என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இளையாங்குடியில் பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா?

>> Friday, October 23, 2009

பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா?
ஜனாப் ஹிலால் ஆலம். சிங்கப்பூர்.

தாங்கள் அனைவரின் மீதும் (இறைவனின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகுக…

கடந்த சில நாட்களாக நடைபெறும் பாலிடெக்னிக் அல்லது பொறியியற் கல்லூரி தொடங்குவது பற்றிய விவாதங்களை கவனித்து வந்தேன். வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலையில் நிறுவனங்கள் அதிக திறமைகளையும் பலதுறைகளில் நிபுணத்துவம் உடைய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஆகவே பொறியியல் கலை மட்டும் பயின்ற மாணவர்களின் நிலையே மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக உள்ளது. முன்பு பாலிடெக்னிக் படித்தவர்களின் சில இடங்களை தற்போது பொறியியல் கலை பயின்றவர்கள் வேகமாக நிரப்பிவரும் நிலை காணப்படுகிறது.

இதற்குக் காரணம் அவர்கள் இயக்கும் கணணி கட்டுப்பாட்டிலுள்ள நவீன இயந்திரங்கள், மேற்பார்வையிடும் திறன்மிகு பணிகள் மற்றும் பணியாளர்களின் நவீனப் பயிற்சிக்கு பாலிடெக்னிக் பயின்றவர்களினால் தற்போது ஈடுகொடுக்க முடியவில்லை.

நான் கூறுவது எல்லா துறைக்கும் பொருந்தும். ஆகவே பாலிடெக்னிக் மாணவர்கள் சிறிது பயிற்சி எடுத்தபின் இயந்திரங்களை இயக்கும் பணிக்கே பெரும்பாலும் அனுப்பப்படுகிறார்கள்.

சிறிய நிறுவனங்களில் அதிக வருட அனுபவங்களுக்குப் பிறகே அவர்கள் கண்காணிப்பாளர்களாக பொறுப்பேற்கிறார்கள். குறு நிறுவனங்களே தற்போது பாலிடெக்னிக் பயின்றவர்களை வரவேற்கின்றன.


10 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைமை கிடையாது. பாலிடெக்னிக் பயின்றவர்கள் பொறியிலாளருக்கு உதவி பிரிவில் இருந்து வந்தனர். நவீனத்துவம் மற்றும் கடும் போட்டி காரணமாக பாலிடெக்னிக் பயின்றவர்கள் நிர்வாகத்துறைக்கு வேகமாக முன்னேறுவது தற்போது மிகவும் கடினமாக உள்ளது.

ஆகவே பாலிடெக்னிக் ஆரம்பிப்பதால் பெரிய நிறுவனங்களில் “இரண்டாம்” இடத்திலேயே வைக்கப்படும் பணியாளர்களையே நாம் உருக்க விழைகிறோம். இது நம் சமூகத்திற்கு என்றும் உதவாது.

நாம் நம்மை முதல் தரத்திற்கும் இடத்திற்கும் தயார்படுத்தவேண்டும். 20 வருடங்களுக்கு முன் பாலிடெக்னிக் ஆரம்பிக்கும் காலகட்டங்களில் ஐடிஐ ஆரம்பித்தோம்.

தற்போது பொறியியற் கல்லூரி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் பாலிடெக்னிக் பற்றி சிந்திப்பது நம்முடைய தன்னம்பிக்கையின்மையை அல்லது (பெரும்) முயற்சியின்மையை காட்டுகிறது. ஆகவே நம்முடைய முயற்சியை பொறியியற் கல்லூரி ஆரம்பிப்பதில் செலவிடலாம்.

நோக்கம் மற்றும் வழிமுறைகள் ( Vision and Mission)?

“நம்மூரில் ஒரு தொழிற்கல்வி நிறுவனம் வேண்டும்” என்பது அனைவரது ஆசைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அதனை அடையும் வழிமுறைகளும் விவாதிக்கப்படவில்லை.

இந்த இரண்டையும் தீர்மானித்தப் பிறகே கேபிடல் பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பட்ஜெட் பற்றியே யோசிக்கவேண்டும். நம் பொறியியற் கல்லூரியின் நோக்கம் என்ன?

யாருக்காக (இருபாலருக்கும் என்று அனுமானிக்கிறேன்) கல்லூரி?


1. நம் ஊர் மற்றும் சுற்றுப்புற மாணவர்களுக்காகவா?
2. நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காகவா?
3. பெரும்பாலும் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிறிதளவு மற்ற சமூகத்தினருகுமா?
இது மிகவும் முக்கியமான கேள்வி. இதன் பதில் அடிப்படையில் தான் யாரிடமிருந்து நிதியுதவி பெறுவது என்பதை திட்டமிடவேண்டும்.

எதற்காக கல்லூரி துவங்க வேண்டும்?
கல்லூரியின் நோக்கம் இங்கு தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் கல்லூரி நிறுவுவதற்கு எவ்வளவு தேவை என்பதை நிர்ணயிக்கமுடியும்.

1. (பெரும்பாலான) மாணவர்கள் படித்தபிறகு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்காகவா?
2. (பெரும்பாலான) மாணவர்கள் மேற்படிப்பிற்கு தயார் படுத்துதலுக்காவா?
3. (பெரும்பாலான) மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தொழில் துறைகளில் புகுத்துவதற்காகவா?
4. (பெரும்பாலான) மாணவர்கள் தாங்களாகவே தொழில் துவங்குவதற்காகவா? 5. தலைசிறந்த ஆய்வகங்கள் கொண்ட கல்லூரியாக விளங்குவதற்காகவா?
6. எல்லா மாணவர்களையும் பட்டதாரிகளாக்குவதா?

அனைத்தும்தான் என்று கூறுவது இலக்கற்ற ஓரு முயற்சி. வெற்றி பெறாது. மேற்கூறிய 6 வகைகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. (பெரும்பாலான) மாணவர்கள் படித்தபிறகு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்காகவா?: இதற்கு மிகவும் வசதியான ஆய்வகக்கூடம் அவசியம். நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கூடங்களை பார்த்த பிறகே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்வருவார்கள். பேராசிரியர்கள் அந்தந்த துறைகளில் சராசரி அறிவை கொண்டிருந்தால் போதும். அதற்கேற்றவாறு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கு மாணவர்களின் பட்டம் B.Tech (/ M.Tech) என்று இருப்பது நலம். உதாரணம் PSG Tech, Coimbatore.

2. (பெரும்பாலான) மாணவர்கள் மேற்படிப்பிற்கு தயார் படுத்துதலுக்காவா?: இதற்கு சராசரியான ஆய்வகக்கூடம் இருந்தாலே போதும். பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான பொறியியற் கல்லூரி இந்த வகையைச் சார்ந்தது. கேம்பஸ் இண்டர்வியூ இங்கும் உண்டு ஆனால் (கணிப்பொறியைத் தவிர மற்ற துறையில்) இது மிகவும் குறைந்த முக்கியத்துவம் கொண்டது. பேராசிரியர்கள் அந்தந்த துறைகளில் சராசரி முதல் நல்ல அறிவை கொண்டிருத்தல் வேண்டும். மாணவர்களை அடுத்த கட்ட நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்த வேண்டுமல்லவா? அதற்கேற்றவாறு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கலாம். மாணவர்களின் பட்டம் B.E (/ M.E) என்று பெரும்பாலும் இருக்கும். உதாரணம் மற்ற தனியார் பொறியியற் கல்லூரிகள்.

3. (பெரும்பாலான) மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் துறைகளில் புகுத்துவதற்காகவா?:
மதுரைக்கு அருகில் MEMPCO என்ற பொறியியற் கல்லூரி உள்ளது. Metal Powder Company என்ற அந்த (வெடிபொருட்களுக்கான) உலோகதூள் தயாரிக்கும் நிறுவனத்தின உதவியால் நடத்தப்படும் இதில் அந்த நிறுவனத்திற்குத் தேவையான மனிதவளங்களை உற்பத்தி செய்கிறார்கள். மற்றொரு உதாரணம் பிர்லா க்ரூப்பின் BITS, Pilani.. இவ்வகையான கல்லூரித் திட்டம் நமக்கு தற்போது உதவாது. எனினும் கணணித் துறையை மட்டும் இந்த மாடலுக்குள் கொண்டுவரலாம். இங்கு மாணவர்களின் பட்டம் அனேகமாக B.Tech (/ M.Tech) என்று இருக்கும்.

4. (பெரும்பாலான) மாணவர்கள் தாங்களாகவே தொழில் துவங்குவதற்காகவா??: அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு மாடல். வேறு எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை. இதற்கு ஆய்வகமும் பேராசிரியர்களும் அந்தந்த பாடங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும். இந்த மாடலும் நமக்குத் தற்காலிகமாக ஒத்துவராது. எனினும் 20 வருடங்கள் கழித்து incubation center அமைக்கும் போது இந்த மாதிரியை கல்லூரியில் இணைக்கவேண்டும்

5. தலைசிறந்த ஆய்வகங்கள் கொண்ட கல்லூரியாக விளங்குவதற்காகவா? இதுவும் தற்போதைக்கு ஒத்துவராத ஒரு மாடல். ஐஐஎஸ்ஸி, ஐஐடி, என்ஐடி ஆகிய அரசாங்க ஆதரவினால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு ஏற்றவை.

6. அதிக பட்டதாரிகளை உருவாக்குவதா? இந்தியாவின் வடகோடியிலிருந்து தென்முனைவரையிலும் உள்ள லாபநோக்கத்தோடு நடத்தப்படும் எல்லா பொறியியற் கல்லூரியின் மாடல் இது.

நமக்கு பொறியியற் கல்லூரி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவதும் இவைதான். டைம் ட்ரஸ்டின் 1.5 கோடி ரூபாய் தேவையோ அல்லது ஜனாப் முகம்மத் அலி ஐபிஎஸ் அவர்களின் ஆடுதுறை கல்லூரியைப் பற்றிய குறிப்பேடோ இந்த சிந்தனையின் அடிப்படையில் வந்ததாக இருக்கவேண்டும்.

அதற்கு தற்போது அவசியமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம்முடைய மாடல் எது என்று கணித்தப்பிறகே எந்த கல்லூரியின் மாடலைப் பின்பற்றுவது என்ற கேள்வி வருகிறது. எவ்வளவு வேண்டும் என்ற தேவையும் எழுகிறது.

(பொறியியற்) கல்லூரி என்பது வெறும் நிலம், உயர்ந்து நிற்கும் கட்டடம், அடிப்படையான ஆய்வுக்கூடம் மற்றும் பொறியியல் பயின்ற ஆசிரியர்கள் கொண்ட கூடாரம் அல்ல.

அது நோக்கம் (Vision) அந்த நோக்கத்தை அடையும் வழிமுறைகள் ;(Mission) அதன் மூலம் உருவாக்கப்படும் மதிப்பு (Value Creation) அதனால் சமூகம் அடைந்த நன்மை (Contribution to our Soceity) ஆகியவைகளின் கலவை.

இவைதான் கல்விக்கூடம். இது பொறியியற் கல்லூரிக்கும் மிகவும் பொருந்தும். இடம், கட்டடம் ஆகிய மற்ற இத்யாதிகள் நம்முடைய நோக்கத்தை அடையும் உபகரணங்கள் தான் Material Tools.

இளையான்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் நோக்கத்தில், அது காரைக்குடி வழியாகவா அல்லது மதுரை வழியாகவா (எரிபொருள் செலவுக்காக) என்ற வழியைத் தீர்மாணித்த பின் யார், எத்தனை பேர் என்று முடிவு செய்த பிறகுதான், வாடகைக்கு காரா, வேனா அல்லது பஸ் வேண்டுமா என்பதை தெரிவுசெய்யவேண்டும்.

தாங்கள் ரூ1.5 கோடி என்று வரையறுத்ததும் ஆடுதுறைக் கல்லூரியை உடனே உதாரணம் கொண்டதும் நோக்கமின்றி வாகனத்தை தேர்ந்தெடுத்தது போலாகிவிடும்.

மேற்கண்ட இலக்கைத் தெளிவாக வரையறுத்தப்பின்னே எவ்வளவு தேவை என்பதை நாம் முடிவுகட்டவேண்டும்.

எப்படி நிதி திரட்டவேண்டும்?
நோக்கத்தை தெளிவுபடுத்தியபின் தான் நிதி திரட்டலை பற்றி சிந்திக்கவேண்டும். இந்த கல்லூரியானது முஸ்லீம் சமூகம் அனைத்திற்கும் என்றால் மாநில அளவில் நிதி திரட்டலாம். நாம் மற்றும் நம்மை சுற்றி மட்டும் என்றால், அது சற்று கடினம் தான். நம்மவர்களால் எவ்வாறு (உதாரணத்திற்கு) 3 கோடி வரையில் கொடுக்கமுடியும் என்பது தெரியவில்லை.

ஆகவே அதற்கு Revenue Model ஒன்று தயார் செய்திடல் வேண்டும். நமக்கு பரிச்சயமாகாத ஒரு மாடல் இது. ஆகவே சற்று மலைப்பாக இருக்கும்.

அதாவது, அடிப்படை தேவைகள் மற்றும் துறைகளை மட்டும் ஆரம்பித்து, தொழிற்துறையுடன் கூட்டுறவு வைத்து அவர்களுக்காக கன்சல்டன்சி மற்றும் Real Time Project ஆகியவற்றை செய்திடல் வேண்டும். அதற்கென
Industrial Center and Sponsored Research ஒன்று நிறுவப்படவேண்டும்.

அந்தந்த பேராசிரியர்களின் பொறுப்பில் அதனை விட வேண்டும். MIT (USA), NTU (Singapore) போன்ற வெளிநாட்டு கல்லூரிகளைப் போல் அவர்கள் கல்லூரியில் சேர்ந்த 4 வருடங்களுக்குள் பெரிய அல்லது மத்திய தர நிறுவனங்களிடமிருந்து Project கொண்டு வரவேண்டும். அதில் 25 சதம் கல்லூரிக்காவும் 70 சதம் Project -க்காவும் செலவு செய்தால் ஆய்வகம் விரித்தியடையும். 5 சதம் அந்த பேராசிரியருக்கு செல்லும்.

இதன் மூலம் அந்த Project தந்த நிறுவனத்திற்கு மனித வளமும் கிடைக்கும். அந்த பேராசிரியகளால் Project கொண்டு வரமுடியாவிட்டால், அவர்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை.

ஆகவே 2 முக்கிய துறைகளை முதலில் நிறுவி, உலகலாவிய புகழ் பெற்ற பேராசிரியர்களை அழைத்து இந்த முயற்சியை கொள்ளலாம். இதன் மூலம் காலப்போக்கில், கல்லூரி தன்னிறைவு அடைவதுடன் மற்றவர்களின் துணையை நாட அவசியமில்லை. மேலும் ஆய்வகம் உலகத்தரம் வாய்ந்ததாக மாறுவதுடன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் அமையும். இது நான் விவாதித்த 6 வகைகளில் முதல் வகை. சிறிது சிறிதாக வளர்ச்சியடையலாம். Sequential growth through concurrent planning.யாரேனும் நன்கொடையளித்தால் அதை போனஸாகவே கொள்ளவேண்டும். நன்கொடையை சார்ந்து கல்லூரிகள் செயல்படக்கூடாது. மாணவர்களிடமும் நன்கொடை வசூலிக்கக்கூடாது.

யார் துவங்கவேண்டும்?
நிதித்தேவையை நிர்ணயித்தபின் ஒரு டிரஸ்ட் அமைத்து அதுவே அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டும். நிர்வாகத்திலும் அந்த டிரஸ்ட் தான் இருக்கவேண்டும். இந்த “அனைவருக்கும் பொது” மற்றும் “யார் வேண்டுமானாலும் நிர்வாகியாலாம்” என்ற தோல்வியடைந்த மாடலை முதலில் நாம் மறக்கவேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த மாடல் எவ்வாறு தோல்வியடைந்து விட்டது என்பதை நம் கண்கூடாகக் காண்கிறோம். நிர்வாகம் பல கைகள் மாறினால் நோக்கமும் வழிமுறைகளும் கெட்டுவிடும்.

புதியவர்களுக்கு, எப்பேர்பட்ட திறமைசாலியாயினும், கல்லூரியின் நோக்கம் மற்றும் நிர்வாகமுறைகள் அவர்களின் தலைக்குள் புகுவதற்குள் வெள்ளம் தலைக்கு மேல் போய்விடும். டிரஸ்டில் (உதாரணத்திற்கு) 10 பேர் உடைய Hierarchical முறையில் தாளாளராகப் பொறுப்பேற்க வேண்டும்.

10 வதாக உள்ள நபர் தாளாளராக ஆவதற்கு கிட்டத்தட்ட 15 வருடம் ஆகவேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அவரது தோள், எலும்பு, சதைக்குள் செல்லும். அப்படிபட்டவரால் தான் அடுத்த தலைமுறைக்கேற்ப அக்கல்லூரியை கொண்டு செல்லமுடியும்.

எவ்வாறு செயல் படவேண்டும்?
ஜப்பானிய பல்கலைக் கழகங்களில் உள்ளது போல் ஓவ்வொரு வருடமும் அல்லது இரு வருடங்களுக்கு ஒருமுறை இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிசிகன் பல்கலைக்கழகத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அங்கு 1995 – ல் ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கான இலக்கு நிர்ணயம்,
“TQM 401 was intended for graduate seniors in Industrial Engineering who would be expected to participate in ever growing TQM activities in companies that will be hiring them next…”

அதைவிடுத்து “யார் வேண்டுமானாலும் ராஜாவாகலாம்” என்ற தூசி படிந்த முறையை (நம் கல்லூரி மற்றும் பள்ளி மாடலைப்) பின்பற்றினால் மீண்டுமொரு வீழ்ச்சிக்கு நாம் இப்போதே முயற்சிக்கிறோம் என்று பொருள்.

எங்கே கல்லூரித் துவங்க வேண்டும்?
இளையான்குடியிலேயே தான் துவங்கவேண்டும் என்பது தெளிவான பதில். நம்முடைய நோக்கத்தின் அடிப்படையில் இடத்தைத் தேர்வு செய்யும் போது தொலைநோக்குப் பார்வை கொள்ள வேண்டும். விவசாய நிலம் அல்லாத 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்குபேசன் (inஉரடியவழைn உநவெநச) மற்றும் தொழிற்பேட்டைகள் அருகிலேயே அமையுமாறு இடங்களை தெரிவு செய்யவேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம்.

பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா? style="color:#000099;"> தலைமை பண்பு
மேற்கண்ட திட்டங்களை வகுத்து ஒரு தனித்தன்மை வாய்ந்த கல்லூரி நம்மூரில் நிர்மாணிப்பதற்கு வலிமை வாய்ந்த தலைமைத்துவம் வேண்டும். தன்னுடைய நோக்கத்தின் (Vision) அடிப்படையில் செயல்படவேண்டும். தன்னுடைய நோக்கத்தை (Vision) தெளிவாக மற்றவர்களுக்கு தெரிவிக்கப்படவேண்டும்.. The Strong leadership is required to articulate his vision and mission.

அந்தத் தலைவர் அல்லது தலைவர்களுக்கு ஆர்வம், ஆசை, செயல் ஆகியவற்றைவிட கனவு வேண்டும். தான் நிர்மாணிக்கும் கல்லூரி 10 வருடங்களில் இவ்வாறு இருக்கும் அல்லது 20 வருடங்களில் இவ்வாறு இருக்கும் என்ற கனவு இருப்பது மிகவும் முக்கியம். வளர்ச்சிக் காலகட்டங்களையும் அவர்தம் கனவில் கொண்டிருக்கவேண்டும்.

அத்தகையவரின் நிர்மாணிப்பே அதிக நிலைப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். தலைமை பண்பு என்பது மற்றவர்களை அதிகாரம் செய்வது அல்ல. தன்னுடைய ஏளைழைn – ஐ மற்றவரிகளிடம் படியவிடுவது ஆகும். அத்தகையவர்கள் நமக்கு வேண்டும். கல்வி துறையில் அத்தகையவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர் ஆசிரியராக, பேராசிரியராக இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதே மிகவும் முக்கியம். அவர்களிடமிருந்து அந்த வேட்கையை அடையாளம் காணவேண்டும்.

ஆனால் நம்முடைய கடந்த விவாதங்களில் அதிகமாக நிர்வாகிகளையே (management) சார்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் எனக்கு எழுகிறது. ஒரு தலைவரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்கள்தான் நிர்வாகிகளே (management) தவிர, அவர்கள் நிர்மாணிகள் (visionary founders) அல்லர்.

ஜனாப் முகம்மது அலி அவர்களின் செயல்திட்டததில் நிர்வாகம் சார்ந்தவர்களே உள்ளனர். It is too early to address them at this stage.

இந்த கனவைத் தற்போது தூண்டிய ஹாஜி முசாஃபர் மற்றும் டாக்டர் ஆபிதீன் ஆகியோர்களையே நான் visionary leader ஆக பார்க்கிறேன். அவரகளிடம் நிச்சயம் கனவு எளைரயட வடிவில் கண்டிப்பாக இருக்கும். அதை ஓட்டியே மற்றவைகள் திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். அவர்கள் தங்களுடைய கனவுத்திட்டத்தை விரிவாக விளக்கவேண்டும்.
நன்றி… வஸ்ஸலாம்

குறிப்பு: இந்த கட்டுரையில் யாரையேனும் புண்படித்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அது என் நோக்கமும் அல்ல.

ஜனாப் ஹிலால் ஆலம். சிங்கப்பூர்.

இதன் தொடர்பாக மேலும் படிக்க‌

9 comments:

Anonymous October 23, 2009 at 7:53 PM  

ஹிலால் ஆலம் அவர்களே, கட்டுரை அருமை, நன்றி.

இப்பொழுது இளையான்குடி சூழ்நிலையில்,புதியதாக ஒன்றை உருவாக்குமுன்,இதற்க்குமுன் ஆரம்பித்த கல்வி ஸ்தாபனங்களின் நிலை என்ன? முதலில் புரையோடி கொண்டிருக்கும் கல்வி நிலையங்களை காப்பாற்ற வேண்டும்.இது அரசியல் பானியில் நடக்கிறது,ஏதாவது ஒரு ஊழல் புகார் எழுந்து அதைபற்றி விசாரிக்கும் முன்,அதைவிட அடுத்த ஒரு திட்டத்தை காட்டி பழையதை மக்களை மறக்கச்செய்வதுதான் இன்றைய அரசியல் தந்திரம்.இதைதான் இவர்களும் செய்கிறார்கள்? இப்பொழுது இளையான்குடி கல்வி நிறுவனங்களில் நடக்கும் போட்டி,பொறாமை,மலிவடைந்த ஊழல் இவற்றை மறைக்க முயலுவதுதான் இந்த கூட்டு சதி(கூட்டு முயற்ச்சி) பெருந்தலைவர் காமராஜ் அவர்கள், தி.மு.க.விலிருந்து.பிரிந்து அ.தி.மு.க.உருவானவுடன் ஒரு நிருபர் அவரிடம் கருத்து கேட்டார். அவரின் பதில் 'ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்ன்னே;! என்று பதிலலித்தார்.. இந்த பதில் இவர்களுக்கும் பொருந்தும் இந்த டைம்ஸ்,எய்ம்ஸ் எல்லாவற்றிர்க்கும் ஓர் வேண்டுகோள்;முதலில்,இளையான்குடியில் முதன் முதல்,நான்,நீ,நாம்,நாங்கள்,நீங்கள் யாவரும் பயின்ற 'ரஹ்மானியா பாடசாலையை(சங்கப்பள்ளி) சீர்திருத்தி,செயல்படுத்த ஏன் நிங்கள் யாரும் முன்வரவில்லை? பாரம்பரியமிக்க, பழமையான நம் அத்தா,நன்னா பயின்ற பள்ளிக்கூடத்தை இவ்வளவு நலிவுற்று போக விட்டு விட்டீர்களே?ஏனெனில்,இதை செய்வதால் காசு வராது,பொறியியல் கல்லூரி என்றால் சொல்லத்தேவையில்லை? "முட்டாப்பயலை எல்லாம் தாண்டவக்கோனே, கல்வி(இஞ்சினியரிங்)முதலாளியாக்குதடா தாண்டவக்கோனே"
இளையாங்குடி.org. சைட்டில் இது விசயமாய் வந்த கமெண்ட்பகுதியில்,முஹமது அபுபக்கர்,வாஞ்சூர்,பானு,சுல்த்தான் துபாய்,இவர்கள் கமெண்ட்ஸ் படித்தால்,முஹமது அபுபக்கர் கமெண்ட் தான் சரி
இது எப்படி இருக்குதென்றால்,பிரசர்,நீரழிவு,வாதம்,கேன்சர் உள்ள நோயாளிக்கு முகத்துக்கு மட்டும் பியூட்டி பார்லர் போய் அழகு படுத்துவது மாதிரிதான இப்பொழுது நம் ஊருக்கு தேவை,நல்ல பணம் படைத்த,சமூக ஆர்வலர்கள் மட்டுமே,நிச்சயமாக அவர்களுக்கு காசு ஆசை வராது.

ஹிலால் ஆலம் அவர்களே, நீங்கள் எழுதியதற்குண்டான பலன் நிச்சயமாக ஒருநாள் வரும்.அதற்க்கு முன் விச செடிகளை(சமூக ஆர்வலர்கள் போர்வையில் உலவும் ரத்த உறிஞ்சிகள்) களை எடுக்க வேண்டும்.அதற்குண்டான முயற்ச்சிக்கு வழி வகுங்கள்
மு.ரியாஸ் அஹமத்

Anonymous October 23, 2009 at 11:05 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்

ஹிலால் ஆலம் அவர்களே very nice and thanks thay wiil think about this.
Riyas Mohamed அவர்களே யாரை அதற்க்கு உண்டாண வழி வகுக்கச் சொல்கிறீர்கள்‌
Sultan
Dubai

Unknown October 24, 2009 at 1:00 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்.
ஹிலால் ஆலம் அவர்கள் மிக தெளிவான,சிந்திக்ககூடிய வகையில் அவருடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.அவர் கூறியது போல் பொறியியல் கல்லூரி ஆரம்பித்து முதல்தரமான மாணவர்களை உருவாக்குவது தான் சிறந்தது. நமது இளையான்குடி பள்ளியிலும்,கல்லூரியிலும் உள்ள குறைபாடுகளை(சட்டங்களை) ஆராய்ந்து,அந்த குறைபாடு வராத படி புதிய கல்வி நிறுவனத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும்.

Unknown October 24, 2009 at 4:18 PM  

Very useful article. Jazakumulla Kair. But for engineering studies, the student need good analytical, communication & Islamic skills. In ilayangudi there is no muslim school have the above qualification. If u start an international school ( Like Zakir Naik…..)with less fee, it is more value than Engg college. People those who are studying this type of school have more skill than engineers. So they can come as a good engineers. They can easily get free seats in Govt colleges. Even with arts degree they can get a good job.

Anonymous October 24, 2009 at 4:47 PM  

நன்பர் ஜனாப் சுல்த்தான் அவர்களே,

புரியவில்லையா? ஜனாப் ஹிலால் ஆலம் போன்ற தெளிவான சிந்தனை உடையவர்களை; ஏன் நீங்களும் கூட?(துபாயில் இளையான்குடி வசூல்ராஜாக்களுக்கு என்ன மரியாதை என்று அழகாக எழுதினீர்கள்) உங்களைபோல் வெளிப்படையாக‌
கருத்துகளை பதிவு செய்பவர்கள் வழி வகுக்க வேன்டும்.தற்காலிகமாக சுமார் ஒரு 5 வருடங்களுக்கு, அயல் நாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதிப்போர்,இளையான்குடி பொது ஸ்தாபனங்களுக்கு எவ்வித நன்கொடையும் கொடுக்காமல் இருந்தாலே,இந்த சமூக ஆர்வலர்கள் காணாமல் போய்விடுவார்கள்..இளையான்குடி இளைய சமுதாயம் நம் ஊருக்கே உண்டான தைரியத்துடன் தட்டிக்கேட்டு,நல்ல வ்ழிவகை செய்ய வேண்டும், உதாரணத்திற்க்கு,சில நாட்கள் முன்பாக உதயம் நன்பர்கள் குழு இளைஞர்கள் சமுத்திர ஊரணியை எப்படி ஒரு சொற்ப ந்ண்கொடையில் சுத்தம் செய்து,தாங்களே கைலியை மடித்துக்கட்டி களத்தில் இருந்ததை வெப்சைட் மூலமாக பார்த்தோம்,ஒரு சாதனையை காட்டினார்கள்.இது ஒரு சிறு தூளி.இதைப்போல் பல துளிகள் சேர்ந்தால் பெரும் வெள்ளம் உண்டாகி பழம் பெருச்சாளிகளை இழுத்துசென்றுவிடும்... மு.ரியாஸ் அஹமத்

Anonymous October 24, 2009 at 11:47 PM  

அஸ்ஸலாமு அலைக்கும்

நன்பர் ரியாஸ் முகம்மது அவர்களே உங்கலுடைய கருத்துக்கு நனறீ.

ஏன் ந‌ம‌து ஊரில் இவ்வாரு விரும்ப‌த் த‌காத‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ட‌க்கின்றன‌
ஏன சுயநலவாதிகள் மிகைத்து விட்டார்கள் இதர்க்கு என்ன காரணம் என்ப‌தை ப‌ற்றீ இன்ஸாஅல்லா விரிவாக‌ எலுத‌ உள்ளேன்.
sultan
Dubai

Anonymous October 26, 2009 at 12:36 AM  

பூனை வெளியே வந்து விட்டது

நன்பர்களே(குறிப்பாக ஜனாப் சுல்த்தான் & ஹிலால் ஆலம்) கலந்துரையாடல், கூட்டு முயற்ச்சி எல்லாம் இப்படித்தான்.இவர்கள் 4 5 பேர் கலந்துரையாடி தங்களே ஒரு முடிவு எடுத்துவிட்டு,நம்மை மறுபடியும் முட்டாளாக்க முயற்ச்சி,
ஏன் இந்த விபரங்களை முன்கூட்டியே தெரியப்படுத்தி இருக்கலாமே?இப்பொழுது இடம் தருகிறோம் என்று மைதீன் காதர் வகையறா அறிவித்தவுடன்,எங்கே அவர்கள் இடத்தில் பாலிடெக்னிக் அல்லது இன்ஞ்சியரிங் தொடங்கினால் நம் இடத்தை எப்படி காசாக்க முடியும் என்ற நிலையில் மைதீன் காதர் வகையறாவுக்கு பெப்பே..இதைப்பற்றி நிறைய விளக்கங்கள் லொகேசன் பற்றி அற்வுரை கூறிய முஹமது அலி அவர்களுக்கும் பெப்பே..ஹிலால் ஆலம் க‌ட்டுரையும் யாரும் கண்டு கொள்ள போவதில்லை..
நன்பர் சுல்த்தான் அவர்களே,இப்படித்தான் வெளிநாட்டில் இருக்கும்(நீங்கள் துபாய்,நான் சவுதிஅரேபியா) நாம் சுலபமாக ஏமாற்றப்பட்டு விடுகிறோம்.தயவு செய்து இந்த சுயநலவாதிகளைப்ப்ற்றி எழுதுங்கள்
மு.ரியாஸ் அஹமத்

இளையான்குடி குரல் October 26, 2009 at 10:33 AM  

அஸ்ஸலாமு அலைக்கும்!

இளையாங்குடியில் பொறியியல் கல்லூரி துவங்க நான் சில யோசனைகள் முந்தய கடிதத்தில் சொன்னேன். பலரும் பல்வேறு கருத்துக்கள் சொல்லியுள்ளனர். ஆனால் மிகவும் கவனிக்க வேண்டியது என்னவென்றால்-கல்வி நிலையங்கள் எவ்வாறெல்லாம் ஆரம்பிக்கப்பட்டன என்பதினை மறைந்த பெரியவர் அமீன் நைனார் ஹவுத் அவர்களும், மறைந்த வேலுச்சாமி மகனார் தம்பி செல்வமும் விரிவாக இளையாங்குடி பள்ளி பொன்விழா ஆண்டு மலரில் விரிவாக எழுதியள்ளனர்.

ஆகவே கல்வி நிலையங்கள் ஒரு சிலதினைத் தவிர அனைத்தும் கூட்டு முயற்ச்சியால், பல்வேறு தரப்பினரும் பொருளையும், நிலத்தையும் தந்தனர். ஆனால் இன்று அவைகளெல்லாம் தங்கள் வீட்டு சொந்த சொத்தாக பயன்பட்டு வருகிறது வருந்தக் கூடியது.

ஆகவே தான் பொறியல் கல்லூரி ஆரம்பிக்க தீர்மானிக்குமுன்பு அவை தேவை தானா என்று ஆராய ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று கூறினேன். அந்தக் கமிட்டியில் சர்ச்சைகளுக்கு இடம் கொடுக்காதவர்கள் பெயர்களைக் கூறினேன்.

அந்த கமிட்டி கல்லூரி தேவை அவை இளையாங்குடி மக்களே நடத்துவதா அலலது மைனாரிட்டி முஸ்லிம்கள் மட்டும் நடத்துவதா என்பதினை முடிவு செய்த பின்பு அதற்கான செயலில் இயங்க அனுபவமுள்ள ஓய்வு பெற்ற நமதூர் பெரியவர்களின் பெயர்களைக் குறிப்புட்டேன்.

தம்பி ஹிலால் சொல்லுவது போல அது நிர்வாக சம்பந்தமான யோசனை மட்டுமல்ல என்று அதனை படித்தவர்களுக்கு விழங்கும் என்று நினைக்கிறேன். உள்ளுர் சேவைகளில் முதலில் அனுபவமிருக்க வேண்டும் பின்பு யோசனைகள் சொல்வது உபயோகமாயிருக்கும்.

ஏட்டுச் சுரக்காய் கதைக்கு ஒவ்வாது என அனைவரும் அறிவர்.
நமதூரில் ஒரு நிர்வாகம் அமைய பணம் வழங்க விரும்பும் கொடையாளிகள் அனுபவத்தினை, வயது முதிர்ச்சியினை, சமூதாயத்தில் அவர்களுக்கு உள்ள மதிப்பினை வைத்து வழங்கி வந்துள்ளார்கள் என்பதினை நானும் நமுதூரில் அதிகமாக தங்கியிருந்தவர்களும் அறிவர். ஆகவே தான் அனுபவமிக்கவர்கள் எந்த சர்ச்சையிலும் சிக்காதவர்கள் அந்த முயற்சியில் ஈடுபட வேண்டும் என்றேன்.

நிர்வாகம் என்பது நமது தேவையை ஆளுமையால பிறரின் மூலம் செய்து கொள்வது எனலாம். நிர்வாகத்தில் பல படி நிலைகள் உள்ளன. அவற்றில் முதல்படி திட்டமிடுவது. அதாவது இன்ஜீனீரிங் கல்லூரி வேண்டுமா-வேண்டாமா, அதில் பயன் பெறும் மாணவர்கள் எத்தனை, அவர்கள் என்ன படிப்பு படிக்க விரும்புகின்றனர், அவர்கள் படிக்கும்போது அருகில் உள்ள எந்தத் தொழில்ச் சாலையில் அநுபவும் பெறலாம், எவ்வளவு பணம் தேவை, அவ்வளவு நன்கொடை எவ்வாறு பெறுவது என்பது போன்ற யோசனைகள் பெறுவுது. அதன் பின்பு கல்லூரி ஆரம்பிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கும் போது இரண்டாம் கட்ட யோசனையான அவைகளை செயல் வடிவத்தில் கொண்டு வருவதுதான் கோர் கமிட்டியின் வேலை. நிர்வாகத்திறன் என்பது தனிக்கலை.

நாம் இப்போது போட்டி யுகத்தில் வாழ்கிறோம். போட்டிகளை சமாளிக்க நிர்வாகத்திறன் மிகமிக அவசியம். நல்ல நிர்வாகி என்பர் இந்தப் பணிகளை வரிசைப்படி செய்யும், செயல்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும். சேவையில் ஈடுபடுவர்கள் சமூகத்துடன் நட்புறவுடன் இருக்க வேண்டும். அந்த நட்புறவு பலருடன் உறவுப்பாலத்தை ஏற்படுத்தி வெற்றிக்கு வழி வகுக்கும். ஆகவே தான் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீர்களை வெடிச்சா வாச்சா மகன் ஹமீது தலைமையில் அதனை செயல்படுத்தலாம் என்றேன். இதில் பட்டறை பார்க்கக் கூடாது.

நண்பர் முசாபர் அரசு இன்ஜினீரியங் கல்லூரி அமைக்க முயற்சி எடுப்பதாகவும் அதற்காக 10 ஏக்கர் நிலத்தைத் தருவதாகவும் சொல்லியுள்ளார்.

ஆனால் அரசு கல்லூரியால் நமுதூர் மாணவர்களுக்கு அட்மிசனில் முன்னுரிமை தருவார்களா-ஆசிரியர்-ஆசிரியர் அல்லாத வேலைகளில் முன்னுரிமை கிடைக்குமா என்பதினை யோசித்துப் பார்த்தால் நல்லது. எப்படி நமதூருக்கு கேஸ் நிலையம் வருகிறது என்று சீராத்தங்குடியில் எற்படுத்தி-காண்ட்ராக் வேலையும் நமக்குக் கிடைக்கவில்லையோ அதே நிலைதான் ஏற்படும். அதற்காக ஏன் நமது என்டோண்ட்மென்டு நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும்? அரசு கல்லூரி அமைக்க பறம்போக்கு நிலத்திற்காப் பஞ்சம்? அவ்வாறான செயல் வீட்டுத் தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைத்தக் கதையாகாதா?

AP,Mohamed Ali

இளையான்குடி குரல் October 26, 2009 at 11:28 AM  

தாங்கள் அனைவரின் மீதும் (இறைவனின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகுக…

ஜனாப் முகம்மது அலி அவர்களுக்கு என்னுடைய பதில்,

1.ஜனாப் முகம்மத் அலி: தம்பி ஹிலால் சொல்லுவது போல அது நிர்வாக சம்பந்தமான யோசனை மட்டுமல்ல என்று அதனை படித்தவர்களுக்கு விழங்கும் என்று நினைக்கிறேன்

ஹிலால்: நான் ஹாஜி முசாஃபர் (கல்லூரி நிறுவ டைம்ஸ் ட்ரஸ்டின் முதல் அறிக்கை) மற்றும் ஜனாப் முகம்மத் அலியின் கருத்துகளிடையே இருந்த இடைவெளியைக் குறைக்கவே என்னுடைய கருத்தை தெரிவித்தேன்.

அதில் ஜனாப் அலி அவர்களின் ஆலோசனையை வேண்டாம் என்று நான் எங்குமே கூறவில்லை.

ஹாஜி முசாஃபர் அவர்களின் திட்டம் எங்களுக்கு இன்னம் தெளிவாகத் தெரியவில்லை என்றே கூறினேன்.

அவர் மனதில் உள்ளவை யாவை என்று முழுமையாகத் தெரிந்து கொண்டபின் ஜனாப் முகம்மத் அலியின் ஆலோசனையை அடுத்த கட்டமாக இடம் வேண்டும் என்று என் சார்புக் கருத்தைக் கூறியிருந்தேன்.

(ஒருவேளை ஹாஜி முசாஃபர் அவர்கள் அனைத்து முஸ்லீம் சமுதாயத்திற்கும் தான் கல்லூரி என்று நினைத்திருந்தால், தங்களின் ஆய்வறிக்கை பற்றிய பெரும்பாலான யோசனைகள் தேவையில்லாது போயிருக்கும்.

மாறாக, நாம் நாமே, ஹாஜி முசாஃபர் அவர்களின் திட்டம் நம்மூர் மாணவர்களுக்கத்தான் என்று முடிவு கட்டிக்கொண்டோம்.

அவரின் அறிக்கையில் இளையான்குடியில் ஒரு தொழிற்கல்வி வேண்டும் என்று கூறியிருக்கிறாரே தவிர நம் மாணவர்களுக்கு வேண்டும் என்று எங்கும் குறிப்பிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை.)

2.ஜனாப் முகம்மத் அலி: ஏட்டுச் சுரக்காய் கதைக்கு ஒவ்வாது என அனைவரும் அறிவர்.

ஹிலால்: என்னுடைய விளக்கத்தில் நான் கூறியிருந்த கருத்துகள் அனைத்துக்கும் உதாரணக் கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும் காட்டியிருந்தேன். இதில் எது தங்களுக்கு ஏட்டுச்சுரக்காயாய் ஆகிவிட்டது என்று விளங்கவில்லை.

நான் கூறியிருந்த ஒவ்வொரு கருத்துகளும் வெற்றிகரமாக, நிருபனமான கல்விக்கூடங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. ஆனால் நமக்கு மிகவும் பரிச்சயம் அற்றவை என்பதையும் கூறியிருந்தேன்.

பேச்சுக்கு அது ஏட்டுச் சுரக்காய் எனினும் ஏட்டுச்சுரக்காயிலிருந்து தான் புதினங்களும்,கண்டுபிடிப்புகளும் (Out – of – box thinking, inventions, innovations, creativity, planning) என்று பலவும் பிறக்கிறன.

அந்த ஏட்டுச்சுரக்காயிலிருந்துதான் செயல் சுரக்காய் பிறந்து கறிக்கு உதவுகிறது.

நிருபனமாவற்றிலிருந்துதான் நாம் நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டுமென்றால் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டவேண்டியதுதான்.

ஆகவே தங்களுடைய இந்த பிற்போக்கான விமர்சனத்தை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

3.ஜனாப் முகம்மத் அலி: உள்ளுர் சேவைகளில் முதலில் அனுபவமிருக்க வேண்டும் பின்பு யோசனைகள் சொல்வது உபயோகமாயிருக்கும்.

ஹிலால்: சில வருடங்களாக ஒரு நடைமுறையை நம்மவர்களிடம் பார்க்கிறேன்.

கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் போது கருத்துகளில் தான் விவாதம் இருக்கவேண்டுமே ஒழிய கருத்துக் கூறுபவர் மீது இருக்கக்கூடாது.

நம்மவர்கள் இந்த இலக்கணத்தை பின்பற்றுவது கிடையாது.

கருத்துகளில் பிழையிருக்கலாம், அந்த கருத்துகளை விமர்சிக்கலாம். தவறில்லை.

ஆனால் கருத்துக் கூறியவரை விமர்சிப்பது அநாகரீகம் என்பது என் கருத்து.

நான் என்னுடைய கருத்துகளை வெளியிடும்போதும் அந்தக் கொள்கையை அதீதகவனத்துடன் பின்பற்றினேன்.

அதையும் மீறி ஏதேனும் கூறப்பட்டிருந்தால் அதற்காக வருத்தமும் கட்டுரைக்கு அடியில் இணைத்திருந்தேன். பரவாயில்லை.

நான் அனுபவமற்றவன்தான் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அது 100 சதம் உண்மையும் கூட. நான் யாருக்கும் யோசனையும் கூறவில்லை. நான் வெளியிட்டிருந்தது என் கருத்தே தவிர. அதையே பின்பற்றவேண்டும் என்று எங்கேனும் நான் குறிப்பிட்டதாக எனக்கு
நினைவில்லை.

தங்களுடைய இந்த (மறைமுகத்) தனிநபர் விமர்சனத்தின் தொனி அறிவுரையாகவும் ஒலிக்கவில்லை. மாறாக IMPULSIVE REACTION– கவே ஒலிக்கிறது.

ஆனால் இதனால் நான் மனம் புண்படவில்லை, வருந்தவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்வாறு என்னைப் புண்படுத்துவது தங்களின் நோக்கமும் அல்ல என்பதனையும் நான் நன்கு அறிவேன்.

எப்பொழுது விவாதம் கருத்துகளிலிருந்து திசைமாறிக் கருத்துக் கூறியவரை குறிவைக்கப்பட்டதோ, அந்த விவாதங்களில் ஈடுபடுவது நமக்கு நல்லதல்ல.

கடந்த வருடங்களில் அப்படிப்பட்ட தனிநபர் விமர்சனம் எங்கு போய் முடிந்தது என்று நான் கண்டிருக்கிறேன் எனவே நட்புடன் கண்ணியமான முறையில் நான் இந்த விவாதங்களிலிருந்து விலகிக்கொள்கிறேன்.

இதைக் கூறிக்கொள்ளும் வேளையில் என்னுடைய கருத்துகளை மீண்டும் உறுதிசெய்கிறேன். I stand by what I said in my earlier articles.
ALLAH HAFEEZ.

HILAAL ALAM

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP