என்னுடைய பல பதிவுகள் பல்வேறுபட்டஇணையத்தளங்களிலும்,வலைப்பூக்களிலும் மற்றும் குழுமங்களிலும் வெளிவந்துள்ளன. அவ்வாறு வெளியிடுவது தவறில்லை. தயவுசெய்து அத்தகைய பதிவுகளை வெளியிடுபவர்கள் என்னுடைய வலைப்பூக்களின் பெயர்களை குறிப்பிட்டு வெளியிடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மத நல்லிணக்கத்துக்கு இலக்கணம் வகுத்தவர் நபிகள் நாயகம். "தினமணி' கே.வைத்தியநாதன்.

>> Wednesday, September 30, 2009

இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே: "தினமணி' கே.வைத்தியநாதன்.

சென்னை, செப்.28: ""மக்களின் இதயங்களை இணைப்பது இறை உணர்வு மட்டுமே என்று "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் பேசினார்.

சென்னை மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற "ஈத் பெருநாள் சந்திப்பு' நிகழ்ச்சியில் அவர் பேசியது:

"கூடாரங்கள் வெவ்வேறாக இருக்கட்டும். இதயங்கள் இணைந்தால் போதும்' என்று மத நல்லிணக்கத்துக்கு இலக்கணம் வகுத்தவர் நபிகள் நாயகம். அசைக்க முடியாத இறை நம்பிக்கையால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்கு எடுத்துரைப்பது இஸ்லாம்.

இறைநம்பிக்கை இல்லாதவர்கள் நன்மைக்கும், தீமைக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இறைவனையே ஏற்க மறுக்கும், நம்பிக்கை என்பதே இல்லாமல் இருக்கும் இவர்கள் எதிர்மறைச் சிந்தனையாளர்கள். அப்படிப்பட்டவர்களால் சமுதாயத்தை ஒன்றுபடுத்த முடியாது. நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் முடியாது.


ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆங்கிலேயர்கள் கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியை இன்றைய ஆட்சியாளர்களும் பின்பற்றுகிறார்கள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

அரசியல் ஆதாயத்துக்காக மனிதனை மதம் பிடிக்கச் செய்கிறார்கள். அவர்கள் சண்டையிட்டுக் கொள்ளட்டும். அதில், அரசியல் ஆதாயம் தேடட்டும். ஆனால், நாம் ஒற்றுமையாக இருப்போம். நல்லிணக்கத்தை வளர்ப்போம்.

எனக்கு முன்பு பேசிய, டாக்டர் ஹபீப் முகம்மது, சொன்னது போல, தீயவர்கள் ஐந்து சதவீதம் தான். அதை எதிர்ப்பவர்களும் ஐந்து சதவீதம் தான். மீதி 90 சதவீதம் பேர் தீமை நடப்பதை கண்டும் காணாமலும் நமக்கேன் வம்பு என்று இருப்பவர்கள். இப்படி இருப்பதும் ஒரு வகையில் தீமைக்கு சமம் தான். அதைத் தான் புனிதக் குர்ரான் கூறுகிறது.

நல்லது செய்ய நினைப்பதை அன்றே செய்திட வேண்டும் என்கிறது புனிதக் குர்ரான். ஏனைய மத நூல்களும் இதைத்தான் கூறுகின்றன. காரணம், நாளை என்பது நம்மிடம் இல்லை. வள்ளுவப் பேராசான் கூறுவது போல, உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.

மனிதன் தான் நிரந்தரமானவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டாலே அவனது அகந்தையும், தான் என்கிற ஆணவமும் அழிந்து விடும். நம்மில் ஒருவர் கூட இந்த உலகுக்கு நிரந்தர விசாவில் வரவில்லை. இதைப் புரிந்து கொண்டாலே நமக்குள் கருத்து வேறுபாடுகளும், கோபதாபங்களும் அகன்று விடும்.

இதைத்தான் திருக்குர்ரானும் ஏனைய மத நூல்களும் நமக்கு உணர்த்துகின்றன. இதை நமது மதவாதிகள் மக்களுக்கு உணர்த்தினாலே மதமாச்சரியங்களும் மனமாச்சரியங்களும் மறைந்து விடும்.

மதத்தின் பெயராலும், ஜாதியின் பெயராலும் ஒருவரை வெறுப்பதையும், பழிப்பதையும் விடப் பகுத்தறிவுக்கு ஒவ்வாத விஷயம் எதுவுமே இருக்க முடியாது. வேடிக்கை என்னவென்றால் ஜாதியின் பெயரால் பழிப்பவர்கள் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று சொல்லிக் கொள்வது தான்.

இங்கே நம்மில் எவராவது ஒருவர் விரும்பிப் பெற்றோமா நமது பிறப்பை? எனக்கு இந்த ஜாதியில், இந்த மதத்தில் பிறக்க வேண்டும் என்று மனுப் போட்டுப் பெற்றோமா? ஜாதியும், மதமும் கடைச்சரக்காக வாங்கியதா?

பிறப்பு என்பதே ஒரு விபத்து. சில நொடிப் பொழுது மாறியிருந்தால் நமது ஜாதியும், மதமும், நாடும், மொழியும், கூட மாறியிருக்கக் கூடும். அப்படி இருக்கும் போது, ஜாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மனிதன் சண்டை போட்டுக் கொள்வதை விட முட்டாள்தனம் வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன், ராமேசுவரத்திலிருந்து காசிக்குப் போகும் இந்து யாத்திரிகர் யாரிடமும் எந்த நவாபும், ராஜாவும் விசா, பாஸ்போர்ட் கேட்டதில்லை. அதேபோல, தாக்காவிலிருந்து அஜ்மீர் ஷெரீப் செல்லும் இஸ்லாமிய யாத்ரிகர்களை எந்த ராஜாவும் தடுத்ததில்லை. சமூக நல்லிணக்கம் என்பது இந்தியாவின் அடிப்படைக் கோட்பாடு. நமது ரத்தத்தில் ஊறிய உணர்வு.

இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், ஜைனர், பௌத்தர் என்ற வேறுபாடில்லாமல் இங்கே நாமெல்லாம் கூடியிருப்பது போல, இந்தியர்களாக நாம் எல்லா விழாக்களிலும் ஒன்று கூட வேண்டும். இதை எல்லா மதத்தினரும் பின்பற்ற வேண்டும். எல்லா பள்ளி வாசலிலும், கோயில்களிலும், மாதா கோயில்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். பிறகு, நம்மை அரசியல்வாதிகளும், மத வெறியர்களும் பிரிக்க முடியாது. இப்படி ஒரு முன்மாதிரியான நிகழ்ச்சியை நடத்தும் அன்பர்களுக்கு "தினமணி' சார்பில் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார் வைத்தியநாதன்.

ராம்-ரஹீம் சந்திப்பு
சென்னை, செப். 28: இஸ்லாம் - ஹிந்து மதத்தினரிடையே மதநல்லிணக்கத்தை வளர்க்கும் சந்திப்பாக ஈத் பெருநாள் சந்திப்பு ஆண்டுதோறும் நடைபெற்று வருவதாக, அருண்டேல் தெரு பள்ளிவாசல் ஆலோசனைக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, பள்ளிவாசல் ஆலோசனைக் குழுவைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ""கடந்த 4 ஆண்டுகளாக இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றோம். எங்களுடன், ஹிந்து மதத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நட்பு பாராட்டி உறவாடிட இந்தச் சந்திப்பு வழிவகுக்கிறது. இதன்மூலம், அவர்களது உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிவதால் எங்கள் பகுதியில் அமைதியை தழைத்தோங்கச் செய்திட முடிகிறது'' என்று குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க...Read more...

600 சீனர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்

>> Tuesday, September 29, 2009

சவுதி அரேபியாவில் 24 மணி நேரத்தில் 600 சீனர்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள்

துபாய், செப்.29-

சவுதி அரேபியாவில் ஹராமாயின் ரெயில் திட்டத்தில் வேலை செய்யும் சீனர்களில் 600 பேர் 24 மணிநேரத்தில் முஸ்லிம்களாக மதம் மாறினார்கள்.

450கி.மீ. தூரத்துக்கான ரெயில் பாதையை அமைக்கும் பணியை சீன ரெயில் கம்பெனி காண்டிராக்டு எடுத்து இருந்தது. மெக்காவையும், மதீனாவையும் இணைக்கும் இந்த ரெயில் திட்டத்தில் 5ஆயிரம் சீனர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

சீன மொழியில் இஸ்லாம் மதத்தை அறிமுகம் செய்யும் புத்தகம் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த புத்தகம் கிடைத்த 24 மணி நேரத்தில் 600 சீனர்கள் மதம் மாறினார்கள்.

Over 600 Chinese nationals working in Saudi embrace Islam

By Abdul Rahman Shaheen, Correspondent
Published: September 27, 2009, 07:31

Riyadh: Over 600 Chinese nationals working on the Haramain Rail project have embraced Islam in a recent ceremony in Makkah.

They are workers of the Chinese Railway Company, which won the multibillion contract for implementing the 450km rail road linking the holy cities of Makkah and Madinah via Jeddah and Rabigh.

Dr. Abdul Aziz Al Khudhairi, undersecretary at the Makkah Governorate, said that this year’s celebration of the Kingdom’s National Day coincides with a number of auspicious and historic occasions.

These included launching of the prestigious international research university - King Abdullah University for Science & Technology (KAUST), celebration of Eid Al Fitr and a recent ceremony of Chinese workers pronouncing their Shahada.

Dr. Abdul Aziz, who witnessed the event, described it as a “direct response to critics of the government for contracting Chinese company.”

Among the converts, there are 70 workers who are engaged in the construction of Makkah monorail project, which links the holy city with the holy sites of Mina, Muzdalifa and Arafat.

“Their conversion took place 24 hours after getting books introducing Islam in Chinese language at their worksite at Arafat, which is outside the Haram area,” he said adding that the credit goes to the Office of the Call and Guidance for Expatriates in Makkah.

Efforts are underway to spread the message of Islam among some 5,000 Chinese nationals working on the Haramain train,” he said adding that the major problem for the Call and Guidance Office is the lack of enough books on Islam in Chinese language.

It is noteworthy that the first phase of Haramain Rail consisting of 70km has well been started a few months ago. This represents expropriation of land, filling works, construction of bridges and tracks. The project is expected to be operational in 2012.
http://www.gulfnews.com/News/Gulf/saudi_arabia/10352586.html

மேலும் படிக்க...Read more...

ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு! "டூ யு நோ யுனொ?

>> Wednesday, September 23, 2009

இப்பொழுது தாங்கள் வந்திருக்கும்

http://ilayangudikural.blogspot.com/

லின்க்கை உங்கள் FAVORITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.

தொடர்புக்கு :-
ilayangudikural2@gmail.com



1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை

3.அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. "டூ யு நோ யுனொ?

4.பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு

1.சின்ன விஷயங்கள்! சிறந்த வாழ்க்கை!!

வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வதற்கு வழிகள் என்னென்ன என்று தாமஸ் ஜெஃபர்ஸன் ஒரு பட்டியலே கொடுத்திருக்கிறார். அவை, இவை:

1. இன்றே செய்து முடிக்கக் கூடியதை ‘நாளை’ என்று ஒத்திப் போடாதீர்கள்.
2. நீங்களே செய்துக் கொள்ளக்கூடிய விஷயத்திற்காக இன்னொருவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்.
3. பணம் கைக்கு வரும்முன்னே அதற்கான செலவுகளைச் செய்யாதீர்கள்.
4. விலை மலிவாய்க் கிடைக்கிறது என்பதற்காக, வேண்டாத ஒன்றை வாங்காதீர்கள்.
5. பசி, தாகத்தை விட சுயமரியாதை பெரிது என்பதை மறவாதீர்கள்.
6. எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைவாய்ச் சாப்பிடுங்கள்.
7. விரும்பிச் செய்யும் எதற்காகவும் பின்னால் வருத்தப்படாதீர்கள்.
8. கற்பனையில் உருவாகும் கவலைகளை எண்ணி நிஜத்தில் வருந்தாதீர்கள்.
9. மென்மையாக அணுகுங்கள், மேன்மையாக முடிவெடுங்கள்.
10. கோபமாயிருக்கும் போது, பேசுவதற்கு முன்னால் பத்து வரை எண்ணுங்கள். இன்னும் கோபமாயிருந்தால் நூறுவரை எண்ணுங்கள்.

2.புத்திக்குள்ளே புதையல் வேட்டை
1. பல மாடிகள் கொண்ட கட்டிடத்தின் மே………ல் தளத்தில் வசிக்கிறார் அந்தக் குள்ள மனிதர். தானியங்கி லிஃப்டில் தரை தளத்திற்கு வருவார். திரும்ப வரும்போது, மழைபெய்தால் மட்டும்தான் அவரால் தன் மே……..ல் தளத்திற்குப் போகமுடியும். இல்லையென்றால், இடைப்பட்ட தளங்களில் இறங்கி தன்னுடைய தளத்திற்கு நடந்தே போவார் பாவம்! ஏன்….?

2. தந்தையும் மகனும் விபத்தில் சிக்கிக் கொண்டார்கள். தந்தை இறந்தார். மகனுக்கு அறுவை சிகிச்சை. மருத்துவரிடம் கொண்டு போனார்கள். மருத்துவர் மறுத்துவிட்டார். “என் மகனுக்கு நான் அறுவை சிகிச்சை செய்யமாட்டேன்” என்று சொல்விட்டார்… இது எப்ப..?

3. உணவகத்திற்குள் நுழைந்த அந்த மனிதர் ஒரு குவளை தண்ணீர் கேட்டார். சர்வர் கோபத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு அவர்மேல் பாயவந்தார். தண்ணீர் கேட்ட மனிதரோ நன்றி சொல்லி விடைபெற்றார். ஏன்…?


(பல சர்வதேச நிறுவனங்களில், நேர்காணலின் போது சமயோசிதத்தைப் பரிசோதிக்கக் கேட்கப்படும் கேள்விகள் இவை. நிச்சயம் இந்நேரம் விடை கண்டுபிடித்திருப்பிர்கள். உங்கள் விடைகளை உறுதிசெய்து கொள்ள கீழே வாருங்கள்.)

புத்திக்குள்ளே புதையல் வேட்டை ( விடை)
1. பலமாடிக் கட்டிடத்தில் இயங்கும் அந்த லிஃப்டில், உச்சித் தளத்துக்கான பட்டன் அவருக்கு எட்டாது. கீழ்த்தளத்துக்கான பட்டனை இறங்கும்போது எளிதில் அழுத்திவிடுவார். மழைநாளில் குடைகொண்டு வருவதால், குடையை நீட்டி தன் தளத்துக்கான பட்டனை அழுத்த முடியும். குடை இல்லாவிட்டால் நடைதான்…… பாவம்!!
2. அந்த மனிதர், அடிபட்ட இளைஞனின் அன்னை.
3. தண்ணீர் கேட்ட மனிதருக்கு விக்கல் வந்திருந்தது. அதற்காகத்தான் தண்ணீர் கேட்டார். அதிர்ச்சி ஏற்பட்டால் விக்கல் நிற்கும். சர்வர் அதைத்தான் செய்தார். தண்ணீர் பருகாமலேயே விக்கல் நின்றுவிட்டது. எனவே நன்றி சொல்லி விடைபெற்றார்.

3.அறிஞர் அண்ணாவின் ஆங்கிலப் புலமை. "டூ யு நோ யுனொ?

அறிஞர் அண்ணா தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் மிகுந்த புலமையுடையவர் என்று வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் எழுதின.அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "தி சாட்டர்டே ஈவினிங் போஸ்ட்" என்ற பத்திரிக்கைக்கான நிருபர் அண்ணாவைப் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டதும்என்ன தான் ஆங்கிலம் அறிந்திருந்தாலும் மேல்நாட்டினர் அளவுக்குப் பேச முடியாது என்று இறுமாப்புடன் எண்ணிக் கொண்டிருந்தாராம்.

அப்போது அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள் அடங்கிய மத்திய அரசின்கூட்டம் ஒன்று டெல்லியில் நடந்தது.

அப்போது டெல்லி விமான நிலையத்திலேயேஅண்ணாவை மடக்கிப் பேட்டி காண்பது மட்டுமல்லாமல் அவரது ஆங்கிலப்புலமையையும் சோதித்துப் பார்த்து விடலாம் என்று எண்ணியஅந்த நிருபர் அவ்வாறே அண்ணாவைப் பேட்டியும் கண்டாராம்.விமானத்திலிருந்து இறங்கி வெளியே வந்து கொண்டிருந்த அண்ணாவைப் பார்த்துத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.

சரி. கேள்விகளைக் கேளுங்கள் என்று அண்ணா சொன்னவுடன் அந்த நிருபர்கேட்டாராம். "டூ யு நோ யுனொ ?


சுவற்றில் அடித்த பந்தாகப் பட்டென்று பதில் வந்ததாம்.

ஐ நோ யுனொ.

யு நோ யுனொ.

ஐ நோ யு நோ யுனொ

பட் ஐ நோ யுனொ பெட்டெர் தேன் யு நோ யுனொ!


கேள்வி கேட்ட நிருபருக்கு மயக்கம் வராத குறை தான்.தட்டுத்தடுமாறிக் கேட்டாராம்.எக்ஸ்கியூஸ் மீ. சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றாராம்.
அன்ணா என்ன விளக்கம் சொன்னார் தெரியுமா?
I know UNO(United Nations Organisation).You know UNO..I know you know UNO.But I know UNO better than you know UNO.

அறிஞர் அண்ணாவை ஒருதரம் “தமிழில் அடுக்கு மொழியில் விளையாடுகிறீர்களே, ஆங்கிலத்திலும் முடியுமா?” என்று கேட்டார்களாம்.
கொஞ்சமும் அயராமல் அவர், “ஏன் முடியாது.. எப்படிப்பட்ட வாக்கியம் வேண்டும்?” என்றாராம்.

“because என்கிற வார்த்தை தொடர்ந்து மூன்று முறை வருமாறு ஒரு வாக்கியம் சொல்ல முடியுமா?” என்று கேட்டதும் அண்ணா அவர்கள் சுரீரென்று அடித்த பன்ச் :

‘No sentence ends with because, because, because is a conjunction’

4.பாகிஸ்தானை நிறுவியவர் ஜின்னா.அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.-நான்கு ஆண் குதிரை ஒரு பெண் குதிரை

பாகிஸ்தானை நிறுவிய ஜின்னா அவர்கள் பிரபலமான வழக்கறிஞர். அவர் வெளிநாட்டிற்குச் சென்று படித்த பிரபலமான வழக்கறிஞர்.

ஜின்னா அவர்கள் லண்டனிலேயே வழக்கறிஞர் தொழிலை நடத்திக் கொண்டு இருந்தவர். அவர் சந்தித்த ஒரு விசித்தரமான வழக்கு.

இதை உங்களுக்கு நினைவூட்டினாலே போதும். நீங்கள் சிந்தித்துக் கொள்ளலாம்.

லண்டனிலே லார்ட்ஸ் (Lords) என்று சொல்லக்-கூடிய பிரபுக்கள் உண்டு. அந்-தப் பிரபுக்களில் ஒவ்வொருவருக்கும் அரண்மனை மாதிரி இடங்கள் இருக்கும். அந்த அரண்மனைகளுக்கு `சாரட்’ வண்டிகள் உண்டு.

அதிலேயும் ஒவ்வொரு பிரபுவுக்கும் ஒவ்வோர் அந்தஸ்து உண்டு. ஏழு குதிரைகளை இந்த பிரபு மட்டும் பூட்டிக் கொண்டு வண்டியில் செல்லலாம். அய்ந்து குதிரைகள் பூட்டிய வண்டியை இவர் மட்டும்தான் பயன்படுத்தலாம்.

இவர் மூன்று குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வரலாம். மற்றவர்கள் இது-போன்று செய்தால் இவருடைய உரிமையை மீறியதாக ஆகும். இதெல்லாம் பழைய காலத்து சம்பிரதாய முறை. நடைமுறை சட்டங்கள் இங்கிலாந்து நாட்டிலே.

இங்கிலாந்து நாட்டிலே புதிதாகப் பணக்காரரான ஒருவர். அவர் பிரபு இல்லையென்றாலும்கூட பெரிய தொழிலதிபராக வந்திருக்கின்ற காரணத்தால் யார் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக் கொண்டு அந்தப் பகுதியிலே செல்ல முடியுமோ அப்படிப்பட்ட பகுதியிலே இந்த புதிய பணக்காரர் அய்ந்து குதிரைகளைப் பூட்டிக்கொண்டு, நான் பிரபல பணக்காரனாகிவிட்டேன் என்ற அந்த பெருமையோடு அந்த வழியே சென்ற நேரத்திலே இதைக் கண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவிலே இவர்மீது நஷ்ட ஈடு கோரி சடடப்படி என்னுடைய உரிமையை அவர்கள் மறுத்திருக்கிறார்கள். சட்டத்தை அவர் மீறியிருக்கின்றார்.

அய்ந்து குதிரைகளைப் பூட்டக்கூடிய உரிமை எனக்கு மட்டும்தான் உண்டு. பாரம்பரியமாக உள்ள எங்களுடைய பிரபுத்துவ செயலை இது அவமானப்படுத்துவதாகும் என்று வழக்குத் தொடரப்பட்டது. அவர்கள் நஷ்ட ஈடு என்று கேட்கும்பொழுது, மில்லியன்ஸ் பவுண்டு அளவுக்கு அவர்கள் நஷ்ட ஈடு கேட்பார்கள்.

அந்த புதியப் பணக்காரர் ஒவ்வொரு பிரபலமான வழக்கறிஞரைப் போய்ப் பார்த்தாராம். அந்த வழக்கறிஞர் ஒவ்வொருவருமே நீங்கள் அய்ந்து குதிரையைப் பூட்டினாயா? அதற்கு ஆதாரம் உண்டா? என்று கேட்டிருக்கிறார்கள்.

இவரும் `ஆம்’ பூட்டினேன், அவர்கள் படம் எடுத்திருக்கிறார்கள். ஆதாரத்தை நிரூபித்-திருக்கிறார்கள் என்று இவர் சொல்லியிருக்கிறார். எனவே, இந்த வழக்கிலே நாம் வெற்றி-பெறமுடியாது. எனவே நாங்கள் இந்த வழக்கை எடுத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை. நீங்கள் வேறு வழக்கறிஞரிடம் சென்று விடுங்கள் என்று ஒவ்வொரு பிரபல வழக்கறிஞரும் இவரைத் தள்ளிவிட்டார்களாம்.

மகமதலி ஜின்னா அவர்கள் பாரிஸ்டராக இருந்தார். மற்றவர்களைப் போல இவர் ஒன்றும் மூத்த வழக்கறிஞர் அல்ல. இந்த வழக்கைப்பற்றி ஜின்னா அவர்கள் கேட்டுவிட்டு நான் இந்த வழக்கை எடுத்து நடத்துகிறேன் என்று சொன்னார்.

எல்லோருக்கும் இது ஆச்சரியம். தோற்றுப் போகிற வழக்கை ஜின்னா அவர்கள் எப்படி எடுத்துக் கொண்டார் என்று.

நீதிமன்றத்தில் ஜின்னா அவர்கள் எப்படி வாதாடப் போகிறார் என்பதைப் பார்க்க ஏராளமான கூட்டம். அய்ந்து குதிரைகள் பூட்டப்பட்ட வண்டி எது? எந்தெந்த குதிரைகள் எல்லாம் வண்டியில் கட்டப்பட்டன என்பதை எல்லாம் நேரில் பார்த்து ஜின்னா விசாரித்துவிட்டார்.

வெட்னரி சர்ஜன் என்று சொல்லக்கூடிய மிருக வைத்தியர் ஒருவரையும் பக்கத்திலே வைத்துக் கொண்டார் ஜின்னா. நீதிமன்றத்திலே வாதாட ஆரம்பித்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. யார் வழக்கு போட்டாரோ அவருடைய வழக்கறிஞர் வாதாடினார். பிரபுகளாகிய எங்களுக்கு அய்ந்து குதிரைகளை வைத்து ஓட்டக்கூடிய உரிமைச் சட்டம் எங்களுக்கு இருக்கிறது என்பவைகளை எடுத்துச் சொல்லி விவாதம் செய்தார்.

நீங்கள் வண்டி ஓட்டியதற்கு ஆதாரம் இருக்கிறது. ஃபோட்டோக்கள் எல்லாம் இருக்கின்றன என்று சொன்னார்.

இதிலே நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று பிரிவிகவுன்சில் நீதிபதிகள் கேட்டார்கள்.

குதிரைகளை ஆங்கிலத்தில் Horses என்று சொல்லுகின்றோம். ஆனால், ஜின்னா அவர்கள் வாதாடும்பொழுது சொன்னார். எதிர்க்கட்சிகாரர் அய்ந்து குதிரைகளை ஓட்டி வந்தார் என்று சொல்லுகிறார். நான் சொல்லுகிறேன் Four Horses and one Mare (பெண் குதிரை) என்று சொன்னார்.

என்னுடைய கட்சிக்காரர் நான்கு ஆண் குதிரைகளோடும், ஒரு பெண் குதிரையோடும் சேர்த்து வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தார்.

பெண் குதிரைக்குரிய பலம் ஆண் குதிரைக்கு இல்லை. எனவே அதை ஒரு குதிரையாகக் கருத முடியாது. சந்தேகம் இருந்தால் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே இந்த வழக்கையே தள்ளுபடி செய்யவேண்டும் என்று ஜின்னா இப்படி வாதாடினார்

ஜின்னா அகராதியைப் பார்த்தார் .
நுண் மான் நுழைபுலத்தோடு ஜின்னா அவர்கள் Horse என்றால் என்ன போடப்பட்டிருக்கிறது? அதற்கு உரிய பொருள் என்ன என்று பார்த்தார். ஆண் குதிரைக்கு என்ன பெயர், பெண் குதிரைக்கு என்ன பெயர் என்று பார்த்தார். இந்த வழக்கிலே அவருடைய அறிவைப் பயன்படுத்தினார்.

பிறகு அந்த வழக்கே தள்ளுபடி செய்யப்பட்டது. ஆகவே வழக்கில் ஒவ்வொரு சொல்லும் ரொம்ப மிக முக்கியமானது.

வழக்கறிஞர் தொழிலிலே திரும்பத் திரும்ப சட்டத்தைப் படிக்கவேண்டும். திரும்பத் திரும்ப ஆய்வு செய்யவேண்டும் அதுதான் மிக முக்கியமானது.

மேலும் படிக்க...Read more...

சோர்விலிருந்து தீர்வுக்கு

>> Tuesday, September 22, 2009

சோர்விலிருந்து தீர்வுக்கு

ஒரு துறையில் வேகமாய் முன்னேறிக் கொண்டே செல்கிறபோது தெரியாமல் ஏற்படும் பின்னடைவுகள் ஒரு மனிதனை சோர்வடையச் செய்வது ஏன்? ஒரேயொரு காரணம்தான் உண்டு. மற்றவர்கள் பார்க்கும் அதிர்ச்சிமிக்க பார்வை, ஒரு சிலரின் ஏளனப் பார்வை.

அந்தத் துறையில் இயங்கிக் கொண்டு இருப்பவர்களுக்குத் தெரியும், அந்தப் பின்னடைவை எளிதில் சமாளிக்க முடியும் என்று. ஆனால், அடுத்தவர்களின் அனுதாபப் பார்வையாலும் சந்தேகப் பார்வையாலும் அவர்களுக்கே சில சமயம் சோர்வு வந்துவிடும். அக்கறையாலோ, பதட்டத்திலோ ஆளுக்கொரு அறிவுரையும் உபதேசமும் சொல்லி, சேற்றில் சிக்கிய வண்டியை இழுப்பதாய் நினைத்து இன்னும் ஆழமாய் புதைப்பதும் சில நேரங்களில் நடக்கும்.

உண்மையில் மனிதர்கள் தங்களுக்கு வருகிற பின்னடைவின்போது என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அதிலிருந்து மீள்வது நிகழும். உதாரணமாக, ஒருவர் உடல் நலக் குறைவுக்கு ஆளாகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.



இப்படி நேர்ந்து விட்டதே என்று சோர்வாக அமர்வதைவிடவும் சரியான வழி, தீர்வை நோக்கி நகர்வதுதான். அதாவது ஒரு மருத்துவரிடம் போவது. மருத்துவரிடம் போவது என்று முடிவெடுத்த விநாடியிலிருந்தே அவர் அந்தப் பின்னடைவிலிருந்து மீள்வதற்கான முதலடியை எடுத்துவைக்கிறார்.

உடலுக்குப் பின்னடைவு வருகையில் உடனே செயல்படும் மனிதர்கள், மனதுக்குப் பின்னடைவு வரும்போது சோர்வாய் அமர்வதும், தீர்வு நோக்கிய பயணத்தைத் தள்ளிப் போடுவதுமே அவர்களின் நிலை மோசமாகக் காரணம்.

பொதுவாகவே பின்னடைவுகள், நம்முடைய பயணத்தின் வேகத்தை தீவிரப் படுத்தவோ, அல்லது சரியான திசையில் செல்லவோ நினைவூட்டுவதற்காகவே நேர்கின்றன.

பின்னடைவுகளைக் கையாள்வதில் இருக்கும் வெற்றிதான் இலக்கு எட்டுவதில் நம்மை துரிதப்படுத்துகிறது. இன்னும் தெளிவான பயணத்தை நமக்குத் தருகிறது.

உலகின் பல சாதனையாளர்கள், பின்னடைவிலிருந்து மீள்வது பற்றி ஒரு வரியில் சொல்லியுள்ள உயிர்ப்பு மிக்க அனுபவப் பதிவுகள் சோர்விலிருக்கும் யாரையுமே தீர்வு நோக்கி நகர்த்தும் தனித்தன்மை வாய்ந்தவை.

• எதிர்பாராமல் ஏற்படுகிற பின்னடைவை சரியாக ஆராய்ந்தால், அது எதிர்கால வெற்றியை வரையறை செய்யும் வாய்ப்பாக அமைகிறது.

• சவாலான நிமிஷங்களை சாதாரணமான மனிதர்கள் எதிர்கொள்ள மட்டுமே செய்கிறார்கள். சாதனையாளர்களோ, சவாலை எதிர்கொண்டு, இன்னும் பலமாய் வெளிப்படுகிறார்கள்.

• பதட்டம் தருகிற சூழ்நிலை என்பது, முடிந்து போகிற முட்டுச்சந்து என்று நினைப்பவர்கள் பதறுவார்கள். அது திருப்பங்கள் ஏற்படுத்தும் திருப்புமுனை என்று நினைப்பவர்கள் வளருவார்கள்.

• எதிர்மறையான மனிதர்களை எதிர்கொண்டும் நேர்மறையாய் செயல்படுவதுதான் உண்மையான முன்னேற்றம். எல்லாவற்றையும் நல்லதாகவே பார்க்கும் நம்பிக்கை மனிதர்களை மட்டுமே கொண்டதல்ல வாழ்க்கை.

• ஒரு செயலைச் செய்ய உங்களால் முடியாதென்று நினைப்பவர்களை சந்திக்க நேர்கிறதா? உங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ள மனிதர்களின் நினைவு அங்கே தோன்றட்டும்.

• ஒரு செயலை நீங்கள் செய்தது பற்றிய விமர்சனங்கள் உங்கள் காதுகளில் விழுகின்றனவா? அதில் இருக்கும் நடுநிலையான கருத்துக்கள் மட்டுமே நெஞ்சில் தங்கட்டும்.

• உங்கள்மேல் உங்களுக்கே சந்தேகம் தோன்றுகிறதா? உங்களுடன் நீங்கள் உட்கார்ந்து பேச, இதுதான் சரியான நேரம். உங்கள் பலங்கள் - பலவீனங்களை அலசுங்கள். சந்தேகம் என்கிற கறை காணாமலே போகும்.

• உங்களைச் சுற்றியிருப்பவர்கள் மீது சந்தேகம் வருகிறதா? அது எல்லோரையும் சந்தேகிக்கும் நோயாக வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கொரு வழி இருக்கிறது. உங்களை உயர்த்துவதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவில் கொண்டு நிறுத்துங்கள்.

• அதிகாலை நேர நடைப்பயிற்சியின்போது, உங்கள் திறன்களுக்காகவும், உங்கள் வாழ்க்கைக்காகவும், இறைவ‌னுக்கு நன்றி சொல்லும் விதமாய், நன்றியுணர்வை உங்களுக்குள் நிரப்பிக்கொள்ளுங்கள்.

• அச்சம் வரும்போதெல்லாம் நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கையின் உயரம், அச்சத்தின் உயரத்தைவிட அதிகமாய் இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

• உள்ளுக்குள்ளே அயர்வு தலைகாட்டும்போது இறைவனை நோக்கி உங்களை முழுவதும் ஒப்படையுங்கள். அந்தப் பெரும்சக்தி தரும் சக்தியை மீண்டும் பெற்றுக்கொண்டு மீண்டு வாருங்கள்.

• நீங்களே உங்களை அறிந்திருக்கும் அறிவுகூட மேலோட்டமான அறிவுதான். அப்படியிருக்க, மற்றவர்கள் உங்களைக் குறைவாக எடைபோட்டால் அதற்காக வருந்தாதீர்கள். உரிய நேரத்தில் உங்கள் செயல்திறன் வெளிப்படும்போதுதான். உலகுக்கும் உங்களுக்கும், உங்களைப்பற்றித் தெரிகிறது.

• சில விஷயங்களைத் தக்கவைக்க முயல்வதால் வாழ்வின் மற்ற விஷயங்கள் பாதிக்கிறதா? சிறிதும் தயங்காமல் அவற்றை வெளியேற விடுங்கள்.

• ஒரு சூழலை நீங்கள் கடப்பீர்களா மாட்டீர்களா என்ற கேள்வியுடன் எல்லோரும் உங்களை எதிர் நோக்குகிற போது, அந்தச் சூழலை ஒரு விளையாட்டு மைதானமாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். சிரித்த முகத்துடன் அந்த விளையாட்டில் பங்கெடுங்கள். – Source: namadhu nambikkai.

மேலும் படிக்க...Read more...

திருடனின் கையில் சாவி...!

>> Thursday, September 17, 2009


உலகச் சந்தைப் பொருளாதாரத்தின் தலைமையகம் என்று அறியப்படும் அமெரிக்க அரசியலையும், பொருளாதாரத்தையும் நிர்ணயிப்பவை எவை தெரியுமா?

தனியார் காப்பீட்டு நிறுவனங்களும், மருந்து உற்பத்தி நிறுவனங்களும் தான்.

அமெரிக்க அதிபராக யார் வரவேண்டும் என்பதைக்கூட இந்த நிறுவனங்கள்தான் தீர்மானிக்கின்றன என்றுகூடக் கூறப்படுவதுண்டு.

மருந்து உற்பத்தியாளர்கள் தான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களிலும் முக்கிய பங்குதாரர்களாக இருந்து வருகிறார்கள் என்பதும், மருத்துவக் காப்பீடு என்கிற பெயரில் அமெரிக்க மக்களின் சேமிப்பை விழுங்குவதும் இவர்கள்தான் என்பதும், அமெரிக்க நுகர்வோர் அமைப்பின் முன்னோடி ரால்ஃப் நாடரின் தொடர்ந்த குற்றச்சாட்டு.

கண்ணுக்குத் தெரியாமல் கொள்ளை லாபம் அடிக்கும் தொழில் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு பதில் சொல்லிவிடலாம், மருந்து உற்பத்தி என்று. இப்போதைய விலையில் அனைத்து மருந்துகளின் விலையையும் பாதிக்குப் பாதி குறைத்தாலும் இந்த மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்காக லாபம் ஈட்டும் நிலைமை தொடரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் மருந்துகளில் கொள்ளை லாபம் வைத்து விற்கின்றன என்பது மட்டுமல்ல, மருத்துவர்களுக்கு இலவசங்களையும், "பரிசு' என்கிற பெயரில் அன்பளிப்புகளையும் வழங்கித் தங்களது மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்ட வைக்கின்றன. சாதாரண இருமல், காய்ச்சலுக்குப் போனால் கூட 10 அல்லது 15 மருந்துகளை மருத்துவர்கள் எழுதித் தருவது, நோய் குணமாவதற்கு மட்டுமல்ல, இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து பெற்ற அன்பளிப்புக்கான நன்றிக் கடனும்கூட!

இந்த மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களையும் அவரது குடும்பத்தினரையும் 5 நட்சத்திர ஹோட்டல்களில் விருந்து கொடுத்து உபசாரம் செய்வதும், தங்களது விலையுயர்ந்த மருந்துகளை தாராளமாக அப்பாவி நோயாளிகளின் தலையில் கட்டும் மருத்துவர்களுக்கு கார், வீடு, விலையுயர்ந்த வீட்டு உபயோகப் பொருள்கள் என்று வழங்குவதும் சர்வசாதாரணம். இப்போதெல்லாம் பிரபல மருத்துவர்களின் குடும்பம் வெளிநாட்டுக்குப் பயணம் சென்றுவருவதற்கான மொத்தச் செலவையும் இந்த நிறுவனங்கள் ஏற்றுக்கொள்கின்றன.

அன்பளிப்பு என்ற பெயரில் மருத்துவர்களின் மனதைக் கெடுத்து தேவையில்லாத மருந்துகளை அப்பாவி நோயாளிகளின் தலையில் சுமத்தும் இந்த தப்பான வழிமுறைக்கு முடிவு காணப்படுமா என்று ஏதோ ஒரு நல்ல மனது படைத்த மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுத் தரப்பு தந்த பதில் என்ன தெரியுமா? மருந்து தயாரிப்பாளர்களிடம் இதற்கு சில விதிமுறைகளை ஏற்படுத்த நாங்கள் கோரியிருக்கிறோம் என்பதுதான்.

இந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் என்பதுதான் மருத்துவ ஊழலின் ஊற்றுக்கண் என்பதுகூட தெரியாதா நமது சுகாதாரத்துறைக்கும், மத்திய அரசுக்கும்? அது போகட்டும். இந்த சங்கத்தில் முக்கிய உறுப்பினர்களாக இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

அமெரிக்க சரித்திரத்திலேயே இல்லாத அளவுக்கு மருத்துவர்களுக்கு மதுவும் விருந்தும் அளித்தும், வெளிநாட்டுப் பயணத்துக்கு அனுப்பியும் ஒன்பது தவறான, தரமற்ற மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யவைத்த குற்றத்துக்காக 230 கோடி டாலர்கள் (அதாவது, 11,500 கோடி ரூபாய்) அபராதம் செலுத்திய "ஃபைசர்' நிறுவனம்-

வாதத்துக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவர்களை வசப்படுத்தி "வையோக்ஸ்' என்கிற மாத்திரையை கோடிக்கணக்காக விற்பனை செய்து, கொழுத்து, அதன் தொடர்விளைவாக இதயவலி மற்றும் பக்கவாதத்தால் நோயாளிகள் பாதிக்கப்பட்டு 2004-ல் அந்த மருந்தை விநியோகிப்பதை நிறுத்திய, சுமார் 480 கோடி டாலர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீட்டு நிறுவனம் மூலம் நஷ்டஈடு அளித்த மெர்க் நிறுவனம்-

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடிய நிறுவனங்கள்தான் இந்த சங்கத்தில் உறுப்பினர்கள்.

கடுமையான நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் உள்ள அமெரிக்காவிலேயே தமது கைவரிசையைக் காட்டும் இந்த நிறுவனங்கள், இந்தியாவில் மட்டும் தயாள சிந்தனையுடனும், மக்கள் நலனைக் கருதியும் தாங்களாகவே முன்வந்து மருத்துவர்களைக் கவர்ந்து, தங்கள் மருந்துகளை விற்கமாட்டார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை நம்புகிறது...

எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் என்கிற நிலைமை வந்துவிட்ட பிறகு, எப்படி சம்பாதித்தோம் என்பதைவிட எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்கிற மனநிலை ஏற்பட்டுவிட்டபோது இதுவும் நடக்கும், இன்னமும் நடக்கும்...

ஏதுமறியாத அப்பாவி இந்திய குடிமகன், அவர் நம்பும் மருத்துவராலும், அவரும் வாக்களித்து ஆட்சி பீடத்தில் அமர்த்தியிருக்கும் அரசாலும், அவரது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி வசதியாக வாழும் அதிகார வர்க்கத்தாலும் வஞ்சிக்கப்படுகிறாரே, இதற்கு முடிவே இல்லையா?.
SOURCE: DINAMANI

மேலும் படிக்க...Read more...

வியப்பில் ஆழ்த்தும் பாலக இமாம்கள். விடியோ காணுங்கள்.

>> Tuesday, September 15, 2009

வியப்பில் ஆழ்த்தும் பாலக இமாம்கள்.
விடியோ காணுங்கள்.

விடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையிலிருந்து இரண்டாவதாக தோன்றும் வெள்ளை கட்டம் உள்ளடங்கிய கருப்பு கட்டத்தின் மேல் "க்ளிக்" செய்து முழுத்திரையில் காணலாம்.




மேலும் படிக்க...Read more...

உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?

>> Monday, September 14, 2009

உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸா எது?
இஸ்லாத்தின் எதிரிகள் உண்மையான மஸ்ஜித் அல் அக்ஸாவின் அருகாமையிலுள்ள‌ தங்க முலாம் பூசப்பட்ட குப்பா உடைய‌ மஸ்ஜித் அல் குத்ஸ் DOME OF ROCK ஐ மஸ்ஜித் அல் அக்ஸாவாக பொய் பிரசாரம் செய்து அதையே நிலை நிறுத்த பல்லாண்டு காலமாக முயன்று வருகிறார்கள்.


வாரீர்!!! ஜெருசலம் சென்றுமஸ்ஜித் அல் அக்ஸா- குப்பத் அஸ் ஸ‌க்ரா காண்போம்


3.முஸ்லீம்கள் ஏன் ஹலால் உணவை மட்டும் உண்ண வேண்டும்.?

லின்கை க்ளிக் செய்து த‌ள‌த்திலிருந்து ட‌வுன்லோட் செய்து ப‌டிக்க‌வும்.

முஸ்லீம்கள் ஏன் ஹலால் உணவை மட்டும் உண்ண வேண்டும்.?

மேலும் படிக்க...Read more...

மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்.

>> Sunday, September 13, 2009

UPDATED 15 SEP 2009


1.மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம். உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.

2."ஏன் இஸ்லாம்?
"கலிஃபோர்னியாவில் விளம்பரப் பிரச்சாரம்
Why Islam?பலவித விளம்பரப் பலகைகளை கண்டு பழகிய அமெரிக்க மக்களுக்கு இப்பொழுது புதிதாய்த் தென்படத் துவங்கியுள்ள விளம்பரப் பலகை, "ஏன் இஸ்லாம்?"என்பதாகும்.

1.மேற்கத்திய நாடுகளில் பெருகிவரும் இஸ்லாம்

(நீதிமன்றம் மூலம் ஹிஜாம் அணிய போராடி வெற்றி பெற்ற இங்கிலாந்து முஸ்லிம் பெண் சபீனா பேகம்)

உலகில் எத்தனையோ மதங்கள் உள்ளன. கடவுளே இல்லை என்று சொல்லக்கூடிய கொள்கைகளும் மக்களை குழப்பிப் பார்க்கின்றன. ஆனால், இவற்றுள் இஸ்லாம் என்ற மார்க்கம் - கொள்கை, மிகப் பழமையானதும் அதே நேரம் மிக இளமையானதும் ஆகும்.

பழமையானது - உலகின் முதல் மனிதன் தொடங்கி உலகில் தோன்றிய அத்துணை நபிமார்களும் ஓரிறைக் கொள்கையையே போதித்தனர். ஆதலால், உலகின் பழமையான மார்க்கம் இஸ்லாமே.

இளமையானது - முகமது (ஸல்) அவர்கள் தான் இவ்வுலகிற்கு வந்த இறுதி நபி. அவர்களே முந்தைய நபிமார்களை மெய்ப்படுத்தி, ஓரிறைக் கொள்கையை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் எடுத்து மக்களுக்கு போதித்தார். ஆதலால், இஸ்லாமே அனைத்திலும் இளமையானது.

1400 ஆண்டுகளுக்கு முன்பு, அரேபியப் பாலைவனத்தில் ஊறத் தொடங்கிய இஸ்லாம் எனும் சத்திய ஊற்று, இப்போது உலகம் முழுவதும் கடலென பரவிக் கிடக்கின்றது. வாளால் பரவிய மார்க்கம் என்று ஊடகங்கள் ஓயாது ஒலித்தாலும், அதற்கான பதிலை தன்னகத்தே பிரதிபலித்துக் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் இரண்டாவது பெரிய மதமாக (மார்க்கம்) இருந்த இஸ்லாம், இந்த ஆண்டு உலகின் மிகப்பெரிய மார்க்கமாக கத்தோலிக்க கிறிஸ்துவத்தை தாண்டி வளர்ந்துள்ளது.

உலக மக்கள் தொகையில், 19.2 விழுக்காடு முஸ்லிம்கள் எனவும், 17.4 விழுக்காடு கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் என்றும் கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராக உள்ள “போப்” பின் ஆளுகைக்குட்பட்ட வாடிகன் நகரத்தில் இருந்து வெளிவரும் லொசெர்வேடோர் ரொமானோ (L’Osservatore Romano) என்ற செய்திப் பத்திரிகை தெரிவிக்கின்றது.

உலக மக்கள் தொகையில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 113 கோடி மக்களாவர்; முஸ்லிம்களின் எண்ணிக்கை 130 கோடி எனவும் அப்பத்திரிகை தெரிவிக்கின்றது.

வாடிகன் 2008 க்கான ஆண்டுப்புத்தகம் (Year Book) -இல் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விபரத்தை மேற்கத்திய உலகின் பெரும்பாலான செய்தி ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இச்செய்தி உலகில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம் (Fastest-growing religion) என்பதை நமக்கு ஆதாரத்தோடு தருகின்றது.

பல்கேரியாவில் தொழுகை இத்தாலியில் தொழுகை இத்தாலியில் தொழுகை

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த கணக்கெடுப்பின்படி, கடந்த 12 ஆண்டுகளில் 1200 புதிய பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்பட்டுள்ளன.

அதாவது ஆண்டுக்கு, 100 புதிய பள்ளிகள்; ஒரு வாரத்திற்கு இரண்டு பள்ளிவாசல்கள் அமெரிக்காவில் கட்டப்படுகின்றன. பிரபல அமெரிக்க செய்தி ஊடகம் சி.என்.என். (CNN) இந்த தகவலை நமக்குத் தருகின்றது.

குறிப்பாக அமெரிக்காவில் வாழும் கறுப்பின அமெரிக்கர்கள் மத்தியில் இஸ்லாம் மிக வேகமாக பரவி வருகின்றது. சமூகத்தில் சிறுபான்மையினராக இருக்கும் அவர்கள் ஏற்றத்தாழ்வு கற்பிக்கப்படுவதை கண்டு வெதும்பி இஸ்லாம் கூறும் சமத்துவத்தை நாடி இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

அமெரிக்கா மட்டுமன்றி ஐரோப்பாவிலும் இதே நிலைதான். கிறிஸ்துவத்தின் மீது நம்பிக்கை குறைந்து சர்ச்சுகளுக்கு கூட்டம் வருவது குறைந்து கொண்டே செல்கின்றது.

இங்கிலாந்தில், சர்ச்சுகள் மூடப்பட்டு “பார்” களாக மாற்றப்படுகின்றன; அதே நேரம் பல சர்ச்சுகள் முஸ்லிம்களால் முழு நேர வாடகைக்கு எடுக்கப்பட்டு பள்ளிவாசல்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நாமே அதுமாதிரியான பள்ளிவாசலில் இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் சென்றிருக்கும் போது, அங்கே ஜூம்ஆ தொழுதுள்ளோம்.

இஸ்லாம் தனி மனித உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பினும், ஓர் எல்லைக்குட்பட்டே வழங்கி உள்ளது; தனி மனித உரிமைகளை விட சமுதாயத்தின் உரிமைகளுக்கு முதலிடம் கொடுக்கின்றது.

ஆனால், மேற்கத்திய உலகமோ சமுதாயத்தின் உரிமைகளை கண்டு கொள்வதே இல்லை. இதனை கீழ்க்கண்ட எடுத்துக்காட்டின் மூலம் விளங்கலாம். ஒரு பெண் தனக்குப் பிடித்த ஆடையை அணிவது அவளுடைய தனி மனித உரிமை என்கிறது மேற்கு. அது, உடலின் பாகங்களை அசிங்கமாக வெளிப்படுத்தினாலும் சரியே; ஆனால், இஸ்லாமோ கீழ்த்தரமாக ஆடை அணியும் பெண்ணால், சமுதாயத்திற்கு தீங்கு விளையும்; தவறான செயல்களுக்கு தூண்டுதலாக அமையும்; அதனால், அப்பெண்ணின் தனிமனித உரிமையும் பாதிக்கப்படும்; ஆகவே மறைக்க வேண்டிய பாகங்கள் மறைக்கப்பட்டு, ஒரு பெண் இயங்குவதில் தவறில்லை என்று பொது நன்மையை நாடி கூறுகின்றது.

இதே போன்றே ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் இதனை தனி மனித உரிமை என்கின்றனர்; ஆனால், இதனால் சமூக கட்டமைப்பு கெட்டு, சமுதாய ஒழுக்கம் தவறி, மாபெரும் அநீதி இழைக்கப்படுவதை அவர்கள் உணர்வதில்லை. ஆனால், இஸ்லாம் ஓரினச் சேர்க்கையை வேரோடு சாய்க்கின்றது.

சமூக உரிமைகளை மதிக்கும் இஸ்லாத்தின் இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மேற்கத்திய உலகம் மிக வேகமாக இஸ்லாத்தினை நோக்கி நெருங்கி வந்து கொண்டுள்ளது.
ஃபிரான்ஸில் ஹிஜாஜுபுக்கான போராட்டக் காட்சி)

இவ்வாறு இஸ்லாத்தினை நோக்கி முஸ்லிமல்லாதோர் வரும் இவ்வேளையில், மேற்கத்திய முஸ்லிம்களிடையேயும் வெகுவாக விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஃபிரான்ஸில் பள்ளிகளில் முஸ்லிம் மாணவிகள் இஸ்லாமிய முறைப்படி, தலையை மறைத்துக் கொண்டு (Headscarves) வருவதைத் தடுக்க சட்டம் இயற்றிய போது, ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் இறங்கி தமது உரிமைக்குரிலை எழுப்பினர்.


பெரும்பான்மையாக முஸ்லிம்கள் வசிக்கும் நாடுகளான எகிப்து, குவைத், ஈராக், லெபனான் மட்டுமன்றி மேற்கத்திய உலகம் முழுமையாக, ஸ்வீடன், கனடா, பிரிட்டன், அமெரிக்கா என பல நாடுகளிலும் முஸ்லிம்கள் குறிப்பாக பெண்கள் போராட்டங்கள் நடத்தினர்.

“ நமக்குத் தேவை மாற்றம்” – (Change We need) என்ற தேர்தல் கோஷத்தை முன் வைத்து, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் பராக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த கறுப்பின முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த தந்தைக்கும், வெள்ளை அமெரிக்கத் தாய்க்கும் பிறந்தவராவார் இவர். இவர் முஸ்லிமாக வாழவில்லை எனினும், முஸ்லிம்களை எல்லாம் தீவிரவாதிகளாக சித்தரித்த மேற்கத்திய நாடுகள் குறிப்பாக அமெரிக்காவிற்கு முஸ்லிம் பின்னணியிலிருந்து, அதுவும் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக ஆகியுள்ள நிகழ்வு கண்டிப்பாக மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகின்றது.

முஹம்மது (ஸல்) -வைப் போன்று ஒருவர் இவ்வுலகின் சர்வாதிகாரியாக பொறுப்பேற்பாரானால், உலகின் அனைத்து பிரசினைகளையும் களைவதில் வெற்றி பெற்று, உலக மக்கள் வெகுவாக எதிர்பார்க்கும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர முடியும் என்ற ஜார்ஜ் பெர்னாட் ஷா வின் கூற்றுக்கிணங்க, இன்ஷா அல்லாஹ், அமெரிக்க வெள்ளை மாளிகையை ஒரு சீரிய இஸ்லாமிய சிந்தனையுள்ள முஸ்லிம் ஒருவர் அலங்கரிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

2."ஏன் இஸ்லாம்?

ஆங்கிலத்தில் ”Why Islam?"என்று சட்டெனச் சுண்டியிழுக்கும் விளம்பரம். பே ஏரியா (Bay area) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள சான் ஓசே, சான்டா க்ளாரா, கன்கார்ட் நகரங்களில், பேருந்துகளில், பேருந்து நிறுத்தங்களில் என அங்கெங்கெனாதவாறு கலிஃபோர்னியாவில் எங்கெங்கும் திடீரெனத் தோன்றியுள்ள ”ஏன் இஸ்லாம்?” எனும் விளம்பரப் போஸ்டர்கள், இலவசக் குர்ஆன் பிரதிகள் அளிக்கப்படுவது பற்றியும் இஸ்லாமிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் கட்டணமற்ற தொலைபேசி (டோல் ஃப்ரீ) எண் பற்றியும் தெரிவிக்கின்றன.

ஏறக்குறைய செப்டம்பர் 11, நிகழ்வுக்கு ஓராண்டுக்கும் முன்பாகவே இந்த விளம்பரப் பலகைத் தி்ட்டம் நியூயார்க்கில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. இத்திட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான தாரிக் அமானுல்லா, உலக வர்த்தக மையத்தில் நிகழ்ந்த செப்டம்பர் 11 தாக்குதலில் இறந்து போனது ஒரு வினோத முரண்.



இந்த விளம்பரத் திட்டத்தின் எளிய செய்தி, "இஸ்லாம் என்பது மக்களைக் கொல்லும் தீவிரவாதம் அல்ல; ஆனால் அவர்களின் உயர்வுக்கான மார்க்கம்".


Why Islam travelsஅமெரிக்காவில் முழு வீச்சாய் இஸ்லாமியப் பணியாற்றி வரும் அமைப்பு ICNA (Islamic Community of North America). ”ஏன் இஸ்லாம்?” எனும் இந்தத் திட்டத்திற்கு இந்த அமைப்பு பொறுப்பேற்று ஆதரவளித்து வருகிறது.

இதன் பே ஏரியா கிளையின் வெளித்தொடர்பு செயலாளர் அஹ்மத் கலீலுக்கு 30 வயது. "செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின், இங்கு இஸ்லாம் என்பது 'சாந்தி'க்கு எதிர்மறையான தீவிரவாதமாகப் பார்க்க ஆரம்பிக்கப்பட்டது.


இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே!

மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும். மக்கள் முஸ்லிம்களைக் கடின உழைப்பாளிகளாகவும் அமைதி விரும்பும் குடும்பஸ்தர்களாகவும் உணர வைக்க இந்தத் திட்டம் பயன்படும்" எனும் கருத்துப்பட கூறியுள்ளார்.

நியூ ஜெர்சியிலுள்ள இந்த அமைப்பின் தொலைபேசித் தகவல் மையத்தில் பணியாற்றும் தொண்டர் அஷ்ஃபாக் பார்க்கர், "யூதர்கள், கிறி்த்தவர்கள்போல் நாங்களும் ரமளானில் நோன்பு நோற்கிறோம். இந்த நாட்டிலுள்ள சிறுபான்மை மதத்தவர் என்ற அடிப்படையில் அவர்களிடமும் இஸ்லாத்தைப் பற்றிய அறிவை வளர்க்க முயல வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம்” எனறார்.

அதற்கேற்ப சான் ஓஸே 880 தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை, ”இஸ்லாம் என்பது ஆபிரகாம், மோஸஸ், ஈசா மற்றும் முஹம்மது நபியின் பிரச்சாரத்தின்படி அமைந்த மார்க்கம்தான்” என்று அறிவிக்கிறது. கலிஃபோர்னியாவில் ஸ்பானிஷ் மொழி பேசுபவர்களும் அதிகம் ஆதலால், சில பலகைகள் ஸ்பானிஷ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளூர் முஸ்லிம்களின் பொருளுதவி இந்த விளம்பரப் பலகை நிர்மாணத்திற்கு உதவுகின்றது. சிகாக்கோ, ஹுஸ்டன், பிலடெல்ஃபியா, பாஸ்டன், ஃப்ளோரிடா ஆகிய மாநிலங்களின் நெடுஞ்சாலைகளிலெல்லாம் இந்த விளம்பரம் பரவி வருகிறது. நெடுஞ்சாலைகளிலுள்ள பெரிய விளம்பரப் பலகைகள் அமைக்க ஒவ்வொன்றும் 1,000 முதல் 5000 டாலர்கள் வரையும், சிறிய விளம்பரங்கள் ஒவ்வொன்றுக்கும் 200 முதல் 500 டாலர்கள் வரையும் செலவாவதாய்த் தெரிகிறது.

இஸ்லாம் ஒன்றும் தீவிரவாதத்தின் மறுபெயரல்லவே! மக்களின் மனதிலுள்ள இத்தகைய தவறான மனோபாவத்தை மாற்றவாவது குறைந்த பட்சம் இந்தத் திட்டம் உதவும்.

1-877-WHY-ISLAM எனும் தொலைபேசி ஹாட்லைனுக்கு சராசரியாய் ஒரு மாதத்தில் 1000 தொலைபேசி விசாரணைகளும் ஏறக்குறைய அதே அளவு மின்அஞ்சல் விசாரண WhyIslam.org எனும் இணைய தளத்திற்கு வருவதாகவும் பார்க்கர் தெரிவிக்கிறார்.

சான்டா க்ரூஸ் பகுதியிலிருந்து பே ஏரியாவுக்குப் பயணிக்கும் ப்ரூஸ் க்ரீன் என்பார் ஒரு கிறித்தவ மத போதகர். அனைத்து மதத்திற்கு மத்தியிலும் பாலம் அமைக்கும் நல்முயற்சியில் ஈடுபட்டுள்ள இவருக்கு நிறைய இஸ்லாமிய நட்பும் உண்டு. இந்த விளம்பரங்களை நெடுஞ்சாலைகளில் கண்ணுற்ற அவர், முஸ்லிம்கள் இப்பொழுது மேற்கத்திய மக்களை சென்றடையும் வகையில் பணியாற்றுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சான்டா க்ளாரா ICNA கிளையின் உதவித் தலைமையாளர் அமீன் அஷ்ரப், இந்த விளம்பரங்களுக்குப் பிறகு இஸ்லாம் பற்றி விசாரிக்கும் ஆர்வத்தில் மஸ்ஜிதுகளில் பல புதிய முகங்கள் தென்படுவதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 8000 தொலைபேசி விசாரணைகள் இருந்தன என்றும் கூறினார்.

எண்ணிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், ஒரே ஒருவரின் இஸ்லாமிய விரோத மனப்போக்கைக் களைய முடிந்தாலே அது இந்தத் திட்டத்தின் வெற்றிதான் என்பது இதன் அமைப்பாளர்களின் கருத்து. அவ்வகையில் நோக்கினால் பரவலாக அமெரிக்கா முழுவதும் இது சிறப்பான பலனைத் தருவதாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
தகவல் : சகோ. நூருத்தீன், சியாட்டில், யூ.எஸ்.- சத்தியமார்க்கம்.காம்

மேலும் படிக்க...Read more...

நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத்.

>> Monday, September 7, 2009

நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா என்பது இதுதானா?

விடியோ காணுங்கள்.



இந்த தரீக்கா / ஷைகு / முரீது / பைஅத் /, கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு , பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய‌ நிலை உருவாகிவிடும்.

முரீது என்பது சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர்.

அதாவது ஒருவர் மோட்சம் அடைய வேண்டுமென்றால் அவர் ஷரீஅத்தைப் பின்பற்றுவதோடல்லாமல் இன்னும் மூன்று படித்தரங்களைக் கடந்து செல்ல வேண்டும். அவைகளாவன: 1) தரீகத் 2) ஹகீகத் 3) மஃரிபத் ஆகியனவாகும்.

இவற்றை அடைய வேண்டுமானால் ஒருவர் தனது ஆசா பாசங்கள் அனைத்தையும் துறந்து சன்னியாசம் பூண்டு இறை தியானத்தில் ஈடுபட வேண்டும்.

உலக ஆசையை துறப்பதற்கு சாதாரண மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதை நன்றாகப் புரிந்துக் கொண்ட இவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட இந்த மூன்று படித்தரங்களையும் கடந்து சென்ற ஸூஃபிகளிடம் பைஅத், முரீது வாங்கிக் கொண்டால் போதுமானது!

அவர்களை அந்த ஷெய்குகள் கரையேற்றி ஈடேற்றம் அளித்துவிடுவார்கள் என்று பாமர மக்களை ஏமாற்றி அவர்களின் நம்பிக்கையில் உழைப்பில் தங்களின் வயிறுகளை வளர்த்தனர் இந்த போலி ஸூஃபிகள்.

முரீது வாங்கிய ஒருவர் தன்னுடைய ஷெய்குவிடம் குளிப்பாட்டுபவனின் கையில் கிடக்கும் மைய்யித்தைப் போல இருக்க வேண்டுமாம்.
அதாவது தன்னுடைய ஷெய்கு எதைச் செய்தாலும் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாதாம்.

மேலும் முரீது கொடுக்கிறோம் என்ற பெயரில் இந்த போலி ஷெய்குகள் தங்களின் பக்தர்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளில் இல்லாத சில திக்ருகளைக் கற்றுத் தருகின்றனர்.
முரீது வாங்கியவர்கள் இந்த திக்ருகளை ஓதிவந்தால் போதுமாம்! அவர்கள் மோட்சம் அடைந்து விடுவார்களாம்.

இன்னும் சிலர் தொழுகைக்கு கூடச் செல்வதில்லை.

அவர்களிடம் கேட்டால், எங்கள் செய்கு எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி விடுவார் என்று பெருமிதத்துடன் கூறுகின்றனர்.

இன்னும் வழிகெட்ட சிலர் ஆபத்துக் காலங்களில் தங்களுக்கு முரீது வழங்கிய ஷெய்குகளை, பீர்களை அவர்கள் தங்களின் கண்காணாத தூரத்தில் இருந்தாலும் யா செய்கு அல்லது யா பீர் அவுலியா என்று அவர்களை அழைத்து உதவி தேடுகின்றனர்.

இவைகள் எல்லாம் இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவத்தையே அசைக்கின்ற ஷிர்க்கான செயல்களாகும்.
இந்தக் கொள்கைகளுக்கும் இஸ்லாத்திற்கும் எவ்விதத்திலும் சம்பந்தம் இல்லை. இஸ்லாம் என்பது திருமறைக் குர்ஆன் மற்றும் நபிவழிமுறைகளைப் பின்பற்றுவதுமேயாகும்.
ஸூஃபியிஸம் பற்றி விரிவாக அறிவதற்கு ஏ.சி. முஹம்மது ஜலீல் மதனி அவர்கள் எழுதிய சூபித்துவ தரீக்காக்கள் அன்றும் இன்றும் என்ற நூலை பதிவிறக்கம் Download செய்து படித்துப்பாருங்கள்.
http://islamkural.com/downloads/soofi.pdf


அல்லாஹ் நம்மனைவருக்கும் அவனுடைய நேர்வழியைக் காட்டி, பித்அத் போன்றவற்றை தவிர்ந்தவர்களாக வாழ்வதற்கு அருள்புரிவானாகவும். ஆமீன்.
இந்த காலகட்டத்தில் இஸ்லாத்தை பற்றி விளக்கி கூற பல சீர்திர்ருத்த வாதிகள் இருந்தும் நம் மக்கள் இன்னும் தெளிவு பெறாமல் மூட நம்பிக்கைகளில் மூழ்கி வெளியே வரமுடியாமல் தனது அறியாமையின் காரணமாக சின்ன பின்னமாகிக் கொண்டிருக்கின்றனர்.

இப்பொழுது சொல்ல இருப்பது திரித்த கட்டுக்கதை அல்ல. படைத்த அல்லாஹுவின் மீது ஆணையாக நமது சமுதாயத்தில் நடக்கின்ற சம்பவம்.

ஒரு “தரீக்கா” வாசி அவன் கூறுவதாவது:
”எங்களின் உஸ்தாது நாங்கள் எங்கிருந்தாலும் எங்களை கண்காணித்து நேர்வழி படுத்திக்கொண்டு இருக்கிறார். நாளை மறுமையில் எங்களை சுவர்கத்திற்கு அழைத்து செல்வார் என்று அடித்து கூறுகிறான். அவன் ஒரு படித்த பட்டதாரி. இப்படி பட்டவர்களை நாம் என்ன செய்வது ………….? “

இன்னும் பல நபர்கள் அவர்களின் பேச்சை கேட்டு நல்வழி கிடைக்கும் ,குடும்பத்தில் நல்ல பரக்கத் ஏற்படும், வாழ்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற தவறான எண்ணத்தில் அவர்களை சென்று மாதம் தோறும் பார்த்து வருகின்றனர்.

அந்த உஸ்தாது இருக்கும் இடமோ நமது அண்டை மாநிலம். நீங்களும் அந்த விஷயத்தை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அவரது வயதை யாரும் அறிய முடியாதம். அவர் சிலநேரங்களில் வாலிபர்போல தோற்றம் அளிக்கிறார் என்றும் சில சமயம் வயது முதிர்ந்தவர் போல இருக்கிறார் எனவும் கூறுகின்றனர். அவர் ரசூல் (ஸல் ) வழியை சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.அவர் கூறியதற்காக தனி பள்ளிவாசல் ஒன்றை கட்டியுள்ளனர்.

மேலும் அவன் கூறியது: நானும் உன்னை போலதான் இருந்தேன் அவரை பற்றி கேள்விபட்டதும் அவரை சென்று நேரில் பார்த்தும் எனக்கு எல்லாம் எண்ணமும் மாறிவிட்டது. அந்த உஸ்தாது நாங்கள் அமர்ந்திருந்த கூட்டத்தை பார்த்து கூறினார். இங்கு வந்திருக்கும் ஒருவன் என் மேல் நம்பிக்கை இல்லாமல் வந்திருக்கிறான் என்று.

அதை கேட்டதும் என் மனநிலை மாறிவிட்டது என்று கூறுகிறான். இன்னும் பல செய்திகளையும் அவன் என்னிடம் கூறினான். நான் அவனிடம் கூறினேன் சாதரண குறிகாரன்கூட தான் இதுபோல வித்தைகள் செய்வான் அதற்கு நாம் அவனை பின்பற்றி விடமுடியுமா? என்றேன். நீயும் வந்து அவரை சந்தித்தால் இதுபோல பேச மாட்டாய் என்கிறான்

இவர்களுக்கு நாம் எந்த ஒன்றை எடுத்து கூறினாலும். வீண் தர்க்கம் செய்கிறீகள். இது சைதானுடைய வேலை. உங்கள் வழியை நீங்கள் பாருங்கள். எங்கள் வழியை நாங்கள் பார்த்துகொள்கிறோம். பிடிக்கவிட்டால் ஒதுங்கிவிடுங்கள் என்கின்றனர். அல்லாஹ்தான் இவர்களை நேர்வழி படுத்த வேண்டும்.

நமது சமுதாயத்தில் நடக்கும் சில அநாச்சாரமான விஷங்களை கண்டால் மனம் அவற்றை ஏற்றுகொள்ள மறுக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ்! இணை வைக்கும் இடங்களான தர்ஹாக்களுக்குச் சென்று அங்கிருப்பவர்களிடம் கையேந்தி நமது ஈமானை பாழாக்காமல் பள்ளிவாசலுக்கு மட்டும் சென்று,
அல்லாஹ்வை மட்டுமே வணங்கி அவனது தூதர் (ஸல்) அவர்களின் சுன்னத்துக்களைப் பின்பற்றி வாழும் முஸ்லிம்களாகிய நாம் அங்கு அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்ற செயல்கள் நடைபெறுமானால் அவற்றைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்காமல் நம்மால் இயன்றவைகளைச் செய்து அந்த மாபெரும் ஷிர்க்கை தடுக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஒரு இறை நேசரையே அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை! மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ் அதற்குரிய ஆற்றல்களை நமக்குத் தந்தருள்வானாகவும். ஆமீன்.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ்வே.

நாம் சத்தியத்தை கூறிடவும் ,உண்மையை எடுத்துரைக்கவும் யாருக்கும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை.

நாம் அஞ்ச வேண்டியது நம்மை படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்தாஆலா ஒருவனுக்கே!

நமது கருத்தை எடுத்து கூறிடவும், இஸ்லாத்தில் உள்ள கோட்பாடுகளை, சத்தியத்தை மக்கள் தெளிவாக, தகுந்த ஆதாரத்துடன் பொருள்பட விளங்கிடவும் இந்த நன்றி ‍ இஸ்லாம் குரல் இணைய தளம் செயல்பட்டு வருகிறது. அதற்கு நாம் எல்லாம் வல்ல அல்லாஹுதஆலாவிற்கு நன்றி சொல்ல கடமைபட்டிருகிறோம். நன்றி:- ‍ இஸ்லாம் குரல்.

மேற்கண்ட விடியோவில் அவிழ்த்துவிடப்படும் கப்ஸா கதைகள் போல் பல‌ கப்ஸாக்களை தப்லீக் ஜமாத்தினர் குரான் ஹதீஸை விட முக்கியத்துவம் கொடுத்து தூக்கிப்பிடிக்கும் தஃலீம் கிதாப் -- "அமல்களின் சிறப்பு "- "ஃபளாயிலே அஃமால்" ல் காணலாம்.

க்ளிக் செய்து படிக்கவும்
தஃலீம் கிதாப் -- 'அமல்களின் சிறப்பு'கள் படிக்கலாமா?

சிந்தித்து முடிவெடுங்கள்.
இறைவன் நம் அனைவருக்கும் நேர் வழி காட்டுவானாக.

மேலும் படிக்க...Read more...

கணினியில் இருந்து கண்களைக் காக்க !

>> Sunday, September 6, 2009


1.கணினியில் இருந்து கண்களைக் காக்க !
2.இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்
3.பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்
4,கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்


1.கணினியில் இருந்து கண்களைக் காக்க !

கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு கண்கள் உலர்ந்து பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு விடுகிறது. அதாவது, கணினியில் வேலை செய்யும்போது கண் இமைகள் இமைப்பது குறைந்து விடுகிறது. இதனால் கண் வறண்டு போகிறது. இதனைத் தவிர்க்க ஒரு மணிக்கொரு முறை கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

அந்த சமயத்தில் கண்களை உள்ளங்கையின் அடிப்பாகத்தால் லேசாக அழுத்தி விட வேண்டும். மற்றும் பச்சை அல்லது நீல நிறத்தில் உள்ள பொருள்களை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருக்கலாம். இந்த நிறங்கள் கண்களுக்கு இதமானவை.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களை சுழல விட வேண்டும். அவ்வப்போது கண் இமைக்கப்படுகின்றதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதிக நேரம் கணினியில் வேலை செய்ய வேண்டி வந்தால் அவ்வப்போது எழுந்து பச்சையான மரங்களைப் பார்த்துவிட்டு வந்து அமர்ந்து பணியாற்றலாம்

2.இணையத்தின் வயது 40 - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட
இணையத்தின் வயது 40.நாற்பது ஆண்டுகளுக்கு முன்
இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி
இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

1969 :செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்
இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.
இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும்.

1972:Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்
முறையை கண்டுபிடித்தார்.

1973 :Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்
வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

1974 :Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியான
TCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்
உருவானது.

1983 :வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு வரப்பட்டது
".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது.

1988 :இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான
கணினிகள் சேதமடைந்தன.

1990 :Tim Berners-Lee World Wide Web (WWW) உருவாக்கினர்.

1994 :Andreessen மற்றும் குழுவினர் உலகின் முதல் கமர்ஷியல்
இணைய உலாவியான Netscape-ஐ உருவாக்கினர்.

1998 :Larry Page and Sergey Brin கூகுளை உருவாக்கினர் Stanford பல்கலைகழகத்தில்.

1999 :Napster ஒரு பெரும் புரட்சியை இசை கோப்புகளை பரிமாறுவதிலும்
வாங்குவதிலும் ஏற்படுத்தியது.

2000 :இணைய தளங்கள் அதிகமாக தொடங்கியது.

2004 :Mark Zuckerberg Facebook-ஐ உருவாக்கினர் Harvard பல்கலைகழகத்தில்.

2005 : வீடியோ படங்களை பகிர்ந்து கொள்ள உதவும் Youtube உருவானது .

2007 :Apple Iphone-ஐ வெளியிட்டது ,இதன் மூலம் லட்சகனக்கனர்வர்கள்
இணையத்தை உபயோகப்படுத்த தொடங்கினர்.

2008 :Twitter உதயம்...

உலகம் முழுவதும் இணையம் உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை:
1. China - 29.8 கோடி (22.4%)
2. USA - 22.7 கோடி (74.7%)
3. Japan - 9.4 கோடி (73.8%)
4. India - 8.1 கோடி (7.1%)
5. Brazil - 6.8 கோடி (34.3%)
6. Germany - 5.5 கோடி (67%)
7. UK - 4.8 கோடி (72%)
8. France - 4.1 கோடி (66%)
9. Russia - 3.8 கோடி (27%)
10. S.Korea - 3.7 கோடி (76%)
11. Australia - 1.7 கோடி (80.6%)
(Figures in brackets denotes percentage of nations population who use internet)

உலகம் முழுதும் இணையம் உபயோகிப்பவர்கள்:
1. 1999 - 2.5 கோடி
2. 2002 - 50 கோடி
3. 2006 - 100 கோடி
4. 2008 - 150 கோடி
நன்றி:Times of India

3.பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்

பில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் விண்டோசை ஜன்னல்
என்றுஅழைத்திருப்பார்கள். அதன் மெனு அட்டவணை இவ்வாறாக அமைந்திருக்கும்.

Save = வெச்சிக்கோ
Save as = அய்ய! அப்டியெ வெச்சிக்கோ
Save All = அல்லாத்தியும் வச்சிக்கோ
Help = ஒதவு
Find = பாரு
Find Again = இன்னொரு தபா பாரு
Move = அப்பால போ
Mail = போஸ்ட்டு
Mailer = போஸ்ட்டு மேன்
Zoom = பெருசா காட்டு
Zoom Out = வெளில வந்து பெருசா காட்டு
Open = தெற நயினா
Close = பொத்திக்கோ
New = புச்சு
Old = பழ்சு
Replace = இத்த தூக்கி அத்ல போடு அத்த தூக்கி இத்ல போடு
Run = ஓடு நய்னா
Execute = கொல்லு
Print = போஸ்டர் போடு
Print Preview = பாத்து போஸ்டர் போடு
Cut = வெட்டு - குத்து
Copy = ஈயடிச்சான் காப்பி
Paste = ஒட்டு
Paste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டு
Delete = கீச்சிடு
anti virus = மாமியா கொடுமை
View = லுக்கு உடு
Tools = ஸ்பானரு
Toolbar = ஸ்பானரு செட்டு
Spreadsheet = பெரிசிட்டு
Database = டப்பா
Exit = ஓடுறா டேய்
Compress = அமுக்கி போடு
Mouse = எலி
Click = போட்டு சாத்து
Double click = ரெண்டு தபா போட்டு சாத்து
Scrollbar = இங்க அங்க அலத்தடி
Pay Per View = துட்டுக்கு பயாஸ்கோப்பு
Next = அப்பால
Previous = முன்னாங்கட்டி
Trash bin = கூவம் ஆறு
Solitaire = மங்காத்தா
Drag & hold = நல்லா இஸ்து புடி
Do you want to delete selected item? = மேய்யாலுமே தூக்கிறவா?
Do you want to move selected item? = மெய்யாலுமே கடாசிடவா?
Do you want to save selected item? = மெய்யாலுமே வெச்சிக்கவா?
Abort, Retry, Ignore = இஸ்டம் இல்லாட்டி உட்டுடு
Yes, No, Cancel = இப்போ இன்னா சொல்லுற நீ?
General protection fault = காலி
Access denied = கை வச்ச... கீச்சுடுவேன்!
Unrecoverable error = படா பேஜார்பா
Operation illegal = பேமானி சாவு கராக்கி கஸ்மாலம்
Windows 98 = இதாமெ ஜன்னல் தொன்னித்தி எட்டு

4,கவுண்டமணி,செந்தில் ஆரம்பிக்கும் ப்ளாக்

கவுண்டமணி ஒரு ப்ளாக் ஆரம்பித்து எழுதி வருகிறார்.அதை எப்படியோ கேள்விப்பட்டு கெடுக்க வருகிறார் செந்தில்.
செந்தில் - அண்ணே,அண்ணே என்ன செய்றீங்க ?
கவுண்டமணி - வட தட்டிக்கிட்டு இருக்கிறேன்..உனக்கு கொஞ்சம் வேணுமா ?
செந்தில் - அண்ணே விளையாடாதீங்க..
கவுண்டமணி - ஆமா,நீ எம் மாமம் பொண்ணு பாரு..புதுசா சமஞ்சி இருக்க..உங்கிட்ட விளையாடிட்டாலும்..

செந்தில் - உங்க ப்ளாக் பேர சொல்லுங்க..
கவுண்டமணி - ஏன் வைரஸ் அனுப்பலாம்னு பாக்குறியாடா கொப்புரத் தலையா..
செந்தில் - இல்லண்ணே படிக்கத்தான்..
கவுண்டமணி - நீ வந்தாலே வைரஸ் வந்த மாதிரி தான்..என் ப்ளாக் பேரு ஆல்-இன்-ஆல்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
செந்தில் - அது என்ன இப்படி ஒரு பேரு..

கவுண்டமணி - அது பாரு மண்டையா.. நானே பதிவு போடுவேன்..நானே படிப்பேன்..ஹிட்ஸ் நானே ஏத்துவேன்..நானெ பின்னூட்டம் போடுவேன்..நானே ஃபாலோயர் ஆகுவேன்..எல்லாம் நானே..
செந்தில் - அழகுராஜாவ ஏன் போடல..

கவுண்டமணி - ஏன் உன்ன மாதிரி பன்னிங்க வந்து நீ அழகுராஜாவா இல்ல..அழுக்குராஜாவா.. கேட்க ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நினைக்கிறியா..அப்படி ஒரு ஆசை இருந்தா அழிச்சிரு..
செந்தில் - அப்ப யாரும் படிக்க மாட்டாங்களா..
கவுண்டமணி - தெரியுதுல அப்புறம் என்ன கேள்வி..ஒரு நக்கலான சிரிப்பு வேற..பேச்சப் பாரு..லொள்ளப் பாரு..பழமையப் பாரு..

கவுண்டமணி செந்தில் எட்டி இரண்டு மிதி மிதிக்கிறார்.

செந்தில் - எனக்கும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கனும்..நீங்கதான் அதையும் செய்ய்யணும்..
கவுண்டமணி - என்ன பேரு வைக்கணும்..மண்டையன்.ப்ளாக்ஸ்பாட்.காம் இது ஒகேவா..
செந்தில் - அண்ணே வேணாமுண்ணே..வேற ஏதாவது பேரு..இப்படி வைங்க..புய்பம்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி - அது புய்பம் இல்ல..புஷ்பம்..எங்க சொல்லு பாப்போம்..
செந்தில் - புய்பம்..

கவுண்டமணி - கோவத்த கிளப்பாம போயிரு..
செந்தில் - சரி விடுங்க..இந்த பேரு எப்படி இருக்கு பாருங்க..மேண்டில்.ப்ளாக்ஸ்பாட்.காம்..
கவுண்டமணி - அன்னைக்கும் இப்படிதான் மேண்டில உடச்ச..இன்னைக்கும் சிஸ்டத்த உடைக்கலாம்னு ஐடியாவா..மவனே பிச்சிருவேன் பிச்சி..

கவுண்டமணி சிஸ்டத்தைப் பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு ஒண்ணுக்கு போகிறார்.செந்தில் பலான படங்களை ஒரு பதிவாகப் போட்டு விடுகிறார்.கவுண்டமணி வந்து பார்க்க ப்ளாகில் அலைமோதும் கூட்டத்தைக் கண்டு துள்ளிக் குதிக்கிறார்.

கவுண்டமணி - டேய் எல்லாம் நீ வந்த ராசிடா மண்டையா..கூட்டம் அம்முது..

கவுண்டமணியைத் தேடி ஒரு கூட்டம் வருகிறது.

கூட்டதில் ஒருவன் - நீங்கதான் ஆல்-இன்-ஆல் ப்ளாக் ஒனரா ?
கவுண்டமணி - ஆமா..நான் அப்படி ஒன்னும் சாதனை பண்ணல..எனக்கு விருது எல்லாம் வேண்டாம்..

கூட்டம் - எங்க பொண்ணுங்க படத்தையெல்லாம் போட்டு அசிங்கப்படுதிட்டு விருது வேற வேணுமா உனக்கு..அடிங்கடா இவன..

தர்மயடி அடித்து விட்டு போகும் போது (கோரஸாக) இனிமே ஒரு பதிவு போட்டா உனக்கு அடுத்தப் பதிவு போட கை இருக்காது..
(செந்திலைக் காட்டி) அந்த பையன் மாதிரி நல்லவனா இரு..

கவுண்டமணி (மனதுக்குள்) - இவனுக்கு எப்படியாவது ஆப்பு வைக்கனும்..

சிஸ்டம் இருக்கும் மேஜையில் கண்ணில் படுமாறு ஒரு உண்டியல் போல இருக்கும் வெடியை வைக்கிறார்.செந்தில் அதை லவட்டி விடுகிறார்.கொஞ்ச நேரம் கழித்து..

செந்தில் - அண்ணே,அண்ணே..
கவுண்டமணி - என்னடா இங்க என்ன பண்ற..
செந்தில் - என்னை மன்னிச்சிடுங்க..நான் உங்க வீட்டில திருடிட்டேன்..
கவுண்டமணி - நீ எப்பவும் பண்றதுதானே..புதுசா என்ன மன்னிப்பு..பரவாயில்ல அது உங்கிட்டையே இருக்கட்டும்..
செந்தில் - மனசு கேட்கல..அதான் எடுத்த இடத்துலயே வைச்சுடேன்..

சொல்லிமுடிக்கும் சமயம் உள்ளே எல்லாம் வெடித்து சிதறுகிறது.

கவுண்டமணி (அதிர்ச்சி விலகாமல்) - சரி வா எல்லாம் போச்சு..தலை முழுகிட்டு வருவோம்..
குளத்திற்கு வந்தவுடன்..

கவுண்டமணி - உனக்கு நீச்சல் தெரியுமா..
செந்தில் - தெரியாது..எனக்கு சொல்லித் தர முடியுமா..

கவுண்டமணி எட்டி உதைத்து தண்ணீரில் செந்திலைத் தள்ளி விடுகிறார்.

செந்தில் - அண்ணே..எனக்கு நீச்சல் தெரியாது..காப்பாத்துங்க..
கவுண்டமணி - அப்படியே போ..நடுகடல்ல உங்க தாத்தா பதிவு எழுதிகிட்டு இருப்பார்..உங்க அப்பன் உன் வாய் மாதிரி இருக்கும் பின்னூட்டப் பெட்டியில் பின்னூட்டம் போட்டுகிட்டு இருப்பான்..நீ போய் ஃபாலோயரா சேர்ந்திரு..அந்த பரதேசி பசங்க என்னை அடிச்சது கூட வருத்தம் இல்ல..உன்னப் போய் நல்லவன்னு சொல்லிடாங்க..அதான் என்னால தாங்க முடியல..ஐயோ அம்மா..

மேலும் படிக்க...Read more...

வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா?

>> Saturday, September 5, 2009

வீட்ல ப்ளாஸ்டிக் பொருள் இருக்கா? - உடனே இத படிங்க.. வீட்ல குட்டீஸ் இருக்கவங்களும் படிங்க...

இன்றைய சூழலில் ப்ளாஸ்டிக் என்பது நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. இந்த ப்ளாஸ்டிக் என்னும் அரக்கனை பற்றி பலர் ஏற்கனவே எழுதி படித்திருப்பீர்கள் எனவே அதையே திருப்பி எழுதி போரடிக்க விரும்பவில்லை.

இவ்வாறாக தவிர்க்க முடியாத ப்ளாஸ்டிக்கின் கெடுதல் பற்றி பல விஷயங்கள் இருந்தாலும் மிக முக்கியமானது


**புற்றுநேயை வரவழைக்க கூடியது.
**மரபணு குறைபாட்டை தோற்றுவிக்க கூடியது
**ஆண்மை/பெண்மை குறைபாடு
**உடல் பருமன்.

சில வருடங்களுக்கு முன் குழந்தைகளுக்கான பால் பாட்டிலை சோதித்ததில் அதில் வெளிப்படும் BPA (Bisphenol A) என்னும் கெமிக்கல்


பிறப்புறுப்பின் வளர்ச்சியினை பாதிக்குமாம் (ஆஆஆவ்வ்வ்வ்வ்வ்).

எனவே உங்கள் குழந்தைக்கான பால் பாட்டில் வாங்கும் போது BPA Free என்று போடப்பட்ட பாட்டிலாக வாங்குங்கள்.

நம் வீட்டில் நிறைய ப்ளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் ஆனால் ப்ளாஸ்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது. (இப்ப என்னதான் சொல்ற?).

பெரும்பாலான ப்ளாஸ்டிக் தயாரிப்புகளில் அதன் ஒரிஜினல் பெயர் சொல்லப்படுவதில்லை (சொன்னாலும் ஞாபகம் இருக்காது). இதனை சுலபமாக அறிய என்ன வழி?


ப்ளாஸ்டிக்கிற்கும் ரீ-சைக்கிள் (மறுசுழர்ச்சி) முறையில் உருக்கி மறு பயன்பாட்டிற்காக பிரித்தறிய ஒரு எண் கொடுப்பார்கள். அதாவது ஒரே விதமான ப்ளாஸ்டிக்கெல்லாம் ஒன்றாக உருக்கி மறு உபயோகத்திற்கு பயன்படுத்துவார்கள். எந்த ஒரு டப்பா அல்லது பாட்டிலின் அடியிலும் இந்த எண்ணை குறிப்பிட்டு இருப்பார்கள்.

இந்த எண்ணை வைத்து என்ன விதமான ப்ளாஸ்டிக் மேலும் எதற்க்காக உபயோகப்படுத்தலாம் என அறியலாம். ( மேட்டருக்கு வா)



எண் 1 - PET

இது பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் குளிர்பானம், தண்ணீர் எல்லா பாட்டிலும் PET எனப்படும் இந்த வகை ப்ளாஸ்டிக்கினால் ஆனதுதான்.

இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை

எண் 2 – HDPE (High density Poly ethylene)

பைகள், தண்ணீர் பிடிக்கும் டப்பா, ஷாம்பூ ட்ப்பா... போன்றவற்றிற்கு உபயோகப்படுகிறது

இதுவரை எந்த தீங்கும் கண்டுபிடிக்கபடவில்லை

எண் 3 – PVC ( Poly vinyl chloride)

க்ளீனிங் பவுடர் டப்பா, உணவு பேக் செய்யப்படும் பொருள், பைப்புகள், ..........

உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்க கூடியது. Dioxin போன்ற பல நச்சு வாயுக்களை வெளிப்படுத்த கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்க கூடாது.

எண் 4 – LDPE ( Low Density poly ethylene)

இந்த எண் உடைய ப்ளாஸ்டிக்குகள் ப்ரிஜ்ஜில் ( ப்ரீஸரில்) உபயோகப்படுத்த ஏற்றது. மற்ற ப்ளாஸ்டிக் வகையில் நச்சு வாயுக்கள் வெளியேறும் வாய்ப்பு உண்டு.

இல்லத்தரசிகள் கவனிக்க.....

எண் 5 – Poly propylene



குழந்தைகளுக்கான பாட்டில், சூடான பொருட்கள் வைக்க, மற்ற பொதுவான உணவு பண்டங்கள் வைக்க ஏற்றது. மைக்ரோ வேவிலும் உபயோக படுத்தலாம்.

எண் 6 – Polystyrene

உணவுப் பொருட்கள் வைக்க ஏற்றது அல்ல
எண் 7 – Others

குறிப்பிட்டு வகைப்படுத்த முடியாது. ஆனாலும் உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை.

எதுவானாலும் என்னை பொருத்தவரை ப்ளாஸ்டிக் உணவு விஷயத்தில் நீண்ட நாள் உபயோகம் ஆபத்தே!.

ப்ளாஸ்டிக் உபயோகத்தை குறைப்போம்... நம் குழந்தைகளுக்கு நல்ல உலகை விட்டு செல்வோம்!

மேலும் படிக்க...Read more...

அட்டகாசமான ஒரு "தண்ணீர் நடனம்"

>> Thursday, September 3, 2009

உலகிலேயே பெரிய இசை நீர் ஊற்றின் அட்டகாசமான ஒரு "தண்ணீர் நடனம்" - துபாயிலிருந்து நச்சுன்னு ஒரு வீடியோ...



விடியோ திரையின் அடியில் வலது பக்க மூலையில் தோன்றும் வெள்ளை கட்டம் உள்ளடங்கிய கருப்பு கட்டத்தின் மேல் க்ளிக் செய்து முழுத்திரையில் காணலாம்.

மேலும் படிக்க...Read more...

About This Blog

COME AGAIN

ISLAM HISTORY

Search This Blog

இளையாங்குடியர்களுக்காக‌ இளையான்குடியின் வெளிச்சம்.

Lorem Ipsum

COME AGAIN

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி தொடக்கம்.

இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்.




Animated avatar.



"இளையாங்குடி கல்லூரி தந்தை"



மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.








"கல்லூரி வருகிறது" என்று பறை அடித்தவர்கள், 'நானாச்சு' கல்லூரியை அரசு கொடுத்த கெடுவுக்குள் கட்டித்தருகிறேன் என்றவர், மற்றும் பல உண்மையான உழைப்பையும் நிலத்தையும் தானமாக கொடுத்தவர்கள் ஊதியம் பெறாத இவர்களின் வாரிசுகளுக்கு







இளையாங்குடியில் கல்லூரி உருவாக வேண்டும் என்ற எண்ணத்தை எப்படி யார் யார் வித்திட்ட‌வ‌ர்கள் என்ப‌து விள‌ங்கும்



உண்மை விளங்கும்.





.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP