பூரா போஸ்டர் ஒட்டுகிறார்கள். வீட்டு வாசலில் தொண்டர்கள் முட்டி மோதுகிறார்கள். ரூபாய் நோட்டு மாலை போடுகிறார்கள். தங்க வாள், வைர வாள் எல்லாம் பரிசு தருகிறார்கள்.
அட்லீஸ்ட் ஒரு போன் கால் அல்லது எஸ்.எம்.எஸ்?

ம்ம்ம் ஹூம்….
நன்றியில்லாத ஜனங்கள். பொதுச்சேவை என்கிறதே ஒரு தாங்க்லேஸ் ஜாப். வீட்டிலே சாக்கடை அடைத்துக் கொண்டதற்கெல்லாம் ஒரு மனுவைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இது ஞாபகமிருக்காது. அவ்வப்போது பேச்சுவாக்கில் என்றைக்குப் பிறந்த நாள் என்பதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். இதுக்கு மேலே என்ன பண்றது…

சலிப்போடு உட்கார்ந்திருந்த எழிலரசனை, அவர் மகன் சொன்னது உற்சாகப் படுத்தியது.

“அப்பா, பக்கத்து வீட்டு மாமா உன் வயசு பத்தி எதோ சொல்றார்”
ஆஹா… ஏகாம்பரத்துக்கு என் பேரில் இத்தனை பிரியமா!
விடு விடுவென்று எழுந்து வாசல் பக்கம் போனார்.

“வாங்க ஏகாம்பரம். எங்கே மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன். இவ்வளவு ஞாபகமா வந்திருக்கீங்க…”

“மறக்கிற மாதிரியாய்யா நடந்துக்கிறீங்க. ரெண்டு கழுதை வயசு ஆச்சில்லே? உங்க வீட்டு குழந்தைக்கு என் வீட்டு வாசல்தான் டாய்லேட்டா? ஒரு தடவை சொன்னா மண்டைலே உறைக்காதா?”
----------------------------------------------------
எப்போலேருந்து இந்த கெட்ட பழக்கம்?

சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியவர்,

“ஏம்ப்பா தம்பி, உனக்கு என்ன வயசாச்சு?”
“பன்னண்டு”
“எத்தனை நாளா இந்த சிகரெட் பழக்கம்?”
“ரெட் லைட் ஏரியா போன அன்னிலேருந்து”
“அடக் கடவுளே! ரெட் லைட் ஏரியாவா? அது என்னைக்கு போனே?
“நினைவில்லே, அன்னைக்கு ஓவராக் குடிச்சிருந்தேன்”
============================
எங்கெங்கு தொட்டாலும்…

“டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது”
“எங்க தொட்டாலுமா?”
“ஆமாம் டாக்டர்”
“எங்கே, இடது காலைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“வலது கால்”
“வலிக்குது டாக்டர்”
“கண்ப்யூசிங்…கழுத்தைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“மர்மமா இருக்கே… மாரைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“தரோவா புரியலை…தலையைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“ம்ம்ம்ம்… இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்… போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்”
“சரி டாக்டர்”

இரண்டு நாளாயிற்று.
“என்ன டாக்டர், ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சதா?”
“ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே பிராக்ச்சர்”
---------------------------------------
நியூட்டனின் மூன்றாம் விதி

ஒரு ஆளுக்கு வேலை கொடுக்கிற போது action, reaction இரண்டையும் சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால் குழப்பங்களை சந்திக்க நேரிடும்.
அது மழைக்காலம்.

அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி இதைத் தடுக்க ஒரு ஆளை வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் அவருக்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.
அந்த மனிதர் வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.
“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”

“என்கிட்டே குடையே இல்லியே?”
“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”

இவர் பரவாயில்லை. இந்த நர்சின் கதையைக் கேளுங்கள்,
ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு தரம் நோயாளி ஒருத்தருக்கு டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார்.

நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்தாள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
--------------------------------
தமிழ் பேசு – தந்திரங்கள் தூசு!

வியாபாரத் தந்திரங்கள் தெரிந்துகொள்ள எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உங்களில் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம்.
துணிக் கடையில் பான்ட் துணி வாங்கப் போகும் போது, ரொம்ப சுமாரானவைகளையே கடைக்காரர் காட்டிக் கொண்டிருப்பார். அலமாரியில் காட்டி “அதோ அதெல்லாம் நல்லா இருக்கே எடுங்க” என்று சொன்னால்
“அதெல்லாம் காஸ்ட்லி ஐட்டம் சார்” என்று உங்கள் ஈகோவைப் பிராண்டுவார்.

இதிலிருக்கும் சூழ்ச்சி தெரியாதவர்கள் உடனே சிலிர்த்துக் கொண்டு
“காஸ்ட்டைப் பத்திக் கவலை இல்லை” என்பார்கள்.
அவ்வளவுதான். அதற்கப்புறம் யானை விலை ஐட்டம் முழுசையும் விற்று விடுவார் கடைக்காரர்.

எங்கள் ஊரில் ஒரு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் இருந்தார். மகா கஞ்சர். சுலபத்தில் எதுவும் வாங்கி விட மாட்டார். ஆனால் தமிழ் மேல் அலாதி பிரியம் கொண்டவர். தமிழ்த் திறமை எங்கே இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவார். அவரை பொருள் வாங்க வைக்க மார்க்கெட்டில் இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள்.

கறிகாய்க் கடை பழனிக்கு அவர் குணம் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரை கவிழ்ப்பதற்கு புதுப் புது பொறிகள் வைப்பான்.
நன்றாகப் பழுத்து கும்ம் என்று வாசனை அடிக்கும் கொய்யாப் பழங்களைக் காட்டி

“அய்யா, கொய்யாக்காய் வாங்கிக்கங்க” என்பான்.
“பழம்ன்னு சொல்லு. பக்கத்து ஊர் வரைக்கும் வாசனை வருது, இதைப் போய் காய்ங்கிறியே”
“உங்க கிட்டே படிச்சிட்டு எப்டிய்யா இலக்கணப் பிழையோட பேசறது?”
“எது இலக்கணப் பிழை?”
“அய்யா, இதெல்லாம் கொய்யா(மல் விடப்பட்ட) காய்கள். அப்படி விட்டதால் கனிகளா ஆனவை. இதையெல்லாம் கொய்யாக் காய்கள்ன்னும் சொல்லலாம், கொய்த கனிகள்ன்னும் சொல்லலாம்”
கேட்க வேண்டுமா?

ஆசிரியர் அகமகிழ்ந்து ஒரு டசன் வாங்கிக் கொண்டார்.
அடுத்த நாள் மார்கெட் பக்கம் வந்த ஆசிரியர்,
“என்னப்பா.. இன்னிக்கு என்ன புதுசா?” என்றார்.
“இன்னைக்கு கல்கட்டாப் புடலங்காய்தான் ஐயா புதுசு”
“இங்கே பார், நீ நேத்து சொன்னது நல்ல தமிழ் விளக்கம். அதனாலே பழம் வாங்கினேன். கல்கத்தாவிலே புடலங்காய் விசேஷமா? சும்மா விக்கணும்ங்கிறதுக்காக பொய் பேசக்கூடாது”

“பொய்யெல்லாம் ஒண்ணுமில்லை. கல் கட்டாம வளர்த்த புடலங்காய் இதுன்னு சொன்னேன்”

புடலங்காய்கள் பிஞ்சாக இருக்கும்போது வளையாமல் இருக்க கல்லைக் கட்டி விடுவார்கள்.
ஆசிரியரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இரண்டு புடலங்காய்களை வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
----------------------------------------
இடுப்பைக் களைவதாம் நட்பு…

அவன் மனைவி ஒரு பேரழகி.
ஊரே அவனைப் பொறாமையாகப் பார்த்தது.
அவனுக்கு ஊர் மீதும் நம்பிக்கையில்லை, மனைவி மீதும் நம்பிக்கை இல்லை.
ஒரு சமயம் அவன் படைக்குத் தலைமை ஏற்று போருக்குப் போக வேண்டியிருந்தது. மனைவியைத் தனியாக விட்டுப் போக வேண்டியிருப்பது உறுத்தலாக இருந்தது. மனைவியின் இடையை இரும்புத் தகடுகளால் மூடிப் பூட்டினான்.

சாவியை உயிர் நண்பனிடம் கொடுத்தான்.

“நண்பா, இந்த உலகத்தில் உன்னைத் தவிர யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவி மேல் கூட நம்பிக்கை இல்லை. இந்த சாவியை வைத்துக் கொள். ஒருவேளை போரில் நான் இறக்க நேரிட்டால் இவளது அழகும் இளமையும் வீணாகக் கூடாது என்பதால்தான் சாவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.” என்று நாத்தழுதழுக்க சாவியை ஒப்படைத்தான்.
நண்பனும் கண்களில் நீர் முட்ட விடை கொடுத்தான்.

அவன் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.

வீதியின் கோடியை அடைவதற்குள், பின்னால் யாரோ அழைக்கிற சப்தமும், ஓடி வருகிற சப்தமும் வந்தது.
திரும்பினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தது அவன் நண்பன்.
“என்ன நண்பா?”
“தப்பான சாவியைக் கொடுத்து விட்டாய்”
---------------------------------------------------
“தலைவரே, அங்கே ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு வர்றது பையனா பொண்ணா?”
“யோவ்.. பல்லு எகிறிடும் அது என் பொண்ணு”
“சாரி சார், நீங்கதான் அவளோட அப்பான்னு தெரியாம சொல்லிட்டேன்”
“நான் அவங்க அம்மாடா வெண்ணை”
_____________________________________________________________
“என்ன சார் கால்லே கட்டு?”
“வீட்லே மாடிப்படி ஏற்ரப்போ விழுந்துட்டேன்”
“உங்க வீட்லேதான் மாடிப்படியே கிடையாதே?”
“இருட்டுலே அது தெரிஞ்சா நான் என் கீழே விழப் போறேன்”
_____________________________________________________________
அவருக்கு பயங்கர தொண்டை வலி. பேசவே முடியாமல் கிசு கிசுத்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தார். எதிர் பிளாட் டாக்டருடையதுதான் என்றாலும் மணி ராத்திரி ரெண்டாகிறதே இப்பப் போய் தொந்தரவு செய்வதா என்று தயங்கினார்.
வலி தாங்கவில்லை.
எதிர் பிளாட்டுக்குப் போனார்.
அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்.
அரைக்கதவு திறந்தது.
“யார் வேணும்…?” என்றது தூக்கக் கலக்கமான பெண் குரல்.
“டாக்டர் இருக்காரா?” என்றார் இவர் கிசு கிசுப்பான குரலில்.
“இல்லே… சீக்கிரம் உள்ளே வாங்க” என்றது குரல்.
---------------------------
டைரக்டர் : “ம்ம்ம்..உங்க கதையை சொல்லுங்க”
கதாசிரியர் : “சார், நான் ரொம்ப ஏழை. என்ன நம்பி வீட்லே ஆறு ஜீவன் இருக்கு. எப்படியாவது எனக்கு நீங்க…..”
டைரக்டர் : “”அடச்சீ, நீங்க கொண்டு வந்த கதையை சொல்லுங்கன்னேன்..”
_____________________________________________________________
“இந்தக் கதையை படமா எடுத்தா போட்ட பணத்தை ஒரே வாரத்துலே எடுத்துடலாம்ன்னு ஒரு படம் எடுத்தீங்களே, என்ன ஆச்சு?”
“பாங்கிலே போட்டிருந்த பணத்தை எல்லாம் ஒரே வாரத்துலே எடுக்கிறாப்பல ஆயிடிச்சு”

THANKS TO :JAVAHAR. இதயம் பேத்துகிறது
http://kgjawarlal.wordpress.com/

2 comments:

sarvan January 19, 2010 at 5:33 PM  

ஹா ஹா ஹா !!!

Govind January 27, 2010 at 3:04 PM  

ihm..nalla nagaichuvai. pagirnthu kondatarku romba nandri.

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP