என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது ஏன்?

>> Monday, October 12, 2009

5 தடவை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் மகாத்மா காந்திக்கு பரிசு கிடைக்காமல் போனது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 தடவை சிபாரிசு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடி உலகையே தன் பக்கம் திரும்பச் செய்த மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இத்தனைக்கும் 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 (காந்தி இறந்த பின்) ஆகிய 5 ஆண்டுகளில் நோபல் பரிசுக்காக மகாத்மா காந்தி சிபாரிசு செய்யப்பட்டார். இதில் கடுமையான போட்டிக்கு இடையில் 1937, 1947 மற்றும் 1948 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மகாத்மாவின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை சென்றது. எனினும் பரிசு கிடைக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.

வாரி விட்ட ஜாக்கப் குறிப்புகள்

மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நோபல் பரிசு தேர்வுக் குழு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது.

முதன் முதலாக 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்றது. அப்போது, நோபல் தேர்வுக் குழுவின் ஆலோசகரும் பேராசிரியருமான ஜாக்கப் வோர்ம் முல்லர், காந்தி பற்றி எழுதிய குறிப்புகள்தான் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு காரணமாய் அமைந்தது. அவர் எழுதிய குறிப்பு இதுதான்.

சந்தேகத்துக்கு இடமின்றி காந்தி நல்ல, மேன்மையான, தன்னலமில்லாத மனிதர்தான். பெரும்பான்மை மக்களால் கவுரவிக்கப்படக் கூடிய பெரிய மனிதராக திகழ்கிறவர்தான். எனினும் அவரது கொள்கைகளில் காணப்பட்ட திடீர் மாற்றங்கள் குறித்து அவரது ஆதரவாளர்களே கூட சிரமப்பட்டுத்தான் திருப்தியான விளக்கம் அளிக்க முடிகிறது. காந்தி ஒரு சுதந்திர போராட்டக்காரர், சர்வாதிகாரி, மிகுந்த சிந்தனை கொண்டவர், தேச பக்தர். அவர் அவ்வப்போது ஒரு இயேசு போல் தோன்றினாலும், உடனடியாக அவர் ஒரு சாதாரண மனிதராக மாறி விடுகிறார்.

தொடர்ச்சியாக அவர் அகிம்சை நெறியைப் பின்பற்றவில்லை. வெள்ளையர் அரசாங்கத்துக்கு எதிராக அவர் செய்த பிரசாரங்கள் சில நேரம் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளன.

1920-21-ம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின்போது சாவ்ரி சாவ்ரா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தை தாக்கியதில் போலீசார் பலர் உயிரிழந்தனர். பிறகு அந்த போலீஸ் நிலையம் தீவைத்தும் கொளுத்தப்பட்டது.

மேலும் காந்தி, இந்திய தேசியவாதியாகத்தான் திகழ்ந்தார். தென்னாப்பிரிக்காவில் கூட அவர் இந்தியர்களுக்காக மட்டுமே போராடினார். அந்த நாட்டின் கறுப்பர் இன மக்களின் நிலைக்காக அவர் போராடவில்லை.

இப்படி வோர்ம் முல்லர் எழுதிய குறிப்புகளால்தான் மகாத்மா காந்திக்கு முதல் தடவை நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.

இரண்டாவது தடவையாக 1947-ம் ஆண்டு மகாத்மாவின் பெயர் மீண்டும் நோபல் பரிசு தேர்வுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. இந்த தடவை தேர்வுக் குழு ஆலோசகராக இருந்தவர், ஜென்ஸ் அருப் செய்ப். இவர் வோர்ம் முல்லர் போல், மகாத்மா பற்றி கன்னாபின்னாவென்று குறிப்புகள் எழுதவில்லை. காந்தியின் செயல்களை பாராட்டியே எழுதியிருந்தார். எனினும் 2-வது தடவையாக காந்திக்கு நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.

3 தடவையாக பரிசீலனை

11 ஆண்டுகளில் 3 தடவையாக, 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு ஜனவரி மாதம் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.

அப்போது, காந்தியின் கடைசி 5 மாத செயல்பாடுகள் குறித்து நோபல் தேர்வுக்குழுவின் ஆலோசகர் செய்ப் நல்ல விதமாகவே எழுதினார்.

"காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நீதி மற்றும் அரசியல் நெறிமுறைகளை மட்டுமே கொள்கைகளாக கொண்டு செயல்பட்டார். இதனால் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் வெகுவாக போற்றப்பட்டார். இந்த வகையில் அவர் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் போல் ஒப்பிடப்படுகிறார்'' என்று செய்ப் தனது குறிப்பில் கூறியிருந்தார்.

நோபல் விதிமுறை

இதனால் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைத்து விடும் என்றே கருதப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில் அப்போது, நோபல் பரிசு தேர்வுக்குழு ஒரு விசித்திர விதியை பின்பற்றி வந்தது.

அதன்படி பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர், தகுதி உடையவராக இருந்தால் அவர் ஏதாவதொரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் காந்தி எந்த அமைப்பிலும் இல்லை. இதனால் அவருக்கு பரிசு வழங்குவதில் தயக்கம் காட்டப்பட்டது.

ஏனென்றால் மகாத்மா காந்தி இறப்புக்கு பின் எந்த சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை. உயிலும் எழுதவில்லை. இதனால் நோபல் பரிசுத் தொகையை யார் பெறுவது என்பதில் கேள்வி எழுந்தது. பரிசை வழங்கும் சுவீடன் அமைப்பின் நிறுவனங்கள் இது குறித்து ஆலோசனை நடத்தின.

அவர்களது பதில் காந்திக்கு நோபல் பரிசு வழங்கிட சாதகமாக அமையவில்லை. ஏனெனில், நோபல் பரிசு பெறும் தகுதிக்குரியவர் இறக்கும் முன்பாகவே தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அந்த அமைப்புகள் கருதியதுதான்.

மறுக்க முடியாத உண்மை

எனவே, தேர்வுக்குழு இறுதி முடிவு எடுக்கும் முன்பாகவே மகாத்மா காந்தி இறந்து விட்டதால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போய் விட்டது.

இறந்து விட்ட மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாததால் 1948-ம் ஆண்டு வேறு யாருக்கும் நோபல் பரிசை வழங்க தேர்வுக்குழு விரும்பவில்லை. இதனால் உயிருடன் இருக்கும் எவரும் அந்த ஆண்டு நோபல் பரிசை பெறும் தகுதியுடன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 1948-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.

இது மட்டுமே நோபல் பரிசு தேர்வில் மகாத்மா காந்திக்கு கிடைத்த ஒரே கவுரவம்.

எனினும், இன்று மகாத்மாவின் அகிம்சைதான், உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த மருந்தாக திகழ்கிறது.

இதன் அடிப்படையில்தான் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா முதல் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத பரவலுக்கு எதிராக பாடுபடும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரை நோபல் பரிசு கிடைத்திட்டது என்பது மறுக்க முடியாத மாபெரும் உண்மை.

நன்றி தினத்தந்தி.

3 comments:

ISR Selvakumar October 12, 2009 at 2:02 PM  

நல்ல பதிவு

வரதராஜலு .பூ October 13, 2009 at 12:49 PM  

புதிய தகவல்கள். நன்றி.

Nirosh October 14, 2009 at 1:36 PM  

Thanks,..... verygood post

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.
Animated avatar."இளையாங்குடி கல்லூரி தந்தை"மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.
"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்குஇளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்உண்மை விளங்கும்.

.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP