என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

>> Friday, January 29, 2010

கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணம்.

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளது.

ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப்படுகிறது.

இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசியளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப்பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப்படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப்படுகின்றன.

இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.
THANKS TO: நிரூபன். inemai.blogspot.com

மேலும் படிக்க...Read more...

வாழையில் இவ்ளோ இருக்கா? ஆரோக்கியமாக வாழ, நோய் நீக்கும் மருந்தாக வாழைப்பழம்.

>> Tuesday, January 26, 2010



வாழைப்பழம் சாப்பிடுவதால் அது நம் உடம்பில் நோய் நீக்கும் மருந்தாக செயல்படுகிறது.விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம் தான் என்கிறார்கள்.



வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும் எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது.

இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.

மக்னீசியம் பொட்டாசியம் சோடியம் பாஸ்பரஸ் போன்ற உப்புக்கள் வாழைப்பழத்தில் தாராளமாக இருப்பதால் இரத்த ஓட்டம் தங்குத் தடையின்றிச் சீராக இருக்கவும்

முக்கியமாக இரத்தக் கொதிப்பு ஏற்படாமலும் பாதுகாத்து வருகிறது.

நாம் தினமும் சாப்பிடும் இரண்டு வாழைப்பழங்கள் இரத்தக் கொதிப்பை எளிதில் கட்டுப்படுத்தும்.

நாம் சாப்பிடும் உணவில் பொட்டாசியமும் சோடியமும் இருந்தால் தான் நம் உடலில் உள்ள நெகிழ்ச்சிப் பொருள்கள் சம நிலையில் இருக்கும். பொட்டாசியம் உப்புக் குறைந்தால் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். நாம் சாப்பிடும் அனைத்துப் பொருள்களிலும் சோடியம் உப்பு இருக்கிறது. ஆனால், பொட்டாசியம் இல்லை. இந்தக் குறையை தினமும் ஒரே ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலம் நீக்கி விட முடியும்.

விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா தோல்வியா என் நிர்ணயிப்பது அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான். பொட்டாசியம் அளவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம். விளையாட்டு வீரர்களுக்கும் தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான்.


சத்துக்கள்: எங்கும் எப்போதும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழத்தில் இல்லாத சத்துக்களே கிடையாது.

இதில் கர்போஹைடிரேட், புரதம், சிறிய அளவில் கொழுப்பு குளூக்கோஸ், நார்ச்சத்தும் ஃபிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற சர்க்கரைகளுடன் நார்ச்சத்தும் கால்சியம், , சோடியம், பாஸ்பரஸ், சல்பர், மக்னீசியம், இரும்பு, சிறிய அளவில் செம்புச்சத்தும் மற்றும் வைட்டமின் பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின், ரிபோஃபிளேவின், தயாமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம். முதலான உணவுச் சத்துக்களும் A, B, C வைட்டமின்களும் சத்துக்கள் அடங்கி உள்ளதால் அற்புதமான உணவாகும்.

மருத்துவக் குணங்கள் : வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹார்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது.

நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது.

பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.

நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப் படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.

வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது.

வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.

ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.

வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் (Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ் (Sucrose), பிரக்டோஸ் (Fructose) மற்றும் குளுகோஸ் (Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் (Fiber) கொண்டுள்ளது. இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூளை வலிமை (Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு, பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. சில நோய்களுக்கு வாழையை எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம் :

நெஞ்சுக்கரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.

கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.

நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.

இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.

குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.

இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம்.

குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.

கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.

பூவன் : இந்த பழத்தை கதலி என்றும் அழைப்பார்கள். மலச்சிக்கல், மூலநோயால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகவும் நல்லது.

பேயன் பழம் : குடற்புண் தீர்க்கும். வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் தினம் ஒரு பேயன் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தாலே போதும்.

மலைவாழை : சோகையை நீக்கும். எளிதில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது இந்த மலைவாழை.

ரஸ்தாலி : இதில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.

செவ்வாழை பலமளிக்கும்.

மொந்தன் காமாலைக்கு நல்லது.

பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும்.

நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.

வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வரப் பயன்படுகிறது

தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும்.

காசநோய் உள்ளவர்கள் அரை கப் தயிரில் வாழைப்பழத்தை பிழிந்து, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு டம்ளர் இளநீர் ஆகியவை சேர்த்து தினமும் இரண்டு வேளை வீதம் சாப்பிட்டு வர அந்த பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து தினமும் இரு வேளை வீதம் சாப்பிட வேண்டும்.

பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டுவர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து தினமும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களும் நீரிழிவு நோய் சர்க்கரை வியாதி உள்ளவர்களும் வாழைப்பழத்தைத் ஒதுக்கி தவிர்த்து விட வேண்டும்.

சோம்பேறிகளுக்கு சுறுசுறுப்பைத் தரும் வாழைப்பழத்தை எல்லா வயசுக்காரர்களும் விரும்பிச் சாப்பிடலாம்.

இதய நோய் காய்ச்சல் மூட்டுவலி மன உளைச்சல் முதலியவற்றை எளிதில் குணமாக்கும் அரிய பழம் அரிய மருந்து இது.

மலச்சிக்கல் (Constipation):ஒரு மனிதனுக்கு மலச்சிக்கல் வந்துவிட்டால் அவனது மனித குணமே மாறிவிடும். அதற்கு ஒரே வழி உங்கள் உணவில் தினமும் வாழைப்பழத்தைச் சேர்த்து சாப்பிடுங்கள். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் (Fiber) இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.

மந்தம் (Hangovers):நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் (Milk Shake) தயார் செய்து குடிக்கவும். வாழைப்பழம் தேனுடன் சேர்த்து வயிற்றை அமைதிப்படுத்தி இரத்தத்திலுள்ள இனிப்புச் சத்தை அதிகமாக்குகிறது. அத்துடன் இதில் பாலும் சேர்ப்பதால் பால், நீர் சத்தை சரியாக வைத்துக்கொள்கிறது. இந்த மூன்றும் சேர்ந்து மந்த நிலைக்கு டாட்டா காட்டிவிடுகிறது.

நெஞ்செரிப்பு (Heart Burn):உங்களுக்கு நெஞ்செரிகிறதா? வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் உங்களை விட்டு பறந்துவிடும்.

உடற்பருமன் (Over Weight):ஆராய்ச்சியாளர்கள் 5000 நோயாளிகளை சோதனை செய்து பார்த்ததில் அதிகமான உயர்ந்த மனஅழுத்த வேலைகளில் உள்ளவர்கள் தான் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள். இந்த அழுத்தத்தின் காரணத்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு சீராக இல்லாத காரணத்தால் உடற்பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கும் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வந்து உடற்பருமன் குறைவதாக அந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

குடற்புண் (Ulcers):வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.

சீரான வெப்பநிலை (Temperature Control):வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் (Cooling Fruit) என்ற பெயரும் உண்டு. தாய்லாந்து நாட்டு மக்கள் அதிகமாக வாழைப்பழத்தை சாப்பிடுவதால் அவர்களது உடலின் தட்பவெப்ப நிலை சீராக உள்ளது.

காலநிலை மாற்றம் (Seasonal Affective Disorder):வாழைப்பழம் சாப்பிடுவதால் காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய ஒரு வித மந்த நிலையை இல்லாமல் ஆக்குகிறது.

புகைப்பிடிப்பது (Smoking):புகைப்பிடிப்பவர்கள் அந்த கொடுமையிலிருந்து விடிவு பெற வாழைப்பழத்தை சாப்பிடலாம். வாழைப்பழத்தில் B6. B12 அதிகமாக இருப்பதால் புகைப்பிடிப்பதால் ஏற்படும் Nicotine ஐ கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதால் புகைப்பிடிப்பதிலிருந்து விடுபடலாம்.

மன அழுத்தம் (Stress):வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அவை இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் நீங்கும்.

காலைத் தூக்கம் (Morning Sickness):மூன்று நேர உணவு இடைவேளைக்குள்ளும் வாழைப்பழத்தை சாப்பிட்டால் உடம்பிலுள்ள இரத்தத்தில் உள்ள குளுகோஸ் (Blood Sugar) அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.

நரம்பு நாளங்கள் (Nerve System):இதில் B விட்டமீன்கள் அதிகமாக இருப்பதால் நரம்பு நாளங்கள் நன்றாக செயல்பட்டு நரம்புத் தளர்வை போக்குகிறது.

அழுத்தக் குறைவு (Depression):‘Mind’ என்ற நிறுவனம் நடத்திய ஆராய்ச்சியின் முடிவாக ஒவ்வொரு உணவிற்குப் பின்பும் வாழைப்பழம் சாப்பிட்டால் அழுத்தக் குறைவு நோயை விரட்டலாம் என்று கூறுகிறது. ஏனெனில் மூளையிலிருந்து கசியக் கூடிய நீரை திட்டப்படி வெளியேற்றி மனிதனை மகிழ்ச்சியாக்குகிறது.

வாழைப்பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் அதிக அளவு சிவப்பணுக்களை உண்டு பண்ணி இரத்தச் சோகை வராமல் தடுக்கிறது.

குறைந்த அளவு உப்பும் அதிக அளவு பொட்டாசியமும் இருப்பதால் அதிக இரத்த அழுத்தத்தையும், வாதநோயையும் குறைக்க முடிம்

ஆராய்ச்சிப்படி நமது தினசரி உணவில் வாழைப்பழத்தையும் சேர்த்துக் கொண்டால் Stroke கினால் ஏற்படக்கூடிய மரணத்தின் விகிதத்தை 40% குறைக்கலாம் என்கிறது.

பொதுவாக வாழைப் பழத்தை உண்பதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் பித்த சம்பந்தமான நோய்கள் குறைகிறது. “நெப்ரைடிஸ்” என்கிற சிறுநீரக நோய், மூட்டுவலி, உயர் இரத்த அழுத்தம், குடற்புண் ஆகியவற்றை குணப்படுத்தவல்லது.

உடல்நலனுக்கு எப்பொழுதும் முழுவதுமாக பழுத்த பழங்களையே சாப்பிட வேண்டும்.

மூளையில் “செரோடினின்” உருவாக வாழைப்பழம் உதவுகிறது.

மனதில் ஏற்படும் பயம், கவலை, வருத்தம் முதலியவற்றை நீக்க செரோடினின் பெரிதும் உதவுகிறது.

வாழைப்பழத்தை இதய நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம்.

மூளைக்கு வலுவூட்டும்.

தினசரி இரவு உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்து ஓரிரண்டு வாழைப்பழம் உட்கொள்வதால் மலச்சிக்கல், பித்த நோய்கள், மனநோய், மூர்ச்சை மற்றும் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளைப்போக்கு முதலியவை நீங்கும்.

இரத்த அழுத்தம் நிதானமாக இருக்கும். குடற்புண் வராமல் தடுக்கும்.

சத்துக்குறைவுள்ள குழந்தைகளுக்கு உடல் வலுப்பெறும்.

கனிந்த வாழைப்பழத்தில் 5 மிளகை திணித்து திறந்த வெளியில் ஒரு இரவு வைத்து, அடுத்த நாள் காலையில் இந்த மிளகை சாப்பிட இருமல் நீங்கும்.

உட்கொண்ட உணவு உணவுக் குழாயில் சிக்கி வீக்கம் ஏற்பட்டு அவதியுறும் போது இப்பழம் சாப்பிட உணவுக் குழாயின் சிக்குண்ட பொருள் வயிற்றில் போய் சேர்ந்து விடும்.

உலர்ந்த சருமத்திற்கு மிகுந்த ஈரப்பதத்தை அளிக்கக் கூடியது. எனவே சரும மாஸ்க்குகள், ஹேர் பேக்குகளாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இப்பழச்சதையினுள் வெண்ணெய் போல ஏறக்குறைய இருபது முதல் இருபத்தைந்து சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது.

தினசரி ஒரு செவ்வாழை வீதம் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகும். நரம்புகளுக்கு நல்ல பலம் ஏறும். உடலில் புதிய சுறுசுறுப்பும், மனதில் உற்சாகமும் உண்டாகும்.

தொடர்ந்து 21 தினங்களுக்கு இரவு ஆகாரத்திற்குப் பின் ஒரு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எல்லாக் கோளாறுகளும் நிவர்த்தியாகும்.

சிறுவர், வாலிபர், வயோதிகர்களுக்கு கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி செவ்வாழை பாதியளவு முதல் முழு அளவு வரை தொடர்ந்து 21 தினங்களுக்குக் கொடுத்து வந்தாலே கண் பார்வை படிப்படியாகத் தெளிவடையும்.

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்

வயிற்றில் உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட்களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது. பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.


மலத்தை இளக்கி, சூட்டை தணிப்ப தோடு, மிளகளவு பெருங்காயத்தை வாழைப் பழத்துடன் விழுங்கினால் உடம்பில் சிரங்கு நமச்சல் தீரும்.

வாழைப்பழத்தோல்:”மறு” என்று சொல்லக்கூடிய கருப்பு வடு உடம்பில் ஏற்பட்டால் வாழைப்பழத் தோலை சிறு துண்டாக வெட்டி உள் தோல் அந்த வடுவின் மேலும் மஞ்சள் தோல் வெளியில் தெரியும் படி வைத்து அதன் மீது சிறிது மருத்துவ டேப் ஒட்டி வைத்தால் நாள்பட அந்த மறு மறைந்துவிடும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை கொசுக் கடித்த இடத்தில் வைத்து அழுத்தி தேய்த்தால் கொசுக் கடியால் ஏற்பட்ட வேதனையும் தீரும். வீக்கமும் வற்றிவிடும்.

வாழைப்பழத்தைச் சாப்பிட்டு விட்டு அதன் தோலை குப்பைத் தொட்டியில் எறிவதற்கு முன் அதன் உள்தோலைக் கொண்டு உங்கள் காலணி (Shoe) யை பாலிஷ் செய்து வெள்ளைத் துணியால் துடைத்துப் பாருங்கள். உங்கள் Shoe மினு மினுக்கும்.

இதன் குருத்தைத் தீப்புண்ணில் வைத்து கட்டினால், புண் விரைவில் ஆறுவதோடு

வாழைக் குருத்தை சாப்பிட்டால் கூந்தல் நரைக்காமல் முகம் பளபளப்பாக இருக்கும்.

வாழை இலை:சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வர நல்ல குணம் கிடைக்கும்.

காயங்கள் மற்றும் தோல் புண்களுக்கு, தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணியில் நனைத்து புண்கள்மேல் போட்டு, இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும். இப்படி செய்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம் ஆகியவற்றுக்கு குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினாலும் அது சரியாகும்.

சின்னம்மை, படுக்கைப் புண், தீக்காயம் ஆகியவற்றுக்கு பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்க வைக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் அந்த நோய் பாதிப்பு குணமாகும்.

வாழை வேர்:குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை ஆகியவற்றுக்கு வாழை வேரை தீயிலிட்டு சாம்பலாக்கி, அந்த சாம்பலில் கால் தேக்கரண்டி எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டுவர அந்த பாதிப்புகள் குணமாகும்.

வாழைப்பிஞ்சு: இது அதிமூத்திரம், இரத்த மூலம் அடிவயிற்று ரணம் தீர்வ தோடு வாழைக்காய் சாப்பிடுவதால் இரத்தம் விருத்தியாகி, வறட்டு இருமல், பித்த வாந்தி, வாயில் நீர் ஊறுதல் போன்றவை நீங்கி பசியை அதிகரிக்கும்.

அதேபோல், வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றது. என்றாலும், மலத்தை இறுக்கி விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வாழைக்காய் : பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி, மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் வழங்கப்படுகிறது.

வாழைக்காயின் மேல் தோலை மட்டும் மெலிதாகச் சீவியெடுத்து விட்டு உட்புறத் தோலுடன் சமைப்பதே சிறந்தது. அப்போதுதான் தோலில் உள்ள சத்துகள் உடலில் சேரும்.

வாழைக்காயின் மேற்புறத் தோலை சீவியெடுத்து, துவையலாகச் செய்து சாப்பிடுவதால் இரத்த விருத்தியும், உடல் பலமும் ஏற்படுகிறது.

வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் போன்ற நோய்களைப் போக்க வாழைக்காய் ஏற்றதாகும்.

வாழைக்காய் சாப்பிடுவதால், வாய்வு ஏற்படக்கூடும். எனவே வாய்வுத் தொல்லை இருப்பவர்கள் வாழைக்காயை அளவுடன் எடுத்துக் கொள்ளலாம். அல்லது தவிர்க்கலாம்.

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது.

அதனால், இதை சமையலில் குறிப்பிட்ட அளவு எடுத்து வரலாம். ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக்காய்க்கு நிகர் வேறு எதுவும் கிடையாது.

அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாய்வுத் தொல்லை உண்டாகும்.

வாழைத்தண்டு : சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள், ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள் மற்றும் ரத்தக் குறைபாடுகளுக்கு வாழைத்தண்டு சிறந்தது.

அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சிறு நீரகக் கற்கள் கரைவதோடு சிறுநீரகங்களும் பாதுகாக்கப்படுகிறது.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைத்தண்டுசாறு : இது வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.

உடம்புக்குள்ளே "கல்லு" வந்திச்சா?
ஆரம்ப நிலை என்றால் மிகுந்த தண்ணீர், இளநீர், குளுக்கோஸ் முதலிய பானங் களோடு வாழைத் தண்டின் சாறு அல்லது ரசம், கொள்ளுப் பயறு சூப் அல்லது ரசம் நல்ல பலனளிக்கும்.

வாழைப்பூ: இதை சமைத்து சாப்பிட்டால் பித்தம், ஆசனக்கடுப்பு, வெள்ளை படுதல், இவற்றை நீக்கும்.

வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும்.

வாழைப் பட்டை: இயற்கை யான குளிர்சாதனமாக அமைத்து, அவற்றால் ஆன பெட்டிகளில் பல அபூர்வ மூலிகைகள் பாதுகாக்கப்படுவதோடு தீக்காயங்களுக்கு மிகவும் நல்லது.

வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் தோலை தெருவிலே எறிந்து விடுவதால் அத்தோலின் மெல் கால் வைத்து வழுக்கி மரணம் வரை சென்றவர்கள் உண்டு. அவ்வாறு தூக்கி எறிவதை நாமும் தவிர்த்து மற்றவர்களையும் தடுக்க வேண்டும். வாழைப் பழத் தோலை மனிதர்கள் நடக்குமிடத்தில் கண்டால் அதை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு அதன் மூலம் நன்மையை தேடிக் கொள்ள முன் வரவேண்டும்.

எல்லா விட்டமின்களையும் ஒரு பழத்தின் மூலம் தந்து நமது உடல் நலம் பேண வழி வகுத்த வல்லமை படைத்த நம் இறைவனுக்கே எல்லாப் புகழும்.
தொகுத்தது: வாஞ்ஜூர்.
******************

உயிர்வாழ உண்ணுங்கள்! உண்பதற்காக வாழாதீர்கள்!!
உணவே மருந்து! மருந்தே உணவாவதைத் தவிர்த்திடுவீர்!!

மேலும் அரிய‌ மருத்துவ த‌க‌வல்க‌ள் படிக்க‌

க்ளிக் செய்ய‌வும்



மேலும் படிக்க...Read more...

நாவை அடக்குவாரா கமல்!

>> Thursday, January 21, 2010

நாவை அடக்குவாரா கமல்! சரத்குமார் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஜக்குபாய் படத்தின் காட்சிகள் இணையதளத்தில் வெளியானதாக சொல்லி சரத்குமார் மற்றும் நடிக-நடிகையர்கள் செய்த அமளிதுமளி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரிலீஸ் ஆவதற்கு முன்பே படம் வெளியானதாகவும் இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் நடிக பட்டாளம் கண்டனக் கூட்டம் நடத்தியது. அதில் பலரும் பல தத்துவ முத்துக்களை உதிர்த்தனர்.

ரஜினிகாந்த் பேசும் போது நமக்குள் இருக்கும் நபர்களை முதலில் கண்காணிக்க வேண்டும் என்றார்.

பலரும் பேசியதில் கமல் பேசியது தான் நமக்கு நெருடலை ஏற்படுத்துவதாக இருந்தது.

சிடி தயாரிக்கும் பணமெல்லாம் மும்பை குண்டு வெடிப்பு போன்ற தீவிரவாத செயல்களுக்கு பயன்படுவதாகவும், தீவிரவாதிகள் இதற்கு பின்புலமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தனது படத்தின் சி.டி. கூட பர்மா பஜாரில் விற்கப்பட்டது என்றார். சிடி வியாபாரத்தில் பெரும்பாலும் ஈடுபடுவது பெரும்பாலும் மார்க்கப் பற்றற்ற முஸ்லிம்கள் தான். எனவே அவர் தீவிரவாதி என்று குறிப்பிட்டது யாரை என்று எல்லாருக்கும் நன்றாகவே புரிந்தது.

நடிகர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் , தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற கொலைகளில் தொடர்புடைய குற்றவாளிகளை இன்னும் கைது செய்யாமல் தலையை பியத்துக் கொண்டிருக்கும் ஸ்காட்லாந்து காவல் துறைக்கு இணையான தமிழக காவல்துறைக்கு ஆணையிட்டு கள்ளத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிட்ட இரண்டு நபர்களை உடனடியாக கைது செய்தார்.

கமலின் துரதிர்ஷ்டம், கைதான இரண்டும் பேரும் முஸ்லிம்கள் அல்ல, உடனடியாக இனிமேல் திருட்டு விசிடி விற்கும் நபர்கள் அதே போல் வாங்கும் நபர்கள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் திரையுலக பிரமுகர்கள்.

திருட்டு விசிடி வாங்குபவர்களும் குண்டர் சட்டத்தில் கைது என்ற கோமாளித்தனமான கோரிக்கையை தமிழக அரசு கூடிய விரைவில் பரிசிலித்து சட்டமாக்கும் என்று தெரிகிறது. ஏனெனில் பொது மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை விட முதல்வருக்கு நடிக, நடிகைகளின் கோரிக்கைதான் முக்கியம்.

எனவே முதல்வர் குண்டர் சட்டத்தை கொண்டு வரலாம். ஆனால் அப்படி ஒரு சட்டம் வந்தால் டிக்கெட் எடுக்க வசதி இல்லாமல் திருட்டு விசிடியில் குடும்பத்தோடு படம் பார்க்கும் பாமர தமிழன் போன்று, Slum dog Millionire’ போன்ற அயல் மொழி படங்களை திருட்டு விசிடியில் பார்க்கும் சினிமாகாரர்களும் ஆங்கிலப்படங்ளை பார்த்து காப்பி அடிக்க சி.டி. வாங்கும் இயக்குனர்களும் (?), கதாசிரியர்களும் (?) அல்லவா சிக்குவார்கள்.

எது எப்படியோ, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உன்னைப்போல் ஒருவன் படம் எடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் கவனக் குறைவால் தப்பித்த கமல், இப்போது முஸ்லிம் சமூகத்தை திரும்ப ஒரு முறை சீண்டியிருக்கிறார்.

தொடர்ந்து இது போன்ற வேலைகளில் கமல் ஈடுபடுவாரானால் முஸ்லிம் சமுதாயம் அதை வேடிக்கை பார்க்காது என்று கமலுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.

நீலாங்கரை இரட்டை கொலை தொடர்பாக கருத்துக்களை தெரிவித்த விஜயகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை, திருட்டு சி.டி.க்காரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் உள்ள தொடர்பை நன்கு (?) அறிந்த கமலுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பினால் பல உண்மைகள் (?) வெளிவரும், செய்வார்களா?
***********
தகவல் பெற்றது: Wednesday, 20 January 2010 10:04
சுட்டி: http://www.tmmk.info/index.php?option=com_content&view=article&id=329:kamal-hashan-muslims-tmmk-&catid=81:tamilnadu&Itemid=198
நன்றி: http://www.tmmk.info/

மேலும் படிக்க...Read more...

சிரிக்க- எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா? JOKES

>> Monday, January 18, 2010

எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா?-தப்பிக்கவா தெரியாது -காலை வெட்டினா என்ன ஆகும்? -வயசைப் பத்தி….-எப்போலேருந்து இந்த கெட்ட பழக்கம்?-எங்கெங்கு தொட்டாலும்…நியூட்டனின் மூன்றாம் விதி-தமிழ் பேசு – தந்திரங்கள் தூசு!-இடுப்பைக் களைவதாம் நட்பு…


எனக்கு மட்டும் இவ்ளோ சின்னதா?


அந்த இந்தியர் முதல் முறையாக ஸ்பெயின் போயிருந்தார்.
புல் பைட் என்று உலக அரங்கில் புகழ் பெற்ற காளைச் சண்டை பார்த்து விட்டு வெளியே வந்தார். சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்குள் போனார். எல்லா ஐட்டங்களும் மசமசவென்று இருந்தன. என்னத்தைச் சாப்பிடுவது என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி.

எதிர் மேசையில் ஒருத்தர் தட்டில் பீட்-ரூட் சைசில் செவசெவ என்று எண்ணை போட்டு வறுத்த இரண்டு சமாச்சாரங்கள் இருந்தன. பார்க்கிற போதே இவருக்கு நாக்கில் எச்சில் ஊறியது.

“எனக்கும் அதுவே ஒரு ப்ளேட்”
“மன்னிக்கணும் சார். அது ஸ்பெஷல் ஐட்டம். ஒரு நாளைக்கு ஒண்ணுதான் கிடைக்கும். வேணும்ன்னா இன்னைக்கு புக் பண்ணிக்கங்க. நாளைக்கு தர்றேன்”

“ஏன் ஒண்ணே ஒண்ணுதான்னு சொல்றே?”
“புல் பைட் ஒரு நாளைக்கு ஒரு ஷோ தானே.. பைட் முடிஞ்சதும் பாடி எங்களுக்கு வந்துடும். இன்னைக்கு வந்த மாட்டோட டெஸ்ட்டிக்கில்ஸ் இது”
“நாளைக்கு எனக்கு கட்டாயம் கிடைக்குமில்லே?”
“ஓ… பேஷா”

மறுநாள் சீக்கிரமே போய் நாக்கை சப்புக் கொட்டியபடி காத்திருந்தார்.
ஒரு வழியாக ஐட்டம் வந்தது.

இந்தியருக்கு ஏமாற்றம்.
அவருக்கு தரப்பட்ட தட்டில், சின்னதாக சீடை சைசில் கருகிப் போய் இரண்டு உருண்டைகள்!

“என்னய்யா…வெளியூர்க்காரன்னு ஏமாத்தறீங்களா? எந்த மாட்டுக்குய்யா இவ்வளவு சின்னதா இருக்கு?”
“அய்யா, எல்லா நாளும் மனுஷனே ஜெயிக்கிறது இல்லைங்க. இன்னைக்கு மாடு ஜெயிச்சிடிச்சு”
---------------------------------
தப்பிக்கவா தெரியாது

“ஏய், என்ன கழுதையை கூட்டிகிட்டு வாக்கிங் கிளம்பிட்டே?”
“முண்டம், கண்ணு தெரியல்லையா? இது நாய்”
“தெரியும். நான் கேட்டது நாய் கிட்டே”
==========================
கணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
“பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல்காரியை நிறுத்திடலாம்.”
“நீங்களும் ஆம்பிளையா இருந்தா தோட்டக்காரனையும் நிறுத்திடலாம்”
-------------------------------------------------
தப்பிக்கவா தெரியாது?

அவனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,

“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக.
கணவன் எழுந்தான். துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.

“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,

“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது தப்பிச்சிடும்” என்றான்.
----------------------------------------------
காலை வெட்டினா என்ன ஆகும்?

ஒரு ஆள் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார்.
தவளையின் ஒரு காலை வெட்டி விட்டு, “குதி” என்றார்.
சில வினாடி தாமதத்துக்குப் பிறகு அது குதித்தது.
இரண்டு கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
இன்னும் கொஞ்சம் தாமதத்துக்குப் பிறகு அது குதித்தது.
மூன்று கால்களை வெட்டி விட்டு “குதி” என்றார்.
மிகுந்த சிரமத்துடன் அது குதித்தது.
நாலு கால்களையும் வெட்டி விட்டு “குதி” என்றார்.
ரொம்ப நேரமாகியும் எதுவும் நிகழவில்லை.
அவர் தன ஆராய்ச்சிக் குறிப்பில் பின் வருமாறு எழுதிக் கொண்டார்.
‘தவளையின் நாலு கால்களையும் வெட்டி விட்டால் அதற்கு இரண்டு காதுகளும் கேட்காது’
----------------------------------
வயசைப் பத்தி….

எம்.எல்.ஏ. எழிலரசனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ச்சே! ஒருபயலுக்காவது இன்றைக்கு நம்ம பிறந்த நாள்ன்னு தெரியலையே.
ஒருத்தொருத்தனுக்கு ஊர் பூரா போஸ்டர் ஒட்டுகிறார்கள். வீட்டு வாசலில் தொண்டர்கள் முட்டி மோதுகிறார்கள். ரூபாய் நோட்டு மாலை போடுகிறார்கள். தங்க வாள், வைர வாள் எல்லாம் பரிசு தருகிறார்கள்.
அட்லீஸ்ட் ஒரு போன் கால் அல்லது எஸ்.எம்.எஸ்?

ம்ம்ம் ஹூம்….
நன்றியில்லாத ஜனங்கள். பொதுச்சேவை என்கிறதே ஒரு தாங்க்லேஸ் ஜாப். வீட்டிலே சாக்கடை அடைத்துக் கொண்டதற்கெல்லாம் ஒரு மனுவைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இது ஞாபகமிருக்காது. அவ்வப்போது பேச்சுவாக்கில் என்றைக்குப் பிறந்த நாள் என்பதை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். இதுக்கு மேலே என்ன பண்றது…

சலிப்போடு உட்கார்ந்திருந்த எழிலரசனை, அவர் மகன் சொன்னது உற்சாகப் படுத்தியது.

“அப்பா, பக்கத்து வீட்டு மாமா உன் வயசு பத்தி எதோ சொல்றார்”
ஆஹா… ஏகாம்பரத்துக்கு என் பேரில் இத்தனை பிரியமா!
விடு விடுவென்று எழுந்து வாசல் பக்கம் போனார்.

“வாங்க ஏகாம்பரம். எங்கே மறந்துட்டீங்களோன்னு நினைச்சேன். இவ்வளவு ஞாபகமா வந்திருக்கீங்க…”

“மறக்கிற மாதிரியாய்யா நடந்துக்கிறீங்க. ரெண்டு கழுதை வயசு ஆச்சில்லே? உங்க வீட்டு குழந்தைக்கு என் வீட்டு வாசல்தான் டாய்லேட்டா? ஒரு தடவை சொன்னா மண்டைலே உறைக்காதா?”
----------------------------------------------------
எப்போலேருந்து இந்த கெட்ட பழக்கம்?

சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியவர்,

“ஏம்ப்பா தம்பி, உனக்கு என்ன வயசாச்சு?”
“பன்னண்டு”
“எத்தனை நாளா இந்த சிகரெட் பழக்கம்?”
“ரெட் லைட் ஏரியா போன அன்னிலேருந்து”
“அடக் கடவுளே! ரெட் லைட் ஏரியாவா? அது என்னைக்கு போனே?
“நினைவில்லே, அன்னைக்கு ஓவராக் குடிச்சிருந்தேன்”
============================
எங்கெங்கு தொட்டாலும்…

“டாக்டர், எங்க தொட்டாலும் வலிக்குது”
“எங்க தொட்டாலுமா?”
“ஆமாம் டாக்டர்”
“எங்கே, இடது காலைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“வலது கால்”
“வலிக்குது டாக்டர்”
“கண்ப்யூசிங்…கழுத்தைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“மர்மமா இருக்கே… மாரைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“தரோவா புரியலை…தலையைத் தொடுங்க”
“வலிக்குது டாக்டர்”
“ம்ம்ம்ம்… இதுக்கு நிறைய டெஸ்ட் எடுக்கணும்… போய் ப்லெட், யூரின் எல்லா சாம்பிளும் குடுங்க. ஈசிஜீ, ஸ்கேன், எக்ஸ் ரே எல்லாம் எடுக்கணும்”
“சரி டாக்டர்”

இரண்டு நாளாயிற்று.
“என்ன டாக்டர், ப்ராப்ளம் என்னன்னு தெரிஞ்சதா?”
“ம்ம்ம்.. ஆள் காட்டி விரல்லே பிராக்ச்சர்”
---------------------------------------
நியூட்டனின் மூன்றாம் விதி

ஒரு ஆளுக்கு வேலை கொடுக்கிற போது action, reaction இரண்டையும் சொல்லித்தர வேண்டும். இல்லையென்றால் குழப்பங்களை சந்திக்க நேரிடும்.
அது மழைக்காலம்.

அந்த லைப்ரேரிக்கு வருகிறவர்கள் எல்லாம் ஈரக் குடையை உள்ளே கொண்டு வந்து நார அடித்தார்கள். நிர்வாகி இதைத் தடுக்க ஒரு ஆளை வேலைக்குப் போட்டார். வருகிற எல்லாரும் குடையை வாசலில் இருந்த அவரிடம் ஒப்படைத்து விட்டுத்தான் உள்ளே போக வேண்டும் என்று உத்தரவு போட்டார். அப்படிச் செய்யாதவர்களை உள்ளே விடக் கூடாது என்றும், மீறினால் அவருக்கு வேலை போய் விடும் என்றும் எச்சரித்தார்.
அந்த மனிதர் வருகிற எல்லாரிடமும் குடையை வாங்கி வைத்துக் கொண்டு டோக்கன் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஒரு ஆள் நேராக உள்ளே போவதைப் பார்த்து ஆத்திரமடைந்தார்.
“யோவ், இங்கே ஒரு ஆள் என்ன ………………………றதுக்கா உட்கார்ந்திருக்கேன்? குடையை வெச்சிட்டு டோக்கன் வாங்கிட்டுப் போய்யா”

“என்கிட்டே குடையே இல்லியே?”
“அது உன் கவலை. குடையை இங்கே வெச்சாத்தான் உள்ளே போகலாம்”

இவர் பரவாயில்லை. இந்த நர்சின் கதையைக் கேளுங்கள்,
ஒரு டாக்டர், நர்சிடம் அரை மணிக்கொரு தரம் நோயாளி ஒருத்தருக்கு டெம்பரேச்சர் எடுக்கச் சொல்லியிருந்தார். காலையில் இந்த வேலையைக் கொடுத்து விட்டு சாயந்திரம் வந்தார்.

நோயாளிகளையும் தலைமாட்டில் இருந்த சார்ட்டுகளையும் பார்த்தார். குறிப்பிட்ட அந்த நர்சிடம் வந்தார்.
“அந்த ஆளுக்கு அரை மணிக்கொருதரம் டெம்பரேச்சர் எடுத்துகிட்டு இருக்கியா?”
“ஆமாம் சார். இப்பக் கூட பதினஞ்சு நிமிஷம் முன்னே எடுத்தேன்”
“போதும் நிறுத்திடலாம். அந்தாள் செத்து மூணு மணி நேரம் ஆச்சு”
--------------------------------
தமிழ் பேசு – தந்திரங்கள் தூசு!

வியாபாரத் தந்திரங்கள் தெரிந்துகொள்ள எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.

உங்களில் பலருக்கும் இது நிகழ்ந்திருக்கலாம்.
துணிக் கடையில் பான்ட் துணி வாங்கப் போகும் போது, ரொம்ப சுமாரானவைகளையே கடைக்காரர் காட்டிக் கொண்டிருப்பார். அலமாரியில் காட்டி “அதோ அதெல்லாம் நல்லா இருக்கே எடுங்க” என்று சொன்னால்
“அதெல்லாம் காஸ்ட்லி ஐட்டம் சார்” என்று உங்கள் ஈகோவைப் பிராண்டுவார்.

இதிலிருக்கும் சூழ்ச்சி தெரியாதவர்கள் உடனே சிலிர்த்துக் கொண்டு
“காஸ்ட்டைப் பத்திக் கவலை இல்லை” என்பார்கள்.
அவ்வளவுதான். அதற்கப்புறம் யானை விலை ஐட்டம் முழுசையும் விற்று விடுவார் கடைக்காரர்.

எங்கள் ஊரில் ஒரு ஒய்வு பெற்ற தமிழாசிரியர் இருந்தார். மகா கஞ்சர். சுலபத்தில் எதுவும் வாங்கி விட மாட்டார். ஆனால் தமிழ் மேல் அலாதி பிரியம் கொண்டவர். தமிழ்த் திறமை எங்கே இருந்தாலும் மனம் திறந்து பாராட்டுவார். அவரை பொருள் வாங்க வைக்க மார்க்கெட்டில் இருப்பவர்கள் படாத பாடு படுவார்கள்.

கறிகாய்க் கடை பழனிக்கு அவர் குணம் ரொம்ப நன்றாகத் தெரியும். அவரை கவிழ்ப்பதற்கு புதுப் புது பொறிகள் வைப்பான்.
நன்றாகப் பழுத்து கும்ம் என்று வாசனை அடிக்கும் கொய்யாப் பழங்களைக் காட்டி

“அய்யா, கொய்யாக்காய் வாங்கிக்கங்க” என்பான்.
“பழம்ன்னு சொல்லு. பக்கத்து ஊர் வரைக்கும் வாசனை வருது, இதைப் போய் காய்ங்கிறியே”
“உங்க கிட்டே படிச்சிட்டு எப்டிய்யா இலக்கணப் பிழையோட பேசறது?”
“எது இலக்கணப் பிழை?”
“அய்யா, இதெல்லாம் கொய்யா(மல் விடப்பட்ட) காய்கள். அப்படி விட்டதால் கனிகளா ஆனவை. இதையெல்லாம் கொய்யாக் காய்கள்ன்னும் சொல்லலாம், கொய்த கனிகள்ன்னும் சொல்லலாம்”
கேட்க வேண்டுமா?

ஆசிரியர் அகமகிழ்ந்து ஒரு டசன் வாங்கிக் கொண்டார்.
அடுத்த நாள் மார்கெட் பக்கம் வந்த ஆசிரியர்,
“என்னப்பா.. இன்னிக்கு என்ன புதுசா?” என்றார்.
“இன்னைக்கு கல்கட்டாப் புடலங்காய்தான் ஐயா புதுசு”
“இங்கே பார், நீ நேத்து சொன்னது நல்ல தமிழ் விளக்கம். அதனாலே பழம் வாங்கினேன். கல்கத்தாவிலே புடலங்காய் விசேஷமா? சும்மா விக்கணும்ங்கிறதுக்காக பொய் பேசக்கூடாது”

“பொய்யெல்லாம் ஒண்ணுமில்லை. கல் கட்டாம வளர்த்த புடலங்காய் இதுன்னு சொன்னேன்”

புடலங்காய்கள் பிஞ்சாக இருக்கும்போது வளையாமல் இருக்க கல்லைக் கட்டி விடுவார்கள்.
ஆசிரியரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.
இரண்டு புடலங்காய்களை வாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.
----------------------------------------
இடுப்பைக் களைவதாம் நட்பு…

அவன் மனைவி ஒரு பேரழகி.
ஊரே அவனைப் பொறாமையாகப் பார்த்தது.
அவனுக்கு ஊர் மீதும் நம்பிக்கையில்லை, மனைவி மீதும் நம்பிக்கை இல்லை.
ஒரு சமயம் அவன் படைக்குத் தலைமை ஏற்று போருக்குப் போக வேண்டியிருந்தது. மனைவியைத் தனியாக விட்டுப் போக வேண்டியிருப்பது உறுத்தலாக இருந்தது. மனைவியின் இடையை இரும்புத் தகடுகளால் மூடிப் பூட்டினான்.

சாவியை உயிர் நண்பனிடம் கொடுத்தான்.

“நண்பா, இந்த உலகத்தில் உன்னைத் தவிர யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவி மேல் கூட நம்பிக்கை இல்லை. இந்த சாவியை வைத்துக் கொள். ஒருவேளை போரில் நான் இறக்க நேரிட்டால் இவளது அழகும் இளமையும் வீணாகக் கூடாது என்பதால்தான் சாவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.” என்று நாத்தழுதழுக்க சாவியை ஒப்படைத்தான்.
நண்பனும் கண்களில் நீர் முட்ட விடை கொடுத்தான்.

அவன் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.

வீதியின் கோடியை அடைவதற்குள், பின்னால் யாரோ அழைக்கிற சப்தமும், ஓடி வருகிற சப்தமும் வந்தது.
திரும்பினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தது அவன் நண்பன்.
“என்ன நண்பா?”
“தப்பான சாவியைக் கொடுத்து விட்டாய்”
---------------------------------------------------
“தலைவரே, அங்கே ஜீன்ஸ், டி ஷர்ட் போட்டு வர்றது பையனா பொண்ணா?”
“யோவ்.. பல்லு எகிறிடும் அது என் பொண்ணு”
“சாரி சார், நீங்கதான் அவளோட அப்பான்னு தெரியாம சொல்லிட்டேன்”
“நான் அவங்க அம்மாடா வெண்ணை”
_____________________________________________________________
“என்ன சார் கால்லே கட்டு?”
“வீட்லே மாடிப்படி ஏற்ரப்போ விழுந்துட்டேன்”
“உங்க வீட்லேதான் மாடிப்படியே கிடையாதே?”
“இருட்டுலே அது தெரிஞ்சா நான் என் கீழே விழப் போறேன்”
_____________________________________________________________
அவருக்கு பயங்கர தொண்டை வலி. பேசவே முடியாமல் கிசு கிசுத்த குரலிலேயே பேசிக் கொண்டிருந்தார். எதிர் பிளாட் டாக்டருடையதுதான் என்றாலும் மணி ராத்திரி ரெண்டாகிறதே இப்பப் போய் தொந்தரவு செய்வதா என்று தயங்கினார்.
வலி தாங்கவில்லை.
எதிர் பிளாட்டுக்குப் போனார்.
அழைப்பு மணியை அழுத்தி விட்டுக் காத்திருந்தார்.
அரைக்கதவு திறந்தது.
“யார் வேணும்…?” என்றது தூக்கக் கலக்கமான பெண் குரல்.
“டாக்டர் இருக்காரா?” என்றார் இவர் கிசு கிசுப்பான குரலில்.
“இல்லே… சீக்கிரம் உள்ளே வாங்க” என்றது குரல்.
---------------------------
டைரக்டர் : “ம்ம்ம்..உங்க கதையை சொல்லுங்க”
கதாசிரியர் : “சார், நான் ரொம்ப ஏழை. என்ன நம்பி வீட்லே ஆறு ஜீவன் இருக்கு. எப்படியாவது எனக்கு நீங்க…..”
டைரக்டர் : “”அடச்சீ, நீங்க கொண்டு வந்த கதையை சொல்லுங்கன்னேன்..”
_____________________________________________________________
“இந்தக் கதையை படமா எடுத்தா போட்ட பணத்தை ஒரே வாரத்துலே எடுத்துடலாம்ன்னு ஒரு படம் எடுத்தீங்களே, என்ன ஆச்சு?”
“பாங்கிலே போட்டிருந்த பணத்தை எல்லாம் ஒரே வாரத்துலே எடுக்கிறாப்பல ஆயிடிச்சு”

THANKS TO :JAVAHAR. இதயம் பேத்துகிறது
http://kgjawarlal.wordpress.com/

மேலும் படிக்க...Read more...

காசாகும் குடும்ப அந்தரங்கங்கள்.எச்சரிக்கை!!

>> Monday, January 4, 2010

நன்றி: ஜூனியர் விகடன்

குற்றத்துக்கு ஆதாரம்... அதுவே, கூசவைக்கும் வியாபாரம்... அது எது?

இப்படி யாராவது விடுகதை போட்டால்,தயங்காமல் சொல்லலாம் 'கேமரா செல்போன்' என்று!

ஆம்... ஆந்திர ஆளுநர் மாளிகைக்குள் எடுக்கப் பட்டதாக 'திவாரி - சவாரி' வீடியோ காட்சிகள் வெளியான மறுநாள் நம் அலுவலகத்துக்கு வந்த பார்சல், மேற்சொன்னபடிதான் நம்மை மருள வைத்தது!

'இன்னும் பல பெண்களின் வாழ்க்கை பாழாவதற்கு முன்னால் இதுபற்றித் தீர
விசாரித்து ஜூ.வி-யில் எச்சரிக்கை ரிப்போர்ட் எழுதுங்கள்' என்று இறைஞ்சியது, அந்த சி.டி-யுடன் இருந்த ஒரு கடிதம்!

சி.டி-யை ஓடவிட்டதுமே அதில் விரிந்த ஆபாசக் காட்சிகளை நம்மால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை. அதேசமயம், அந்த ஒரே சி.டி-க்குள் அடுத்தடுத்து பதிவாகி இருந்தவை, வெவ்வேறு ஜோடிகள் சம்பந்தப்பட்ட காட்சி என்பதை உணர முடிந்தது. உணருவதென்ன... எந்த ஒளிவுமறைவோ, இருட்டு நிழலோ இல்லாமல் தெள்ளத் தெளிவாக ஓடின காட்சிகள்.

சி.டி-யுடன் இணைத்திருந்த கடிதம், ''இதில் உள்ள எல்லா ஜோடிகளுமே கணவன் - மனைவியர்தான். அவரவர் வீட்டுப் படுக்கையறையில் அரங்கேறிய அந்தரங்கங்கள்தான் இவை. காதோடு வைத்து ரசிக்க வேண்டிய தாம்பத்யம் என்ற சங்கீதத்தை, செல்போன் கேமரா கொண்டு விளையாட்டாகப் பதிவு செய்ததன்மூலம், இப்படி ஊரறிய அலறும் லவுட் ஸ்பீக்கராக மாற்றி விட்டார்கள். காஞ்சி காம குருக்கள் தேவநாதன் விஷயத்தில் நடந்ததுபோலவே, இவர்களின் செல்போனை சர்வீஸுக்குக் கொடுத்தபோதோ... எக்ஸ்சேஞ்சாக விற்றபோதோ இவர்கள் 'டெலிட்' செய்திருந்தும், 'ரெட்ரீவ்' செய்யப்பட்ட காட்சிகள்தான் இவை.


இத்தனையும் கூறுகிற நானும் ஒரு செல்போன் சர்வீஸ் சென்டரில் வேலை பார்ப்பவன்தான். அடுத்தவர்களின் அந்தரங்கத்தை வெறியோடு தோண்டியெடுத்து, அதை மொத்தமாக சி.டி. போட்டு விற்கிற வக்கிரம், சில செல்போன் சர்வீஸ் பாய்களின் மூலமாக நடக்கிறது. அதிலும், கள்ள உறவுகளை இதுபோன்ற பதிவுகளாகப் பார்த்து அலுத்துவிட்ட ஒரு வக்கிர கும்பலுக்கு... இதுபோன்ற 'நல்ல உறவுகளை'ப் பார்க்கிற ஆசை வந்து... அதுவே இப்படி செட் செட்டாக மார்க்கெட்டில் விற்கிறது!'' என்று கிட்டத்தட்ட கதறியிருந்தது.

சைபர் கிரைம் பிரிவில் உள்ள நமது நட்பு போலீஸாரிடம் இதுபற்றி தமிழகம் முழுவதும் விசாரித்தபோது... கடிதத்தின் வார்த்தைகள் எத்தனை சத்தியமும் வீரியமும் மிக்கவை என்று புரிந்தோம்... மொத்தமாக அதிர்ந்தோம்! ''ரியாலிட்டி கிளிப் பிங்ஸ் என்று இதற்குப் பேர் வைத்து விற்கிறார்கள்.

சர்வீஸுக்கு ஒரு செல்போன் வருதுன்னாலே 'டெலிட்' செய்யப்பட்ட பிறகும் அதில் பதுங்கியிருக்கிற விஷயங்கள் என்னென்ன என்பதை ஆராய்வது, பல கடைகளில் உள்ள வயசுப் பையன்களின் வேலையாக இருக்கிறது. அதிலும் கண்ணுக்கு லட்சணமான பெண்கள் வந்து சர்வீஸுக்குக் கொடுத்தால், தேடல் ரொம்ப பலமாகிவிடும்.

மனைவியைவிட்டுப் பிரிந்து வெகு தூரத்தில் வேலை பார்க்கிற ஒருசில கணவர்கள்தான் இப்படி தங்கள் அந்தரங்கத்தை மனைவிக்குத் தெரிந்தே பதிவு செய்து வைத்துக் கொள்கிற தவறை முதலில் அரங்கேற்ற ஆரம்பித்தார்கள்.

பிரிவுத் துயரத்தின்போது, பர்ஸுக்குள் இருக்கிற போட்டோவை எடுத்துப் பார்க்கிற மாதிரி இதுவும் அவர்களுக்கு சர்வ சாதாரணமாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், இந்த வீடியோவின் காட்சிகளில் வருகிற மனைவியர் முதலில் ஏகத்துக்கும் வெட்கப்படுவதும், பிறகு கள்ளங்கபடமேயில்லாமல் காஷுவலாக இருப்பதுமாக சில ஒற்றுமைகள் தெரியும்.

எங்களுக்குத் தெரிந்து செல்போன் சர்வீஸ் நிலையங்களில் வேலை பார்க்கும் சில இளைஞர்கள் பெரிய நகரங்களில் தங்களுக்குள் சங்கம் அமைக்காத குறையாக இதுபோன்ற காட்சிகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

இன்னும் சில புத்திசாலிகள்தான், இவற்றையெல்லாம் தொகுத்து சி.டி-யாக்கி அதன் மாஸ்டர் காப்பியை பல ஆயிரம் ரூபாய்கள் வரை விற்கிறார்கள். சென்னையில் அப்படிப்பட்ட நான்கைந்து பேருக்கு நாங்கள் பொறி வைத்திருக்கிறோம்'' என்றவர்கள்,

''தன் மனைவியை இப்படி வற்புறுத்தி பதிவு செய்துவிட்டு, அதையே தன் நண்பர்கள் கண்ணுக்கு தீனியாக்கிய ஒரு கணவனை லேட்டஸ்டாகப் பிடித்திருக்கிறோம்'' என்று சொல்லி, நம்மை மாதவரம் போலீஸாரிடம் அனுப்பி வைத்தார்கள். அந்த ஏரியாவைச் சேர்ந்த ஆன்னெல்லா டால்மியா என்ற பெண்மணியின் பரிதாபக் கதையைச் நம்மிடம் சொன்னார் மாதவரம் இன்ஸ்பெக்டர் குமரன்.

ஏடாகூட எரல் எல்லீஸ்!

''டால்மியாவின் கணவர் எரல் எல்லீஸ் தனியார் கார் கம்பெனி ஒன்றில் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கும் பொறுப்புள்ள அதிகாரி. போன ஜனவரி மாதம்தான் ரெண்டு பேருக்கும் திருமணம் நடந்திருக்கு. மணமான நாளில் இருந்தே எரல் எல்லீஸ் புளூ ஃபிலிம் பார்க்கச் சொல்லி ஆனெல்லாவை வற்புறுத்தி இருக்கார்.

இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகள் இப்படிப்பட்ட காட்சிகளைப் பார்த்து, அதன்படியே உறவு வச்சுக்க விரும்புறாங்க. டால்மியாவிடமும் இதை வலியுறுத்தி இருக்கார் எரல் எல்லீஸ். இதனையெல்லாம் தாண்டி உச்சகட்டமாக மனைவியுடன் தனிமையிலிருந்த தருணத்தை அப்படியே செல்போனில் படம் பிடிக்கவும் செய்திருக்கிறார்.

'கணவர்தானே படம் எடுக்கிறார்' என்று வேறு வழியில்லாமல் டால்மியாவும் பொறுத்துக் கொண்டார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே எரல் - டால்மியா உறவுக் காட்சிகள் மாதவரம் ஏரியாவில் பலருடைய செல்போன்களுக்கும் பரவத் தொடங்கிவிட்டது.

ஒருகட்டத்தில், குடும்ப நண்பர் ஒருவர் மூலம் டால்மியாவுக்கே இது தெரியவர... நடுங்கிப் போனவராகக் கணவரிடம் அதுபற்றி விசாரித்திருக்கிறார். அப்போதுதான் அந்த தாம்பத்திய காட்சிகளை நண்பர்கள் சிலருக்கு எரல் எல்லீஸ் போட்டுக் காட்டிய உண்மை தெரிந்திருக்கிறது.

ப்ளூடூத் மூலம் அதை வாங்கிக்கொண்ட ஒரு நண்பர் மூலமாகவே அந்தக் காட்சிகள் ஒரு செல்போன் சர்வீஸ் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து வியாபாரமாகிவிட்டது. டால்மியா கொடுத்த புகாரின் பேரில் இப்போது எரல் எல்லீஸை சிறையில் அடைத்திருக்கிறோம்...'' எனச் சொன் னார் இன்ஸ்பெக்டர் குமரன்.

பூகம்ப புவனேஸ்வரன்!

கோவை போலீஸாரிடமிருந்து நமக்கு வந்துசேர்ந்த விவரம் அடுத்தகட்ட பயங்கரம்!

இவர்களிடம் சிக்கி இருக்கும் புவனேஸ்வரன் என்பவனோ, பல பெண்களோடு பாச நேசமாகப் பழகி, நெருக்கமான காட்சிகளைப் பதிவு செய்து, அதனை சந்தைக்குக் கொண்டுவந்து, இப்போது போலீஸில் சிக்கி இருக்கிறான். ''ஓரளவுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் இவன். 10-ம் வகுப்புக்கு மேல படிப்பு ஏறாததால, ஊர் சுத்த ஆரம்பிச்சிருக்கான். 20 வயசுலயே லவ் பண்ணி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிட்டான். அந்தப் பொண்ணைக் கொஞ்ச நாள்ல துரத்தி விட்டுட்டு, காலேஜ் பொண்ணுங்களை குறிவச்சு கவர் பண்ண ஆரம்பிச்சு இருக்கான்.

அவன்கூட ஸ்கூல்ல படிச்ச பசங்க, இப்போ காலேஜ் படிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்களோட மொபைல்ல இருக்கிற பொண்ணுங்க நம்பரை மட்டும் நோட் பண்ணிட்டு, தினமும் ராத்திரி நேரத்துல அவங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சிருக்கான்.

புது நம்பர்ல இருந்து எஸ்.எம்.எஸ். வருதேன்னு, விவரம் புரியாம கூப்பிட்டுப் பேசுற பொண்ணுங்ககிட்ட நைஸா பேச்சை வளர்த்திருக்கான். தொடர்ந்து பேசியவர்களுக்கு அடுத்த கட்டமாக ஆபாச எஸ்.எம்.எஸ், வீடியோ கிளிப்பிங்க்ஸ் அனுப்பி வச்சு கொஞ்சம் கொஞ்சமா... தன்னோட வலைக்குள்ள விழ வச்சிருக்கான். 'கல்யாணம் பண்ணிக்கிறேன்' என நம்பிக்கை வார்த்து அதன் மூலமாகவே அவர்களை வலையில் வீழ்த்தியிருக்கான். அதை அப்படியே செல்போன்ல படம் பிடிக்கவும் செஞ்சிருக்கான்.

செல்போன் பதிவுக்கு மறுக்கும் பெண்களிடம், 'நீ இல்லாத நேரத்தில இதைப் பார்த்தாவது என் மனசை ஆத்திக்கிடுவேன்டா செல்லம்' என்றெல்லாம் அவர்கள் ரூட்டிலேயே பேசி மசிய வைத்திருக்கிறான்.

இவனோட வலையில கோவையைச் சேர்ந்த தொழிலதிபர்கள், உயர் அதிகாரிகளோட குடும்ப வாரிசுகளும் சிக்கி இருக்காங்க. பத்திரிகைத் துறையில இருக்குற ஒருத்தரோட பொண்ணையும் அவன் விட்டு வைக்கலை.

யார் யாரோடெல்லாம் சகவாசம் வச்சிருந்தேன்னு காட்டுவதற்காக நண்பர்கள் பலருக்கும் புளுடூத் வழியாகவும், எம்.எம்.எஸ். மூலமாகவும் உறவுக் காட்சிகளை புவனேஸ்வரன் அனுப்பி இருக்கான்.

நண்பர்கள் சிலர் மூலமா இதை மோப்பம் பிடிச்ச செல்போன் கடைக்காரங்க, அதை 'செட்'டா சி.டி. போட்டு தமிழகத்தின் பல திசைகளுக்கும் பரப்பி, காசு பார்த்திருக்காங்க. சமீபத்தில புவனேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிளிப்பிங்க்ஸ் காட்சியைப் பார்த்த கோவை உயரதிகாரி ஒருத்தர் குலை நடுங்கிப் போயிட்டார்.

புவனேஸ்வரனோட இணைஞ்சிருந்ததில் ஒரு பொண்ணு, அவரோட பொண்ணு! 'சார், இந்தப் பையனை எங்க ஏரியாவிலேயே நான் பார்த்திருக்கேன்' அப்படினு கலங்கிப்போய் அந்த அதிகாரி சொல்ல... அப்படித்தான் புவனேஸ்வரன் எங்க கவனத்துக்கே வந்தான். புவனேஸ்வரனோட செல்போன் நம்பரை ஃபாலோ செஞ்சு, அவனை வசமா அமுக்கிப் பிடிச்சோம்.

அவன்கிட்ட இருந்து மூணு மொபைல் போன், எட்டு சிம் கார்டுகளை பறிமுதல் செஞ்சோம். போன் மூலம் பெண்களை வளைக்கிறதுக்கும், அவங்களை கூட்டிட்டுப் போறதுக்கும் தன்னோட மோட்டார் பைக்கையே அடமானம் வெச்சிருக்கான். ஆனா, அவன் மூலமாக கிடைச்ச காட்சிகளை சி.டி. போட்டு பல ஆயிரங்களை சிலர் சம்பாதிச்சிருக்காங்க. அவங்க யார் யார் என்பதற்கான ஆதாரங்களைத் தேடிக் காத்திருக்கிறோம்.

'பல பொண்ணுங்க வாழ்க்கை உன்னால சீரழிஞ்சு போச்சேடா...'ன்னு நாங்க கேட்டதுக்கு, 'என்னைப் பத்தி எந்தப் பொண்ணும் புகார் கொடுக்க மாட்டா. ஏன்னா, நான் அவங்க ஒவ்வொருத்திக்கும் உயிருக்கு உயிரான காதலன்'னு தெனாவெட்டா சொல்றான்!'' என்று சொல்லித் திகைக்க வைக்கிறார்கள் அவனை வளைத்த போலீஸார்.

புவனேஸ்வரனிடம் விசாரணை நடத்திய கோவை மாநகர நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுருகனிடம் பேசியபோது, ''எழுத்துப்பூர்வமா அவன் மேல புகார் கொடுக்க யாருமே முன்வரல.

அந்தக் காட்சிகளை காட்டி சிலர்கிட்ட மிரட்டிப் பணம் பறிக்கவும் செஞ்சிருக்கான். அது சம்பந்தமான புகாரை வெச்சு அவன் மேல செக்ஷன் 384-ன் கீழ் வழக்குப் பதிவு செஞ்சிருக்கோம். அவனோட நண்பர்கள்கிட்டேயும் விசாரணை நடந்துகிட்டு இருக்கு. அவன்கிட்ட ஏமாந்த பெண்கள் எழுத்துப்பூர்வமா தைரியமா புகார் தரலாம். அவங்களைப் பத்தின தகவலை வெளியில கசிய விடமாட்டோம்!'' என்றார்.

'பள்ளியறை' செல்வராஜ்!

சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஏ. பட்ட தாரியான செல்வராஜ் செய்ததும் உச்சகட்ட அயோக்கியத்தனம். மனைவி, குழந்தைகள் என்று அழகான குடும்பம். மணலியில் ட்யூஷன் சென்டர் நடத்தி வந்த செல்வராஜிடம் பள்ளிப்பாடம் படிக்க வந்திருக்கிறாள், ப்ளஸ் ஒன் மாணவியான சுஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பருவத்தின் வாசலில் நின்றிருந்த சுஜாவைப் பார்த்துக் கிறங்கிப் போன செல்வராஜ்... நைஸாகக் காய் நகர்த்தியதில், அறியாப் பருவத்து சுஜா வலையில் விழுந்துவிட்டாள். அவர்களுக்கிடையே 'அத்தனையும்' நடந்திருக்கிறது.

சுஜாவோடு தான் இருந்த தனிமைத் தருணங்களை யெல்லாம் மறக்காமல், தனது செல்போன் கேமராவில் படமாக்கிய செல்வராஜ், தனது சாகசத்தை நண்பர்களுக்குக் காட்டி மகிழ... அந்தக் காட்சிகளும் பலருடைய செல்போன்களுக்கும் பரவியது.

இப்போது செல்வராஜ் கைதாகிவிட... சுஜா தனது பள்ளிக்கூடத்துக்குக்கூடப் போக முடியாத இக்கட்டில் சிக்கித் தவிக்கிறார். காரணம், பல மூலைகளுக்கும் அந்தக் காட்சிகள் பரவி... குடும்பத்தைக் குத்திக் கிழிக்கும் வகையில் கேள்விகளும் பார்வைகளும் வரத் தொடங்கியதுதான்.

எனக்கே எனக்கா... எச்சரிக்கை ப்ளீஸ்!

'எனக்கே எனக்காக என் செல்போனில்தானே பதிவு செய்கிறேன். நானே பார்த்து ரசித்துவிட்டு ஃபைலையும் அழித்துவிடுவேன். யாருக்கும் எதுவும் தெரியாது!' என்ற எண்ணத்தோடுதான் சில தம்பதிகள் இப்படி எல்லை தாண்டுகிறார்கள்.

செல்போன் மெமரி கார்டு, கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகளில் இருந்தெல்லாம் அழிக்கப்பட்ட பிறகும், அந்த ஃபைல்களை எடுக்க ஏராளமான 'ரெக்கவரி சாஃப்ட்வேர்'கள் இப்போது வந்து விட்டன என்பதை இவர்கள் மறந்துவிடவே கூடாது. 'அதை'யெல்லாம் படம் எடுப்பது என்ற எண்ணத்தையே ஒழித்துவிட்டால் தொல்லையே கிடையாது!'' என்று எச்சரிக்கை வாசிக்கிறார்கள் சைபர் கிரைம் போலீஸார்.

இப்படி எதிர்பாராத விதமாக செல்போன் காட்சிகள் வெளியே பரவியதன் மூலம், வட மாவட்டத்தின் ஒரு கடையில் வேலை பார்த்த சேல்ஸ் கேர்ள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும், கோவை மாவட்டத்தில் ஒரு குடும்பத் தலைவி விவாகரத்து வரை போன விவகாரமும் போலீஸாரின் ரகசிய ஃபைலில் இருக்கிறது!
SOURCE: JUNIOR VIKATAN. COURTSEY TO :neetheinkural.blogspot.
**********

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP