என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு! "டூ யு நோ யுனொ?

>> Wednesday, September 23, 2009

இப்பொழுது தாங்கள் வந்திருக்கும்

http://ilayangudikural.blogspot.com/

லின்க்கை உங்கள் FAVORITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :-
ilayangudikural2@gmail.com



1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை

3.அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. "டூ யு நோ யுனொ?

4.பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு

1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை
1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?

2. தந்தையும் மகனும் விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். தந்தை இறந்தார். மகனுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவரிடம் கொண்டு போனார்கள். மருத்துவர் மறுத்துவிட்டார். “என் மகனுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்” என்று சொல்விட்டார்… இது எப்ப..?

3. உணவகத்திற்குள் நுழைந்த அந்த மனிதர் ஒரு குவளை தண்ணீர் கேட்டார். சர்வர் கோபத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்மேல் பாயவந்தார். தண்ணீர் கேட்ட மனிதரோ நன்றி சொல்லி விடைபெற்றார். ஏன்…?


(பல சர்வதேச நிறுவனங்களில், நேர்காணலின் போது சமயோசிதத்தைப் பரிசோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள் இவை. நிச்சயம் இந்நேரம் விடை கண்டுபிடித்திருப்பிர்கள். உங்கள் விடைகளை உறுதிசெய்து கொள்ள கீழே வாருங்கள்.)

புத்திக்குள்ளே புதையல் வேட்டை ( விடை)
1. பலமாடிக் கட்டிடத்தில் இயங்கும் அந்த லிஃப்டில், உச்சித் தளத்துக்கான பட்டன் அவருக்கு எட்டாது. கீழ்த்தளத்துக்கான பட்டனை இறங்கும்போது எளிதில் அழுத்திவிடுவார். மழைநாளில் குடைகொண்டு வருவதால், குடையை நீட்டி தன் தளத்துக்கான பட்டனை அழுத்த முடியும். குடை இல்லாவிட்டால் நடைதான்…… பாவம்!!
2. அந்த மனிதர், அடிபட்ட இளைஞனின் அன்னை.
3. தண்ணீர் கேட்ட மனிதருக்கு விக்கல் வந்திருந்தது. அதற்காகத்தான் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சி ஏற்பட்டால் விக்கல் நிற்கும். சர்வர் அதைத்தான் செய்தார். தண்ணீர் பருகாமலேயே விக்கல் நின்றுவிட்டது. எனவே நன்றி சொல்லி விடைபெற்றார்.

3.அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. "டூ யு நோ யுனொ?

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்" என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.

அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். "டூ யு நோ யுனொ ?


சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

ஐ நோ யுனொ.

யு நோ யுனொ.

ஐ நோ யு நோ யுனொ

பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!


கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO.

அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.

“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :

‘No sentence ends with because, because, because is a conjunction’

4.பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை

பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பிரபலமான வழக்கறிஞர். அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர்.

ஜின்னா அவர்கள் லண்டனிலேயே வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.

இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும். நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம்.

லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்-கூடிய பிரபுக்கள் உண்டு. அந்-தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு `சாரட்’ வண்டிகள் உண்டு.

அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இது-போன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே.

இங்கிலாந்து நாட்டிலே புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப் பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலே இவர்மீது நஷ்ட ஈடு கோரி சடடப்படி என்னுடைய உரிமையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தை அவர் மீறியிருக்கின்றார்.

அய்ந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது, மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள்.

அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் அய்ந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இவரும் `ஆம்’ பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்-திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த வழக்கிலே நாம் வெற்றி-பெறமுடியாது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் சென்று விடுங்கள் என்று ஒவ்வொரு பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள்ளிவிட்டார்களாம்.

மகமதலி ஜின்னா அவர்கள் பாரிஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் போல இவர் ஒன்றும் மூத்த வழக்கறிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நான் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறேன் என்று சொன்னார்.

எல்லோருக்கும் இது ஆச்சரியம். தோற்றுப் போகிற வழக்கை ஜின்னா அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார் என்று.

நீதிமன்றத்தில் ஜின்னா அவர்கள் எப்படி வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அய்ந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி எது? எந்தெந்த குதிரைகள் எல்லாம் வண்டியில் கட்டப்பட்டன என்பதை எல்லாம் நேரில் பார்த்து ஜின்னா விசாரித்துவிட்டார்.

வெட்னரி சர்ஜன் என்று சொல்லக்கூடிய மிருக வைத்தியர் ஒருவரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டார் ஜின்னா. நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யார் வழக்கு போட்டாரோ அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். பிரபுகளாகிய எங்களுக்கு அய்ந்து குதிரைகளை வைத்து ஓட்டக்கூடிய உரிமைச் சட்டம் எங்களுக்கு இருக்கிறது என்பவைகளை எடுத்துச் சொல்லி விவாதம் செய்தார்.

நீங்கள் வண்டி ஓட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்.

இதிலே நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் நீதிபதிகள் கேட்டார்கள்.

குதிரைகளை ஆங்கிலத்தில் Horses என்று சொல்லுகின்றோம். ஆனால், ஜின்னா அவர்கள் வாதாடும்பொழுது சொன்னார். எதிர்க்கட்சிகாரர் அய்ந்து குதிரைகளை ஓட்டி வந்தார் என்று சொல்லுகிறார். நான் சொல்லுகிறேன் Four Horses and one Mare (பெண் குதிரை) என்று சொன்னார்.

என்னுடைய கட்சிக்காரர் நான்கு ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் குதிரையோடும் சேர்த்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார்.

பெண் குதிரைக்குரிய பலம் ஆண் குதிரைக்கு இல்லை. எனவே அதை ஒரு குதிரையாகக் கருத முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா இப்படி வாதாடினார்

ஜின்னா அகராதியைப் பார்த்தார் .
நுண் மான் நுழைபுலத்தோடு ஜின்னா அவர்கள் Horse என்றால் என்ன போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார்.

பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது.

வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியமானது.

0 comments:

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP