- அறிமுகம்
- நுழையும் முன்
- துவக்கம்
- ஸலாவுத்தீன் வரலாறு 1
- ஸலாவுத்தீன் வரலாறு 2
- ஸலாவுத்தீன் வரலாறு 3
- ஸலாவுத்தீன் வரலாறு 4
- ஸலாவுத்தீன் வரலாறு 5
- ஸலாவுத்தீன் வரலாறு 6
- ஸலாவுத்தீன் வரலாறு 7
- ஸலாவுத்தீன் வரலாறு 8
- ஸலாவுத்தீன் வரலாறு 9
- ஸலாவுத்தின் வரலாறு 10
- ஸலாவுத்தீன் வரலாறு 11
- ஸலாவுத்தீன் வரலாறு 12
- ஸலாவுத்தீன் வரலாறு 13
- அடிமைகள் வரலாறு 1
- அடிமைகள் வரலாறு 2
- அடிமைகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 1
- உமய்யாத்கள் வரலாறு 2
- உமய்யாதகள் வரலாறு 3
- உமய்யாத்கள் வரலாறு 4
- அப்பாஸிட்கள் வரலாறு 1
- அப்பாஸிட்கள் வரலாறு 2
- அப்பாஸிட்கள் வரலாறு 3
- அப்பாஸிட்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 1
- மங்கோலியர்கள் வரலாறு 2
- மங்கோலியர்கள் வரலாறு 3
- மங்கோலியர்கள் வரலாறு 4
- மங்கோலியர்கள் வரலாறு 5
- மங்கோலியர்கள் வரலாறு 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 1
- செல்ஜுக்குகள் சரித்திரம் 2
- செல்ஜுக்குகள் சரித்திரம் 3
- செல்ஜுக்குகள் சரித்திரம் 4
- செல்ஜுக்குகள் சரித்திரம் 5
- செல்ஜுக்குகள் சரித்திரம் 6
- செல்ஜுக்குகள் சரித்திரம் 7
- ஓட்டோமான்கள் வரலாறு 1
- ஓட்டோமான்கள் வரலாறு 2
- ஓட்டோமான்கள் வரலாறு 3
- ஓட்டோமான்கள் வரலாறு 4
- ஓட்டோமான்கள் வரலாறு 5
- ஓட்டோமான்கள் வரலாறு 6
- ஓட்டோமான்கள் வரலாறு 7
- ஓட்டோமான்கள் வரலாறு 8
- ஓட்டோமான்கள் வரலாறு 9
- ஓட்டோமான்கள் வரலாறு 10
- ஓட்டோமான்கள் வரலாறு 11
- மம்லுக்குகள் வரலாறு
இளையான்குடி கல்லூரி ஆசிரியர் சேர்க்கையில் நன்கொடை!
>> Friday, July 24, 2009
கல்லூரி ஆசிரியர் சேர்க்கையில் நன்கொடை!
க்ளிக் செய்து படிக்கவும்.
கல்லூரி ஆசிரியர் சேர்க்கையில் நன்கொடை!
I.N.P. ஜமாஅத் நிர்வாக ஆட்சி குழு அமைப்பு அராஜகவாதிகளின் சாதனமா?
>> Sunday, July 19, 2009
ஒற்றை ஒரு ஜமாத்தினரின் தீய பழக்க வழக்கத்தை கண்டிக்க, தீய வ்ழியில் சம்பாதிபபதை நிறுத்த அறிவுரை கூற , வட்டி வாங்குவதை தடுக்க, சீதனம் கொடுக்கல் வாங்கலை நிறுத்த, குடும்ப பிரச்சினைகளில் மார்க்க வழியிலான தீர்வு காண, வறுமையில் பசியிலும் பிணியிலும் வாடுவோர்க்கு உதவி செய்திட முயன்று இருக்கிறதா?
2.திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
ஏழை,எளியவர்கள் இவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக தர்மங்களை முறைப்படுத்துதல்.
இவைகளெல்லாம் நமக்கு ஆகாத காரியங்களாக எண்ணிவிடீர்களோ?
திருமண முடிக்கும் காலத்தில் ஏழை எளியவன் என்று பாராமல் கொடுக்கப்படுவதை வாங்கி உண்டு தின்று விட்டு பணமும் வாங்கிக்கொண்டு பதிவு செய்பவர்களே. !!
அரை வயிற்று உணவுக்கே அல்லாடி தன் பெண்பிள்ளைகளுக்கு திருமண காலத்தில் சற்றேனும் இரக்கம் இன்றி பிச்சை எடுத்தேனும் லட்சக்கணக்கில் தா என்று ஆண்பிள்ளைகளின் குடும்பத்தார் வாட்டி வதைக்கும் காலத்தில் உங்களை அனுகினால்
பெண்ணை பெற்றவர்களுக்கு சீதனத்துக்காக பிச்சை எடுக்க உதவ அத்தாட்சி பத்திரம் கொடுத்துதவுவர்களே !!
ஏதோ ஒரு வழியில் பொறுப்பில் அமர்ந்துவிடோம் என்ற நிலையில் கணக்கு கேட்ட ஜமாத்தினரை "ஷைத்தான்கள்" என பட்டம் சூட்டி அவர்களை எப்படியாவது சிறையிலடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கெதிராக பல பக்கங்கள் கொண்ட அறிக்கை தயார் செய்து முழுதும் படித்து பார்க்க விடாமல் அப்பாவிகளிடம் தந்திரமாக கையெழுத்து வாங்கும் அவுலியாக்களே!!!
உங்கள் விருப்பபடி கையெழுத்து இடாதவர்களையும் கலியாண பதிவு புத்தகம் தர மறுப்போம் , ஜனாசாவுக்கு சந்தாக்கும் தர மறுப்பபோம் மையத்துக்கொல்லையில் புதைக்க மறுப்போம் என அச்சுறுத்துவீர்களோ.!!!.
நீங்களே அவுலியாக்களாக இருப்பதில் மகிழ்ச்சியே. இன்சானியத்தை குறைந்த பட்சமாகவாவது ஜமாத்தினரிடம் காட்டலாமே?
மடியில் கனமில்லாதோர்க்கு வழியிலும் பயமில்லை. கணக்கு கேட்பவர்கள் மீது கோபமும் குரோதமும் வளரலாமோ ? அனைத்து ஜமாத்தினரிடமும் வளர்க்கலாமோ?
ஐ.என்.பி. பள்ளியை வக்பு போர்டு தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது ஏன்?
தவறு யார் பேரில்?
வக்ஃபு போர்டு துணை ராணுவ படையுடன் உதவியுடனா I.N.P. பள்ளியை கையகப்படுத்தியது?
வக்பு போர்டு பள்ளிகளை ஜமாத்தினரிடமிருந்து தட்டி பறிக்கும் ஸ்தாபனம் இல்லை. பள்ளிவாயில் நிர்வாகம் முறையாக செயல்படுகிறதா என்பதை கண்காணித்து பள்ளிவாயில் நிர்வாக தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டோ சுட்டிக்காண்பிக்கப்பட்டோ இருந்தால்
அவைகளுக்கு விளக்கம் கேட்டு தவறுகளை திருத்த சொல்லி நிறைவேற்ற தவறும் பட்சத்தில் எச்சரிக்கை செய்து அதுவும் மீறப்பட்டால் மட்டுமே வக்பு போர்டு அப்பள்ளியை தன் மேற்பார்வையில் எடுத்துக்கோள்ளுகிறது .
வக்பு போர்டுக்கு வருடாவருடம் ஒழுங்காக கணக்கு சமர்ப்பிப்பதில் தயக்கம் ஏன்?
கணக்குகள் மற்றும் சில கேள்விகளும் உங்களிடம் கேட்டு வக்பு கேட்டது , தவணையும் தந்ததே?
வக்ப் வாரியம் முன்னால் நிர்வாகிகளுக்கு குடுத்த காரண கேட்பு தாக்கீது ....
க்ளிக் செய்து படிக்கவும்.
க்ளிக் செய்து படிக்கவும்.
நமதூரில் உள்ள மற்ற ஜமாத் பள்ளிகளுக்கெல்லாம் கிட்டாத இப்பாக்கியத்தை எப்படி ஐயா பெற்றீர்கள்?
வக்பு போர்டு கையிலிருந்து நீங்கள் காப்பாற்றிவிட்டதாக பறை சாற்றும் I.N.P மெட்ரிக் பள்ளியின் வருடாவருடமாய் புதுப்பிக்க வேண்டிய அரசு அங்கீகாரத்தை 2006 லிருந்து புதிக்கப்படாமல் I.N.P. பள்ளியை சட்ட விரோத பள்ளிகளின் நிலைக்கு கொண்டு வந்துவிட்ட அவுலியாக்களே!!!
2006 ல் இருந்து அரசு அங்கீகாரம் வாங்கவில்லையாம், கூறுகிறார்கள் அரசு அதிகாரிகள்,
க்ளிக் செய்து படிக்கவும்.
மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளரின் செயல்முறைகள், மதுரை
பதில் கிடைக்குமா?
*********************
2..திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்.
CLICK TO READ.
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் மேலும் படிக்க...Read more...
இப்படியுமா இளையாங்குடியில் கல்வி ஸ்தாபனங்களில்?
>> Friday, July 17, 2009
********************
க்ளிக் செய்து படிக்கவும்
1.ஒர் பள்ளிக் கூடத்தின் புலம்பல்
2.வாத்தியார் வேலையில் சேர 'சம்திங்'! ஆனால் சம்பளம் 'நத்திங்'
இளையாங்குடி உயர்நிலை பள்ளியில் தலா ஒரு லட்சம் "நன்கொடை " வசூலிக்கப்பெற்று வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு ஒரிருவருடம் சம்பளமே பெறாமலும் பின்னாளில் பாதி சம்பளம் பெற்று வரும் சில ஏழை ஆசிரியைகள் இருந்து கொண்டு வருகிறார்கள் என்பது கண்கூடு.இளையாங்குடி உயர்நிலை பள்ளி நிர்வாகம் இதை மறுக்க முடியுமா?விளக்கம் கூறுமா?
***********************
3.கஷ்டமான காலங்களில் கூட இருந்ததில்லை இந்த அவலநிலை! கல்லூரியில் விரிவுரையாளர் பணியில் சேர 'சம்திங்" வாங்குவதை சாடுகிறார் முசாபர் அப்துர் ரஹ்மான்!!
4. இளையான்குடி கல்வி நிறுவனங்களில் நன்கொடை வசூலிப்பது பற்றிய செய்தியும், முகம்மது அலி அவர்களின் கருத்துக்களும்!
5. கல்லூரி நிர்வாகத்தில் திட்டமிட்டே மறைக்கப்படுகின்றதா ஐ.என்.பி. ஜமாத்தினரின் பங்களிப்புகள்?
6.கல்லூரியின் ஆயுள்கால உறுப்பினர் படிவம் வழங்குவதில் பாரபட்சம் - பகீர் குற்றச்சாட்டு!.
7.கலகல கல்லூரி தேர்தல்! அது காஸ்ட்லி தேர்தல்!!
8.05/08/08 அன்று இளையான்குடியில் நடந்ததென்ன???
9.08/08/08,ல் இளையான்குடியில் கல்லூரிக்கு நேர்ந்த கதி
10.இளை.டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி சிறுபான்மை (MINORITY) அந்தஸ்து பெற்றுள்ளதா ?
இளையாங்குடி I.N.P.T. மெட்ரிக் பள்ளி பற்றிய அதிர்ச்சி தகவல்.
V.N. முஹம்மது மைதீன் – குடும்பத்தினர் .பள்ளிவாசல் வக்ஃப்.
>> Wednesday, July 15, 2009
****************************
CLICK TO ENLARGE
தேனி மாவட்டத்தை சேர்ந்த போடி மீனாட்சிபுரத்தில் வாழும் முஸ்லீம்கள் தாங்கள் தொழுவதற்கு சொந்த தனி பள்ளிவாசல் இல்லாமல் வாடகைக்கு இடம் பிடித்து தொழுது வருகிறார்கள் என்பதை அறிந்து



அங்கு 32 சென்ட் நிலம் கிரையம் செய்து பள்ளிவாயில் கட்டி வக்ஃப் செய்யும் நமது இளையாங்குடி
வாவணன் V.N.. முஹம்மது மைதீன் - குடும்பம்.
இறையவனின் நல்லேட்டிலும் பதிவு பெற்று இளையான்குடியர்களுக்கும் பெறுமை கூட்டும் அவர்களின் இந்த மாபெறும் நற்செயலை நாம் மனாதார வாழ்த்துகிறோம்.
WEB TEAM OF ILYANGUDI KURAL
************************************
With the grace of Allah, Masjid Al Noor was formally inaugurated on 19th July 2009 in a grand function organised by Forum for Social Justice at Bodi-Meenatchipuram, Theni Dist.
Approximately around 1500 people participated in this function from various parts and surrounding villages. From Ilayangudi approx. 70 people participated including VAVANAN KABEER’s relatives.
CLICK
பள்ளிவாயில் திறப்பு விழா படங்கள்.
தகவல்கள்
>> Friday, July 10, 2009
1.கட்டாய திருமண பதிவு-இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள்.
2.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
3.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?
4.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)?
5..அழகிற்காக திருமணம் செய்யாதீர்.
6.பாப் அப் வழி தூண்டில்கள்.
7.பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்.
கட்டாய திருமண பதிவு-இஸ்லாமிய அமைப்புகள் வேண்டுகோள்.
சென்னை: தமிழ்நாட்டில் திருமணங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதாவை மறு பரிசீலனைக்கு உட்படுத்தி சிறுபான்மையினரி்ன் ஐயப்பாட்டை தமிழக அரசு போக்க வேண்டும் என முதல்வர் கருணாநிதிக்கு முஸ்லிம் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வதற்கு வகை செய்யும் சட்ட முன்வடிவு தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்தது. கூட்டத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் கவிக்கோ அப்துர் ரஹ்மான் தலைமை தாங்கினார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலாளர் கே.எம். காதர் மொகிதீன், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம். அப்துல் வஹாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
தமிழக அரசின் திருமண கட்டாயப்பதிவு மசோதா, அனைத்து திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நன்னோக்கத்தில் வரைவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக முஸ்லிம்கள் மத்தியில் காலங்காலமாக திருமணங்களை பதிவு செய்யும் மரபை மஹல்லா ஜமாஅத் மற்றும் காஜிகள் மூலம் பின்பற்றி வருகிறது.
தமிழக அரசின் திருமணப் பதிவு மசோதாவில் முஸ்லிம் தனியார் சட்டப்படி நடைபெறும் திருமணப் பதிவுகளையும் மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்னும் நிலை எடுக்கப்பட்டிருக்கிறது.
முஸ்லிம் தனியார் சட்டத்தை பொது சிவில் சட்டத்துடன் இணைக்கும் விதத்தில் இது அமைந்து விடுமோ என்னும் ஐயப்பாடு சமுதாயத்தில் எழுந்திருக்கிறது.
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் இந்திய அளவில் ஒரே விதமான சிவில் சட்டம் கொண்டு வரும் எந்த முயற்சியையும் தடுத்து நிறுத்த திமுக பாடுபடும் என்று முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
அந்த நிலைபாட்டை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசின் இந்த மசோதாவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தி, சிறுபான்மை முஸ்லிம்களின் ஐயப்பாட்டை நீக்கும் வகையில் வேண்டிய திருத்தங்களை செய்து, பின்னர் நிறைவேற்ற வேண்டும் என இக் கூட்டம் முதல்வரைக் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
SEE VIDEO CLICK---> 6) "நச்."கேள்வி.முஸ்லிம்கள் வரதட்சணை வாங்கலாமா?
SEE VIDEO CLICK---> 5.)”நச்”.முஸ்லீம்களே எந்த காரணமும் இன்றி தலாக் சொல்லுகிறீர்களே?ஜீவனாம்சம் உண்டா?
SEE VIDEO CLICK ---> 4.“நச்” கேள்வி.முஸ்லீம்களே உங்களுக்கு மட்டும் ஏன் தனி சட்டம் (CIVIL LAW)?
அழகிற்காக திருமணம் செய்யாதீர்.
"நான்கு விஷயங்களுக்காக பெண் மணமுடிக்கப்படுகின்றாள். அவளுடைய செல்வத்திற்காக, அவளுடைய குலச்சிறப்புக்காக, அவளுடைய அழகுக்காக, அவளுடைய மார்க்கப் பற்றுக்காக! நீர் மார்க்கப்பற்றுடைய மங்கையையே அடைந்து கொள்ளும்; உமக்கு நலம் உண்டாகட்டும்,'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன்படி, ஒரு பெண்ணிடம் நான்கு குணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
சிலர் அவள் செல்வம் உடையவளா என்று கவனிக்கிறார்கள்.
ஒரு சிலர் அவள் நல்ல குடும்பத்தில் பிறந்தவளா எனக் கவனிக்கிறார்கள். ஒரு சிலர் அழகிற்காகவே திருமணம் செய்கிறார்கள்.இன்னும் சிலர்தான் மார்க்கப்பற்றைப் பார்க்கிறார்கள்.
""ஒரு பெண்ணிடம் பார்க்க வேண்டிய உண்மையான தகுதி, அவளுடைய மார்க்கப் பற்றும், இறையச்சமுமே ஆகும்.
இதனுடன் மற்ற சிறப்புகளும், தகுதிகளும் ஒன்று சேர்ந்துவிட்டால் அதுவும் நன்றே!
எனினும், மார்க்கப்பற்றை பார்க்காமல் புறக்கணித்துவிடுவதும், செல்வத்தையும், அழகையும் மட்டும் பார்த்து மணமுடிப்பதும் ஒரு முஸ்லிமின் செயலன்று,'' என்றும் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள்.
இதுபற்றி அவர்கள் மேலும் கூறும்போது, ""பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் முடிக்காதீர்கள். அவர்களுடைய அழகு, அவர்களை அழித்துவிடக் கூடும்.
பெண்களை செல்வந்தர்கள் என்பதற்காக மணமுடிக்காதீர்கள்; அவர்களுடைய செல்வம் வரம்பு மீறுவதிலும், அடங்காப்பிடாரித்தனத்திலும் அவர்களை ஆழ்த்திவிடக் கூடும்.
மாறாக, மார்க்கப்பற்றின் அடிப்படையில் அவர்களை மணமுடித்துக் கொள்ளுங்கள். மார்க்கப்பற்று கொண்ட கறுப்பு நிற அடிமை பெண், அல்லாஹ்வின் பார்வையில் வெண்ணிறமுடையவள். மார்க்கப்பற்றில்லாத குடும்பப் பெண்ணைவிட சிறந்தவள் ஆவாள்,'' என்றும் சொல்கிறார்கள்.
பாப் அப் வழி தூண்டில்கள்.
இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் கம்ப்யூட்டர் இன்பெக்ட் ஆகிவிட்டதாகவும், கம்ப்யூட்டர் மிகவும் ஸ்லோவாக செயல்படுவதாகவும் மெசேஜ் பாப் அப் செய்யப்பட்டு அதற்கு இலவச தீர்வு வேண்டும் என்றால் கிளிக் செய்யவும் என ஒரு லிங்க் அல்லது சிகப்பு கலரில் எக்ஸ் அடையாளம் தரப்படுகிறது. இது உண்மையா? என்ன செய்ய வேண்டும்?
சற்று விரிவாக இந்த பிரச்சினையை இங்கு காணலாம்.
கம்ப்யூட்டர் பயன்படுத்தும்போது வரும் இத்தகைய தூண்டில் செய்திகள் குறித்து பொதுவாக அனைவருமே அறிந்து வைத்துள்ளனர். அதற்கேற்ப இப்போது ஏமாற்றும் விதமும் அதிகரித்து வருகிறது.
இந்த செய்திகளைக் கவனித்தால் அவற்றை அனுப்புபவரின் தந்திரம் தெரியவரும்
1. நாம் உடனடியாகச் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம் மற்றும் அவசரம் என்ற தொனியில் நம்மை எச்சரிக்கும் விதமாக இந்த செய்தி அமைக்கப்பட்டிருக்கும்.
வைரஸை எடுக்க வேண்டும்; உடனடியாக அப்டேட் ஒன்றை மேற்கொள்ள வேண்டும்; இல்லையேல் கம்ப்யூட்டர் நாசமாகிவிடும் என நம்மை பயம் அடைய வைக்கும் விதமாக இது அமைந்திருக்கும்.
2. பல வேளைகளில் இந்த செய்தி ஓரு பிரபலாமான நிறுவனம் (மைக்ரோசாப்ட், நார்டன், சைமாண்டெக், அடோப், குயிக் டைம் போன்றவை) ஒன்றின் பெயரில் தரப்படும்.
இது ஒரு ஏமாற்று வேலை. இந்த செய்தியை நன்றாக உற்றுக் கவனித்தால் பல எழுத்துப் பிழைகள் மற்றும் இலக்கண பிழைகள் இருக்கும். புகழ் பெற்ற நிறுவனங்கள் நிச்சயம் இந்த வகை பிழைகளுடன் செய்திகளைத் தர மாட்டார்கள்.
இவை டவுண்லோட் செய்திடச் சொல்லும் புரோகிராமின் பெயர் அல்லது விசிட் செய்யச் சொல்லும் வெப்சைட்டின் முகவரியினை காப்பி செய்து கூகுள் சர்ச் இஞ்சினில் போட்டுப் பார்த்தால் இவை உண்மையா என்பது தெரியவரும்.
எனவே இது போன்ற மெசேஜ் பாப் அப் ஆகி வருகையில் என்ன செய்திட வேண்டும்? 1. உங்கள் மவுஸின் கர்சரை எந்தக் காரணத்தைக் கொண்டும் லிங்க் அருகே கொண்டு செல்ல வேண்டாம்.
2. விண்டோவின் எந்த இடத்திலும் மவுஸைக் கிளிக் செய்திட வேண்டாம். செய்தால் உடனே நம்மைக் கவிழ்க்கும் புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் டவுண்லோட் ஆகத் தொடங்கும்.
3. உடனடியாக ஆல்ட்+எப்4 கீகளை அழுத்துங்கள். அந்த விண்டோ அல்லது பிரவுசர் மூடப்படும். பின் மீண்டும் உங்கள் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுஸ் செய்திடலாம்.
அல்லது கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும்.
1.விண்டோஸ் டாஸ்க் மேனேஜரைத் திறக்கவும். இதற்கு Ctrl+Alt+Del கீகளை அழுத்தவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Applications டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.
3. உங்கள் பிரவுசர் புரோகிராம் மீது இடது கிளிக் செய்திடவும்; அல்லது நீங்கள் பிரச்சினை என்று முடிவு செய்திடும் புரோகிராம் மீது கிளிக் செய்திடவும். இந்த புரோகிராம் ஹைலைட் ஆகும். பெரும்பாலும் இது நீல நிறத்திற்குச் செல்லும்.
4. அடுத்து End Task பட்டனில் கிளிக் செய்திடவும். புரோகிராம் மூடப்படும்.
உங்கள் கம்ப்யூட்டரில் பயர்வால் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் எப்போதும் அப் டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். மேலும் உங்கள் பிரவுசரில் இது போன்ற பாப் அப் விண்டோக்கள் வராதவாறு தடை செய்திடும் வசதி இருக்கும். அதனை இயக்கி வைக்க வேண்டும்.
இது போல பிரவுசரில் பாப் அப் தடை செய்யப்பட்டிருந்தாலும் இயங்கும்படி இந்த கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் செட் செய்யப்பட்டிருக்கலாம். எனவே பிரவுசரில் தடை செய்யப்பட்ட பின் வரும் பாப் அப் செய்திகள் எல்லாம் உண்மையானவை என்று எண்ண வேண்டாம்.
பிளாஸ்டிக் எமன் - சில அதிர்ச்சிகர உண்மைகள்
- ஒரு பிளாஸ்டிக் பையின் சராசரி பயன்படும் நேரம் வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே. ஆனால் அது மக்குவதற்கு ஆகும் காலமோ நூற்றுக்கணக்கான ஆண்டுகள். வகையைப் பொருத்து இந்தக் காலம் மாறுபடும்.
- கடலில் மிதந்து கொண்டிருக்கும் கழிவுகளில் 90 சதவீதம் பிளாஸ்டிக்கே-
தற்போது உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் வெறும் 7 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. அதாவது மறுபடி பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால், சென்னையில் ஒரு நாளில் மட்டும் கொட்டப்படும் கழிவு பிளாஸ்டிக்கின் அளவு 1,86,000 கிலோ.
சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் தனித்தனியாக ஒரு நாளைக்கு 2,00,000 கிலோ (200 முதல் 250 டன். டன் என்றால் ஆயிரம் கிலோ) பிளாஸ்டிக் கழிவை உருவாக்குகின்றன.
இதில் பாதி பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் 4 சதுர கிலோ மீட்டர் பரப்பை அடைத்துக் கொள்ளும் தன்மை கொண்டவை. அடிக்கடி வீட்டுச் சாக்கடை, தெருச் சாக்கடை, மழைக்காலங்களில் மழை நீர் வடிகால் குழாய் போன்றவை அடைத்துக் கொண்டு நாறுவதற்கும், வெள்ளக் காடாவதற்கும் இந்த பிளாஸ்டிக்கே காரணம்.
இப்படி அடைத்துக் கொள்வதால் கழிவுநீர் தேங்குகிறது. ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் கொசுக்கள், கிருமிகள் பல்கிப் பெருகி நோய் தாக்குவதற்கு நாமே வாய்ப்பு உருவாக்கித் தருகிறோம்.
நாம் அனைவரும் கவனக்குறைவாக வெளியேற்றும் கீழ்க்காணும் கழிவுகள்தான் நகராட்சி பிளாஸ்டிக் கழிவுகளில் 50 சதவீதத்தை உருவாக்குகின்றன.-
கேரி பேக்குகள்- காய்கறி கேரி பேக்குகள்- மளிகைப் பொருள் அடைக்கப்பட்ட பிளாஸ்டிக் பைகள்- பேக்கேஜிங் பைகள், சுருள்கள்- வீட்டு குப்பை பைகள்- வணிக குப்பை பைகள்- தொழிற்சாலை லைனர்கள்- மருத்துவ, ஹோட்டல்
குப்பை பைகள் மக்கிப் போவதற்கு ஆகும் காலம்
பிளாஸ்டிக் பைகள் 100-1000 ஆண்டுகள் வாழைப்பழத் தோல் - 2-10 நாட்கள்
பஞ்சுக் கழிவுகள் - 1-5 மாதங்கள்காகிதம் - 2-5 மாதங்கள் கயிறு - 3-14 மாதங்கள் ஆரஞ்சு தோல் - 6 மாதங்கள் உல்லன் சாக்ஸ் - 1-5 ஆண்டுகள்
டெட்ரா பேக்குகள் - 5 ஆண்டுகள்தோல் காலணி - 25-40 ஆண்டுகள் நைலான் துணி - 30-40 ஆண்டுகள் தகர கேன் - 50-100 ஆண்டுகள் அலுமினிய கேன் - 80-1000 ஆண்டுகள் பிளாஸ்டிக் ரிங்க்ஸ் - 450 ஆண்டுகள்
டயபர், நாப்கின் - 500-800 ஆண்டுகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் - எக்காலத்திலும் அழியாது
எனவே, பிளாஸ்டிக் கேரி பேக், பிளாஸ்டிக் பாட்டில்கள் போன்றவற்றை வாங்காதீர்கள்.
அந்தக் குப்பையை எந்த வகையிலும் உருமாற்றவோ, அழிக்கவோ முடியாது.
இன்னும் 10, 20 ஆண்டுகளில் உலகம் கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.
நமது முதுமைக் காலத்தை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
பிளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பதற்கு இதற்கு மேல் வலுவான காரணம் வேண்டுமா?
சுத்தமான, மாசுபாடற்ற சுற்றுச்சுழலைப் பெறுவது ஒவ்வொருவரது அடிப்படை உரிமைஅனைத்து மாற்றங்களும் நம் வீட்டிலிருந்து, நம்மிடமிருந்தே தொடங்குகின்றன நன்றி: ஆதி
வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா?
>> Wednesday, July 8, 2009
1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா? - சில முக்கியத் தகவல்கள்!
2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது?
3.பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன?
1. வீடு, நிலம் வாங்கப் போகிறீர்களா? - சில முக்கியத் தகவல்கள்!
“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” என்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல என்பதே அதன் தொனி.
வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
சென்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின் இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?
சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களேன்.நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம்.
ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?
வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்.
பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில் வரி செலுத்தி விடுவார்.
மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார்.
அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும்.
நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
2.அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது?
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் யாரிடம் புகார் கூறுவது என்பதை எழுதி வைக்க உத்தரவு
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் அதுபற்றி யாரிடம் புகார் கொடுக்க வேண்டும் என்பதை கொட்டை எழுத்துகளில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் எழுதி வைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், இந்த உத்தரவு பல அலுவலகங்களில் மீறப்பட்டு உள்ளது.
எப்படி உருவானது இந்தப் பழக்கம்?
மக்கள் ஒரு வேலையாக அரசு அலுவலகத்திற்கு போகிறார்கள். அங்கே கூட்டம் அதிகமாக இருந்தால், கொஞ்ச நேரம் பொறுமையாக இருந்து, வரிசையில் காத்திருந்து அந்த வேலையை முடித்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கமாட்டார்கள். அங்கிருக்கும் பியூனிடம் பணம் கொடுத்து வேலை வேகமாக முடிக்கப் பார்க்கிறார்கள்.
இப்படி சிலர் கொடுக்கும் பணம், பியூனுக்கு நூறு, ஆயிரமாக சேருகிறது. நிறைய பணம் வைத்திருப்பவர்கள் ஏற்படுத்திய இந்தப் பழக்கம், காசு, பணம் இல்லாதவர்களும் பணம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது.
அரசு அலுவலக பியூனில் இருந்து உயர் அதிகாரிகள் வரை லஞ்சம் வாங்குவது பரவலாகக் காணப்படுகிறது. தற்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக லஞ்சப் பேர்வழிகள் பிடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண் அதிகாரிகளைப் போல பெண் அதிகாரிகளும் பிடிபடுவதுதான் கொடுமையிலும் கொடுமை.
கிராம நிர்வாக அலுவலர், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரி, பத்திரப் பதிவு அதிகாரி, போலீஸ் அதிகாரிகள் என்று லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபட்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்
லஞ்சப் பேய் தலைவிரித்தாடுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களிடம் தீவிரமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளன. லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றும் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு டெலிபோன் செய்யுங்கள் என்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் எழுதி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஆனால், பல அலுவலகங்களில் அரசு உத்தரவு மீறப்பட்டுள்ளது. இந்த வாசகம் எழுதி வைக்கப்பட்டு உள்ள அலுவலகங்களில், கண்ணில்படாத இடத்தில் அதை வைத்துள்ளனர். இந்த வாசகத்தை, கொட்டை எழுத்துகளில் தெளிவாக எழுதி அனைவரது பார்வையில் படும்படி வைக்க வேண்டும்.
மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களோ அல்லது அதிகாரிகளோ லஞ்சம் கேட்டால் அதுகுறித்து சென்னை சாஸ்திரி பவனில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரெண்டிடம் 044&28273186, 28270942 என்ற டெலிபோன் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
98400 49224 என்ற செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். (குறுந்தகவல் சேவை) அனுப்பலாம்.
044&28213828 என்ற பேக்ஸ் மூலமும் புகார் செய்யலாம். புகார் தெரிவிப்பவரின் பெயர், முகவரி, போன் நம்பர் ஆகிய அனைத்தும் ரகசியமாக வைக்கப்படுகிறது.
எந்த எண்ணில் புகார் தெரிவிப்பது?
தமிழ்நாடு முழுவதும் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் யாராவது லஞ்சம் கேட்டால், சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் தலைமை அலுவலகத்தை 044&24615989, 24615949 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் ஒரு கெட்ட பழக்கமே லஞ்சம். இதற்கு ஒரு தரப்பினரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. தவறு என்பது ஒரு பாதியல்ல; சரிபாதி. லஞ்சம் வாங்குபவரை தண்டிப்பது போல லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பவர்களையும் கண்டுபிடித்து தண்டித்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
3. பாபர் மசூதி இடிப்பு- நியாயம் கிடைத்துப் பயன் என்ன?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் 17 ஆண்டுகள் கடந்து நியாயம் கிடைத்துப் பயன் என்ன? --எம்.ஜே.அக்பர்.
பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டதிலிருந்து ஏழு நாள்களுக்குள் அது பற்றிய முதல் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
டிசம்பர் 13 ஞாயிற்றுக் கிழமையன்று தனது நண்பர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்குத் தனது நண்பர்கள், மற்றும் சக அமைச்சர்கள் குழுவை அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் சரத்பவார் அழைத்தார். ஓர் அரசு அமைப்பினால், அது புலனாய்வுத் துறையாக இருக்கவேண்டும். பாபர் மசூதி இடிக்கப்பட்டது பற்றி முழுமையாக எடுக்கப்பட்ட வீடியோ படத்தை அவர் பார்த்தார்.
இந்தப் பழைய படச்சுருள்கள் அரசு ஆவணக் காப்பகத்தில் எங்கேயோ இன்னும் இருக்க வேண்டும். 6 ஆம் தேதி மாலை மசூதி இடிந்து விழுந்த நிகழ்ச்சி நடந்த அன்று நிகழ்ந்த தொடர் நிகழ்ச்சிகளைப் பற்றி இந்த படச்சுருளில் இருப்பதை விட அதிகமாக எந்த ஒரு விசாரணைக் கமிஷனாலும் தெரிவித்து விட முடியாது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியின் காரணங்களும் பொது ஆவணத்தில் பதிவு செய்யப்பட வேண்டியவையாகும். அத்வானி மேற்கொண்ட ரதயாத்திரை, திடீரென்றோ, ரகசியமாகவோ மேற்கொள்ளப்பட்டது அல்ல.
தனது அரசியல் செயல்திட்டத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்டவிரும்பிய அத்வானி திட்டமிட்டு பரவலான ஊடக விளம்பரத்தைப் பெற்றார்.
1989 இல் பொதுத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், ராமர் கோயில் கட்டுவதற்காக காங்கிரஸ் அடிக்கல் நாட்டியதிலும் எந்த ரகசியமும் இல்லை. நாடகக் காட்சி போன்று அப்போது நடைபெற்ற தேர்தலில், போஃபர்ஸ் பீரங்கி ஊழலுடன், பாபர் மசூதி-ராமர் கோயில் என்பதும் முக்கிய பிரச்சாரச் செய்திகளாக இருந்தன.
அண்மையில் வருண் காந்தி பேசியது போன்ற முஸ்லிம் எதிர்ப்புப் பேச்சுகள் 1989 ஆம் ஆண்டில் பா.ஜ.க. வினரால், உரத்த குரலில் பேசப்பட்டவை-தான்; ரகசியமாகவோ, தாழ்ந்த குரலிலோ பேசப்பட்டவை அல்ல.
தங்கள் கட்சிக்கு வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில், பாபர் மசூதி இருக்கும் அந்த இடத்திலேயே நாங்கள் ராமர் கோயில் கட்டுவோம். முஸ்லிம்களுக்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும்; இல்லாவிட்டால் கல்லறைக்குச் செல்ல நேரிடும் என்று பா.ஜ.க. வினர் எழுப்பிய வெறிக்கூச்சல் பேச்சுக்குப் பின்னர் தடை விதிக்கப்பட்டது.
அனைவரும் காணும்படி வெளிப்படையாக கலவரத்தை, வன்முறையை வெடித்துச் சிதற வைக்கக்கூடிய விளையாட்டுதான் ஜனநாயகம்.
இதில் விசாரணை செய்ய இன்னும் என்ன பாக்கி இருக்கிறது?
இந்த நீதி விசாரணைகளினால் செய்ய இயன்றதெல்லாம் அனைவருக்கும் தெரிந்த உண்மைகளின் மீது நீதித்துறையின் நடுநிலைமைத் தன்மை என்னும் முத்திரையைக் குத்துவதுதான்.
எனவே, 1992 டிசம்பர் 16 அன்று நியமிக்கப்பட்ட லிபரான் விசாரணைக் கமிஷன் தனது அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதில் வியப்பதற்கு ஏதும் இருக்கவில்லை.
விசாரணையை அவர் மேலும் 6 மாத காலத்திற்கோ, ஓராண்டு காலத்திற்குக் கூட நீட்டித்து இருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும். அதற்கு 17 ஆண்டு காலத்தை அவர் ஏன் எடுத்துக் கொண்டார்?
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது அனைவக்கும் தெரிந்ததுதான். விசாரணைக்கு அழைக்கப்பட்டால் வரக்கூடிய நிலையில் அவர்களும் இருந்தனர்.
வி.பி. சிங்கின் சாட்சியத்தைப் பெற ஒன்பது ஆண்டு-களையும், நரசிம்மராவின் சாட்சியத்தைப் பெற ஒன்பதரை ஆண்டுகளையும் ஏன் லிபரான் எடுத்துக் கொண்டார்?
அவர் சாட்சியம் அளிக்க அழைப்பு அனுப்பியிருந்தால், அதைத் தவிர்க்க அவர்கள் நிச்சயமாக முயன்றிருக்க மாட்டார்கள்.
அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் சாட்சியம் அளிக்கும்போது பா.ஜ.க. அரசில் அமைச்சர்களாக இருந்தனர்.
ஆர்.எஸ்.எஸ்.சின் முன்னாள் தலைவர் சுதர்சன் 2001 பிப்ரவரி 6 அன்றுதான் சாட்சியமளிக்க வந்தார். நரசிம்மராவ் 2001 ஏப்ரல் 9 ஆம் தேதியன்றுதான் சாட்சியம் அளித்தார். பிரதமர் பதவியை இழந்த பின் இந்த இடைப்பட்ட நான்கு ஆண்டு காலத்தில் அவர் கூறவேண்டியதை எல்லாம் கமிஷனிடம் முன்னமேயே கூறியிருக்கலாம்.
கமிஷனின் முதல் நோக்கம் 2001 ஆம் ஆண்டிலேயே நிறைவேறிவிட்டதோ?
ராவ் பிரதமர் பதவியை இழந்த பின்னரும் கமிஷன் நீடித்திருந்தது; அதனால் கமிஷனின் அறிக்கையைப் பயன்படுத்தி எவரும் நரசிம்மராவ் பதவி விலகவேண்டும் என்று கோரமுடியாது என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.
பாபர் மசூதி இடிப்பின் பின்னும் நரசிம்மராவ் பதவியில் நீடிக்க முடிந்ததற்குக் காரணமே, அவர் அதிகமாக அஞ்சிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியில் உள்ள முஸ்லிம்களை விலைக்கு வாங்க முடிந்தது என்பதுதான்.
அரசில் இருந்தவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது; வெளியில் இருந்தவர்கள் 1993 ஜனவரியில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தின்போது அமைச்சர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
மனச்சாட்சி விலைக்கு வாங்கப்பட்டுவிட்டதால், வாழ்க்கையும் அதன் போக்கிலேயே போய்க்கொண்டிருந்தது.
1992 டிசம்பர் 6 அன்று நடந்த நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு புதிரை மட்டும் லிபரான் கமிஷன் விடுவித்து இருந்தாலும் போதும்.
அன்று முழுவதும் நரசிம்ம ராவ் என்ன செய்து கொண்டிருந்தார்?
பாபர் மசூதி இடிக்கப்பட்டது திடீரென நிகழ்ந்ததல்ல; ஆற்றல் மிகு வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டதல்ல. அதன் ஒவ்வொரு கல்லாக நீக்கப்பட்டு அது வீழ்த்தப்பட்டது. இவ்வாறு ஒவ்வொரு கல்லாக மசூதி இடிக்கப்படுவதை கரசேவகர்கள் பார்த்து முழக்கம் எழுப்பி பாராட்டிக் கொண்டிருந்தனர்.
அப்படியானால், காலையில் இருந்து மாலை சூரியன் மறையும் வரை ஒவ்வொரு மணியும், நிமிடமும் ராவ் என்னதான் செய்து கொண்டிருந்தார்?
அரசு ஏன் தூங்கிக் கொண்டிருக்கிறது என்று கேட்டு பதட்டமடைந்த காங்கிரஸ்காரர்களும், பெண்களும் தொலைபேசியில் பேசியபோது, ராவ் தூங்கிக் கொண்டிருந்ததாக அவரது தனி உதவியாளர் கூறியிருக்கிறார்.
இதுதான் அரசின் தரப்பில் அளிக்கப் படும் பதில் என்பதை அறிந்து அவர்கள் திடுக்கிட்டுப் போயினர்.
ஆனால், அரசு கவிழ்க்கப்பட்டு விட்டால், அதிகப்படியான ஒரு விலையை காங்கிரஸ் கட்சி கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை உணர்ந்த பின் அவர்கள் அமைதியடைந்தனர். அத்துடன், அப்போது மவுனமாக இருப்பதில் உறுதியான பலன்களும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் நீதி விசாரணை 17 ஆண்டுகாலம் நடந்ததற்கு பகுத்தறிவுக்குப் பொருந்தும் காரணம் எதனையும் கூற முடியாது; ஆனால் அதற்கான அரசியல் காரணத்தை வேண்டுமானால் கூறமுடியும்.
1992_க்கும் 2004 இக்கும் இடைப்பட்ட காலத்தில் இருந்த ஒவ்வொரு மத்திய அரசுக்கும் அந்த வழக்கைத் தாமதப்படுத்த ஏதோ ஒரு சுயநலக் காரணம் இருந்தது.
நரசிம்மராவ், சீதாராம் கேசரி ஆகியோர் காங்கிரஸ் தலைவர்களாக இருந்த போது (அப்போது சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கவில்லை), இந்த வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி இருந்தால், தேவ கவுடே மற்றும் குஜ்ரால் அரசுகள் ஒரு நாள் கூட பிழைத்திருக்க முடிந்திருக்காது.
தங்களுக்கு ஆதரவு தருபவர்கள் மீது குற்றம் சுமத்தும் ஓர் விசாரணை அறிக்கை தரப்படுவதை தேவகவுடாவோ, குஜ்ராலோ விரும்பியிருக்கமாட்டார்கள்.
ஆறு ஆண்டு காலம் ஆட்சி செய்த பா.ஜ.க. தலைமையிலான அரசில் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாற்றப்பட்டவர்கள் முன்வரிசையில் அமைச்சர்களாக அமர்ந்திருந்தனர்.
மசூதி இடிந்து விழுந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக உமா பாரதி மட்டும் வெளிப்படையாகக் கூறினார்.
மசூதி இடிப்பிற்கு பொறுப்பேற்றுக் கொள்ள நான் தயார்; என்னை தூக்கில் போட்டாலும் கவலையில்லை என்று அவர் கூறியுள்ளார்.
பா.ஜ.க. மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருந்தபோது தனது அறிக்கையை லிபரான் அளித்திருந்தால், பா.ஜ.க. வுக்குக் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியிருக்க முடியும்.
எனவே, அவர் ஒவ்வொரு முறையும் கால நீட்டிப்பு கேட்டு வாங்கிக் கொண்டே இருந்தார். இது பற்றி பொதுமக்களும் கேள்வி எழுப்பாமல் அமைதியாக இருந்தனர்; தனிப்பட்டவர்களும் நிம்மதியாக இருந்தனர்.
மன்மோகன் சிங் நிதி அமைச்சராக இருந்திருந்தாலும், அவருக்கும் பாபர் மசூதி அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. விசாரணை அறிக்கை அளிப்பதில் செய்யும் தாமதம் பல விதங்களில் சவுகரியமாக இருக்கும்போது, அதைப் பற்றி ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்?
தெரிந்தோ, தெரியாமலோ கொள்கை அளவில் பெரிதும் மாறுபட்டிருக்கும் இரு பெரும் கட்சிகளில் இருக்கும் அரசியல்வாதிகளை லிபரான் காப்பாற்றியிருக்கிறார்; பாதுகாத்திருக்கிறார்.
ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்க விரும்புகிறேன்.
2004 இல் பா.ஜக. பதவி இழந்த பின் லிபரான் ஏன் தனது அறிக்கையை அளிக்கவில்லை- நரசிம்மராவ் அரசில்?
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா,மொழியாக்கம் : த.க.பாலகிருட்டிணன்
தகவல்கள், செய்திகள்,
>> Friday, July 3, 2009
1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!-ஹாஜாகனி
2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா
3.ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
4'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.
5..யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா?!?!?!?! கெட்டதா!?!?!?!?
6.யார் வெற்றியாளர்.
1.இந்தியர்களைக் குறிவைக்கும் இஸ்ரேலிய அபாயம்!-ஹாஜாகனி
இஸ்ரேல் இந்த பூமிப்பந்தின் மீது அராஜகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு நாடு.
மண்ணின் மைந்தர்களான அரபுகளை அழித்தொழிக்கும் யூத வந்தேறிகளின் வன்முறைக்கு அமெரிக்கா காவலுக்கு நிற்கிறது.
ஐ.நா.வோ அநீதிகளை அமைதியாய் ஆதரிக்கிறது.இஸ்ரேல் என்ற தேசத்தை ஏற்கவே கூடாது என்றார் தேசத்தந்தை காந்தி. நீண்ட நெடுங்காலமாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே தூதரக உறவே இல்லாமல் இருந்தது.
நரசிம்மராவ் ஆட்சியில்தான் இஸ்ரேலுடன் உறவு என்ற கேவலம் தொடங்கியது. பின்னர் பாஜக தலைமையிலான அரசு அதை நன்றாக வளர்த்தது.
அதன் உச்சகட்டமாக உலகிலேயே இஸ்ரேலிடம் அதிகமாக ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்த நாடு என்ற அவமானத்தை கடந்த ஆட்சியாளர்கள் பெற்றுத் தந்தனர்.
அரபு நாடுகளை வேவு பார்க்கும் இஸ்ரேலின் உளவு செயற்கைக்கோள், இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் ரகசியங்கள் மட்டுமின்றி ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் ரகசியங்களையும் இஸ்ரேல் அறிந்து கொள்வதற்கு மிகப்பெரிய சதித் திட்டத்தோடு களமிறங்கியுள்ளது.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்காக இஸ்ரேலிய அரசு நிறுவனம் மும்முரமாக முயற்சி செய்கிறது.
மத்திய அரசின் உயர் அதிகாரிகளையும் இந்நிறுவனம் உரிய(?) விதத்தில் அணுகி வருகிறது. Israel International Co-operation Institute (IICI) என்ற இஸ்ரேல் அரசின் பங்கேற்புடைய தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு வருகைதந்து ஒப்பந்தம் பெறுவதற்கான முன்முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
100 கோடி இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக மொத்த திட்டச் செலவான ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில், 90 சதவீதம் செலவிடப்பட உள்ளது. இதற்காக சர்வதேச டெண்டரும் விடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தை எப்படியும் பெற்றுவிடுவது என்ற முடிவில் இஸ்ரேல் மென்பொருள் மேம்பாட்டுத்துறை நிர்வாகி க்ரின்மெலாமெடின் தலைமையில் இஸ்ரேல் குழுவினர் ஜூலை முதல் வாரத்தில் இந்தியா வந்தனர்.
14 உறுப்பினர்கள் கொண்ட இஸ்ரேல் குழுவினர் இன்போசிஸ், விப்ரோ, டாடா கன்சல்டன்சி போன்ற இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி, அவற்றுள் ஒன்றுடன் கூட்டு சேர்ந்து, அடையாள அட்டை ஒப்பந்தத்தைப் பெறும் முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.
சொத்து விவரம், கல்வித் தகுதி, நோய் சிகிச்சை, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட 40 முக்கியமான விவரங்கள் இந்த அட்டைக்காக ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்பட்டு, மத்திய சேவை மென்பொருளில் பதிவு செய்யப்படும்.
இதன்மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் இஸ்ரேல் பார்வையிட முடியும்.
பயங்கரமான சதிகளைச் செய்வதில் கைதேர்ந்த இஸ்ரேலிடம் இந்தியர்களின் அந்தரங்கத் தகவல்கள் சிக்குவது மிக ஆபத்தானது.
இந்தியர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் ஒப்பந்தத்தை எக்காரணத்தை முன்னிட்டும் இஸ்ரேல் தொடர்புள்ள நிறுவனங்களுக்குத் தரக்கூடாது. மேலும், இதில் அந்நிய நிறுவனங்களையும் நுழையவிடக் கூடாது.மத்திய அரசு இதில் அலட்சியம் காட்டினால் விளைவுகள் வருத்தத்திற்குரியதாகிவிடும் என்பது திண்ணம். SOURCE: TMMK.
************************
2.மைசூர் கலவரத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா
மைசூரிலிலுள்ள கைதாமரநஹள்ளியில் இந்த மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் மரணிப்பதற்கு காரணமான பள்ளிவாசலில் பன்றியின் மாமிசத்தை எறிந்த சம்பவத்திற்கு பின்னால் ஸ்ரீராம சேனா தான் காரணம் என கைதுச்செய்யப்பட்ட அதன் உறுப்பினர்கள் சம்மதித்துள்ளனர்.
ஹிந்துத்தீவிரவாத இயக்கமான ஸ்ரீராமசேனாவின் தீவிரத்தொண்டர்களாகிய கிருஷ்ணா, ராஜு ஆகியோர்தான் பன்றியின் மாமிசத்தை பள்ளிவாசலில் போட்டது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில்தான் 3 பேர் மரணமடையவும் ஏராளமானோர் காயமடையவும் காரணமான கலவரம் ஏற்பட்டது. சம்பவத்தைத் தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட கிருஷ்ணா(வயது30) குற்றத்தை ஒப்புக்கொண்டதை உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவனுடைய கூட்டாளியான தலைமறைவாக இருக்கும் ராஜுவை கைதுச்செய்வதற்கு காவல்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இரண்டுமுறை கைதாமரநஹள்ளியில் ஸ்ரீராமசேனா தலைவன் பிரமோத் முத்தலிக் நடத்திய ஆவேசகரமான உணர்ச்சியைத்தூண்டும் உரைதான் பன்றியின் மாமிசத்தை ஹலீமா பள்ளிவாசலில் எறிய காரணமானது என கைதுச்செய்யப்பட்ட கிருஷ்ணா போலீஸ் விசாரணையில் கூறியுள்ளான்.
முன்பே ஸ்ரீராமசேனாதான் பள்ளிவாசலில் பன்றியின் மாமிசத்தை போட்டது என பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்திய பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டத்தலைவர் செய்யத் கலீம் உட்பட 14 மாவட்ட பாப்புலர்ஃப்ரண்ட் பொறுப்பாளர்களை கைதுச்செய்து ஜாமீன் வழங்கமுடியாத வழக்குகளை பதிவுச்செய்து சிறையில் அடைத்தது
கர்நாடகா காவல்துறை. ஸ்ரீரங்கப்பட்டினத்திலிலுள்ள ஒரு இறைச்சி வியாபாரியிடமிருந்து 1500 ரூபாய்க்கொடுத்து பூஜைக்காக என்றுச்சொல்லி பன்றி இறைச்சியை வாங்கி பள்ளிவாசலில் கொண்டு போட்டதாக கிருஷ்ணா கூறியுள்ளான். மேலும் இவனுக்கு கைதாமரநஹள்ளியிலிலுள்ள ஒரு நபருடைய உதவியும் கிடைத்துள்ளது.
மைசூர் கலவரத்தில் கைதுச்செய்யப்பட்டு பல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மற்றும் ஹிந்துக்கள் 300க்கு மேற்ப்பட்டோர்களை விடுதலைச்செய்ய கோரி மைசூரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாத்தலைமையில் முஸ்லிம்கள் நடத்திய அமைதியான ஆர்ப்பாட்டத்தில்தான் காவல்துறை அராஜகமாக அடிதடி நடத்தி கண்ணீர் புகை உபயோகித்தது.
முஸ்லிம்களை ஆவேசம் அடையச்செய்து கலவரத்தை ஏற்படுத்த ஸ்ரீராமசேனாவும் அதனுடைய தலைவன் பிரமோத் முத்தலிக்கும் நடத்திய சதித்திட்டம் வெளிப்படுத்தப்படுள்ளதைத்தொடர்ந்து கர்நாடகா அரசும், காவல்துறையும் சிக்கலில் மாட்டியுள்ளன.
பஜ்ரங்தள் மற்றும் ஸ்ரீராமசேனா ஆகியவற்றை தடைச்செய்து பிரமோத் முத்தலிக்கை கைதுச்செய்யவேண்டும் என கர்நாடகா சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
*************************************
3.ரத்தன் டாடா: உலக முதலாளியா? பிளேடு பக்கிரியா?
‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா.
பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!
டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது.
முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை.
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.
ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள்.
ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.
ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.
2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.
இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார்.
பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.
டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.
“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார்.
டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.
இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார்.
கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது.
இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.
டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும்.
அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.
‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம்.
ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.
ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.
இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும்.
டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார்.
நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.
டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாகஇருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர்.
வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே! - புதிய ஜனநாயகம், ஜூலை-2009
*************************************
4.'விண்டோஸ் 7 வேண்டாம்': சர்வே முடிவு.
சான்பிரான்ஸிஸ்கோ: முன்பு எதற்கெடுத்தாலும் மைக்ரோசாப்டையே நிறுவனங்கள் நம்பிக் கொண்டிருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது போட்டிக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
இதன் விளைவு, விஸ்டாவுக்குப் பிறகு மைக்ரோசாப்ட் புதிதாக அறிமுகப்படுத்திய 'விண்டோஸ் 7' ஆபரேடிங் சிஸ்டத்தை பெரும்பாலான நிறுவனங்கள் புறக்கணிக்க ஆரம்பித்துவிட்டன.
10க்கு 7 நிறுவனங்கள் விண்டோஸ் 7 வேண்டவே வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு சர்வே தெரிவிக்கிறது.
அதிக செலவு, மேம்படுத்த நேரமின்மை போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்த சிஸ்டத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
விஸ்டாவுக்கு மாறிய பல நிறுவனங்கள் அதையும் வேண்டாம் என்று கூறிவிட்டு மீண்டும் விண்டோஸ் எக்ஸ்பிக்கே திரும்பிவிட்டதும் நடக்கிறது.
மைக்ரோசாப்டின் நீண்ட நாள் வர்த்தக பங்காளியான இன்டல் நிறுவனம் கூட விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 நிலையற்றதன்மை கொண்டிருப்பதாகக் கூறி, மீண்டும் எக்ஸ்பிக்குத் திரும்பிவிட்டது.
இன்னொரு பக்கம் கூகுள் நிறுவனத்தின் புதிய இயங்கு மென்பொருளான ஓ.எஸ். பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகின்றனர் பயனாளர்கள்.
5.யாஹூ மெசஞ்சர் சாட் நல்லதா?!?!?!?! கெட்டதா!?!?!?!?
இரண்டு நாட்களுக்கு முன்பு, காலையில் லேசாக தலை வலிப்பது போல் இருந்ததால் அலுவகத்துக்கு விடுப்பு சொல்லி விட்டு படுத்து இருந்தேன் ( அன்று நெறய வேலை இருந்ததால் என்று கூட சொல்லலாம்). நமக்குதான் விடுமுறை கிடைத்தால் உடல்நிலை சரியாகி விடுமே!!! காலை உணவை 11 மணிக்கு முடித்து, பதிவுகளை பார்த்துக் கொண்டு இருந்தேன்.
மிகவும் போர் அடிப்பதால், நண்பர்களுடன் அரட்டை அடித்தால் தேவலாம் போல இருந்தது, இல்லையென்றால் தூக்கம் வந்து விடுமே என்ற கவலை(!!!!!) வேறு.அன்னிக்கின்னு பாத்து, எல்லாருமே பிஸியாக இருந்தனர்.
எவனுக்கு ஃபோன் பண்ணாலும், "மச்சி, கொஞ்ச நேரம் கழிச்சு பண்றா, ஈவ்னிங் பேசுவோமே" னு பதில் வந்துச்சு. கடுப்பா இருந்ததால, சரி கொஞ்சம் தெரியாத முகங்களுடன் சாட் பண்ணுவோமேனு இந்த யாஹூ மெசஞ்சர்ல லாகின் பண்ணிட்டு தமிழ் நாட்டு ரூம்க்கு கனெக்ட் பண்ணேன் (சத்தியமா, அந்த ஜெனெரல் ரூம்லாம் கனெக்ட் பண்றது, அப்பதாங்க என்னோட முதல் தடவை,தனியா நண்பர்கள் கூட பேசி இருக்கேன் தனி chat room). எல்லாமே கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பிச்சுது.
எல்லா ரூம்லயும் போய் கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துட ஆரம்பிச்சப்போ, ஒரு ரூம்ல கொஞ்சம், இல்லைங்க நெரயவே அசிங்கத்த பாத்தேன்.இப்போ மேட்டருக்கு வருவோம்( ஒரு வழியா இட்டானு வந்துட்டேன்).நான் என்டெர் ஆன உடனே சும்மா பொது மெசேஜ் தான் கொடுத்தேன். "நண்பர்களே! அனைவருக்கும் வணக்கம்" னு தான் நான் எப்பவுமே தெரியாத இடத்துல ஸ்டார்ட் பண்ணுவேன்.
ஒரு பத்து நிமிஷத்துல ஒரு நாலஞ்சு தனி அழைப்பு வந்துடுச்சி."hi, how are you?""asl""xx m xxxxx"எல்லாம் சொல்லி வச்சா மாதிரி ஒரே கேள்விய கேட்டு குடைஞ்சாங்க.சரி, சாதரணமா தான பேசுராங்கனு நானும்,hi, my name is Tamil.I am looking for good friends to chat and spend my time xx male Chennai னு (ASLனு கேட்டதால தான்)reply பண்ணேன்.அதுவரைக்கும், எனக்கு ஒண்ணும் வித்தியாசமா தெரில.
அடுத்த reply எதிர்முனைல இருந்து வந்தது என்னை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது."I too want a friend to pass my time, xxx? xxx?"இந்த ரெண்டு xxx உம் சென்சார்டு வொர்ட்ஸ். சுருக்கமாகச் சொன்னால், ஓரினச்சேர்க்கைக்கு அழைப்பு என்று சொல்லலாம்.எனக்கு தூக்கி வாரிப் போட்டது.
ஒருவர் மட்டும் அல்ல, அங்கு இருந்த பலபேர் அதற்கு தான் அழைப்பு விடுத்த படி இருந்தனர்.நான் கூறிய வணக்கத்தை பொருட்படுத்தாதவர்கள், மற்ற அழைப்புகளுக்கு தவறாமல் பதிலளித்த வண்ணம் இருந்தனர்.இதிலும், ஒரு சின்ன பையன், 17 male want to xxxx, any hard xxxx னு தொடர்ச்சியாக பொது இடத்தில் மெசேஜ் அனுப்பிய வண்ணம் இருந்தான்.
சரி, நமக்கு தெரியாத மாதிரி காட்டிக் கொண்டால் விட்டு விடுவார்கள் என்று நினைத்து, எனக்கு வந்த ஒரு சில அழைப்புகளுக்கு sorry, I don't know what are you speaking. bye னு reply பண்ணேன்.அப்பவும் ஒரு தளரா தமிழர்,xxx means .............. னுஒரு பெரிய லெக்சர ஸ்டார்ட் பண்ணார்.
"அய்யயோ! வேணாம் நமக்கு இந்த விளையாட்டு oh sorry! I am not like that. Bye னு சொல்லி எஸ்கேப் ஆயிட்டேன்.அதுக்கு அப்புறம் வர்ற மாதிரி இருந்த தூக்கமும் போய்டுச்சு.படுத்துக் கிட்டே யொசிச்சேன்.
வெளிநாட்டுல தான் இப்படி கலாச்சாரம் சொல்லித் தர ஆள் இல்லாம எல்லாரும் இப்பிடி ஆயிட்டாங்கனா, நம்ம நாட்டுல எங்க தப்புனு.அதிலும் அந்த 17 வயசுப் பையன் கொடுத்த மெசேஜ் எல்லாமே ஒரு பொண்ணு கூட கேட்க வெக்கப் படுவா.அவனுக்கு எங்க இருந்து இந்த ஆசை வந்துச்சு.
வீட்ல அவன கவனிக்க ஆள் இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், அவனுக்கு இந்த மாதிரி தவறான வழிக்கு இட்டுச் சென்றது கண்டிப்பாக ஏதெனும் website or இந்த மாதிரி சாட்களுமே என்று நான் அடித்து சொல்லுவேன்.இது பற்றி நான் நண்பர்களிடம் கூறிய போது, இன்னும் பல தகவல்கள் வந்தன.
அவற்றில் சில chat with couple - ஒரு couple இன்னொரு couple பாத்துக்கிட்டே அனுபவிக்கறது.chat with cam - வீடியோ சாட், இது நல்ல தொழில் நுட்பமாகக் கருதினேன். இதுவும் இங்கு அழிவுக்கு பயன் படுத்தப்படுகிறது.xxx - ஆண் ஆண் உறவுக்கு அழைப்புxxx xxx - ஆண் ஆண் உறவு + வீடியோ இருந்தால் மட்டுமே தொடர்ச்சி.எல்லாவற்றிற்கும் மேலாக, நெருங்கிய உறவுகளுக்குள், குடும்பத்திற்குள் நடக்கும் காமம் பற்றி கொச்சையாக அரட்டை.இது 24 மணி நேரமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று பின்குறிப்பு வேறு.
இதை யாராவது கேட்டால், "உனக்கென்ன, வேலையைப் பார்த்துக் கொண்டு போ!" என்று தான் பதில் வந்ததே ஒழிய, யாரும் கேட்பார் இல்லை.
என்னுடைய கவலை:வயதுவந்தவர்களுக்கு என்று தளங்களைப் பிரிப்பது போல் இந்த அரட்டை அரங்கத்தை பிரிக்க இயலாது, சின்னக் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யஹூ ID இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் நுழையலாம்.இதற்கு எந்த தடையும் இல்லை. அந்த இடத்தில் கொஞ்சம் நாகரிகம் கருதி, பொது இடத்தில் தனது இச்சையை வெளிப்படுத்தாமல் இருந்தாலே, இது போன்ற தவறான பழக்கம் கட்டுப்படுத்தப்படும்.
நம்மைப் போன்ற வயது வந்தவர்களுக்கு!!!!!!!!!!! எது தவறான பாதை, எது சரியான பாதை என்று முடிவெடுக்க கொஞ்சமாவது தெரியும், atleast அதிலிருந்து நம்மால் மீள முடியும்.ஆனால் சிறு வயது விடலைகளுக்கு இது புதிய பழக்கத்தை தோற்றுவிப்பது மட்டும் இல்லாமல், அவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றி விடும் அபாயம் உள்ளது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உங்கள் சகோதரரோ, சகோதரியோ நீங்கள் சாட் செய்வதைப் பார்த்து கொண்டு இருந்தால், உங்களுக்கு அது போல் பேசத் தோன்றுமா?பல விதமான கருத்துகளைப் பரப்பவும், தொலை தூரத்தில் பிரிந்து இருக்கும் உறவுகளை இணைக்கவும் பயன்படும் இந்த யாஹூ மெசஞ்சர் சேவை, இது போல் தவறான வழிக்குப் பயன்படுத்தக் கூடாது.
தமிழர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். படித்த, சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள பலரும் இந்த மாதிரி கூட்டத்தில் அடங்குவர் என்பது நண்பரின் தகவல்.சமுதாயத்தைத் திருத்த முன் வரவில்லையென்றாலும், அழிவுக்கு வழிவகுக்காதீர்!!!!! SOURCE tamilpaechublogspot.
க்ளிக் செய்து படிக்கவும்.
6.யார் வெற்றியாளர்.


