- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
இளையாங்குடியில் பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா?
>> Friday, October 23, 2009
பாலிடெக்னிகா? பொறியியற் கல்லூரியா?
ஜனாப் ஹிலால் ஆலம். சிங்கப்பூர்.
தாங்கள் அனைவரின் மீதும் (இறைவனின்) சாந்தியும் சமாதானமும் உண்டாகுக…
கடந்த சில நாட்களாக நடைபெறும் பாலிடெக்னிக் அல்லது பொறியியற் கல்லூரி தொடங்குவது பற்றிய விவாதங்களை கவனித்து வந்தேன். வளர்ந்து வரும் பொருளாதார சூழ்நிலையில் நிறுவனங்கள் அதிக திறமைகளையும் பலதுறைகளில் நிபுணத்துவம் உடைய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
ஆகவே பொறியியல் கலை மட்டும் பயின்ற மாணவர்களின் நிலையே மிகவும் போட்டித்தன்மை மிக்கதாக உள்ளது. முன்பு பாலிடெக்னிக் படித்தவர்களின் சில இடங்களை தற்போது பொறியியல் கலை பயின்றவர்கள் வேகமாக நிரப்பிவரும் நிலை காணப்படுகிறது.
இதற்குக் காரணம் அவர்கள் இயக்கும் கணணி கட்டுப்பாட்டிலுள்ள நவீன இயந்திரங்கள், மேற்பார்வையிடும் திறன்மிகு பணிகள் மற்றும் பணியாளர்களின் நவீனப் பயிற்சிக்கு பாலிடெக்னிக் பயின்றவர்களினால் தற்போது ஈடுகொடுக்க முடியவில்லை.
நான் கூறுவது எல்லா துறைக்கும் பொருந்தும். ஆகவே பாலிடெக்னிக் மாணவர்கள் சிறிது பயிற்சி எடுத்தபின் இயந்திரங்களை இயக்கும் பணிக்கே பெரும்பாலும் அனுப்பப்படுகிறார்கள்.
சிறிய நிறுவனங்களில் அதிக வருட அனுபவங்களுக்குப் பிறகே அவர்கள் கண்காணிப்பாளர்களாக பொறுப்பேற்கிறார்கள். குறு நிறுவனங்களே தற்போது பாலிடெக்னிக் பயின்றவர்களை வரவேற்கின்றன.
10 ஆண்டுகளுக்கு முன் இந்த நிலைமை கிடையாது. பாலிடெக்னிக் பயின்றவர்கள் பொறியிலாளருக்கு உதவி பிரிவில் இருந்து வந்தனர். நவீனத்துவம் மற்றும் கடும் போட்டி காரணமாக பாலிடெக்னிக் பயின்றவர்கள் நிர்வாகத்துறைக்கு வேகமாக முன்னேறுவது தற்போது மிகவும் கடினமாக உள்ளது.
ஆகவே பாலிடெக்னிக் ஆரம்பிப்பதால் பெரிய நிறுவனங்களில் “இரண்டாம்” இடத்திலேயே வைக்கப்படும் பணியாளர்களையே நாம் உருக்க விழைகிறோம். இது நம் சமூகத்திற்கு என்றும் உதவாது.
நாம் நம்மை முதல் தரத்திற்கும் இடத்திற்கும் தயார்படுத்தவேண்டும். 20 வருடங்களுக்கு முன் பாலிடெக்னிக் ஆரம்பிக்கும் காலகட்டங்களில் ஐடிஐ ஆரம்பித்தோம்.
தற்போது பொறியியற் கல்லூரி ஆரம்பிக்கும் காலகட்டத்தில் பாலிடெக்னிக் பற்றி சிந்திப்பது நம்முடைய தன்னம்பிக்கையின்மையை அல்லது (பெரும்) முயற்சியின்மையை காட்டுகிறது. ஆகவே நம்முடைய முயற்சியை பொறியியற் கல்லூரி ஆரம்பிப்பதில் செலவிடலாம்.
நோக்கம் மற்றும் வழிமுறைகள் ( Vision and Mission)?
“நம்மூரில் ஒரு தொழிற்கல்வி நிறுவனம் வேண்டும்” என்பது அனைவரது ஆசைதான். மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த கல்வி நிறுவனத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே அதனை அடையும் வழிமுறைகளும் விவாதிக்கப்படவில்லை.
இந்த இரண்டையும் தீர்மானித்தப் பிறகே கேபிடல் பட்ஜெட் மற்றும் நிர்வாகப் பட்ஜெட் பற்றியே யோசிக்கவேண்டும். நம் பொறியியற் கல்லூரியின் நோக்கம் என்ன?
யாருக்காக (இருபாலருக்கும் என்று அனுமானிக்கிறேன்) கல்லூரி?
1. நம் ஊர் மற்றும் சுற்றுப்புற மாணவர்களுக்காகவா?
2. நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்காகவா?
3. பெரும்பாலும் நம்முடைய சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிறிதளவு மற்ற சமூகத்தினருகுமா?
இது மிகவும் முக்கியமான கேள்வி. இதன் பதில் அடிப்படையில் தான் யாரிடமிருந்து நிதியுதவி பெறுவது என்பதை திட்டமிடவேண்டும்.
எதற்காக கல்லூரி துவங்க வேண்டும்?
கல்லூரியின் நோக்கம் இங்கு தெளிவாக வரையறுக்கப்பட வேண்டும். இதன் அடிப்படையில் தான் கல்லூரி நிறுவுவதற்கு எவ்வளவு தேவை என்பதை நிர்ணயிக்கமுடியும்.
1. (பெரும்பாலான) மாணவர்கள் படித்தபிறகு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்காகவா?
2. (பெரும்பாலான) மாணவர்கள் மேற்படிப்பிற்கு தயார் படுத்துதலுக்காவா?
3. (பெரும்பாலான) மாணவர்களை ஒரு குறிப்பிட்ட தொழில் துறைகளில் புகுத்துவதற்காகவா?
4. (பெரும்பாலான) மாணவர்கள் தாங்களாகவே தொழில் துவங்குவதற்காகவா? 5. தலைசிறந்த ஆய்வகங்கள் கொண்ட கல்லூரியாக விளங்குவதற்காகவா?
6. எல்லா மாணவர்களையும் பட்டதாரிகளாக்குவதா?
அனைத்தும்தான் என்று கூறுவது இலக்கற்ற ஓரு முயற்சி. வெற்றி பெறாது. மேற்கூறிய 6 வகைகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. (பெரும்பாலான) மாணவர்கள் படித்தபிறகு உடனடியாக வேலைவாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதற்காகவா?: இதற்கு மிகவும் வசதியான ஆய்வகக்கூடம் அவசியம். நிறுவனங்கள் இந்த ஆய்வுக்கூடங்களை பார்த்த பிறகே கேம்பஸ் இண்டர்வியூவிற்கு முன்வருவார்கள். பேராசிரியர்கள் அந்தந்த துறைகளில் சராசரி அறிவை கொண்டிருந்தால் போதும். அதற்கேற்றவாறு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கலாம். இங்கு மாணவர்களின் பட்டம் B.Tech (/ M.Tech) என்று இருப்பது நலம். உதாரணம் PSG Tech, Coimbatore.
2. (பெரும்பாலான) மாணவர்கள் மேற்படிப்பிற்கு தயார் படுத்துதலுக்காவா?: இதற்கு சராசரியான ஆய்வகக்கூடம் இருந்தாலே போதும். பெருநகரங்களில் உள்ள பெரும்பாலான பொறியியற் கல்லூரி இந்த வகையைச் சார்ந்தது. கேம்பஸ் இண்டர்வியூ இங்கும் உண்டு ஆனால் (கணிப்பொறியைத் தவிர மற்ற துறையில்) இது மிகவும் குறைந்த முக்கியத்துவம் கொண்டது. பேராசிரியர்கள் அந்தந்த துறைகளில் சராசரி முதல் நல்ல அறிவை கொண்டிருத்தல் வேண்டும். மாணவர்களை அடுத்த கட்ட நுழைவுத் தேர்வுக்கு தயார் படுத்த வேண்டுமல்லவா? அதற்கேற்றவாறு பேராசிரியர்களை தேர்ந்தெடுக்கலாம். மாணவர்களின் பட்டம் B.E (/ M.E) என்று பெரும்பாலும் இருக்கும். உதாரணம் மற்ற தனியார் பொறியியற் கல்லூரிகள்.
3. (பெரும்பாலான) மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட தொழில் துறைகளில் புகுத்துவதற்காகவா?:
மதுரைக்கு அருகில் MEMPCO என்ற பொறியியற் கல்லூரி உள்ளது. Metal Powder Company என்ற அந்த (வெடிபொருட்களுக்கான) உலோகதூள் தயாரிக்கும் நிறுவனத்தின உதவியால் நடத்தப்படும் இதில் அந்த நிறுவனத்திற்குத் தேவையான மனிதவளங்களை உற்பத்தி செய்கிறார்கள். மற்றொரு உதாரணம் பிர்லா க்ரூப்பின் BITS, Pilani.. இவ்வகையான கல்லூரித் திட்டம் நமக்கு தற்போது உதவாது. எனினும் கணணித் துறையை மட்டும் இந்த மாடலுக்குள் கொண்டுவரலாம். இங்கு மாணவர்களின் பட்டம் அனேகமாக B.Tech (/ M.Tech) என்று இருக்கும்.
4. (பெரும்பாலான) மாணவர்கள் தாங்களாகவே தொழில் துவங்குவதற்காகவா??: அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு மாடல். வேறு எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை. இதற்கு ஆய்வகமும் பேராசிரியர்களும் அந்தந்த பாடங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும். இந்த மாடலும் நமக்குத் தற்காலிகமாக ஒத்துவராது. எனினும் 20 வருடங்கள் கழித்து incubation center அமைக்கும் போது இந்த மாதிரியை கல்லூரியில் இணைக்கவேண்டும்
5. தலைசிறந்த ஆய்வகங்கள் கொண்ட கல்லூரியாக விளங்குவதற்காகவா? இதுவும் தற்போதைக்கு ஒத்துவராத ஒரு மாடல். ஐஐஎஸ்ஸி, ஐஐடி, என்ஐடி ஆகிய அரசாங்க ஆதரவினால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு ஏற்றவை.
6. அதிக பட்டதாரிகளை உருவாக்குவதா? இந்தியாவின் வடகோடியிலிருந்து தென்முனைவரையிலும் உள்ள லாபநோக்கத்தோடு நடத்தப்படும் எல்லா பொறியியற் கல்லூரியின் மாடல் இது.
நமக்கு பொறியியற் கல்லூரி என்றவுடன் சட்டென நினைவுக்கு வருவதும் இவைதான். டைம் ட்ரஸ்டின் 1.5 கோடி ரூபாய் தேவையோ அல்லது ஜனாப் முகம்மத் அலி ஐபிஎஸ் அவர்களின் ஆடுதுறை கல்லூரியைப் பற்றிய குறிப்பேடோ இந்த சிந்தனையின் அடிப்படையில் வந்ததாக இருக்கவேண்டும்.
அதற்கு தற்போது அவசியமில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம்முடைய மாடல் எது என்று கணித்தப்பிறகே எந்த கல்லூரியின் மாடலைப் பின்பற்றுவது என்ற கேள்வி வருகிறது. எவ்வளவு வேண்டும் என்ற தேவையும் எழுகிறது.
(பொறியியற்) கல்லூரி என்பது வெறும் நிலம், உயர்ந்து நிற்கும் கட்டடம், அடிப்படையான ஆய்வுக்கூடம் மற்றும் பொறியியல் பயின்ற ஆசிரியர்கள் கொண்ட கூடாரம் அல்ல.
அது நோக்கம் (Vision) அந்த நோக்கத்தை அடையும் வழிமுறைகள் ;(Mission) அதன் மூலம் உருவாக்கப்படும் மதிப்பு (Value Creation) அதனால் சமூகம் அடைந்த நன்மை (Contribution to our Soceity) ஆகியவைகளின் கலவை.
இவைதான் கல்விக்கூடம். இது பொறியியற் கல்லூரிக்கும் மிகவும் பொருந்தும். இடம், கட்டடம் ஆகிய மற்ற இத்யாதிகள் நம்முடைய நோக்கத்தை அடையும் உபகரணங்கள் தான் Material Tools.
இளையான்குடியிலிருந்து சென்னைக்கு செல்லும் நோக்கத்தில், அது காரைக்குடி வழியாகவா அல்லது மதுரை வழியாகவா (எரிபொருள் செலவுக்காக) என்ற வழியைத் தீர்மாணித்த பின் யார், எத்தனை பேர் என்று முடிவு செய்த பிறகுதான், வாடகைக்கு காரா, வேனா அல்லது பஸ் வேண்டுமா என்பதை தெரிவுசெய்யவேண்டும்.
தாங்கள் ரூ1.5 கோடி என்று வரையறுத்ததும் ஆடுதுறைக் கல்லூரியை உடனே உதாரணம் கொண்டதும் நோக்கமின்றி வாகனத்தை தேர்ந்தெடுத்தது போலாகிவிடும்.
மேற்கண்ட இலக்கைத் தெளிவாக வரையறுத்தப்பின்னே எவ்வளவு தேவை என்பதை நாம் முடிவுகட்டவேண்டும்.
எப்படி நிதி திரட்டவேண்டும்?
நோக்கத்தை தெளிவுபடுத்தியபின் தான் நிதி திரட்டலை பற்றி சிந்திக்கவேண்டும். இந்த கல்லூரியானது முஸ்லீம் சமூகம் அனைத்திற்கும் என்றால் மாநில அளவில் நிதி திரட்டலாம். நாம் மற்றும் நம்மை சுற்றி மட்டும் என்றால், அது சற்று கடினம் தான். நம்மவர்களால் எவ்வாறு (உதாரணத்திற்கு) 3 கோடி வரையில் கொடுக்கமுடியும் என்பது தெரியவில்லை.
ஆகவே அதற்கு Revenue Model ஒன்று தயார் செய்திடல் வேண்டும். நமக்கு பரிச்சயமாகாத ஒரு மாடல் இது. ஆகவே சற்று மலைப்பாக இருக்கும்.
அதாவது, அடிப்படை தேவைகள் மற்றும் துறைகளை மட்டும் ஆரம்பித்து, தொழிற்துறையுடன் கூட்டுறவு வைத்து அவர்களுக்காக கன்சல்டன்சி மற்றும் Real Time Project ஆகியவற்றை செய்திடல் வேண்டும். அதற்கென
Industrial Center and Sponsored Research ஒன்று நிறுவப்படவேண்டும்.
அந்தந்த பேராசிரியர்களின் பொறுப்பில் அதனை விட வேண்டும். MIT (USA), NTU (Singapore) போன்ற வெளிநாட்டு கல்லூரிகளைப் போல் அவர்கள் கல்லூரியில் சேர்ந்த 4 வருடங்களுக்குள் பெரிய அல்லது மத்திய தர நிறுவனங்களிடமிருந்து Project கொண்டு வரவேண்டும். அதில் 25 சதம் கல்லூரிக்காவும் 70 சதம் Project -க்காவும் செலவு செய்தால் ஆய்வகம் விரித்தியடையும். 5 சதம் அந்த பேராசிரியருக்கு செல்லும்.
இதன் மூலம் அந்த Project தந்த நிறுவனத்திற்கு மனித வளமும் கிடைக்கும். அந்த பேராசிரியகளால் Project கொண்டு வரமுடியாவிட்டால், அவர்களை நீக்குவதைத்தவிர வேறு வழியில்லை.
ஆகவே 2 முக்கிய துறைகளை முதலில் நிறுவி, உலகலாவிய புகழ் பெற்ற பேராசிரியர்களை அழைத்து இந்த முயற்சியை கொள்ளலாம். இதன் மூலம் காலப்போக்கில், கல்லூரி தன்னிறைவு அடைவதுடன் மற்றவர்களின் துணையை நாட அவசியமில்லை. மேலும் ஆய்வகம் உலகத்தரம் வாய்ந்ததாக மாறுவதுடன், மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு எளிதில் அமையும். இது நான் விவாதித்த 6 வகைகளில் முதல் வகை. சிறிது சிறிதாக வளர்ச்சியடையலாம். Sequential growth through concurrent planning.
யாரேனும் நன்கொடையளித்தால் அதை போனஸாகவே கொள்ளவேண்டும். நன்கொடையை சார்ந்து கல்லூரிகள் செயல்படக்கூடாது. மாணவர்களிடமும் நன்கொடை வசூலிக்கக்கூடாது.
யார் துவங்கவேண்டும்?
நிதித்தேவையை நிர்ணயித்தபின் ஒரு டிரஸ்ட் அமைத்து அதுவே அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டும். நிர்வாகத்திலும் அந்த டிரஸ்ட் தான் இருக்கவேண்டும். இந்த “அனைவருக்கும் பொது” மற்றும் “யார் வேண்டுமானாலும் நிர்வாகியாலாம்” என்ற தோல்வியடைந்த மாடலை முதலில் நாம் மறக்கவேண்டும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இந்த மாடல் எவ்வாறு தோல்வியடைந்து விட்டது என்பதை நம் கண்கூடாகக் காண்கிறோம். நிர்வாகம் பல கைகள் மாறினால் நோக்கமும் வழிமுறைகளும் கெட்டுவிடும்.
புதியவர்களுக்கு, எப்பேர்பட்ட திறமைசாலியாயினும், கல்லூரியின் நோக்கம் மற்றும் நிர்வாகமுறைகள் அவர்களின் தலைக்குள் புகுவதற்குள் வெள்ளம் தலைக்கு மேல் போய்விடும். டிரஸ்டில் (உதாரணத்திற்கு) 10 பேர் உடைய Hierarchical முறையில் தாளாளராகப் பொறுப்பேற்க வேண்டும்.
10 வதாக உள்ள நபர் தாளாளராக ஆவதற்கு கிட்டத்தட்ட 15 வருடம் ஆகவேண்டும். அப்போதுதான் அந்த நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகள் அவரது தோள், எலும்பு, சதைக்குள் செல்லும். அப்படிபட்டவரால் தான் அடுத்த தலைமுறைக்கேற்ப அக்கல்லூரியை கொண்டு செல்லமுடியும்.
எவ்வாறு செயல் படவேண்டும்?
ஜப்பானிய பல்கலைக் கழகங்களில் உள்ளது போல் ஓவ்வொரு வருடமும் அல்லது இரு வருடங்களுக்கு ஒருமுறை இலக்கு நிர்ணயிக்க வேண்டும். உதாரணத்திற்கு மிசிகன் பல்கலைக்கழகத்தில் இந்த முறை பின்பற்றப்படுகிறது. அங்கு 1995 – ல் ஒரு பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதற்கான இலக்கு நிர்ணயம்,
“TQM 401 was intended for graduate seniors in Industrial Engineering who would be expected to participate in ever growing TQM activities in companies that will be hiring them next…”
அதைவிடுத்து “யார் வேண்டுமானாலும் ராஜாவாகலாம்” என்ற தூசி படிந்த முறையை (நம் கல்லூரி மற்றும் பள்ளி மாடலைப்) பின்பற்றினால் மீண்டுமொரு வீழ்ச்சிக்கு நாம் இப்போதே முயற்சிக்கிறோம் என்று பொருள்.
எங்கே கல்லூரித் துவங்க வேண்டும்?
இளையான்குடியிலேயே தான் துவங்கவேண்டும் என்பது தெளிவான பதில். நம்முடைய நோக்கத்தின் அடிப்படையில் இடத்தைத் தேர்வு செய்யும் போது தொலைநோக்குப் பார்வை கொள்ள வேண்டும். விவசாய நிலம் அல்லாத 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்குபேசன் (inஉரடியவழைn உநவெநச) மற்றும் தொழிற்பேட்டைகள் அருகிலேயே அமையுமாறு இடங்களை தெரிவு செய்யவேண்டும் என்று நாம் அனுமானிக்கலாம்.
அந்தத் தலைவர் அல்லது தலைவர்களுக்கு ஆர்வம், ஆசை, செயல் ஆகியவற்றைவிட கனவு வேண்டும். தான் நிர்மாணிக்கும் கல்லூரி 10 வருடங்களில் இவ்வாறு இருக்கும் அல்லது 20 வருடங்களில் இவ்வாறு இருக்கும் என்ற கனவு இருப்பது மிகவும் முக்கியம். வளர்ச்சிக் காலகட்டங்களையும் அவர்தம் கனவில் கொண்டிருக்கவேண்டும்.
அத்தகையவரின் நிர்மாணிப்பே அதிக நிலைப்புத்தன்மையைக் கொண்டிருக்கும். தலைமை பண்பு என்பது மற்றவர்களை அதிகாரம் செய்வது அல்ல. தன்னுடைய ஏளைழைn – ஐ மற்றவரிகளிடம் படியவிடுவது ஆகும். அத்தகையவர்கள் நமக்கு வேண்டும். கல்வி துறையில் அத்தகையவர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று நினைக்கிறேன். அவர் ஆசிரியராக, பேராசிரியராக இருக்கலாம். அவர்களை அடையாளம் காண்பதே மிகவும் முக்கியம். அவர்களிடமிருந்து அந்த வேட்கையை அடையாளம் காணவேண்டும்.
ஆனால் நம்முடைய கடந்த விவாதங்களில் அதிகமாக நிர்வாகிகளையே (management) சார்ந்திருப்பது போன்ற ஒரு தோற்றம் எனக்கு எழுகிறது. ஒரு தலைவரின் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பவர்கள்தான் நிர்வாகிகளே (management) தவிர, அவர்கள் நிர்மாணிகள் (visionary founders) அல்லர்.
ஜனாப் முகம்மது அலி அவர்களின் செயல்திட்டததில் நிர்வாகம் சார்ந்தவர்களே உள்ளனர். It is too early to address them at this stage.
இந்த கனவைத் தற்போது தூண்டிய ஹாஜி முசாஃபர் மற்றும் டாக்டர் ஆபிதீன் ஆகியோர்களையே நான் visionary leader ஆக பார்க்கிறேன். அவரகளிடம் நிச்சயம் கனவு எளைரயட வடிவில் கண்டிப்பாக இருக்கும். அதை ஓட்டியே மற்றவைகள் திட்டங்கள் நிறைவேற்றப்படவேண்டும். அவர்கள் தங்களுடைய கனவுத்திட்டத்தை விரிவாக விளக்கவேண்டும்.
நன்றி… வஸ்ஸலாம்
குறிப்பு: இந்த கட்டுரையில் யாரையேனும் புண்படித்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். அது என் நோக்கமும் அல்ல.
ஜனாப் ஹிலால் ஆலம். சிங்கப்பூர்.
இதன் தொடர்பாக மேலும் படிக்க
வளர்ந்து வரும் இஸ்ரேலிய-ஹிந்துத்துவ பயங்கரவாதம்!
தீபாவளி கொண்டாட்டத்தினைச் சீர் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் முயற்சி" என்று பத்திரிக்கைகளிலும்-மின் ஊடகங்களிலும் வெளியான செய்தியைத் தொடர்ந்து எழுந்த பரபரப்புதான் அது.
மேலும் மேலும் படிக்க...Read more...
இந்தியாவில் தற்கால முஸ்லிம்களின் நிலை
>> Wednesday, October 21, 2009
அச்சமும் அவநம்பிக்கையும் அன்றாட வாழ்க்கையாகிப் போனது!
மூலம் : தி ஹிண்டு.
தீவிரவாதச் செயல்களைச் செய்ததாகவும் தீவிரவாதச் செயல்களில் தொடர்பு உடையவர்களென்றும் பொய்க் குற்றம் சாட்டப் பட்டு, அநியாயமாகச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளவர்களின் உறவினர்கள், தங்களது பாதிப்பு அனுபவங்களை இந்த நடுவுநிலை மாநாட்டுக் குழுவினர்கள் முன்னிலையில் பகிர்ந்து கொண்டனர்.
மேலும்
9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள்
>> Tuesday, October 20, 2009
மாஸ்கோ:
9 மாத குழந்தையின் உடலில் குரானிய வசனங்கள் தோன்றின. ரஸ்ஸியாவின் டாகிஸ்தான் பகுதியில் உள்ள குழந்தை அலி என்ற 9 மாத குழந்தையின் உடம்பில் குரானிய வசனங்கள் தோன்றியிருப்பதாக அந்த குழந்தையின் பெற்றோர்கள் கூறினார்கள். இந்த குறிகள் அந்த குழந்தை பிறந்ததிலிருந்தே இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முதலில் தனித் தனி எழுத்துக்கள் தான் தோன்றின, பிறகு வசனங்கள் தோன்ற ஆரம்பித்ததாக அந்த பகுதியின் இமாம்கள் கூறினார்கள். இதனை வெஸ்ட் டிவி அறிவித்தது.
அந்த குழந்தை அலியின் ஒரு காலில் " யாவற்றையும் படைத்தவன் அல்லாஹ்" என்று எழுதியிருந்தது. இதைப்பற்றி அலியின் தாயார் மெதினா யாகுபோவா கூறுகையில், முதலில் அலியின் நாடியில் இரத்தக்கட்டு இருந்தது. பின்னர் அது மறைந்து அல்லா என்ற வார்த்தை தோன்றியது என்று கூறினார்.
இதைப் போன்ற வார்த்தைகள் அலியின் கால் மற்றும் கணுக்கால் பகுதிகளில் திங்கள் மற்றும் வெள்ளியன்று தோன்றி பின்னர் மறைந்தன என்றும் அவர் கூறினார்.
புதிதாக வசனங்கள் தோன்றும் போது அலி இரவு முழுவதும் தூங்குவது இல்லை. அவனுக்கு காய்ச்சல் வந்துவிடுகிறது. மாத்திரைகளாலும் அது சரியாவதில்லை.
இந்த செய்தியை அறிவித்த செய்தி நிறுவனம் அந்த குழந்தைக்கு இச்செமிக் இதய நோயின் இரண்டாம் நிலை இருப்பதாகவும் infantile cerebral paralysis என்ற நோய் இருப்பதாகவும் கூறியது. நம்ப முடியாத பல விஷயங்கள் நடந்தாலும் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக அது கூறியது.
http://thapalpetti.blogspot.com/2009/10/9.html
*********************************************
Qur'anic verses appear on Dagestani baby's body
Thu, 15 Oct 2009 19:01:32 GMT

Qur'anic verses have reportedly appeared on the body of a nine-month old boy named Ali from the Russian Republic of Dagestan.
Since his birth, birthmarks in the form of Arabic script have been appearing on Ali's body. First, there were individual letters but then texts began appearing, the Russian-language Vesti news channel quoted his parents as saying on Thursday.
style="font-size:100%;">"First, there was a hematoma on his chin. When the bruise went off, we saw the word "Allah," Ali's mother Madina Yakubova said.
Surprisingly, one of the baby's legs has an inscription, "Allah is the creator of all entities." The TV channel reported that Ali was first diagnosed with "ischemic heart disease of the second degree" and "infantile cerebral paralysis" in the maternity clinic. However, after the inexplicable events began happening, he was examined again and found healthy. The incident has been drawing hundreds of Dagestani Muslims to Ali's home everyday, prompting local authorities to guard the house round-the-clock. MP/HGH
http://presstv.com/classic/detail.aspx?id=108768§ionid=3510212
******************************
CLICK TO SEE
மேலும் படிக்க...Read more...சந்தூக் பயணம். சிரிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு.
>> Monday, October 19, 2009
***********************
மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனது ஏன்?
>> Monday, October 12, 2009
5 தடவை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டும் மகாத்மா காந்திக்கு பரிசு கிடைக்காமல் போனது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 தடவை சிபாரிசு
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு அண்மையில் அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், ஒரு நாட்டின் விடுதலைக்காக அகிம்சை முறையில் போராடி உலகையே தன் பக்கம் திரும்பச் செய்த மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
இத்தனைக்கும் 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 (காந்தி இறந்த பின்) ஆகிய 5 ஆண்டுகளில் நோபல் பரிசுக்காக மகாத்மா காந்தி சிபாரிசு செய்யப்பட்டார். இதில் கடுமையான போட்டிக்கு இடையில் 1937, 1947 மற்றும் 1948 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் மகாத்மாவின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்று வரை சென்றது. எனினும் பரிசு கிடைக்கவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
வாரி விட்ட ஜாக்கப் குறிப்புகள்
மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பதற்கு நோபல் பரிசு தேர்வுக் குழு பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளது.
முதன் முதலாக 1937-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்றது. அப்போது, நோபல் தேர்வுக் குழுவின் ஆலோசகரும் பேராசிரியருமான ஜாக்கப் வோர்ம் முல்லர், காந்தி பற்றி எழுதிய குறிப்புகள்தான் காந்திக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போனதற்கு காரணமாய் அமைந்தது. அவர் எழுதிய குறிப்பு இதுதான்.
சந்தேகத்துக்கு இடமின்றி காந்தி நல்ல, மேன்மையான, தன்னலமில்லாத மனிதர்தான். பெரும்பான்மை மக்களால் கவுரவிக்கப்படக் கூடிய பெரிய மனிதராக திகழ்கிறவர்தான். எனினும் அவரது கொள்கைகளில் காணப்பட்ட திடீர் மாற்றங்கள் குறித்து அவரது ஆதரவாளர்களே கூட சிரமப்பட்டுத்தான் திருப்தியான விளக்கம் அளிக்க முடிகிறது. காந்தி ஒரு சுதந்திர போராட்டக்காரர், சர்வாதிகாரி, மிகுந்த சிந்தனை கொண்டவர், தேச பக்தர். அவர் அவ்வப்போது ஒரு இயேசு போல் தோன்றினாலும், உடனடியாக அவர் ஒரு சாதாரண மனிதராக மாறி விடுகிறார்.
தொடர்ச்சியாக அவர் அகிம்சை நெறியைப் பின்பற்றவில்லை. வெள்ளையர் அரசாங்கத்துக்கு எதிராக அவர் செய்த பிரசாரங்கள் சில நேரம் பெரும் கலவரத்தையும், வன்முறையையும் ஏற்படுத்தியுள்ளன.
1920-21-ம் ஆண்டு காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தின்போது சாவ்ரி சாவ்ரா என்னுமிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு காவல் நிலையத்தை தாக்கியதில் போலீசார் பலர் உயிரிழந்தனர். பிறகு அந்த போலீஸ் நிலையம் தீவைத்தும் கொளுத்தப்பட்டது.
மேலும் காந்தி, இந்திய தேசியவாதியாகத்தான் திகழ்ந்தார். தென்னாப்பிரிக்காவில் கூட அவர் இந்தியர்களுக்காக மட்டுமே போராடினார். அந்த நாட்டின் கறுப்பர் இன மக்களின் நிலைக்காக அவர் போராடவில்லை.
இப்படி வோர்ம் முல்லர் எழுதிய குறிப்புகளால்தான் மகாத்மா காந்திக்கு முதல் தடவை நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.
இரண்டாவது தடவையாக 1947-ம் ஆண்டு மகாத்மாவின் பெயர் மீண்டும் நோபல் பரிசு தேர்வுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. இந்த தடவை தேர்வுக் குழு ஆலோசகராக இருந்தவர், ஜென்ஸ் அருப் செய்ப். இவர் வோர்ம் முல்லர் போல், மகாத்மா பற்றி கன்னாபின்னாவென்று குறிப்புகள் எழுதவில்லை. காந்தியின் செயல்களை பாராட்டியே எழுதியிருந்தார். எனினும் 2-வது தடவையாக காந்திக்கு நோபல் பரிசு வாய்ப்பு நழுவிப் போனது.
3 தடவையாக பரிசீலனை
11 ஆண்டுகளில் 3 தடவையாக, 1948-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பெயர் நோபல் பரிசுக்கான இறுதிச் சுற்றுவரை சென்றது. துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு ஜனவரி மாதம் மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.
அப்போது, காந்தியின் கடைசி 5 மாத செயல்பாடுகள் குறித்து நோபல் தேர்வுக்குழுவின் ஆலோசகர் செய்ப் நல்ல விதமாகவே எழுதினார்.
"காந்தி தனது வாழ்நாள் முழுவதும் நீதி மற்றும் அரசியல் நெறிமுறைகளை மட்டுமே கொள்கைகளாக கொண்டு செயல்பட்டார். இதனால் இந்தியாவுக்கு உள்ளேயும், வெளியேயும் அவர் வெகுவாக போற்றப்பட்டார். இந்த வகையில் அவர் ஒரு மதத்தை தோற்றுவித்தவர் போல் ஒப்பிடப்படுகிறார்'' என்று செய்ப் தனது குறிப்பில் கூறியிருந்தார்.
நோபல் விதிமுறை
இதனால் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு கிடைத்து விடும் என்றே கருதப்பட்டது. ஆனால், இறந்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்குவதில் அப்போது, நோபல் பரிசு தேர்வுக்குழு ஒரு விசித்திர விதியை பின்பற்றி வந்தது.
அதன்படி பரிசுக்கு சிபாரிசு செய்யப்பட்டவர், தகுதி உடையவராக இருந்தால் அவர் ஏதாவதொரு அமைப்பைச் சார்ந்தவராக இருக்கவேண்டும். ஆனால் காந்தி எந்த அமைப்பிலும் இல்லை. இதனால் அவருக்கு பரிசு வழங்குவதில் தயக்கம் காட்டப்பட்டது.
ஏனென்றால் மகாத்மா காந்தி இறப்புக்கு பின் எந்த சொத்துக்களையும் விட்டுச் செல்லவில்லை. உயிலும் எழுதவில்லை. இதனால் நோபல் பரிசுத் தொகையை யார் பெறுவது என்பதில் கேள்வி எழுந்தது. பரிசை வழங்கும் சுவீடன் அமைப்பின் நிறுவனங்கள் இது குறித்து ஆலோசனை நடத்தின.
அவர்களது பதில் காந்திக்கு நோபல் பரிசு வழங்கிட சாதகமாக அமையவில்லை. ஏனெனில், நோபல் பரிசு பெறும் தகுதிக்குரியவர் இறக்கும் முன்பாகவே தேர்வுக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று அந்த அமைப்புகள் கருதியதுதான்.
மறுக்க முடியாத உண்மை
எனவே, தேர்வுக்குழு இறுதி முடிவு எடுக்கும் முன்பாகவே மகாத்மா காந்தி இறந்து விட்டதால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்காமல் போய் விட்டது.
இறந்து விட்ட மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படாததால் 1948-ம் ஆண்டு வேறு யாருக்கும் நோபல் பரிசை வழங்க தேர்வுக்குழு விரும்பவில்லை. இதனால் உயிருடன் இருக்கும் எவரும் அந்த ஆண்டு நோபல் பரிசை பெறும் தகுதியுடன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 1948-ம் ஆண்டு உலக அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் வழங்கப்படவில்லை.
இது மட்டுமே நோபல் பரிசு தேர்வில் மகாத்மா காந்திக்கு கிடைத்த ஒரே கவுரவம்.
எனினும், இன்று மகாத்மாவின் அகிம்சைதான், உலகம் முழுவதும் பயங்கரவாதத்துக்கு எதிரான சிறந்த மருந்தாக திகழ்கிறது.
இதன் அடிப்படையில்தான் தென் ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா முதல் பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத பரவலுக்கு எதிராக பாடுபடும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வரை நோபல் பரிசு கிடைத்திட்டது என்பது மறுக்க முடியாத மாபெரும் உண்மை.
நன்றி தினத்தந்தி.
சமைக்காமலேயே சாதமாகும் அரிசி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
>> Wednesday, October 7, 2009
சமைக்காமலேயே சாதமாகும் அரிசி - இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.![[5539609.jpg]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjPjK4jRSqG_KyrsHeD9EgMHcJguFF06XDyrQk7FpXtHcdn0swbaarZ1AhRVpY_358atiKOqg2kNRQ6X373CIPFWTNRV8Yaa_CQy_Vorj-vjsth1L0wZ1CfSq918EbvWJhVDc0LiBO5lHIg/s1600/5539609.jpg)
நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
அரியலூரில் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோசர் முட்டைகள்.
>> Friday, October 2, 2009
அரியலூரில் கிடைத்த டைனோசர் முட்டைகள்
6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை.பரபரப்பு தகவல்கள்
அரியலூரில் காவிரி ஆற்றுப் படுகையில் கிடைத்த டைனோசர் முட்டைகள் 6 1/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. அந்த டைனோசர்கள், தாவரங்களை சாப்பிடும் வகையை சேர்ந்தவை என்றும் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது.
காவிரி ஆற்றுப்படுகை
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலை கழகத்தை சேர்ந்த புவியியல் துறை மாணவர்களும், பேராசிரியர்களும் காவிரி ஆற்றுப்படுகை பகுதிகளில் ஆய்வு செய்து வந்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறை கிராமத்தில் உள்ள காவிரி படுகையில் ஆய்வு செய்தபோது கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் மிருகங்களின் முட்டைகள் கிடைத்தன.
வெளிநாடுகளில் மட்டுமே வாழ்ந்ததாக கருதப்பட்டு வந்த டைனோசர் மிருகங்கள், தமிழகத்திலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, சுமார் 2 கி.மீ. சுற்றளவுக்குள் கொத்து கொத்தாக டைனோசர் முட்டைகள், முட்டை ஓடுகள் மற்றும் சிதறல்கள், கழிவுகள் போன்றவை கிடைத்தன.
ஏற்கனவே, மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தற்போது, தென்னிந்தியாவில் முதன் முறையாக டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கின்றன. இது குறித்து ஆராய்ச்சி குழுவின் தலைவரும் புவியியல் துறை பேராசிரியருமான முத்துவைரசாமி ராம்குமார் கூறியதாவது:-
20 செ.மீ. குறுக்களவு
அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள கள்ளமேடு காவிரி படுகையில் டைனோசர் முட்டைகளை நாங்கள் கண்டு பிடித்தோம். கொத்து கொத்தாக முட்டைகள் கிடந்தன. ஒவ்வொரு கொத்திலும் தலா 8 முட்டைகள் இருந்தன. கோள வடிவிலான அந்த முட்டைகள், 13 முதல் 20 செ.மீ. குறுக்களவு (விட்டம்) கொண்டவை ஆகும். மேலும், 11/2 மீட்டர் அளவிலான மணல் கூடுகளும் கிடைத்தன.
சுமார் 2 சதுர கி.மீ. பரப்பளவுக்குள் ஏராளமான டைனோசர் முட்டைகள், கூடுகள், கூடுகளின் சிதறல்கள் போன்றவை கிடைத்தன. இந்தியாவில் டைனோசர் முட்டைகள் கண்டு பிடிக்கப்பட்ட பெரிய இடமாக இது இருக்கும் என்று கருதுகிறோம். தேசிய அளவில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இந்த பகுதியை அறிவிக்க வேண்டும். எதிர்கால ஆராய்ச்சி மற்றும் டைனோசர் முட்டைகளை அழிவில் இருந்து காப்பாற்றவும் இந்த இடத்தை பாதுகாப்பது அவசியம். இவ்வாறு போராசிரியர் ராம்குமார் தெரிவித்தார்.
எந்த வகை டைனோசர்?
அரியலூரில் கிடைத்துள்ள டைனோசர் முட்டைகள் அனைத்தும் 61/2 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகிறது. மிகவும் கொடூர குணமுடைய `கார்னோசர்' வகை டைனோசர் மற்றும் இலை, தழைகளை சாப்பிடும் `சவுரோப்போட்' வகை டைனோசர் ஆகியவற்றின் முட்டையாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
`சவுரோப்போட்' வகையை சேர்ந்த டைனோசர்கள், ராட்சத உருவமாக வளரும் தன்மை கொண்டவை என்பதும் நீண்ட கழுத்துடன் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. டைனோசர் முட்டைகளில் சிவப்பு நிற தூசி மற்றும் சாம்பல்கள் காணப்படுகின்றன. எனவே, எரிமலை வெடித்து சிதறும்போது வெளியேறிய நெருப்பு குழம்பில் டைனோசர் முட்டைகள் உருட்டி வரப்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவுக்கு புகைப்படங்கள்
டைனோசர் மற்றும் அவற்றின் முட்டைகள் பற்றிய ஆராய்ச்சி நிபுணராக பஞ்சாப் பல்கலைக்கழக பேராசிரியர் அசோக் சகானி உள்ளார். எனவே, அரியலூரில் கண்டுபிடிக்கப்பட்ட டைனோசர் முட்டைகளின் படங்கள், அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பேராசிரியரும் ஆராய்ச்சியாளருமான கெர்தா கெல்லருக்கும் அந்த புகைப்படங்கள் அனுப்பப்படுகின்றன.
முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் டைனோசர் எலும்புகளும் கிடைத்தன. அவற்றின் படங்களும் உறுதி செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட உள்ளன. இந்த தகவல்களை, பேராசிரியர் முத்துவைரசாமி ராம்குமார் தெரிவித்தார்.
Source: Dinathandhi.
மேலும் படிக்க...Read more...
VIDEO. முஸ்லிம் மாணவிகளின் அவஸ்த்தை
>> Thursday, October 1, 2009

ஹிஜாப் ஆடை தடைசெய்யப்பட்ட மாற்று மத பாடசாலையொன்றுக்கு செல்லும் இலங்கை முஸ்லிம் மாணவிகள் படும் அவஸ்த்தை. தெருக்களில் ஹிஜாபை களையும் அலங்கோலம்.
Sri Lanaka Muslim girls forced to remove their cloths in the street.





